புதன், டிசம்பர் 21, 2011

மணப்பெண் தேடும் படலம்!PrintE-mail
[ பெண் பார்க்கச் செல்லும் முன் பெண்ணின் படிப்பு, வேலை, குடும்பப் பின்னணி இவற்றை வைத்து பார்ப்பது வழக்கம். காலம் மாறி மாப்பிள்ளை படிப்பு குடும்பம் பற்றி விசாரிப்பு அதிகமாகி விட்டது. ஆணை விட பெண் படிப்பு அதிகமாகிவிட்ட காலம். பெண் வீட்டார் வரதட்சணை தர விரும்பாத நிலை.
படிக்காத குடுப்பத் தலைவன் வெளிநாடு சென்று படிக்காததால் தான் படும் சிரமம் தன பிள்ளைகளுக்கு வரக் கூடாதென்று தனது பிள்ளைகளுக்கு நல்ல கல்வி கிடைக்க வழி செய்து விட்டமையால் அவரது குடும்பத்தில் அனைவரும் படித்தவர்களாக மாறிவிட்டனர். பணம், வரதட்சணை முதலியவைகள் பேசுவதென்றால் பெண் கொடுப்பதனை தவிர்த்து விடுகின்றனர்.
சிலர் படித்த பெண்கள் நமக்கு சரிவராது என்று நினைப்பதுமுண்டு. நமக்கு கிடைத்தது புரட்சியல்ல. நாம் அடைந்திருப்பது மறுமலர்ச்சி. மறுமலர்ச்சியில் ஒரு சில தவறுகள் நடக்கலாம். அதற்காக அனைத்துமே தவறு என்ற முடிவுக்கு வரக்கூடாது. வீட்டில் அடைபட்டிருந்த பெண்கள் வெளியில் வந்து படிக்க ஆரம்பித்த அருமையான மாற்றம் வரவேற்கப்பட வேண்டியது . படிக்கச் சென்ற ஒரு பெண் செய்த தவறினால் ஒட்டு மொத்த பெண்களுமே தவறு செய்து விடுவார்கள் என்பது எவ்வளவு பெரிய மடத்தனம்.]
திருமணம் செய்ய மணப்பெண் தேடும் படலம்!
பணம், சீர் கொடுத்தால்தான் பெண் எடுப்பேன் என்ற ஒரு காலம் இருந்தது இப்பொழுது நிலைமை மாறி பெண் கிடைத்தால் போதும் என்று அலைகின்றார்கள். ஆடம்பரமாக திருமணம் செய்வது எனக்குப் பிடிக்காது. விரைவில் திருமணம் செய்தாக வேண்டும் என்றும், எவ்வளவு காலம்தான் எப்படித்தான் பொறுமையாக இருப்பது என்று ஆண்கள் சொல்லும் காலம் வந்து விட்டது. பெண் தேடும் கல்யாண புரோக்கர்களுக்கு மதிப்பு வந்து விட்டது. திருமணத்துக்குப் பெண் பார்ப்பது இன்டர்நெட் வரை இதன் தொடர்பு வந்து விட்டது, பெண் கேட்க சென்றாலே 'பெண் படித்துக் கொண்டிருக்கிறாள் அதனால் இப்பொழுது திருமணம் செய்ய நாட்டமில்லை' என்ற பதில்தான்.
திருமணம் எனது வழிமுறை ஆகும். இதனை எவரொருவர் புறக்கணிக்கிறாரோ அவர் என்னைச் சார்ந்தவரல்ல என்பது நபிமொழி (அறிவிப்பாளர்: அனஸ் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி)
"அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள்". (அல்குர்ஆன் 2:188)
முன்பெல்லாம் பெண் பருவத்திற்கு வந்த உடனேயே திருமணம் செய்ய முயல்வர். பதினெட்டு வயதிற்குள் பெண்ணுக்கு திருமணம் முடிந்து விடும். இப்பொழுது வயதை பற்றி கவலை கிடையாது. பெண் படித்தாக வேண்டும் என்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். பெண்ணின் பெற்றோர் திருமண மாப்பிளை முடிவு செய்வதற்கு பெண்ணின் ஒப்புதலை முதலிலேயே கேட்டு தெரிந்துக் கொள்கின்றனர்.
நான் ஒரு பெண்ணை மணமுடித்துக்கொள்ள பேசியிருந்தேன். இதனை அறிந்த இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "நீர் அப்பெண்ணைப் பார்த்துக் கொள்ளும், ஏனெனில் அது உங்களிருவருக்கிடையில் உவப்பையும், நட்பையும், இணக்கத்தையும் ஏற்படுத்தக்கூடும்" என் அறிவுரைப் பகன்றார்கள். (நூல்கள்: நஸயீ, திர்மிதி, முஸ்னத் அஹ்மத்)
உங்களில் வாழ்க்கைத் துணையில்லாதவர் (ஆண், பெண்)களுக்கு திருமணம் செய்து வையுங்கள். அவர்கள் ஏழைகளாக இருந்தால், தன் நல்லருளைக் கொண்டு அல்லாஹ் அவர்களை சீமான்களாக்கி வைப்பான், மேலும் அல்லாஹ் (வாரி வழங்குவதில்) விசாலமானவன். (அல்குர்ஆன் 24:32)
ஒரு பெண் அவளது அழகு, செல்வச்செழிப்பு, குடும்ப கௌரவம், மார்க்கப்பற்று என்ற நான்கு விஷயங்களுக்காக மணமுடிக்கப்படுகிறாள். மார்க்கப் பற்றுள்ள பெண்ணையே மணமுடித்து வெற்றி பெறுவீராக! என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியுள்ளார்கள். (அறிவிப்பாளர்கள்: அபூஹுரைரா, அபூஸயீத் அல்-குத்ரி, ஜாபிர் போன்ற நபித்தோழர்கள், நூல்கள்: புகாரி, முஸலிம், அபூதாவுத், தாரமி, நஸயீ, இப்னுமாஜா)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் செய்தியில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களாகவே முந்திக் ‘பெண்ணைப் பார்த்துக் கொள்ளும்’ என்கிறார்கள். பிரிதொரு நபித்தோழர் விஷயத்திலும் இதையே வலியுறுத்தி யுள்ளார்கள்.ஒரு நபித்தோழர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து, ஒரு மதீனத்து பெண்ணை மணமுடிக்க நிச்சயித்திருப்பதாகக் கூறினார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நீர் அப்பெண்ணை நேரில் கண்டீரா? எனக் கேட்டார்கள். அதற்கு நபித் தோழர் இல்லை என்றார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நீர் சென்று பார்த்துக் கொள்வீராக! எனக் கூறினார்கள். (அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்: முஸ்லிம், முஸ்னத் அஹ்மத்)
பெண் பார்க்கச் செல்லும் முன் பெண்ணின் படிப்பு, வேலை, குடும்பப் பின்னணி இவற்றை வைத்து பார்ப்பது வழக்கம். காலம் மாறி மாப்பிள்ளை படிப்பு குடும்பம் பற்றி விசாரிப்பு அதிகமாகி விட்டது. ஆணை விட பெண் படிப்பு அதிகமாகிவிட்ட காலம். பெண் வீட்டார் வரதட்சணை தர விரும்பாத நிலை. படிக்காத குடுப்பத் தலைவன் வெளிநாடு சென்று படிக்காததால் தான் படும் சிரமம் தன பிள்ளைகளுக்கு வரக் கூடாதென்று தனது பிள்ளைகளுக்கு நல்ல கல்வி கிடைக்க வழி செய்து விட்டமையால் அவரது குடும்பத்தில் அனைவரும் படித்தவர்களாக மாறிவிட்டனர். பணம், வரதட்சணை முதலியவைகள் பேசுவதென்றால் பெண் கொடுப்பதனை தவிர்த்து விடுகின்றனர்.
சிலர் படித்த பெண்கள் நமக்கு சரிவராது என்று நினைப்பதுமுண்டு. நமக்கு கிடைத்தது புரட்சியல்ல. நாம் அடைந்திருப்பது மறுமலர்ச்சி. மறுமலர்ச்சியில் ஒரு சில தவறுகள் நடக்கலாம். அதற்காக அனைத்துமே தவறு என்ற முடிவுக்கு வரக்கூடாது. வீட்டில் அடைபட்டிருந்த பெண்கள் வெளியில் வந்து படிக்க ஆரம்பித்த அருமையான மாற்றம் வரவேற்கப்பட வேண்டியது. படிக்கச் சென்ற ஒரு பெண் செய்த தவறினால் ஒட்டு மொத்த பெண்களுமே தவறு செய்து விடுவார்கள் என்பது எவ்வளவு பெரிய மடத்தனம்.
பெண் பார்க்க கூட்டமாக படை சூழப் போவது தற்போது கிடையாது. திருமணத்தினை முடிவு செய்த பின்பே அதனை தெரிந்தவர்களுக்கு சொல்கின்றார்கள்.
மாப்பிளை வீட்டார் திருமண செலவுகளை பெண் வீட்டார் தலையில் கட்ட நினைப்பது முடியாது . இப்பொழுது மணமகன் எத்தனை பவுனில் நகை போடுவார் என்ற கேள்வியும் தொடர்கின்றது. முன்பெல்லாம் மாப்பிள்ளை படித்த படிப்பின் பட்டங்களை திருமண பத்திரிக்கையில் ஆடம்பரமாக போடுவார்கள் இப்பொழுது பெண் அதிகம் படித்து விடுவதால் அது கிடையாது .
மணம் முடிக்கும் பெண்ணுக்கு ஒரு பொற்குவியலையே (மஹராக) கொடுத்த போதிலும், அதிலிருந்து எதனையும் (திரும்ப) எடுத்துக் கொள்ளாதீர்கள்.(அல்குர்ஆன் 4:20)

