தொப்பியில் இல்லை இஸ்லாம்!



[ தொப்பி போடுவது சுன்னத் என்பது இன்றைய ஹஜ்ரத்மார்களின் கண்டுபிடிப்புத்தானே தவிர மத்ஹப்களிலோ அல்லது நபிவழியிலோ தொப்பி அணிவது சுன்னத் என்பதற்கு ஆதாரமில்லை.
தாடி வையுங்கள் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஏவியது போல் தொப்பி, தலைப்பாகைக்கு எந்த ஏவலும் அவர்களிடமிருந்து வரவில்லை. திறந்த தலையுடன் இருந்த நபித் தோழர்களை அங்கீகரித்துள்ளார்கள். எண்ணெயிட்டு தலை சீவி அலங்கரித்துக் கொள்ளுங்கள் என்றெல்லாம் கூறியுள்ளார்கள்.
தொப்பி என்பது இஸ்லாமிய சின்னமல்ல. இன்றைய ஹஜ்ரத்துகளே ''தொப்பி இஸ்லாமிய சின்னம்" என்ற நவீன கண்டுபிடிப்பபைப் பரப்புகிறார்கள். எனவே, எவரும் தொப்பி அணிவதாக இருந்தால் அது அவரது விருப்பம். தாராளமாக அவர் அணியலாம். அணிந்தே தொழலாம். ஆனால் தலை மறைக்க வேண்டும் என்று பிறரை ஏவும் உரிமை எவருக்கும் இல்லை.
சில ஆலிம்களின் வரட்டுக்கவுரவமும் பிடிவாதமுமே இப்பிரச்சனைக்குக்காரணம். இதனால் சமூகம் இரண்டாக என்ன நூறாக பிளவுபட்டுப்போனாலும் அதைப்பற்றியெல்லாம் அவர்களுக்கு கவலையில்லை, தங்களது வாதம் வெற்றிபெறவேண்டும் என்பது மட்டுமே அவர்களது நோக்கமாக இருக்கிறது. இஸ்லாத்தை தொப்பியைக்கொண்டு எடைபோட்டு பழக்கப்பட்ட இவர்களுக்கு அல்லாஹ்தான் நேர்வழி காட்ட வேண்டும்.]
கேள்வி: மத்ஹப் நூல்கள் தொழுகையில் தொப்பி போடுவதை சுன்னத்தாக்கி இருக்கும்போது, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தலைப்பாகையுடன் தொழுததற்கு ஹதீஸ் இருக்கும்போது, திறந்த தலையாக பள்ளியில் வந்து தொழுவதுதான் நபிவழியா?
பதில்: தொப்பி போடுவது சுன்னத் என்பது இன்றைய ஹஜ்ரத்மார்களின் கண்டுபிடிப்புத்தானே தவிர அவர்கள் நம்பிக் கொண்டிருக்கக் கூடிய மத்ஹப்களிலோ ;அல்லது நபிவழியிலோ தொப்பி அணிவது சுன்னத் என்பதற்கு ஆதாரமில்லை.
''எவராவது சோம்பலின் காரணத்தால் தலையை திறந்து தொழுதால் அது மக்ரூஹ், பணிவை வெளிப்படுத்த தலையைத் திறந்து தொழுதால் அது தவறில்லை" என்று தீர்ப்புக் கூறுகிறது ஹனபி மத்ஹப். துர்ருல் முக்தார் பாகம் 1, பக்கம் 549-ல் இச்சட்டம் உள்ளது.
