விதவைகள் வழிதவற சமூகம் வற்புறுத்துகிறத?

விதவைகள் வழிதவற சமூகம் வற்புறுத்துகிறது!
[விதவைகள் என்றாலே சமூகத்தில் ஒதுக்கப்பட்டவர்களாக கருதும் கலாச்சாரத்திற்கு மத்தியில் விதவைத்திருமணத்தை இஸ்லாம் ஆதரித்த அளவுக்கு வேறு எந்த மதமும் ஆதரித்ததில்லை. ஆனால் துரதிஷ்டவசமாக நமது இந்திய முஸ்லிம் சமூகம் இதில் சரியான வழிமுறையைப் பேண தயங்குகிறது.விதவைகள் மறுமணம் நிச்சயம் ஊக்குவிக்கப்பட வேண்டும்.
அல்லாஹ்வின் தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பெரும்பாலான மனைவிமார்கள் விதவைகளே என்பதை அறிந்தும் கூட நமது சமூகம் இதில் தயக்கம் காட்டுவது விந்தையிலும் விந்தைதான். அதுவும் ஆசாபாசங்கள் கொடிகட்டிப்பறக்கும் இன்றைய காலகட்டத்தில் ஒரு பெண் கணவனின் துணையின்றி வாழ்வது எவ்வளவு கடினம் எனது அனைவரும் அறிந்ததே!
எவருக்கெல்லாம் சக்தியும், செல்வமும் இருக்கிறதோ அவர்கள் இந்த சுன்னத்தை ஹயாத்தாக்கலாம் தானே! இந்த சுன்னத்தை ஹயாத்தாக்க முஸ்லிம்சமூகம் தயக்கம் காட்டும் பட்சத்தில்; விதவைகள் சிவப்பு விளக்கில் விழுவதற்கு பச்சை விளக்கு காட்டும் செயலாகவே அது அமையும் ஆபத்தும் இருக்கிறது.]
 விதவைகளை வழிதவற சமூகம் வற்புறுத்துகிறது!
தாய் தந்தையற்ற ஒரு பெண் விவாவகரத்து செய்யப்பட்டால் அவளுக்குரிய பாதுகாவலர்களை இஸ்லாம் வரிசைப்படுத்தி இருக்கிறது.
உடன் பிறந்தவர்களில், பெரும்பாலானவர்கள் சில பல ஆயிரங்களை எடுத்து வீசுவதோடு உறவு முடிந்தது எனக் கருதிக் கொள்கின்றனர். எந்த நெருங்கிய உறவும் ஏறெடுத்துப் பார்ப்பதில்லை. இதுதான் காலம் காலமாக உள்ள நிலைப்பாடு.
விதவைகளை வழிதவற சமூகம் வற்புறுத்துகிறது. அவர்களுக்குரிய பாதுகாவல் இல்லை.
65 வருட நிர்வாகத்தில் வக்ஃபு மிகச்சிறிய தொகையை ஒன்பது விதவைகளுக்கு வழங்கியிருக்கிறது. 10,000 ம் பேர் வாழக்க்கூடிய பகுதியில் கணவனை இழந்தவர்கள், கைவிடப்பட்டவர்கள் ஏறத்தாழ 500 பேர் வரை உள்ளனர். அதாவது ஐந்து சதம்.
தமிழக முஸ்லிம் ஜனத்தொகை 60 இலட்சத்தில் மூன்று இலட்சம் பேர் உள்ளனர். இவர்களுக்கு இஸ்லாமிய சட்டப்படியான தீர்வை முஸ்லிம்கள் வழங்கவில்லை. மற்ற சமூகம் என்ன செய்கிறதோ அதனையே முஸ்லிம்களும் செய்கின்றனர்.
"தலாக் செய்து மற்றொரு (மனைவி) நாடினால் பொற்குவியலையே கொடுத்திருந்தாலும் திரும்ப எடுத்துக் கொள்ளாதீர்" (அல் குர் ஆன் 4: 20) கட்டளையிட்டிருக்கிறது.