அழகினை மறைத்தலும், மறைத்தலின் அழகும்![இது கதையேயல்ல:வலி]PrintE-mail

[ இது அப்படி ஒன்றும் வாசகனைக் கதையோடு அல்லது அங்குள்ள சூழலோடு ஒன்ற வைப்பதற்காக எழுதிய ஒன்றல்ல. முதலில் இது கதையேயல்ல: இந்த வலி/ வழியினூடாக ஒரு ‘பெட்டிசத்தைத்’ தருவது இலகுவழியாயிருந்தது. அவ்வளவுதான்.]
சட்டத்தரணி நயீமின் மனைவியினுடைய வழக்கு இன்று விசாரணைக்கு வர இருந்தது. அவன் நீதிமன்றம் வந்தடையும் போது பாபு தனக்காக நீதிமன்ற வாசலில் காத்துக் கொண்டிருப்பதைக் கண்டான். வெட்கமாக இருந்தது .மன்னிப்புக் கேட்டுக் கொண்டான். பாபு அவனுடைய நண்பனாகினும் சட்டத்தரணித் தொழிலில் பாரிஸ்டர் பட்டமும் அனுபவமும் அதிகம் பெற்றவன். நயீம், பாபுவைக் கேட்டான்.
‘இன்றைக்கு, யார் நீதிபதி?"
‘உனக்குப் பரிச்சயமானவர். அதே ஆள்தான்’
‘அப்படியானால் இன்றைக்கும் ஒரு பாரிய சமர் இருக்கப் போகிறதென்று சொல்’
‘அவருக்கு உன்னை நினைவில்லாதிருக்க வேண்டுமென்று இறைவனை வேண்டிக்கொள்’
‘என்னால் நம்ப முடியவில்லை, அவர் அனறையதினத்தை இலேசில் மறந்திருப்பார் என்று’
உண்மைதான் இலேசில் நினைவைவிட்டு அகலாத தினம்தான் அது .
பாபுவுக்கு அந்த வழக்கே விநோதமான ஒன்று . ஐரோப்பிய சட்டத்தின்படி அந்த வழக்கில் .நயீம்தான் குற்றவாளி என்றுபட்டது. அந்த வழக்குப்பற்றி உங்களுக்கும் சொல்லியேயாகவேண்டும். நயீமின் பக்கத்துவீட்டுக்கார கலப்பில்லாத தூய வெள்ளைக்கார ஒற்றைத்தாயாரால் இவன்மீது தொடுக்கப்பட்ட வழக்கு அது.
அவளுக்கு ஐந்து மாதங்களேயான ஒரு குழந்தை இருந்தது. நயீமுக்கு ஒன்று, மூன்று, ஐந்து வயதுகளில் என்று மூன்று பிள்ளைகள் உண்டு. இதனால் அவன் வீடு எப்போதும் குழந்தையின் சிரிப்பும், அழுகையும், கும்மாளமுமாகவே இருக்கும்.குழந்தைகளைக் குழந்தைகளாகவே பார்ப்பதற்கு, புரிந்துகொண்டு அவர்களுடன் வாழ்வதற்கு வேறுபட்ட மனநிலையும் மேம்பட்ட அறிவுநிலையும் வேண்டும். அது நயீமிடம் வழிந்து கிடந்தது.
கேட்கவா வேண்டும்? அவன் வீடு பெரும்பாலும், முஸ்லிம்களை யாழை விட்டுத் துரத்தமுன்னரான, சோனகத் தெருவிலுள்ள கதீஜா மகாவித்தியாலயத்திற்கு முன்னாலிருந்த நானாவின் ரொட்டிக்கடையின் இரைச்சலைப் போலவே இருக்கும். அடுத்த வீட்டுக்கார வெள்ளைக்கார ஆத்துக்காரியும், அவன் மனைவியும் அத்தனை அன்னியத் தனமாகப் பழகியவர்களல்ல. பாபிகியு.சொக்கிலேட், வாங்கித்தின்று புரியாணி, வட்டிலாப்பம் கொடுத்துப் பழக்கமுள்ளவர்கள்தான்.
அவளால் நயீம்வீட்டு இரைச்சலைச் சகித்துக் கொள்ள முடியும்தான், ஆனால் குழந்தைதான் இந்த சத்தங்களினால், தடாலடியான சுவரின் மோதுகைகளினால் திடீரென்று விழித்துக் கொண்டு அழுகிறது. கை, கால்களை உதைத்துக்கொண்டு அடம்பிடித்துத் தூக்கிவைத்துக் கொள்ளச் சொல்கிறது. அவளுக்கு இதை அவர்களிடம் சொல்வதற்கு முதலில் தயக்கமாகவே இருந்தது . மேலும் தாங்க முடியாத நிலையில் இருமுறை கதவுதட்டி தன் நிலைமையை எடுத்துச் சொன்னாள். அவன், மனைவியிடம் இனிமேல் அதிகம் சப்தமெழுப்பாதபடி குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளும்படி, அவள் முன்னிலையிலேயே சொல்லிவைத்தான். அவன் பிள்ளைகளாவது, அடங்குவதாவது?.
ஒருநாள், நகரக் காரியாலய உத்தியோகத்தனும் போலிஸ் இருவருமாக மொத்தம் மூவர், கதவைத் தட்ட நிலைமை தீவிரமாகிவிட்டதை உணர்ந்தான். வாசலில் வைத்தே அவர்களிடம் "எதற்காக வந்திருக்கிறீர்கள் எனத்தெரிந்து கொள்ளலாமா?"எனக் கேட்டான்.
"உங்கள் பிள்ளைகள் கூக்குரலிட்டுக் (loud ) குழப்பம் செய்வதாக முறைப்பாடு கிடைத்துள்ளது. . "விசாரிக்கவே வந்துள்ளோம்.
யார்முறையிட்டார் என அவன் கேட்கவில்லை. "அவர்கள் சின்னஞ்சிறுசுகள்; ஓரளவுதான் கட்டுப்படுத்தலாம்" என்றான் நயீம்.
"அப்படியல்ல, அடுத்த வீட்டாருக்கு இடைஞ்சல் தருவது இங்கு சட்டப்படி குற்றச் செயல் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்" நயீம் பேசாதிருந்தான்.
நகரக் காரியாலயப் பெண்மணி நேரம் ஒதுக்கி, எப்படிக் குழந்தைவளர்ப்பது எனப்பாடம் நிகழ்த்தத் துவங்கினாள். நயீம், தன் மனம் உள்ளாய்க் கோபம்கொள்ள ஆரம்பித்திருந்ததை உணர்ந்தான்.
"அவர்கள் குழந்தைகள்.தன் சுயபுத்தியிழந்து, கட்டளைக்கு ஒழுகுகிறவர்களாக என் பிள்ளைகளை நான் வளர்க்கமாட்டேன்"
இந்த வார்த்தை ஒன்றே வந்திருந்த பொலிசுதுரைக்குப் போதுமானதாயிருந்தது. பிறகென்ன? நயீம் கோட்டுப்படியேற வேண்டியதாயிற்று. இதே நீதிபதிதான் அன்றும் அவனைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்திவைத்துக் கேட்டார்; "உங்கள் பக்கத்துவீட்டுக்கார மாக்கிரட் அம்மணியை, நிம்மதியாக இருக்கவிடாததை ஒப்புக்கொள்கிறீர்களா?"
"துரை அவர்களே, இது அபாண்டமான குற்ற்றச்சாட்டு அவரது நிம்மதிக்குப் பங்கமாக ஒருபோதும் நான் நடந்து கொள்ளவில்லை. "நீங்கள் என்றால், உமது பிள்ளைகள். நேரகாலமின்றி எப்போதும் சத்தமிட்டுக் கொண்டிருப்பதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளீர்கள் நீங்கள்".
"ஐயா, நீங்கள்தான் சொன்னீர்களே, அவர்கள் குழந்தைகள் என்று. அவர்களுக்கு இந்த சட்ட திட்டங்களும், நேரகாலங்களும் தெரியாது. அவர்களின் சந்தோசங்களுக்கும், ஆரோக்கியமான வளர்ச்சிக்கும் தடையாக நானிருக்க வேண்டாமே என்று விட்டுவிட்டேன்"
"நீர் என்ன சொல்கிறீர்?"
"அவர்கள் மகிழ்வதும், சத்தமிடுவதும், தங்களிடையே சண்டையிடுவதும், சேர்வதும் அவர்களின் வளர்ச்சிக்குதவுபவை என்று நான் நம்புகிறேன். அதை ரசிக்கவும், நெறிப்படுத்தவும் தான் நாம் இருக்கிறோமே தவிர அதைக் கொன்றுபோட என்னால் முடியாதய்யா. அதைத் தடைசெய்வது மிகப்பெரிய பாவகரமானது என்று நினைக்கிறேன் அய்யா."
"நீங்கள்என்ன தொழில் செய்கிறீர்?"
"சடடத்தரணியாயிருக்கிறேன், அய்யா."
"அதுதான் அதிகம் பேசுகிறீர் போலிருக்கிறது"
"அப்படி இல்லை அய்யா,எங்கள் பகுதியில் யாழினிது,குழலினிது என்பர் மழலை சொல்கேளாதோர் என்று சொல்லுவார்கள். நம்மால் ரசிக்கத்தான் முடியவில்லை, அதற்காக சட்டம் கொண்டு அதைத் தடுக்க முற்படுவது அந்தப் பருவத்தையே வாழவிடாத கொடுமையைச் செய்ததாகாதா?"
நீதிபதி தனது இடுங்கிய நீலக்கண்ணை மேலும் இடுக்கி, வினோத பிராணியொன்றைப் பார்ப்பதுபோலப் பார்த்தார். இதுவரை யாரும் அவரிடம் விளக்கவுரைகளுடன் நியாயம் பேசவந்ததில்லை.
"உங்கள் அருகேயுள்ள சிறுவர் பூங்கா,விளையாட்டு மைதானங்களுக்கு உங்கள் குழந்தைகளை அழைத்துச் செல்லலாமல்லவா? அடுத்த வீட்டானின் கோபத்தைச் சம்பவித்தவனாக மரணித்தவனுக்கு சுவர்க்கமேயில்லை என்பது நபிவாக்கு இல்லையா?"
இதைக் கேட்டதும் நயீமின் இதழ்க்கடையோரம் சிறு புன்முறுவலை பாபு கண்டான் .
"கனம் கோட்டார் அவர்களே, இது உண்மையான வார்த்தை ஐயா.என் அடுத்த .வீட்டு அம்மணியிடம், இந்தக் குழந்தைகளின் சிரிப்பு,அழுகைச் சத்தங்களை விட, அவர்பார்வையில் வேறேதும் தொல்லைகளை என்வீட்டாரால் சந்தித்ததுண்டா எனக்கேளுங்கள் ஐயா. கணவரின்றி எல்லாப்பொறுப்பையும் தனி ஒருத்தராகவே சுமந்துகொண்டு அவர்கஷ்டப்படுகிறார் என்றபார்வையும், அவர் மீதான அனுதாபத்தையுமே நானும் என் மனைவியும் கொண்டிருக்கிறோம். குறித்த நேரத்துக்குப் பூங்காவுக்கு, மைதானத்துக்குப் போய்த்தான் சிரிக்கவும், சத்தமிடவும், விளையாடவும் முடியும் என்பது வளர்ந்த நமக்குச் சரிப்பட்டு வரலாம்,அடக்கி வைத்துப் பின்னர் உரியகாலம் வரும்போது வெளியேற்றுவது பழையதை நினைத்து வாழ்கிற வயது வந்தோருக்குச் சரியாகலாம்.அதை நம்ம முதலாளிமார் வியாபரமாக்கவும் செய்யலாம். இந்தக் குழந்தைகளை அழுத்தி பொன்சாயத் தாவரம்போல வளர்த்தெடுக்க என்னால்முடியாதையா. நானறிய, இதுவரை எந்தக்குற்றமும் செய்தவனாக உணரவேயில்லை ஐயா."
பாபுவுக்கு ஆச்சரியமாயிருந்தது. இந்த நீதிபதி யாரையும் இத்தனைதூரம் பேசவிட்டு கேட்டுக் கொண்டிருப்பவரல்ல. அவன் பேசி முடித்ததும் , திடீரென அமைதிச்சுத்தியலை எடுத்து மேசையில் தட்டினார் வழக்கை ஜூலை மாதம் ஆறாம் திகதிக்கு ஒத்திவைப்பதாகக் கூறினார்.. இத்துடன் மன்று கலைவதாகச் சொல்லிவிட்டு கதிரையை நகர்த்தி எழுந்து கொண்டார். அவர் முதலில் செல்ல,நயீம் பாபுவுடன் வெளியேவந்தான்.
