இடுகைகள்

ஆகஸ்ட், 2011 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இருந்தாலும் ... நான் ஒரு முஸ்லிம்!.

: இருந்தாலும் ... நான் ஒரு முஸ்லிம்!. நான் சரியான இஸ்லாமிய அடிப்படையில் வாழ்கிறேனோ இல்லையோ, இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்! மார்க்க சம்பந்தமான அறிவு எனக்கு இருக்கிறதோ இல்லையோ, இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்! என் மனைவி – மக்கள், குடும்பத்தினருக்கு நான் இஸ்லாத்தைப் பற்றி கூறி நல்வழிப் படுத்துகிறேனோ இல்லையோ, இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்! எனது இல்லத்தில் இஸ்லாத்திற்கு மாறான செயல்கள் நடப்பதைக் கண்டும் காணாமல் இருந்து விடுகிறேன், இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்! மறுமை நாளைக்காக நான் எதை சேர்த்து வைத்திருக்கிறேன் என்று எண்ணிப் பார்க்க இந்த அவசர கால உலகத்தில் எங்கே முடிகிறது இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்! ஐந்து வேளைத் தொழுவது கடமை என்பது எனக்குத் தெரியும். ஆனால் என் வேலைப் பளுவினால் என்னால் தொழமுடியவில்லை, இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்! ரமலானில் நோன்பு வைப்பது கட்டாயம் என்பது சிறுபிள்ளைக்கும் தெரியும். இருப்பினும் பசி தாகம் சமாளிக்க.. நோன்பு வைக்க என்னால் முடியவில்லை, இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்! என் தொழிலில் பணம் கொட்டோ கொட்டு என்று கொட்டுகிறது. எனினும்

தற்பெருமையும், ஆணவமும் கொன்ட ஒவ்வொருவரும் நரகவாதியே

                                                          ஏகஇறைவனின் திருப்பெயரால்... . وَلَا تُصَعِّرْ خَدَّكَ لِلنَّاسِ وَلَا تَمْشِ فِي الْأَرْضِ مَرَحًا إِنَّ اللَّهَ لَا يُحِبُّ كُلَّ مُخْتَالٍ فَخُورٍ } وَاقْصِدْ فِي مَشْيِكَ وَاغْضُضْ مِن صَوْتِكَ إِنَّ أَنكَرَ الْأَصْوَاتِ لَصَوْتُ الْحَمِيرِ மனிதர்களை விட்டும் உனது முகத்தைத் திருப்பிக் கொள்ளாதே! பூமியில் கர்வமாக நடக்காதே! கர்வம் கொண்டு பெருமையடிக்கும் எவரையும் அல்லாஹ் விரும்ப மாட்டான்.திருக்குர்ஆன். 31:18. '' நீ நடக்கும் போது நடுத்தரத்தைக் கடைப் பிடி! உனது குரலைத் தாழ்த்திக் கொள்! குரல்களில் வெறுக்கத்தக்கது கழுதையின் குரலாகும் '' ( என்றும் அறிவுரை கூறினார்).திருக்குர்ஆன். 31:19. தற்பெருமையும் , ஆணவமும் கொன்ட ஒவ்வொருவரும் நரகவாதியே ! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... தன்னைப் போன்று எவரும் உண்டா ? என்ற மமதை சிலருக்கு வரும். அது வந்து விட்டாலே உலக வாழ்க்கையை ஆடம்பரமாகவும் , சொகுசாகவும் வைத்துக் கொள்ளத் தூண்டும் , சொகுசும் ஆடம்பரமும் வந்து விட்டால் தனக்கு கீழுள்ளோர் மீது ஆதிக்கம் செலுத்தத் தூண்டும் ,

முஸ்லிம்கள் வாக்களிப்பது கடமையா?

படம்
முஸ்லிம்கள் வாக்களிப்பது கடமையா? -K.A.முஹம்மது ஹபிபுல்லாஹ் [ வாக்களிக்காமல் இருந்து நாட்டு நடப்புகளைப் பேசுபவன், அரசியலை விமர்சனம் செய்பவன் செத்த பாம்புக்குச்சமம் .நல்ல வேட்பாளரை இழக்கவும் உங்களுடைய இச்செயல் காரணமாக ஆகி விடும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள், ''நீங்கள் எப்படியோ அப்படியே உங்கள் ஆட்சியாளர்களும்.'' (நூல்: பைஹகி)] 6 விழுக்காடு என அரசுப் பதிவேடு கூறுகின்றது. அதாவது 6 .5 கோடி மக்கள் தொகையில் 39 லட்சம் பேர் முஸ்லிம்கள். இவர்களில் வாக்குரிமை உள்ள முஸ்லிம்கள் மட்டும் 40 சதவீதம். தமிழக சட்டமன்றத் தொகுதிகளில் சுமார் 90 முதல் 95 தொகுதிகள் முஸ்லிம்களின் வாக்குகள் மூலம் வெற்றி, தோல்வியை நிர்ணயம் செய்யும் தொகுதிகளாகும். ஆனால் தற்போது முஸ்லிம்களின் நிலைமை அரசியலில் செத்த பிணம். முஸ்லிம்கள் தங்கள் வாக்குரிமையை அல்லது நாடு வழங்கிய பெரிய உரிமையை வீணடித்ததே இதற்குக் காரணம். முஸ்லிம்களின் மார்க்க வழிகாட்டிகள் இதைக் குறித்து விழிப்புணர்வு ஏற்ப்படுத்த முன்வராதது ஏன்? இறைவன் யாரை நாடுகின்றானோ அவரைதான் ஆட்சியில் அமர்த்துவான். யாரை நாடுகின்றானோ அவரை