இஸ்லாத்தில் நாய் வளர்ப்பதற்குஅனுமதிக்கப்பட்டுள்ளதா?


இஸ்லாம் ஒரு முழுமையான் வழிகாட்டிஎது விசய்த்தில் எப்படிநடந்து கொள்ள வேண்டும் என்பதில்  முஸ்லிம்கள் தடுமாறத்தேவையில்லை.  தீன் துன்யா இரண்டிலும்.
சாய்பாபாவின் வித்தைகளானும்ஷேர்மார்க்கெட்பிரச்சினையானாலும் இஸ்லாமின் தெளிவானவழிகாட்டுதல்கள் உண்டு.  அந்த வழிகாட்டுதல்களின் படிநடந்தால் மக்கள் நாளை மறுமையில் வெற்றியாளர்களாகவும்இந்த உலகில் உண்மையான நாகரீக மனிதர்களாகவும்திகழலாம்.இப்போது செல்லப்பிராணிகளை வளர்ப்பது அதுவும்வித்தியாசமாக வளர்ப்பது இன்று பேஷனாகி வருகிறது.
அமெக்ரிக்கா பல்கலைகழகத்திற்கு மலைப்பாம்புடன் ஒருமாணவி வந்த்தாக எழுத்தாளர் மாலன் கூறியிருக்கிறார்.
கடல் ஆமைஅணில் கங்காரு வரிக்குதிரை,காண்டாமிருகம்,ஆந்தையானைகொக்குமயில்நாய் பூனைஓநாய்,, குருவி வகைகள்புறாக்கள்மீன்வகைக்கள்நண்டு ஆகிய மிருகங்கள் மனிதர்களின் பொழுது போக்கிறகாக அல்லது ஆர்வத்திற்காக வீட்டில் வைத்து வளர்க்கப் படுகின்றன .

பிரபலமானவை நாயும் பூனையும்

மாலன் கூறுகிறார்.
அமெரிக்காவில் செல்லப் பிராணிகளை பிராணிகள் என்றுசொல்லக் கூடாதுமனித துணை (humen companian )  என்று தான் சொல்ல வேண்டும் என்கிறார்கள்.பிராணிகளை குழந்தைகளைப் போல வளர்க்கிற அமெரிக்காவில் குழ்ந்தைகளை குப்பைத்தொட்டியில் வீசிவிடுகிறார்கள். அல்லது தனியே விட்டு விடுகிறார்கள்.இது போலித்தனமான நாகரீகம்.
செல்லப் பிராணிகளை வளர்ப்பது விசயத்திலும் உறுதியாகவும்தெளிவாகவும் நாகரீகமாகவும் இஸ்லாம் வழிகாட்டியுள்ளது.

பொதுவாக பிராணிகள் விசயத்தில் இஸ்லாத்தின் வழிகாட்டுதல்
·         அல்லாஹ்வின் படைப்பு ,மனிதர்களின் தேவைகளுக்காக படைக்கப் பட்டுள்ளன
·         இரக்கத்தோடும் கருணையோடும் அவற்றிடம் நடந்து கொள்ள வேண்டும்.
பிராணிகள் அற்பமானவை அல்ல .
பிராணிகள் பிரார்த்தனை செய்கின்றன
உணர்வுகள் உண்டு பேச்சுக்கள் உண்டுமனிதன் உணராத்தை பிராணிகள் உணர்கின்றன
செய்யக்கூடாதவை
·         துன்புறுத்துவது
·         அதிக வேலை, அதிக பளு
·         விளையாட்டாக வேட்டையாடுவது
·         பிராணிகளின் உறுப்புக்களையோ வாலையோ வெட்டுவது
·         அம்பு துப்பாக்கி சூட்டுக்கு குறியாக வைப்பது
·         பிராணிகள் சணடை


பிராணிகளுக்கான உரிமைகளை தெரிந்து கொண்ட பிறகு, அதை வளர்ப்பதில் உள்ள பொறுப்புக்களை அறிந்து கொண்ட பிறகு வீட்டில் செல்லப்பிராணிகள் வளர்ப்பது குறித்து யோசிக்க வேண்டும்.

செல்லப்பிராணிகள் பற்றி இஸ்லாமின் வழிகாட்டுதல்கள்

·         செல்லப்பிராணிகள் பொதுவாக தேவையற்றது.
·         நன்மைக்குரிய செயலாக இருந்திருந்தால் பெருமானார் (ஸல்) அவர்கள் வளர்த்திருப்பார்கள் சஹாபாக்க்களும்.
·         சுன்னத் அல்லாத எதுவும் அத்தியாவசியமல்ல.

பிராணிகளிடம் பெருமானார் கருணை காட்டியுள்ளார்கள் என்பது தனி விசயம்.

The historian William Montgomery Watt states that Muhammad's kindness to animals was remarkable for the social context of his upbringing. He cites an instance of Muhammed posting sentries to ensure that a female dog with newborn puppies was not disturbed by his army traveling to Mecca in the year 630 –  Muhammad: Prophet and Statesman, Oxford University Press, 1961


ஆனால் தடை இல்லை

துன்புறுத்தலாக இல்லாத வகையில்..

அல்லாஹ்வின் படைப்புக்களை சிந்திப்பதற்காகவும் மன ஆறுதலுக்காகவும் வீடுகளில்செல்லப்பிராணிகளை வளர்ப்பதை இஸ்லாம் தடுக்க வில்லை.
குருவிகிளிபுறாமைனாமீன் போன்றவற்றை  அவற்றிற்குரியமுறையோடு வளர்க்கலாம்.எதை தடுத்து வைப்பது துன்புறுத்தலாகுமோ அதை தடுத்துவைக்க்க் கூடாதுகாட்டு விலங்குகளை பிடித்து வைப்பதே துன்புறுத்தல் தான்
செல்லப் பிராணியாக நாயை வளர்க்க கூடாது என்ற இஸ்லாமின் கோட்பாட்டையும் தேவையற்ற நாய்களை கொல்லும் படி பெருமானார் உத்தரவிட்ட்தையும் சிலர் விமர்சிப்பதுண்டு

ஆனால் நாயின் கோடூரம் அவ்வப்போது
நாய்க்கடி என்பது மூளையைத் தக்கும் ஒருவகை நுண்ணுயிரால்(வைரஸ்ஏற்படும்

ஆசியா மற்றும் ஆப்பி¡¢க்காவில் சுமார் 50,000 மக்கள் நாய்க்கடிநோயால் ஒவ்வோர் ஆண்டும் இறக்கிறார்கள்இதில் 20,000 முதல்25,000 வரை 15 வயதுக்குட்பட்ட சிறார்கள் என்பது குறிப்பிடதக்கது.

இந்த நாய்க்கடியில் சுமார் 67% இந்தியாவில் ஏற்படுகிறது.இந்தியாவில் மட்டும் சுமார் 30,000 பேர் நாய்க்கடியால் ஒவ்வோர்ஆண்டும் இறக்கிறார்கள்

இந்தியாவில் உள்ள நாய்களின் எண்ணிக்கை மட்டும் சுமார் 2கோடி

கடி பட்ட்வுடன் நோய் தெரியாது.
    கடிப்பட்டதில் இருந்து நோய் தொடங்கும் வரையான காலம் 5நாட்கள் முதல் ஒரு ஆண்டு வரை வேறுபடுகிறதுசராசா¢யாகஇரண்டு மாதங்களில்சதரணமாக இந்த நோய் தொடங்குகிறது.
    முதலில்முதல் 2-10 நாட்கள் தெளிவற்ற சில அறிகுறிகள்தென்படும்நோயாளி காய்ச்சல்தலைவலிபசியின்மைவாந்திபோன்றவற்றால் அவதிப்படுவார்மேலும் கடிபட்ட இடத்தில்வலிஅறிப்புமருத்துப்போதல்நமைச்சல் முதலியன இருக்கும்.கடைசிக் கட்டத்தில் நோயாளி விழுங்குவதற்குச் சிரமப்படுவார்.சில நோயாளிகள் கலக்கத்துடனும்தடுமாற்றத்துடனும்செயல்படத் தொடங்குவர்  

  நோய் வந்த பிறகு இதற்கு வைத்தியம் இல்லை.

    நாய்க்கடி நோயின் தாக்குதல் ஏற்படக்கூடிய நிலையில்எத்தனை விரைவாக முடியுமோ அத்தனை விரைவாக மருத்துவஉதவி நாடவேண்டும்.
    உடனடியாகநாய்க்கடி உள்ள இடங்களையும்நகத்தால்பிராண்டிய இடங்களையும் கவனித்துச் சுத்தப்படுத்த வேண்டியதுமிக மிக முக்கியமானதாகும்இது முதலாவதாகவும் செய்யவேண்டியது ஒன்று.
    காயம் பட்ட இடங்களையும்அவற்றைச் சுற்றியுள்ளஇடங்களையும் உடனேயே குழாயின் கீழ் ஓடும் நீ¡¢ல் நன்றாகசோப்பு போட்டு கழுவ வேண்டும். நிறைய சோப்பும் நீரும்உபயோகிக்கவும்.
    அதன் பின்னும் இருக்கக் கூடிய கிருமிகளை செயலிழக்கச்செய்ய டிஞ்சர், , டெட்டால்சாவலான் போட்டுக் கழுவ வேண்டும்.
    எரிச்சல் உண்டக்கக்கூடிய செடிகளின் சாறுகள்காப்பிப்பொடி,மிளகாய்ப் பொடிஉலோகங்கள்அமிலங்கள்சுண்ணாம்புபோன்றவற்றைத் தடவக்கூடாது.
    கடிப்பட்ட இடத்தைத் தையல் இட்டு உடனடியாக மூடக்கூடாது.
    மருத்துவரை உடனே அனுகவும்.
    முடிந்தால் கடித்த விலங்கைப் பிடித்துதனி அறையில் இட்டு,பத்து நாட்கள் உன்னிப்பாகக் கவனித்துஅதற்குவெறிநோய்க்கான அறிகுறிகள் தோன்றுகின்றனவா என்று பார்க்கவேண்டும். ( தினமணி 25.4.2003)

இவ்வளவு கொடூரமான ஆபத்து இருப்பதால் தான் நாயை கொல்ல பெருமானார் உத்தரவிட்டார்கள்.

இன்று புளூகிராஸ் எனற பெயரில் நாயை கொல்ல எதிர்ப்பு தெரிவிப்போர் மனிதர்களின் உயிரிழப்பு குறித்து கவலைப் படுவதில்லை

நாய் ஒரு புத்திசாலி பிராணி என்பதில் ச்ந்தேகமில்லை. அதே நேரத்தில் அதனுடைய ஆபத்து கருதி தேவைப்பட்ட எச்சரிக்க்களை மேற்கொள்ள வேண்டும், அதை வீட்டுக்கு வெளியே நிறுத்த வேண்டும். பெட்டுக்குள் அனுமதிப்பது அநாகரீகமும் விஷப்பரீட்சையுமாகும்.

"ஒரு முஸ்லிம், தன்னிடமுள்ள நாயை இலவசமாகக் கொடுப்பது இஸ்லாத்தில் அனுமதிக்கப் பட்டிருக்கிறதா?" என்பது தங்களின் முழுமையான கேள்வியாக இருக்கும் என்று நம்புகிறோம்.
தங்கள் கேள்விக்கு பதில் சொல்வதற்கு, நாய் வளர்ப்பதைப் பற்றி இஸ்லாம் கூறுவதை இங்குக் குறிப்பிட்டாக வேண்டும். காரணம், நாயை வளர்ப்பவர்/வைத்திருப்பவர்தாம் அதை அன்பளிப்புச் செய்ய இயலும்!
சரியான விளக்கம் பெறுவதற்காகத் தங்கள் கேள்வியை இரண்டு பிரிவுகளாகப் பிரித்துக் கொள்ளலாம்:
முதலாவதாக, முஸ்லிம்களுள் மிக மிகச்சிலர் ஆசைக்காக/ஃபாஷனுக்காக, 'செல்லப் பிராணி' என்ற பெயரில் நாய் வளர்ப்பதும் வீட்டுக்குள் நாயை வைத்துக் கொண்டு கொஞ்சுவதும் எங்குச் சென்றாலும் 'நாய் பிரியா வாழ்க்கை' நடத்துவதும் நடைமுறையில் இருக்கிறது. இந்நடைமுறை, மேட்டுக்குடி முஸ்லிம்கள் சிலரிடத்தும் சேரிவாழ் சொற்ப முஸ்லிம்களிடத்தும் காணப் பட்டாலும்
 இவ்விரு வகையினரும் இஸ்லாமிய அடிப்படை அறிவைப் பெற்றிருக்கவில்லை என்றே முடிவு செய்ய வேண்டியதிருக்கிறது. காரணம், இஸ்லாத்தில் நாயை வளர்ப்பதற்கு இரு காரணங்கள் மட்டுமே உள்ளன. அதில் முதலாவது வேட்டைக்காக வளர்ப்பதாகும்.
அனுமதிக்கப் பட்ட மாமிச உணவுகளைப் பற்றி விவரிக்கும்போது, ''... அல்லாஹ் உங்களுக்குக் கற்பித்திருக்கிறபடி வேட்டையாடும் பிராணி, பறவைகளுக்கு நீங்கள் பயிற்சியளித்து அவை வேட்டையாடி நீங்கள் பெற்றவையும் புசியுங்கள் ..." (அல்குர்ஆன் 5:4) என்று கூறுவதன் மூலம் வேட்டையாடும் பிராணியை வளர்த்து, பயிற்சி அளிப்பதை நமக்கு அல்லாஹ் அனுமதித்திருக்கிறான்.
"வேட்டைக்குப் பயன்படுத்தப் படும் பிராணி" என்று குர்ஆன் பொதுவாகக் குறிப்பிட்டாலும் ஹதீஸ்கள் மூலம் "வேட்டைநாய்" என்ற தெளிவான சொல்லாக்கத்தில், வேட்டைக்காக நாய் வளர்ப்பதற்கு முஸ்லிம்களுக்கு அனுமதி கிடைக்கிறது:
''கால்நடைகளைக் காவல் காக்கும் நாயையும் வேட்டைக்கான பயிற்சி அளிக்கப்பட்ட நாயையும் தவிர, (வேறு காரணங்களுக்காக) நாய் வளர்ப்பவருடைய நற்செயல்களின் நன்மையிலிருந்து ஒவ்வொரு நாளும் இரண்டு கீராத்துகள் அளவுக்குக் குறைந்துவிடும்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் இப்னு உமர் (ரலி) நூல்கள்: புகாரி, 5480, 5482. முஸ்லிம், 3202)
"...விளை நிலங்களையும் காவல் காக்கும் நாய்களைத் தவிர'' என்று நபியவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்களின் அறிவிப்பில் கூடுதலாக இடம்பெற்றுள்ளது. (நூல்கள்: புகாரி 2322, 2324. (முஸ்லிம், 3211)
மேற்காணும் இரு நபிமொழிகளில் (1)வேட்டைக்கும் (2)காவலுக்கும் பயன்படுத்திக் கொள்வதற்கு முஸ்லிம்கள் நாய் வளர்க்கலாம் என்ற அனுமதி உண்டு. ஆனால், அந்த அனுமதி, மனிதர்களின் புழக்கத்துக்காகப் பயன்படுத்தப் படும் "வீட்டுக்கு உள்ளே நாயை வளர்ப்பதற்குத் தடை" என்ற கட்டுப்பாட்டோடு கூடியதாகும்:
ஜிப்ரீல், நபி(ஸல்) அவர்களிடம் (அவர்களின் வீட்டிற்கு தாம் வருகை தருவதாக) வாக்களித்திருந்தார். [ஆனால், வரவில்லை. நபி(ஸல்) அவர்கள் ஜிப்ரீல்(அலை) அவர்களிடம் அது பற்றிப் பின்னர் கேட்டபோது] "உருவப் படமுள்ள வீட்டிலும் நாய் உள்ள வீட்டிலும் (வானவர்களாகிய) நாங்கள் நுழைவதில்லை" என்றார். அவிப்பாளர் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) (நூல்: புகாரி, 3227).
நாய்கள் குறித்து அறிவிக்கப்படும் நபிமொழிகளிலிருந்து, ஃபேஷனுக்காக நாய் வளர்ப்பதையும் அதைச் செல்லப் பிராணியாக வீட்டில் அனுமதிப்பதையும் இஸ்லாம் முற்றாகத் தடைவிதித்துள்ளது என்பது தெளிவு. அதேவேளை, மனிதனுக்குப் பயன் இருப்பதால் காவலுக்காகவும் வேட்டையாடுவதற்காகவும் பயிற்சி அளிக்கப்பட்ட நாய் வளர்ப்பதில் தவறில்லை என்று நாம் விளங்க முடிகிறது.
இரண்டாவதாக, குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதற்காகவும் போதைப் பொருள் கடத்தல் தடுப்புக்காகவும் காவல்துறையினர் 'மோப்ப நாய்'களை வளர்க்கின்றனர். அவர்களுள் முஸ்லிம்களும் அடங்குவர். ஆனால், அவர்கள் 'மோப்ப நாய்'களை வீட்டுக்குள் வளர்ப்பதில்லை. எனவே, 'மோப்ப நாய்'கள், 'வேட்டை நாய்'களின் வரிசையில் வந்து விடுகின்றன.
இனி, உங்கள் கேள்வியான 'நாய் அன்பளிப்பு' பற்றிப் பார்க்கலாம்:
தமது பயன்பாட்டிற்காக காவல்/வேட்டை நாயை வைத்திருப்பவர் புலம்பெயர்ந்து செல்லும்போது தனது நாயை தன்னுடன் கொண்டு செல்ல முடியாமல், அல்லது காவல்/வேட்டைக்கு இனி நாயின் கட்டாயம் இல்லை என்றாகி விட்டால் காவலுக்கும் வேட்டைக்கும் நாய் தேவைப்படும் ஒருவருக்கு அந்த நாயை அன்பளிப்புச் செய்யலாம்.
''சம்பாத்தியத்திலேயே மோசமானவை விபச்சாரியின் வருமானம், நாய் விற்ற காசு, இரத்தம் உறிஞ்சி எடுப்பவர் பெறும் கூலி ஆகியவை ஆகும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் ராஃபிவூ பின் கதீஜ் (ரலி) (நூல்: முஸ்லிம், 3192, திர்மிதீ 1196).
ஃபேஷனுக்காக நாய் வளர்ப்பதற்குத் தடை இருப்பதால் அதை அன்பளிப்புச் செய்வது என்ற பேச்சுக்கே இடமில்லை.
வேட்டையாடுவது பாதுகாப்புத் தேவை ஆகிய இரண்டு காரணங்களுக்காக மட்டும் இஸ்லாத்தில் நாய் வளர்க்க அனுமதி உள்ளது. இது போன்ற காரணங்கள் இல்லாமல் செல்ல பிராணியாக நாய் வளர்ப்பதற்கு இஸ்லாத்தில் அனுமதி இல்லை.

"நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் : எவர் நாய் வைத்திருக்கின்ராரோ அவரது நர்செயல்களிலிருந்து ஒவ்வொரு நாளும் ஒரு கீராத் அளவிற்கு நன்மைகள் குறைந்து போய் விடும். விவசாய பண்ணையையோ கால்நடைகளையோ (திருடு போய் விடாமல்) பாதுகாப்பதற்காக வைத்திருக்கும் நாய்களைத் தவிர."  (புஹாரி : 2322).
நாயும் (உயிரினங்களின் சிலைகள் அல்லதுஉருவப் படங்களும்உள்ள வீட்டினுள் (இறைவனின் கருணையைக் கொண்டு வரும்)வானவர்கள் நுழைய மாட்டார்கள்.
இதை அபூ தல்ஹா (ரலிஅவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல் : புகாரி (3225)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்அவர்கள் வேட்டை நாய்களுக்கும்கால்நடைகளின் பாதுகாப்பிற்காக வைத்திருக்கும் நாய்களுக்கு மட்டும்அனுமதியளித்தார்கள்மேலும் "பாத்திரத்தில் நாய் வாய்வைத்துவிட்டால் ஏழு தடவை (தண்ணீரால்கழுவிக் கொள்ளுங்கள்.எட்டாவது தடவை மண்ணிட்டுக் கழுவுங்கள்'' என்று கூறினார்கள்.
நூல் : முஸ்லிம் (473)
"எந்த வீட்டில் நாயோ உருவப்படமோ உள்ளதோ அங்கு மலக்குகள் (வானவர்கள்) நுழைய மாட்டார்கள்என நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்:அபூ தல்ஹா(ரலி)நூல்கள்: புகாரிமுஸ்லிம்.
மேலும்"நாய் வளர்ப்பவர்கள் ஒவ்வொரு நாளும் இரண்டு கீரத் (இரு மடங்கு உகது மலையளவு) நன்மையை இழக்கின்றார்.என்றும் நபி (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்அறிவிப்பவர்:அப்துல்லாஹ் பின் உமர்(ரலி)நூல்: புகாரி.

மேற்கண்ட இரு செய்திகளின் வாயிலாக நாய் வளர்ப்பதற்கு இஸ்லாத்தில் அனுமதி இல்லை என்பதை நேரடியாக விளங்கிக் கொள்ளலாம்.

எனினும் இத்தடை விவசாயம்பாதுகாப்புவேட்டையாடுதல் போன்ற காரணங்களுக்காக நாய் வளர்ப்பதை தடை செய்யாது என்பதை கீழ்கண்ட செய்தியின் வாயிலாக அறிய முடியும்.

"விவசாயம்கால்நடை பாதுகாப்பு மற்றும் வேட்டையாடுதல் ஆகியவற்றிற்கு மட்டும் நாய் வளர்க்கலாம்" என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்அறிவிப்பவர்:அப்துல்லாஹ் பின் உமர்(ரலி),  நூல்கள்: முஅத்தா,திர்மீதிநஸயீ.

எனவே மேலே கூறப்பட்ட காரணமின்றி வீட்டில் நாய் வளர்க்க இஸ்லாத்தில் அனுமதி இல்லை என அறியலாம். 
கனடா ஒன்டாரியோவிலிருக்கும் டொரன்டோ இஸ்லாமியக் கல்விக் கழகத்தைச் சேர்ந்த இஸ்லாமிய அறிஞரும் விரிவுரையாளருமான ஷேக் அஹமது குட்டி அவர்கள் மேற்சொன்ன ஹதீஸ்களை ஆராய்ந்து பின்வருமாறு தெரிவிக்கிறார்:
நாய்கள் கீழ்க்கண்ட காரணங்களுக்காக மட்டுமே வளர்க்கப்படலாம்:
1. வேட்டைக்குப் பயன்படுத்துதல். (தற்போதைய கால கட்டத்தில் இது ஒத்து வராது. மேலும் இஸ்லாத்தில் பொழுதுபோக்கிற்காக வேட்டையாடுதல் தடை செய்யப்பட்டுள்ளது)
2. வழிகாட்டியாகப் பயன்படுத்துதல்.
3. காவல் துறையில் மோப்ப சக்தி மூலம் துப்பு துலக்க, வெடிகுண்டுகள், போதைப் பொருட்கள் கண்டுபிடிக்கப் பயன்படுத்துதல்.
4. சொத்துகளைப் பாதுகாக்கக் காவலுக்காகப் பயன்படுத்துதல்.
5. கால்நடைகளை ஓரிடத்தில் ஒன்றுதிரட்டப் பயன்படுத்துதல்
மேற்சொன்ன காரணங்கள் தவிர வெறுமனே செல்லப் பிராணியாக நாய்களை வளர்க்க இஸ்லாத்தில் அனுமதி இல்லை. இதற்கு மருத்துவ ரீதியான காரணங்கள் இருப்பதை ஜெர்மானிய அறிவியலார் முனைவர். கெர்ரார்டு ஃபின்ஸ்டிமர் தெளிவாக விளக்கியுள்ளார். 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

1.கணவனைக் கவரும் வழிகள் 40

பத்ருப் போர் உணர்த்தும் பாடமும் படிப்பினைகளும்!

மண்ணறை வேதனை 001