புதுமைப் பித்தன் சும்மாவா சொல்லிவைத்தார், வாக்கும் எழுத்தும்தான் இந்த உலகினை ஆளும் மிகப்பெரிய இருதூண்களென்று. உலகத்தின் முழு ஜனத் தொகையில் இரண்டு வீதம் கூடத் தேறாத யூதர்களின், அமரிக்காவையே அடிமைப்படுத்தி ஆளும் வல்லமைக்கு அவர்களின் தகவல் தொழில் நுட்பவல்லமையின் பங்கு சின்னதல்லவே. பிரதேசப் பத்திரிகைகளுக்குத தினமும் மெல்ல ஏதாவது அவல் வேண்டிருக்கும். அவை தினமும் ஊதிப் பெருப்பிக்கிற விசயங்களினைப் பார்த்தோமானால் பெரும்பகுதி மானிடர் துன்பங்களையும், அறியாமைகளையும் வியாபாரமாக்கும் தகுதி தவிர வேறெதையும் கொண்டிருக்காமையை நாம் காணமுடியும். அவை பக்கம் பக்கமாக நயீமின் வழக்கை ஊதிப்பெருப்பித்தன. உலகின் மிக முக்கிய எல்லாப் பிரச்சினைகளுக்குத தீர்வும், உண்மைக் காரணங்களையும் விலாவாரியாக உளச்சுத்தத்துடன் எழுதுவதாகப் பீலா விடுகிற பத்திரிகைகள், நமது வாழ்க்கை முறை, நாகரீகத்தையே நயீம் கேள்விக்குட்படுத்துவதாகக் கொட்டம் கொட்டமாக எழுதி விழிப்பூட்டின .
வாசகர் ஒருத்தர் இன்றைய நாகரீக உலகில் இன்னமும் இந்த மனநிலையில் மனிதர் வாழ்வது கவலைப்படவேண்டிய ஒன்றே என ஆதங்கப்பட்டிருந்தார். நயீம் எதனாலும் அசைந்து கொடுக்கவில்லை. மாக்கிரெட்டுக்கு வழக்கு அடுத்தடுத்ததாக ஒத்தி வைக்கப்பட, சும்மா வேலியில போன ஓணானை, சட்டைக்குள் எடுத்துவிட்ட நிலமைவந்து சேர்ந்தது.
அதைவிடவும் மனதுக்குச் சங்கடமாக நயீமும், அவன் மனைவியும் , தங்களின் பிள்ளைகளினால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு வருந்துவதாகவும், அவளின் பிள்ளை, அவளின் தனிமைக்கு தாங்கள் எப்போதும் துணையாயிருப்போம் என வீடுவந்து சொன்னபோது தான் அவசரப்பட்டோமோ என யோசிக்கத் துவங்கினாள் மாதக்கணக்கில் வழக்கு இழுத்துக்கொண்டு போவதில் அவளுக்கு ஆயாசம் ஏற்பட்டிருந்தது.
தன்னருகே உள்ளவரையே சகித்துக்கொண்டு வாழ்வதில், தான் தோற்றுப்போனதாக அவளே தன்னை விசனிக்கத் துவங்கினாள். கடைசியில் அவளே தன் வழக்கை வாபஸ் வாங்கிக்கொள்ளும் நிலைக்கு வரும்படியாக நிலைமை ஆயிற்று. ஆயினும் நயீம் நீதிபதியினால், இனிமேல் இப்படியாக நடந்து கொள்ளவேண்டாம் என்றஎச்சரிக்கையுடன் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டான்.
ஒருவருடம் முடியுமுன்னரே, அடுத்த வீடு இல்லாமல், அவன் வாழும் நாடு கொண்டுவந்த புது சட்டத்தால் இப்போது அவனன்றி அவன் மனைவி குற்றவாளியாகினாள். எல்லைச் சுவரிலிருந்து மூட்டைப்பூச்சி கடித்ததென்றால், இது பலம்பொருந்திய வல்லமையுள்ள பருந்தின் தாக்குதலாக அவனுக்குப்பட்டது .
பாபு அவனின் யோசனையைக் கலைத்தான். அவன் நயீமைக் கேட்டான்:
"என்ன யோசிக்கிறாய்?"
"ஒன்றுமில்லை, தொடர்ந்தும் இந்த நாட்டில் போராடியதாகவே காலம் கழிந்து விடுமோ எனப் பயமாயிருக்கிறது. இதைத்தான் அவர்கள் எதிர்பார்க்கிறார்களா என்றும் சந்தேகமாக இருக்கிறது."
"ஏன் நயீம், அவர்கள் சொல்லும் தண்டப் பணத்தைக் கட்டிவிட்டுப் போய்விட்டால் என்ன?"
"அது பெரிய விடயமல்ல பாபு. இந்த உலகமும், அதன் சந்தோசங்களும் நிலையானதல்ல, மறுமையில் அழியாத பேரின்பமான வாழ்வு வேண்டி ஒரு மதத்தைப் பின்பற்றுகிறவர்களுக்கு எதிரான வெறும் சதியல்ல இது. இந்த உலகம் மட்டுமே உனக்குரியது, எதையும் சிந்தியாதே, இருக்கும் வரை பணம் பண்ணு, அனுபவி, செத்துப்போ எனும் வியாபாரக் கூட்டத்துக்கு எங்களை எதிரியாக அவர்களே ஆக்கிக் கொடுத்திருக்கிற வஞ்சகதந்திரம் இது. பைபிள், சொல்வதன்படி பார்த்தால், எல்லாக் கிறிஸ்தவ ஆலயத்திலுள்ள பெண்களின் தலைக்கவசங்களையும் அல்லவா முதலில் களைந்து விட்டு தலையச் சிரைத்தல்லவா முன்னோடோயாக நடந்து காட்டியிருக்க வேண்டும்.
என்னால், அதை நினைத்தும் பார்க்க முடியாது. இதற்கு நான் என்வரையில் எதிர்ப்பானவன் என்பதைச் சொல்லியே ஆகவேண்டியுள்ளது பாபு" "சரி கோர்ட் துவங்கப் போகிறது நாம் உள்ளே போகலாம் வா" நீதி மன்று மௌனம் களைந்து தொன்மையைச் சூழ்ந்து அரவணைக்க ஆரம்பித்தது.அவர்கள் உள்ளாகினர்.
சாட்சிக் கூண்டில் நயீம் ஏறியபோதே நீதிபதி, ‘அவனா நீ’ எனும் பார்வையை அவன்புறம் வீசினார். அவர்களின் வழமையான இயல்புப்படி, கோபத்தின் போதும் அவரில் புன்னகை முகத்தையே அவன் கண்டான்.உண்மையாகவே மனம் மலரப் புன்னகைக்கிற சந்தர்ப்பங்களிலும் சந்தேகமே கொண்டான்.
இதனால், எப்போதும் எச்சரிக்கை உணர்வுடனேயே இருக்கும்படியான நிலைமை அவனுக்கு ஆகிப்போயிற்று. நீதிபதி குற்றப்பத்திரிகையை வாசிக்க ஆரம்பித்தார்.
"இந்தப் பெண், பொது இடத்துக்கு வரும்போது முகத்திரை அணிந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறார். இதைப் பற்றி நீங்கள் ஏதும் கூற உள்ளதா?"
"முதலிலேயே சொல்லி விடுவது நல்லது, நீதிபதி ஐயா அவர்களே. இந்த மிகப் பெரிய ஜனநாயகம் பேசுகிற நாட்டில் ஒருமதத்தை, அதுவும் உலக ஜனத்தொகையில் முப்பது வீதமானோர் பின்பற்றுகிற ஒன்றை இவர்கள் தாமாகவே தடை செய்துவிட்டு, குற்றவாளி என்று சொன்னால் எப்படித்தகும் கனவானே?"
"விளக்கமாகச் சொல்லுங்கள்"
"முஸ்லிமாயிருக்கிற ஒருத்தர், அல்லாஹ் குர்-ஆனில் சொன்னதன் படிதான் உடுக்க முடியும் ஐயா. நீங்கள் நிறைவேற்றியிருக்கிற சட்டம், அவர்களை முஸ்லிம்களாக இருக்க வேண்டாம் எனச்சொல்வது போன்றது, கனவானே. இலங்கைத் தீவின் வட-கிழக்கில் இருந்து ஆயுதம் கொண்டு முஸ்லிம்களை சுத்திகரிக்க முயன்றதற்கு ஒப்பவே, இவர்களும் சட்டம் செய்ய வல்லமை யுள்ளதால்,அதைக்கொண்டு முஸ்லிம்களைச்சுத்திகரிக்கும் கைங்கரியத் தையே செய்ய முயல்கிறார்கள் ஐயா.
இது இன்னொரு முறையில் பார்த்தால் இவர்களும்கூட பக்கச்சார்பானவர்கள் எனவும், அடக்குமுறையில் திணித்த வாழ்வுமுறையைப் பின்பற்றும்படி அடக்க முயல்கிறார்கள் ஐயா."
"எதனால், அப்படிச் சொல்கிறீர்கள், நீங்கள்?"
"நமது ஐரோப்பிய அங்கத்துவ நாடான பெரிய பிரித்தானியாவில், 2001 இல், ஹீத்ரோ விமான நிலையத்தில் வேலை செய்யும் சீக்கியர்கள், தங்கள் மதத்தின் நிமித்தம் இடுப்பில் கத்திவைத்துக் கொள்ள அனுமதி கேட்டுப் போராடிய வழக்கில் வெற்றி பெற்றிருந்தார்கள் ஐயா. இப்போது இந்தப் .பெண்கள், தங்கள் அழகை அந்நிய ஆடவருக்கு மறைக்க அணியும் துணி, எப்படிக் கத்தியைவிட வன்முறை சார்ந்தது என்று தெரியாமல் குழம்பிப் போயுள்ளோம் ஐயா"
"எனக்கு முன்பேதெரியும் நீங்கள் பேச்சில் பெரும் கில்லாடி என்று. இனிப்புக் கொடுத்து குழந்தையை ஏமாற்றுவது போல, நீங்கள் பெண்களை அழகானவர்கள் எனச் சொல்லி அடிமைப்படுத்துவதாகாதா இது?"
நயீம் இப்போது புன்னகையுடனிருந்தான். முகம் மாறாதபடியே சொன்னான்: " எங்கள் பகுதியில், முன்னர் சாண்டில்யன் என்றொரு சரித்திராசிரியர் இருந்தார். ஒரு பெண்ணின் ஐந்து விரல்களையும் வர்ணித்தெழுதவே இருபது பக்கங்களை எடுத்துவிடுவார் கனவானே. இன்றைக்கும் நமது எல்லா இலக்கியங்கள், வியாபாரம், விளம்பரம், அரசியல், இன்றைய உலக வங்கித் தலைவருக்கு ஆப்பாக, போரின், தலைகளை உளவறிய, ஏன், அநேக வீதி விபத்துக்களுக்கும் பெண்ணின் அழகே காரணமாகி விடுகிறபோது, அவர்களாக ‘மறைத்து வைப்பதுவே அழகு’ என்று ஆண்டவன் தந்த உத்தரவில் வாழ்கிறபோது, இவர்கள் அல்லவா அத்துமீறி அங்கு உள் நுளைந்துள்ளார்கள்."
"அப்படியல்ல, அவர்கள் சட்டத்தை நிறைவேற்றத் துணைபோகிறவர்கள். பயங்கரவாதிகள் தங்கள் முகத்தை மறைத்துக் கொள்ள இதைப் பயன்படுத்த சந்தர்ப்பம் உண்டல்லவா?"
" இது எங்களை அவமானப்படுத்துகிற வார்த்தை ஐயா. பயங்கரவாதி என்பவன் எங்களுக்கும்கூட கொடூரமான கொலைகாரன்தான் ஐயா. அண்மையில் போலிசுக்குரிய உடை அணிந்து நோர்வேயில் எழுபதுக்கு மேற்பட்ட மக்களைக் கொலை செய்தான் ஒரு பயங்கரவாதி. அதற்காக நாம், போலிசுக்குரிய உடையையே தடை செய்துவிட முடியுமா கனவானே?"
நீதிபதி, வழக்கை ஒத்திவைப்பதாகச் சொன்னார். பிரான்ஸ், இத்தாலி ஆகிய நாடுகள் தடை செய்துவிட்டதாக பத்திரிகைகள் எழுதின. நயீம் இன்னமும் வழக்கின் அடுத்த தேதிக்காகக் காத்திருக்கிறான்.