மனைவி வீட்டாரிடம் பெற்ற பணம், நகை, செலவீனத்தையே திரும்பத் தராது அடாவடித்தனம் செய்யும் போக்கிருக்கிறது. மஹர் தராத ஏமாற்றுத்தனம் நடக்கிறது. கணிசமான ஒரு தொகையை பெண் பெயரில் வங்கியில் டெபாசிட் செய்யக்கூறி திருமணம் முடிக்கும் போக்கு கையெடுக்கப் படவேண்டும். தலாக் கூறினால் திருப்பி வழங்கக்கூடாது.
வெளிப்படையாக இல்லாமல் ஒரு ரகசிய வாழ்க்கைக்கு தள்ளப்படும் விதவைகள் 
விதவைகள் ஒரு குறிப்பிட்ட காலம் வரை வாழும் போது தனிமை அவர்களை வாட்டுகிறது. உடல் ரீதியான தொடர்புகளை விட ஒரு ஆண் துணை தனக்கு தேவை என்று நினைக்கிறாள். சிலர் சில சமூகங்களில் விதவைத் திருமணம் மாறுபட்ட கோணத்தில் பார்க்கிறார்கள். இதனால், விதவை வெளிப்படையாக இல்லாமல் ஒரு ரகசிய வாழ்க்கைக்கு தள்ளப்படுகிறாள்.
கூடவே அவளுக்கு பிள்ளைகள் இருந்து விட்டால் கூடுதல் பாதுகாப்பாக கட்டாயம் ஒரு ஆண் துணை தேவை என்பதை உணருகிறாள். சில இடங்களில் பிள்ளைகள் அங்கீகரிக்கின்றன. சில இடங்களில் எதிர்க்கின்றன. 
விதவைகள் மறுமணம் நிச்சயம் ஊக்குவிக்கப்பட வேண்டும்
விதவைகள் என்றாலே சமூகத்தில் ஒதுக்கப்பட்டவர்களாக கருதும் கலாச்சர்த்திற்கு மத்தியில் விதவைத்திருமணத்தை இஸ்லாம் ஆதரித்த அளவுக்கு வேறு எந்த மதமும் ஆதரித்ததில்லை. ஆனால் துரதிஷ்டவசமாக நமது இந்திய முஸ்லிம் சமூகம் இதில் சரியான வழிமுறையைப் பேண தயங்குகிறது. விதவைகள் மறுமணம் நிச்சயம் ஊக்குவிக்கப்பட வேண்டும்.
அல்லாஹ்வின் தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பெரும்பாலான மனைவிமார்கள் விதவைகளே என்பதை அறிந்தும் கூட நமது சமூகம் இதில் தயக்கம் காட்டுவது விந்தையிலும் விந்தைதான். அதுவும் ஆசாபாசங்கள் கொடிகட்டிப்பறக்கும் இன்றைய காலகட்டத்தில் ஒரு பெண் கணவனின் துணையின்றி வாழ்வது எவ்வளவு கடினம் எனது அனைவரும் அறிந்ததே!
எவருக்கெல்லாம் சக்தியும், செல்வமும் இருக்கிறதோ அவர்கள் இந்த சுன்னத்தை ஹயாத்தாக்கலாம் தானே! இந்த சுன்னத்தை ஹயாத்தாக்க முஸ்லிம்சமூகம் தயக்கம் காட்டும் பட்சத்தில்; விதவைகள் சிவப்பு விளக்கில் விழுவதற்கு பச்சை விளக்கு காட்டும் செயலாகவே அமையும் ஆபத்தும் இருக்கிறது.
www.nidur.info

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

1.கணவனைக் கவரும் வழிகள் 40

பத்ருப் போர் உணர்த்தும் பாடமும் படிப்பினைகளும்!

மண்ணறை வேதனை 001