இடுகைகள்

மே, 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சாலை விபத்துகள் காரணங்களும் இஸ்லாத்தின் தீர்வுகளும்

ஆக்கம்: காஜா முஹிய்யுத்தீன் ஃபிர்தௌஸி     بسم الله الرحمن الرحيم இஸ்லாமிய இளைஞர்களைக் கவனத்தில் கொண்டு எழுதப்பட்ட ஆக்கம் “ வெளியில் சென்றால் வீட்டிற்கு திரும்புவது நிச்சயமில்லாததாகி விட்டது ” என்று சொல்லுமளவிற்கு இன்று   சாலை விபத்து கள் நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. நாளுக்கு நாள் வாகனங்களும் பெருகிக்கொண்டே செல்கின்றன. மக்களின் அன்றாடத் தேவைகளில் வாகனமும் ஒன்றாகிவிட்டது.   அரசும் அதிகாரிகளும்   சாலை விபத்து களை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டங்களை மேற்கொண்டாலும் அது சம்பந்தமான பிரசுரங்களை விநியோகித்தாலும்   சாலை விபத்து களை கட்டுப்படுத்த முடியவில்லை.   சாலை விபத்து க்களுக்கான காரணங்களை கண்டறிந்து அதற்கான இஸ்லாம் தரும் தீர்வுகளை நடைமுறைப்படுத்தாவிட்டால் எவ்வளவு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டாலும்   சாலை விபத்து களை தடுக்கமுடியாது. சாலை விபத்து கள் சம்பந்தமான ஓர் புள்ளி விபரம்: நம் இந்தியத் திருநாட்டில் 2011 ஆம் ஆண்டில் நடற்த   சாலை விபத்து களில் 1.36 இலட்சம் பேர் பலியாகியுள்ளனர். தமிழகத்த

இஸ்லாத்தின் பெண்களுக்கான உரிமைகள்!

                                    இஸ்லாத்தை சாராதவர்களின் பார்வையில் இஸ்லாம் என்பது விவாதத்திற்குரிய விஷயமாகவே இருந்துவருகிறது. அப்படிபட்ட விமர்சகர்கள் எடுக்கும் முதல் ஆயுதம் ' இஸ்லாத்தில் பெண்கள் இழிவாக நடத்தப்படுகிறார்கள் ' என்பதே... இந்த ஆயுதம் உண்மையில் கூரிய கத்தியா அல்லது அட்டை கத்தியா    என தெரிந்துக்கொள்ள வேண்டுமானால் , இறைவனின் கட்டளைகள் இறங்கிக்கொண்டிருந்த அந்த ஆரம்ப காலகட்டத்தில்   நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பார்வையின் கீழ் வாழ்ந்த இஸ்லாமியப் பெண்மணிகளின் நிலையை பார்ப்பது சரியான அணுகுமுறையாக இருக்கும். சில இடங்களில் இஸ்லாமிய ஆண்கள் எல்லாம் பாவம் என சொல்ல வைக்கும் :-) மேலும்   எந்த இடங்களில் தான் ( ?) பெண்கள் இழிவாக நடத்தப்பட்டார்கள் என்று புரியும்! அல்லது எவ்விதத்தில் இஸ்லாமிய பெண்கள் குறைந்தவர்கள் என்ற உண்மை தெரியவரும் இன்ஷா அல்லாஹ்! இன்றைய காலகட்டத்தில் காலையில் வேலைக்கு செல்லும் கணவன் இரவு தான் வீட்டிற்கு திரும்புகிறான். ஆனால்   அவன் மனைவியோ   காலை முதல் இரவு   தூங்க போறதுக்குமுன் பாத்திரம் கழுவுற வரைக்கும் மிஷின்