எழுத்தாளர்ஆகுவதுஎப்படி? படி!


1. ஆற்றலுள்ள எழுத்தாளருக்கு விலைவாசியைச் சமாளிக்கும் அளவிலான வருமானம் இருக்கணும். கையேந்தக்கூடாது. நெஞ்சு படபடப்பில்லாமை. கண் பார்வை தெளிவு. வியாதியில்லாத உடல் ஆரோக்கியம் அவசியம். 5 மணி நேரம் இருக்கையில் இருந்தபடி எழுதும் உடல் திடம் தேவை. இல்லாதோர் எழுதவியலாது. எழுத்து வராது.
2. குடும்ப உறுப்பினர்கள் எழுத அனுமதிக்கணும். கேஸ் வாங்கி வா. ரேஷன் கடைக்குப் போ. டெலிபோன், கரண்டுக்கு பணம் கட்டு. பிள்ளைகள் பெயரன், பெயர்த்தியரை பள்ளியில், டீயுசனில் விட்டு வா. பால் வாங்கி வா ஏவல்கள் இல்லாத சுதந்திரப் போக்கு இல்லத்தில் தரப்படுமானால். எழுத்து வரும்.
3. எழுத்தாளரிடம் பேசவேண்டும். போன் வருகிறது. என் கணவர் முக்கியமான கட்டுரை எழுதிக் கொண்டிருக்கிறார். தலையங்கம் எழுதிக் கொண்டிருக்கிறார். இடைமறித்தால் சிந்தனை டைவேர்சன் ஆகும் தயவு செய்து பிறகு போன் செய்யுங்கள் என்று கூறினால், தனது மனைவியை மிகச் சரியாக உருவாக்கியிருக்கிறார் அந்த எழுத்தாளர். எங்க வீட்டுக்காரவுக ரேஷனுக்கு போயிருக்காங்க. பிள்ளையை ஸ்கூலுக்கு கூட்டிப் போயிருக்காங்க. இன்ன பிற காரணங்கள் கூறப்பட்டால் தமது இல்லத்தில் கடுமையான தோல்வியைச் சந்தித்திருக்கிறார் எழுத்தாளர்.
4. எழுத்துக்குரிய சூழல் இருக்கணும். ஒத்துவரணும். தனிமை அறை. டேபிள், சேர், பேன், காற்றோட்ட வசதி. கணினி, இணைய தள இணைப்பு. டேபிள் மேல் 20 பேனா. 1 குயர் பேப்பர் இருக்கணும். நெட்டுக்கு மாதம் 2,000 செலவழித்துப்யன்படுத்தணும். இவையனைத்தும் பள்ளிக் கூடத்துக்கு பிள்ளைகளை அனுப்பும் போது செய்யப்படும் உணவு தருதல், தலை சீவுதல், உடை, சாக்ஸ், சூ அணிவித்தல். பை மாட்டுதல் போன்ற ஆரம்ப கட்டப்பணிகள்
5முக்கிய பணிகள். தமிழ், ஆங்கிலப் பத்திரிகைள், இதழ்களில் வரக்கூடிய, தொலைக்காட்சிகளில் காட்டக்கூடிய, ஜும்ஆ பயான்களில் ஆற்றக்கூடியவற்றில் இடம்பெறாத கருத்துக்களை எழுத்துக்குள் கொண்டு வரணும். அல்லாத எழுத்து குப்பைக் கூடைக்குப் போகும்.
6. அறியப்பட்ட தமிழறிஞர்கள் விலைபோய்விட்டனர். எவரையும் பகைத்துக் கொள்ளக்கூடாது. பகைக்கும் எழுத்துக்களை பதிவு செய்யக்கூடாதென்று எழுத்தை கரைத்து, கரைத்து தாமே கரைந்து போய்விட்டனர். நிகழ்கால தமிழ் அறிவுச் சூழல் அதற்குரிய அத்தாட்சி.
7. ஆங்கிலம், உருது, மலையாளம் பன்மொழி தெரிந்திருக்கணும். மொழி பெயர்ப்புக் கலை அறியாமல், பழந்தமிழ்ப் பாடல்களுக்கு உரை செய்யும் ஆற்றல் இல்லாமல் தமிழ்க் கட்டுரைகள் எழுதவியலாது. தமிழ் தெரிந்து கொள்வதிலேயே சிக்கலிருக்கிறது. வார்த்தைகளுக்குப் பொருள் புரியாது. இதற்கு சங்கப்பாடல் புரிந்துணர்விருக்கணும். ‘அரி’ என்ற சொல்லுக்கு 94 பொருள் உண்டு. ‘காழ்ப்பு’ என்ற சொல்லுக்கு 6 பொருள். ‘ப்பு’ எடுத்துவிட்டால் 26 பொருள். ‘தோடகம்’ என்ற சொல்லுக்கு 3 பொருள். ‘க’ எடுத்துவிட்டால், 12 பொருள். ‘கிறுக்கு’ சொல்லுக்கு 2 பொருள்தான். கிறுக்கன் சொல்லுக்கு 7 பொருள் உண்டு. ஆழ்ந்த மொழி ஈடுபாடு எழுத்தாளருக்கு அவசியம்.
8. பதிவாகி வெளியாகும் எழுத்துக்கள் எவரையாவது சார்ந்து எழுதும் எழுத்துக்களாகவே இருக்கின்றன. எழுத்தாளருக்கு வேற்று மொழி தேடலிருக்கணும். அல்லது வேற்று மொழியாளருடன் தொடர்பிருக்கணும் இருந்தால் எழுத்தில் மிளிரலாம்.
9. எல்லாவற்றுக்கும் மேலாக இலக்கியவாதி, எழுத்தாளர், எனப் போலிவாதிகள் சண்டைக்குத் தயாராக நிற்கின்றனர். அவர்களை மீறி எழுத்தில் ஜெயிக்கணும். களத்தில் நிலை நிற்கணும்.
10. அல்லாஹ்வுக்காக என்ற உறுதியிருக்கணும். களத்தில் பின் நோக்கவோ, பின் வாங்கவோ கூடாது. மேலும், மேலும் முன்னேறணும். இவ்வளவும் செய்தாலும் வருமானம் கிடைக்காது. ஸ்கூட்டர், கார் தரமாட்டார்கள், ஏ/சி அறை கிடைக்காது, பங்களா கிடைக்காது, வெளிநாடு சுற்றுப் பிரயாணம் கிட்டாது. இந்நிலைப்பாடு, வழிமுறையை ஒப்புக் கொண்டு எழுத்தைத் தருவோர் நிச்சயம் ‘‘அல்லாஹ்வின் அருள்பெற்ற எழுத்தாளர்.’’ ஐயமில்லை.