விடாப்பிடியாக மத்ஹப்களைப் பிடித்துக் கொண்டு அலைவோர் என்ன செய்ய வேண்டும், தலையைத் திறந்து தொழுது தமது பணிவை வெளிப்படுத்த வேண்டாமா? (இந்த சட்டம் குர்ஆன், சுன்னாவிலிருந்து எடுக்கப்பட்டவையல்ல என்பது தனி விஷயம்) எந்த மத்ஹப் தலையை மூடுவது சுன்னத் என்கிறது? ஹனபி தொழுகை நூல் என்று வெளியிடுவார்கள், அதிலிருந்தாவது தலையை மறைப்பது சுன்னத் என்பதற்கு ஆதாரம் காட்ட முடியுமா? இது ஹஜ்ரத்மார்களின் வெறும் யூக கண்டுபிடிப்பாகும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பல சந்தர்ப்பங்களில் தலையை மறைத்திருந்தார்கள் என்பது உண்மைதான். அது மார்க்கம் சம்பந்தப்பட்ட தலை மறைப்பா? அல்லது அந்நாட்டு வழக்கமா?மார்க்கம் சார்ந்த தலைமறைப்பு என்பதற்கு எந்த ஆதாரமுமில்லை. ஏனெனில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை எதிர்த்தவர்கள்கூட தலையை மறைத்துத்தான் இருந்தார்கள்.பாலைவனத்தின் வெயில், காற்றில் பறக்கும் தூசிமணல் இவைகளைத் தவிர்ப்பதற்காக தலையில் துணியைப் போட்டுக் கொண்டார்கள். அந்த வழக்கம்தான் இன்றுவரை அரபு நாடுகளில் நாட்டுக் கலாச்சாரமாகவே பின்பற்றப்பட்டு வருகிறது. தலைப்பாகை அணியுங்கள், தலையை மறையுங்கள் என்ற எந்த அறிவிப்புகளும் ஆதாரப்பூர்வமாகக் கிடைக்கவில்லை. பெண்களுக்கு மட்டும் தலையை மறைக்கும் கட்டளை வந்துள்ளது.
''பருவமடைந்த பெண் தன் தலையைத் திறந்து தொழுதால் அந்தத் தொழுகையை அல்லாஹ் ஏற்க மாட்டான்" என்பது நபிமொழி 'ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா" அறிவிக்கும் இச் செய்தி 'திர்மிதி" என்ற நூலில் பதிவாகியுள்ளது.இதுபோன்று ஆண்கள் தலையை மறைப்பது சுன்னத் என்பதற்கு ஒரு அறிவிப்பைக் காட்டச் சொல்லுங்கள் பார்ப்போம். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தலையை மறைத்திருந்தார்கள் என்பதற்கு சில அறிவிப்புகளைக் கொடுப்பார்கள். பெங்களூரைச் சார்ந்த 'ஸைஃபுத்தீன் ரஷாதி" என்பவர் 'தொப்பி, தலைப்பாகை" என்று ஒரு நூல் எழுதியுள்ளார். 'ஷரீஅத் பாதுகாப்பு(?) பேரவை" இந்நூலை வெளியிட்டுள்ளது. இதில் பல பலவீனமான, அறிவுக்குப் பொருந்தாத பல செய்திகளை வெளியிட்டுள்ளார். சிலது பலவீனமானதுதான் என்று அவரே ஒத்துக்கொள்கிறார். (அந்த நூல் பக்கம்: 28-ல்).
