நரகம் ஓர் அறிமுகம்


                                  .



நரகத்தில் நிரந்தரம் 
  إِنَّ الْمُجْرِمِينَ فِي عَذَابِ جَهَنَّمَ خَالِدُونَ .   لَا يُفَتَّرُ عَنْهُمْ وَهُمْ فِيهِ  مُبْلِسُونَ .                   
  وَمَا ظَلَمْنَاهُمْ وَلَٰكِن كَانُوا هُمُ الظَّالِمِينَ.  وَنَادَوْا يَا مَالِكُ لِيَقْضِ عَلَيْنَا رَبُّكَ ۖ قَالَ إِنَّكُم مَّاكِثُونَ
      நிச்சயமாக, குற்றவாளிகள் நரக வேதனையில் என்றென்றும் தங்கியிருப்பார்கள். அவர்களுக்கு (வ்வேதனையான)து குறைக்கப்பட மாட்டாது, அதில் அவர்கள் நம்பிக்கையையும் இழந்து விடுவார்கள். எனினும், நாம் அவர்களுக்கு யாதோர் அநியாயமும் செய்யவில்லை; ஆனால் அவர்கள் தமக்குத் தாமே அநியாயம் செய்து கொண்டவர்களே. மேலும், அவர்கள் (நரகத்தில்) ”யா மாலிக்உமது இறைவன் எங்களை முடித்து விடட்டுமே!” என்று சப்தமிடுவார்கள்; அதற்கு அவர்நிச்சயமாக நீங்கள் (இங்கு) நிலைத்து இருக்க வேண்டியவர்களேஎன்று கூறுவார். 43:(74-77)
   إِنَّ الَّذِينَ كَفَرُوا مِنْ أَهْلِ الْكِتَابِ وَالْمُشْرِكِينَ فِي نَارِ جَهَنَّمَ خَالِدِينَ فِيهَا ۚ أُولَٰئِكَ هُمْ شَرُّ الْبَرِيَّة                  ِநிச்சயமாக வேதக்காரர்களிலும் முஷ்ரிக்குகளிலும் எவர்கள் நிராகரிக்கிறார்களோ அவர்கள் நரக நெருப்பில் இருப்பார்கள்அதில் என்றென்றும் இருப்பார்கள்இத்தகையவர்கள்தாம் படைப்புகளில் மிகக் கெட்டவர்கள் ஆவார்கள். 98:6
 إِنَّ الَّذِينَ كَفَرُوا وَصَدُّوا عَن سَبِيلِ اللَّهِ قَدْ ضَلُّوا ضَلَالًا بَعِيدً.                   
   إِنَّ الَّذِينَ كَفَرُوا وَظَلَمُوا لَمْ يَكُنِ اللَّهُ لِيَغْفِرَ لَهُمْ وَلَا لِيَهْدِيَهُمْ طَرِيقًا.          
                     إِلَّا طَرِيقَ جَهَنَّمَ خَالِدِينَ فِيهَا أَبَدًا ۚ وَكَانَ ذَٰلِكَ عَلَى اللَّهِ يَسِيرًا
நிராகரித்து அல்லாஹ்வின் பாதையிலிருந்து (மனிதர்களை) தடுத்து கொண்டு இருக்கிறார்களே நிச்சயமாக அவர்கள் வழி கேட்டில் வெகு தூரம் வழி கெட்டுச் சென்று விட்டார்கள்.
நிச்சயமாக (இவ்வாறு) நிராகரித்து, அக்கிரமம் செய்பவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பளிக்க மாட்டான்; அன்றி அவர்களை நேர் வழியிலும் செலுத்த மாட்டான். நரகத்தின் வழியைத் தவிரஅதில் அவர்கள் என்றென்றும் தங்கி விடுவார்கள்; இது அல்லாஹ்வுக்கு சுலபமாக இருக்கிறது. 4:167,169
إِلَّا بَلَاغًا مِّنَ اللَّهِ وَرِسَالَاتِهِ ۚ وَمَن يَعْصِ اللَّهَ وَرَسُولَهُ فَإِنَّ لَهُ نَارَ جَهَنَّمَ خَالِدِينَ فِيهَا أَبَدًا 
அல்லாஹ்விடமிருந்து (வருவதை) எடுத்துச் சொல்வதும், அவனுடைய தூதுவத்துவத்தையும் தவிர (எனக்கு வேறில்லை) எனவே, எவர் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்கிறாரோ அவருக்கு நிச்சயமாக நரக நெருப்புத்தான். அதில் அவர் என்றென்றும் இருப்பர்என் (நபியே!) நீர் கூறும். 72:23
إِنَّ الَّذِينَ كَفَرُوا بِآيَاتِنَا سَوْفَ نُصْلِيهِمْ نَارًا كُلَّمَا نَضِجَتْ جُلُودُهُم بَدَّلْنَاهُمْ جُلُودًا غَيْرَهَا لِيَذُوقُوا الْعَذَابَ ۗ إِنَّ اللَّهَ كَانَ عَزِيزًا حَكِيمًا 

