இடுகைகள்

2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பரவும் டெங்கு காய்ச்சல்: தடுக்கும் வழிமுறைகள்

[ டெங்கு பாதிப்பிற்கு ஆளாவோருக்கு,  இரண்டு நாட்களுக்கு மேல்,  உடல்  எலும்பு இணைப்புகளில்  தீவிர வலியுடன்கூடிய தொடர் காய்ச்சல் இருக்கும். நம் மக்களில் பெரும்பாலோரிடம், காய்ச்சல் என்றால், முதலில் மருத்து கடைகளுக்கு சென்று, தன்னிச்சையாக மாத்திரை உட்கொள்ளும் போக்கு உள்ளது. ஆபத்தான இப்போக்கை கைவிட்டு, உடல்வலியுடன்கூடிய காய்ச்சல் இருந்தால், தாமதிக்காமல் உடனே மருத்துவமனைக்கு செல்வது அவசியம்.] டெங்கு பாதிக்கப்பட்டோருக்கு, உடல் எலும்பு இணைப்புகளில் தீவிர வலியுடன் கூடிய தொடர் காய்ச்சல், இரண்டு நாட்களுக்கு மேல் இருக்கும். இரண்டு மாத இடைவேளைக்கு பின், இரண்டு வாரங்களாக, தமிழகத்தில், மீண்டும், டெங்கு காய்ச்சலின் தாக்கம் அதிகரித்துள்ளது. சென்னை, வேலூர், நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, நெல்லை, தூத்துக்குடி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில்,  கடந்த ஒன்பது மாதங்களில், 4,500-க்கும் மேற்பட்டோர், டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில், சிறுவர், சிறுமியர் உட்பட 50-க்கும் அதிகமானோர், இதுவரை இறந்துள்ளனர். இருப்பினும், "டெங்கு காய்ச்சல் குறித்து, பொது

அல்லாஹ்வின் நேசம் பெற்றவரும், நேசம் பெறாதவரும்....

2:222. மாதவிடாய் பற்றியும் உம்மிடம் வினவுகிறார்கள்; நீர் கூறும்: "அது (ஓர் உபாதையான) தீட்டு ஆகும்; ஆகவே மாதவிடாயின் போது பெண்களை விட்டும் விலகியிருங்கள்; அவர்கள் தூய்மையாகும் வரை அவர்களை அணுகாதீர்கள்; அவர்கள் தூய்மையடைந்த பின் அல்லாஹ் எப்படி கட்டளையிட்டிருக்கின்றானோ அதன்படி அவர்களிடம் செல்லுங்கள்;  பாவங்களைவிட்டு மீள்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் நேசிக்கிறான்; இன்னும் தூய்மையாக இருப்போரையும் நேசிக்கின்றான்." 3:31. (நபியே!) நீர் கூறும்:  "நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பீர்களானால், என்னைப் பின் பற்றுங்கள்; அல்லாஹ் உங்களை நேசிப்பான்;  உங்கள் பாவங்களை உங்களுக்காக மன்னிப்பான்; மேலும், அல்லாஹ் மன்னிப்பவனாகவும், மிக்க கருணை உடையவனாகவும் இருக்கின்றான். 3:76. அப்படியல்ல! யார் தம் வாக்குறுதியை நிறைவேற்றுகின்றார்களோ, (அல்லாஹ்வுக்கு) அஞ்சியும் நடக்கின்றார்களோ (அவர்கள் தாம் குற்றம் பிடிக்கப்பட மாட்டார்கள்);  நிச்சயமாக அல்லாஹ் (தனக்கு) அஞ்சி நடப்போரை நேசிக்கின்றான். 3:134. (பயபக்தியுடையோர் எத்தகையோர் என்றால்,) அவர்கள் இன்பமான (செல்வ) நிலையிலும், துன்பமான (ஏழ்மை) நிலையிலும் (இறைவனின்

எப்பொழுதெல்லாம் உங்கள்கணவர் பொய் சொல்கிறார் தெரியுமா?

