ஞாயிறு, நவம்பர் 27, 2011

சூனியம் உலகம் ஒரு பார்வை (2)PrintE-mail

சூனியம் இஸ்லாத்துக்கு மட்டும் எதிரியல்ல. மனித குலத்துக்கே அது எதிரியாகும். ஐரோப்பிய நாடுகளின் ஆரம்ப காலப் பகுதிகளில் சூனியக்காரர்களைத் தண்டிப்பதற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டதைக் காணலாம். சைதான் ஒருவனை வழிகெடுத்துவிட்டால் அத்தோடு நின்றுவிடமாட்டான் அவரைக்காபிராக்கி, சீர்கெடுத்து, கேவலப்படுத்திவிடுவான். அது அவனுடைய இயல்பாகும்.
சைத்தானுக்கும் மனித சமூகத்திற்கம் இடையிலான பகைமை:
சைத்தானுக்கு மனிதனிடம் எதுவிதத்தேவையும் கிடையாது. ஆதம் அலைஹிஸ்ஸலாம்  அவர்களுக்கு ஒரேயொரு சூஜூதைக் கூட செய்வதற்கு அவன் மனிதனுக்குக் கட்டுப்படவில்லை. இதற்காக அல்லாஹ் அவனுக்கு வழங்கியிருந்த அனைத்தையும் இழக்கவேண்டிய நிலை அவனுக்கு ஏற்பட்டாலும் கூட அவன் தனது நிலைப்பாட்டில் உறுதியாகவே இருந்தான். இப்படிப்பட்டவன் மனிதனுக்கு வசப்படுவானா? மனிதன் சொல்வதற்கெல்லாம் அடிபணிந்து விடுவானா? என்ற நியாயமான கேள்விகள் எழுகின்றன.
சுவனம், நரகம் அனைத்தும் தெரிந்தும் தனது கௌரவத்துக்காக இவையனைத்தையும் துறந்து வந்தவன் எவ்வகையிலும் தன் கௌரவத்தையிழந்து ஒரு மனிதனுக்குக் கீழ்படியமாட்டான். அறிவிலும் மனித குலத்தை விடத்தேர்ந்தவனாகவே அவன் காணப்படுகின்றான். "இறையச்சமில்லாது ஓர் அறிவுக்கு சிறப்பிருக்குமென்றால் அல்லாஹ்வுடைய படைப்புக்களில் அறிவில் சிறந்தவனாக சைய்தான் இருப்பான்" என்று ஓர் அறிஞர் சொல்லுமளவுக்கு அறிவாற்றல் கொண்டவனாக செய்தான் காணப்படுகின்றான்.
சைத்தான் தான் நமை வழிகெடுக்கின்றான் என்று தெரிந்தும் கூட நாம் பாவம் செய்கின்றோம். ஆசையை நம் உள்ளங்களில் அவன் ஏற்படுத்தியதும் நாம் எதையும் செய்வதற்கு முனைந்துவிடுகின்றோம். நிறையச் சம்பாதிப்பது எப்படி? எவ்வாறு மக்களை ஏமாற்றுவது? போன்ற எண்ணங்களை ஒருவன் உள்ளத்தில் சைய்தான் ஏற்படுத்தி உலக மோகத்தின் உச்சகட்டத்தை அவனுள்ளத்தில் உண்டாக்கிவிட்டானெனில் அவனுக்கு ஒன்றுமே புரியாது. கட்டுக்கடங்காதவனாக மனிதன் ஆகிவிடுகின்றான். இந்த உச்சகட்ட உலக மோகத்தைத் தீர்த்துக் கொள்வதற்கு சைய்தான் மனிதனுக்கு வழங்கியதே சூனியமாகும். ஆக மனித குலத்துக்கே இது மிகப்பெரும் எதிரியாகும்.
சூனியக்காரர்களும் மன்னர்களும்:
பண்டைய உலக வரலாறுகளில் மன்னர்கள் தமக்குப் பக்கத்தில் சூனியக்காரர்களை வைத்திருந்ததைக் காண்கின்றோம்:
மூஸா நபியின் பிறப்பு இந்த வருடத்தில் நிகழும் என சூனியக்காரர்களே ஃபிர்அவ்னுக்குச் சொன்னாதாக வரலாறு சொல்கிறது. உண்மையாகவே அது நடைபெற்றது. எந்தவித மறைவான அறிவுமில்லாத மனிதர்களால் இதை எவ்வாறு சொல்ல முடிந்தது என்று வினவினால் சைதானின் மூலமாகவே இது அந்த சூனியக்காரர்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். அதற்காக சைதானுக்கு மறைவான அறிவுண்டு என்ற அர்த்தம் கிடையாது. மாறாக சில செய்திகளை அவன் அறிந்திருப்பதற்கான சாத்தியக்கூருகள் இருக்கின்றன என்பதுவே இங்கே கவனிக்கப்படவேண்டியதாகும்.