யார் நம் வேதவசனங்களை நிராகரிக்கிறார்களோ, அவர்களை நாம் நிச்சயமாக நரகத்தில் புகுத்தி விடுவோம்; அவர்கள் தோல்கள் கருகிவிடும் போதெல்லாம் அவையல்லா (வேறு) தோல்களை, அவர்கள் வேதனையைப் (பூரணமாக) அனுபவிப்பதற்கென, அவர்களுக்கு நாம் மாற்றிக் கொண்டே இருப்போம்நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும் ஞானமுள்ளவனாகவும் இருக்கின்றான். 4:56
أَلَمْ تَكُنْ آيَاتِي تُتْلَىٰ عَلَيْكُمْ فَكُنتُم بِهَا تُكَذِّبُونَ                        
قَالُوا رَبَّنَا غَلَبَتْ عَلَيْنَا شِقْوَتُنَا وَكُنَّا قَوْمًا ضَالِّينَ                      
   رَبَّنَا أَخْرِجْنَا مِنْهَا فَإِنْ عُدْنَا فَإِنَّا ظَالِمُونَ                            
قَالَ اخْسَئُوا فِيهَا وَلَا تُكَلِّمُونِ                                       

என்னுடைய வசனங்கள் உங்களுக்கு ஓதிக் காண்பிக்கப்படவில்லையா? அப்போது நீங்கள் அவற்றைப் பொய்ப்பிக்கலானீர்கள்” (என்று கூறப்படும்) ”எங்கள் இறைவனே! எங்களை எங்களுடைய துர்பாக்கியம் மிகைத்துவிட்டது; நாங்கள் வழிதவறிய கூட்டத்தினர் ஆகிவிட்டோம்என்று அவர்கள் கூறுவார்கள்.

எங்கள் இறைவனே! நீ எங்களை (ந் நரகத்)தை விட்டு வெளியேற்றுவாயாக திரும்பவும் (நாங்கள் பாவம் செய்ய) முற்பட்டால் நிச்சயமாக நாங்கள் அநியாயக்காரர்கள்!” (என்றும் கூறுவர்.)(அதற்கவன்) ”அதிலேயே இழிந்து கிடங்கள்; என்னுடன் பேசாதீர்கள்!” என்று கூறுவான். 23:(105-108)
நரகத்தின் ஆழம்
 
நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் (ஒரு சபையில்) இருந்தோம், அப்போது திடீரெண்டு பாரிய சத்தத்துடன் ஒரு பொருள் விழுந்ததின் சத்தத்தை கேட்டோம், இது என்ன சத்தம் என்பது உங்களுக்கு தெரியுமா? என நபி(ஸல்) அவர்கள் எங்களிடம் கேட்டார்கள், அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கு அறிவார்கள் என நாங்கள் கூறினோம். அது, எழுபது ஆண்டு காலமாக அல்லாஹ் நரகத்தில் வீசிய ஒரு கல்லாகும், இப்போதுதான் நரகத்தின் அடித்தழத்தை சேந்திருக்கின்றது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
உத்பா இப்னு கஸ்வான் (ரலி) அவர்கள் குத்பா பிரசங்கம் செய்து கொண்டிருக்கும் போது (மக்களுக்கு கூறினார்கள்) எங்களுக்கு கூறப்பட்டது, நரகத்தில் வீசப்பட்ட அந்தக்கல்லு, நரகத்தின் ஓரத்திலிருந்து வீசப்பட்டது. அது நரகத்தின் அடியை சேர்வதற்கு எழுபது ஆண்டுகள் பிடித்திருக்கின்றது, அல்லாஹ்வின் மீது ஆணையாக அதில் நீங்கள் நிரப்பப்படுவீர்கள், என்ன, நீங்கள் ஆச்சரியப்படுகின்றீர்களா? எனக் கேட்டார்கள். (முஸ்லிம்)

நரக கள்ளி மரம்
(
நரகத்திலுள்ள) கள்ளிமரத்தின் ஒரு துளி, இந்த உலகத்தில் விழுந்தால், இவ்வுலகிலுள்ளவர்களின் வாழ்க்கையை கெடுத்துவிடும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (நஸாயி, திர்மிதி, இப்னு மாஜா)
உலக செல்வந்தனும் ஏழையும்  (நாளை மறுமையில்) உலகத்தில் மிகவும் அருட்கொடைகளுடன் வாழ்ந்த ஒரு நரகவாதியை கொண்டு வரப்பட்டு, அவனை நரகத்தில் ஒரு முறை மூழ்கி எடுக்கப்படும், பின்பு அவனிடத்தில், ஆதமுடைய மகனே! (உலகத்தில்) ஏதாவது நலவை கண்டாயா? ஏதாவது நலவை அனுபவித்தாயா? என்று கேட்கப்படும். அதற்கு அவன், அல்லாஹ்வின் மீது ஆணையாக, இல்லை இறைவா, எனக்கூறுவான். (நாளை மறுமையில்) உலகத்தில் மிகவும் வறுமையில் வாழ்ந்த ஒரு மனிதனை கொண்டு வரப்பட்டு, அவனை சுவர்க்கத்தில் ஒரு முறை மூழ்கி எடுக்கப்படும், பின்பு அவனிடத்தில், ஆதமுடைய மகனே! (உலகத்தில்) ஏதாவது கஷ்டத்தை கண்டாயா? ஏதாவது கஷ்டத்தை அனுபவித்தாயா? என்று கேட்கப்படும். அதற்கு அவன், அல்லாஹ்வின் மீது ஆணையாக, இல்லை இறைவா, எனக்கூறுவான். (முஸ்லிம்)
நரக நெருப்பிலிருந்து விடுதலை பெற, எதை கொடுக்கவும் தயார்
நாளை மறுமையில் நரகவாதிகளிலிருந்து ஒருவரை கொண்டு வரப்பட்டு, இந்த பூமியிலுள்ளவைகள் உனக்காக இருந்து (நரகத்திலிருந்து விடுவிக்கப்படுவதற்காக) அதை நீ அற்பணமாக கொடுப்பாயா? என்று கேட்கப்படும், அதற்கு அவன் ஆம் எனக்கூறுவான். அப்போது அல்லாஹ் கூறுவான், நான் உன்னிடமிருந்து அதைவிட இலகுவானதையே விரும்பினேன். நீ ஆதமுடைய முதுகம் தண்டில் இருக்கும் போது, எனக்கு கொஞ்சம் கூட இணைவைக்கக்கூடாது என உன்னிடம் உறுதி மொழி எடுத்தேன், நீயோ, அதை மறுத்து எனக்கு இணைவைக்கக்கூடியவனாகவே இருந்தாய் என அல்லாஹ் கூறியதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத்)
நரகத்திலிருந்து பாதுகாப்பு
நபி(ஸல்) அவர்கள் நரகத்தை பற்றிக்கூறி அதிலிருந்து பாதுகாப்புத் தேடி தன் முகத்தை திருப்பிக் கொண்டார்கள், மீண்டும் நபி(ஸல்) அவர்கள் நரகத்தை பற்றிக்கூறி அதிலிருந்து பாதுகாப்புத் தேடி தன் முகத்தை திருப்பிக் கொண்டார்கள், .. .. .. .. பின்பு கூறினார்கள், பேரீத்தம் பழத்தின் ஒரு துண்டைக் கொண்டாவது நரகத்தை பயந்து கொள்ளுங்கள் அதற்கு முடியாவிட்டால் நல்ல வார்த்தையைக் கொண்டாவது (அந்த நரகத்தை பயந்து கொள்ளுங்கள்) என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)
பேரீத்தம் பழத்தின் ஒரு துண்டைக் கொண்டாவது நரகத்தை பயந்து கொள்ளுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)
சுவர்க்கம் செல்லாத மூன்று துற்பாக்கியவான்கள்
மூவர் சுவர்க்கத்தினுள் நுழையமாட்டார்கள்,
 1. தொடர்ந்து மது அருந்துபவன்,
2. இரத்த உறவை துண்டித்து நடப்பவன்,
3.சூனியத்தை உண்மை படுத்துபவன்,
தொடர்ந்தும் போதை அருந்தியவனாக யார் மரணிக்கின்றானோ, அவனுக்கு அல்லாஹ் கவ்தா என்னும் ஆற்றிலிருக்கும் (அசுத்தத்தை) புகட்டுவான்
. கவ்தா ஆறு என்பது என்ன? என்று கேட்கப்பட்டது. விபச்சாரிகளின் அபத்திலிருந்து ஓடும் (அசுத்தமாகும்) விபச்சாரிகளின் அபத்திலிருந்து வரும் துர்நாற்றம் நரகவாசிகளுக்கு வேதனை கொடுக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத்)
போதைப் பொருளை உட்கொள்பவர்களுக்கு கிடைக்கும் தண்டனை
(
இவ்வுலகில்) போதைப் பொருளை அருந்துபவருக்கு தீனத்துல் கபாலை (மறுமையில்) அருந்த வைப்பது அல்லாஹ்வின் கடமையாகும், தீனத்துல் கபால் என்றால் என்ன? அல்லாஹ்வின் தூதரே! என (நபித்தோழர்கள்) கேட்டார்கள். நரகவாதிகளின் வேர்வை, அல்லது நரகவாதிகளின் ஊனம் என்றார்கள். (புகாரி, முஸ்லிம்)
சூரிய கிரகணம் ஏற்பட்டு, அதற்காக நபி (ஸல்) அவர்கள் தொழுகை நடத்தினார்கள், பின்பு கூறினார்கள், எனக்கு நரகம் காட்டப்பட்டது, இன்றைய நாளின் அவலத்தைப் போல் நான் என்றும் பார்த்ததில்லை என கூறினார்கள். (புகாரி)
நரகத்தில் பெண்களின் எண்ணிக்கையே அதிகம்!
(
ஒரு நீளமான ஹதீதில்…… நபி (ஸல்) அவர்கள் சூரிய கிரகணத் தொழுகையை முடித்த பின், அங்கிருந்த நபித்தோழர்கள்)
அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் தொழுமிடத்தில் ஏதோ ஒரு பொருளை பிடித்தது போன்று நாங்கள் பார்த்தோம் பின்பு (அவ்விடத்திலிருந்து) பின் வந்ததையும் நாங்கள் பார்த்தோம் என்றார்கள், நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், நான் சுவர்க்கத்தை பார்த்தேன், (அங்கிருந்து) திராட்சைப் பழக்குலையை பிடித்தேன், அதை நான் எடுத்திருந்தால் இவ்வுலகம் இருக்கும் வரை நீங்கள் அதை உண்ணக்கூடியவர்களாக இருந்திருப்பீர்கள், இன்னும் நரகத்தையும் காட்டப்பட்டேன், அன்றைய நாளின் அவலத்தைப் போல் நான் என்றும் பார்த்ததில்லை, அதில் அதிகம் பெண்கள் இருப்பதைக் கண்டேன், அல்லாஹ்வின் தூதரே! (அது) எதனால் என்றார்கள், அவர்கள் நிராகரிப்பதின் காரணமாக என்றார்கள், அல்லாஹ்வையா நிராகரிக்கின்றார்கள்? என கேட்கப்பட்டது, கணவனை நிராகரிக்கின்றார்கள், அவர்களுக்கு செய்யப்படும் உபகாரத்தை நிராகரிக்கின்றார்கள், அந்தப்பெண்களின் ஒருத்திக்கு காலம் முழுக்க உபகாரம் செய்து, பின்பு உங்களில் ஒரு தவறை அவள் கண்டுகொண்டால், நான் உன்னிடத்தில் எந்த நலவையும் கண்டதில்லை என்று கூறிவிடுவாள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)
சுவர்க்கத்தை நோட்டமிட்டேன், அதில் அதிகமானவர்களை ஏழைகளாக பார்த்தேன், இன்னும் நரகத்தை நோட்டமிட்டேன், அதில் அதிகமானவர்களை பெண்களாக பார்த்தேன் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)
நோன்புப் பெருநாள் அல்லது ஹஜ்ஜுப் பெருநாளில் நபி(ஸல்) அவர்கள் தொழுமிடத்துக்கு வெளியாகிச் சென்றார்கள், (தொழுகையை முடித்துவிட்டு) திரும்பி மக்களுக்கு உபதேசம் செய்தார்கள். தருமம் செய்யும்படி அவர்களுக்கு ஏவினார்கள், கூறினார்கள், மனிதர்களே! தர்மம் செய்யுங்கள், பெண்களின் பக்கமும் சென்றார்கள், பெண்கள் கூட்டமே! தர்மம் செய்யுங்கள், உங்களை நரகவாதிகளில் அதிகமாகவர்களாக நிச்சசயமாக நான் பார்த்தேன் என்றார்கள், எதனால் அது அல்லாஹ்வின் தூதரே! என (அங்கிருந்த) பெண்கள் கேட்டனர், அதற்கு நபி (ஸல்) அவர்கள், நீங்கள் அதிகம் சாபம் இடுகின்றீர்கள், கணவர்மாரின் உபகாரத்தை மறுக்கின்றீர்கள், அறிவிலும் மார்க்கத்திலும் குறைவுள்ள உங்களைவிட மிகவும் அறிவுள்ள ஒரு ஆணிண் சிந்தனையை போக்கக்கூடியவர்களாக வேறு யாரையும் நான் பார்க்கவில்லை என்றார்கள்…. (புகாரி)
மிருகத்தின் மீது இரக்கம் காட்டாதவர்களுக்கு கிடைக்கும் தண்டனை
பசியால் சாகும் வரை ஒரு பூனையை அடைத்து வைத்திருந்த பெண் ஒருத்தி (நரகத்தில்) வேதனை செய்யப்பட்டு நரகத்தினுள் நுழைந்தாள், நீ அந்த பூனையை அடைத்து வைத்திருந்த போது தண்ணீர் புகட்டவுமில்லை, உணவு கொடுக்கவுமில்லை, இன்னும் அதை விட்டுவிடவுமில்லை, (அப்படி அதை அவிழ்த்து) விட்டடிருந்தால் அது பூமியிலுள்ள புழுப்பூச்சிக்களை உண்டிருக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)
கடும் சூடும் கடும் குளிரும் நரகத்திலிருந்தே!
நரகம் அல்லாஹ்விடத்திலே முறையிட்டது, என் இறைவா! என்னில் சிலது என்னை சாப்பிட்டு விட்டது, அப்போது அல்லாஹ் இரு மூச்சி விடுவதற்கு அனுமதித்தான். ஒரு மூச்சு குளிர் காலத்திலும், மற்ற மூச்சு கோடை காலத்திலாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி


சுவர்க்கமும் நரகமும் தற்கித்துக் கொண்டது
சுவர்க்கமும் நரகமும் தற்கித்துக் கொண்டது, நரகம் கூறியது, அடக்கி ஆழ்பவர்களும் பெருமையடித்தவர்களைக் கொண்டு நான் தனிமைப்படுத்தப்பட்டுள்ளேன். சுவர்க்கம் கூறியது, பலஹீனர்களும், மனிதர்களால் மதிக்கப்படாதவர்களும், இயலாவாளிகளுமே என்னிடம் நுழைவார்கள். அல்லாஹ் சுவர்க்கத்திற்கு கூறினான், நீ என்னுடைய அருட்கொடையாகும், என் அடியார்களில் நான் நாடியவர்களை உன்னைக் கொண்டு அருள்புரிவேன். அல்லாஹ் நரகத்திற்கு கூறினான், நீ என்னுடைய தண்டனையாகும், என் அடியார்களில் நான் நாடியவர்களை உன்னைக் கொண்டு தண்டிப்பேன். உங்களில் ஒவ்வொருவரையும் அவர்களைக் கொண்டு நிரப்புவேன். நரகமோ நிரம்பாது, அப்போது அல்லாஹ் தன் கால் பாதத்தை நரகத்தின் மீது வைப்பான், அப்போது அது போதும் போதும் எனக்கூறும், அதில் சிலது சிலதுடன் சேர்ந்து விடும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
சுவர்க்கத்தில் அதிகமானவர்கள் ஏழைகள்
நான் சுவர்க்கத்தை நோட்டமிட்டேன், அதில் அதிகமானவர்களை ஏழைகளாக கண்டேன், இன்னும் நரகத்தை நோட்டமிட்டேன் அதில் அதிகமானவர்களை பெண்களாக கண்டேன் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)
செயல்படாத அழைப்பாளருக்கு மறுமையில் கொடூர தண்டனை
 
நாளை மறுமையில் ஒரு மனிதனை கொண்டு வரப்பட்டு, நரகத்தில் வீசப்படும், அவனுடைய குடல் நரகத்தில் வெளியாகி, திருகையை சுத்தும் கழுதையைப் போன்று அவன் சுத்துவான். நரகவாதிகள் அவனிடம் ஒன்று சேர்ந்து, மனிதனே! உனக்கு என்ன நேர்ந்தது? நீ எங்களுக்கு நன்மையை ஏவி தீமையை தடுக்கக்கூடியவனாக இருக்கவில்லையா? (என கேட்பார்கள்) அதற்கு அவன் கூறுவான், நான் உங்களுக்கு நன்மையை ஏவக்கூடியவனாக இருந்தேன், (ஆனால்) அதை நான் செய்யமாட்டேன், தீமையை விட்டும் உங்களை தடுக்கக்கூடியவனாக இருந்தேன், (ஆனால்) அதை நான் செய்வேன் என அவன் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)
அல்லாஹ் நம் அனைவரையும் கொடிய நரகத்தின் தீங்கிலிருந்து பாதுகாப்பானாக!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

1.கணவனைக் கவரும் வழிகள் 40

பத்ருப் போர் உணர்த்தும் பாடமும் படிப்பினைகளும்!

மண்ணறை வேதனை 001