டென்ஷன் ஏன்?


ஒவ்வொரு மனிதனும் தான் பிறந்ததிலிருந்து இறக்கும் வரை பலவிதமான இன்பங்களையும், துன்பங்களையும் சந்திக்கின்றான். இது மாறி மாறி வருவதுதான் வாழ்க்கை. இதுபற்றி அல்லாஹ் அல்குர்ஆனில் குறிப்பிடுகையில், நிச்சயமாக கஷ்டத்துடனேதான் இலகு உள்ளது. (அல்குர்ஆன் 94:6)
மேலும் ஓரிடத்தில், நிச்சயமாக நாம் ஓரளவு பயத்தாலும், பசியாலும், செல்வங்கள், உயிர்கள் மற்றும் விளைச்சல்கள் ஆகியவற்றில் ஏற்படும் இழப்புகளாலும் உங்களைச் சோதிப்போம் பொறுமையாளர்களுக்கு (நபியே!) நீர் நன்மாராயம் கூறுவீராக! (2:155)
அல்லாஹ் ஒருவருக்கு நன்மையை நாடினால் அவரை அவன் சோதிக்கிறான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் (ஆதாரம் புஹாரி, முஸ்லிம்)
இவ்வாறு அல்குர்ஆனிலும், ஹதீதுகளிலும் ஏராளமாகச் சொல்லப்பட்டு விட்டது. இவைகளையெல்லாம் அதிகமானோர் பார்ப்பதுமில்லை, சிந்திப்பதுமில்லை. மாறாக எதற்கெடுத்தாலும் வீணான தடுமாற்றம், நிலைகுலைதல், உணர்ச்சிவசப்படுதல் போன்றவற்றால் ‘டென்ஷன்’ எனும் நோய்க்குள்ளாகியே தனது வாழ்வில் பாதியை நரகமாக ஆக்கிக் கொள்கிறார்கள். பூமியிலோ உங்களிலோ எந்தவோர் துன்பம் நேர்ந்தாலும் அதனை நாம் உண்டாக்குவதற்கு முன்னர் பதிவேட்டில் இல்லாமலில்லை. நிச்சயமாக இது அல்லாஹ்விற்கு மிக எளிதானதாகும் (அல்குர்ஆன் 57:22)
ஆக ஒரு மனிதன் டென்ஷன் ஆகுவதற்கு முக்கிய காரணம் அவனிடம் உறுதியான ஈமானில்லாததுதான். இதில் அவன் உறுதியாக இருந்தால் எக்கவலையும் படத்தேவையில்லை. அதாவது அவனுடைய உள்ளத்தில் லாஇலாஹ இல்லல்லாஹ் என்ற அடிப்படையான கலிமா ஆழமாக அஸ்திவாரமிடப்பட்டிருக்க வேண்டும். எனவே முதலில் நீங்கள் உங்களை ஒரு நல்ல முஃமினாக மாற்றிக் கொள்ள வேண்டும். வெளித்தோற்றத்தால் மாத்திரமன்றி உள்தோற்றத்தாலும் (உள்ளம்) பரிசுத்தமாகி உறுதியான ஈமானை நிறைபெறச் செய்வதன் மூலம் ஒவ்வொரு செயலையும் செய்யும் முன் எம்மைப் படைத்த ரப்புல் ஆலமீனிடமே முதல் விண்ணப்பத்தைப் போட வேண்டும்.
எந்த நற்காரியமாக இருந்தாலும் அவன் பெயரில் ஆரம்பம் செய்யும்போது எங்களுக்கு எவ்வித சிக்கல்களும் வரப் போவதில்லை. அப்படி ஏதாவது தடங்கல்கள் வந்தாலும் அதிலும் ஏதாவது நன்மை இருக்கும் இது எம்மைப்படைத்தவன் எமது ஈமானைச் சோதிப்பதற்காக வைக்கும் பரிட்சையாகவே நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். அதிலும் கூடடென்ஷன் ஆகாமல் ஆக வேண்டிய காரியங்களைச் செய்யும் போது சுலபமாக எல்லாமே நிறைவேறிவிடும். இதுப் பற்றி நபி(ஸல்) அவர்கள் கூறியதாவது, இறை நம்பிக்கையாளனின் நிலை வியப்புக்குரியது! அவன் எந்த நிலையில் இருந்தாலும் அதனால் நன்மைகளையே குவிக்கின்றான் இந்த நற்பேறு வேறு எவருக்கும் கிடைப்பதில்லை. (இறை நம்பிக்கையாளனைத் தவிர) அவன் வறுமை, நோய், துன்பம் ஆகிய நிலைகளில் இருந்தால் பொறுமையைக் கைக்கொள்கிறான். செல்வம், செழிப்பான நிலையில் இருக்கும் போது நன்றி செலுத்துகிறான். இந்த இரண்டு நிலைகளுமே அவனுக்கு நன்மைக்கான காரணங்களாய் அமைகின்றது. இந்த விஷயத்தில் தான் எம்மக்கள் பெரும் தவறு செய்கின்றார்கள். எப்படியான முஃமினாக இருந்தாலும் இது விஷயத்தில் கோட்டை விட்டு விடுகின்றனர். இன்பத்தில் நன்றி செலுத்துவதுமில்லை, துன்பத்தில் பொறுமையைக் கைக் கொள்வதுமில்லை. அதற்கும் பாளாய் போன இந்த டென்ஷன்தான் காரணம்.
டென்ஷன் அடிப்படை மையமே இந்த உள்ளம் தான். இது கெட்டு விட்டால் எமது உடலே கெட்டுவிடும். இதனால் இரத்த அழுத்தம், புற்று நோய், சக்கரை வியாதி போன்ற பயங்கரமான வியாதிகளையெல்லாம் எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுவிடும் எனவே இதிலிருந்து எம்மைப் பாதுகாத்துக் கொள்வதில் ‘திக்ர்’ பெரும் பங்கு வகிக்கிறது. எனவே நேரங்களை ஒதுக்கி நாம் திக்ர் செய்யப் பழகிக் கொள்ள வேண்டும். இதனால் நம் உடலில் சகல பாக்கியங்களையும் பெறுவதுடன் உள்ளமும் அமைதி பெறும். காலையிலும் மாலையிலும் உம்முடைய இறைவனின் திருநாமத்தை தஸ்பீஹ் (துதி) செய்து கொண்டிருப்பீராக என்று அல்லாஹ் அல்குர்ஆனில் பல இடங்களில் குறிப்பிடுகின்றான். இப்படி எங்கள் வாழ்க்கையில் எந்த நேரமும் திக்ர் செய்யக் கூடியவர்களாக நாம் மாறிவிட்டால் டென்ஷன் என்ற வார்த்தைக்கே இடமிருக்காது.
ஒரு வகையான ஷைத்தானின் ஊசலாட்டம் தான் இந்த டென்ஷன் இதற்கு இஸ்லாம் நல்ல வழிமுறைகளைச் சொல்லித் தந்திருக்கிறது. காலையில் விழித்ததிலிருந்து தூங்கும் வரைக்கும் செய்யும் அனைத்து காரியங்களையும் தூய்மையான எண்ணத்துடன் இறைவனுக்காகச் செய்யும் பொழுது அது நன்மையை பெற்றுத்தரும் காரியமாக மாறுகிறது. எனவே காலை, மாலை துவாக்கள், சாப்பிடும்போது, கழிவறைக்குச் செல்லும்போது, வீட்டைவிட்டு வெளியேறும்போது, தூங்கும்போது போன்ற அனைத்து செயல்களிலும் ஓத வேண்டிய துவாக்களை ஓத வேண்டும். இப்படி செய்யும் பொழுது ஒவ்வொரு விநாடியும் எம்மிறைவனை நாம் நினைத்துக் கொண்டேயிருக்கிறோம். அத்துடன் நம்மை அவன் எந்த நிலையிலும் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்ற இஹ்ஸான் நிலை எம்மில் ஏற்படுகிறது. இந்திலையில் எவ்விதமான கெட்ட செயல்கள் செய்வதற்கும் நாம் முன்வரமாட்டோம். இதனால் தேவையில்லாத டென்ஷனைவிட்டும் நம்மை நாம் காத்துக் கொள்கிறோம்.
டென்ஷனாவதற்கு அடுத்த முக்கிய காரணம் பேராசையாகும். எம் வாழ்வில் சகல நிலைகளிலும் எமக்கு மேல்மட்டத்திலுள்ளவர்களின் நிலையோடு நம்மை ஒப்பிட்டுப் பார்க்கிறோம். இதனால் நம்மை அறியாமலே நாம் அவர்களைப் போலாக வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். இதனால் ஆகப்போவது ஒன்றுமில்லை. பொறாமையுடனும், கர்வத்துடனுமான வீணான டென்ஷன்தான் வரும். மனிதனுக்கு ஒரு ஓடை நிரம்ப தங்கம் இருந்தாலும் தனக்கு (அது போல்) இரண்டு ஓடைகள் இருக்க வேண்டும் என்று விரும்புகிறான். அவனது வாயை மண்தான் நிரப்பும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள் (ஆதாரம் புகாரி, முஸ்லிம்)
அல்லாஹ் அல்குர்ஆனில் பேராசைபற்றி இப்படிக் குறிப்பிடுகிறான். உங்களில் சிலரை மற்றும் சிலரைவிட அல்லாஹ் சிறப்பித்திருப்பதில் நீங்கள் பேராசை கொள்ளாதீர்கள் (அல்குர்ஆன் 4:32)
மேலும் நீங்கள் மண்ணறைகளைச் சந்திக்கும் வரை, அதிகமாகத் தேடும் ஆசை உங்களைப் பராக்காக்கிவிட்டது (அல்குர்ஆன் 102:1)
எனவே இவ்வுலக வாழ்க்கை வெறும் சோதனைக்களம்தான் இதில் கூடுதலாக பேராசைப்படாமல் இறைவன் எமக்குத் தந்ததை போதுமாக்கிக் கொண்டு வாழப் பழகிக் கொள்ள வேண்டும்.
குடும்பப் பெண்கள் கூடுதலாக இந்த டென்ஷனுக்கு ஆளாகிறார்கள். தங்களது வீட்டு வேலைகளை உரிய நேரத்தில் முடிக்காமல் பிறகு செய்வோம் என்று தள்ளிப் போட்டுவிட்டு தேவையில்லாத சினிமாக்களைப் பார்ப்பதில் நேரத்தை வீணடிக்கிறார்கள். அது மட்டுமல்ல அதில் வருகிற அர்த்தமற்ற அழுகைக்குப் பின்னால் தாமும் உணர்ச்சி வசப்பட்டு அழுது பாவத்தைத் தேடிக் கொள்கிறார்கள். இந்தக் கண்களால் அல்லாஹ்விற்குப் பிடித்தமாதிரி நல்லதைப் பார்த்து நாம் செய்த பாவங்களுக்கு இறைவனிடத்தில் அழுது புலம்பி மன்னிப்புக் கேட்டிருக்கின்றோமா என்றால் இல்லவே இல்லை. இது ஒரு தேவையில்லாத டென்ஷன்தானே.
எனவே உரிய உரிய வேலைகளை உரிய நேரத்தில் செய்து முடிக்கும்போது எங்களுக்கு எந்த விதமான டென்ஷனும் வரப் போவதில்லை. அத்துடன் நமக்குக் கூடுதலான நேரமும் மிச்சப்படும். நமக்குக் கிடைக்கும் உடல் ஆரோக்கியமும், ஓய்வான நேரமும்தான் நமக்கு அல்லாஹ் வழங்கிய உண்மையான அருள் என்ற நபிமொழியை மனதில் எடுத்து எமக்குக் கிடைக்கும் ஓய்வு நேரங்களையும் நல்ல விஷயங்களை சிந்தித்து செயல்பட பழகிக் கொள்வோமேயானால் டென்ஷன் தானாக ஓடிவிடும்.
நான்கு பேருக்கு விருந்து கொடுப்பதாக இருந்தாலும்கூட எம்பெண்களுக்கு டென்ஷன் ஏற்பட்டுவிடும். இது போக விருந்திற்கு வருபவர்கள் சமைத்துக் கொண்டிருக்கும் நேரத்தில் வந்துவிட்டாலோ அவர்கள் படும்பாட்டை பார்க்கத் தேவையில்லை. எனவே நாம் அப்படிப் போவதாக இருந்தால் ஒரு போன் செய்து அவர்களுக்கு முன் அறிவிப்பு செய்துவிட்டுச் செல்ல வேண்டும்.
ரமளான் மாதம் வந்துவிட்டாலே போதும் ஒரு சிலரைத்தவிர ஏனையோர் கூடுதலாக டென்ஷாவது வழக்கம் நோன்பு திறப்பதற்கு என்னென்ன வகையான உணவுப் பண்டங்களையெல்லாம் சமைக்க முடியுமோ அதையெல்லாம் சமைத்துக் கொண்டிருப்பது. அந்தந்த நேரத் தொழுகைகளைக்கூட உரிய நேரத்தில் நிறைவேற்றுவதில்லை. கடைசி நேரத்தில் டென்ஷனாகிக் கொண்டு லுஹர், அஸர் எல்லாம் சேர்த்து ஒன்றாகவே தொழுவார்கள். கடைசியில் நோன்பு திறப்பதில் கூட அக்கரை செலுத்துவதில்லை. அதான் சொன்ன பிறகுதான் அய்யோ நோன்பு திறக்க வேண்டுமே என்று பதறியடித்துக் கொண்டு நோன்பைத் திறப்பார்கள்.
அத்துடன் பெருநாளைக்குத் தேவையான துணிமனிகளை எடுப்பதில் கூட டென்ஷனாகித் திரிவார்கள். எந்தவகை டிசைனைத் தேர்வு செய்வது என்று தெரியாமல் கடைகடையாக ஏறி இறங்கி கடைசியில் வரும் அந்தப் புனிதமான லைலத்துல்கத்ரின் இரவைக்கூட அவர்களால் அடைய முடியாமல் போய்விடுகிறது. எனவே இப்படிபட்ட நிலைமைகளிலிருந்து நாங்கள் விடுபட வேண்டும் இந்தப் புனிதமான மாதத்தை வீணாக்காமல் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நேரம் தவறாமல் தொழுகையை நிறைவேற்றுவது, சுன்னத்தான தொழுகைகளையும் சேர்த்துக் தொழுவது, அல்குர்ஆன் ஓதுவது, திக்ரு செய்வது போன்ற செயல்களில் ஈடுபடவேண்டும் அத்துடன் பெருநாளைக்குத் தேவையான துணிமனிகளை ரமளான் மாதத்திற்கு முதல் வாரமே எடுத்து வைத்துவிட வேண்டும். இப்படி செய்தோமேயானால் நமது உள்ளமும் உடலும் தூய்மையடைவதுடன் புத்துணர்ச்சியும் ஏற்படுகிறது. எந்தவகையான டென்ஷனுக்கும் ஆளாக மாட்டோம்.
மாணவர்களுக்குப் பரீட்சை வந்தாலே முதலில் டென்ஷனாவது பெற்றோர்கள்தான். இது முற்றிலும் தவறானதாகும் எப்பொழுதாவது ஒரு நாள் அந்த வருடத்திற்கான பரீட்சை வரும் என்று எமக்குத் தெரியும்தானே எனவே அதற்குத் தகுந்த மாதிரி எம்மை ஆயத்தம் செய்து கொள்ள வேண்டும். எல்லாப் படிப்பையும் ஒரே நேரத்தில் படிக்க இருக்காமல், அந்தந்த நாட்களுக்குரிய படிப்பை உடனுக்குடன் படித்து அதில் முக்கியமான விஷயங்களை சிறு குறிப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும். இப்படிச் செய்யும் போது நாங்கள் கடைசி நேரத்தில் டென்ஷனாக வேண்டிய தேவையே ஏற்படாது. அத்துடன் மாணவர்கள் தேவையில்லாத இன்டர்நெட் தொடர்பு, டெலிபோன் தொடர்புகளை எல்லாம் முடிந்தவரை குறைத்துக் கொள்ள வேண்டும். இது விஷயத்தில் பெற்றோர்களும் கூடுதலான கவனமெடுக்கத் தவறக்கூடாது.
டென்ஷனாவதற்கு அடுத்த முக்கியமான காரணம் எமக்கு ஏற்படும் மிருகத்தனமான கோபமாகும். இது ஷைத்தானின் குணங்களில் ஒன்றாகும் கோபம் வரும் போது நம்மை அறியாமல் செய்வதையெல்லாம் செய்துவிட்டு பின்புதான் இப்படிச் செய்துவிட்டோமே என்று யோசிப்பது. கோபம் வரும்போது தன்னை அடக்கி ஆள்பவன்தான் வீரனாவான் ஒருமுறை நபி(ஸல்) அவர்கள் கோபம் கொள்ளாதீர்கள் என்று கூறினார்கள் (ஆதாரம் – புஹாரி, முஸ்லிம்) எனவே கோபம் வரும் போது டென்ஷனாகாமல் அஊதுபில்லாஹி மினஸ்ஷைத்தான்னிர்றஜீம் என்று சொல்லிக் கொண்டால் கோபம் அப்படியே தனிந்துவிடும்.
பணிப்பெண்கள் என்ற போர்வையில் வெளிநாடு வரும் பெண்கள் படும்பாட்டைக் கொஞ்சம் உற்று நோக்குவோமானால் அதுவும் கூட பருவக்கோளாறினால் ஏற்படுகின்ற டென்ஷன் என்றால் அது மிகையாகாது. இதனால் இவர்கள் வேலை செய்யவரும் வீட்டை விட்டு வெளியேறி இங்கு நம்மை கேட்க ஆளில்லைதானே என்று நினைத்துக் கொண்டு தம்பாட்டிற்கு வருபவர் போபவரோடெல்லாம் உறவு பிடித்து தனது கற்பையே பறிகொடுத்துவிட்டு நிற்கெதியாக நிற்கின்றனர். பிறகுதான் இப்படி ஆகிவிட்டதே என்று வருத்தப்பட்டு வாழ்வதா சாவதா என்ற முடிவிற்கு ஆழாகின்றனர். எனவே இந்த விபச்சாரத்தில் வீழ்ந்து சீரழிந்து போவதைத் தடுப்பதற்குத்தான் இஸ்லாமிய மார்க்கம் பருவ வயதோடு திருமணம் செய்யும்படி பணிக்கிறது. இந்த வகையில் சீதனப்பிரச்சினையும் பெற்றோருக்கு பெரும் டென்ஷனை ஏற்படுத்துகிறது. இதனால்தானே அவர்கள் தம்பிள்ளைகளை வெளிநாட்டிற்கு உழைக்க அனுப்புகிறார்கள். இந்தப் பாவம் சீதனக் கொடுமைக்காரரை சும்மாவிடாது.
நம்மில் பெரும்பாலானவர்கள் கணவரை, பிள்ளைகளை அவரவர் வேலைகளுக்கு வாகனங்களில் அனுப்பிவிட்டு வீட்டில் உட்கார்ந்து கொண்டு தேவையில்லாமல் டென்ஷனாவது. எங்கே போய் சேர்ந்திருப்பார்களோ அல்லது இடையில் ஏதாவது ஆகியிருக்குமோ என்றெல்லாம் தடுமாறுகிறார்கள் எனவே நாம் அவர்களை அனுப்பும் போது படைத்தவனை நினைத்து அவனுடைய துணையுடன் போய்வரும்படி வழியனுப்ப வேண்டும்.
(மனிதனாகிய) அவனுக்கு முன்னும் பின்னும் தொடர்ந்து வரக்கூடிய வானவர்கள் உள்ளனர். அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைப்படி அவனைப் பாதுகாக்கின்றனர் (அல்குர்ஆன் 13:11).
இந்த திருமறை வசனத்தின் மூலம் தெளிவாகக் கூடியதாக இருக்கிறது. எனவே எம் அனைவரையும் அல்லாஹ் நிச்சயமாக பாதுகாக்கக்கூடியவன் என்ற உறுதியான நம்பிக்கை எம்மில் ஏற்பட வேண்டும்.
ஆக மொத்தத்தில் மனோபாவம்தான் எல்லாவகையான டென்ஷனுக்கும் காரணமாக அமையும். இந்தக் குட்டிக்கதை எமக்கு நல்ல பாடமாக அமைகிறது. ஒரு பாலைவனத்தில் இருவர் ஒட்டகத்தில் போய்க் கொண்டிருந்தனர். சற்றுக் களைப்பு வரவும் இருவரும் ஓர் ஓரமாக சாய்ந்து ஓய்வெடுத்துக் கொண்டனர். திடீரென்று ஒட்டக ஓட்டியை மற்றவர் படாதபாடு படுத்துகிறார். அவரை உருட்டி, பிரட்டி, காலை இழுத்து, தலையை அசைத்து, இப்படிச் செய்யும் போது ஓட்டக ஓட்டிக்குக் கோபம் வந்தது. ஏன் என்னை நீ இந்தப்பாடு படுத்துகிறாய் என்று கேட்டால் நீ கொஞ்சம் சும்மா இரு என்று சொல்லிவிட்டு இவர் வேலையையே பார்த்தார். நீ சற்று நேரம் வாயைத் திறந்து கொண்டே தூங்கிவிட்டாய் உன் வாயில் குட்டிப்பாம்பு சென்றுவிட்டது அதை எடுத்துவிடவே இந்தப்பாடு படுத்தினேன் என்று பாம்பு வாயிலிருந்து வந்தபின் சொன்னார் ஏன் இதை முன்னமே சொல்லக்கூடாதா என்று அவர் கேட்டார் அதற்கு மற்றவர் முன்னமே சொல்லியிருந்தால் நீ டென்ஷனால் செத்தே போயிருப்பாய் என்று கூறினார்.
இது போலத்தான் வைத்தியர்களிலும் சிலர் இருக்கின்றனர். ஒரு நோயாளியைப் பார்த்ததும் உடனே சத்திர சிகிச்சை செய்ய வேண்டும் அப்படி, இப்படி என்று அவரை டென்ஷனாக்கி விடுகின்றனர். இந்நிலையில் அவரது நோய் இருந்ததைவிடவும் அதிகரிக்கிறது. எனவே முதலில் வைத்தியர்கள் நோயாளிகள் இப்படியான நிலையில் இருந்தாலும் அவர்களை டென்ஷனாக்காமல் ஆறுதலாகவும் அன்பாகவும் எடுத்துச் சொல்லும் போது பாதி நோய் போய்விடும். எனவே இவர்களுடைய பராமரிப்பிலேதான் நோயாளார்கள் கூடுதலாக டென்ஷன் இல்லாமல் மன உறுதியுடன் போராடி குணமடைகின்றனர்.
உன் மனம் உன்னை என்ன நினைக்கிறது என்று நீ உன்னைப்பார் பிறர் என்னை என்ன நினைக்கிறார் என்று நினைக்காதே. நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் உனக்கு துன்பம் ஏதும் வந்தால் நான் இப்படிச் செய்திருந்தால் இப்படி ஆகியிருக்கும் என்றெண்ணாதே மாறாக, அல்லாஹ் இதனை விதித்துள்ளான், அவன் விரும்பியதைச் செய்தான் என்று கருது. ஏனெனில் இப்படிச் செய்திருந்தால், அப்படிச் செய்திருந்தால் என்றெண்ணுவது ஷைத்தானின் செயற்பாட்டிற்கு வழிதிறந்து விடும் எனவே எது நடந்தாலும் இறைவனின் நாட்டப்படியே நடைபெறும் என்ற உறுதியான நம்பிக்கையை எம்மில் நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும். உண்மை முஃமின் எந்த நேரமும் ஒரே நிலையில் இருப்பான் துக்கமோ சந்தோஷமோ இறைவன் பக்கம் விட்டுவிட்டு தைரியமாகவும் மனம் சஞ்சலப்படாமலும் மறுமையை நோக்கியதாகவே அவனுடைய பயணம் இருக்கும்.
ஆனால் வரவிருக்கும் இந்த மறுமையைப் பற்றி பெரும்பாலானவர்கள் சிந்திப்பதுமில்லை டென்ஷனாவதுமில்லை அந்த மஹ்ஷரில்தான் இப்படிப்பட்டவர்கள் போய் நின்று கொண்டு டென்ஷனாவார்கள் போலும் அங்கே போய் நின்று டென்ஷனாகி என்ன பயன் ஒன்றுமே ஆகப்போவதில்லை. நீயே ஒரு டென்ஷன் என்று அவன் நரகிலே வீசப்படுவான். எனவே உண்மை உள்ளம் கொண்ட மனிதர்களாக டென்ஷன் என்ற வார்த்தைக்கே இடம் வைக்காமல் எம் வாழ்க்கையை அல்குர்ஆன், ஹதீது பிரகாரம் அமைத்துக் கொண்டு சுபீட்சமாக, சுகமாக வாழ்ந்து இறையடி சேர எங்கள் அனைவருக்கும் அந்த வல்லோன் துணை புரியட்டும்.

திங்கள், டிசம்பர் 19, 2011
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் பாசத்திற்குரிய சகோதர/சகோதரிகளே அன்பிற்குரிய
நண்பர்களே....உங்களை அன்புடன் வரவேற்கின்றேன். மேலும் தங்களின் சிறந்த
கருத்துகளை பதிவு செய்யுங்கள். இந்த BLOG கை அறிமுகம் செய்யுங்கள்

ஞாயிறு, டிசம்பர் 18, 2011

பாலியலும் இஸ்லாமும்இன்றைய உலகு இருவகையான படையெடுப்புகளுக்கு முகங்கொடுத்து வருகின்றது. அவையாவன: 
இந்த வகையில் மேற்குலகின் உலகாயத, சடவாத சிந்தனைகளும், கலாசாரமும் மூன்றாம் மண்டல நாடுகளில் பொதுவாகவும் இஸ்லாமிய உலகில் குறிப்பாகவும் திட்டமிட்ட அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்டு வளர்க்கப்பட்டு வருகின்றன. உணவுவகைகள், குடிபானங்கள், உடைகள், நகைச்சுவை, காட்டூண்கள், மொழி, இசை, விளையாட்டுக்கள் முதலான சாதாரண அம்சங்கள் முதல் அனைத்தும் மேற்குலக கலாசாரத்தை பிரதிபலிப்பனவாகவே அமைந்துள்ளன.
மேற்குலகம் சுதந்திரமான, கட்டுப்பாடற்ற ஆண், பெண் உறவை விரும்புகின்றது. எனவே, உலகமயமாக்கல் மூலம் உலகின் ஏனைய நாடுகளிலும் இந்நிலையை அது உருவாக்க விரும்புகின்றது. இஸ்லாமிய உலகிலோ கட்டுக்கோப்பான குடும்ப சமூக அமைப்பு காணப்படுகின்றது. எனவே, மேற்குலகு இவ்விறுக்கமான அமைப்பை தகர்ப்பதற்கு திட்டமிட்டு செயற்பட்டு வருகின்றது. தனது சுதந்திரமான, எத்தகைய தார்மீக, ஆன்மீக கட்டுப்பாடுகளுமற்ற கலாசாரத்தை உலகமயப்படுத்துவதற்காக அவ்வப்போது சர்வதேச மாநாடுகளையும் நடாத்தி வருகின்றது. சில ஆண்டுகளுக்கு முன்னால் கெய்ரோவிலும், பீஜினிலும் நடைபெற்ற சனத்தொகை மாநாடுகளை இதற்கு உதாரணமாக குறிப்பிடலாம். இம்மாநாடுகளில் பெறப்பட்ட தீர்மானங்களுள் பின்வருவன குறிப்பிடத்தக்கவையாகும்:
ஆண், பெண் பால் வேறுபட்டை (Gender perspective) மறுக்கும் இவர்கள் கணவன், மனைவி என்ற புனிதமான உறவையும் கொச்சைப்படுத்துகின்றனர். கணவனை வாழ்க்கைத்துணைவர் (Life Partner) என்ற அளவில் மாத்திரமே இவர்கள் அங்கீகரிக்கின்றனர். சட்டரீதியற்ற முறையில் பிறக்கும் குழந்தைகளைக் கூட Natural Baby என அழைத்து அங்கீகாரம் வழங்குகின்றனர். தற்போது அதனை Love Baby என அழைக்க முற்பட்டுள்ளனர். இவ்வாறு கிழக்குலகில் பொதுவாகவும், இஸ்லாமிய உலகில் குறிப்பாகவும் பேணப்படுகின்ற இறுக்கமான குடும்ப அமைப்பை சீர்குலைக்க கையாளப்படும் உத்திகளுள் பின்வருவன குறிப்பிடத்தக்கவையாகும்.
இவ்வாறு தொடர்பாடல் ஊடகங்கள், பல்தேசிய கம்பனிகள் முதலானவற்றுக்கூடாக மேற்குலகு தனது கலாசார திணிப்பை வெற்றிகரமாக மேற்கொண்டு வருகின்றது. Holly Wood திரைப்படங்களின் செல்வாக்கின் விளைவாக Bolly Wood திரைப்படங்களும் வன்முறையையும், ஆபாசத்தையும் மிகக்கேவலமாக அரங்கேற்ற ஆரம்பித்துள்ளன. இலங்கையில் தயாரிக்கப்படும் திரைப்படங்களில் கூட ஒவ்வொரு நான்கிலும் மூன்று ஆபாசத் திரைப்படங்களாக அமைந்துள்ளன. இன்றைய சினிமாக்களில் கதையில்லை. பாடங்களோ படிப்பினைகளோ இல்லை. குறைந்தது மொழியையாவது காண முடியாது. தமிழ், ஹிந்தி சினிமாக்களில் இப்போது வன்முறையையும் ஆபாசத்தையும் தவிர வேறெதையும் பார்க்க முடியாது. குறிப்பாக தமிழ் சினிமாப்பாடல்கள் ஒரு கட்டுரையில் உதாரணத்திற்காகவேணும் மேற்கோள் காட்ட முடியாதளவிற்கு அருவெறுக்கத்தக்க ஆபாச வர்ணனைகளாக அமைந்துள்ளன. பெண்களை போகப்பொருளாகவும், போதைப்பொருளாகவும் காட்டும் வகையிலேயே பாடல் வரிகள் எழுதப்பட்டுள்ளன. விரகம் விரசமாகி, காதல் பாலுறவாகி, காதலர்கள் காமுகர்களாக சித்தரிக்கப்படும் அவலத்தைத்தான் இன்றைய தமிழ்ச்சினிமாவில் காணமுடிகின்றது.
ஆபாசத் திரைப்படங்கள், வெப்தளங்கள், வீடியோக்கள், நூல்கள், சஞ்சிகைகள் முதலானவை மேற்குலகிற்கு அதன் கலாசாரத்தை பரப்புவதற்கான ஊடகங்களாக மட்டுமன்றி உலகநாடுகளின் பொருளாதாரத்தை சுரண்டுவதற்கான மிகச் சிறந்த வழியாகவும் அமைந்துள்ளன. இன்றைய உலகின் மிகவும் இலாபகரமான வியாபாரமாக ஆபாசத்தை சந்தைப்படுத்துவது காணப்படுகின்றது.
மேற்கண்ட கட்டுப்பாடற்ற சுதந்திர ஆண், பெண் உறவு கலாசாரம் உலகமயப்படுத்தப்பட்டதன் விளைவை இன்றைய உலகம் மிக மோசமாக அனுபவிக்கத் துவங்கியுள்ளது. இன்று இக்கலாசாரத்தின் பரவல் மனித சமூகத்தின் இருப்பையே அச்சுறுத்திவருகின்றது. இக்கலாசாரத்தின் முக்கிய விளைவுகள் பின்வருமாறு:
ஆண், பெண் இருபாலாருக்குமிடையே இறைவன் ஒரு வகை ஈர்ப்பை இயல்பாகவே வைத்திருக்கின்றான். இதனை இனக்கவர்ச்சி (Sex Appeal) என்பர். பசி, தாகம் எழுவது போல பாலுணர்வும் இயல்பான ஒன்றாகும். உலகவாழ்வு நிலைப்பதற்கும் இனப்பெருக்கத்திற்கும், மனிதகுலம் உட்பட அனைத்து உயிரினங்களின் இருப்புக்கும் வழியாக அல்லாஹ் அமைத்திருப்பது ஆண், பெண் உறவைத்தான்.
அணு முதல் அனைத்தையும் அல்லாஹ் ஆண், பெண் என சோடி சோடியாகவே அமைத்திருக்கின்றான். மனித உலகில் மாத்திரமன்றி மிருக உலகிலும் தாவர உலகிலும் அனைத்திலும் இச்சோடி நிலையைக் காணலாம். இப்பேருண்மையை அல்குர்ஆன் பின்வருமாறு விளக்குகிறது.