மூஸா என்றொருவர் பிறப்பார் என்று சூனியக்காரர்கள் சொன்னதும் ஃபிர்அவ்ன் அதை உடனே நம்பியமைக்கு சூனியக்காரர்கள் மீது பிர்அவ்னுக்கிருந்த நம்பிக்கைதான் காரணமாகும்.
நபி யூஸூஃப் அலைஹிஸ்ஸலாம் -ன் காலத்து மன்னன் கண்ட கனவுக்கு நபி யூஸூஃப் அலைஹிஸ்ஸலாம் விளக்கம் சொன்னதும் அந்த மன்னன் நம்பியதும் யூஸூஃப் அலைஹிஸ்ஸலாம்
நபியென்பதற்காகவல்ல. மன்னனின் பார்வையில் அவர் ஒரு சூனியக்காரனாகவே விளங்கினார். அதனாலேயே அவர் சொன்ன விளக்கத்தினடிப்படையிலான தீர்வை அந்த மன்னன் நடைமுறைப்படுத்தினான் எனக் கருத இடமுண்டு.
"மூஸாவுடன் போட்டியிட்டு நாங்கள் வெற்றிபெற்றால் எங்களுக்கு நீ என்ன பிரதியுபகாரம் செய்வாய்" என்று சூனியக்காரர்கள் ஃபிர்அவ்னிடம் கேட்ட போது அவன் கூறியதெல்லாம் என்னோடு மிக நெருக்கமானவர்களாக நான் உங்களை வைத்திருப்பேன் என்பதைத்தான். அக்காலத்தில் மன்னர்களுடன் சூனியக்காரர்களுக்கிருந்த நெருக்கத்தையே இது எடுத்துக்காட்டுகின்றது.
அதற்காகத்தான் அந்த சூனியக்காரர்கள் கயிறுகளைப் போடுகின்றார்கள் அவை பாம்புகளாகக் காட்சியளிக்கின்றன. இதை வித்தையென்று சொல்ல முடியாது. ஏனென்றால் வித்தையெனும் போது கையிறுமிருக்க வேண்டும், பாம்புமிருக்க வேண்டும். அப்போதுதான் கையிறு போட்டவாறு விளங்கி பாம்பு தென்படும் கயிற்றைப் போட்டு கையிற்றைப் பாம்பாய் காட்டுவது வித்தையல்ல. புறாவைப் பெட்டியிலிட்டு பூனையாகக் காட்டினால் அங்கு புறாவும் இருக்க வேண்டும். பூனையும் இருக்க வேண்டும். இதுவே வித்தை காட்டுதலாகும். புறாவை ஒருவனுக்குப் பூனையாகக் காட்ட முடியாது. அவ்வாறு முடியுமெனில் சூனியத்தால் மட்டுமே அது சாத்தியமாகும்.
பெரிய வெட்டை வெளியில் யாரும் வித்தை காட்டுவதில்லை. வித்தைகாட்டும் இடம் பொதுவாக அடைத்தும், மறைத்தும் காணப்படும். ஆனால் அந்த சூனியக்காரர்கள் முற்ற வெளியில் பகிரங்கமாக எல்லோருக்கும் முன்னிலையிலேயே கையிறுகளைப் போடுகின்றனர். அவை பாம்புகளாக காட்சியளிக்கின்றன. இங்கே, அவர்கள் கையிறுகளைப் போட்டார்கள் என்பதுதான் நாம் கவனிக்க வேண்டியதாகும்.
ஆகவே மனிதன் தனக்குள் இருக்கும் உச்ச கட்ட ஆசையைத் தீர்த்துக் கொள்வதற்காகக் கையாளும் வித்தியாசமான ஆயுதமே சூனியமாகும்.
ஆரம்ப கால ஐரோப்பாவில் இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து, வட அமெரிக்கா, ஜமேக்கா போன்ற நாடுகளில் சூனியம் பரவிக்காணப்பட்டது. ஜமேக்காவில் இன்றும் கூட சூனியம் காணப்படுகின்றது. சூனியக்காரர்களின் அட்டகாசத்தால் மரண தண்டனை எனும் சட்டம் இந்நாடுகளிலே அமுலுக்கு வந்தது. 18ம் நூற்றாண்டில்தான்  இந்த சட்டம் மாற்றப்பட்டது. சூனியக்காரர்களின் உடலில் காணப்படும் ஒரு வகை அடையாளத்தை வைத்தே அவர்கள் இணங்காணப்பட்டார்கள். உண்மையான சூனியக்காரர்களுக்கு அவர்களின் உடலில்  அடையாளம் காணப்படும் என்பது மறுக்கமுடியாத உண்மையாகும்.
வில்லியம்(William), புறோவர் (Brower)போன்ற வரலாற்றாசிரியர்கள் தமது புத்தகத்திலே இது தொடர்பில் தமது கருத்துக்களைக் கூறியுள்ளார்கள். வில்லியம் என்பவர் தனது பினோமினா ஒப் ஜமேக்கா ( phenomena of Jamaica ) என்ற நூலில் தென்னமெரிக்காவுடைய உண்மையான வரலாறுகள் பற்றிப் பல அரிதான குறிப்புகளை எழுதியுள்ளார். பொதுவாக வரலாறுகளில் முழுக்க முழுக்க உண்மையில்லாது போனாலும் அரைவாசிகளாவது உண்மையானவை என நாம் ஏற்றுக்கொள்கின்றோம். இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து போன்ற நாடுகளில் காணப்படும் நூதன சாலைகளில் ஆரம்ப காலங்களில் வாசிக்க முடியாத மொழியால் போடப்பட்டுள்ள கையொப்பங்களடங்கிய ஆவனங்கள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளதைக் காண முடிகின்றது. நமக்கென்றால் இவை தேவையில்லாதவைகளாக இருக்கலாம் ஆனால் இங்கிலாந்து, ஸ்கெட்லாந்து நாட்டவருக்கு இவை அரிதான ஆவனங்களாகவும், அவசியமானவைகளாகவும் விளங்குகினன்றன.
மனித குலத்துக்கே சூனியம் மிகப்பெரும் ஆபத்தானது என்பதால் மேற்கூறப்பட்ட சில ஐரோப்பிய நாடுகளில் விசாரனையின் போது சூனியக்காரர்களின் நகம், முடி போன்றவை பிடுங்கப்பட்டன. சூனியம் செய்பவர்களுக்கு என்ன தண்டனை என்பதை மக்களுக்குக் காண்பிப்பற்காக சூனியக்காரர்கள் பகிரங்கமாகவே தூக்கிலடப்பட்டார்கள். இவ்வாறு தண்டனைகளைப் பொறுக்க முடியாது அவற்றிலிருந்து தப்பிப்பதற்காக சூனியக்காரர்கள் ஒரு தந்திரத்தைக் கையாண்டார்கள். அதாவது மக்களுக்கு நலவு செய்வதற்காக white megic கெடுதி செய்வதற்காக black megic என்று சூனியத்தை இரண்டாகப் பிரித்து நாட்டுக்கு நலவு செய்வதற்காகவும், நாட்டின் சௌகரியங்களுக்காகவும் தாம் white megic ஐ பயன்படுத்துவதாகவும் இதனால் மக்களுக்குப் பாதகங்கள் எதுவும் ஏற்படப்போவதில்லை எனவும் அவர்கள் கூறினார்கள். இதையறிந்த சில அரசுகள் சூனியக்காரர்களைத் தண்டிக்கவில்லை. என்றாலும் இந்த ஏமாற்று வேலைகளை அரசுகள் நம்பவில்லை. இலங்கைக்கு இவ்வாறான வரலாறுகள் இல்லாவிட்டாலும் அடிமைக் கலாசாரம் தலைவிரித்தாடிய ஐரோப்பிய நாடுகளில் கி.பி 18ம் நூற்றாண்டு வரைக்கும் சூனியக்காரர்களுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டு வந்தன. பிற்காலங்களில்தான் இச்சட்டத்தில் தளர்வுகள் ஏற்படலாயின.