கணவன்மார்கள் தங்கள் மனைவியிடம் பொய் சொல்வதுண்டு. காரணம் மனைவி மனம் வருத்தப்படக்கூடாது என்பது தான். அப்படி கணவன்மார்கள் எப்பொழுதெல்லாம் பொய் சொல்கிறார்கள் என்று பார்க்கலாம். ஒரு சேலையைக் கட்டிக் கொண்டு போய் கணவன் முன் நின்று ''என்னங்க இந்த சேலை எப்படி இருக்கு?''  என்று மனைவி கேட்பாள். அதற்கு கணவன் நீயும், உன் சேலை செலக்ஷனும் என்று உண்மையைச் சொல்ல முடியுமா?. உடனே ''சேலை  ரொம்ப நல்லா இருக்கும்மா''  என்பார்கள். அவர்கள் சொல்வது சேலையைத் தான், அந்த சேலை உங்களுக்கு நன்றாக இருக்காவிட்டாலும் கூட பெரும்பாலானவர்கள் அப்படித்தான் சொல்கிறார்களாம்.  நல்லா இல்லைன்னு சொன்னா அடுத்து என்ன நடக்கும் என்பது ஆண்களுக்குத்தானே தெரியும்!. மனைவியுடன் பொது இடத்தில் நடந்து செல்லும்போது ஒரு அழகான பெண் யாராவது அந்த வழியாகச் சென்றால், அப்படியே ஒரு சின்ன லுக் விடுவது பலருக்கும் இருக்கும் பழக்கம். அப்போது மனைவி கணவரை நோக்கி, என்ன கண்ணு கண்டமேனிக்கு திரியுது. இப்ப எதுக்கு அந்தப் பெண்ணை பார்த்தீங்க என்று கேட்டால்.  ''சீச்சீ என்னைப் போய் இப்படி நினைத்துவிட்டாயே. நான் அந்த ப

நேர்வழி இயக்கம்

அளவற்ற அன்புடனும் கண்ணியம் நிறைந்த உள்ளச்சத்துடனும் அல்லாஹ்வை சார்ந்து நிற்றல், அவனை வணங்கி வழிபடுதல், அவனை வணங்குவதற்கு அவன் வகுத்துத் தந்த கிரியைகளைத் தாண்டி அணுவளவும் அப்பால் செல்லாதிருத்தல். அவனிடமே உதவி தேடுதல். வாழ்வின் சகல விவகாரங்களிலும் அவனது சட்டங்களுக்கு முற்றிலும் கட்டுப்படுவது அவனது வழிகாட்டல் தவிர்ந்த அனைத்தையும் தனது வாழ்விலிருந்து புறந்தள்ளுதலும் அவனது பண்புகளில் ஒன்றையோ அல்லது அதன் ஒரு பகுதியையோ பிறிதொரு படைப்புக்கு வழங்கி அவனுக்கு இணைவைக்காதிருத்தல். அவனது ஏற்பாடுகளைப் பொருந்திக் கொள்ளுதல், அருளையும் அபிவிருத்தியையும் சௌபாக்கியங்களையும் இடைத்தரகர்களின்றி அவனிடமே நேரடியாக வேண்டி நிற்றல், உலகில் அவன் தரும் சௌபாக்கியங்களுக்கு நன்றி செலுத்துவதோடு, வாழ்வின் எந்தக் கட்டத்திலும் விரக்தியடையாமல் இருத்தல், அவனது அன்பும் சுவனமும் தன்னிகரில்லாத பேறு என்பதை உணர்ந்து செயல்படுதல். வழிமுறைகளில் சிறந்தது நபிகளாரின் வழிமுறை இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் எமது தலைவரும் வழிகாட்டியும் முன்மாதிரியுமாவார். அன்னாரை ஒரு முழு மனிதராகவும் அல்லாஹ்வின் தூய

பெற்றோரிடம் பிள்ளைகள் எதிர்பார்க்கும் 'அந்தஸ்து'!

பிள்ளைகள் புத்திசாலிகளாக இருக்க வேண்டும் என்று பெற்றோர் விரும்புகிறார்கள். அதேபோல் தங்கள் பெற்றோர் புத்திசாலிகளாக இருக்க வேண்டும் என்று பிள்ளைகளும் விரும்புகிறார்கள். பெரும்பாலான குழந்தைகள் இன்னும் ஒரு படி மேலே போய், பெற்றோர்கள் தங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்வதோடு மட்டுமின்றி, சமூகத்திலும் பலரால் மதிக்கப்படக்கூடிய அந்தஸ்துடன் வாழவேண்டும் என்றும் எதிர்பார்க்கிறார்கள். பெற்றோரின் அந்தஸ்து தங்களுக்கு தனி கவுரவத்தைக் கொடுப்பதாக கருதுகிறார்கள். பெற்றோர் புத்திசாலிகளாக இருந்தால், எப்போதும் அவர்கள் பிள்ளைகளின் மனநிலையை புரிந்து கொண்டு செயல்படுவார்கள்.  தங்கள் பிள்ளைகளின் தேவைகளை அவர்கள் சொல்லாமலேயே புரிந்துகொண்டு நிறைவேற்றுவார்கள். பொதுவாக எல்லா பெற்றோருக்கும் போதிய கல்வி அறிவு இருக்கும் என்று சொல்ல முடியாது. கல்வி அறிவு இல்லாவிட்டாலும்கூட, தங்களது பொது அறிவை மேம்படுத்தி குழந்தைகளின் தேவைகளை உணர்ந்து அவர்களை திருப்திப்படுத்தும் பெற்றோராக இருப்பது இன்று அவசியமாகிறது. போதிய கல்வி அறிவு இல்லாத பெற்றோருக்கு ஒருவித தாழ்வு மனப்பான்மை உருவாகிவிடும். அந்த தாழ்வு மனப்பான்மையால் யார் முன்