”மேலும் (நாம்) நீங்கள் படிப்பினைப் பெறுவதற்காக ஒவ்வொன்றிலும் சோடிகளைப் படைத்துள்ளோம்.” (51:49)
மிருக உலகம், தாவர உலகம் உட்பட ஏனைய உயிரினங்களைப் பொறுத்தவரையில் அவை இயல்பான இனக்கவர்ச்சியால் உந்தப்பட்டு இனப்பெருக்கத்தில் சுதந்திரமாக ஈடுபடுகின்றன. அந்த சுதந்திரத்தை அல்லாஹ் அவற்றிற்கு வழங்கியுள்ளான். மனிதனைப் பொறுத்தவரையில் அவன் தனது பால் உணர்ச்சியை எவ்வாறு தீர்த்துக்கொள்ளலாம் என்ற கேள்வி இங்கு பிறக்கின்றது.
இன்றைய சமயசார்பற்ற – சடவாத மேற்குலக கலாசாரம், மனிதன் தனது பாலுணர்ச்சியைத் தீர்த்துக் கொள்ள எத்தகைய கட்டுப்பாடுகளோ, வரையறைகளோ, ஆன்மீக, தார்மீக ஒழுங்குகளோ அவசியமில்லை எனக் கருதுகின்றது. திருமணம், வீடு, குடும்பம் என்பனவெல்லாம் பெண்களை நிரந்தரமாக அடிமைத்தனத்தில் வைத்திருக்கும் ஒரு சாபமே அன்றி வேறில்லை என்பது இந்தக் கலாசாரத்தின் நிலைப்பாடாகும். இக்கருத்தியலின் பயங்கர விளைவுகளை இன்றைய உலகம் எவ்வாறு அனுபவிக்கின்றது என்பதை மேலே கண்டோம்.
மறுபக்கத்தில், மனிதன் உடல் இச்சையை முழுமையாக கட்டுப்படுத்தல் வேண்டும். அது மிருக உணர்வாகும். அது ஆன்மீக விமோசனத்திற்குத் தடையானது என்று கூறும் துறவறக் கொள்கையையும் இஸ்லாம் அங்கீகரிப்பதில்லை. ஒருவகையில் துறவறப்போக்கைக் கைக்கொள்ள முயற்சி செய்த உஸ்மான் இப்னு மழ்ஊன், அப்துல்லாஹ் இப்னு அம்ரிப்னுல் ஆஸ் போன்ற நபித்தோழர்களை நபியவர்கள் எவ்வாறு நெறிப்படுத்தினார்கள் என்பதை வரலாற்றில் பார்க்கின்றோம்.
இஸ்லாம் பாலுணர்வை சுதந்திரமாக, எத்தகைய கட்டுப்பாடுகளுமின்றித் தீர்த்துக் கொள்வதை தடைசெய்வது போலவே சம்சார வாழ்க்கையை துறக்கும் துறவறத்தையும் பிரமச்சாரியத்தையும் விலக்கி, இரண்டிற்கும் இடையே திருமணம் என்ற ஒரு நெறியை அமைத்திருக்கின்றது. மனிதன் கௌரவமானவன். அவனது எல்லா நடவடிக்கைகளும் கௌரவமானதாகவும் நாகரிகமானதாகவும் அமைய வேண்டும் என்பது இஸ்லாத்தின் நிலைப்பாடாகும். இந்த வகையில் ஆண், பெண் உறவு திருமணம் என்ற உடன்படிக்கைக் கூடாக புனிதமான ஒன்றாக அமைதல் வேண்டும் என்று அது வலியுறுத்துகின்றது.
திருமண உடன்படிக்கையின்றி ஏற்படும் ஆண் – பெண் உறவை முறைகேடானது எனக் கருதும் இஸ்லாம் அதனை ‘ஸினா’ (விபசாரம்) என அழைக்கின்றது. ஸினா இஸ்லாத்தின் பார்வையில் மிகப் பெரிய பாவமாகும். அதற்கு மறுமைக்கு முன்னால் உலகிலேயே தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பது இஸ்லாமியக் கொள்கையாகும்.
விபசாரத்தைத் தடைசெய்யும் இஸ்லாம் அத்துடன் நின்றுவிடாமல் அதற்கான வழிகளையும் தடைசெய்கின்றது.
இது பற்றி நபியவர்கள் பின்வருமாறு எச்சரித்துள்ளார்கள்:
‘அல்லாஹ்வையும் மறுமை நாளையும் ஈமான் கொண்டவர் ஒரு மஹ்ரம் இல்லாத நிலையில் ஒரு பெண்ணுடன் தனிமையில் இருக்கக் கூடாது. அவ்வாறு இருந்தால் அவர்களுடன் மூன்றாமவனாக ஷைத்தான் இருப்பான்.’ (அஹ்மத்)
‘உங்களில் ஒருவர் ஒரு மஹ்ரம் இல்லாமல் ஒரு பெண்ணுடன் தனித்திருக்க வேண்டாம்.’ (புகாரி, முஸ்லிம்)
1. இஸ்லாம் தனிமனிதர்களை உருவாக்கி, அவர்களைக் கொண்ட குடும்பங்களை அமைத்து, இறுதியில் தன் கொள்கை வழிச் சமூகம் ஒன்றை இலக்காகக் கொண்ட மார்க்கமாகும்.இஸ்லாத்தின் இலக்குகளில் குடும்பம் ஒரு பிரதான இடத்தைப் பெறுகின்றது. இஸ்லாத்தை குடும்பவியல் சார்ந்த மார்க்கம் (Family Oriented Religion) என வர்ணிப்பர். குடும்பம் என்பது ஒரு சிறிய சமூகம் (Micro Society) என கருதப்படுகின்றது. ஒரு பெரிய சமூகத்தின் ஆரம்ப வித்தாக அமைவது குடும்பமாகும். இஸ்லாமிய சமூகத்தின் ஒவ்வொரு குடும்பமும் ஒரு கோட்டைக்கு ஒப்பானதாகும். அக்கோட்டையில் எவ்வித ஓட்டையும் தோன்றாமல் அதனைப் பாதுகாக்கும் பொறுப்பு குடும்ப அங்கத்தவர்களைச் சார்ந்ததாகும். குடும்பம் எனும் கோட்டையை பாதுகாக்கும் சிப்பாய்களாக குடும்ப அங்கத்தவர்கள் இருக்கின்றனர். இத்தகைய முக்கியத்துவம் பெற்ற குடும்பம் எனும் நிறுவனத்தின் நுழைவாயிலாக இருப்பது திருமணம் ஆகும். திருமணம் இன்றி குடும்பம் உருவாவது சாத்தியமற்றதாகும்.
2. மனிதனிடம் காணப்படும் உணர்ச்சிகளில் பாலுணர்வே மிகவும் பலமானதாகும். அதனைத் தீர்த்துக்கொள்வதற்கான இயல்பானதுமானதும், பாதுகாப்பானதும், கௌரவமானதுமான வழியாக திருமணம் விளங்குகின்றது.
3. குழந்தைச் செல்வத்தைப் பெறுவதற்கான சிறந்த வழியாகவும், இனப்பெருக்கத்திற்கான சீரிய முறையாகவும் இருப்பது திருமணமாகும்.
4. தாய்மை உணர்வு (Motherhood), தந்தை உணர்வு (Fatherhood) சகோதர உறவு (Brotherhood) முதலான உணர்வுகளும் உறவுகளும் இன்றி மனித வாழ்வு நிறைவாக அமையாது. திருமணமே உணர்வுகளை உருவாக்கி போஷித்து வளர்க்கக் கூடியதாகும்.
5. மணவாழ்வு மனிதனில் சுறுசுறுப்பை ஏற்படுத்தவல்லது. அது மனிதனுக்கு ஊக்கத்தையும் உற்சாகத்தையும் கொடுப்பதோடு அவனை பொறுப்புணர்ச்சி உள்ளவனாகவும் மாற்றுகின்றது. இந்த வகையில் உழைப்பு அதிகரித்து, உற்பத்தி பெருகி, மனித வாழ்வு வளம் பெற மணவாழ்வு வழிகோலுகின்றது.
6. வாழ்க்கையுடன் தொடர்பான பொறுப்புக்கள் ஆண், பெண் இருபாலாருக்குமிடையே சரியாகப் பகிர்ந்தளிக்கப்படுவதில் வாழ்வின் வெற்றி தங்கியுள்ளது. திருமணத்திற்கூடாக இத்தகைய பொறுப்புக்கள் கணவன், மனைவிக்கிடையேயும், வீட்டின் ஏனைய உறுப்பினர்களுக்கிடையேயும் பகிர்ந்தளிக்கப்படுவதற்கான வாய்ப்புக் கிட்டுகின்றது.
7. குடும்பங்களுக்கிடையே தொடர்புகள் உருவாகி, பரஸ்பர அன்பும் ஒத்துழைப்பும் நிலவுகின்ற ஓர் ஆரோக்கியமான சமூகம் உருவாவதற்கும் திருமணமே காரணமாக அமைகின்றது.
8. மனஅழுத்தம், உளஇறுக்கம், கவலைகள் முதலான உளரீதியான பிரச்சினைகளிலிருந்து விடுதலை பெற்று நிறைவானதும் நிம்மதியானதுமான ஒரு வாழ்வுக்கு திருமணம் சிறந்த வழியாகவும் விளங்குகின்றது. திருமணம் முடித்தவர்களின் ஆயுள் திருமணம் முடிக்காதவர்களின் ஆயுளை விட கூடியதாகும் என்பது கவனத்திற் கொள்ளத்தக்கதாகும்.
திருமணத்தின் மூலம் கிட்டும் நிம்மதியையும் நிறைவையும் பற்றி அல்குர்ஆன் பின்வருமாறு விளக்குகின்றது
”நீங்கள் (அமைதி) ஆறுதல் பெறுவதற்குரிய துணையை உங்களில் இருந்தே உங்களுக்காக அவன் படைத்திருப்பதும், உங்களுக்கிடையே அன்பையும் கிருபையையும் ஏற்படுத்தி இருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்.” (30:21)
விபசாரம், தன்னினச்சேர்க்கை முதலான முறைகேடான ஆண் – பெண் உறவுகள் குடும்பம் என்ற சிறிய சமூகத்தைத் தகர்க்கக்கூடியவை யாகும். இயற்கை நியதிக்கும் இறை நியதிக்கும் முரணான இத்தகைய உறவுகள் குடும்ப அமைதியைக் குலைத்து சமுதாயத்தைச் சீரழிக்கும் பயங்கர ஈனச்செயல்களாகும். இவ்வாறான இழிசெயல்களில் ஈடுபடுவோர் திருமணத்தில் ஆசையற்று, இல்லற வாழ்வில் விருப்பமற்றவராக இருப்பர். இவர்கள் திருமணம் செய்துகொண்டாலும் தமது மனைவிமாரைப் புறக்கணிப்போராக இருப்பர். இதனால் பெண்கள் உளரீதியாக பாதிக்கப்பட்டு அவர்கள் மத்தியிலும் பல சீர்கேடுகள் தோன்ற வழிபிறக்கும். இத்தகைய நிலையில் கணவன், மனைவிக்கிடையே விரிசல் உருவாகி குழந்தைகளின் நல்வாழ்வு பாதிக்கப்படும். மொத்தத்தில் குடும்ப நிறுவனம் சீர்குலைந்து சமூக வாழ்வு சின்னாபின்னமாகி விடும்.
இவை தவிர, முறைகேடான பாலியல் உறவுகளால் எத்தகைய பயங்கர நோய்கள் தோன்றுகின்றன என்பதை இன்றைய மருத்துவ உலகம் எடுத்துக் கூறுகின்றது. மேக நோய் முதலான பல்வேறுபட்ட மோசமான பாலியல் நோய்கள் இன்று உலக சுகாதாரத்தை அச்சுறுத்திய வண்ணம் இருக்கின்றன. இன்று உலகையே ஆட்டி வைக்கும் பயங்கர ஆட்கொல்லி நோய் எய்ட்ஸின் தொடக்கப்புள்ளி முறைகோடான பாலியல் உறவுகள் என்பதை அறியாவதவர் எவரும் இல்லை. மனநோய்கள் உருவாவதற்கும் முறைகேடான பாலியல் உறவுகள் காரணமாக அமைகின்றன என்பது இன்று நிரூபிக்கப்பட்ட ஓர் உண்மையாகும். இத்தகைய காரணங்களுக்காகவே இஸ்லாம் முறைகேடான பாலியல் உறவுகளை மிகக் கடுமையாக கண்டித்து தடைசெய்துள்ளது.
ஏறத்தாழ ஐயாயிரம் வருடங்களுக்கு முன்னால் தன்னினச்சேர்க்கை என்ற தரங்கெட்ட செயலில் ஈடுபட்ட நபி லூத் (அலை) அவர்களின் சமூகத்தைப் பற்றிக் குறிப்பிடும் அல்குர்ஆன் அவர்களின் இக்குற்றச் செயல்களின் காரணமாக அவர்கள் எவ்வாறு பயங்கரமாகத் தண்டிக்கப்பட்டார்கள் என்பதை எடுத்துச் சொல்கின்றது. (பார்க்க: ஸூறத்து அஷ்ஷுஅரா : 172-174)
ஓரினச்சேர்க்கையைப் போலவே விபசாரமும் இஸ்லாமிய நோக்கில் மிகப் பெரிய பாவமும் குற்றச் செயலுமாகும். இஸ்லாம் விபசாரத்தை மட்டுமன்றி அதற்கு தூண்டுதல் வழங்குகின்ற அனைத்தையும் விலக்கியுள்ளது. இந்த வகையில் நாம் மேலே குறிப்பிட்டது போல, ஓர் ஆண் அந்நிய பெண்ணுடன் அல்லது ஒரு பெண் அந்நிய ஆணுடன் தனித்திருத்தல், ஆண்கள் – பெண்கள் சுதந்திரமாகப் பழகுதல் ஆகியவற்றுடன் நடனம், ஆபாசப் படங்கள், பாடல்கள், தரக்குறைவான இலக்கியப் படைப்புக்கள், கெட்ட பார்வை, காதல் போன்றவற்றையும் இஸ்லாம் ஹராமாக்கியுள்ளது.
விபசாரத்தை ஆகக் கூடிய தண்டனை வழங்கப்படவேண்டிய குற்றமாக இஸ்லாம் கருதுகின்றது. இஸ்லாமிய ஷரீஅத் அமுலில் உள்ள இடத்தில் ஓர் ஆணோ பெண்ணோ விபசாரம் புரிந்தால் அவருக்குக் கல்லெறிந்து கொல்லும் தண்டனை வழங்கப்பட வேண்டும். திருமணமாகாதவருக்கு தலா நூறு கசையடி வழங்கப்பட வேண்டும் என்பது இஸ்லாத்தின் தீர்ப்பாகும்.
விபசாரத்தினால் விளையும் ஆன்மீக, மறுமைப் பாதிப்புக்கள் பற்றி விளக்கும் நபிமொழிகளும் உண்டு. அவற்றுள் பின்வருவன குறிப்பிடத்தக்கவையாகும்:
‘ஒருவர் விபசாரம் செய்யும் நிலையில் முஃமினாக இருக்க மாட்டார்’ (புகாரி, முஸ்லிம்)
‘விபசாரத்தை இட்டு உங்களை எச்சரிக்கின்றேன். அதில் நான்கு விளைவுகள் இருக்கின்றன. அவையாவன:
முகத்தின் வசீகரத்தை நீக்கிவிடும்
வருமானத்தை அறுத்துவிடும்
ரஹ்மானின் கோபத்தைப் பெற்றுக் கொடுக்கும்
நரகில் நிலைத்திருக்க வழிவகுக்கும்’
 (ஆதாரம் : அத்தபராணி)
எனவே, தகாத பாலியல் தொடர்பு உடலாரோக்கியத்தைக் கெடுக்கின்றது. உள்ளத்தைக் கெடுக்கின்றது. அறிவையும், ஆன்மாவையும் பாதிக்கின்றது. தனிமனிதனை அழித்து, குடும்பவாழ்வை குட்டிச்சுவராக்கி விடுகின்றது. இறுதியில் முழுசமூக வாழ்;வுக்கும் வேட்டு வைக்கிறது. இஸ்லாம் மனிதனது இயல்பான பாலுணர்ச்சியைத் தீர்த்துக்கொள்ளவே பண்பாடான திருமணம் என்ற ஒழுங்கைத் தந்துள்ளது. ஹராமானவற்றை நாடவேண்டிய அவசியம் இல்லாத அளவுக்கு இந்த தீனுக்கூடாக அனைத்தையும் ஹலாலாக்கி தந்திருப்பது அல்லாஹ்வின் பேரருளாகும்.

جَزَاكَ اللَّهُ خَيْرًا அஷ்ஷெய்க் ஏ.சி. அகார் முஹம்மத்

வெள்ளி, டிசம்பர் 16, 2011

மனைவியின் உடல்நிலையில் அக்கறை காட்டுங்கள்!திருமணமான ஒவ்வொரு ஆணும் அவசியம் படிக்க வேண்டிய கட்டுரைPrintE-mail


மனைவியின் உடல்நிலையில் அக்கறை காட்டுங்கள்!
படுக்கையறை சுகத்தில் மட்டும் பங்கெடுத்துவிட்டு, அந்த மூன்று நாட்கள் வந்துவிட்டால் அடச்சே! என்று முகம் சுழிக்கும் ஆண்கள் தான் அதிகம் என்று பல குடும்ப பெண்களே கண்ணீர் விடுகின்றனர்.
குறிப்பறிந்து நடந்து கொள்ளும் ஆண்களை பெண்கள் போற்றுகிறார்கள். அதுதான் இருவருக்கும் இடையில் அதாவது, கணவன், மனைவிக்கு இடையே பரஸ்பர அன்பு, ஒருவரது உடல்நிலையில் ஏற்பட்ட துன்பத்தைப் புரிந்து கொண்டு தங்களது ஆசைகளைக் கட்டுப்படுத்தி விட்டு கொடுப்பதால் மனரீதியான பிரச்சனைகளை தவிர்க்கலாம்.
தாம்பத்ய உறவில் விட்டுக் கொடுப்பது என்பது நடைமுறை வாழ்க்கையில் சகஜமானது. எனவே, மனைவியின் உடல்நிலையில் ஆண்கள் அக்கறை காட்டாமல் வேறு யார் காட்டுவார்கள்? நீ பாதி நான் பாதி என்று இன்ப, துன்பத்தை பகிர்ந்து கொள்வதில் தவறு ஏதும் இல்லை.
ஒரு பெண் மருத்துவர் சொல்கிறார்; என் தோழிக்கு திருமணம் ஆகி மூன்று வருடங்களாகி விட்டன. ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. அவளது கணவர் பிரபல கம்பெனியில் உதவி மேனேஜராக வேலை பார்த்து வந்தார்.
அவள் கணவருக்கு வாரத்தில் நான்கு, ஐந்து நாட்களில் தாம்பத்ய உறவு வேண்டும். அவருடைய ஆசையை அவள் பூர்த்தி செய்து வந்தாள். அவளுக்கு ஃபீவர் இருந்த நேரத்தில் கூட அவளை அவருக்கு பலமுறை கொடுத்துள்ளாள்.
பாதிக்கப்பட்ட அந்த மனைவி கூறுகிறார்; ''என்னால் முடிந்தவரை அவருக்கு ஈடுகொடுக்கிறேன் ஆனால் அந்த மூன்று நாட்களில் அவரை சமாளிக்க முடியவில்லை. முதல்நாள் ரொம்ப அவஸ்தையாக இருக்கும் என்பதால், ஒதுங்கிவிடுவார். இரண்டாவது மூன்றாவது நாட்களில் விடமாட்டார். பாதுகாப்பு உறையுடன் உறவு கொள்கிறேன் என்று பிடிவாதமாக என்னை கட்டாயப்படுத்துவார். (மாதவிடாய் காலதில் உடலுறவு கொள்வது இஸ்லாத்தில் தடுக்கப்பட்டுள்ளது.)
அவருடைய வேகத்தைப் பார்த்து பயந்து வேறு வழியில்லாமல், என் வலி, வேதனையை பொறுத்துக் கொள்வேன். அதன்பின்பு எனக்கு அதிகமான ரத்தபோக்கு வரும். எனக்கு நானே அழுது கொண்டு சமாளித்துவிடுவேன். மூன்று, நான்கு நாட்கள் ஆவதற்குள் இரண்டு முறையாவது உறவு வைத்துக் கொள்வார். நானும் பலமுறை எடுத்து சொல்லியிருக்கிறேன்.
எல்லாம் எனக்கு தெரியும். அந்த நாட்களில் உறவு கொள்ளலாம். என் பிரண்ட்ஸ் அப்படித்தான் பண்றாங்கன்னு சொன்னார். அந்த நாட்களில் நான் உறவு வைத்து கொள்ள மறத்துவிட்டால், வேறு எங்காவது கால் கேர்ள்ஸ் பக்கம் போய்விட்டு எனக்கு ஃப்ரீயாக எய்ட்ஸ் நோயை கொடுத்துவிடுவாரோ என்று பயம். அதனால் பிரசவ வலியைப் பொறுத்துக் கொள்வது போல உறவு வைத்துக் கொள்ள அனுமதிக்கிறேன் என்ன செய்வது?'' என்றாள்.
ஆண்களிடம் மற்றொரு தவறான பழக்கமும் இருக்கிறது. கணவன்-மனைவிக்கு இடையில் உள்ள அந்தரங்கமான பிரச்சனைகளை, படுக்கை அறை உறவுகளைப் பற்றி நண்பர்களுடன் டிஸ்கஸ் பண்ணுகிறார்கள்.
ஏற்கனவே குழம்பி போயிருக்கும் நபரை தங்களுக்கு தெரிந்த அரைகுறை தகவல்களை வைத்து உசுப்பி விடுவார்கள். எனக்கு ஒரு டாக்டரே சொன்னார் என்று பொய் சொல்வார்கள். எல்லாம் தெரிந்த மாதிரி அந்த மூன்று நாட்களில் உறவு வைக்கலாம். நானே பண்ணுகிறேன் என்று தங்களது கோஷ்டிக்கு ஆள் சேர்ப்பார்கள்
தனது வாழ்க்கையில் சுக, துக்கத்தில் பங்கு எடுக்கும் மனைவியின் வேதனையை புரிந்து கொள்ளாமல், மனைவியிடம் தங்களது மனதில் எழுந்த சந்தேகங்களை கேட்காமல் நண்பர்கள் சொன்னதை மட்டும் வேதவாக்காக நினைத்துக் கொண்டு மனைவியை கட்டாயப்படுத்துவது நியாயம்தானா? என்று அவர்கள் எண்ணி பார்க்க வேண்டும்.
என் தோழியின் கணவர் விஷயத்திலும் அப்படியே! என் தோழியும் தன் கணவனிடம் மிகவும் பணிந்து போனது தவறு.தன் உடல்நிலையை, பின்விளைவுகளை பக்குவமாக எடுத்து சொல்லி இருக்கலாம். உங்களது உணர்ச்சிகளை கட்டுபடுத்தாமல், தடுமாறி போய் வேறு எங்கேனும் போய்விடாதீர்கள். எனக்கு எய்ட்ஸை இலவசமாகத் தராமல் இருந்தால் சரி என்று உன் கணவனிடம் எடுத்து சொல் என்று அட்வைஸ் பண்ணினேன்.
பெரும்பாலான பெண்கள் தங்களது உடல்ரீதியான வேதனைகளை தங்களுக்குள்ளே பூட்டி வைப்பது தான் பிரச்சனையே. அதுக்காக ஒரேயடியாக ஆண்களை பயமுறுத்தக்கூடாது. நம்ம மனைவி சொந்தமான பஸ் எனவே, ஸ்பேர் பஸ்ஸை ஓட்டிக் கொண்டு போகலாம் என்ற மனப்பான்மை வந்துவிடும்.
திருமணத்துக்கு முன்பே, தங்களது பெண்களுக்கும் நடைமுறை வாழ்க்கையில் மூன்று நாட்கள் வேதனை, கணவனது தொல்லை அதை சமாளிப்பது பற்றியும் மனரீதியாக எப்படி சமாளிக்க வேண்டும் என்பதை ஒரு தாயார் சொல்லித்தரலாம். ஏனென்றால் வாழ்க்கையில் முழு அத்தியாயங்களை போட்டோந்து கொண்டு வேதனைகளை அனுபவித்த ஒரு பெண்ணால்தான் தன் மகளுக்கு பிரச்சனைகளை எதிர்கொள்வதை சொல்லிதர முடியும்.
எனக்கு தெரிந்தவரையில் அறுபது சதவீத குடும்பங்களில் தங்களது பெண்களுக்கு நடைமுறை வாழ்க்கையில் தாங்கள் சந்தித்த வேதனைகள், அதாவது தாம்பத்ய உறவில் உடல்ரீதியாக சமாளித்த போராட்டங்களை சொல்வதில்லை. அதற்கு காரணம், நம் பெண்ணிடம் செக்ஸ் விவகாரங்களை சொல்வதா? என்று கூச்சப்பட்டு சொல்ல மறுக்கிறார்கள்.
தங்களது பெண்கள் தாமாகவே தெரிந்து கொள்வாள் என்று நீச்சல் தெரியாதவரை நடுக்கடலில் தள்ளிவிட்டதுபோல் திருமண வாழ்க்கையில் ஒருத்தன் கையில் பிடிச்சு கொடுத்தாச்சு. அப்பாடா! என்று நிம்மதியுடன் இருந்துவிடுகிறார்கள்
திருமணம் ஆன பெண்ணோ ஒவ்வொரு பிரச்னைகளிலும் போராடி, கண்ணீர் வடித்து, சந்தேகங்களை வெளியில் கேட்பதா வேண்டாமா? என்று தங்களது மனதுக்குள் பூவா, தலையா? போட்டு பார்த்துவிட்டு தனது மனதுக்குள்ளே பூட்டி வைத்துக் கொண்டு கண்ணீர் வடிப்பாள்.
எனவே, ஒரு தாய் தன் மகளை திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கும்போது, தாம்பத்ய உறவில் உள்ள வேதனைகளை, துன்பங்களை போக்கும் வழிமுறையையும் சமாளிக்கும் மனப்பக்குவத்தையும் சொல்லித்தர வேண்டும்.
அனைத்து ஆண்களையும் நான் இவ்வாறு குறிப்பிடவில்லை. இருப்பினும் பெரும்பாலனவர்கள் இவ்வாறு உள்ளனர் என்று அறிய முடிகிறது.
ஆண்களே! இறைவன் உங்களுக்கு வழங்கியுள்ள ஒரு மகத்துவ மிக்க அற்புதமான அருட்கொடையான மனைவியின் உடல்நலத்தை பாழடித்து இறைசாபத்திற்கு ஆளாகாதீர்கள். உங்கள் மனைவி மிகவும் மிருதுவானவள் அவள் விரும்பாமல் தொடுவது கூட முறையற்ற செயலே! அவளுடைய சம்மதத்துடன் அவளை அடைவதில் இருக்கும் இன்பம் வேறெதில் இருக்க முடியும்? என்பதை புரிந்து கொண்டு தாம்பத்தியத்தை முறையான வழியில் இன்பமாய் அனுபவியுங்கள்.