''ஐவேளைத் தொழுகையில் மூன்று முழு தலைப்பாகையும், ஜும்ஆ, ஈத் பெருநாள்களில் ஏழு முழு தலைப்பாகையும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அதிக சந்தர்ப்பங்களில் அணிந்துள்ளார்கள்". (அன்வர் ஷாஹ் காஷ்மீரி ரஹ்மதுல்லாஹி அலைஹி, நூல்: அல் அர்புஃஷ் ஷதி ஷாஹ் திர்மிதி)
இச்செய்தி அதே நூல் பக்கம் 17-ல் வருகிறது. பெரிய ஆதாரம் இருப்பதாக மக்களை நம்ப வைக்கும் மோசடி இது. இந்த செய்தியை அறிவிப்பவரைக் கவனியுங்கள். காஷ்மீரைச் சார்ந்த அன்வர் ஷாஹ் என்பவர் அறிவிக்கிறார். இவர் நபித் தோழரா?, தாபிஈயா?, தபவுத்தாபிஈயா?, அதற்கும் அடுத்த நூற்றாண்டைச் சேர்ந்தவரா? ஸ ஒன்றுமில்லை. மிக, மிக, மிகப் பிற்காலத்தில் பிறந்தவர். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஏழு முழம், மூன்று முழம் தலைப்பாகை அணிவர் என்று எப்படி அறிவிக்கிறார்?. வேறெதாவது முந்தைய நூலைப்ப பார்த்து அறிவிக்கிறார் என்றால் அந்த மூல நூலை வெளியிடலாமே? இவரது செய்தியை வெளியிடும் அவசியம் என்ன? வெறும் பிரம்மையை ஏற்படுத்தும் திட்டம்தானேஸ தொப்பி, தலைப்பாகை சுன்னத் என்ற தமது குளறுபடியான பத்வாக்களுக்கு இப்படிப்பட்ட ஆதாரங்கள்தான் அவர்களுக்குக் கிடைக்கும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும், நபித் தோழர்களும் தலை திறந்த நிலையில் இருந்துள்ளதற்கு ஏராளமான ஆதாரங்கள் கிடைக்கின்றன.நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஒளுவை வர்ணிக்கும் ஏராளமான ஹதீஸ்கள் உள்ளன. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம் நாட்டு வழக்கமாக, தட்ப வெட்ப நிலை, இயற்கைப் பாதிப்புகளிலிருந்து பாதுகாக்க தiலைப்பாகை அணிந்திருப்பார்களேயானால், அந்தத் தலைப்பாகையை கழற்றி விட்டு தம் தலைக்கு மஸஹ் செய்யாமல் தலைப்பாகையின் மீதே தண்ணீரை தொட்டுத் தடவிக் கொள்ளும் பழக்கத்தையே கடைபிடித்தார்கள். இதைக் கவனத்தில் வைத்துக் கொண்டு நாம் ஒளு சம்பந்தமான ஹதீஸ்களை அணுகினால் நபி ஸல்லல்லாஹ{அலைஹி வஸல்லம் அவர்கள் மிகக் குறைந்த சந்தர்ப்பங்களிலேயே தலைபாகை அணிந்துள்ளார்கள். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் திறந்த தலையுடனே இருந்துள்ளார்கள் என்பதைத் தெளிவாக விளங்கலாம்.
ஏனெனில் தலைப்பாகையின் மீது மஸஹ் செய்வதற்காக வரும் செய்திகள் மிக, மிக சொற்பமே.தலைப்பாகை மஸஹ் - 'அம்ர் இப்னு உமைய்யா ரளியல்லாஹு அன்ஹு" மூலம் (புகாரி 205), 'முகீரதிப்னு ஷ{ஃபா ரளியல்லாஹு அன்ஹு மூலம் (திர்மிதி 100) ஆகியவற்றில் பதிவாகியுள்ளது. இதே செய்தி முஸ்லிம், நஸயி, அஹ்மத், இப்னு மாஜா ஆகிய நூல்களிலும் கிடைக்கின்றன.
தலையின் மீது மஸஹ் - புகாரியின் எண்கள் 140, 159, 164, 185, 186, 191, 192, 197, 199 மற்றும் ஏராளமான இடங்களில் காணக்கிடைக்கின்றன. தலைக்கு மஸஹ் செய்வது சம்பந்தமாக இதர நூல்களில் வரும் விபரங்கள்: முஅத்தா எண் 15, 44, நஸயி 99, 102 திர்மிதி 32.
மேற்கண்ட செய்திகளையெல்லாம் சிந்திக்கும்போது நபி ஸல்லல்லாஹ{அலைஹி வஸல்லம் அவர்கள் மட்டுமின்றி நபித்தோழர்களும் தொடர்ச்சியாகத் தலைப்பாகை அணியும் வழக்கத்தில் இல்லை. பிரயாணம் அல்லது ஏதாவது குறிப்பிட்ட நிகழ்ச்சிகளின்போது மட்டும்தான் தலைப்பாகை அணிந்துள்ளார்கள் என்பதை விளங்கலாம்.
பள்ளியில் திறந்த தலையுடன் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் :
''நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பள்ளியில் இஃதிகாப் இருக்கும் சமயத்தில் என் வீட்டுனுள்ளே தலையை நீட்டுவார்கள், நான் மாதவிடாய்க்காரியாக இருக்கும் நிலையில் அவர்களுக்குத் தலை வாரி விடுவேன்" என அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹ அறிவிக்கிறார்கள். (புகாரி எண்கள்: 296, 2028, 2029, 2030, 2031)
'இஃதிகாப்" என்ற சிறந்த வணக்கத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஈடுபட்டபோதுகூட திறந்த தலையுடன் இருந்துள்ளார்கள் என்பதற்கு இது மிகச் சிறந்த ஆதாரமாகும்.
தமக்குக் குளிப்பு கடமையான விபரம் மறந்து ஒருமுறை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இமாமத்திற்குத் தயாராகி வரிசைகள் சரிபடுத்தப்பட்டு தக்பீர் சொல்ல நாடும்போதுதான் குளிக்க வேண்டும் என்பது ஞாபகத்திற்கு வந்து 'அப்படியே நில்லுங்கள் வந்துவிடுகிறேன்" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறி சென்று குளித்து முடித்து வந்து தலையிலிருந்து நீர் சொட்டச் சொட்ட எங்களுக்குத் தொழுகை நடத்தினார்கள் என்ற விபரம் அபூ-ஹ{ரைரா ரளியல்லாஹு அன்ஹு மூலம் புகாரி, முஸ்லிம் ஆகிய நூல்களில் பதிவாகியுள்ளது.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் முடி அலங்காரம்:
''நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தலைமுடி இரு காதுகளின் பாதிவரை நீண்டு இருக்கும்"" (முஸ்லிம், நஸயி, திர்மிதி, அபூ-தாவுத் நூல்களில் அனஸ் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்.)
''நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தலைமுடி முற்றிலும் சுருண்டோ, முற்றிலும் நீண்டோ இருக்காது"" (புகாரி, முஸ்லிம், நஸயி நூல்களில் அனஸ் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்.)''நபி ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம் அவர்கள் நடு வகிடெடுத்து தலை வாரினார்கள், பின்னர் அதை மாற்றிக்கொண்டார்கள்" (புகாரி, அபூ-தாவுத் நூல்களில் இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்.)
''நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம் தலைக்கு எண்ணெய் தேய்த்து வருவார்கள். தேவைக்கேற்ப தலை வாரும் பழக்கம் இருந்தது"" (புகாரி, முஸ்லிம், அபூதாவுத், நஸயி நூல்களில் அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, இப்னு முகப்பல் ரளியல்லாஹு அன்ஹு ஆகியோர் அறிவிக்கிறார்கள்.)
திறந்த தலையுடன் தொழலாம் :
''ஏழு உறுப்புகளின்மீது ஸஜ்தா செய்யுமாறு நான் ஏவப்பட்டுள்ளேன். ஆடையையோ, முடியையோ (தரையில் படாதவாறு) தடுக்கக் மூடாது எனவும் கட்டளையிடப்பட்டுள்ளேன் "" என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (இப்னு அப்பாஸ் ரளியல்லாஹ{ அன்ஹ{- புகாரி 809, 810, 812)
இந்த ஹதீஸைக் கவனியுங்கள். நெற்றி, இரண்டு கைகள், இரண்டு முட்டுக்கள், இரண்டு பாதங்கள் ஆக ஏழு உறுப்புகள் ஸஜ்தா செய்ய வேண்டும். இதில் கைகள், பாதங்கள் நேராக தரையில் படும். முட்டுக்கால்களில் ஆடை இருக்கும். அந்த ஆடையை உயர்த்தி முட்டியை வைத்து ஸஜ்தா செய்யாதீர்கள். ஆடையோடு செய்யலாம். அதே போன்று ஸஜ்தாவின் போது முடி வந்து தரையில் விழுந்தால் அதை ஒதுக்க வேண்டாம் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகின்றார்கள்.
தலைப்பாகையோ, தொப்பியோ தலையிலிருந்தால் முடி வந்து விழ வேண்டும் என்று அவசியமில்லை. வந்து விழும் முடியைத் தடுக்க வேண்டாம் என்ற நபிகளாரின் கூற்று தாராளமாகத் திறந்த தலையுடன் தொழலாம் என்பதை எடுத்துக் கூறுகிறது.
நபித் தோழர்களின் நிலை:
(மேலாடை கூட இல்லாமல்) தமது வேட்டிகளை மட்டும் தோள்களில் முடிச்சு போட்டுக் கொண்டவர்களாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் தொழுதுள்ளார்கள். (ஸஹ்ல் ரளியல்லாஹு அன்ஹு, புகாரி: 351).
''ஒரு ஆடையுடன் தொழலாமா?" என ஒருவர் நபி ஸல்லல்லாஹ{அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்கஸ ''உங்களில் எல்லோரிடமும் இரண்டு ஆடைகள் கூட இருக்கின்றனவா?" என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆச்சரியப்பட்டுள்ளார்கள். (அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, புகாரி: 365).
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பள்ளியிலிருக்கும்போது பரட்டைத் தலையுடன் வந்த ஒருவரை நோக்கி தாடியையும், தலையையும் எண்ணெயிட்டு சீவிக்கொள்ளுமாறு கூறினார்கள். (அதா இப்னு யாஸிர் ரளியல்லாஹு அன்ஹு, முஅத்தா). இப்படி ஏராளமான ஆதாரங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சில சந்தர்ப்பங்களில் மட்டும் தொப்பி, தலைப்பாகை அணிந்துள்ளார்கள். அதுவும்கூட நாட்டு நடைமுறைக்குறியதாக இருந்தது. தாடி வையுங்கள் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஏவியது போல் தொப்பி, தலைப்பாகைக்கு எந்த ஏவலும் அவர்களிடமிருந்து வரவில்லை. திறந்த தலையுடன் இருந்த நபித் தோழர்களை அங்கீகரித்துள்ளார்கள். எண்ணெயிட்டு தலை சீவி அலங்கரித்துக் கொள்ளுங்கள் என்றெல்லாம் கூறியுள்ளார்கள்.
தொப்பி என்பது இஸ்லாமிய சின்னமல்ல. இன்றைய ஹஜ்ரத்துகளே 'தொப்பி இஸ்லாமிய சின்னம்" என்ற நவீன கண்டுபிடிப்பபைப் பரப்புகிறார்கள். எனவே, எவரும் தொப்பி அணிவதாக இருந்தால் அது அவரது விருப்பம். தாராளமாக அவர் அணியலாம். அணிந்தே தொழலாம். ஆனால் தலை மறைக்க வேண்டும் என்று பிறரை ஏவும் உரிமை எவருக்கும் இல்லை.
சில ஆலிம்களின் வரட்டுக்கவுரவமும் பிடிவாதமுமே இப்பிரச்சனைக்குக்காரணம். இதனால் சமூகம் இரண்டாக என்ன நூறாக பிளவுபட்டுப்போனாலும் அதைப்பற்றியெல்லாம் அவர்களுக்கு கவலையில்லை, தங்களது வாதம் வெற்றிபெறவேண்டும் என்பது மட்டுமே அவர்களது நோக்கமாக இருக்கிறது. இஸ்லாத்தை தொப்பியைக்கொண்டு எடைபோட்டு பழக்கப்பட்ட இவர்களுக்கு அல்லாஹ்தான் நேர்வழி காட்ட வேண்டும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

1.கணவனைக் கவரும் வழிகள் 40

பத்ருப் போர் உணர்த்தும் பாடமும் படிப்பினைகளும்!

மண்ணறை வேதனை 001