சைத்தான் வழிகெடுப்பதாலேயே சூனியக்காரர்கள் உருவாகின்றார்கள் என்றால் தற்போது சூனியக்காரர்களின் தொகை கூடியிருக்க வேண்டும் ஆனால் அவ்வாறு ஏற்படவில்லையே உண்மையான சூனியக்காரர்கள் குறைந்துள்ளனரே? என்ற கேள்வியெழலாம். மனிதனைப்பொருத்த மட்டில் வாழ்வின் சௌகரியங்களுக்காக எதையும் இழப்பான். இருந்தாலும் சௌகரியங்களின் உச்சகட்டத்தை அவன் அடைகின்ற போது அதற்கான வழிகளை அல்லாஹ் ஏற்படுத்துகின்ற போது சௌகரியங்களை அடையும் கஷ்டமான வழிகளை விட்டு விலகப்பார்ப்பான். ஒருவன் அல்லாஹ்வுக்கு இணை வைத்து விட்டான் என்பதற்கதாக உடனே அதற்குக் கூலியாக சூனியத்தை சைதான் அவனுக்குக் கற்றுக்கொடுக்கமாட்டான். அவன் தன்னிடம் அடிமையாக மண்டியிட்டு, கேவலப்பட்ட பின்புதான் அவனுக்கு சில உதவிகளைப்புரியும் அளவுக்கு சைதான் வருவான். இந்தக் கடின நிலையும் இளகு வழியில் சௌகரியச் சிந்தனையில் இந்தச் சமுதாயம் ஆற்பட்டதும் ஒரு காரணமாக இருக்கலாம். இன்னும் பல காரணங்களை நமது தொடரில் புரிந்துகொள்ள முடியும்.
சூனியத்தைப் பற்றி அல்லாஹ் குறிப்பிடும் போது "பிபாபில" என்று ஓரிடத்தை சொல்லிக் கூறுகிறான். சில இடங்கள் சிலதுக்குப் பேர் போனவை என்றடிப்படையில் அல்லாஹ் இவ்வாறு சுட்டிக்காட்டுகின்றான். ஆகவே சூனியமென்பது இன்று சொல்லப்படுவது போன்று வித்தைகாட்டுதல் என்பதல்ல. மாறாக மனித குலத்துக்கு எதிராக ஊடுருவுவதற்கு செய்தான் கண்டுபிடித்த ஒரு வழியாகும் என்பதை நாம் விளங்கவேண்டும். இவைகள் சூனியப் பரம்பலையும் அதன் பின்புலத்தையும் விளங்கிக்கொள்ள சில குறிப்புக்களே.
6. சூனியம் எவ்வாறு சாத்தியமாகும்?
சூனியம் எவ்வாறு சாத்தியமாகும் என நாம் நினைக்கலாம். மனிதனைச் சுற்றி காந்த அலையொன்று இருப்பதை தற்போதுதான் விஞ்ஞானம் கண்டுபிடித்து வருகின்றது. மனிதன் இயங்கவேண்டுமெனில் இரத்தமும் நீரும் சரிவிகிதத்தில் மாறிக்கொண்டிருக்க வேண்டும். நஞ்சு குடித்த ஒருவருக்கு நன்றாக தண்ணீர் கொடுப்பார்கள். சிலருக்கு வைரசுகள் மூளைக்குச் சென்றுவிட்டால் முள்ளந்தண்டிலிருந்து நீரை எடுப்பார்கள் அதிசயிக்குமளவுக்கு நீர் வந்திருப்பதைப்பார்க்கலாம். தலையிலோ உடம்பிலோ இரத்தம் குத்தியெடுக்கும் மருத்துவத்தை நபியவர்கள் செய்துள்ளார்கள். இதற்கு ஹிஜாமா எனப்படும். சர்வதேச சுகாதர தாபனமும் இதை அனுமதித்துள்ளது. அசுத்தமான இரத்தம் உடம்பிலிருந்து வெளியேறுவதனால் பல நோய்கள் குணமாகின்றன. மனித உடலில் காணப்படும் இரத்தமும் நீரும் வெளியிலுள்ள காந்த சக்தியால் தாக்குமுறும் இயல்பு கொண்டவை.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒத்த வயதையுடைய இருவர் கடைக்குச் சென்று ஒரு சட்டை பார்க்கிறார்கள். ஒருவருக்கு அது பிடிக்க அடுத்தவருக்கு அது பிடிக்காமல் போகின்றது. காரணம் என்னவெனில் ஆளுக்கேட்ப கவரும் தன்மையில் காணப்படும் மாறுதல்களேயாகும். பாதையில் நாம் செல்லும் போது ஒருவரைக்கண்டால் அவரைக்கண்டதுமே அவர் மீது நமக்கு வெறுப்பேற்பட்டு விடுகின்றது. இதற்கு முன்னர் அந்நபருடன் எந்தத் தொடர்புமே நமக்கு இருந்திருக்காது. ஆனாலும் அவர் மீது நமக்கு வெறுப்பேற்பட்டு விடுகின்றது. நமைச் சூழவுள்ளகாந்த அலைகளே இகற்குக் காரணமாகின்றன. மூவர் ஓரிடத்தில் பேசிக்கொண்டிருக்கும் போது ஒரு நபரைப்பற்றிப் பேச முற்படும் போதே அந்நபர் அவ்விடத்துக்குப் பிரசன்னமாகின்றார். இது எப்படி நிகழ்ந்ததெனில் அவர் புறப்படும் போதே அவர்கள் அவரைப்பற்றிப் பேச ஆரம்பித்து விடுகிறார்கள் காந்த அலைகளின் பறிமாற்றத்தால் அவரைப்பற்றிய பேச்சு அவர்களிடத்தில் உண்டாகின்றது. இதைத்தான் "Telepathy" என அழைப்பார்கள்.
ஆக நம்மைச்சூழ ஓரலை வட்டத்தை அல்லாஹ் வைத்துள்ளான் ஆகையால்தான் உண்மையாக சூனியம் செய்யும் எவனும் சூனியம் செய்யப்படும் நபர் பாவித்த ஆடை, அவரின் முடி, நகம் போன்றவற்றை எடுத்து வரச்சொல்கின்றான். நபியவர்களுக்கும் இவ்வகையில்தான் சூனியம் செய்யப்பட்டது. ஒருவரின் சட்டையை வைத்து இது யாருடையது என்பதை இன்றைக்கு இலகுவாய்க் கண்டுபிடித்திடலாம். இதனடிப்படையிலேயே மோப்ப நாய்கள் மூலம் தடயங்களை வைத்து ஆட்களை அடையாளம் காண்கிறார்கள். ஆரம்பகாலங்களில் இதை நம்பமுடியாது போனாலும் இன்றைக்கு இது மிகச்சுலபமாகிடடது. இதை நாம் சைதானுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டிய அவசியமில்லை. இதைப்பற்றிய அறிவு அவனுக்கு எப்போதோ தெரிந்திருக்கின்றது. ஒருவனுக்குப்பாதிப்பை ஏற்படுத்த வேண்டுமெனில் அவனிடமுள்ள பொருளொன்று அதற்கு அவசியமாகின்றது.
சூனியக்காரன், சைத்தான், சூனியம் செய்யப்பயன்படும் பொருள், சூனியம் செய்யப்படும் நபர் ஆகிய நான்கு அம்சங்களில்தான் சூனியம் தங்கியுள்ளது. தன்னை வணங்கும் சைதானிய அடியார்களுக்கு அவனின் உதவியின் வடிவமே இது. அந்த உதவிக்கான சைத்தானியக் கல்வியே சூனியம்.
ஒருவேடிக்கை என்னவெனில் சைத்தான் தனக்குக் கட்டுப்பட்டிருப்பதாகவும் தான் சொல்வதை அவன் செய்வதாகவும் கூறி சிலர் மக்களை வழிகெடுக்கின்றனர். ஒரேயொரு சூஜூதைக் கூட ஆதம் நபிக்கு செய்ய விரும்பாத அவன் எவ்வாறு ஒரு மனிதனுக்கு வசப்படுவான் என்பதுதான். சைதான் மனிதனுக்கு அடிபணியமாட்டான். அல்லாஹ்வுக்கு மட்டுமே அவன் வசப்படுவான். பத்ர் போர் உக்கிரமடைந்து கொண்டிருந்த  போது இங்கு வந்த சைத்தான் "நீங்கள் காணாதவற்றை நான் காண்கின்றேன்" என்று கூறி விலகிக்கொண்டான். அதாவது மலக்குமார் இறங்கி வருவதை அவன் கண்டதாலேயே இவ்வாறு விலகிச்சென்றான். இதை அல்லாஹ் சூறா அன்பாலிலே சுட்டிக்காட்டுகின்றான்.
ஆகவே அனைத்து நன்மைகளுக்கும் எதிரானவனே ஷைதானாகும். தீமைகளனைத்தையும் ஒருவன் செய்து சைதானை எப்படி அனுகுவது என்பது பற்றிப்படிப்பதுவே சூனியக்கலையாகும். சூனிய உலகு பற்றிய தகவல்களைக் கொண்டமைந்ததே இப்பகுதியாகும். இதில் முடிவுகள் ஏதுமில்லை இது சூனிய உலகு பற்றிய ஓர் அறிமுகம் மாத்திரமே
இன்ஷா அல்லாஹ், கட்டுரை தொடரும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக