திங்கள், நவம்பர் 21, 2011

தடுக்கப்பட்டவைகள் விளக்கம்
அல்லாஹ் தடுத்துள்ளவைகளில் முதன்மையானது ஷிர்க் எனும் அல்லாஹ்வுக்கு இணைவைக்கும் பெரும் பாவச் செயலாகும்.
பெரும் பாவங்களிலேயே மிகப்பெரிய பாவங்களை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? என்று நபி(ஸல்)அவர்கள் மூன்று முறை கேட்டார்கள். அப்போது நபித்தோழர்கள், அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களே! ஆம், கூறுங்கள்! என்றனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள், அல்லாஹ்வுக்கு இணைவைத்தல்..  என்று கூறினார்கள். (நூற்கள்: புகாரி, முஸ்லிம்)
அனைத்துப் பாவங்களையும் அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு மன்னித்துவிடலாம். ஆனால் இணைவைத்தலை மட்டும் மன்னிக்கவேமாட்டான். ஏனெனில் இதற்கு மட்டும் பிரத்தியேகமாக பாவமீட்சி பெறவேண்டியுள்ளது.
அல்லாஹ் கூறுகின்றான்:
إِنَّ اللَّهَ لَا يَغْفِرُ أَنْ يُشْرَكَ بِهِ وَيَغْفِرُ مَا دُونَ ذَلِكَ لِمَنْ يَشَاءُ
நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணையாக்கப்படுவதை மன்னிக்கவே மாட்டான். இதனைத் தவிர (மற்ற) எதையும் தான் நாடியோருக்கு மன்னிப்பான். (அல்குர்ஆன் 4:48)
ஷிர்க் -அல்லாஹ்வுக்கு இணைவைத்தல்- எனும் பெரும்பாவம் முஸ்லிமை இஸ்லாத்தை விட்டும் வெளியேற்றிவிடும். இணைவைக்கும் கொள்கையுடம் இறந்து விட்டவன் நிரந்தர நரகத்திற்குரியவனாவான்.

                                             2கப்ர் வழிபாடு
நல்லடியார்களின் கப்ர்களிலும், அவர்களின் பெயர்களைப் பயன்படுத்தியும் மார்க்கத்திற்கு முரணான, அல்லாஹ்வுக்கு இணைவைக்கும் பல செயல்கள் நடக்கின்றன. அவற்றில் ஓரிறைக் கொள்கைக்கு முரணான சிலசெயல்களும் அவை தவறு என்பதற்கான ஆதாரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

1)
சிலர், இறந்துவிட்ட நபிமார்களிடமும் நல்லடியார்களிடமும் -அவ்லியாக்களிடமும்- தங்களின் தேவைகளை கேட்டுப் பிரார்த்திக்கின்றனர், பரிந்துரைக்க வேண்டுகின்றனர். துன்பங்களை நீக்கக் கோருகின்றனர், அவர்களிடம் உதவி, அடைக்கலம் மற்றும் பாதுகாப்புத் தேடுகின்றனர்.
பிரார்த்தனைகளுக்கு பதிலளிப்பவன் அல்லாஹ் ஒருவன் மட்டுமே!. அவனுக்கே உரிய இவ்வணக்கத்தை பிறருக்குச் செய்வது அல்லாஹ்வுக்கு இணைவைக்கும் செயலாகும்.
அல்லாஹ் கூறுகிறான்:

وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ

(
நபியே!) உமதிரட்சகன் அவனைத் தவிர (மற்ற எவரையும்) வணங்கக் கூடாது என்று கட்டளையிட்டுள்ளான். (அல்குர்ஆன் 17:23)

أَمَّنْ يُجِيبُ الْمُضطَرَّ إِذَا دَعَاهُ وَيَكْشِفُ السُّوءَ وَيَجْعَلُكُمْ خُلَفَاءَ الْأَرْضِ أَئِلَهٌ مَعَ اللَّهِ

துன்பத்திற்குள்ளானவனின் அழைப்பிற்கு பதிலளித்து, அவனுடைய தீங்கை நீக்குகின்ற, மேலும் உங்களை பூமியின் பிரதிநிதிகளாக்குகின்ற அல்லாஹ்வுடன் வேறு வணக்கத்திற்குரியவன் இருக்கின்றானா? (நிச்சயமாக இல்லை) (அல்குர்ஆன் 27:62)

2)
சிலர், சில பெரியார்கள் மற்றும் அவ்லியாக்களின் பெயர்களை நிற்கும் போதும், உட்காரும் போதும், கஷ்டத்தின் போதும் கூறும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர். ஏதேனும் துன்பம் ஏற்பட்டால் ஒருவர்: யா முஹம்மத்! என்கிறார். மற்றொருவர்: யா அலீ! என்கிறார். மற்றொருவர்: யா ஹுஸைன்! என்கிறார். அவர்: யா பதவீ! என்கிறார். இவர்: யா ஜீலானி! யா முஹைதீன்! என்கிறார். அவர்: யா ஷாதலீ! என்கிறார். இவர்: யா ரிஃபாயீ! என்கிறார். அவர் ஐதுரூஸை அழைக்கிறார். இவர் ஸெய்யிதா ஜைனபை அழைக்கிறார். மற்றொருவர் இப்னு அல்வானை அழைக்கிறார்.

அல்லாஹ் கூறுகிறான்:
إِنَّ الَّذِينَ تَدْعُونَ مِنْ دُونِ اللَّهِ عِبَادٌ أَمْثَالُكُمْ

அல்லாஹ்வைத் தவிர நீங்கள் அழைப்பவர்கள் நிச்சயமாக உங்களைப் போன்ற அடியார்களே! (அல்குர்ஆன் 7:194)

3)
கப்ரை வழிபடும் சிலர் அதனை வலம் வருகிறார்கள். அதன் மூலைகளை கையால் பூசி அதனை உடலில் தடவிக் கொள்கிறார்கள். அதன் மணலை முத்தமிடுகிறார்கள். முகத்தில் பூசிக் கொள்கிறார்கள். கப்ர்களைக் கண்டால் உடனே ஸஜ்தாவில் விழுந்து விடுகிறார்கள். மேலும் கப்ர்களுக்கு முன்னால் மிகவும் பயபக்தியுடனும் பணிவுடனும் சிரம் தாழ்ந்தவர்களாக, அச்ச உணர்வுடன் நின்று கொண்டு, நோயை நீக்க, குழந்தை கிடைக்க, தேவைகள் நிறைவேற மற்றும் இதுபோன்ற தன் கோரிக்கைகளை முன்வைக்கின்றார்கள். என்னுடைய தலைவரே! நெடுந்தூரம் பயணம் செய்து உங்களிடம் வந்துள்ளேன். எனவே என்னை நஷ்டமடைந்தவனாக வெறுங்கையுடன் திருப்பி அனுப்பிவிடாதீர்! என்றுகூட சிலர் வேண்டுகிறார்கள். ஆனால்

அல்லாஹ் கூறுகிறான்:
وَمَنْ أَضَلُّ مِمَّنْ يَدْعُو مِنْ دُونِ اللَّهِ مَنْ لَا يَسْتَجِيبُ لَهُ إِلَى يَوْمِ الْقِيَامَةِ وَهُمْ عَنْ دُعَائِهِمْ غَافِلُونَ

மேலும் அல்லாஹ்வை விடுத்து மறுமை நாள் வரை (அழைத்த போதிலும்) தனக்கு பதில் கொடுக்காதவர்களை அழைப்பவனை விட மிகவழிகெட்டவன் யார்? அவர்களோ, இவர்களின் அழைப்பைப் பற்றி மறந்தவர்களாக உள்ளனர். (அல்குர்ஆன் 46:5)

நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள்:
مَنْ مَاتَ وَهْوَ يَدْعُو مِنْ دُونِ اللَّهِ نِدًّا دَخَلَ النَّارَ

அல்லாஹ் அல்லாதவர்களை அவனுக்கு இணையாக பிரார்த்தித்தவனாக மரணித்தவன் நரகம் புகுந்துவிட்டான். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்வூத் -ரலி, நூல்: புகாரீ 4497)

4)
சிலர் கப்ர்களுக்கு சென்று மொட்டையடித்துக் கொள்கின்றனர். சிலர் கப்ர்களின் கண் கொள்ளாக்காட்சி, அவ்லியாக்களின் அபரிமித ஆற்றல் என்றெல்லாம் பல தலைப்புக்களில் கட்டுக் கதைகளை இட்டுக்கட்டி எழுதியுள்ளனர். அந்த புத்தகத்திற்கு மனாஸிக் ஹஜ்ஜில் மஷாஹித் -கண்கூடான ஹஜ் வழிபாடு- என்றும் பெயர் சூட்டியுள்ளனர். சிலர் அவ்லியாக்கள்தான் இவ்வுலகில் ஆட்சி செய்கிறார்கள் என்றும் துன்பம் தரவும் இன்பம் தரவும் அவர்கள் ஆற்றல் மிக்கவர்கள் என்றும் நம்பிக்கை கொண்டுள்ளார்கள்.

அல்லாஹ் கூறுகிறான்:
وَإِنْ يَمْسَسْكَ اللَّهُ بِضُرٍّ فَلَا كَاشِفَ لَهُ إِلَّا هُوَ وَإِنْ يُرِدْكَ بِخَيْرٍ فَلَا رَادَّ لِفَضْلِهِ يُصِيبُ بِهِ مَنْ يَشَاءُ مِنْ عِبَادِهِ وَهُوَ الْغَفُورُ الرَّحِيمُ

அல்லாஹ் உமக்கு ஒரு இடரை அடையச் செய்தால் அதனை நீக்குபவன் அவனைத் தவிர(வேறு) எவரும் இல்லை. மேலும் அவன் உமக்கு யாதொரு நன்மையை நாடினால் அவனது பேரருளை தடுப்பவர் எவருமில்லை. தன் அடியார்களில் அவன் நாடியவர்களுக்கு அதனை அடையச் செய்கின்றான். அவன் மிக்க மன்னிப்பவன், மிக்க கிருபையுடையவன். (அல்குர்ஆன் 10:107)
         3. அல்லாஹ் அல்லாதவருக்காகப் பலியிடல்   அல்லாஹ்வுக்கு மட்டுமே செய்யவேண்டிய தொழுகை போன்ற வழிபாடுகளில் பலியிடுதலும் ஒன்றாகும். அதனை பிறருக்காகச் செய்வது அல்லாஹ்வுக்கு இணைவைக்கும் செயலாகும்.
அல்லாஹ் கூறுகிறான்:
فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ
எனவே நீர் உமது இரட்சகனைத் தொழுது, (குர்பானியும் கொடுத்து அதனை அவனுக்காக) அறுப்பீராக! (அல்குர்ஆன் 108:2)
அதாவது: அல்லாஹ்வுக்காகவே பலியிடுவீராக! அல்லாஹ்வுடைய பெயர் கூறியே அறுப்பீராக!

நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்:
وَلَعَنَ اللَّهُ مَنْ ذَبَحَ لِغَيْرِ اللَّهِ
அல்லாஹ் அல்லாதவர்களுக்காக பலியிடுபவனை அல்லாஹ் சபிப்பானாக! (அறிவிப்பவர்: அலீ -ரலி, நூல்: முஸ்லிம் 3657)
அல்லாஹ் அல்லாதவர்களுக்காக அறுத்துப் பலியிடுவதில் இரண்டு விதமான குற்றங்கள் உன்னள.
1) அல்லாஹ் அல்லாதவர்களுக்கு அறுப்பது
2)
அல்லாஹ் அல்லாதவர்களின் பெயர் கூறி அறுப்பது.
இவ்விரண்டில் எந்த ஒன்று நிகழ்ந்தாலும் அதனை சாப்பிடுவது ஹராம் ஆகும். நமது நடைமுறையில் மலிந்து கிடக்கும் அறியாமைக் காலச் சடங்குகளில் ஷைத்தானுக்காக பலியிடும் வழக்கமும் ஒன்றாகும். வீடு வாங்கினாலோ, வீடு கட்டினாலோ, கிணறு தோண்டினாலோ ஷைத்தானின் துன்பத்திற்கு பயந்தவர்களாக அந்த இடத்திலோ, அல்லது அந்த மண் மீதோ அறுத்துப் பலியிடுகிறார்கள். இதுவும் தவறான பலியிடுதலேயாகும்.

சூனியம் இறைநிராகரிப்புச் செயலாகும். அது மனிதனை அழித்தொழிக்கும் ஏழு பெரும் பாவங்களில் ஒன்றாகும். சூனியம் என்பது எந்தப் பயனையும் பெற்றுத்தராத, மாறாக தீமைகளையே விளைவிக்கும் பாவச்செயலாகும்.

