செவ்வாய், மே 29, 2012

இல்லறம் -பூத்துக் குலுங்க!திருமணம் என்பது மனிதர்கள் இழைப்பாற ஒதுங்கும் நந்தவனம் போன்றது, இன்னும் ஒவ்வொரு நாள் பொழுதினில் ஏற்படும் கஷ்டங்களையும், துன்பங்களையும் துடைத்து விடக் கூடிய ஆறுதல் அளிக்கும் தளமுமாகும். இஸ்லாம் இந்தத் திருமணத்தின் மூலமாக மட்டுமே எதிர்எதிர் பாலியல் கொண்டவர்களை இணைக்கின்றது. இஸ்லாம் இந்தத் திருமண பந்தத்தினை மிக அதிகமாகவே வலியுறுத்துவதோடு, அதில் பல அருட்கொடைகளும் உங்களுக்கு இருக்கின்றது என்று அறிவுறுத்துகின்றது.

"நீங்கள் அவர்களிடம் ஆறுதல் பெறுதற்குரிய (உங்கள்) மனைவியரை உங்களிலிருந்தே உங்களுக்காக அவன் படைத்திருப்பதும்; உங்களுக்கிடையே உவப்பையும், கிருபையையும் உண்டாக்கியிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்; சிந்தித்து உணரக்கூடிய சமூகத்திற்கு நிச்சயமாக, இதில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன."(அல்குர்ஆன் 30:21)

இஸ்லாம் வலியுறுத்தும் திருமணத்தின் நோக்கம் என்பது பல பயன்பாடுகளை உள்ளடக்கியுள்ளது. அது தனிமனிதர்களை தவறான கெட்ட நடத்தைகளிலிருந்தும், விபச்சாரத்தில் ஈடுபடுவதிலிருந்தும் பாதுகாக்கின்றது. இயற்கையிலேயே மனிதன் ஆசாபாசங்களில் தன்னை இழந்து விடக் கூடியவனாக இருக்கின்றான். இன்னும் ஷைத்தான் அவனது ஆசாபாசங்களைத் தூண்டி விட்டு, மனித இனம் வெட்கித்தலைகுனியக் கூடிய விபச்சாரத்தின் பக்கம் அழைத்துச் சென்று விடக் கூடியவனாகவும் இருக்கின்றான்.

பெண் ஷைத்தானைப் போலவே (மனதை மயக்கும் விதத்தில்) அணுகுகின்றாள், இன்னும் ஷைத்தானால் பீடிக்கப்பட்ட (மனதை மயக்கும் விதத்தில்) நிலையிலேயே வெளியேறுகின்றாள். உங்களில் ஒருவர் மனதை மயக்கும் விதத்தில் ஒரு பெண்ணைப் பார்ப்பீர்கள் என்றால், அவன் அவளது மனைவியிடம் செல்லட்டும், ஏனென்றால், மற்ற பெண்களிடம் உள்ளது போலவே உங்கள் மனைவியிடம் உள்ளது. அவன் தனது இச்சையை ஆகுமான வழியில் தீர்த்து திருப்தி கொள்ளட்டும். (முஸ்லிம்)
இரண்டாவதாக, திருமணத்தின் மூலம் வாரிசுகள் உருவாகி, அதன் மூலம் இஸ்லாமிய சமுதாயம் வளர்வதற்கு வாய்ப்பு ஏற்படுகின்றது. முறையான திருமண உறவு முறையின் மூலம் பெற்றெடுக்கின்ற மழலைச் செல்வங்களின் மூலம், இறைத்தூதர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ  அலைஹி வஸல்லம் அவர்களின் விருப்பத்தையும் நாம் நிறைவேற்றியவர்களாகின்றோம்.
அபூஹ{ரைரா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள் : இறைத்தூதர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ  அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள், "திருமணம் செய்து கொள்ளுங்கள், ஏனென்றால் (மறுமை நாளில்) மற்ற சமுதாயங்களைக் காட்டிலும் என்னுடைய சமுதாயத்தவர்கள் அதிகமாக இருப்பதைக் காண நான் விரும்புகின்றேன்." (பைஹகி).

இவை தான் இஸ்லாம் வலியுறுத்தும் திருமணத்தின் நோக்கமெனினும், இன்னும் பல சிறப்பு அம்சங்கள் அதனுள் பொதிந்து கிடக்கின்றன.
அதாவது ஒருவருக்கொருவர் அன்பு பாராட்டுவது, ஒருவர் மற்றவர் மீது கருணையோடும், இரக்கத்தோடும் நடந்து கொள்வது, இன்னும் ஒருவர் மற்றவரின் கெடுதல்களிலிருந்து பாதுகாப்புப் பெற்றுக்கொள்வது, அது மட்டுமல்ல இருவரும் இல்லறத்தை நல்லறமாக மாற்றுவதன் மூலம் நன்மையான பல காரியங்களை இணைந்து செய்வதற்கான சூழல் அங்கு நிலவ ஆரம்பிக்கின்றது, இருவருது அன்புப் பிணைப்பின் மூலமாக இஸ்லாமிய சமுதாயம் ஒரு பாதுகாக்கப்பட்ட சமுதாயமாக, பாதுகாப்புணர்வு கொண்ட சமுதாயமாக பரிணமிப்பதோடு, அங்கு பழக்க வழக்கங்களில் நன்னடத்தையும், சமூகம் மற்றும் உடல் ரீதியான ஆரோக்கியத்தையும் பெற்றுக் கொள்கின்றது.

துரதிருஷ்டவசமாக, மற்ற சமுதாயங்களைப் போலவே இன்றைக்கு முஸ்லிம் சமுதாயத்திலும் மணவிலக்குகள் அதிகரித்து வருவது மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது.

இன்றைக்கு நீங்கள் வாழக் கூடிய சூழலில் இவ்வாறான மணவிலக்குகள் அதிகமில்லாதிருந்தாலும் கூட, மேலே நாம் சொன்ன திருமணத்தின் காரணமாக விளையக் கூடிய நன்மைகள் தானாக விளைந்து விடுவதில்லை. மாறாக, அன்பு, பண்பாடுகள், பழக்க வழக்கங்கள், முயற்சிகள், இன்னும் ஒருவர் மீது ஒருவர் அக்கறை கொள்ளுதல், இவை அனைத்தையும் விட அற்பணிப்பு மனப்பான்மையுடன் ஒருவர் மற்றவரிடம் நடந்து கொள்ளுதல் போன்றவற்றின் மூலமாகத் தான் அத்தகைய நன்மைகளைப் பெற்றுக் கொள்ள முடியுமே தவிர, தானாக எந்த நன்மையும் விளைந்து விடுவதில்லை. அனைத்திற்கும் நமது முயற்சி இன்றியமையாததொன்றாக இருக்கின்றது.

இறைவன் தன்னுடைய திருமறையிலே கூறுவது போல, "உங்களுக்காக அவன் படைத்திருப்பதும்; உங்களுக்கிடையே உவப்பையும், கிருபையையும் உண்டாக்கியிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்;" (அல்குர்ஆன் 30:21)

கணவன் மனைவிக்கிடையே காதலும், கனிந்துருகச் செய்யும் விளையாட்டும் விடைபெற்று விடுமென்று சொன்னால், அதனை மீட்டிக் கொண்டு வருவதற்கு அங்கு கருணையும், சகிப்புத் தன்மையும், ஒருவர் மற்றவருக்கிடையே தொடர்புகள் நீடித்திருக்கச் செய்வதும் அவசியமானதாகும், இவை மூலம் விடைபெற்றுச் சென்ற காதலும், கனிந்துருகச் செய்யும் விளையாட்டுக்களும் அங்கு தலைத்தோங்க ஏதுவாகும். ஊடலுக்குப் பின் கூடல் என்பதுதான் உறவை இருகச் செய்யும் சாதனமாகும்.

தம்பதிகள் இருவரும் சந்தோஷமாக வாழ்வது என்பது அவர்களுக்கு மட்டும் நன்மை பயப்பதல்ல, மாறாக, அது உங்களது குழந்தைக்கும் சந்தோஷத்தைக் கொடுக்கும் அம்சமாக இருக்கின்றது. நீங்கள் உங்களுக்கிடையே ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து, அன்பு பாராட்டி, சகிப்புத் தன்மையுடன் நடந்து கொள்ளும் பொழுது, அந்தச் சூழலில் வாழக் கூடிய உங்களது குழந்தைகளும் இத்தகைய நற்பழக்கங்களைக் கற்றுக் கொண்டு, தங்களது வாலிப நாட்களில் அதனைக் கடைபிடிப்பதற்கான முன்மாதிரிகளைப் பெற்றுக் கொள்வார்கள் என்பது ஆய்வுகள் கூறும் முடிவுகளாகும். இன்னும் அமைதியான சூழ்நிலைகள் நிலவக் கூடிய இல்லறத்தில், வாழ்வின் வசந்தங்கள்என்றென்றும் பூத்துக் குலுங்கிக் கொண்டே இருக்கும். இது ஒன்றும் கடிமான விஷமுமல்ல, இதற்கென நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டிய அவசியமுமில்லை, உங்களது பழக்கவழக்கங்களில் சற்று மாறுதல்களைக் காண்பித்தாலே போதும், இல்லறத்தில் நல்லறங்கள் பூக்க ஆரம்பித்து விடும். அவற்றில் சிலவற்றை இங்கு நாம் காண்போம் :

ஒருவர் மற்றவர் உரிமைகளை மதித்து நடப்பது

உங்களது திருமணம் வெற்றிகரமான திருமணமாக பரிணமிக்க வேண்டுமென்றால், திருமணமான ஆண்-பெண் இருவரும், ஒருவர் மற்றவர் மீது என்னனென்ன உரிமைகள் இருக்கின்றன என்பதைப் பற்றித் தெளிவாக அறிந்து கொள்வதுடன், அவற்றை மதித்து நிறைவேற்ற கூடுதல் முயற்சி எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு கணவனின் மீது உள்ள உரிமைகள் என்னவென்றால், தன்னை நம்பி உள்ள குடும்பத்தினருக்கு தாய், தந்தை, மனைவி, பிள்ளைகள் போன்றவர்களுக்கான வாழ்வியல் தேவைகளை அதாவது, உடை, உணவு, உறையுள், கல்வி இன்னும் பல அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பது, அதற்கான பொருளாதாரத்தைத் திரட்டிக் கொடுப்பது.

இன்னும் குடும்பத் தலைவன் என்ற முறையில் குடும்பப் பராமரிப்பு அத்துடன் மார்க்க வழிகாட்டுதல்கள் மற்றும் குடும்பத்தினரிடையே ஒழுக்க மாண்புகளில் கவனம் செலுத்துதல் ஆகியவை கணவன் மீதுள்ள இன்றியமையாத கடமைகளாகும். இவை யாவும் அவன் மீதுள்ள தவிர்க்க முடியாத கடமைகளாகும்.

மனைவியைப் பொறுத்தவரையில், இறைவன் அனுமதித்துள்ள வரம்புகளைப் பேணுவதும், அதற்காக கணவனுக்குக் கட்டுப்பட்டு நடப்பதும், குடும்பப் பராமரிப்பு, குழந்தை வளர்ப்பு போன்றவற்றில் தனிக் கவனம் செலுத்துவதும் அவளது இன்றியமையாத கடமைகளில் ஒன்றாக இருக்கின்றது. இன்னும் பல பொறுப்புக்களை நிறைவேற்றக் கூடியவளாக அவள் இருந்தாலும், மேலே சொன்னவைகள் தான் அவளுக்குரிய அடிப்படைக் கடமைகள் என்பதை அவள் மறந்து விடக் கூடாது. இவற்றை அவள் நிறைவேற்றத் தவறுவாளாகில், அந்தக் கணத்திலிருந்து குடும்பத்தில் குழப்பங்கள் தலைதூக்க ஆரம்பித்து விடும், குடும்பச் சூழ்நிலை பாழ்பட ஆரம்பித்து விடும். குடும்பத்தில் அமைதி நீங்கி, புயல் வீச ஆரம்பித்து விடும். இத்தகைய சூழ்நிலைகளினால் அங்கு அன்பு அழிந்து, கருணையை இழந்து, ஒருவர் மற்றவரைப் பிணைக்கக் கூடிய நற்பண்புகளையும் இல்லாமலாக்கி விடும்.

எனவே தான், கணவன் மனைவி இருவரும் தங்களுக்குரிய கடமைகள் என்னவென்பதை ஆராய்ந்து, அதனை நிறைவேற்றுவதில் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும். ஒருவர் மற்றவர் மீது காட்டக் கூடிய அலாதியான அந்த அன்பு, அவர்களது இதயத்தைப் பிணைப்பதோடு, இறைவன் நாடினால் மேலும் மேலும் வசந்தம் வீசக் கூடிய தளமாக இல்லறம் மாறவும் வாய்ப்பு ஏற்படும்.

தனிமைச் சந்திப்புக்கு நேரம் ஒதுக்குதல்

இன்றைய உலகம் என்பது அவசர உலகம். அதனால் வாழ்க்கையை வாழ்வதற்குக் கூட நேரமில்லாமல் வாழக் கூடிய நிலைமையில் தான் இன்று நாம் இருந்து கொண்டிருக்கின்றோம். வாழ்வியல் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளவே இருக்கின்ற 24 மணி நேரம் போதவில்லை என்று அங்கலாய்ப்பவர்களைத் தான் நாம் பார்த்திருக்கின்றோம். ஆனால் அந்த 24 மணி அலுவல்களுக்கிடையிலும் உங்கள் மனைவிக்காகவும் சில மணித்துளிகளை ஒதுக்குங்கள். அதில் அவளுடன் தனிமையைப் பகிர்ந்து கொள்ளுங்கள். மிகவும் அவசியமில்லாத முக்கியத்துவமில்லாத எத்தனையோ விஷயங்களுக்காக நாம் நம் நேரத்தையும், பணத்தையும் செலவழிக்கத் தயாராக இருக்கின்றோம். ஆனால் திருமணம் எனும் பந்தத்தில் நம்முடன் இணைந்த அவளுடன், வாழ்நாள் முழுவதும் நம்மையே நம்பி வாழ்ந்து வரக் கூடிய அவளுக்கென சில மணித்துளிகளை செவழிப்பதற்குத் தயங்குகின்றோம்.

சில குடும்பங்களில் கணவனும் மனைவியும் தனிமையில் சந்திப்பதே ஒரு சில நிமிடத்துளிகள் தான். எனக்கு நேரமில்லை, நேரமில்லை, காலையில் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவது, அடுத்து வேலைக்குச் செல்வது, மாலையில் வீட்டுக்கு வருவது, உடன் அடுத்தடுத்த பணிகளுக்கு நேரத்தை ஒதுக்குவது இப்படியாக காலத்தை நகர்த்தக் கூடிய நாம், மனைவிகளுக்காகவும், பிள்ளைகளுக்காகவும் எந்தளவு நேரத்தை ஒதுக்கினோம் என்பதைப் பற்றிச் சிந்திப்பது நல்லது.

இன்றைக்கு பணம் வாழ்க்கையின் அடிப்படைத் தேவையாக மாறி விட்டது. பணம் தான் எல்லாம் என்ற மனநிலை மக்கள் மனதில் நோயாக மாறிக் கொண்டிருக்கின்றது. மனிதர்களது உணர்வுகளை பணத்தைக் கொண்டு திருப்திபடுத்தி விட முடியாது என்பதைப் புரியாதவர்களாக மனிதர்கள் மாறி விட்டிருக்கின்றார்கள். இதிலிருந்து தவிர்ந்து வாழ்வதற்கு உங்களது நேரங்களைத் திட்டமிட்ட அமைத்துக் கொள்ளுங்கள். நேர முகாமைத்துவம் ஒவ்வொரு மனிதர்களுக்கும் அவசியம். அவசர கால ஓட்டத்தில் உங்கள் மனைவிக்கும், பிள்ளைகளுக்கும் சில நேரத்துளிகளை ஒதுக்கித் தரும் பொழுது, பணம் தராத சுகத்தை உங்களது அருகாமை அவர்களுக்கு வழங்கும்.

அதிகாலை பஜ்ர் தொழுகைக்குப் பின் குடும்பத்தினர் அனைவருடனும் சிறிது நேரம் உட்கார்ந்திருப்பது, அல்லது இரவு சாப்பாட்டிற்குப் பின் சிறிது நேரம் குடும்பத்தினருடன் உட்கார்ந்திருப்பது ஆகியவற்றை பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.

நீங்கள் எந்தளவு பரபரப்பானவராக இருந்தாலும் சரி, குடும்பத்தினருக்காகவென ஒரு நேரத்தை ஒதுக்கி வைத்துக் கொள்வதன் மூலம் அவர்களது உணர்வுகளை நீங்கள் புரிந்து கொள்ள முடியும். அதன் மூலம் உங்களைப் பற்றி அவர்களும், அவர்களைப் பற்றி நீங்களும் அக்கறை கொண்டவர்களாக இருக்கின்றீர்கள் என்பதையும் உணர்த்த முடியும். உணர்வுகள் தான் மனிதனை உச்சத்திற்கும் கொண்டு செல்லும், அதே உணர்வுகள் தான் மனிதனை தாழ்நிலைக்கும் கொண்டு செல்லும்.

கவனிப்பு அல்லது அக்கறை

உங்களது திருமண பந்தம் நிலைத்திருக்க வேண்டுமா?! அப்படியானால், ஒருவர் மற்றவர் மீது அக்கறை கொண்டவர் என்பதை, ஒருவர் மற்றவருக்கு உணர்த்தத் தவறக் கூடாது.

உங்களது மனைவி சற்று தாகமெடுக்கின்றது என்று சொன்னால், உடனே சென்று ஒரு குவளைத் தண்ணீரைக் கொண்டு வந்து அவளுக்கு வழங்குங்கள். இல்லை, உங்களது கணவன் களைப்பாக இருக்கின்றது என்று சொன்னால், அவனது களைப்பு எதனால் ஏற்பட்டது என்று அறிந்து கொண்டு அதற்கான ஆறுதலைக் கூறுங்கள். எனவே, ஒருவர் மற்றவருக்கு இளைப்பாறும்
தளமாக மாறிக் கொள்ளலாம். இன்னும் ஒருவர் மற்றவரது சுமைகளைத் தாங்கிக் கொள்ள முன்வர வேண்டும். குடும்ப அலுவல்களில் மனைவிக்கு உதவுவது கணவனின் உதவி என்றால், கணவனின் அலுவல்களுக்கு இடையூறாக இல்லாமல், அவனது சிரமங்களைப் புரிந்து கொண்டு, அந்த சிரமங்களைச் சமாளிப்பதற்குண்டான ஊக்கத்தை வழங்குவது மனைவி புரியக் கூடிய உதவியாக இருக்கும்.

ஒருவர் மற்றவரது அலுவல்களின் சுமைகளை இறக்கி வைப்பதன் மூலம், வேலைப் பளு குறைவதோடு, இணக்கமான சூழ்நிலையும் நிலவ ஆரம்பித்து விடும். இதுவே உங்களது பிணைப்பை உறவை வலுப்படுத்தும்.

அமைதியாகப் பேசுவது, கவனமாகச் செவிமடுப்பது

தம்பதிகளுக்கிடையே பிரச்னை உருவாகுவது என்பது இருவருக்குமிடையே புரிந்துணர்வு இல்லாததே காரணமாகும். அதாவது உங்கள் இருவருக்கிடையே பேச்சுவார்த்தையே கிடையாது என்பதல்ல, மாறாக, அர்த்தமுள்ள பேச்சுக்கள் குறைவாக இருப்பது தான் பிரச்னைக்கே காரணமாகும்.

நீங்கள் உங்களுக்கிடையே உரையாடும் பொழுது, நீங்கள் இருவரும் தம்பதிகளாக இருக்கின்றீர்கள், அவள் மனைவி, இவன் கணவன் என்ற உணர்வு மேலோங்க வேண்டும். நீங்கள் ஒருவர் மற்றவரிடம் பேசும் பொழுது சப்தமிட்டு, உரத்த குரலில் பேசுகின்றீர்களா? அல்லது மிக மெதுவாகப் பேசுகின்றீர்களா? ஒருவர் பேசும் பொழுது மற்றவர், அவர் என்ன சொல்ல வருகின்றார் என்பதை நிதானித்து கவனிக்கின்றீர்களா? அல்லது அவர் என்ன சொல்வது நான் என்ன கேட்பது? என்ற அலட்சியப் போக்கில் இருக்கின்றீர்களா?

ஒருவர் மற்றவரிடம் பேச்சுக் கொடுக்க வரும் பொழுது, அவள் என் மனைவி, இவன் எனது கணவன், அவன் அல்லது அவள் என்னிடம் அர்த்தமுள்ள பேச்சைத் தான் பேச வருகின்றான் அல்லது வருகின்றாள் என்ற உணர்வுடன், ஒருவர் மற்றவரது பேச்சை அக்கறையுடன் செவிமடுக்க வேண்டும்.

அவள் அல்லது அவன் என்ன சொல்ல வருகின்றார் என்பதை நிதானத்துடன் கவனித்து, அதனை முழுவதுமாக கிரகித்து, அதற்கான பதிலை அல்லது ஆலோசனைகளை வழங்க வேண்டும். அந்த ஆலோசனைகள் கூட அறிவுறுத்தலாக இருக்க வேண்டுமே ஒழிய, கட்டளைத் தொணியில் இருக்கக் கூடாது. இதன் மூலம் வற்புறுத்தல் இல்லாத நிலை உருவாகுவதோடு, இருவருக்குமிடையே நல்லதொரு புரிந்துணர்வு ஏற்படும். புரிந்துணர்வே பல பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து விடும்.

இறைவனிடம் உதவி கேளுங்கள்

திருமணத்தின் மூலம் உங்கள் இருவரையும் கணவன் மனைவி என்ற அந்தஸ்திற்கு உயர்த்தியன், அல்லாஹ் தான், அவனே உங்கள் இருவருக்குமிடையே அன்பையும், பாசப் பிணைப்பையும் உருவாக்கி வைத்தான்.

இப்னு மஸ்ஊது (ரலி) அவர்கள் கூறினார்கள் : நிச்சயமாக அன்பு என்பது இறைவன் புறத்திலிருந்து உருவானது, வெறுப்பு என்பது ஷைத்தானிடமிருந்து வந்தது, அவன் தான் உங்களுக்கு அல்லாஹ் எதனை ஆகுமாக்கி வைத்திருக்கின்றானோ அதன் மீது வெறுப்பைத் திணிக்கின்றான்...எனவே, உங்கள் மனைவி மீதுள்ள அன்பு குறைகின்றதென்றால், நீங்கள் அல்லாஹ்வின் புறம் திரும்புங்கள், அவனே
அனைத்து நல்லறங்களையும் வழங்கக் கூடியவன், அவனிடமே உதவி கேளுங்கள், உங்கள் மனைவி மீது அன்பாக இருப்பதற்காகவும்..! இன்னும் அவளிடம் காணக் கூடிய கெட்ட நடத்தைகளின் பொழுது பாராமுகமாக இருப்பதற்காகவும்..! உங்கள் இதயங்களை இணைப்பதற்காகவும், இன்னும் நீங்கள் எதனை விரும்புகின்றீர்களோ அத்தனையையும் கேளுங்கள், அவனே உங்களது தேவைகளை நிறைவேற்றக் கூடியவனாகவும், உங்களது கோரிக்கைகளுக்கு செவிமடுக்கக் கூடியவனாகவும் இருக்கின்றான், அவற்றுக்குப் பதிலளிக்கக் கூடியவனாகவும் இருக்கின்றான்.

திருமணம் என்பது இஸ்லாமிய சமுதாய வாழ்வில் தவிர்க்க முடியாத, இன்றியமையாத சாதனமாகும். ஒவ்வொரு நாள் சுமையிலிருந்தும், கஷ்டங்களிலிருந்தும் நீங்கள் ஓய்வெடுக்கக் கூடிய தளமாக திருமணம் எனும் பந்தம் இருக்க வேண்டும். அது குளிருக்குக் கதகதப்பானதாகவும், வெயிலுக்கு இதமான குளிர்ந்த தென்றலாகவும் திகழ வேண்டும். அதன் மூலம் அன்பும், பாசமும் தளைத்தோங்க வேண்டும். ஒருவரை ஒருவர் சரியான அளவில் புரிந்துணர்வு கொண்டு செயல்பட வேண்டும். அதன் மூலம் பாசப்பிணைப்பில் மேலும் இறுக்கம் ஏற்பட வேண்டும்.

உங்கள் குடும்பங்கள் புயல் வீசுகின்ற தளமாக இருக்குமென்றால், மேலே சொன்ன அறிவுரைகளைச் செயல்படுத்திப் பாருங்கள், உங்களுக்கிடையில் இருக்கின்ற தவறுகளைக் களைந்து, கருணை எனும் இறக்கையைத் தாழ்த்திப் பாருங்கள். வசந்தம் எனும் வானம்பாடி பாடித்திரியும் நந்தவனமாக, பாச மலர்க் கூட்டமாக உங்கள் இல்லம் திகழக் கூடும். இறைவன் நாடினால்..!

எல்லாவற்றுக்கும் மேலாக அவனிடமே கையேந்துங்கள். அவனே, இதயங்களைப் புரட்டக் கூடியவனாக இருக்கின்றான்

பிரார்த்தனையின் ஒழுக்கங்கள்1.அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்வதற்குமுன்
    1. பிரார்த்தனை செய்வதற்கு முன் அல்லாஹ்வைப் போற்றிப் புகழவேண்டும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலவாத் கூறவேண்டும். அது ஏனெனில், நிச்சயமாக நீர் அல்லாஹ்விடம் அவனுடைய அருட்கொடைகளை, கருணைகளை, பாவமன்னிப்பை கேட்கப்போகிறீர். எனவே, அல்லாஹ்வுடைய தகுதிக்கேற்றவாறு எதிலே புகழ்வார்த்தையும், மேன்மைப்படுத்திப் பேசுதலும் இருக்குமோ அத்தகைய ஒரு முன்னுரையை நீர் முதலில் அவனுக்காக முற்படுத்துவதே இவ்விடத்தில் பொருத்தமான ஒரு செயலாக இருக்கும்.

    இதற்குச் சான்றாக பின்வரும் நபிமொழியைப் பாருங்கள்!
   அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அமர்ந்திருந்தபோது, ஓர் ஆடவர் அந்நேரம் வந்தார். தொழுது முடித்தார். பின்னர், யாஅல்லாஹ்! எனக்கு நீ பாவம் பொருத்தருள்வாயாக! எனக்கு நீ அருள் செய்திடுவாயாக! என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், தொழுது முடித்தவரே! நீர் அவசரப்பட்டுவிட்டீர்! நீர் தொழுது முடித்தால் அல்லாஹ் அவனுக்குத் தகுந்தவைகளைக் கொண்டு புகழ்வீராக! பின்னர் என்மீது ஸலவாத்துக் கூறுவீராக! பின்னர் அவனிடம் பிரார்த்திப்பீராக!

    அறிவிப்பாளர் கூறுகிறார்:
பின்னர் அவரை அடுத்து ஒரு ஆடவர் தொழுது முடித்தார். அல்லாஹ்வைப் போற்றி புகழ்ந்தார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலவாத்தைக் கூறினார். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அவரிடம், தொழுது முடித்தவரே! துஆச் செய்வீராக! (ஒரு சமயம் உம்முடைய துஆ அங்கீகரிக்கப்பட்டு) நீர் பதிலளிக்கப்படலாம் என்று கூறினார்கள். அறிவிப்பாளர்: ஃபுளாலத் பின் உபைத் ரளியல்லா அன்ஹு, நூல்: திர்மிதீ

    2. அல்லாஹ்ப்பற்றி நல்லெண்ணம் கொள்ளுதல்
    உயர்வானவனாகிய அல்லாஹ்,

(البقرة )   وَإِذا سَأَلَكَ عِبَادِيْ عَنِّي فَإِنِّيْ قَرِيْبٌ أُجِيْبُ دّعْوَةَ الدَّاعِى إِذَا دَعَانِ  
    மேலும் , (நபியே!) என்னுடைய அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால், நிச்சயமாக நான் சமீபத்தில் இருக்கிறேன் (என கூறுவீராக!). அழைப்பாளனின் அழைப்பிற்கு  அவன் என்னை அழைக்கும்போது நான் பதிலளிக்கிறேன் என்று கூறினான். (அல்பகறா:186)اَللّهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنْ شَرِّ مَا عمِلْتُ وَشَرِّ مَالَمْ أَعْمَلْ
அல்லாஹும்ம! இன்னீ அஊது பிக மின் ஷர்ரி மா அமில்த்து, வ ஷர்ரி மாலம் அஃமல் என்று துஆச்செய்பவர்களாக இருந்தார்கள் என்று கூறினார்கள்.
    எனவே, அல்லாஹ் நம்மிலிருந்து மிகச் சமீபமாக இருக்கிறான். அவனுடைய அறிவு, எல்லாவற்றையும் ஒன்றுவிடாமல் அவன் சூழ்ந்து அறிதல், அவனுடைய பாதுகாப்பு ஆகியவற்றால் அவன் நம்மோடு இருக்கிறான் என்ற எண்ணம் மேலோங்கி இருக்கவேண்டும்.
    திட்டமாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், துஆவை ஏற்றுக்கொள்ளுதல் என்ற விஷயத்தை அல்லாஹ்விடம் நாம் ஒப்படைத்து விடவேண்டும் எனவும், நாம் துஆச் செய்து கேட்ட நம்முடைய எண்ணம் நிறைவேறும் என்பதில் நாம் உறுதியாக இருக்கவேண்டும் எனவும் நமக்கு கட்டளையிட்டுள்ளார்கள்.
    அல்லாஹ்வின்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
   (உங்களுடைய பிரார்த்தனை அல்லாஹ்வால்) ஏற்றுக்கொள்ளப்படும் என்பதை உறுதி கொண்டவர்களாக அல்லாஹ் அழைத்துப் பிரார்த்தனை புரியுங்கள். அறிவிப்பாளர்: அபூஹுரைரா  ரளியல்லாஹு அன்ஹு, நூல்: திர்மிதீ

    நிச்சயமாக அல்லாஹ், அவனுடைய விசாலமான தயாளத்தனத்தாலும், பேருபகாரத்தின் சிறப்பாலும் உங்களை எப்போது பிரார்த்தனைச் செய்பவரிடமிருந்து பேராதரவும் பிரார்த்தனையில் தூய்மையான எண்ணமும் ஏற்பட்டுவிடுமோ வெறுங்கையோடு திருப்பமாட்டான் என்பதை உறுதியாக நம்பிக்கைக் கொள்ளுங்கள். ஏனெனில், பிரார்த்தனை புரிபவர் (அல்லாஹ் நமது துஆவை ஏற்பான் என்ற) அவருடைய பேராதரவில் உறுதிகொண்டவராக இல்லையென்றால் அவருடைய துஆவும் தூய்மையானதாக அமையாது.
    3. நமது பாவங்களை ஒப்புவித்தல்    இந்தச் செயலே அல்லாஹ்வுக்குரிய நமது அடிமைத்தனத்தை நிரூபணம் செய்வதில் முழுமையானதாகும்.
    அல்லாஹ்வின்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
    நிச்சயமாக அல்லாஹ், வணக்கத்திற்குரிய நாயன் உன்னையன்றி வேறு (யாரும், எதுவும்) இல்லை. நிச்சயமாக நான் எனக்கே அநீதி இழைத்துவிட்டேன். எனவே, என் பாவங்களை எனக்கு நீ பொருத்தருள்வாயாக! என்று ஒரு அடியான் கூறும்போது, அவனைப்பற்றி பெருமிதங்கொள்கிறான். என்னுடைய அடியான் நிச்சயமாக அவனுக்கு ஒரு இரட்சகன் இருக்கிறான், அவன்தான் பாவங்களை பொருத்தருள்வான். (பாவிகளுக்கு) தண்டனை வழங்கிடுவான் என்பதை அறிந்து கொண்டான் என்று (அல்லாஹ் வாகிய) அவன் கூறுகிறான். அறிவிப்பாளர்: அலீ பின் அபீதாலிப் ரளியல்லாஹு அன்ஹு, நூல்:ஹாகிம்

    4. கேட்பதில் உறுதி 
    உங்களில் ஒருவர் பிரார்த்தனைச் செய்யும்போது கேட்பதை உறுதியாகக் கேட்கட்டும். யாஅல்லாஹ்! நீ நாடினால் கொடு என திண்ணமாக அவர் சொல்லவேண்டாம். ஏனெனில், அவனை நிர்ப்பந்திக்கச் செய்பவர் யாரும் இல்லை என அல்லாஹ்வின்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அனஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்:புகாரீ, முஸ்லிம்

    கேட்பதில் உறுதி என்பதன் நோக்கமாவது, தேடிப் பெறுவதில் நிரந்தரமாக நிலைத்து சளைக்காமல் பிடிவாதமாக மன்றாடிக் கேட்பது, அல்லாஹ்விடம் மிகக் கடுமையாக தெண்டித்துக் கேட்குதலைக் குறிப்பதாகும்.
    5. பிரார்த்தனையில் கடுமை
    ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களுக்குரிய ஒரு போர்வை திருடப்பட்டுவிட்டது. அதைத் திருடியவருக்கெதிராக துஆச் செய்பவர்களாக இருந்தார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், (திருடியதால் அவருக்குண்டான பாவத்தை அவருக்குக் கேட்பதில்) அவர் விஷயத்தில் மென்மையைக் கையாளவேண்டாம் என்று கூறினார்கள். (நூல்:அபூதாவூது)

    6. ஒன்றை மூன்று முறை கேட்டு துஆச் செய்தல்
    நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், தமது தொழுகையை முடித்துக் கொண்ட போது, தனது தொணியை உயர்த்தி பின்னர் (பகைவர்களான) அவர்களுக்குக் கேடாக பிரார்த் தனை செய்தார்கள். அவர்கள் எதையும் பிரார்த்தனைச் செய்பவர்களாக இருந்தால் மூன்று முறை துஆச் செய்வார்கள். யாஅல்லாஹ்! குரைஷியரை நீ பிடித்துக்கொள்! யாஅல்லாஹ்! குரைஷியரை நீ பிடித்துக்கொள்! யாஅல்லாஹ்! குரைஷியரை நீ பிடித்துக்கொள்! என பின்னர் கூறினார்கள் என்று இப்னு மஸ்ஊது ரளியல்லாஹு அன்ஹு அவர்களுடைய அறிவிப்பில் முஸ்லிமில் வந்துள்ள நீளமான ஹதீஸில் நபிவழியில் இது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

    7. ‘ஜவாமிஉ’ (சுருக்கமான வார்த்தையில் விசாலமான அர்த்தங்களைக் கொண்டுள்ள) துஆக்களைக் கூறி பிரார்த்தனைப் புரிதல்
    ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கிறார்கள்:
    நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் துஆக்களில் நிறைய பொருளை தரும் சுருக்கமான வார்த்தைகளை விரும்புபவர்களாகவும் அதுவல்லாத வார்த்தைகளை கூறாது விட்டு விடுபவர்களாகவும் இருந்தனர். நூல்: ஸன்னன் அபீதாவூது, அஹ்மது
    இதுமாதிரியான பிரார்த்தனைகளில் உள்ளதே ஃபர்வா பின் நவ்ஃபல் அவர்கள் அறிவிப்பில் வந்துள்ள ஒன்று.
    நான் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எதைக்கொண்டு துஆச் செய்பவர்களாக இருந்தார்களோ அப்படியான ஒரு துஆவைப்பற்றி நான் கேட்டேன்.
    (பொருள்: யாஅல்லாஹ்! நான் செய்து விட்டவற்றின் தீங்கிலிருந்தும் மற்றும் நான் செய் யாதவற்றின் தீங்கிலிருந்தும் உன்னிடம் நான் காவல் தேடுகிறேன்) நூல்: முஸ்லிம், அபூதாவூது
اَللَّهُمَّ اغْفِرْ لِيْ خَطِيئَتِيْ وَجَهْلِيْ وَإِسْرَافِيْ فِي أِمْرِيْ وَمَا أَنْتَ أَعْلَمُ بِهِ مِنِّيْ اَللَّهُمَّ اغْفِرْ لِيْ جِدِّيْ وَهَزْلِيْ وَخَطَئِيْ وَعَمْدِيْ وَكُلُّ ذَلِكَ عِنْدِيْ ، اَللَّهُمَّ اغْفِرْ لِيْ مَا قَدَّمْتُ وَمَا أَخَّرْتُ وَمَا أَسْرَرْتُ وَمَا أَعْلَنْتُ وَمَا أَنْتَ أَعْلَمُ بِهِ مِنِّيْ أَنْتَ الْمُقَدِّمُ وَأَنْتَ الْمُؤَخِّرُ وَ أَنْتَ عَلى كُلِّ شَيئٍ قَدِيْرٌ
    அல்லாஹும்மக் ஃபிர்லீ கதீஅதீ, வ ஜஹ்லீ, வ இஸ்ராஃபீ ஃபீ அம்ரீ, வமா அன்த்த அஃலமு பி?ி மின்னீ, அல்லாஹும்மக் ஃபிர்லீ ஜித்தீ வ?ஜ்லீ, வ கதஈ, வ அம்தீ, வ குல்லு தாலிக இன்தீ, அல்லாஹும்மக் ஃபிர்லீ மா கத்தம்த்து, வமா அக்கர்த்து, வமா அஸ்ரர்த்து, வமா அஃலன்த்து, வமா அன்த்த அஃலமு பிஹி மின்னீ அன்த்தல் முகத்திமு, வஅன்த்தல் முஅக்கிரு, வ அன்த்த அலா குல்லி ஷையின் கதீர் என இந்த துஆவைக் கூறி பிரார்த்தனை புரிபவர்களாக நிச்சயமாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இருந்தார்கள் என அபூமூஸப் அல் அஷ்அரீ – ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள். நூல்: முஸ்லிம்رَبَّـنَا اغْفِرْ لَنَا وَلِإِخْوَانِنَا الَّذِيْنَ سَبَقُونَا بِالْإِيْمَانِقَالَ رَبِّ اغْفِرْ لِيْ وَلِأَخِيْ وَأَدْخِلْنَا فِيْ رَحْمَتِكَ وَأَنْتَ أَرْحَمُ الرَّاحِمِيْنَرَبَّنَا اغْفِرْ لِيْ وَلِوَالِدَيَّ وَلِلْمُؤْمِنِيْنَ يَوْمَ يَقُوْمُ الْحِسَابُ
    (பொருள்: யாஅல்லாஹ்! என்னுடைய தவறை, எனது அறியாமையை, எனது காரியத்தில் வீண்விரயத்தை, என்னைவிட நீ அறிந்திருக்கும் ஒன்றை எனக்கு நீ பொருத்தருள்வாயாக!
    யாஅல்லாஹ்! என்னுடைய முயற்சி(யால் ஏற்பட்டதை), என்னுடைய சோர்வு, என்னுடைய தவறு, வேண்டுமென்றே தெரிந்து என்னால் செய்யப்பட்டது, என்னிடமுள்ள அவை ஒவ்வொன் றையும் நீ எனக்கு பொருத்தருள்வாயாக!
    யாஅல்லாஹ்! நான் முற்படுத்தியவற்றை, நான் பிற்படுத்தியவற்றை, நான் மறைத்தவற்றை, நான் பகிரங்கப்படுத்தியவற்றை, நான் விரயம் செய்தவற்றை, என்னை விட நீ எதை மிக அறிந்திருக்கின் றாயோ அந்த ஒன்றை நீ எனக்கு பொருத்தருள்வாயாக! நீதான் (நன்மைகளைச் செய்ய) முற்படுத்தி வைப்பவன், நீயே (தீயவற்றைச் செய்யாது காத்து) பிற்படுத்திவைப்பவன், நீயே ஒவ்வொரு பொருளின் மீதும் பேராற்றலுள்ளவன்.)
    8. பிரார்த்தனை புரிபவர் தனக்காக முதலில் கேட்பார்
    உயர்வானவனின் கூற்றில் வந்துள்ளவற்றைப் போன்று:-

    எங்களுடைய இரட்சகனே! எங்களுக்கும், ஈமான் கொண்டு எங்களை முந்திவிட்டார்களே அத்தகையோரான எங்களுடைய சகோதரர்களுக்கும் நீ பொருத்தருள்வாயாக! அல்ஹஷ்ரு: 10
    இன்னும் அவனுடைய கூற்று:-
    எனது இரட்சகா! எனக்கும் என்னுடைய சகோதரருக்கும் நீ பொருத்தருள்வாயாக! மேலும், எங்களை உன்னுடைய ரஹ்மத்தில் நுழைவிக்கச் செய்திடுவாயாக! என்று (நபி மூஸப்) அவர்கள் கூறினார்கள். அல் அஃராஃப்:151
இன்னும், அவனுடைய கூற்று:-
    எங்கள் இரட்சகா! எனக்கும், என்னுடைய பெற்றோர்களுக்கும், விசுவாசிகளுக்கும் கேள்வி கணக்கு நிலைபெறும் நாளில் பொருத்தருள்வாயாக! இப்றாஹீீம்:41
    நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் ஸல்லல் லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் யாரை யாவது நினைவுகூர்ந்து, அவருக்காக பிரார்த்தனை புரிவார்களானால் தனக்காக அதை முதலில் கேட்டு ஆரம்பிப்பார்கள். (திர்மிதீ)
    எனினும், இது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய கட்டாயமான வழக்கமாக இருந்ததில்லை. ஏனெனில், சில சமயங்களில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அடுத்தவருக்கு துஆச் செய்து கேட்டதை தனக்கு கேட்காமல் துஆச் செய்திருப்பதும் சரியான வழியில் வந்துள்ளது (நபி இப்றாஹீம் அவர்களின் துணைவியர்) ஹாஜர் விஷயத்தில், ‘இஸ்மாயீலின் தாயாருக்கு அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக! ஜம்ஜம் (நில்நில்)என்று சொல்வதை விட்டிருப்பார்களானால் (ஜம்ஜம் ஊற்றான) அது பெருக்கெடுத்து ஓடிவிடும் ஒரு பெரும் ஊற்றாக ஆகியிருக்கும் என்று கூறியது போன்று!
    9. துஆச் செய்ய விரும்பத்தக்க நேரங்களில் துஆச் செய்ய முயற்சிப்பது 
    அவ்வாறான நேரங்களில் உள்ளதே நடு இரவு, பாங்கு மற்றும் இகாமத்துக்கு இடையேயான நேரம், ஸஜ்தாவில், (போருக்கு) அழைக்குமிடத்தில், போர் சமயத்தில், ஜும்ஆ தினத்தின் அசருக்குப்பின், அரஃபா நாள், மழை பொழியும் நேரம், ரமளானின் கடைசி பத்து நாட்கள்

அல்குர்ஆன் உயிருடன் உள்ளவனுக்கா? மரணித்தவனுக்கா?


இவருக்கு (முஹம்மத் நபிக்கு) கவிதையை நாம் கற்றுக் கொடுக்கவில்லை. (அது) அவருக்கு தேவையுமில்லை. இது அறிவுரையும் தெளிவான குர்ஆனும் தவிர வேறில்லை.
உயிருடன் உள்ளவரை எச்சரிப்பதற்காகவும் (நம்மை) நிராகரிப்போருக்கு எதிரான கட்டளை உறுதியாவதற்காகவும் (இதை அருளினோம்) (சூரா யாஸீன்: 69-70).

கண்ணியமும் மகத்துவமுமிக்க அல்லாஹ்வின் இந்த வார்த்தைகள் மிகவும் தெளிவானது. உயிருடன் நடமாடிக் கொண்டு (வாழ்ந்து கொண்டு) இருப்பவனுக்கு வழிகாட்டியாக அருளப்பட்டதுதான் இக் குர்ஆன்.
அல் குர்ஆன் 23 வருடங்கள் நபி (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்டது. மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கும் மக்கள் சந்திக்கின்ற பிரச்சனைகளுக்கு தீர்வாகவும் அருளப்பட்டது. குடும்ப வாழ்க்கை சமூக வாழ்க்கை தனிமனித வாழ்க்கை அரசியல் பொருளாதாரம் என்று ஒவ்வொரு துறைக்கும் தெளிவுரையாக அல்குர்ஆன் அருளபட்டது. பூரணமான வாழ்க்கை திட்டத்திற்கு; வழிகாட்டியாக அருளப்பட்ட இக்குர்ஆனை உயிரோடு நடமாடுகின்ற மனிதனுக்கு ஓதிகாட்டி வழிநடாத்த வேண்டும். அப்போது அவனது வாழ்க்கை இறை திருப்;திக்கு உட்பட்டதாக அமையும். 
மனிதன் வாழ்வதற்கான அறிவுரைகள் மிகத் தெளிவாக குர்ஆனில் சொல்லப்பட்டி ருக்கிறது. அல்லாஹ்வின் கட்டளைகளை மீறி நடப்பவனுக்கு ஏற்படும் அபாயங்கள் பற்றியும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. எனவே எக்காரணம் கொண்டும் மனிதன் அல்லாஹ்வின் அறிவுரைகள், போதனைகள் வழிகாட்டிகள் நிறைந்த இக் குர்ஆனை ஒதுக்கி விட்டு வாழ முடியாது. அவனுடைய முழுமையான வாழ்வும் இக்குர்ஆனின் போதனைகளுக்கேற் பவே அமைய வேண்டும். 
மனிதனுடைய விருப்பு வெறுப்புகளுக்கு முன்னுரிமை வழங்குவதை விட அவனை படைத்து பரிபாலிக்கும் அல்லாஹ்வின் வெறுப்பு விருப்புகளுக்குத்தான் முதலிடம் வழங்க வேண்டும். 
அல்லாஹ்வை கடவுளாக இறைவனாக ஏற்றுக் கொண்டால் அந்த அல்லாஹ்வின் உத்தரவுகளுக்கே அடிபணிய வேண்டும். எனவே மனிதன் குர்ஆனை விட்டு ஒதுங்கி வாழ முடியாது. 
உயிருடன் உள்ளவனுக்குத்தான் இக் குர்ஆன் அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறதே தவிர மரணித்தவனுக்கு உபதேசிக்க வில்லை. மரணத்துக்கு முன்னால் திருந்தி நல்லவனாக வாழ வேண்டும் என்று பணிக்கிறதே தவிர மரணத்துக்கு பின்னால் அவனுக்கு ஓதிக்காட்ட வேண்டும் என்று பணிக்கவில்லை. 
மரணத்திற்குப் பின், அவன் எப்படி வாழ்ந்தான்? குர்ஆனின் போதனை படி நடந்தானா? நபிகளாரின் வழிமுறைப்படி வாழ்ந்தானா? என்ற கேள்விகளுக்குதான் அல்லாஹ்விடம் பதில் சொல்ல வேண்டியவனாக உள்ளான்.
மண்ணறையில் (கப்ரில்) வைக்கப்பட்டவுடன் இரண்டு மலக்குகள் வந்து கேள்வி கேட்பார்கள். உனது ரப்பு யார்? உனது மார்க்கம் எது? உனக்கு அனுப்பப்பட்ட நபி யார்? என்று மூன்று கேள்விகள் கேட்கப் படும். இக்கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டுமானால் திருமறை குர்ஆனை ஓதி படித்து அதன்படி நடந்தால்தான் சாத்தியமாகும். 
இந்த மூன்று கேள்விகளுக்கும் பிறகு மற்றொரு கேள்வியுமுண்டு. அதுதான் அல்லாஹ்தான் ரப்பு, இஸ்லாம்தான் மார்க்கம், முஹம்மத் நபி தான் அனுப்பப்பட்ட தூதர் என்பதை எப்படி அறிந்து கொண் டாய்? என்று மலக்குகள் கேட்பார்கள். 
‘நான் குர்ஆனை நம்பினேன் படித்தேன்’ என்று (நல்லவனாக வாழ்ந்தவன்) பதில் சொல்வான் என்பதை நபியவர்கள் விளக்கப் படுத்துகிறார்கள். 
குர்ஆன் படி வாழ்ந்தால் தான் மலக்கு களின் நான்காவது கேள்விக்கு உரிய பதில் வழங்க முடியும் என்பதை ஹதீஸ் தெளிவு படுத்துகிறது. 
குர்ஆன் போதனைப்படியும் நபிகளாரின் ஸுன்னா படியும் வாழாமல் தான் நினைத்த படி வாழ்ந்து விட்டுப் போனால் தப்ப முடியாது. மையத்தை அடக்கிய பின் தலை மாட்டில் ஒருவர் குந்திக் கொண்டு தல்கீன் எனும் பெயரில் கேள்வி பதில் அடிப்படையில் பாடம் சொல்லித் தருவதாலும் வெற்றி பெற முடியாது. அவரவர் வாழ்ந்த முறைப்படிதான் அந்த கப்ரில் பதில் சொல்ல வேண்டி வரும். நன்மை தீமைக்கான கூலிகளைப் பெறமுடி யும். (தல்கீன் ஓதும் முறை நபிகளார் காட் டிய வழிமுறையல்ல).
உயிருடன் உள்ளவருக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்ய வந்த குர்ஆனை வாழ் ந்து மரணிக்கின்றவனுக்கு ஓதி முடிக்கின்ற சோகமான காட்சியை பார்க்கிறோம். அதிலும் குறிப்பாக யாசீன் சூராவை ஓதி வருகிறார்கள். உயிருடன் உள்ளவரை எச்சரிப்பதற்காகவும் நிராகரிப்போருக்கு எதிரான கட்டளை உறுதியாவதற்காகவும்; அருளப்பட்ட தாக கூறப்படும்; அதே யாசீன் சூராவின் வசனத்தை மரணித்தவருக்கு முன்னால் ஓதிக் கொண்டிருக்கிறார்கள். 3, 7, 15, 30, 40, 60 என்று நாட்களை ஒதுக்கியும் வருடத்திற்கு ஒரு முறை என்று கணக்கு பார்த்து கத்தம் கொடுப்பதற்கும் இந்த யாஸீன் சூரவையே ஓதுகிறார்கள். ஆனால் நபி (ஸல) அவர்கள் எந்த சஹாபியின் மரண வீட்டுக்கும் போய் இவ்வாறு ஓதியதுமில்லை கத்தம் சாப்பிட்டதுமில்லை. என்பதை இவர்கள் தெரிந்து கொள்ள வில்லை.
உயிருடன் உள்ளோரும் மரணித்த வரும் சமமாக மாட்டார்கள் (35:22) என்று அல்லாஹ் கூறுகிறான். 
உயிருடன் உள்ளவனுக்கு ஓதிக் காட்டி போதனை செய்யக் கடமைப்பட்டவர்கள் அப்படி செய்யாமல் உயிரற்ற சிந்திக்க திரனற்ற எழுந்து நடக்க சக்தியற்ற மையத்துக்கு முன்னால் இந்த வசனத்தை (குர் ஆனை) ஓதிக் காட்டுகிறார்கள். கொஞ்சம் சிந்திக்கக் கூடாதா?
அல்லாஹ்வின் கட்டளைகளை போத னைகளை எடுத்து நடக்காத பல சமூகத்த வர்கள் அழிக்கப்பட்ட வரலாற்றை அல்லாஹ் சூராதுல் கமர் எனும் 55ஆவது அத்தியா யத்தில் தெளிவுபடுத்துகிறான். 
இந்த ஒவ்வொரு சமுதாயத்தவர்களுக்கும் நபிமார்கள் அனுப்பப்பட்டார்கள். நபிமார் களுடைய வழிகாட்டல்களை அலட்சியப் படுத்தி வாழ்ந்ததன் காரணமாகவே இவர் கள் தண்டிக்கப்பட்டார்கள் என்று அல்லாஹ் விபராமாக தெளிவுபடுத்திய பின் ‘இக்குர்ஆனை விளங்குவதற்கு எளிதாக்கி யுள்ளோம். படிப்பினை பெறுவோர் உண்டா? என இந்த உம்மைத்தைப் பார்த்து அல்லாஹ் கேட்கிறான். 
இந்த அத்தியாயத்தில் நான்கு இடங்களில் இக்கேள்விகளை திரும்பத் திரும்ப கேட்கிறான். (54:17,22,32,40)
அல்லாஹ்வின் வழிகாட்டல் அடங்கிய போதனைகளை நபிமார்கள் சொல்லிக் காட்டியபோது அதனை ஏற்று பின்பற்றாத வர்கள் அழிக்கப்பட்டார்கள். இந்த அழிவிலி ருந்து முஸ்லிம்கள் படிப்பினை பெறுவதற் காகவும், முன்னைய நபிமார்களின் சமூக மக்களுக்கு வந்த அழிவு முஹம்மத் நபியின் சமூகத்தாருக்கு ஏற்படக் கூடாது என்பதற் காகவுமே ”அல்குர்ஆனை விளங்குவதற் காக எளிதாக்கியுள்ளோம், படிப்பினை பெறுவோர் உண்டா? என அல்லாஹ் கேட்கிறான். 
அல்குர்ஆனை விளங்கி பின்பற்றாவிட்டால் இந்தச் சமூகமும் அழிக்கப்படும் என்ற செய்திதான் எச்சரிக்கையாகச் சொல்லப் பட்டுள்ளது. எனவே உயிருடன் உள்ள ஒவ்வொருவரும் இக்குர்ஆனை ஏற்று விளங்கி செயல்படுவதைத் தவிர தண்டனை யிலிருந்து தப்புவதற்கு வேறு வழியில்லை. 
(குறிப்பு: மவ்தானவர்களுக்கு யாசீன் ஓத வேண்டும் என்று பல செய்திகள் உள்ளன. அதனாலேயே ஓதுகிறோம் என சிலர் கூறுகிறார்கள். ஆனால் நபி (ஸல்) அவர்கள் அப்படி சொன்னதாகச் செய்த தாக ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் எதுவு மில்லை. மவ்தாகியவர்களுக்கு குர்ஆன் ஓத ஆர்வம் காட்டுபவர்கள் உயிருடன் இருக்கும்போது ஓதி விளங்கி செயல்பட ஏன் அவசரம் காட்டக் கூடாது?)

ஜின்களை உணர்வது எப்படி?

ஜின் எனும் படைப்பு! 
இந்த உலகத்தில் எத்தனையோ ஜீவராசிகளை படைத்துள்ள அல்லாஹ் கண்ணுக்குத் தெரியாத படைப்புகளையும் படைத்துள்ளான் காற்று நெருப்பு நீர் மேகம் உயிர் இவைகளில் சிலதை உணரலாம் சிலதை உணரமுடியாது அப்படி மனித கண்ணுக்குத் தெரியாத ஒரு படைப்புதான் ஜின் என்பதாகும்
இஸ்லாத்தின் மிக முக்கிய நம்பிக்கையில் ஒரு நம்பிக்கை ஜின்களுக்கு இறைச்செய்தி அறிவித்து அவர்களும் அல்லாஹ்வின் விலக்கள் ஏவல் கட்டளை உண்டு என்பதையும் அவர்களிலிலும் இறை அடிமைகளும் இறை நிறகரிப்பாளர்கள் உண்டு என்பதையும் அவர்களுக்கும் நமக்கும் சேர்த்தே இறுதி தூதராக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இருக்கிறார்கள் என்று நம்புவதாகும்.

இப்படி ஒரு படைபினம் இருப்பதை திருகுர் ஆன் கூறுகிறது
ஜின்களில் ஒரு கூட்டத்தார் (இந்தக் குர் ஆனை) செவியுற்று நாங்கள் ஆச்சரியமான குர் ஆனை செவியுற்றோம் எனக்கூறியதாக எனக்கு அறிவிக்கப்பட்டது என கூறுவீராக! அது நேர்வழியைக் காட்டுகிறது எனவே அதை நாங்கள் நம்பினோம் எங்கள் இறைவனுக்கு எவரையும் இணையாக்க மாட்டோம், குர் ஆன் 72:1,2, என அவர்களும் இந்த இஸ்லாமிய மார்கத்தை நெறியாக கொண்டிருக்கிறார்கள் என விளங்குகிறது.

இவ்வாறு ஒரு படைபினம் இருப்பதை நாம் பார்க்க முடியாவிட்டாலும் அறிய முடிகிறது அது எவ்வாறு அறிய முடிகிறது என்பதே இந்தக் கட்டுரைக்காண ஆய்வு தொழுகையில் புகுந்து நமது இபாதத்தை கெடுப்பற்க்கென்றே ஒரு இபுலீஸ் இருக்கிறான் அவன் பெயர் ஹின்ஸப் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். இந்த ஹதிஸ்ஸில் சொல்லப்படும் ஹின்ஸப் எனும் இபுலீஸை பார்க்க முடியாது ஆனல் நம்மால் சில பரிசோதனையின் மூலம் உணரமுடியும்.

எவ்வாறு எனில் நாம் ஐந்து வேலைத் தொழுகையை ஒவ்வொறு நாளும் நிறைவேற்றுகிறோம் எதவது ஒரு தொழுகையில் நாம் எத்தனை ரக்காத்கள் தொழுதோம் என்பதில் உங்களுக்கு சந்தேகம் வந்திருக்கும் நமது ஆழ்மனதில் ஒவ்வொறு வக்த்துக்கும் இத்தனை இத்தனை ரக்காத்கள் என்று பதிவாகி இருக்கிற ஒரு இபாதத் செயல்பாடுகளில் நமது தொழுகையில் மட்டும் மறதி ஏற்படுகிறதே அது ஏன் என்று சிந்தித்தீர்கள் என்றால் விளங்கும் ஹின்ஸப் என்று ஒருவன் இருக்கிறான் என்று விளங்கும்.
எனெனில் நாம் தொழுகும் தொழுகைகளில் ரக்காத் என்னிக்கை நாளைத்தாண்டாது என்பது இதில் கவணிக்க தக்க விசயம் அதிகமான என்னிக்கையில் நமக்கு சந்தேகம் வரலாம் ஆனல் சில வேலைகளில் இந்த சந்தேகம் பஜ்ர் தொழுகையில் கூட வந்து விடும் அது ஏன் என சிந்தித்தீர்கள் என்றால் விளங்கும் ஹின்ஸப் என்று ஒருவன் இருக்கிறான் என்று அறியலாம்.

ஜின்களின் உணவு
ஹதிஸின் சுருக்கம், அப்போது (எலும்பும் கெட்டிச்சானமும் வேண்டாம் என்று ஏன் சொன்னீர்கள்) அதற்க்கு நபி (ஸல்) அவர்கள், அவ்விரண்டும் ஜின்களின் உணவாகும் என்னிடம் நஸ்பீன் என்னுமிடத்தை சேர்ந்த ஜின்களின் குழு ஒன்று வந்தது அவை நல்ல ஜின்களாக இருந்தன அவை என்னிடம் உணவு தரும்படி கேட்டன. நான் (அவை எந்த எலும்பையும் எந்த கெட்டிச்சானத்தையும் கடந்து சென்றாலும் அதில் உணவைப்பெற வேண்டும் என்று அல்லாஹ்விடம் அவற்றுக்காக பிரார்த்தித்தேன் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் அபூ குறைரா (ரலி) நூல் புகாரி 3860. 

மேலே கூறப்பட்ட ஹதீஸை சில ஆய்வுக் கண்ணோட்டத்தோடு அனுகினால் ஜின் என்று ஒரு படைப்பு இருப்பதை உணரலாம். நான் எனது ஊரில் சில மாடுகள் காடுகளில் மேய்ந்து விட்டு மாலையில் வீடுகளுக்கு வரும் அவைகள் காடுகளில் மேயிம் பொழுது அவைகள் கழிக்கும் கெட்டியான சாணங்களை இரண்டு முன்று நாட்கள் சென்று பார்தால் அவை கெட்டியான சானம் போல் இருந்த்தாலும் கையில் எடுத்துப்பார்த்தால் சாணத்தின் கூடுமட்டும்தான் இருக்கும் அதற்க்கு உள்ளே ஒன்றும் இருக்காது.

உதரணத்திற்க்கு சொல்ல வேண்டுமானால் காடுகளில் வெட்டப்படும் மரங்களை சிலவேலைகளில் விட்டு வைத்திருப்பார்கள் அதுமரம் போல் காட்சி அளித்தாலும் அவைகள் வெரும்கூடாகவே நிற்கும் சும்ம அதை தள்ளிவிட்டாளே போதும் கிழே விழுதுவிடும் கம்பீரமாக வெளித்தோற்றத்தில் தெரியும் மரம் ஏன் இவ்வாறு விழுகிறது என்றால் அவைகளை செல்லரித்து விட்டது என்று கூறுவார்கள் இவ்வாறே சாணமும் செல்லரித்து இருப்பதை அறியலாம்.

இவ்வாறே நாம் எலும்புகளையும் ஆய்வு செய்யலாம் மாவீரன் திப்பு சுல்தான் பயன்படுத்திய குதிரையின் எலும்புகள் பாதுகாப்பாக இருக்கிறது ஆனல் நாள் ஒன்றுக்கு பல ஆயிரம் கிலே உலகில் மாமிசங்கள் உண்ணப் படுகின்றன அதில் இருந்து கலிக்கப்படும் அந்த எலும்புகள் எல்லாம் முறையாக புதைக்கப்பட விட்டாலும் அவைகள் எல்லாம் எப்படி மக்கிப்போய் விடுகின்ற?. கடந்த வருட குர்பானி கொடுக்கப்பட்ட பிரானிகளின் எலும்புகள் எதவது செல்லரிக்கமல் விடப்பட்டுள்ளதா என ஊரின் அத்தனை குப்பை தொட்டிகளையும் சுற்றிப்பார்த்து விட்டு வந்து விட்டேன் ஒரு எலும்பையும் காணவில்லை.

அப்படி கிடைத்த சில எலும்புகளை எடுத்து தரையில் தட்டினேன் அப்படியே மாவுமாதிரி ஆகிவிட்டது இதில் இருந்து எனக்குத் தெரிகிறது அதை யாரே பயன்படுத்தி இருக்கிறார்கள் என்று.

இல்லை என்றால் என்றோ இறந்து போன மாவீரன் திப்புவின் குதிரையின் எலும்புகள் மட்டும் அப்படியே மக்கமல் அருங்காச்சியகத்தில் பாதுகாப்புடன் அதே உறுதியுடன் இன்றும் இருப்பது எப்படி ஒரு பொருளை பயண்படுத்தினால் அதன் தன்மை உறுதி குறைந்து விடும் என்பது என்னவே உண்மைதான். சில ஹதிஸ்களை நாம் வாசிக்கும் போது ஜின்கள் என்று ஒரு படைப்பு பலவடிவங்களில் நமக்கும் காட்சி தரலாம் ஆனல் அதை நாம் ஜின் தான் என்பதை ஊகிப்பது கடினமே!

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். குட்டையான (அல்லது சிதைந்த) வால் கொண்ட (அப்தர் எனும்) பாம்பை கொல்லுங்கள் மேலும் (அது கடித்தால்) கண்பார்வையை போக்கி விடும் (மேலும்) கருவை சிதைத்து விடும். நூல் புகாரி 3310. 

ஹதிஸ் சுருக்கம். பாம்புகளை கொல்லும்படி உத்தரவிட்டுள்ளார்கள் என்று சொன்னேன் – வீடுகளில் வசிக்கும் பாம்புகளை (பார்த்த உடனே) கொல்லவேண்டாம் – என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடுத்தார்கள் அவை வீட்டில் வசிக்கும் ஜின்களாகவும் (இருக்கலாம்). நூல் புகாரி 3299.படைத்தவனை அறிய அவனது படைப்புகளை பற்றி சிந்தித்தால் போதும்.

மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்
 
1. காலையில் உணவு உண்ணாமல் இருப்பது
காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச் சத்துக்களையும் கொடுக்காமல் ஆக்கி, மூளை அழிவுக்குக் காரணமாகும்.
2.மிக அதிகமாகச் சாப்பிடுவதுஇது மூளையில் இருக்கும் ரத்த நாளங்கள் இறுகக் காரணமாகி, மூளையின் சக்தி குறைவுக்குக் காரணமாகும்.
3. புகை பிடித்தல் 
மூளை சுருகவும், அல்ஸைமர்ஸ் வியாதி வருவதற்கும் காரணமாகிறது.
4.நிறைய சர்க்கரை சாப்பிடுதல் நிறைய சர்க்கரை சாப்பிடுவது, புரோட்டின் நமது உடலில் சேர்வதைத் தடுக்கிறது. இதுவும்மூளை வளர்ச்சிக்கு பாதிப்பாகிறது. 
5.மாசு நிறைந்த காற்றுமாசு நிறைந்த காற்றை சுவாசித்தல், நமக்குத் தேவையான ஆக்ஸிஜனை நாம் பெறுவதிலிருந்து தடை செய்கிறது. மூளைக்கு ஆக்ஸிஜன் செல்லாவிட்டால், மூளை பாதிப்படையும். 6.தூக்கமின்மை 
நல்ல தூக்கம் நம் மூளைக்கு ஓய்வு கொடுக்கும். வெகுகாலம் தேவையான அளவு தூங்காமலிருப்பது மூளைக்கு நீண்டகாலப் பாதிப்பை ஏற்படுத்தும்.
 7. தலையை மூடிக்கொண்டு தூங்குவது தலையை மூடிக்கொண்டு தூங்குவது, போர்வைக்குள் கரியமிலவாயு அதிகரிக்க வைக்கிறது. இது நீங்கள் சுவாசிக்கும் ஆக்ஸிஜனை குறைக்கிறது. குறைவான ஆக்ஸிஜன் மூளையைப் பாதிக்கிறது. 
8.நோயுற்ற காலத்தில் மூளைக்கு வேலை கொடுப்பது உடல் நோயுற்ற காலத்தில் மிக அதிகமாக மூளைக்கு வேலை கொடுப்பதும், தீவிரமாகப் படிப்பதும் மூளையைப் பாதிக்கும். உடல் சரியாக ஆனபின்னால், மூளைக்கு வேலை கொடுப்பதே சிறந்தது. 
9.மூளைக்கு வேலை கொடுக்கும் சிந்தனைகளை மேற்கொள்ளாமல் இருப்பது மூளையை அதிகமாக உபயோகப்படுத்தும் சிந்தனைகளை மேற்கொள்வதால், மூளையில் புதுப்புது இணைப்புகள் உருவாகின்றன. அதனால், மூளை வலிமையான உறுப்பாக ஆகிறது. 
10. பேசாமல் இருப்பதுஅறிவுப்பூர்வமான உரையாடல்களை மேற்கொள்வது மூளையின் வலிமையை அதிகரிக்கிறது
உண்மையில் நீங்கள் உங்கள் குழந்தைகள் மீது அக்கறையுள்ளவர்களா?

பெற்றோர்களே!
                                                      படியுங்கள்.

குழந்தையிடம் தொலைக்காட்சியின் ஆதிக்கம் மற்றும் விபரீதம் பற்றிய ஒரு ஆய்வு இந்திய புகழ்பெற்ற பல்கலைகழகத்தில் மேற்கொள்ளப்பட்டது. மிகவும் அதிர்ச்சிகரமான தகவல்களை அது வெளியிட்டுள்ளது.

1. சாதாரணக் குழந்தை பள்ளியில் செலவழிக்கும் நேரத்தைக் காட்டிலும் தொலைக்காட்சியில் அதிக நேரம் செலவழிக்கிறது.

2. சராசரியாக ஒருவாரத்திற்கு 20 மணிநேரம் தொலைகாட்சியில் செலவழிக்கிறது. இது மற்ற எல்லா செயல்களைக் காட்டிலும் அதிகமாகும். (தூங்குவதைத்தவிர).

3. சராசரியாக 70 வயது நிரம்பிய மனிதன் 7 முதல் 10 ஆண்டுகள் வரை நேரத்தை தொலைக்காட்சியில் செலவு செய்கிறான்.

4. விளம்பரங்கள் குழந்தைகளை இலக்காக வைத்து தயாரிக்கப்படுகின்றன. மாதந்தோறும் ஆயிரக்கணக்கான வியாபார விளம்பரங்கள் தயார் செய்யப்படுகின்றன.

5. ஒருவருடத்திற்கு 1000 முதல் 2000 வரையிலான போதை சம்பந்தப்பட்ட விளம்பரங்களை குழந்தைகள் பார்க்கின்றன.


குழந்தைகளின் வாழ்வும் தொலைக்காட்சியும்:

1. தொலைக்காட்சி மூளை வளர்ச்சியை பாதிக்கிறது.

2. பெற்றோர் நினைப்பது போல் குழந்தை நிகழ்ச்சிகள் குழந்தைகளுக்கு பாடம் கற்பிப்பதில்லை. அவை விளம்பர நோக்கத்திற்காகத் தயார் செய்யப்படுகின்றன.

3. தொலைக்காட்சி பார்ப்பது குழந்தைகளின் மற்ற செயல்களை அதாவது விளையாடுவது, பழகுவது, வீட்டுப்; பாடம் படிப்பது, பெற்றோருடன் நேரத்தை செலவிடுவது, சுகாதாரமான காற்றோட்டத்தை சுவாசிப்பது போன்றவற்றை நிர்மூலமாக்குகிறது.

4. குழந்தைகள் தொலைக்காட்சி பார்ப்பதினால் பசியின்மை, தூக்கமின்மை, மந்தபுத்த, சகவாசமின்மை, முரட்டுத்தனம், பார்வைப் பாதிப்பு ஆகிய பின்விளைவுகளைப் பெறுகின்றன.

வன்முறையும் தொலைக்காட்சியும்

1. குழந்தைகளுக்கு தயாரிக்கப்படும் நிகழ்ச்சிகளில் ஐந்து முதல் ஆறு மடங்கு பெரியவர்களுக்கு தயாரிக்கப்படும் நிகழ்ச்சிகளைக் காட்டிலும் வன்முறை நிகழ்ச்சிகள் காண்பிக்கப்படுகின்றன.

2. சனி, ஞாயிறுகளில் 20 முதல் 25 வரை வன்முறைக்காட்சிகள் காண்பிக்கப்படுகின்றன.

3. 8000 கொலைகளை பள்ளிப்படிப்பை முடிக்குமுன் குழந்தைகள் பார்க்கின்றன.

4. 10,000 கற்பழிப்புகள், அடிதடிகள், கொலைகள் ஓவ்வொருவருடமும் பார்க்கின்றன.அவற்றைப் பார்த்தது போல் வன்முறையில் ஈடுபட முனைகின்றன.

5. பள்ளியில் சேருமுனனரே (Aduls) பார்க்கும் நிகழ்ச்சிகள் குழந்தைகளை மிகவும் பாதிக்கின்றன.

6. தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மிகக் கெட்ட நடத்தைகளை வளர்க்கின்றன.

7. நினைப்பதை அடைய வன்முறை தான் தீர்வு என்று காண்பிக்கப்படுகின்றன.

8. நிறைய நிகழ்ச்சிகள் வன்முறை நிகழ்ச்சிகளுக்கு தண்டனையில்லாமல் காண்பிக்கப்படுகின்றன அவை கேலிக்குரியதாகவும் காண்பிக்கப்டுகின்றன.

9. நல்வர்கள் கெட்டவர்களை அடிப்பது நல்லது போலவும் அது சாதாரணமானது போலவும் சித்தரிக்கப்படுகிறது. விளையாட்டுகளில் இது போன்று நிரூபிக்க குழந்தைகள் முயலுகின்றன.

10. தொலைக்காட்சியில் வரும் (Fast food )உணவு ,இனிப்பு பதார்த்தங்களில் மட்டுமே ஆரோக்யமும் சத்தும் இருப்பது போல் குழந்தைகள் நினைக்கின்றன. ஆனால், உண்மையில் அவ்வாறில்லை.

தொலைக்காட்சி பார்க்கும் நேரங்களை எப்படித் தீர்மானிப்பது ?:

1. எந்த நேரத்தில் பார்க்க அனுமதிப்பது? எந்த நேரத்தில் அனுமதிக்க கூடாது என்று வரையரை செய்யுங்கள். அதாவது வீட்டுப் பாடம் படிக்கும் முன் , எழுதும் நேரத்திற்கு முன,. சாப்பிடும் நேரம், பெற்றோர் அருகாமையில் இல்லாத நேரம் ஆகியவற்றில் கண்டிப்பாய் அனுமதிக்கக்கூடாது.

2. ஒரு நாளைக்கு ஒன்று அல்லது அதிக பட்சம் இரண்டு மணி நேரத்திற்கு மேல் அனுமதிக்கக்கூடாது.

3. பள்ளி நாட்களில் இரவில் ஒரு மணிநேரமும், வார நாட்களில் 3 மணிநேரமும் அனுமதிக்கலாம்.

4. அறிவுப்பூர்வமான நிகழ்ச்சிகளை சில நேரங்கள் அதிகமாக அனுமதிக்கலாம்.

5. படிப்பில் குறைவாக உள்ள குழந்தைகளை ஒரு நாளைக்கு அரை மணிநேரம் மட்டுமே அனுமதிக்கவேண்டும் அல்லது முற்றிலும் தவிர்க்கலாம். வார நாட்களில் 2 மணிநேரம் அனுமதிக்கலாம்.

6. வீட்டுப் பாடம் (Home work) இருக்கும் போது கண்டிப்பாய் டிவி பார்க்க அனுமதிக்காதீர்கள். குழந்தையின் விரும்பிய நிகழ்ச்சியாயிருப்பின் பதிவு செய்து பிறகு காண்பிக்கலாம்.

7. வார நாட்களில் டிவியை உபயோகிக்காமல் இருப்பதும் வார இறுதி நாட்களில் குறிப்பிட்ட அளவு பார்ப்பதும் மிகவும் நன்று. இது வீட்டுப் பாடம் படிக்க வேகப்படுத்துவதை தடுக்கும். குடும்பத்திலுள்ளவர்களுடன் உறவாட உதவும். டிவிமுன் நிறுத்திவிட்டு சமையல் செய்வதைக்காட்டிலும் சமையலுக்கு உதவ குழந்தையைத் தூண்டவேண்டும்.
இந்தியாவில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பெண்களை கீழ்த்தரமாகவும், கொச்சைப் படுத்தியும் டிவி தொடர்கள் காண்பிக்கப்படுகின்றன என்று கூறுகிறது.

வருடக்கணக்கில் டிவி தொடர்கள் பார்ப்பதை விடுத்து குழந்தையுடன் கொஞ்சி விளையாடுங்கள்
தொலைக்காட்சிகளில் பொழுதைக் கழித்து குழந்தைகளின் பாசத்தை இழந்து விடாதீர்கள்!

திங்கள், மே 28, 2012

ஜும்ஆ குத்பா உரை நிகழும்போது சுன்னத் தொழலாமா?

கேள்வி 1 : வெள்ளிக்கிழமை தாமதமாக பள்ளிவாசலுக்கு வரநேர்ந்தால் ஜும்ஆ குத்பா உரை நிகழும் போது சுன்னத் தொழுகை தொழலாமா? அல்லது குத்பா உரைக்கு முக்கியத்துவம் தந்து தொழுகாமல் அதனை கேட்க வேண்டுமா?

கேள்வி 2 : 15 வயதுடையவர் ஏழு வயது சிறுமியுடன் உடலுறவில் ஈடுபட்டுவிட்டு, இப்போது 25 வயதான பிறகு அதை நினைத்து வருந்துகிறார். அவருக்கு மன்னிப்பு உண்டா?
முதல் கேள்விக்கான பதில்:
முதலில் ஜும்ஆவுக்கு நேரத்தோடு செல்வதன் சிறப்பை அறிந்து விட்டு உங்கள் கேள்விக்கு வருவோம்.
ஜும்ஆவுக்கு நேரத்தோடு பள்ளிக்குச் செல்வதால் கிடைக்கும் நன்மையை அறிந்தால் அதற்காக திட்டமிட்டு மற்ற வேலைகளை ஒதுக்கித் தள்ளிவிட்டு பள்ளிக்குச் செல்வதை பழக்கமாக்கிக் கொள்வார்கள்.
'பெருந்துடக்கிற்காக குளிப்பது போன்று ஜும்ஆவுடைய நாளில் குளித்து விட்டு பள்ளிக்கு (நேரத்தோடு) செல்பவர் ஓர் ஒட்டகத்தை குர்பானி கொடுத்தவர் போன்றவர் ஆவார்.
இரண்டாம் நேரத்தில் செல்பவர் ஒரு மாட்டைக் குர்பானி கொடுத்தவர் போன்றவர் ஆவார். மூன்றாம் நேரத்தில் செல்பவர் கொம்புள்ள ஆட்டைக் குர்பானி கொடுத்தவர் போன்றவர் ஆவார்.
 நான்காம் நேரத்தில் செல்பவர் ஒரு கோழியைத் தர்மம் செய்தவர் போன்றவர் ஆவார். ஐந்தாம் நேரத்தில் செல்பவர் முட்டையைத் தர்மம் செய்தவர் போன்றவர் ஆவார்.
இமாம் (பள்ளிக்குள்) வந்து விட்டால் வானவர்களும் (உள்ளே) வந்து (இமாமின்) உபதேசத்தை செவியேற்கிறார்கள்' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹுநூல்: புகாரி 881)
ஜும்ஆ நாளில் நேரத்தோடு செல்ல வேண்டும். குர்ஆன் ஓதுதல் சுன்னத்தான தொழுகையை தொழுதல், இறைவனை நினைவு கூர்தல் போன்ற வணக்க வழிபாடுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.
'ஜும்ஆ நாள் (வெள்ளிக் கிழமை) வந்து விட்டால் வானவர்கள் (ஜும்ஆ தொழுகை நடக்கும்) பள்ளிவாசலின் நுழைவாயில்களில் ஒவ்வொரு வாசலிலும் (இருந்த வண்ணம்) முதன் முதலாக உள்ளே நுழைபவர்களையும் அடுத்தடுத்து உள்ளே நுழைபவர்களையும் (அவர்களின் பெயர்களை) எழுதிப் பதிவு செய்து கொண்டிருப்பார்கள். இமாம் உரைமேடையில் (உரையாற்றுவதற்காக) அமர்ந்து விட்டால் (பதிவு செய்யும்) ஏடுகளைச் சுருட்டி வைத்து விட்டு (அவரது உபதேச) உரையைச் செவிமடுத்த வண்ணம் (உள்ளே) வருவார்கள்' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹுநூல்: புகாரி 3211)
ஜும்ஆவுக்காக பள்ளிக்கு வருவோருக்கு பரிசுகள் வழங்குவதற்காக வருகைப்பதிவேட்டில் வானவர்கள் பதிவு செய்கிறார்கள். இமாம் மிம்பருக்கு வருவதற்கு முன்பே நாம் பள்ளிக்கு வருகை தந்துவிட வேண்டும் என்பதை இந்த ஹதீஸ்கள் விளக்குகின்றன.
எவ்வளவோ முயற்சிகள் செய்தும் பள்ளிக்கு சரியான நேரத்தில் வரமுடியாமல் இமாம் ஜும்ஆ உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும் போது தாமதமாக வந்தால் என்ன செய்வது என்பதை இப்போது நாம் பார்ப்போம்.
ஜாபிர் பின் அப்தில்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஜும்ஆ நாளில் மக்களுக்கு உரையாற்றிக் கொண்டிருக்கையில் ஒரு மனிதர் வந்(து தொழாமல் அமர்ந்)தார். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், 'இன்னாரே! தொழுது விட்டீர்களா?' என்று கேட்டார்கள். அதற்கு அவர் 'இல்லை' என்றார். 'எழுந்து தொழுவீராக!' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்.. (நூல்: புகாரி 930)
இந்த ஹதீஸ் இரண்டு விஷயங்களை சொல்கிறது.
தொழாதவர் ஜும்ஆ உரை நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருந்தாலும் தொழுது விட்டுத்தான் அமர வேண்டும் என்பது முதல் விஷயம்.
தொழுது விட்டிருந்தால் தொழாமல் அமர்ந்து கொள்ளலாம் என்பது இரண்டாவது விஷயம்.
அதாவது உரை நிகழ்த்தப்பட்டுக் கொண்டு இருக்கும் போது சுன்னத் இரண்டு ரக்அத்துக்களை முன்னரே தொழுது விட்டிருந்தால் நேரடியாக சென்று அமர்ந்து கொள்ளலாம்.
இக்கருத்தை இப்னுமாஜாவில் இடம் பெற்றிருக்கும் மற்றொரு ஹதீஸ் கூடுதல் விபரங்களோடு விளக்குகிறது.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும் போது ஸுலைக் அல் கத்ஃபானி ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் வந்தார்கள். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவரிடம், 'நீர் (இங்கு) வருமுன் இரண்டு ரக்அத்கள் தொழுதீரா?' என்று கேட்க, அவர் 'இல்லை' என்றார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், 'அப்படியாயின் நீர் இரண்டு ரக்அத்களைச் சுருக்கமாகத் தொழுது கொள்வீராக' என்றார்கள் என ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்: இப்னுமாஜா 1114)
'நீர் (இங்கு) வருமுன் இரண்டு ரக்அத்கள் தொழுதீரா?' என்ற வாசகம் பள்ளியல்லாத மற்ற இடங்களிலும் தொழும் தொழுகையை குறிப்பதை கவனிக்கலாம்..
இமாம் உரை நிகழ்த்திக் கொண்டிருந்தால் பள்ளியின் காணிக்கைத் தொழுகை முக்கியத்துவம் பெறாது. உரையை கேட்பதில் கவனம் செலுத்த வேண்டும், அதுவே முக்கியத்துவம் பெறும்.
இன்னும் சில ஐயங்களுக்கு விடை காண்போம்.
1. லுஹர் தொழுகையின் நேரம் தான் ஜும்ஆவின் நேரமா?
ஜும்ஆவின் நேரம் லுஹரின் நேரத்திற்கு முன்னரே ஆரம்பித்து விடுகின்றது. லுஹரின் நேரம் சூரியன் உச்சியிலிருந்து சாயும் நேரம் ஆகும். அதற்கான ஆதாரம்.
'நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஜும்ஆத் தொழுவார்கள். அதன் பின்னர் நாங்கள் சூரியன் உச்சியிலிருந்து சாயும் நேரத்தில் எங்கள் ஒட்டகங்களிடம் சென்று அதற்கு ஓய்வளிப்போம்'. (அறிவிப்பவர்: ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹுநூல்: முஸ்லிம் 1870, அஹ்மத், நஸயீ 1392)
2. ஜும்ஆவின் முன் சுன்னத் எப்போது?
மற்ற தொழுகைகளுக்கு முன் சுன்னத் பாங்கிற்கு பின்பு தான் தொழ வேண்டும். ஆனால் ஜும்ஆவின் முன் சுன்னத்தின் நேரம் பாங்கிற்கு முன்னரே ஆரம்பித்து விடுகின்றது. அதற்கான ஆதாரம்.
இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் தமது வீட்டில் ஜும்ஆவுக்குப் பின்னால் இரண்டு ரக்அத்கள் தொழுபவர்களாகவும் ஜும்ஆவுக்கு முன்னுள்ள தொழுகையை நீட்டித் தொழுபவர்களாகவும் இருந்தனர். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவ்வாறு தொழுதிருப்பதாகவும் கூறினார்கள். (அறிவிப்பவர்: நாஃபிஉ ரளியல்லாஹு அன்ஹுநூல்கள்: அபூதாவூது 1123, இப்னு ஹிப்பான்)
  இரண்டாவது கேள்வியும் பதிலும்:
கேள்வி: 15 வயதுடையவர் ஏழு வயது சிறுமியுடன் உடலுறவில் ஈடுபட்டுவிட்டு, இப்போது 25 வயதான பிறகு அதை நினைத்து வருந்துகிறார். அவருக்கு மன்னிப்பு உண்டா?
இது சந்தேகத்திற்கு இடமின்றி விபச்சாரக் குற்றத்தைச் சேரும். இதற்கான பதிலை ஒரே வரியில் சொல்லிவிட முடியும், ஆனாலும் விபச்சாரம் சம்பந்தமாக இஸ்லாத்தின் நிலைபாட்டை ஆதாரங்களோடு இங்கே விளங்கிக் கொள்வது மிகப்பொருத்தமானதாக இருக்கும்.
1.விபச்சாரம் கூடாது:
அல்லாஹ் திருமறையில் விபச்சாரம் குறித்து இவ்வாறு சொல்கிறான்.
'நீங்கள் விபச்சாரத்தை நெருங்காதீர்கள், நிச்சயமாக அது மானக்கேடானதாகும், மேலும் (வேறு கேடுகளின் பக்கம் இழுத்துச் செல்லும்) தீய வழியாகவும் இருக்கின்றது' (அல்குர்ஆன் 17:32)
இங்கே அல்லாஹ் பயன்படுத்தி இருக்கும் வார்த்தையின் ஆழத்தை புரிந்து கொள்வது அவசியமாகும். 'விபச்சாரத்தை நெருங்காதீர்கள்' என்பது 'விபச்சாரத்தை செய்யாதீர்கள்' என்று சொல்வதை விட எந்த அளவுக்கு கவனமான வார்த்தைப் பிரயோகம் என்பதை புரிந்து கொள்ளலாம். 'விபச்சாரத்தை செய்யாதீர்கள்' என்பது அந்தச் செயலை செய்வதை மட்டுமே தடுக்கும். ஆனால் விபச்சாரத்திற்கு முந்திய செயல்களை அவை தடுக்காது. பார்ப்பது, பேசுவது, நடப்பது, பிடிப்பது இதுபோன்ற அதை நெருங்குவதற்குரிய காரியங்களும் உள்ளன. இவற்றுக்கு தடை விதித்தால் தான் விபச்சாரம் என்ற குற்றத்திலிருந்து தப்ப முடியும். அதனால் தான் விபச்சாரத்தை நெருங்காதீர்கள் என்று அல்லாஹ் சொல்கிறான்.
2.நூறு கசையடிகள்:
விபச்சார குற்றம் எந்த அளவுக்கு பாரதூரமானது என்பதை அதற்கு தரப்படும் தண்டனையை வைத்து விளங்கிக் கொள்ளலாம். ஒரு இஸ்லாமிய ஆட்சியில், ஒரு இஸ்லாமிய ஆட்சியாளன் இந்த தண்டனையை நிறைவேற்றுவது அவன் மீது கடமையாகும். அல்லாஹ் திருமறையில் சொல்கிறான்.
'விபச்சாரியும், விபச்சாரனும் - இவ்விருவரில் ஒவ்வொருவரையும் நூறு கசையடி அடியுங்கள், மெய்யாகவே, நீங்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதிநாள் மீதும் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால், அல்லாஹ்வின் சட்டத்(தை நிறைவேற்றுவ)தில், அவ்விருவர் மீதும் உங்களுக்கு இரக்கம் ஏற்பட வேண்டாம், இன்னும் அவ்விருவரின் வேதனையையும் முஃமின்களில் ஒரு கூட்டத்தார் (நேரில்) பார்க்கட்டும்' (அல்குர்ஆன் 24:2)
திருமணம் ஆகாதவர் விபச்சாரம் செய்தால் அவருக்கு நூறு கசையடி கொடுக்க வேண்டும் என்பது இறைக்கட்டளை. திருமணம் ஆகாதவருக்கத் தான் இந்த தண்டனை என்பதை அடுத்து வரும் ஹதீஸிலிருந்து விளங்கலாம்..
3.மரண தண்டனை:
அஸ்லம் கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு மனிதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து, தான் விபச்சாரம் செய்ததாக ஒப்புக் கொண்டார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் அவரைக் கண்டு கொள்ளாமல் இருந்தார்கள். மீண்டும் கூறினார்.
அப்போதும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவரைக் கண்டு கொள்ளாமல் இருந்தார்கள். முடிவில் நான்கு தடவை தனக்கு சாட்சியம் கூறினார். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், 'உமக்கு பைத்தியம் ஏதும் பிடித்துள்ளதா?' என்று கேட்டார்கள்.
அவர் இல்லை என்றார். நீர் மணமுடித்தவரா? என்று கேட்டார்கள். அவர் ஆம் என்றார். அதன் பின் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கல்லெறியுமாறு கட்டளையிட முஸல்லா என்ற இடத்தில் கல்லெறியப்பட்டார். கல்லெறி விழுந்ததும் அவர் ஓடலானார்.
பிடிக்கப்பட்டு மீண்டும் கல்லெறியப்பட்டு மரணித்தார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவரைப் புகழ்ந்துரைத்தார்கள். அவருக்குத் தொழுகை நடத்தவில்லை என்று ஜாபிர் பின் அப்துல்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள். (நூல்கள்: புகாரி, திர்மிதி 1451)
இந்த ஹதீஸ் திருமணம் ஆனவர் விபச்சாரத்தில் ஈடுபட்டால் தண்டனையாக கல்லெறிந்து கொல்லும் மரண தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்பதையும், ஒருவருக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்கு அவசரம் காட்டக் கூடாது என்பதையும் விளக்குகிறது.
இன்னொரு விஷயத்தையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குற்றவாளிகளை தப்ப வைப்பதற்காக அவரது குற்றத்தை செவிமடுக்க மறுக்கிறார்கள் என்று எண்ணிவிடக் கூடாது. தண்டனை கொடுப்பதில் அவசரம் காட்டி ஓர் நிரபராதி தண்டிக்கப்படக் கூடாது என்பது தான் இதன் நோக்கம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
மற்றொரு ஹதீஸ் இந்தக் கருத்தை வலியுறுத்துகிறது.
உங்களால் இயன்ற அளவு முஸ்லிம்களைத் தண்டிப்பதைத் தவிருங்கள். அவரை விட்டுவிட ஏதேனும் ஒருவழி இருந்தால் விட்டுவிடுங்கள்.. ஏனெனில் ஒரு தலைவர் தண்டனை வழங்குவதில் தவறான முடிவுக்கு வருவதை விட மன்னிப்பு வழங்குவதில் தவறான முடிவுக்கு வருவது சிறந்ததாகும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா நூல்: திர்மிதி 1444)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு நரகம் காட்டப்பட்ட போது அதில் விபச்சாரகர்கள் தண்டிக்கப்பட்டுக் கொண்டிருந்ததை கண்டார்கள். (நூல்: புகாரி 1386) அதாவது மறுமையில் அவர்கள் நரகம் செல்வார்கள்.
4.பாவமன்னிப்பு:
'உங்களில் அதை (விபச்சாரத்தை) செய்துவிடக்கூடிய இருவருக்கும் தண்டனை கொடுங்கள், அவ்விருவரும் (தாம் செய்த குற்றத்தை நினைத்து வருந்தி) தவ்பா செய்து தங்களை திருத்திக் கொண்டால், அவர்களை விட்டு விடுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்போனும் கிருபையுடையோனுமாக இருக்கின்றான்'. (அல்குர்ஆன் 4:16)
'எவர்கள் அறியாமையினால் தீமை செய்துவிட்டு, பின்னர் விரைவில் மன்னிப்புத் தேடி கொள்கிறார்களோ அவர்களுக்குத்தான் அல்லாஹ்விடத்தில் மன்னிப்பு உண்டு. அல்லாஹ் அவர்களின் மன்னிப்பை ஏற்றுக்கொள்கிறான். இன்னும் அல்லாஹ் நன்கறிந்தோனும். ஞானம் உடையோனுமாக இருக்கின்றான்'. (அல்குர்ஆன் 4:17)
நமது நாடுகளில் இஸ்லாமிய ஆட்சி நடைபெறாததினாலும், விபச்சாரத்திற்கு உரிய தண்டணை வழங்கப்படாததினாலும் விபச்சாரகர்கள் தண்டிக்கப்பட சந்தர்ப்பமே இல்லை. விபச்சாரகர்கள் தான் செய்த பாவத்தை நினைத்து வருந்தி அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கேட்க வேண்டும். அல்லாஹ் மன்னிக்கப் போதுமானவன்.
இன்னொரு விஷயத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். விபச்சாரம் என்பது திருமண ஒப்பந்தம் இன்றி ஆணும் பெண்ணும் விரும்பி செய்வதாகும். 15 வயதுடைய விபரமறிந்த ஓர் ஆண், ஏழு வயதுடைய விபரமறியாத பெண்ணை உடலுறவில் ஈடுபடுத்துவது கற்பழிப்பு வகையைச் சேர்ந்ததாகும். விபச்சாரக் குற்றத்திற்கே மிகக் கடுமையான தண்டனை என்கிற போது கற்பழிப்புக் குற்றம் அதைவிட கடுமையானது என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

நீங்க தவ்ஹீதா... ?சுன்னத் ஜமாத்தா..?


தவ்ஹீது (ஏகத்துவம்)
தவ்ஹீது என்பதற்கு 'ஒருமைப்படுத்துதல்' என்றும் பொருள்.
அனைத்து வகையான வணக்க வழிபாடுகளுக்கும் தகுதியுடையவன் அல்லாஹ் ஒருவனே என்றும், படைத்தல், காத்தல், உணவளித்தல் போன்ற செயல்களிலும் மற்றும் குர்ஆன் ஹதீஸ்கள் ஆகியவற்றில் அல்லாஹ்வின் ஆற்றல்கள், பண்புகளாக எவைகளைப் பற்றிக் கூறப்பட்டிருக்கின்றதோ அவைகள் அனைத்திலும் அல்லாஹ்வுக்கு நிகர் யாருமில்லை என்றும் அவன் தனித்தவன் என்றும் அல்லாஹ்வை ஒருமைப்படுத்துவதற்கு 'தவ்ஹீத்' என்று பெயர்.

அஹ்லுஸ் ஸூன்னத் வல்ஜமாஅத்
  'அஹ்லுஸ் ஸூன்னத் என்பதற்கு நபி வழியென்றும், 'வல்ஜமாஅத் என்பதற்கு அவ்வழியை பின்பற்றுவர்கள் என்றும் பொருள். நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவ ஸல்லம் அவர்களின் வழியை பின்பற்றும் யாவரும் அஹ்லுஸ் ஸூன்னத் வல்ஜமாஅத் ஆவர்

இப்பெரும் வார்த்தைகள் இரண்றிற்கும் நேரடி அர்த்தங்கள் இவை. இவ்விரு வார்த்தைகளுக்கும் செயல்வடிவம் கொடுப்பவர்களே முஸ்லிம்கள். ஒன்றை ஏற்று பிறிதொன்றை விட்டவர்கள் முஸ்லிம்கள் என்ற வட்டத்திற்குள் வரமாட்டார்கள். இப்படி இஸ்லாத்தின் உரைக்கல்லான இவை இன்று எதிர் எதிர் நிலையில் செயல்படும் இயக்கம் சார்ந்த வார்த்தைகளாக சமூகத்தில் வலம் வருவதுதான் ஆச்சரியமான வேதனை!

இஸ்லாத்தை பொறுத்தவரை அல்லாஹ்வும் அவன் திருத்தூதரும் ஒன்றை ஏவினால் அதை ஏற்று நடப்பதே ஒருவர் முஸ்லிம் என்பதற்கு சான்று. மாறாக அவற்றில் மாற்றம் கொள்வதற்கோ - திருத்தம் செய்வதற்கோ அதிகாரம் இல்லை. இதை அல்லாஹ் தன் வான் மறையில்

 அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு காரியத்தைப்பற்றிக் கட்டளையிட்டு விட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு ஈமான் கொண்டுள்ள எந்த ஆணுக்கோ பெண்ணுக்கோ உரிமையில்லை ஆகவே, அல்லாஹ்வுக்கும் அவனுடைய ரஸூலுக்கும் எவரேனும் மாறு செய்தால் நிச்சயமாக அவர்கள் பகிரங்மான வழிகேட்டிலேயே இருக்கிறார்கள். ((33:36))

 திருக்குர்-ஆன் மிக தெளிவாக எந்த ஒரு காரியத்தை செய்வதற்கும் விலக்குவதற்கும் அளவுக்கோலை ஏற்படுத்தி இருக்க எந்த ஒரு காரியமெனிலும் அது அல்லாஹ்வுடைய அங்கீகரிப்பும், அவனுடைய தூதரின் வழிக்காட்டுதலும் இருக்க வேண்டியது அவசியமான ஒன்று. அதிலும், குறிப்பாய் மார்க்க விசயங்களில் இவை இன்னும் அதிக கவனத்துடன் கையாளப்பட வேண்டும்.

இறைவனை மையப்படுத்தும் விசயங்களிலெல்லாம் இறை நேசர்களை  முன்னிலைப்படுத்தும் நபர்கள் ஒருங்கிணைந்த கூட்டமைப்புக்கு சுன்னத் வல் ஜமாஅத் என்றும் அவற்றை களைவதற்காக குழுமியிருக்கும் நபர்கள் தவ்ஹீதுவாதிகள் என்ற பெயரிலும் சமூக பார்வையில் அறிமுகப்படுத்தப்படுகின்றனர்.

சுன்னத் ஜமாஅத்தினர் என தம்மை அடையாளப்படுத்திக்கொள்வோர்களிடம் நாம் வினவினால் அவர்கள் கூறும் பதில் இது தான்
அல்லாஹ்விற்கு யாரையும் நாங்க இணைவைப்பதில்லை. மாறாக இறைவனிடத்தில் எங்களின் துஆ விரைவாக ஏற்றுக்கொள்ளப்பட இறை நேசர்களை முன்னிலைப்படுத்துகிறோம் என்பதே...

 கப்ரு ஜியாரத்திற்கு இது தாம் மையக்காரணமாக கொண்டால் இச்செய்கை அவர்களின் அறியாமையென்று தெளிவாய் நிரூபிக்கலாம்.
பிடரியின் நரம்பை விட அருகாமையில் இருப்பதாக சொல்லும் போது இறைவனிடம் நம் துஆக்களை சொல்ல இரண்டாம் நபரின் குறுக்கீடு அங்கு அவசியமானதன்று. அதுவும் எந்த ஒரு நபருக்கும் மற்றவரின் பரிந்துரையும் ஏற்க்கபட மாட்டாது என தெளிவாய் சொல்லப்பட்டிருக்கும் போது மேற்கண்ட காரணம் அறியாமையின் விளைவே!

அதுமட்டுமில்லாமல் இறை நேசர்களின் வருகையின் நோக்கம்
அல்லாஹ் மட்டுமே வணத்திற்குரியவனாக ஏற்க வேண்டும் -அவனுக்கு இணை துணை கற்பிக்க கூடாதென்றும்
நபிகள் (ஸல்) அவர்களின் போதனைப்படி வாழ்வை அமைத்துக்கொள்ள வேண்டும். புதிதாய் மார்க்கத்தில் எதையும் ஏற்படுத்தக்கூடாது -என்பதை தெளிவாய் வலியுறுத்துவதற்கே என்பதாய் இருக்கும்.

மேற்கண்ட நோக்கத்திற்காக ஒருவரது வருகையும் வாழ்வும் இருப்பது உண்மையானால்
  • எந்த தேவைக்கும் என்னை முன்வைத்து அல்லாஹ்விடம் உதவி தேடுங்கள் என்றோ
  • எனது மரணத்திற்கு பிறகு ஆண்டுக்கு ஒரு முறை கப்ருரில் சந்தனம் பூசி கந்தூரி விழா நடத்துங்கள் என்றோ எப்படி சொல்வார்? 

    ஒருவரை நாம் மதிப்பது உண்மையென்றால் அவரது வழிமுறைகளை பேணுவது அவசியமான ஒன்று. இன்று இறை நேசர்களுக்கு கண்ணியம் செய்கிறோம் என்ற பெயரால் அவர்கள் மீதான புகழ்ப்பாக்களாக மௌலிதுகளை படிப்பது ஒருபுறம் இருக்கட்டும்.

    அவர்களின் வாழ்வில் எந்த சந்தர்ப்பத்திலும் நபிகள் மீது மௌலிதுகளை ஓதியதாக எந்த வித ஆதாரப்பூர்வ வரலாற்று சான்றுகளும் இல்லை, ஏனெனில் மார்க்கம் அங்கீகரித்திராத செயல் என்பதை அவர்களே அறிந்திருந்தனர். ஆக அவர்களே செய்யாத, முன்மொழியாத ஒன்றை அவர்களின் பெயரில்
செய்வதற்கு மார்க்க ரீதியில் ஆதார தரவுகளை எங்கிருந்து பெற்றீர்கள்..? 

இவைதான் 
இப்படித்தான்
தர்ஹா -கந்தூரி- தகடு தாயத்துக்களை ஆதாரிப்போர் மத்தியில் எழுப்ப வேண்டிய கேள்விகள்... 

ஆனால்,


" தர்காவுக்கு போறியா அப்ப நீ நரகத்திற்கு தான் போவே...! "

    ஏற்படும் தீமையின் விளைவை மென்மையின்றி எடுத்துரைப்பதால் அவர்களின் செவிப்பறையில் செருக்குடன் அமர்ந்திருக்கும் சைத்தான் செயலில் மாற்றத்தை ஏற்படுத்துகிறான். ஏற்க மறுப்பதோடு எதிர் வினையும் ஆற்றுகிறான். செவி மூடும் சைத்தான் பிரச்சனைக்கான வழி திறக்கிறான்
அவர்களுக்கிடையில் ஏற்படும் விவாதம் ஒரு கட்டத்தில் இறை நேசர்களின் வாழ்வை விமர்சிக்கும் நிலைக்கு செல்கிறது.

ஒருவரை விமர்சிப்பதற்கு இரண்டு அடிப்படை தகுதிகள் இருக்கவேண்டும்.


1. அவரது சொல், செயல் மற்றும் வாழ்வியல் கூறுகளை நாம் நேரடியாக அறிந்திருக்க வேண்டும். அதற்கு அவரது சமகாலத்தில் வாழ்ந்தால் மட்டுமே நமக்கு சாத்தியம்.


2. அவரது வாழ்வை விளக்கும் நம்பத்தகுந்த ஆவண சான்றுகளில் அவர் குறித்த விமர்சனங்கள் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்

இன்று இறைநேசர்களின் வரலாறுகள் என்று நமக்கு கிடைக்கபெற்றிருப்பதெல்லாம் அவர்களின் மறைவுக்கு பின்னரே அதுவும் நம்பகதன்மை குறைபாடுடன் எழுதப்பட்ட வரலாறுகளே. அதிலும் அவர்கள் மீதான விமர்சனங்கள் ஏதுமின்றி கறாமத்துகள் எனும் பெயரில் அற்புதங்களாக அவர்களின் வாழ்வில் சில செயல்கள் முன்னிலைப்படுத்தப்படுகின்றன.

    நம்பக தன்மையில்  குறைப்பாடுடைய இத்தகைய வாழ்க்கை வரலாற்றை ஆதாரமாகக் கொண்டு ஒருவரை உண்மையாக விமர்சிக்க முடியாது. ஆக அவர்களின் வாழ்வை குற்றப்படுத்தி விமர்சித்தல் என்பது பொருளற்றதாக தான் இருக்கும். ஒருவர் மரணித்தவுடன் அவரது செயல்களுக்கான பிரதிபலனை இறைவனிடத்தில் அடைந்துக்கொள்வார் எனும் போது அவர்களை விமர்சிப்பதும் தேவையில்லாத ஒன்றே!

    மேலும் அப்படி விமர்சிப்பதிலும் எதிர்விளைவு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. தான் மதிக்கும் / நம்பும் ஒன்றை விமர்சிக்கும் போது அதன் தாக்கம் கோபமாக மாறி சொல்வோர் மீது வெறுப்பாய் திரும்புகிறது. சொல்லுவது உண்மையாக இருப்பீன் கூட மனம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. பின் கூறும் இறைமறை வழி விளக்கமும், நபிமொழி போதனையும் பயனற்று தான் போய்க்கொண்டிருக்கின்றது.  இதன் விளைவாய் தனிமனித சாடல்களும் -இயக்க மோதல்களும் அரங்கேறுகின்றன.


மேலும் இயக்கம் சார்ந்து இஸ்லாமிய குறியீடுகள் முன்னிருத்தப்படுவதால் ஏற்படும் விளைவுகள் என்ன தெரியுமா? 

     இவ்வுலகின் உயர்ந்த ஒற்றை சொல்லான தவ்ஹீது என்ற பதம் இயக்கரீதியில் முன்னிருத்தப்படுவதாக எண்ணி எத்தனையோ பேர் நான் தவ்ஹீதல்ல..! என்றும் தர்காவை மையப்படுத்தி சுன்னத் வல் ஜமாஅத் என்ற வார்த்தை ஆனாச்சாரங்களின் ஆணிவேராய் நிறுவப்படுவதால் அதை தவிர்ப்பதாக எண்ணி நான் சுன்னத் ஜமாஅத் காரனல்ல..! என்று பலர் இன்றும் சொல்ல காண்கிறோம்.

உங்களில் சில பேருக்குக்கூட இவ்வாக்கத்தின் தலைப்பு ஒருவித சலனங்களை மனதில் ஏற்படுத்தி இருக்கலாம்... சிந்திக்கவேண்டும் சகோ! இவ்விரு வார்த்தைகளின் செயல்முறை வடிவம் ஒருசேர நம்மிடையே அமையா விட்டால் நமக்கு பெயரே வேறு! 

  அறியாமை களையப்படவேண்டியது என்பது சந்தேகமில்லை ஆனால் அவற்றை விளக்கும் முறை அழகிய வழியில் வெளிப்பட வேண்டும் என்பது அவசியமென்பதை விட மார்க்க கடமையும் கூட!. மாறாக முன்முடிவுகள் -பிடிவாதத்தோடு செயல்படுவோரை என்ன செய்ய முடியும் சொல்லுங்கள்???

   நபி வழியில் தான் தமது வாழ்வை அமைத்துக்கொள்வதாக கூறுவோர் மேற்கண்ட நிலைகளை சற்று ஆராய வேண்டும். ஏனெனில் நமது வாழ்வியல் முறைக்கு அல்லாஹ்வின் தூதர் அனைத்திலும் முன்மாதிரியாய் செயல்பட்டிருக்க அடுத்தவர்களின் வழிக்காட்டுதல் அவசியமில்லாத ஒன்று.

இறைநேசர்கள் மதிக்கப்பட வேண்டியவர்கள் என்பதில் சந்தேகமில்லை ஆனால். அவர்கள் வணங்கப்படுபவர்களாக யாரும் பொருள் கொள்ள வழி செய்து விடாதீர்கள்!
நாம் மட்டுமல்ல நாளை அவர்களும் அல்லாஹ்விடத்தில் பதில் சொல்லியாக வேண்டும்!

மனிதா! உன்னுடையஎதிரி[ஷைத்தான்]பற்றித் தெரிந்து கொள்


 PrintE-mail

  மனிதா! உன்னுடைய எதிரியைத் தெரிந்து கொள் 
அல்லாஹ் கூறுகிறான்: ''ஷைத்தான் உங்களுக்கு எதிரியாவான். அவனை எதிரியாகவே ஆக்கிக் கொள்ளுங்கள்! நரகவாசிகளாக ஆவதற்காகவே அவன் தனது கூட்டத்தாரை அழைக்கிறான்.'' (அல்குர்ஆன் 35:6)
"பின்னர் அவர்களின் முன்னும், பின்னும், வலமும், இடமும் அவர்களிடம் வருவேன். அவர்களில் அதிகமானோரை நன்றி செலுத்துவோராக நீ காண மாட்டாய்'' (என்றும் ஷைத்தான் கூறினான்). (அல்குர்ஆன் 7:16,17)
 இடது கையால் சாப்பிடுவான் 
நீங்கள் சாப்பிடும் போது வலது கையால் சாப்பிடுங்கள் குடிக்கும் போது வலது கையால் குடியுங்கள். ஏனெனில் ஷைத்தான் தான் இடது கையால் சாப்பிடுவான். குடிப்பான் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம் 3764)
  தொழ விடமாட்டான் 
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஒரு மனிதர் பொழுது விடியும் வரை (தொழுகைக்கு எழாமல்) உறங்கிக் கொண்டேயிருப்பது பற்றிக் கூறப் பட்டது. அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "அவரது காதில் ஷைத்தான் சிறுநீர் கழித்துவிட்டான்'' என்று கூறினார்கள். (அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 1144)
  இப்படியும் செய்வான்.. 
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: கொட்டாவி ஷைத்தானிடமிருந்து வருவதாகும். உங்கல் எவரேனும் கொட்டாவி விட்டால் தம்மால் முடிந்த வரை அவர் அதை அடக்கிக் கொள்ளட்டும். ஏனெனில், எவரேனும் ஹா' என்று (கொட்டாவியால்) சத்தம் போட்டால் ஷைத்தான் சிரிக்கின்றான். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 3289)
  ஷைத்தானின் லாட்ஜ் மற்றும் ஹோட்டல் 
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:. ஒருவர் இல்லத்திற்குள் நுழையும் போது அல்லாஹ்வை நினைவுகூறாவிட்டால் ஷைத்தான் (தன் கூட்டத்தாரிடம்), "இன்றைய இரவில் உங்களுக்குத் தங்குமிடம் கிடைத்துவிட்டது'' என்று சொல்கிறான். அவர் உணவு உண்ணும்போது அல்லாஹ்வின் பெயர் கூறா விட்டால் ஷைத்தான் "இன்றைய இரவில் நீங்கள் தங்கும் இடத்தையும் உணவையும் அடைந்துகொண்டீர்கள்'' என்று சொல்கிறான். (அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம் 4106)
  ஷைத்தானின் திறவுகோல் 
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: உனக்கு ஏதேனும் துன்பம் ஏற்படும்போது, "நான் (இப்படிச்) செய்திருந்தால் அப்படி அப்படி ஆயிருக்குமே!'' என்று (அங்கலாய்த்துக்) கூறாதே. மாறாக, "அல்லாஹ்வின் விதிப்படி நடந்துவிட்டது. அவன் நாடியதைச் செய்துவிட்டான்'' என்று சொல். ஏனெனில், (இப்படிச் செய்திருந்தால் நன்றாயிருந்திருக்குமே' என்பதைச் சுட்டும்) லவ்' எனும் (வியங்கோள் இடைச்)சொல்லானது ஷைத்தானின் செயலுக்கே வழிவகுக்கும். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம் 5178)
  ஷைத்தான் அழுகிறான் 
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: ஆதமின் மைந்தன் (மனிதன்) சஜ்தா (சிரவணக்கத்திற்கான) வசனத்தை ஓதி சிரவணக்கம் (சஜ்தா) செய்தால் ஷைத்தான் அழுதவாறே "அந்தோ எனக்கு வந்த நாசமே! ஆதமின் மைந்தன் சிரவணக்கம் செய்யும்படி கட்டளையிடப்பட்டான். அவன் சிரவணக்கம் செய்துவிட்டான். அவ னுக்குச் சொர்க்கம் கிடைக்கப்போகிறது. ஆனால் (ஆதி மனிதர் ஆதமுக்குச்) சிரம் பணியும்படி எனக்குக் கட்டளையிடப்பட்டது. நானோ மறுத்து விட்டேன். எனவே, எனக்கு நரகம்தான்'' என்று கூறியபடி விலகிச்செல்கிறான். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம் 133)
  ஷைத்தானின் ஓட்டம் 
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: தொழுகைக்காக (பாங்கு சொல்) அழைக்கப்படும்போது ஷைத்தான் பாங்கு சப்தத்தைக்கேட்கக்கூடாது என்பதற்காக சப்தத்துடன் காற்றை விட்டுக்கொண்டு திரும்பி ஓடுகிறான். பாங்கு சொல் முடித்ததும் முன்னே வருகின்றான். தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டால் (மீண்டும்) திரும்பி ஓடுகிறான். இகாமத் சொல் முடித்ததும் முன்னே வருகின்றான். (தொழுகையில் ஈடுபட்டுள்ள) மனிதருடைய உள்ளத்தில் ஊடுருவி ஊசலாட்டத்தை ஏற்படுத்தி, "இதை நினைத்துப் பார்; அதை நினைத்துப் பார்'' என்று அவர் அதற்கு முன் நினைத்திராத விஷயங்களை அவருக்கு நினைவூட்டிக் கூறுகின்றான். எந்த அளவிற்கென்றால், அந்த மனிதர் தாம் எத்தனை ரக்அத்கள் தொழுதோம் என்பதை அறியாதவராக மாறிவிடுகிறார். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 608)
  பிளவு ஏற்படுத்துவான் 
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: அரேபிய தீபகற்பத்தில் தொழுகையாளர்கள் தன்னை வணங்குவார்கள் என்ற நம்பிக்கையை ஷைத்தான் இழந்துவிட்டான். எனினும், அவர்களிடையே பிளவை உருவாக்குவ(தில் வெற்றி கண்டு விட்ட)ன். (அறிவிப்பவர்: ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம் 5417)
  சந்தோசப்படுகிறான் 
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் ; அரேபிய தீபகற்பத்தில் தன்னை வணங்குவார்கள் என்ற நம்பிக்கையை ஷைத்தான் இழந்துவிட்டான். எனினும், நீங்கள் லேசாக கருதக்கூடிய அமல்கள் மூலமாக சந்தோஷப்படுகிறான். (நூல்: அஹ்மத்)
  மந்திர முடிச்சு 
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: உறங்கும்போது உங்கள் தலையின் பின்பக்கத்தில் ஷைத்தான் மூன்று முடிச்சுகளைப் போடுகிறான். ஒவ்வொரு முடிச்சின்போதும் இன்னும் உனக்கு நீண்ட இரவு (ஓய்வெடுக்க எஞ்சி) இருக்கிறது. ஆகவே, நீ உறங்கு' என்று கூறி (உங்களை விழிக்கவிடாமல் உறங்க வைத்து)விடுகிறான். நீங்கள் (அவனது கூற்றை ஏற்காமல்) கண்விழித்து அல்லாஹ்வை நினைவு கூர்ந்தால் ஒரு முடிச்சு அவிழ்ந்து விடுகிறது. நீங்கள் அங்கசுத்தி (உளூ) செய்தால் மற்றொரு முடிச்சு அவிழ்ந்துவிடுகிறது. நீங்கள் தொழுது விட்டால் முடிச்சுகள் முழுவதும் அவிழ்ந்துவிடுகிறது. நீங்கள் சுறுசுறுப்புடனும் உற்சாகத்துடனும் காலைப் பொழுதை அடைவீர்கள். இல்லையெனில் மனக்குழப்பத்துடனும், சோம்பலுடனும் காலைப் பொழுதை அடைவீர்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 1142)
  ஷைத்தானின் கேள்விகள் 
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: உங்கல் ஒருவரிடம் (அவர் மனத்திற்குள்) ஷைத்தான் வந்து, "இதைப் படைத்தவர் யார்? இதைப் படைத்தவர் யார்?'' என்று கேட்டுக் கொண்டே வந்து, இறுதியில், "உன் இறைவனைப் படைத்தவர் யார்?'' என்று கேட்கின்றான். இந்தக் (கேள்வி கேட்கும்) கட்டத்தை அவன் அடையும்போது அவர் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடட்டும். (இத்தகைய சிந்தனையிருந்து) விலகிக்கொள்ளட்டும். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 3276)
 ஷைத்தானிடமிருந்து பாதுகாப்பு பெற 
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : சூரத்துல் பகரா ஓதப்டுகிற வீட்டிலிருந்து ஷைத்தான் விரண்டோடுகின்றான். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம்)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: லா இலாஹ இல்லல் லாஹ், வஹ்தஹு லாஷரீக்க லஹு, லஹுல் முல்க்கு வ லஹுல் ஹம்து, வ ஹுவ அலா குல் ஷய்இன் கதீர் - என்று ஒரு நால் நூறு முறை சொல்கிறவருக்கு, பத்து அடிமைகளை விடுதலை செய்வதற்குச் சமமா(க நற்பலன் கிடைக்கும். மேலும் நூறு நன்மைகள் எழுதப்படும். (அவர் புரிந்த) நூறு தீமைகள் அழிக்கப்படும். மேலும் அந்த நால் மாலை நேரம் வரும் வரை ஷைத்தானிடமிருந்து (பாதுகாக்கும்) அரணாக அது இருக்கும். மேலும், அவர் புரிந்த சிறந்த நற்செயலை எவரும் செய்ய முடியாது; ஒருவர் இதை விட அதிகமான (தடவைகள் இதை ஓதினால் அல்லது மிக முக்கியமான) ஒரு நற்செயல் புரிந்தாலே தவிர. (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 3293)
"என் இறைவா! என்னை நீ வழி கெடுத்ததால் பூமியில் (தீமைகளை) அழகாக்கிக் காட்டுவேன். அவர்களில் உன்னால் தேர்ந்தெடுக்கப்பட்ட உனது அடியார்களைத் தவிர (மற்றவர்கள்) அனைவரையும் வழி கெடுப்பேன்'' என்று கூறினான். (அல்குர்ஆன் 15:39,40)