ஒவ்வொரு பெற்றோரும் படிக்க வேண்டிய கட்டுரை[2]

   குழந்தைகளை அடிக்கலாமா? (2)   [ "யார் யாரோடு சண்டை போட்டாலும் கடைசியில் பாதிக்கப்படுவது நான் தான். எனக்குத்தான் அடி கிடைக்கும். திட்டு கிடைக்கும். அப்போதெல்லாம் நான் அழுவேன். அழுதால் அதற்கும் அடி கிடைக்கும். அதனால் கஷ்டப்பட்டு அடங்குவேன். தொண்டையெல்லாம் அமுக்கி வலிப்பது போல இருக்கும். நெஞ்சுவலிக்கும். நிற்க வைத்து ஜெயிலுக்குள் இருப்பவர்கள் கிட்ட கேள்வி கேட்பது போல் கேட்பார்கள். நிறைய தடவை நினைப்பேன்.  சுனாமி வந்தப்ப இவங்க செத்து போயிருக்க கூடாதா?... என்று! அப்புறம் உடனே ஆண்டவன் கிட்ட மன்னிப்பும் கேட்பேன். நான் அவங்க கிட்ட அடியும் உதையும் வாங்கறப்ப எல்லாம் எங்கயாவது ஓடிப்போலாம் போல இருக்கும். அப்படி போனா பொம்பளைப் பிள்ளங்கள யாரோ பிடிச்சுக்கிட்டு போயிருவாங்கன்னு எங்க பக்கத்து வீட்டு பெரியம்மா சொல்லும். நான் எங்கப்பாரு அடிக்கும் போதெல்லாம் கெஞ்சுவேன். என் சத்தம் எதையும் காதில வாங்க மாட்டாங்க. எனக்கு எங்கம்மாவும் அப்பாவும் அன்பு செய்ய மாட்டாங்களான்னு இருக்கும். பக்கத்துல உட்கார்ந்து பேசமாட்டாங் களான்னு இருக்கும். அவங்க மடியில் படுத்து கத்தணும் போல இருக்கும்.

ஒவ்வொரு பெற்றோரும் படிக்க வேண்டிய கட்டுரை[1]

  குழந்தைகளை அடிக்கலாமா? (1)  [ ஒரு சிறுமியை அவள் தாய்,  'நீ எதுக்குத்தான் லாயக்கு. நீ பொறந்ததே வேஸ்ட்'  என்று திட்டிக்கொண்டே இருந்தால் அந்தக் குழந்தைக்கு அந்த வார்த்தைகள் மனதுக்குள்ளேயே தங்கிவிடும். சிறுமிக்கும் தான் எதற்கும் லாயக்கில்லாதவள் என்ற நினைவால், தன்னைப் பற்றிய தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டு உண்மையிலேயே எந்தக் காரியத்தையும் செய்ய லாயக்கில்லாதவளாகி விடக்கூடும். அப்புறம் அந்தப்பெண்ணின் தாழ்வு மனப்பான்மையை சரிசெய்வதே பெரும்பாடாகிவிடும். இம்மாதிரியான மனநிலையை, பாதிப்புக்குள்ளாகும் சொற்களை, குழந்தைகளிடம் பேசுவது மிகப்பெரிய குற்றம்.  நாம் இந்தத் தவறைச் செய்கிறோம் என்று தெரியாமலேயே நிறைய பெற்றோர்கள், குழந்தைகளோடு பழகுபவர்கள் செய்துகொண்டிருக்கின்றனர். ஆனால் இத்தகைய சொற்களால் மன அளவில் பாதிக்கப்படும் குழந்தைகள் நம் சமூகத்திற்கும், குடும்பத்திற்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவார்கள். பொறுமையின்மையின் காரணமாக, வேலைப்பளுவின் காரணமாக, நேரமின்மையின் காரணமாக, இப்படி ஒவ்வொரு பிரச்சனையின் ஊடே குழந்தைகள் பரிதவிக்கின்றன. நம் குழந்தையே ஆனாலும் நாம் அவர்களை வன்முறைக்குள்ளாக்கக்க