அல்லாஹ் கூறுகிறான்:
وَيَتَعَلَّمُونَ مَا يَضُرُّهُمْ وَلَا يَنفَعُهُمْ
அவர்களுக்கு எந்தப் பயனும் தராத, அவர்களுக்கு துன்பமிழைக்கும் ஒன்றை- சூனியத்தை- கற்றுக் கொண்டார்கள். (அல்குர்ஆன் 2:102)

وَلَا يُفْلِحُ السَّاحِرُ حَيْثُ أَتَى
சூனியக்காரன் எங்கு வந்த போதிலும் வெற்றி பெற மாட்டான். (அல்குர்ஆன் 20:69)

1)
நிச்சயமாக சூனியம் செய்பவன் காஃபிராவான். அல்லாஹ் கூறுகிறான்:

وَمَا كَفَرَ سُلَيْمَانُ وَلَكِنَّ الشَّيَاطِينَ كَفَرُوا يُعَلِّمُونَ النَّاسَ السِّحْرَ وَمَا أُنزِلَ عَلَى الْمَلَكَيْنِ بِبَابِلَ هَارُوتَ وَمَارُوتَ وَمَا يُعَلِّمَانِ مِنْ أَحَدٍ حَتَّى يَقُولَا إِنَّمَا نَحْنُ فِتْنَةٌ فَلَا تَكْفُرْ
மேலும் ஸுலைமான் (சூனியம் செய்து அல்லாஹ்வை) நிராகரிக்கவில்லை. எனினும் நிச்சயமாக ஷைத்தான்கள் தான் நிராகரித்து விட்டார்கள். அவர்கள் சூனியத்தையும் பாபிலோ(ன் நகரி)னில் ஹாரூத், மாரூத் எனும் இரு மலக்குகளுக்கு இறக்கப்பட்டிருந்த(தாகக் கூறி, பல)வற்றையும் மனிதர்களுக்குக் கற்றுக் கொடுத்து வந்தார்கள். மேலும் அவ்விருவரும் நாங்கள் சோதனையாக இருக்கின்றோம். ஆதலால் (இதைக்கற்று) நீ காஃபிராகிவிட வேண்டாம் என்று கூறும்வரை அவர்கள் (அதனை) ஒருவருக்கும் கற்றுக் கொடுப்பதில்லை. (அல்குர்ஆன் 2:102)

சூனியம் செய்பவர்களை கொலை செய்வதே மார்க்கத்தீர்ப்பாகும். சூனியத்தால் சம்பாதிப்பது ஹராமான, இழிவான செயலாகும். அறிவிலிகளும் அநியாயக்காரர்களும் பலவீனமான ஈமான் கொண்டவர்களும் தங்களின் எதிரிகளை சூனியத்தின் மூலம் பழிவாங்குவதற்காக சூனியக்காரர்களிடம் செல்கின்றனர். அநீதம் செய்தவர்கள் அதன் எதிர்விளைவாக தங்களை சூனியம் பிடித்து விடக்கூடாது என்பதற்காக சூனியக்காரர்களிடம் அடைக்கலம் தேடுகின்றனர்.

குல்அவூது பிறப்பில் ஃபலக், குல்அவூது பிறப்பின் னாஸ் மற்றும் இவைபோன்ற சில திருமறை வசனங்களின் மூலம் -மார்க்கம் அனுமதித்த முறையில்- அல்லாஹ்விடம் பாதுகாப்புத்தேடக் கடமைப்பட்டவர்கள் ஷிர்க்கான, ஹராமான வழிகளில் எங்கோ ஓடிக் கொண்டிருக்கின்றார்கள்.

2)
நிச்சயமாக ஜோஸியக்காரர்களும் குறிகாரார்களும் மகத்தான அல்லாஹ்வை நிராகரிக்கும் காஃபிர்களாவார்கள்.

மறைவானவற்றை அல்லாஹ்வைத் தவிர வேறுயாரும் அறியமுடியாதபோது இவர்கள் தங்களுக்கு மறைவான ஞானம் இருப்பதாக வாதிடுகின்றார்கள். மூட நம்பிக்கையுடையவர்களிடம் பணம் பறிப்பதற்காக பலவழி முறைகளை கையாளுகிறார்கள். மண்ணில் கோடிட்டுப் பார்ப்பது, சோழி போட்டுப் பார்ப்பது, கைரேகை பார்ப்பது, பாத்திரத்தில் நீரூற்றிப் பார்ப்பது, வெற்றிலையில் மைதடவிப் பார்ப்பது, கண்ணாடியில் பார்த்து மறைவானவற்றைக் கூறுவது போன்ற பலவழிகளில் மக்களை ஏமாற்றி வயிறு வளர்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.

இவர்கள் ஒரு முறை உண்மை கூறினால் 99 முறை பொய்யுரைப்பார்கள். ஆனால் மதிமயங்கியவர்கள். அவர்கள் ஒரு முறை கூறிய உண்மையை வைத்துக் கொண்டு இட்டுக்கட்டி பொய்யுரைக்கும் அனைத்தையும் உண்மையென நம்பிவிடுகின்றனர். திருமணம், வியாபாரம் மற்றும் வருங்காலத்தில் நடக்கவிருக்கும் இன்ப, துன்பங்கள் பற்றி கேட்பதற்காகவும், காணாமல்போன பொருட்களைத் திரும்பப் பெறவும் அவர்களிடம் செல்கிறார்கள்.

3)
சூனியம் மற்றும் ஜோஸியக்காரனிடம் சென்று, அவன் கூறுவதை உண்மை என நம்புபவன் இஸ்லாத்தை விட்டும் வெளியாகிவிட்ட காஃபிர் ஆவான்.

நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள்:

مَنْ أَتَى كَاهِنًا أَوْ عَرَّافًا فَصَدَّقَهُ بِمَا يَقُولُ فَقَدْ كَفَرَ بِمَا أُنْزِلَ عَلَى مُحَمَّدٍ

சூனியக்காரனிடமோ, ஜோஸியக்காரனிடமோ சென்று அவன் கூறுவதை உண்மை என நம்புகின்றவன், நிச்சயமாக முஹம்மது நபி(ஸல்)அவர்களின் மீது இறக்கப்பட்ட (மார்க்கத்)தை நிராகரித்து விட்டான். (அறிவிப்பவர்: அபூஹுரைரா -ரலி, நூல்: அஹமத் 9171)

இவர்களுக்கு மறைவான ஞானமெல்லாம் கிடையாது என்று தெரிந்து கொண்டே அவர்களை சோதிப்பதற்காகவோ அல்லது இதுபோன்ற வேறு ஏதேனும் காரணத்திற்காகவோ அவர்களிடம் செல்பவன் காஃபிராகி விடமாட்டான். எனினும் அவனுடைய நாற்பது நாட்களின் தொழுகை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள்.
مَنْ أَتَى عَرَّافًا فَسَأَلَهُ عَنْ شَيْءٍ لَمْ تُقْبَلْ لَهُ صَلَاةٌ أَرْبَعِينَ لَيْلَةً
யாரேனும் குறிகாரனிடம் வந்து அவனிடம் ஏதேனும் கேட்டால் அவனுடைய நாற்பது நாட்களின் தொழுகை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. (அறிவிப்பவர்: ஸஃபிய்யா -ரலி, நூல்: முஸ்லிம் 4137)

அவனுடைய தொழுகை ஏற்றுக் கொள்ளப்படாவிட்டாலும் நாற்பது நாட்களும் தொழுவது அவன் மீது கடமையாகும். மேலும் அவன் தான் செய்த இப்பாவத்திற்காக அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேட்கவேண்டும்.


சூனியம் மற்றும் ஜோஸியக்காரர்களின் ஆலோசனையின் அடிப்படையில் தாயத்து தகடு தட்டு போன்ற அல்லாஹ்வுக்கு இணைவைக்க காரணமாகும் பொருட்களில் நிவாரணம் இருப்பதாக நம்மில் பலர் நம்பிக்கை கொண்டுள்ளனர். எனவே அதனை கழுத்தில் கட்டிக் கொள்கின்றனர். கண்திருஷ்டி போன்றவைகளிலிருந்து பாதுகாப்புத் பெற அதனை அவர்களது குழந்தைகளின் கழுத்திலும் கட்டிவிடுகிறார்கள். உடலில் கட்டிக் கொள்கிறார்கள். வீடுகளிலும் கடைகளிலும் வாகனங்களிலும் தொங்க விடுகிறார்கள்.

துன்பம் மற்றும் சோதனைகளிலிருந்து விடுபட பாதுகாப்புப்பெற பல வடிவங்களில் மோதிரங்களை அணிந்து கொள்கின்றனர். நிச்சயமாக இவைஅனைத்தும் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைப்பதற்கு மாற்றமான கொள்கைகளாகும். தவறான இக்கொள்கைகள் ஈமானில் பலவீனத்தையே அதிகப்படுத்தும். இவைகளின் மூலம் நோய் நிவாரணம் தேடுவது ஹராம் ஆகும்.

நிவாரணத்திற்காக இவர்கள் தொங்கவிட்டுக் கொண்டிருக்கும் தாயத்து தகடுகளில் பெரும்பாலானவை இணைவைக்கும் வாசகங்கள், ஜின் ஷைத்தான்களிடம் அடைக்கலம் தேடுதல், புரியாத வரைபடங்கள், விளங்கிக் கொள்ளமுடியாத வாசகங்கள் ஆகியவைகளைக் கொண்டதான் தயாரிக்கப்படுகின்றன.

மேலும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுவதற்காக ஓதவேண்டிய திருக்குர்ஆனில் சில வாசகங்களையும் சிலர் எழுதுகின்றனர். ஆனால் அதனுடன் ஷிர்க்கான வாசகங்களையும் கலந்து விடுகின்றனர். சில பாவிகள் திருக்குர்ஆனின் வசனங்களை அசுத்தத்தைக் கொண்டும் மாதவிடாயின் இரத்தத்தைக் கொண்டும்கூட எழுதுகின்றனர். எனவே தாயத்து தகடு தட்டு போன்றவற்றைக் கட்டுவதோ தொங்கவிடுவதோ ஹராமாகும்.

நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள். 
مَنْ عَلَّقَ تَمِيمَةً فَقَدْ أَشْرَكَ
தாயத்தை கட்டித் தொங்க விட்டுக் கொண்டிருப்பவன் நிச்சயமாக -அல்லாஹ்வுக்கு- இணைவைத்து விட்டான். (அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி) நூல்: அஹமத் 16781)

தாயத்து தட்டுகளில் நன்மையோ தீமையோ கிடைக்கிறது என்று நம்புகின்றவன் அல்லாஹ்வுக்கு இணைவைத்துவிட்டான். அவன் அல்லாஹ்விடம் இப்பெரும் பாவத்திற்காகத் தவ்பாச் செய்யவில்லையெனில் அல்லாஹ் அவனை மன்னிக்க மாட்டான். அவனுடைய நன்மைகள் அனைத்தும் அழிந்துவிடும் மேலும் அவனுக்கு சொர்க்கம் ஹராமாகி நிரந்தர நரகவாதியாகிவிடுவான்.

செயலாற்றலுக்குச் சொந்தக்காரன் அல்லாஹ் ஒருவன் மட்டுமே எனினும் தாயத்து தட்டுகள் நன்மை-தீமைக்கு காரணமாக உள்ளன என்று சிலர் எண்ணுகின்றனர். இதுவும் ஒருவகையில் இணைவைத்தலேயாகும். ஏனெனில் நன்மை தீமைக்கு காரணமாக அல்லாஹ் ஆக்காததை இவர்கள் காரணமாக எண்ணுகிறார்கள்.அல்லாஹ் தனது படைப்பினங்களில் அவன் நாடியவற்றின்மீது சத்தியம் செய்வான். ஆனால் படைப்பினங்களாகிய நாம் அல்லாஹ் அல்லாதவற்றின் மீது சத்தியம் செய்யக் கூடாது.
பலர் அல்லாஹ்வின் படைப்பினங்களின் மீது சத்தியம் செய்கின்றனர். சத்தியம் செய்யப்பட தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும்  எதுவும் கிடையாது. அவனே மகத்தானவன், மேன்மைமிக்கவன், அமைத்தையும் நன்கறிந்தவன்.
நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள்.

أَلَا إِنَّ اللَّهَ يَنْهَاكُمْ أَنْ تَحْلِفُوا بِآبَائِكُمْ فَمَنْ كَانَ حَالِفًا فَلْيَحْلِفْ بِاللَّهِ وَإِلَّا فَلْيَصْمُتْ
அறிந்து கொள்ளுங்கள்! நீங்கள் உங்களுடைய தந்தையரின் மீது சத்தியம் செய்வதை நிச்சயமாக அல்லாஹ் தடுக்கின்றான். யாரேனும் சத்தியம் செய்வதானால் அல்லாஹ்வின் மீதே சத்தியம் செய்யட்டும். அல்லது -வாய் மூடி- மௌனமாக இருக்கட்டும். (அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி) நூல்: புகாரீ 6108)

مَنْ حَلَفَ بِغَيْرِ اللَّهِ فَقَدْ أَشْرَكَ
அல்லாஹ் அல்லாதவற்றின் மீது சத்தியம் செய்பவன் நிச்சயமாக -அல்;லாஹ்வுக்கு- இணைவைத்து விட்டான். (அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி) நூல்: அபூதாவூத் 2829)

مَنْ حَلَفَ بِالْأَمَانَةِ فَلَيْسَ مِنَّا
அமானிதத்தின் மீது சத்தியம் செய்பவன் நம்மைச் சார்ந்தவனல்ல. (அறிவிப்பவர்: அபூபுரைதா(ரலி) நூல்: அபூதாவூத் 2831)

கஃபாவின் மீதோ  அமானிதம்  கண்ணியம்  உதவி  இன்னாரின் பரகத்  இம்மனிதரின் வாழ்நாள்  நபி(ஸல்)அவர்களின் மேன்மை  அவ்லியாக்களின் கண்ணியம் ஆகியவற்றின் மீதோ  தாய் தந்தையின் மீதோ  குழந்தையின் தலைமீது கை வைத்தோ அல்லது இவையல்லாத இதுபோன்ற முறைகளிலோ சத்தியம் செய்வது ஹராம்ஆகும். இவ்வாறு யாரேனும் சத்தியம் செய்து விட்டால் அதன் பரிகாரமாக லாஇலாஹ இல்லல்லாஹ் என்று கூறவேண்டும்.

நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள். 
مَنْ حَلَفَ فَقَالَ فِي حَلِفِهِ وَاللَّاتِ وَالْعُزَّى فَلْيَقُلْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ 
சத்தியம் செய்பவன் தனது சத்தியத்தில் லாத்  உஸ்ஸா(என்ற சிலைகளின் பெயரைக்) கூறினால் லாஇலாஹ இல்லல்லாஹ் என்று கூறிக் கொள்ளட்டும். (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்: புகாரீ 4860)

இது போன்றே ஷிர்க்கான  ஹராமான பல வாசகங்களை முஸ்லிம்களான நம்மில் பலர் பயன்படுத்துகின்றனர். அவற்றில் சில இதோ:

அல்லாஹ்வுடன் பிறரை இணைத்தல்:
1)
அல்லாஹ்வைக் கொண்டும் உங்களைக் கொண்டும் பாதுகாவல் தேடுகிறேன்.
2)
நான் அல்லாஹ்வின் மீதும் உங்கள் மீதும் நம்பிக்கை வைத்துள்ளேன்.
3)
இது அல்லாஹ்வின் மூலமும் உங்கள் மூலமும் கிடைத்ததாகும்.
4)
எனக்கு அல்லாஹ்வையும் உங்களையும் தவிர வேறு எவருமில்லை.
5)
எனக்கு வானத்தில் அல்லாஹ்வும் பூமியில் நீங்களும் இருக்கின்றீர்கள்.
6)
அல்லாஹ்வும் இம்மனிதரும் இல்லையெனில்.....
7)
நான் இஸ்லாத்தை விட்டும் நீங்கிவிட்டேன்.
8)
இயற்கை நாடி விட்டது!

காலத்தைத் திட்டுதல்:
காலத்தின் அழிவே! கஷ்டமே! -இது கெட்ட நேரம்  இது கஷ்டகாலம். -இது மோசடி நேரம். என்று கூறுவது (ஏனெனில் காலத்தோடு தொடர்புடைய இவ்வாசகங்கள் அனைத்தும் காலத்தைச் சுழலச் செய்கின்ற அல்லாஹ்வையே குறிக்கின்றன)
 
தவறான பெயரிடுதல்:
அடிமைத்துவ வாசகங்களை படைப்பினங்களுடன் இணைப்பது  உதாரணமாக  அப்துல்மஸீஹ்  அப்துன் நபி  அப்துல் ரசூல்  அப்துல் ஹுஸைன் என்று பெயரிடுவது.
மேற்கூறப்பட்டுள்ளதைப் போன்ற அனைத்தை விட்டும் தவிர்ந்து கொள்வது அவசியமாகும்.
அமைதி  தொழுகையின் அங்கங்களில் ஒன்றாகும். அமைகியற்ற தொழுகையை அல்லாஹ் ஏற்றுக் கொள்வதில்லை. தொழுகையில் அமைதியின்மை  ருகூவிலும் ஸுஜுதிலும் முதுகை நேராக வைக்காமலிருப்பது  ருகூவிலிருந்து எழுந்து நேராக நிற்காமலிருப்பது  இரு ஸஜ்தாக்களுக்கு மத்தியில் சிறு இருப்பில் முறையாக அமராதிருப்பது  இவை அனைத்தும் பெரும்பாலான தொழுகையாளிகளிடம் நாம் பரவலாகக் காணும் செயலாகும். இவ்வாறு அவசரமாக தொழும் தொழுகையாளிகள் தொழாத பள்ளிவாயில்களே கிடையாது. சந்தேகமின்றி இது தவறான செயலாகும். இவ்வாறு தொழுபவர்களை இதன் விபரீதங்களைக் கூறி எச்சரிக்கை செய்வது அவசியமாகும்.

நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். 
أَسْوَأُ النَّاسِ سَرِقَةً الَّذِي يَسْرِقُ مِنْ صَلَاتِهِ قَالُوا يَا رَسُولَ اللَّهِ وَكَيْفَ يَسْرِقُ مِنْ صَلَاتِهِ قَالَ لَا يُتِمُّ رُكُوعَهَا وَلَا سُجُودَهَا

திருடுபவர்களில்  திருட்டால் மிகக் கெட்டதிருடன் தொழுகையை திருடுபவனே! என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். அப்போது தோழர்கள் அல்லாஹ்வின் தூதர்(ஸல்)அவர்களே! தொழுகையை எவ்வாறு திருடுவர்? என்று கேட்டனர். அதற்கு  தொழுகையின் ருகூஃவையும்  ஸுஜுதையும் முறையாக நிறைவேற்றாதவனே -தொழுகையை திருடுபவன்- என்று நபி(ஸல்)அவர்கள் பதிலளித்தார்கள். (அறிவிப்பவர்: அபூகதாதா(ரலி) நூல்: அஹமத் 21591)

لَا تُجْزِئُ صَلَاةُ الرَّجُلِ حَتَّى يُقِيمَ ظَهْرَهُ فِي الرُّكُوعِ وَالسُّجُودِ 
ருகூவிலும் ஸுஜுதிலும் முதுகை நேராக வைக்கும்வரை ஒருவரின் தொழுகை நிறைவேறியதாகாது. (அறிவிப்பவர்: அபூமஸ்வூத் அல்பத்வீ (ரலி) நூல்: அபூதாவூத் 729)

அபூஅப்துல்லாஹ் அல்அஷ்அரீ (ரலி)அவர்கள் கூறுகிறார்கள். நபி(ஸல்)அவர்கள் தோழர்களுக்கு தொழுகை நடத்திவிட்டு  அவர்களில் சிலருடன் அமர்ந்திருந்தார்கள். அப்பொழுது (பள்ளியில்) நுழைந்த ஒருவர் தொழ ஆரம்பித்தார். -கோழி கொத்துவதைப்போல்- மிகவிரைவாக ருகூவு  ஸுஜுது செய்து தொழுது கொண்டிருந்தார். இதனை கவனித்த நபி(ஸல்)அவர்கள், இவரைப் பார்த்தீர்களா? காகம் இரத்தத்தை கொத்துவது போல் தனது தொழுகையில் கொத்துகிறார். இவ்வாறு தொழும் வழமையுடன் மரணிப்பவர் முஹம்மது(ஸல்)அவர்களின் மார்க்கம் அல்லாத -வேறு- மார்க்கத்தில் தான் மரணிக்கின்றார். விரைவாக ருகூவு  ஸுஜுது செய்பவருக்கு உவமை  பசியோடிருப்பவர் ஓரிரு பேரீத்தம் பழங்களை சாப்பிடுவதை போன்றதாகும். அவை அவரது பசிக்கு போதுமானதல்லவே! என்று கூறினார்கள். (நூல்: இப்னுகுசைமா)

ஜைது பின் வஹப் அவர்கள் கூறிகிறார்கள். ஹுதைஃபா(ரலி)அவர்கள் ருகூவு  ஸுஜுதை பரிபூரணமாக செய்யாத ஒருவரைக் கண்டார்கள். அவரிடம்  நீர் தொழவில்லை. நீர் இவ்வாறு தொழும் வழமையுடன் மரணித்துவிட்டால் நிச்சயமாக நபி(ஸல்)அவர்களுக்கு அல்லாஹ் வழிகாட்டிய மார்க்கம் அல்லாத பிறமதத்தில் மரணித்தவராகி விடுவீர் என்று கூறினார்கள். (நூல்: புகாரீ)

தொழுகையை அமைதி இல்லாமல் தொழது கொண்டிருப்பவரிடம் அவரின் தவறை உணர்த்தப்பட்டால் அப்போது அவர் தொழுத தொழுகையை அமைதியுடன் திரும்பத் தொழவேண்டும். ஏனெனில் நபி(ஸல்)அவர்கள், அவ்வாறு அமைதியின்றி தொழுத மனிதரை பார்த்து, அவர்தொழுது முடித்தபின் இவ்வாறு கூறினார்கள்.

ارْجِعْ فَصَلِّ فَإِنَّكَ لَمْ تُصَلِّ
நீர் திரும்பிச் சென்று மீண்டும் தொழுவீராக! ஏனெனில் நீர் -முறையாக- தொழவில்லை. (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்: புகாரீ 757)

அமைதியுடன் தொழும் சட்டம் தெரிவதற்கு முன்னர் அவசரமாக தொழுத தொழுகைகளை மீண்டும் தொழவேண்டியதில்லை. ஆனால் அதற்காக அல்லாஹ்விடம் தவ்பாச் செய்யவேண்டும்.
                          8.தொழுகையில் இமாமை முந்துதல்                                                            மனிதன் இயற்கையிலேயே அவசரக்காரனாவான். 
 
அல்லாஹ் கூறுகிறான்:
மனிதன் (பொறுமை இழந்த) அவசரக்காரனாகவே இருக்கின்றான். (அல்குர்ஆன் 17:11)
நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள்.

الْأَنَاةُ مِنْ اللَّهِ وَالْعَجَلَةُ مِنْ الشَّيْطَانِ
நிதானம் அல்லாஹ்விடத்திலிருந்து உள்ளதாகும். அவசரம் ஷைத்தானிடமிருந்து உள்ளதாகும். (அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸஃது(ரலி) நூல்: திர்மிதி 1935)
(இந்த ஹதீஸின் அறிவிப்பு தொடர் பலகீனமானதாகும்)

நமதருகில் நின்று தொழுவோரில் பலர் ருகூவு  {ஜுது மற்றும் தக்பீர்களில் இமாமை முந்திச் செல்கின்றனர். இமாமுக்கு முன்னரே ஸலாம் கொடுத்து விடுகின்றனர். சில சமயங்களில் நாமே இவ்வாறு நடந்துகொள்கிறோம். இதனை நாம் தவறாக நினைப்பதே கிடையாது. ஆனால் நபி(ஸல்)அவர்கள் கடுமையாக எச்சரிக்கின்றார்கள்.

أَمَا يَخْشَى الَّذِي يَرْفَعُ رَأْسَهُ قَبْلَ الْإِمَامِ أَنْ يُحَوِّلَ اللَّهُ رَأْسَهُ رَأْسَ حِمَارٍ
இமாமுக்கு முன்பே தலையை உயர்த்துபவர்  அவரது தலையை கடுதையின் தலையாக அல்லாஹ் மாற்றிவிடுவதை பயந்து கொள்ளவில்லையா? (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்: முஸ்லிம் 647)

தொடுகைக்காக வருபவரே அமைதியாகவும் நிதானமாகவும் வரவேண்டும் என்ற கட்டளையிருக்கும் போது தொழுகையையே அவசரமாகத் தொழுவது தவறில்லையா?!
இமாமை முந்திச் செல்லக் கூடாது என்பதை தவறாகப் புரிந்து கொண்ட சிலர் இமாமை விட்டும் மிகத் தாமதமாகச் செல்கின்றனர். இதுவும் முறையற்ற செயலாகும். இமாமை பின் தொடரும் முறையை மார்க்க அறிஞர்கள் விளக்கியுள்ளார்கள். இமாம் தக்பீர் கூறி முடித்தவுடன் அவரை பின்பற்றுபவர் தனது செயல்களை ஆரம்பிக்க வேண்டும். தொழுகையின் அனைத்து நிலைகளிலும் இவ்வாறே பின்பற்றவேண்டும். தக்பீருக்கு முந்தவோ  பிந்தவோ கூடாது. இதுவே சரியான முறையாகும்.

9.வெறுக்கத்தக்க வாடையுடன் பள்ளிக்கு வருதல்           வெங்காயம்  பூண்டு மற்றும் இதுபோன்ற வெறுக்கத்தக்க வாடை தரும் பொருட்களை சாப்பிட்டுவிட்டு அதன் வாடையுடன் பள்ளிவாயிலுக்கு வருவது கூடாது.
அல்லாஹ் கூறுகிறான்.

ஆதமுடைய மக்களே! ஒவ்வொரு மஸ்ஜிதிலும் (ஆடைகளினால்) உங்களுடைய அலங்காரத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.(அல்குர்ஆன் 7:31)
நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள்.

مَنْ أَكَلَ ثُومًا أَوْ بَصَلًا فَلْيَعْتَزِلْنَا أَوْ قَالَ فَلْيَعْتَزِلْ مَسْجِدَنَا وَلْيَقْعُدْ فِي بَيْتِهِ

வெங்காயம் அல்லது பூண்டை உண்டவர் நம்மை விட்டும் தனித்திருக்கட்டும் -அல்லது- நமது பள்ளியை விட்டும் தளித்திருக்கட்டும். அவருடைய வீட்டிலேயே அமர்ந்து கொள்ளட்டும். (அறிவிப்பவர்: ஜாபிர்(ரலி) நூல்: புகாரீ 855)


مَنْ أَكَلَ الْبَصَلَ وَالثُّومَ وَالْكُرَّاثَ فَلَا يَقْرَبَنَّ مَسْجِدَنَا فَإِنَّ الْمَلَائِكَةَ تَتَأَذَّى مِمَّا يَتَأَذَّى مِنْهُ بَنُو آدَمَ

வெங்காயம்  பூண்டு மற்றும்(அது போன்ற வாடையுடைய) குர்ராஸ் எனும் செடியை சாப்பிட்டவர் நமது பள்ளிவாயிலை நெருங்கவேண்டாம். ஏனெனில் மனிதர்கள் துன்புறும் பொருட்களின் மூலம் மலக்குகளும் துன்புறுகிறார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர்(ரலி) நூல்: முஸ்லிம் 876)

உமர்(ரலி)அவர்கள் மக்களுக்கு ஜும்ஆ உரை நிகழ்த்தும் போது இவ்வாறு கூறினார்கள். மக்களே! நிச்சயமாக நீங்கள் இரண்டு செடிகளைச் சாப்பிடுகின்றீர்கள். நான் அவைகளை அருவருப்பானவையாகவே கருதுகிறேன். அவை வெங்காயமும்  பூண்டும். நிச்சயமாக நபி(ஸல்)அவர்கள் எவரிடமேனும் இவ்விரண்டின் வாடையைக் கண்டால் அவரை பள்ளியிலிருந்து வெளியேறி பகீஃ-மண்ணறையின் பக்கம் சென்றுவிடுமாறும். அதனை சாப்பிட விரும்புபவர் சமைப்பதின் மூலம் அவற்றின் வாடையை போக்கி விடுமாறும் கட்டளையிடுவார்கள். (அறிவிப்பவர்: மிக்தான்(ரலி) நூல்: முஸ்லிம்)

கடின வேலைகள் செய்து வேர்வையுடனும் அக்குள் மற்றும் ஆடைகளில் அருவருக்கத்தக்க வாடையுடனும் பள்ளிக்கு வருவதும் இந்தத் தடையில் அடங்கும். இதைவிட மிககெட்ட நிலை என்னவெனில் -சிகரட் போன்ற- ஹராமாக்கப்பட்ட புகைபிடித்து விட்டு அதன் துர்நாற்றத்துடன் பள்ளிக்கு வருவதுதான். இவர்கள் அல்லாஹ்வின் அடியார்களான மலக்குகளுக்கும் தொழுகையாளிகளுக்கும் துன்பம் தருகின்றனர்.
                               10.விபச்சாரம் செய்தல்                                 மனிதனின் கண்ணியத்தையும் சந்ததியையும் பாதுகாப்பது இஸ்லாத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும். எனவே அது விபச்சாரத்தை ஹராமாக்கியுள்ளது.
அல்லாஹ் கூறுகிறான்.

நீங்கள் விபச்சாரத்தை நெருங்காதீர்கள். நிச்சயமாக அது மானக்கேடானதாக இருக்கிறது. மேலும் அது (மனிதகுலத்திற்கு பெரும் கேடு விளைவிக்கும்) வழியால் மிகக்கெட்டது. (அல்குர்ஆன் 17:32)

மார்க்கம் விபச்சாரத்தை தடுத்திருப்பதுடன் அதன் பக்கம் நெருக்கிவைக்கும் அனைத்து வழிகளையும் தொடர்புகளையும் அடைத்து விட்டது. இதனால்தான் பெண்கள் பர்தா அணியவேண்டும் ஆண்  பெண் இருவரும் தங்களின் பார்வைகளை தாழித்திக் கொள்ளவேண்டும்  அன்னியப் பெண்ணுடன் தனித்திருக்கக் கூடாது போன்ற கட்டளைகளிட்டுள்ளது.

திருமணம் செய்தவன் விபச்சாரத்தில் ஈடுபட்டால் இஸ்லாம் அவனுக்கு மிகக்கடுமையான தண்டனையை வழங்குகிறது. அத்தண்டனையின் மூலம் பிறரும் படிப்பினை பெறவேண்டும் என்பதற்காக அத்தண்டனையை பொதுமக்களுக்கு முன்னிலையில் வழங்குமாறு கூறுகிறது. அத்தீயசெயலின் விபரீதங்களை உணர்வதற்காகவும் ஹராமான செயலில் ஈடுபட்டிருந்த போது இன்பம் அனுபவித்த அனைத்து உறுப்புக்களும் தண்டிக்கப்பட வேண்டும் என்பதற்காகவும் மரணிக்கும் வரை கல்லெறிந்து கொல்லவேண்டும் என கட்டளையிடுகிறது.
விபச்சாரம் செய்தவன் திருமணம் செய்யாதவனாக இருந்தால் அவனை 100 முறை சாட்டையால் அடிக்கவேண்டும். மேலுமு; தண்டனைக்குப் பிறகு அவ்வூரை விட்டும் ஒரு வருடம் ஊர் நீக்கம் செய்யவேண்டும் என்றும் கட்டளையிடுகிறது. பொது மக்களுக்கு முன்னிலையில் தண்டிக்கப்பட்டு கேவலத்திற்கும் இழிவுக்கும் ஆளாகிவிட்டதினால் அந்நிலை மாறவேண்டும் என்பதே ஊர் நீக்கத்தின் பிரதான நோக்கமாகும்.

விபச்சாரம் செய்த ஆண்களும்  பெண்களும் மண்ணரை எனும் திரைவாழ்க்கையில் கீழ்ப்பகுதி விசாலமான  மேற்பகுதி குறுகிய நெருப்புக் குண்டத்தில் நிர்வாணமாக மிதப்பார்கள். அதன் கீழ்பகுதியிலிருந்து நெருப்பு மூட்டப்படும்  அதன் வேதனையால் அலறுவார்கள். அந்த நெருப்பு அவர்களை மேலே உயர்த்திச் செல்லும். அவர்கள் வெளியே தப்பிக்க முயற்சிப்பார்கள். அப்போது நெருப்பு அணைந்துவிடும். உடனே கீழ்பகுதிக்கு வந்துவிடுவர். இவ்வாறு மறுமை நாள்வரை வேதனை செய்யப்படுவார்கள்.
விபச்சாரம் வயது வரம்பின்றி அனைவரின் மீதும் ஹராம் ஆகும். அதில் மிகக் கேவலமான நிலை யாதெனில் தனது வாழ்நாளின் தவணை முடியப்போகும் நிலையில்  கப்ர் வாழ்க்கை நெருங்கிவிட்ட முதியபருவத்தில் விபச்சாரத்தில் ஈடுபடுவது தான்.
நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள்.

ثَلَاثَةٌ لَا يُكَلِّمُهُمْ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ وَلَا يُزَكِّيهِمْ -قَالَ أَبُو مُعَاوِيَةَ- وَلَا يَنْظُرُ إِلَيْهِمْ وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ شَيْخٌ زَانٍ وَمَلِكٌ كَذَّابٌ وَعَائِلٌ مُسْتَكْبِرٌ

அல்லாஹ் மறுமை நாளில் மூன்று மனிதர்களுடன் பேசவோ  அவர்களை தூய்மைப் படுத்தவோ  அவர்களை -அருளுடன்- பார்க்கவோ மாட்டான். அவர்களுக்கு நோவினைதரும் கடும் வேதனை உள்ளது. அவர்கள்: விபச்சாரம் செய்யும் முதியவர்  பொய்யுரைக்கும் அரசன்  பெருமையடிக்கும் ஏழை. (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்: முஸ்லிம் 156)

விபச்சாரத்தின் மூலம் பொருளீட்டுவது மிகக்கெட்ட  கேவலமான வியாபாரமாகும். இரவின் நடுப்பகுதியில்  வானக் கதவுகள் திறக்கப்படும் நேரத்தில் விபச்சாரி தான் பாதுகாக்க வேண்டிய உறுப்புக்களை தவறான பாதையில் பயன்படுத்த பிறரை தேடி அலைந்து கொண்டிருக்கின்றாள். வறுமையின் காரணத்தினாலோ  தேவையின் காரணத்தினாலோ ஒரு போதும் மார்க்கச் சட்டத்தை தகர்த்து. ஹராமை ஹலாலாக்கி விடமுடியாது. பத்தினிப்பெண்ணுக்கு பசியெடுத்தால் தன்னுடைய மார்பகங்களில் கூட உணவருந்தமாட்டாள் என்று கூறுவார்கள். இப்படிப்பட்ட பத்தினிப்பெண் வறுமைக்காக ஒரு போதும் தனது வெட்கத்தலங்களை விற்பனைப் பொருளாக்கமாட்டாள்.

நாம் வாழும் இக்காலத்தில் மானக்கேடான அனைத்து வாயில்களும் திறந்துவிடப்பட்டுவிட்டன. ஷைத்தான் தனது சூழ்ச்சியால் தனது பாதையை அவனது நண்பர்களுக்கு மிகவும் எளிதாக்கிவிட்டான். அவனை பாவிகளும் மோசடிக்காரர்களும் பின்பற்றத் தொடங்கிவிட்டனர். இதனால் பெண்களின் வெளிப்படையான அலங்காரமும் அரைநிர்வாணமும் பெருகிவிட்டது. கண்களுக்கு கவர்ச்சியும்? தீயபார்வைகளும் பரவலாகிவிட்டது. ஆண்  பெண் ஒன்றாகக் கலப்பது சகஜமாகிவிட்டது. மஞ்சள் பத்திரிக்கைகளும் நிர்வாணப் படங்களும் பெரும் வரவேற்பைப் பெற்றுவிட்டன. பாவம் செய்ய வாய்ப்பிருக்கும் நகரங்களுக்கு பயணம் செய்வது அதிகரித்து விட்டது. பாவப் பொருட்களின் வியாபார நிறுவனங்கள் மக்கள் மனதில் இடம்பிடித்துவிட்டன. கற்பழிப்பும் கண்ணியமிழப்பும் விபச்சாரக் குழந்தைகளும் சிசுக் கொலைகளும் மலிந்துவிட்டன.

யா அல்லாஹ்! எங்கள் மீது அருள்புரிவாயாக! கிருபை செய்வாயாக! எங்களுடைய தவறுகளை மறைத்துவிடுவாயாக! இழிவான அனைத்து வழிகளை விட்டும் எங்களை பாதுகாத்தருள்வாயாக! எங்களுடைய உள்ளங்களை தூய்மைப் படுத்திடுவாயாக! எங்கள் மறைவான உறுப்புக்களை பத்தினித்தனமாக்கிடுவாயாக! எங்களுக்கும் ஹராமிற்கும் மத்தியில் பெருத்திரையையும் நெடுஞ்சுவரையும் ஏற்படுத்திடுவாயாக!

                   11.   மனைவி மறுப்பது
அல்லாஹ்வின் தூதர்(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள். ஒருவர் தனது மனைவியை படுக்கைக்கு அழைக்கும் போது அவள் வரமறுத்து விட்டதால் அவர் அவள்மீது கோபமாக இரவைக் கழித்தால் காலைவரை அவளை மலக்குமார்கள் சபித்துக் கொண்டிருக்கின்றார்கள். (அறிவிப்பவர்: அபூஹ{ரைரா(ரலி) நூல்: புகாரீ)

அதிகமான பெண்கள் கணவரோடு ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டுவிட்டால் பழிவாங்குகிறோம் என்று நினைத்துக் கொண்டு படுக்கைக்கு செல்ல மறுக்கின்றார்கள். பெண்களின் இந்த தவறான முடிவு கணவன் ஹராமான செயல்களில் ஈடுபடுவதற்கும், அவன் வேறொரு மனைவியை தேர்ந்தெடுக்கும் சிந்தனையை ஏற்படுத்தவும் காரணமாகிறது. எனவே பெண்களின் செயல்கள் அவர்களுக்கே பாதகமாகின்றன. எனவே கணவன் அழைப்பிற்கு மனைவி உடன்பட வேண்டும். அதுவே நபி(ஸல்)அவர்களின் வழிகாட்டுதலாகும்.

நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள். ஒருவர் தனது மனைவியை படுக்கைக்கு அழைத்தால் அவள் ஒட்டகத்தின் முதுகில் அமர்ந்திருந்தாலும் -இறங்கி வந்து- அவருக்கு பதிலளிக்கட்டும். (அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) நூல்: இப்னுமாஜா)

மனைவி நோயாளியாகவோ, கற்பமாகவோ அல்லது வேறு ஏதேனும் துன்பத்திலோ ஆட்பட்டிருக்கும் போது அது நீங்கும் வரை கணவன் அவளை உடலுறவு போன்ற காரியங்களில் ஈடுபட அழைத்து அவளுக்கு கஷ்டம் கொடுக்கக் கூடாது.
              12.   பெண் தனது கணவனிடம் தலாக் விடக்கோ ருதல் வாழ்வில் ஏற்படும் சின்னஞ்சிறு பிரச்சனைகளுக்காகவோ, அல்லது தான்விரும்பும் பொருளை தனக்கு தர மறுத்தாலோ உடனே பெண் தனது கணவனிடம் தலாக் விடக்கோருகின்றாள். நீ ஆணாக இருந்தால் என்னை தலாக் விட்டுவிடு! என்பது போன்ற ஆண்மைக்கு சவாலான,கோபமூட்டும் வார்த்தைகளை பயன்படுத்துகிறாள். இது போன்ற செயல்கள் தலாக்கிற்கும் குடும்பத்தைப் பிரிப்பதற்கும் குழந்தையின் வாழ்வு கெடுவதற்கும் காரணமாக அமைந்துவிடும். தூரநோக்கின்றி கோபத்தால் நிகழ்ந்து விட்ட இச்செயலின் காரணத்தால் பிறகு வருந்த வேண்டிய நிலை ஏற்படும். தலாக்கை தானாக வலியச்சென்று வாங்கியபின் வருத்தப்பட்டுப் பயனில்லை.

மார்க்க காரணத்திற்காக தலாக் விடக்கோரினால் அதில் தவறில்லை. உதாரணமாக கணவர் தொழாதிருப்பது, போதைப் பொருளை பயன்படுத்துவது, ஹராமான செயல்களைச் செய்ய நிர்ப்பந்திப்பது, கடுமையாக துன்புறுத்தி அநீதம் செய்வது, மார்க்க உரிமைகளை தரமறுப்பது.....இவை போன்றவை. இந்நிலையில் அவருக்கு உபதேசம் செய்து இணைந்து வாழும் முயற்சிகள் பயன் தரவில்லை எனில் தன்னையும் தனது மார்க்கத்தையும் காப்பாற்றிக் கொள்வதற்காக கணவனிடம் தலாக் கோருவதில் தவறில்லை

பலவீனமாக ஈமானுடைய சிலர் பெண்ணின் பின் புறத்தில் உடலுறவு கொள்வதை தவறாகக் கருதுவது கிடையாது. ஆனால் இது பெரும்பாவங்களில் ஒன்றாகும். இந்தச் செயலில் ஈடுபடுவர்களை நபி(ஸல்)அவர்கள் சபித்து இவ்வாறு கூறினார்கள்.

பெண்ணின் பின்பகுதியில் உடலுறவு கொள்பவன் சாபத்திற்குரியவனாவான். (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்: இப்னுமாஜா)

மாதவிடாய் நேரத்திலோ, பெண்ணின் பின்பகுதியிலோ உடலுறவு கொள்பவனும் ஜோஸியக்காரனிடம் செல்பவனும் முஹம்மது(ஸல்)அவர்களுக்கு இறக்கப்பட்ட -மார்க்கத்-தை நிராகரித்துவிட்டான். (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்: இப்னுமாஜா)

மார்க்க சிந்தனையுள்ள பல பெண்கள் இந்த ஈனச்செயல்களுக்கு கட்டுப்பட மறுக்கின்றனர். அப்பெண்களை அவர்களின் கணவன், இதற்கு கட்டுப்படவில்லை எனில் உன்னை தலாக் விட்டுவிடுவேன் என மிரட்டுகின்றனர். மார்க்க கல்வியற்ற, அல்லது அறிஞர்களிடம் மார்க்க விளக்கங்களைக் கேட்க வெட்கப்படும் பெண்களை:

பெண்கள் உங்களுடைய விளை நிலமாவார்கள். எனவே நீங்கள் விரும்பியவாறு அவர்களிடம் செல்லுங்கள்! (அல்குர்ஆன் 2:223) என்ற வசனத்தைக் கூறி ஏமாற்றி இச்செயலுக்கு கட்டுப்பட வைக்கின்றனர்.

நபிமொழி, அல்குர்ஆனின் விரிவுரையாகும். பிறப்பு உறுப்பில் மட்டுமே விரும்பியவாறெல்லாம் உடலுறவு கொள்ள நபிமொழியில் அனுமதியுள்ளது. பின்பகுதி பிறப்பு உறுப்பல்ல மாறாக அது மலப்பாதை என்பது அனைவரும் அறிந்ததே! எனவே இரு தரப்பினரும் உடன்பட்டு இச்செயலில் ஈடுபட்டாலும் இது ஹராம் என்பதில் சந்தேகமில்லை. ஏனெனில் இரு தரப்பினரும் உடன்படுவது ஹராமை ஹலாலாக்கிவிடாது.
14.அன்னியப் பெண்ணுடன் தனித்திருத்தல்   மனிதனை குழப்பத்தில் ஆக்குவதிலும் ஹராமில் விழச்செய்வதிலும் ஷைத்தான் மிக ஆர்வமாக உள்ளான். இதனால் தான் அல்லாஹ் நம்மை இவ்வாறு எச்சரிக்கின்றான்.

விசுவாசம்கொண்டோரே! ஷைத்தானுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள், எவன் ஷைத்தானுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றுகிறானோ அவனை மானக் கேடானதைக் கொண்டும் வெறுக்கப்பட்டதைக் கொண்டும் நிச்சயமாக (ஷைத்தானாகிய) அவன் ஏவுவான்.... (அல்குர்ஆன் 24:21)

ஷைத்தான் மனிதனின் இரத்த நாளங்களிலெல்லாம் ஓடிக்கொண்டிருக்கின்றான். மனிதனை மானக்கேடான செயல்களில் அழைத்துச் செல்லும் பாதைகளில் அன்னியப் பெண்ணுடன் தனிமையிலாக்குவதும் ஒன்று. இதனால்தான் மார்க்கம் இப்பாதையை அடைக்கிறது. 
நபி(ஸல்)அவர்கள் கூறுகின்றார்கள். (அன்னியப்) பெண்ணுடன் தனித்திருப்பவனுடன் மூன்றாம் நபராக நிச்சயமாக ஷைத்தான் இருப்பான். (அறிவிப்பவர்: உமர்(ரலி) நூல்: அஹமத்)

இன்றைய தினத்திற்கு பிறகு தனித்திருக்கும் பெண்ணிடம் தன்னுடன் ஒருவரோ இருவரோ இல்லாது -தனிமையாக- செல்லக்கூடாது. (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர்(ரலி) நூல்: முஸ்லிம்)

சகோதரனின் மனைவி, வேலைக்காரப் பெண் மற்றும் இவர்கள் போன்ற எந்த அன்னியப்பெண்ணுடனும் வீட்டிலோ, அறையிலோ, வாகனத்திலோ தனித்திருத்தல் கூடாது. நோயாளியான பெண் மருத்துவருடனோ, அல்லது அந்நிய ஆணுடனோ தனித்திருப்பது கூடாது. அதிகமானோர் தனது மனக்கட்டுப்பாட்டில் நம்பிக்கை வைத்தோ, அல்லது பிறர் மீது நம்பிக்கை வைத்தோ இதில் அலட்சியமாக உள்ளனர். மார்க்கத்திற்கு புறம்பான இந்த நம்பிக்கையே மானக்கேடான பல செயல்களுக்கு காரணமாக அமைகிறது. மேலும் வாரிசில் கலப்படம் ஏற்படுவதற்றும் விபச்சாரக் குழந்தை பிறப்பதற்கும் இதுவே முக்கியக் காரணமாகும்.
                          15.    அன்னியப் பெண்ணுடன் கை குலுக்குதல்
அன்னியப் பெண்ணுடன் கை குலுக்குதல்

இஸ்லாமிய சமுதாயத்தில் நுழைந்துள்ள அன்னிய பழக்கங்களில் இதுவும் ஒன்று. முஸ்லிம்கள் பல தவறான பழக்கங்களுக்கு அடிமையாகிவிட்டனர். மார்க்கக் கட்டளைகளைப் புறக்கணித்து விட்டு மேற்கத்திய கலாச்சாரங்களை கண்மூடிப் பின்பற்றிக் கொண்டிருக்கின்றனர்.

அன்னியப் பெண்ணுடன் கை குலுக்கும் பழக்கமுடைய ஒருவரிடம் இது தவறானது என்ற மார்க்க கட்டளையை ஆதாரத்துடன் கூறினால் உடனே, நீங்கள் பழமைவாதிகள், சந்தேக எண்ணம் கொண்டவர்கள், உறவினர்களை பிரிப்பவர்கள்... என்றெல்லாம் முத்திரை குத்திவிடுகின்றார்.

சிறிய தந்தையின் மகள், பெரிய தந்தையின் மகள், மாமன் மகள், சகோதரரின் மனைவி...  போன்றோருடன் கை குலுக்குவது நம்முடைய சமுதாயத்தில் மிகவும் எளிதான செயலாகிவிட்டது. இச்செயலின் விபரீதங்களை மார்க்கக் கண்ணோட்டத்துடன் பார்ப்பார்களானால் நிச்சயமாக இவ்வாறு செய்யமாட்டார்கள்.

நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள்: உங்களில் ஒருவர் தனக்கு ஹலால் இல்லாத பெண்ணை தொடுவதை விட இரும்பு ஊசியால் தன்னுடைய தலையை காயப்படுத்திக் கொள்வது சிறந்ததாகும். (நூல்: தப்ரானீ)

நிச்சயமாக இது கையின் விபச்சாரம் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.
நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள்: இரு கண்களும் விபச்சாரம் செய்கின்றன. இரு கைகளும் விபச்சாரம் செய்கின்றன. இரு கால்களும் விபச்சாரம் செய்கின்றன. இச்சை உறுப்பும் விபச்சாரம் செய்கிறது. (அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத்(ரலி) நூல்: அஹமத்)

நபி(ஸல்)அவர்களை விட தூய உள்ளமுடையவர் இவ்வுலகில் யாரிருக்கமுடியும்? இவ்வாறிருக்க நபி(ஸல்)அவர்களே கூறுகிறார்கள்: நிச்சயமாக நான் பெண்களிடம் முஸாஃபஹா செய்ய -கைகுலுக்க- மாட்டேன். (அறிவிப்பவர்: உமைமா பின்த் ருகைகா(ரலி) நூல்: இப்னுமாஜா)

நிச்சயமாக நான் பெண்களின் கைகளை தொடமாட்டேன். (நூல்: தப்ரானீ)

ஆயிஷா(ரலி)அவர்கள் கூறுகிறார்கள்: அல்லாஹ்வின் மீது சத்தியமாக, நபி(ஸல்)அவர்களின் கை எந்தப் பெண்ணின் கையையும் ஒருபோதும் தொட்டது கிடையாது. உடன்படிக்கை கூட வார்த்தையின் மூலம்தான் செய்து கொண்டார்கள். (நூல்: முஸ்லிம்)

நற்குணமுள்ள மனைவிமார்களை நீ என்னுடைய சகோதரர்களிடம் முஸாஃபஹா செய்யாவிட்டால் தலாக் கூறிவிவேன்! என மிரட்டும் கணவர்கள் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளட்டும்! ஆண் அன்னியப் பெண்ணுடனோ, பெண் அன்னிய ஆணுடனோ முஸாஃபஹா செய்வது ஹராமாகும். அது கை உரை அணிந்து கொண்டோ, ஆடையால் கையை மறைத்துக் கொண்டோ முஸாஃபஹா செய்தாலும் சரியே!
                 16. பெண் நறுமணத்துடன் வெளியேறுதல்பெண்கள், வீட்டை விட்டு வெளியேறும் போது நறுமணம் பூசுவதையும் நறுமணத்துடன் ஆண்களை கடந்து செல்வதையும் மார்க்கம் தடுக்கிறது. இப்பழக்கம் இக்காலத்தில் பல்கிப்பெருகியுள்ளது. இதனை நபி(ஸல்)அவர்கள் மிகக் கடுமையாக எச்சரித்துள்ளார்கள்.

நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள்: யாரேனும் ஒரு பெண் நறுமணம் பூசிக் கொண்டு அதன் வாசனையை பிறர் நுகர வேண்டும் என்பதற்காக ஒரு கூட்டத்தனரை கடந்து சென்றால் நிச்சயமாக அவள் விபச்சாரியாவாள். (அறிவிப்பவர்: அபூமூஸா(ரலி) நூல்: அஹமத்)

வாகன ஓட்டுனர், நடத்துனர், கடைக்காரர், பள்ளிக் கூடங்களின் வாயில் காவலர்கள் ஆகியோரின் விஷயத்தில் சில பெண்கள் மிகவும் அலட்சியமாக நடந்து கொள்கின்றனர். இதனை மார்க்கம் கடுமையாக எச்சரிக்கிறது. நறுமணம் பூசிய பெண் வெளியே செல்ல நினைத்தால் -அது பள்ளிவாயிலுக்கு தொழச் செல்வதானாலும் சரியே- கடமையான குளிப்புபோல் குளித்து அவ்வாசனையைப் போக்கி விட்டுத்தான் வெளியே செல்ல வேண்டும்.

நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள்: யாரேனும் ஒரு பெண் நறுமணம் பூசி, பள்ளிக்கு வந்தால் அவளிடம் நறுமணம் வீசினால் கடமையான குளிப்பு போன்று குளிக்கும் வரை அவளுடைய தொழுகை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்: அஹமத்)

திருமணங்களிலும் பெண்களின் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளப்புறப்படும் பெண்கள் நறுமணங்களும் சந்தனப் புகையும் இட்டுக் கொண்டுதான் வீட்டை விட்டு வெளியேறுகின்றனர். மனதை ஈர்க்கும் நறுமணங்களை பூசிக் கொண்டு கடை வீதிகளிலும், வாகனங்களிலும், ஆண், பெண் இருபாலரும் கலக்கும் இடங்களிலும் உலாவருகின்றனர். அல்லாஹ்தான் இப்பெண்களுக்கு நேர்வழி காட்டவேண்டும்!

வெளி இடத்திற்கு செல்லும் பெண்கள் நிறம் வெளிப்படையாக தெரியக் கூடிய, அதே சமயம் அதிக மணமற்ற நறுமணங்களை மட்டுமே பயன்படுத்த பெண்களுக்கு மார்க்கம் அனுமதிக்கிறது.

யா அல்லாஹ்! எங்களை நீ தண்டித்து விடாதே! மடத்தனமாக நடந்து கொள்ளும் ஆண்களும் பெண்களும் செய்யும் பாவத்தின் காரணமாக நற்பண்புள்ள ஆண்களையும் பெண்களையும் நீ -உனது தண்டணையால்- பிடித்துவிடாதே! எங்கள் அனைவருக்கும் உனது நேரான பாதையைக் காட்டுவாயாக!

இது ஹஜ் உட்பட அனைத்து பயணத்திற்கும் பொதுவான கட்டளையே! மஹ்ரமின்றி பயணம் செய்வதினால் அவள் பாவமான செயல்களில் ஈடுபட வாய்ப்புள்ளது. பெண் பலவீனமானவள் என்பதால் பிறர் அவளை மிக எளிதாக தன் வசப்படுத்தி விடலாம். பெண் தனிமையிலோ, அல்லது மஹ்ரமில்லாத பிற ஆண்களுடனோ பயணம் செய்தால் அவளுடைய கண்ணியமும் பத்தினித்தனமும் சமூகத்தில் கேள்விக் குறியாகிவிடுவது நாம் அறிந்ததே!

பெண் தனியாக விமானத்தில் பயணம் செய்வதும் இது போன்றதே! அங்கு ஒருவர் அவளை வழியனுப்பி விடுகிறார். இங்கு மற்றொருவர் அவளை எதிர்பார்த்து நிற்கிறார். அவளுடைய இருக்கையிலோ, அல்லது அவளுக்கருகிலோ மற்ற யார் உட்காரப் போகிறார்கள்? என்றெண்ணி அலட்சியமாக தனியாக பயணம் அனுப்பிவிடுகிறார்கள். விமானக்கோளாறு ஏற்பட்டு வேறு தளத்தில் இறங்கிவிட்டாலோ, அல்லது ஏதேனும் காரணத்தினால் கால தாமதாமாகிவிட்டாலோ அதில் ஏற்படும் அப்பெண்ணின் தனிமைக்கு அவர்கள் என்ன பதில் சொல்லப் போகிறார்கள்? எனவே இவ்வாறு பயணம் செய்வதும் தவறேயாகும்.

நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள்: ஒரு பெண் மூன்று நாட்கள் அல்லது அதைவிட அதிகமான தொலைதூரத்திற்கு அவளுடைய தந்தை அல்லது அவளுடைய சகோதரன் அல்லது அவளுடைய மகன் அல்லது அவளுடைய கணவன் அல்லது -அவளை திருமணம் செய்ய அனுமதிக்கப்படாத -மஹ்ரமானோர்களுடனே தவிர பயணம் செய்யக் கூடாது. (அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ(ரலி) நூல்: இப்னுமாஜா)

(நபியே!) விசுவாசிகளுக்கு நீர் கூறுவீராக! அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளவும். தங்களின் மர்மஸ்த்தானங்களைப் பேணிப் பாதுகாத்துக் கொள்ளவும். அது அவர்களுக்கு மிக பரிசுத்தமானதாகும். நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவைகளை நன்கு உணர்பவன். (அல்குர்ஆன் 24:30)

நபி(ஸல்)அவர்கள் கூறுகின்றார்கள்:
கண்ணின் விபச்சாரம் -தவறானதைப்- பார்ப்பதாகும்.
(அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்: புகாரீ)

திருமணத்திற்காக நிச்சயிக்கப்பட்ட பெண்ணைப் பார்ப்பது, மருத்துவர், மருத்துவத்திற்காக அன்னியப் பெண்ணைப் பார்ப்பது போன்ற மார்க்கத் தேவைக்காக, நிர்ப்பந்தத்திற்காக பார்ப்பது இதிலிருந்து விதிவிலக்குப் பெரும்.

இது போல் பெண்கள் அன்னிய ஆண்களைப் பார்ப்பதும் தவறாகும்.

அல்லாஹ் கூறுகிறான்:
மேலும் (நபியே!) விசுவாசிகளான பெண்களுக்கு நீர் கூறுவீராக! தங்கள் பார்வைகளை அவர்கள் தாழ்த்திக் கொள்ளவும். தங்கள் மர்மஸ்த்தானங்களை அவர்கள் பேணிப் பாதுகாத்துக் கொள்ளவும்...(அல்குர்ஆன் 24:31)

ஒரு ஆணோ, பெண்ணோ தம் இனத்தைச் சேர்ந்த அழகானவர்களை இச்சையுடன் பார்ப்பது ஹராமாகும். மேலும் ஒரு ஆணின் மறைக்கவேண்டிய பகுதியை மற்ற ஆண் பார்ப்பதும், ஒரு பெண்ணின் மறைக்கவேண்டிய பகுதியை மற்ற பெண் பார்ப்பதும் ஹராமாகும். மறைக்கவேண்டிய எந்தப் பகுதியையும் பார்ப்பதோ, தொடுவதோ கூடாது -அது ஏதேனும் திரைக்குப் பின்னால் இருந்தாலும் சரியே!-.

பத்திரிக்கைகளில் வரும் கவர்ச்சிப் படங்கள் மற்றும் திரைப்படங்களின் மூலம் ஷைத்தான் பலரை இதுபோன்ற மானக்கேடான செயல்களில் ஈடுபடுத்துகிறான். நிச்சயமாக அவைகள் உண்மையானவைகள் அல்ல, மேலும் குழப்பத்திற்கும் இச்சையை தவறான முறையில் தீர்ப்பதற்கும் வழிவகுக்கின்றன என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
                                    19.  வட்டி உண்ணுதல்அல்லாஹ் தன்னுடைய வேதத்தில் வட்டி வாங்குபவர்களைத் தவிர வேறு யாருடனும் நேரடியாகப் போர்ப் பிரகடனம் செய்யவில்லை. இது எவ்வளவு பெரிய கொடிய குற்றம் என்பதற்கு இதுவே போதுமான சான்றாகும்.

அல்லாஹ் கூறுகிறான்:
விசுவாசம் கொண்டோரே! அல்லாஹ்வை நீங்கள் பயந்து கொள்ளுங்கள்! மேலும் நீங்கள் உண்மையாக விசுவாசம் கொண்டோராக இருப்பின் வட்டியில் (எடுத்தது போக) எஞ்சியிருப்பதை (எடுக்காமல்) விட்டுவிடுங்கள். ஆகவே (கட்டளையிடப்பட்டவாறு) நீங்கள் செய்யாவிடின் அல்லாஹ்விடமும் அவனுடைய தூதரிடமும் போரிடுவதாகப் பிரகடனம் செய்துவிடுங்கள். (அல்குர்ஆன் 2:278-279)

தனிமனிதர்களும் பலநாடுகளும் இன்று பொருளாதாரப் பிரச்சனையில் சிக்கித் தவிக்கின்றனர் என்றால் நிச்சயமாக அது வட்டியின் அடிப்படையிலான பொருளாதாரத் திட்டங்களினால்தான். வட்டியை அடைக்க முடியாமல் திண்டாடுகின்றனர். பொருளாதாரத்தில் பின்தங்கி வளமிக்க நாடுகளில் இடம்பெற முடியாதநிலை. வட்டியின் காரணத்தால் எத்தனையோ பெரும் தொழிற்சாலைகளும் நிறுவனங்களும் இழுத்து மூடப்படுகின்றன. உழைப்பாளிகளின் வேர்வைகளால், முடிவடையாத வட்டியை நிறைக்கவே முடியாதநிலை. இதனால் பொருளாதாரம் குறிப்பிட்ட சிலரிடம் மட்டுமே சுற்றிக் கொண்டிருக்கின்றது. பலர் வறுமையில் சுழன்று கொண்டிருக்கிறனர். வட்டியில் ஈடுபடுபவர்களுடன் அல்லாஹ் போர் தொடுக்கின்றான் என்ற எச்சரிக்கை இவ்விளைவுகளாகக்கூட இருக்கலாம்.

வட்டித் தொழிலின் உரிமையாளர், அதன் பங்குதாரர், அதற்கு உதவுபவர், அதற்கு சாட்சி சொல்பவர் ஆகிய அனைவரும் நபி(ஸல்)அவர்களால் சபிக்கப்பட்டவர்களே!

வட்டி உண்பவன், அதனை உண்ணக் கொடுப்பவன், அதனை எழுதுபவன், அதன் இரு சாட்சியாளர்கள் ஆகிய அனைவரையும் நபி(ஸல்)அவர்கள் சபித்தார்கள். மேலும் இவர்கள் அவனைவரும் -தண்டனையால்- சமமானவர்களே! என்றும் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர்(ரலி) நூல்: முஸ்லிம்)

இந்த ஹதீஸின் அடிப்படையில் வட்டி கணக்கு எழுதுவது, அதை சரிபார்ப்பது, வாங்கிக் கொடுப்பது, பெற்றுக் கொள்வது, அனுப்புவது, பாதுகாப்பது.. இது போன்ற வட்டியுடன் தொடர்புடைய அனைத்துச் செயல்களும் ஹராம் ஆகும்.

நபி(ஸல்)அவர்கள் இதன் இழிவான நிலையை இவ்வாறு கூறுகிறார்கள்:
வட்டிக்கு 73 வாயில்கள் உள்ளன. அதில் மிக எளிதானது ஒருவன்தனது தாயுடன் திருமணம் செய்து கொள்வதைப் போன்றதாகும். வட்டியிலேயே மிகக் கொடிய வட்டி முஸ்லிமின் உடமையைப் பறிப்பதாகும். (அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத், அபூஹுரைரா, ஸயீத்(ரலி) நூல்: இப்னுமாஜா, அபூதாவூத்)

வட்டியின் விபரீதங்களை அறிந்து கொண்டே அதன் ஒரு திர்ஹத்தை உண்பது 36 தடவை விபச்சாரம் செய்வதை விட மிகக் கடுமையான குற்றமாகும். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஹன்ழலா(ரலி) நூல்: அஹமத்)

வட்டி பணக்காரன், ஏழை என்ற வித்தியாசமின்றி அனைவருக்கும் அனைத்துச் சூழ்நிலையிலும் ஹராமாகும். எத்தனையோ பணக்காரர்கள் வட்டியின் காரணத்தினால் அனைத்தையும் இழந்து -ஓட்டாண்டி- பரதேசி- ஆயினர். நம் முன்னே நடைபெறும் எத்தனையோ நிகழ்ச்சிகள் இதற்கு சாட்சிகளாக உள்ளன. வட்டியின் குறைந்த பட்ச விபரீதம் யாதெனில் பொருளாதரத்தின் பரகத் -அபிவிருத்தி- அழிக்கப்பட்டுவிடும். அதிக பொருள் இருந்தாலும் சரியே!

நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள்: வட்டியினால் ஈட்டப்பட்ட பொருளாதாரம் -அது அதிகமாக இருந்தாலும் சரியே- நிச்சயமாக அதன் முடிவு மிகவும் கஷ்டத்திலேயே முடியும். (அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத்(ரலி) நூல்: அஹமத்)

வட்டியில் குறைந்த தொகை அதிக என்றெல்லாம் வித்தியாசம் கிடையாது. அனைத்தும் ஹராமானவையே! வட்டியை உண்டு வாழ்ந்தவன் மறுமை நாளில் கப்ரிலிருந்து எழுப்பப்படும்போது ஷைத்தானால் தீண்டப்பட்டவன் எழுந்திருப்பதைப் போன்றே எழுந்திருப்பான்.
இது மிகப்பெருங்குற்றமாக இருந்தாலும் இதிலிருந்து விடுபட அதற்குரிய பாவமன்னிப்பு முறையை அல்லாஹ் விவரித்துக் கூறுகிறான்:

மேலும் நீங்கள் (தவ்பாச் செய்து) மீண்டுவிட்டால் உங்கள் செல்வங்களின் அசல் தொகை உங்களுக்கு உண்டு. நீங்கள் (அதிகமாக வாங்கி கடன் பட்டோருக்கு) அநீதி செய்யாதீர்கள். (அவ்வாரே) நீங்களும் (மூலத் தொகையைப் பெற்றுக் கொள்வதிலிருந்து) அநீதி செய்யப்பட மாட்டீர்கள். (அல்குர்ஆன் 2:279)

இதுவே நீதமான தீர்ப்பாகும். இப்பெரும்பாவத்திலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்வதும், இதன் கோரநிலைகளை உணர்வதும் ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கட்டாயக் கடமையாகும்.
நிர்ப்பந்தமாகவோ, பொருள் வீணாகிவிடும் அல்லது திருடப்பட்டுவிடும் என்ற பயத்திலோ வட்டியின் தொடர்பில் இயங்கும் பேங்கில் பணத்தை சேமிப்பவர்கள் உண்மையிலேயே நிர்ப்பந்தத்தில்தான் உள்ளார்களா? என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். இறந்தவற்றை சாப்பிடும் நிர்ப்பந்தத்தைவிட இது மிகவும் கடுமையான நிர்ப்பந்தமாக இருக்கின்றதா? என்று கவனிக்கவேண்டும். முடிந்தவரை மாற்றுஏற்பாட்டிற்கு முயற்சிக்க வேண்டும். அதுவரை தனது இச்செயலுக்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு தேடிக் கொண்டிருக்க வேண்டும்.

மேலும் அவர் எந்தநிலையிலும் பேங்கிலிருந்து வட்டியை பெற்று பயன்படுத்தக் கூடாது. அவர்களுடைய கணக்கில் வட்டித் தொகை வருமானால் அதனை மார்க்கம் அனுமதிக்கும் ஏதேனும் செயலுக்காக கொடுத்துவிட வேண்டும். ஏனெனில் அந்தப் பொருளை அவர் அனுபவிப்பது ஹராமாகும். மேலும் பிறருக்கு கொடுப்பதினால் அது தர்மமாகவும் ஆகாது. தர்மத்தின் நன்மையும் கிடைக்காது. ஏனெனில் நிச்சயமாக அல்லாஹ் தூய்மையானவன். தூய்மையானதை மட்டுமே அவன் ஏற்றுக் கொள்வான். மேலும் எந்தவிதத்திலும் அந்தப் பொருளை தனக்காகப் பயன்படுத்தக் கூடாது. அந்தப் பணத்தில் உண்பது, பருகுவது, அணிவது, வாகனிப்பது, வசிப்பது, தாய், தந்தை, மனைவி, பிள்ளைகளுக்காக செலவு செய்வது, ஜகாத்தாகக் கொடுப்பது, தம்மீதுள்ள கடமையான வரிகளைச் செலுத்துவது, இவைபோன்ற எதற்கும் பயன்படுத்த அனுமதியில்லை. அல்லாஹ்வின் தண்டணைக்கு பயந்து வட்டியை விட்டு முற்றும் தவிர்ந்து வாழ முயற்சிக்க வேண்டும்.

                   20.லஞ்சம் வாங்குவதும் கொடுப்பதும்
மக்களுக்கு மத்தியில் தீர்ப்பு வழங்கும் நீதிபதிகளுக்கும் வழக்கறிஞர்களுக்கும் சத்தியத்தை மறைக்க, அசத்தியத்தை நிலை நாட்ட லஞ்சம் கொடுப்பது பெருங்குற்றமாகும். ஏனெனில் நிச்சயமாக இது தவறான தீர்ப்புக் கூறவும், நிரபராதிக்கு அநீதமிழைப்பதற்கும், சமுதாயத்தில் குழப்பம் ஏற்படுவதற்கும் காரணமாகிவிடும்.

அல்லாஹ் கூறுகிறான்:
மேலும் உங்களுடைய செல்வங்களை உங்களுக்கடையில் உரிமையின்றி உண்ணாதீர்கள். நீங்கள் அறிந்து கொண்டே (பிற) மனிதர்களின் செல்வங்களிலிருந்து ஒரு பகுதியை பாவமான முறையில் நீங்கள் உண்ணுவதற்காக அவற்றை (இலஞ்சமாகக் கொடுக்க) அதிகாரிகளின்பால் கொண்டும் செல்லாதீர்கள். (அல்குர்ஆன் 2:188)

நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள்: தீர்ப்புக்காக லஞ்சம் கொடுப்பவனையும் லஞ்சம் வாங்குபவனையும் அல்லாஹ் சபிப்பானாக! (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்: அஹமத்)

சத்தியத்தை நிலைநாட்டுவதற்கும் அநீதியை தடுப்பதற்கும் லஞ்சத்தைத் தவிர வேறு மாற்றுவழியில்லையெனில் அதற்காக லஞ்சம் கொடுப்பது மேற்கூறிய இலஞ்ச எச்சரிக்கையில் இடம்பெறாது.

இக்காலத்தில் லஞ்சம் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கிறது. சில ஊழியர்களுக்கு அவர்களின் சம்பளத்தைவிட லஞ்ச வரவே அதிகம். பல நிறுவனங்களில் லஞ்சக் கவர்கள் சகஜமாக நடமாடுகின்றன. பல வேலைகள் ஆரம்பம் முதல் இறுதி வரை லஞ்சமின்றி சாத்தியமற்றதாகிவிட்டன. இதனால் வசதியற்றோர் பெரும் கஷ்டத்திற்குள்ளாகியுள்ளனர். இது பல ஒப்பந்தங்களை மீறுவதற்கும். ஊழியர்கள் நிறுவனப் பொறுப்பாளர்களை பெருங்குழப்பத்தில் ஆழ்த்தவும் காரணமாகிறது. லஞ்சம் கொடுக்கப்படுகிறது. லஞ்சம் கொடுக்கவில்ல எனில் தரமான வேலை நடைபெறுவதில்லை. அல்லது தாமதப்படுத்தப்படுகிறது. லஞ்சத்தின் காரணமாக தொழில் நிறுவனர்களில் விற்க, வாங்க பொறுப்பேற்றுள்ள பிரதிநிதிகளின் பைகளில் பொருளாதாரம் நுழைந்து விடுகிறது. இதுபோன்ற தீயவிளைவுகளின் காரணங்களினால் தான் நபி(ஸல்)அவர்கள் இத்தவறுக்கு உடன்படும் இரு தரப்பினருக்கும் பாதகமாக பிரார்த்தித்தார்கள்.

நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள்: லஞ்சம் கொடுப்பவன் மீதும் வாங்குபவன் மீதும் அல்லாஹ்வுடைய சாபம் உண்டாகட்டுமாக! (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர்(ரலி) நூல்: இப்னுமாஜா)


மனிதனுக்கு கிடைத்துள்ள பட்டமும் பதவியும் அல்லாஹ் அவனுக்கு கொடுத்துள்ள அருட்கொடைகளில் ஒன்றாகும். எனவே அவைகளுக்காக அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்த வேண்டும். தனது பதவியின் மூலம் முஸ்லிம்களுக்கு பயனளிப்பது இந்த அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்தும் முறைகளில் ஒன்றாகும்.

நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள்:
உங்களில் தமது சகோதரருக்கு பயனளிக்க சக்தி பெற்றவர் அவ்வாறு செய்யட்டும்! (அறிவிப்பவர்: ஜாபிர்(ரலி) நூல்: முஸ்லிம்)

ஹலாலான காரியங்களில், பிறருடைய உடமைகளுக்கு தீங்கிழைக்காமல் தூய்மையான எண்ணத்துடன் தனது சகோதரருக்கு உதவி செய்து, அவருடைய கஷ்டத்தை போக்குபவர் அல்லாஹ்விடத்தில் கூலி கொடுக்கப்படுவார்.

நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள்: பரிந்துரை செய்யுங்கள்! அதற்காக -அல்லாஹ்விடம்- கூலி கொடுக்கப்படுவீர்கள்! (அறிவிப்பவர்: அபூமூஸா(ரலி) நூல்: புகாரீ)

ஆனால் பரிந்துரைக்கவோ, தொடர்பு ஏற்படுத்திக் கொடுக்கவோ பகரமாக எதனையும் பெற்றுக் கொள்ளக் கூடாது.

நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள்: ஒருவர் மற்றொருவருக்கு பரிந்துரை செய்து, அதற்காக அன்பளிப்பு கொடுக்கப்பட்டு, அதனை அவர் ஏற்றுக் கொண்டுவிட்டால் நிச்சயமாக அவர் வட்டியின் மிகப் பெரிய வாயிலுக்கு வந்துவிட்டார். (அறிவிப்பவர்: அபூஉமாமா(ரலி) நூல்: அஹமத்)

வேலை வேண்டுமா? வேலையை மாற்றவேண்டுமா? மருத்துவ விடுமுறை வேண்டுமா? பரிந்துரை செய்ய, தொடர்பை ஏற்படுத்தித் தர இவ்வளவு தந்துவிடு! என்று பெருந்தொகையை நிபந்தனையாக கூறும் பலர் உள்ளனர். இவ்வாறு லஞ்சம் பெறுவதும். பகர நிபந்தனை இல்லாமல் அன்பளிப்பாக அளிக்கப்பட்டு அதனைப் பெறுவதும் மேற்கண்ட நபிமொழியின் அடிப்படையில் ஹராம் ஆகும்.
நல்லமனிதர்களுக்கு மறுமை நாளில் அல்லாஹ்விடம் கிடைக்கும் கூலியே போதுமானதாகும்.

ஹஸன் பின் ஸஹ்ல் -என்ற ஒரு தாபிஃ- அவர்களிடம் ஒருவர் வந்து, நாங்கள் உங்களுக்கு எதற்காக நன்றி கூறவேண்டும்?! பொருளாதாரத்திற்கு ஜகாத் இருப்பது போன்று பட்டம், பதவிக்கும் ஜகாத் இருப்பதாக நாங்கள் கருதுகிறோம் என்றார்.

இங்கு கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம் என்னவெனில் வேலை தேடிக் கொடுத்தோ, அல்லது குறிப்பிட்ட வேலையை மார்க்கம் அனுமதித்த முறையில் முடித்துக் கொடுத்தோ அதற்காக கூலி பெறுவதில் தவறில்லை. இதற்கும் சிபாரிசு செய்து பகரம் பெறுவதற்கும் வித்தியாசங்கள் உள்ளன. எனவே சிபாரிசுக்கு பகரம் பெறுவது ஹராமாகும்.
                                  22.    மது அருந்துதல்
அல்லாஹ் கூறுகிறான்:
விசுவாசம் கொண்டோரே! நிச்சயமாக மதுவும் சூதாட்டமும் (வணக்கத்திற்காக) நாட்டப்பட்டுள்ளவை(களான சிலை)களும் குறிபார்க்கும்(சூதாட்ட) அம்புகளும் ஷைத்தானுடைய செயல்களிலுள்ள அருவருக்கத்தக்கவையாகும். ஆகவே இவைகளைத் தவிர்ந்து கொள்ளுங்கள். (அதனால்) நீங்கள் வெற்றிபெறுவீர்கள். (அல்குர்ஆன் 5:90)

தவிர்ந்து கொள்ள கட்டளையிடுவது அது ஹராம் என்பதற்கான தெளிவான ஆதாரமாகும். மதுவை கூறுவதுடன் இணைவைப்பாளர்களின் சிலை மற்றும் அவர்களின் சூதாட்ட அம்புகளையும் அல்லாஹ் இணைத்தே கூறுகிறான். எனவே திருமறையில் தவிர்ந்து கொள்ளுங்கள் என்றுதானே வந்துள்ளது. ஹராம் என்று கூறப்படவில்லையே! என்றெல்லாம் கூற எந்த ஆதாரமும் சாத்தியமும் கிடையாது. மது அருந்துவது பற்றி கடுமையாக எச்சரிக்கும் பலநபிமொழிகளும் உள்ளன. 

ஜாபிர்(ரலி)அவர்கள் கூறுகிறார்கள்: 
போதைப் பொருளை அருந்துபவர்களுக்கு "தீனத்துல் கப்பால்" எனும் பானத்தை புகட்டுவதாக அல்லாஹ் முடிவு செய்துள்ளான் என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். அப்போது நபித்தோழர்கள், தீனத்துல் கப்பால் என்றால் என்னவென்று கேட்டனர். அது நரகவாசிகளின் வேர்வை அல்லது நரகவாதிகளிடம் பிழிந்தெடுக்கப்பட்ட பானம் என பதிலளித்தார்கள். (நூல்: முஸ்லிம்)

நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள்: மதுபோதையில் மூழ்கியவன் இறந்துவிட்டால் சிலைவணங்கியைப் போன்று -மறுமையில்- அல்லாஹ்வை சந்திப்பான். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி) நூல்: அஹமத்)

நாம் வாழும் இக்காலகட்டத்தில் மது வகைகளும், போதைப்பொருட்களும் பல்கிப் பெருகிவிட்டன. பீர், ஆல்கஹால் போன்ற எத்தனை எத்தனையோ போதைப் பொருட்கள் அரபியிலும், அந்நிய மொழிகளிலும் பல பெயர்களில் அறிமுகமாகியுள்ளன. நபி(ஸல்)அவர்கள் அன்று வர்ணித்த சமுதாயத்தினர் இன்று தோன்றிவிட்டனர்.

நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்: என்னுடைய சமுதாயத்தில் சிலர் மதுவுக்கு மாற்றுப் பெயர் சூட்டி நிச்சயமாக அதனை அருந்துவர். (அறிவிப்பவர்: அபூமூஸா(ரலி) நூல்: அபூதாவூத்)

ஏமாற்றும் விதமாக மதுவுக்கு இன்றியமையாப் பொருள் போல பெயர் சூட்டி அதனை அருந்திக் கொண்டிருக்கின்றனர்.

அல்லாஹ் கூறுகிறான்:
அல்லாஹ்வையும் ஈமான் கொண்டவர்களையும் அவர்கள் -நயவஞ்சகர்கள்- ஏமாற்றுகின்றனர். (இதனால்) அவர்கள் தங்களைத் தாமே தவிர (வேறெவரையும்) ஏமாற்றவில்லை. (இறை) அவர்கள் உணர்ந்து கொள்ளவும் மாட்டார்கள். (அல்குர்ஆன் 2:9)

மார்க்கம் மதுவிற்கு கடும் கட்டுப்பாட்டை விதிக்கிறது. போதை பொருட்களின் ஆணி வேரையே கிள்ளி எறிகிறது.

நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள்: போதை தரும் அனைத்தும் மதுவாகும். போதை தரும் அனைத்தும் ஹராமாகும்.(அறிவிப்பவர்: இப்னுஉமர்(ரலி) நூல்: முஸ்லிம்)

மதிமயங்கச் செய்யும், போதையூட்டும் அனைத்தும் -அது குறைவாக இருந்தாலும் சரியே!- ஹராம் ஆகும். அதற்கு எத்தனை மாற்றுப் பெயர்கள் சூட்டப்பட்டிருந்தாலும் போதை என்பதில் அவையனைத்தும் ஒன்றுதான். அவையனைத்தின் சட்டமும் ஒன்றுதான்.

இறுதியாக, மது அடிமைகளுக்கு நபி(ஸல்)அவர்கள் செய்த உபதேசம் இதோ!
மது அருந்தி போதையடைந்தவனின் நாற்பது நாட்களின் தொழுகை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. அவன் அவ்வாறே இறந்துவிட்டால் நரகில் நுழைவான். தவ்பாச் செய்தால் அல்லாஹ் அவனை மன்னிப்பான். மீண்டும் மது அருந்தினால் அவனுடைய நாற்பது நாட்களின் தொழுகை ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. அவன் அவ்வாறே இறந்துவிட்டால் நரகில் நுழைவான். தவ்பாச் செய்தால் அல்லாஹ் அவனை மன்னிப்பான். மீண்டும் மது அருந்தினால் அவனுடைய நாற்பது நாட்களின் தொழுகை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. அவன் அவ்வாறே இறந்துவிட்டால் நரகில் நுழைவான். தவ்பாச் செய்தால் அல்லாஹ் அவனை மன்னிப்பான். மீண்டும் அருந்தினால் மறுமை நாளில் ரத்கத்துல் கப்பால் எனும் பானத்தை அல்லாஹ் அவனுக்கு புகட்டுவது கடமையாகிவிட்டது என்று நபி(ஸல்)அவர்கள் கூறியபோது, நபித்தோழர்கள் அல்லாஹ்வின் தூதர்(ஸல்)அவர்களே! ரத்கத்துல் கப்பால் என்றால் என்ன? என்று கேட்டனர். அதற்கவர்கள், நரகவாசிகளிடம் பிழிந்தெடுக்கப்பட்ட பானம் என்று பதிலளித்தார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர்(ரலி) நூல்: இப்னுமாஜா)
                                           23.  புறம் பேசுதல்
முஸ்லிம்கள் ஒன்றுகூடும் சபையில் புறம் பேசுவது, பிறரை இழிந்துரைப்பது போன்ற செயல்கள் பிரிக்கமுடியாத ஒன்றாகிவிட்டது. ஆனால் உள்ளங்கள் வெறுக்கும் அறுவருப்பான உவமையைக் கூறி இதனை விட்டும் தவிர்ந்து கொள்ள அல்லாஹ் கட்டளையிடுகிறான். 

அல்லாஹ் கூறுகிறான்:
உங்களில் சிலர் சிலரைப்பற்றிப் புறம் பேசவேண்டாம். உங்களில் ஒருவர் தன்னுடைய சகோரசரின் மாமிசத்தை அவர் இறந்து பிணமாக இருக்கும் நிலையில் புசிக்க விரும்புவாரா? அப்போது அதனை நீங்கள் வெறுத்து விடுவீர்கள். (அல்குர்ஆன் 49:12)

புறம் என்றால் என்னவென நபி(ஸல்)அவர்கள் விவரிக்கின்றார்கள்:
புறம் என்றால் என்னவென நீங்கள் அறிவீர்களா? என நபி(ஸல்)அவர்கள் கேட்டபோது, அல்லாஹ்வும் அவனது தூதரும் நன்கறிவர் என நபித்தோழர்கள் கூறினர். அப்போது நபி(ஸல்)அவர்கள், உன்னுடைய சகோதரன் வெறுப்பதை நீ கூறுவது தான் -புறம்- என்றார்கள். நான் கூறுவது என்னுடைய சகோதரனிடம் இருந்தால் அதுவும் புறமாகுமா? என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி(ஸல்)அவர்கள், நீ கூறுவது உன்னுடைய சகோதரனிடம் இருந்தால் நீ அவனைப் பற்றி புறம் பேசுகிறாய். நீ கூறுவது உன்னுடைய சகோதரனிடம் இல்லையெனில் நீ அவனைப் பற்றி இட்டுக்கட்டுகிறாய் என்றார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்: முஸ்லிம்)

நம்முடைய முஸ்லிம் சகோதரர் வெறுப்பதை நாம் கூறுவதே புறம் ஆகும். அது அவருடைய உடல், மார்க்கம் மற்றும் உலக விஷயம், மனோநிலை, நடைமுறை, குணம்.. ஆகிய எதனோடு தொடர்புடையதாக இருந்தாலும் சரியே! புறம் பேசுவதில் பல வகைகள் உள்ளன. ஒரு முஸ்லிமின் குறையைக் கூறுவதும் பிறரை இழிந்துரைப்பதும் புறம் பேசுவதில் ஒருவகையே!

அல்லாஹ்விடத்தில் மிகக்கேவலமான, இழிவாகக் கருத்தப்படும் புறம் பேசுதல் விஷயத்தில் மக்கள் மிகப் பொடுபோக்காக உள்ளனர். 

நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள்: வட்டியிலேயே மிகக் கொடிய வட்டி ஒருவன் தனது சகோதரனின் கண்ணியத்திற்கு இழுக்கு விளைவிப்பதாகும். (அறிவிப்பவர்: ஸயீத் பின் ஜைத்(ரலி) நூல்: அபூதாவூத்)

சபையில் இருப்பவர் இத்தீமையிலிருந்து பிறரைத் தடுப்பது கடமையாகும். மேலும் புறம் பேசப்படும் சகோதரருக்கு சார்பாக நாம் பேசவேண்டும். இவ்வாறு பேசுவதை நபி(ஸல்)அவர்கள் வரவேற்றுள்ளார்கள்.

நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள்: தனது சகோதரனுடைய கண்ணியத்திற்கு இழுக்கு விளைவிப்பதை தடுப்பவரின் முகத்தை மறுமை நாளில் நரக நெருப்பை விட்டும் அல்லாஹ் தடுத்துவிடுவான். (அறிவிப்பவர்: அபூதர்தா(ரலி) நூல்: அஹமத்)

யா அல்லாஹ்! எங்களுடைய பாவங்களையும் எங்களுடைய செயல்களில் நாங்கள் வரம்புமீறியதையும் மன்னித்தருள்வாயாக! எங்களுடைய தவ்பாவை ஏற்றுக் கொள்வாயாக!

நபி(ஸல்)அவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தினர் மற்றும் அனைத்து தோழர்களின் மீதும் அருள்புரிவாயாக!

-
அகிலத்தோரின் இரட்சகனாகிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்-

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக