உண்ணுதல், பருகுதல்.


இறைவன், மனிதனது பிரயோசனத்திற்காக இயற்கையான சூழலையும் எல்லா விலங்குகளையும் கனி வர்க்கங்களையும் தாவரங்களையும் ஆக்கியுள்ளான். ஏனெனில், அவைகளின் மூலம் உண்டு, பருகி, உடுத்து உறங்கி, ஏனைய தேவைகளையும் பூர்த்தி செய்வதற்காகவே. ஆனால், மனிதனுடைய உயிரையும் உடல் ஆரோக்கியத்தையும் பேணுவதற்காக வேண்டியும் தனது பரம்பரையை பாதுகாத்துக் கொள்வதற்காக வேண்டியும் ஏனைய மனிதர்களின் உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்வதற்காக வேண்டியும் சில சட்டதிட்டங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இப்பகுதியில் சில உண்ணுதல், பருகுதல் சம்பந்தமான சட்டதிட்டங்களைப் பார்ப்போம்.
உணவு வகைகள்.
       1)  தாவரங்கள்
            1.   கனி வகைகள்
            2.   கீரை வகைகள்
       2)  விலங்குகள்
            1.   கால்நடைகள்
                  அ)            வீட்டுப் பிராணி
                  ஆ)           காட்டு மிருகம்
            2.   பறவைகள்
            3.   நீர் வாழ் மிருகங்கள்

உணவு வகைகளின் சட்டங்கள்.

தாவர உணவுகள்.
        சகல விதமான தாவர வகைகளும் கீரை வகைகளும் ஹலாலாகும்.
மிருக உணவுகள்
   கால்நடைகள்.
1)  வீட்டுப் பிராணிகள்
            1.   ஹலாலானவை
                 அ)ஆடுகள்
                 ஆ)மாடு
                 இ)ஒட்டகம்
      
            2.   மக்ரூஹானவை
                  அ)குதிரை
                  ஆ) வரிக்குதிரை
                  இ) கழுதை
                      3.           ஹராமானவை
                                 அ)         நாய்
                                 ஆ)        பூனை
                                  இ)         ஏனைய மிருகங்கள்
       2)  காட்டு விலங்குகள்
                     1.            ஹலாலானவை
                    அ)          மான்
                    ஆ)         மாடு
              இ)     மலைவாழ் செம்மறியாடு
      ஈ) ஒட்டகச் சிவிங்கி
            2.   ஹராமானவை
                  அனைத்து வேட்டையாடும் மிருகங்களும்.
                  உதாரணம், புலி, ஓநாய்.
1. அனைத்து வேட்டையாடும் மிருகங்களும் ஹராமாகும். அவைகள் பலவீனமானவைகளாக இருந்தாலும் சரியே. உதாரணம் நரி.
2. முயல் இறைச்சி உண்பது ஹராமாகும்.
3. அனைத்து ஊர்வனைகளும் ஹராமாகும். உதாரணம் தேள்.
பறவைகள்.
கீழ் குறிப்பிடப்படும் பறவைகள் ஹலாலாகும்.
1. எல்லா புறா வகைகளும். (மணிப்புறாவும் இவ்வகையைச் சேர்ந்ததேயாகும்)
2. எல்லா குருவி வகைகளும். (குயிலும் இதைச் சேர்ந்ததேயாகும்)
3. சேவல், மற்றும் கோழிகள்
கீழ் குறிப்பிடப்படும் பறவைகள் ஹராமாகும்.
1. வெளவால்
2. மயில்
3. காகம் (நீர்க்காகம் காக வகைகளில் ஒன்றாகும்)
4. நகமுள்ள எல்லாப் பறவைகளும் ஹராமாகும். உதாரணமாக கழுகு.
0-   மரங்கொத்தி போன்ற கறவைகள் மக்ரூஹ் ஆகும்.
0-   கோழி, ஏனைய ஹலாலான பறவைகளின் முட்டைகள் ஹலாலாகும். ஹராமான பறவைகளின் முட்டைகள் ஹராமாகும்.
0-   வெட்டுக்கிளி பறவை இனத்தைச் சேர்ந்தது என்பதால் அது ஹலாலாகும்.
நீர் வாழ் மிருகங்கள்.
1. கடல் வாழ் மிருகங்களில் செதிலுள்ள மீன்கள், சில கடல் பறவைகளும் மாத்திரமே ஹலாலாகும்.
2. இறால் ஹலாலாகும்.

சிறு குறிப்புகள்

0-   களிமண் சாப்பிடுவது ஹராமாகும்.
0-   நஜிஸான ஒன்றை உண்பது, பருகுவது ஹராமாகும்.
0-   மனிதனுக்கு தீங்கை ஏற்படுத்தக் கூடியவைகள் ஹராமாகும். உதாரணமாக கொழுப்புச் சாப்பாடுகளை               உண்பது தீங்கு விளைவிக்கும் என்ற நிலையிலுள்ள நோயாளி அதைச் சாப்பிடுவது ஹராமாகும்.
0-   எந்தவொரு கால்நடைகளினதும் விதையைச் சாப்பிடுவது ஹராமாகும்.
0-   மதுபானம், அல்லது எந்தவொரு மயக்கம் ஏற்படுத்தும் திரவத்தையோ குடிப்பது ஹராமாகும்.
0-   ஒரு முஸ்லிம் பசி, அல்லது தாகத்தின் காரணமாக மரணத்தின் வாயிலை நெருங்கிக் கொண்டிருக்கும் போது அவருக்கு நீரை, அல்லது உணவை கொடுத்து மரணத்திலிருந்து பாதுகாப்பது கடமையாகும்.
0-   மற்றவர்களின் பொருத்தமின்றி அவர்களின் உணவுகளைச் சாப்பிடுவது ஹராமாகும். அவர்கள் காபிராக இருந்தாலும் சரி. அவர்களின் உடமைகள் மதிப்புக்குரியதாகும். உதாரணமாக, திம்மி காபிர்கள் (இஸ்லாமிய ஆட்சியின் கீழ் அவ்வாட்சிக்கு வரி கட்டிக் கொண்டு இஸ்லாமியர்களின் பாதுகாப்பின் கீழ் வாழும் காபிர்கள்)
0-   இறைச்சி வகையல்லாத உணவுகள், குறிப்பாக தாவர, தானிய, பழவகை உணவுகள், ஹலாலான மிருகங்களிலிருந்து எடுக்கப்ட்ட பாலினால் செய்யப்பட் தயிர், சீஸ் (பனீர்) பட்டர், ஹலாலான பறவைகளின் முட்டையினால் செய்யப்பட்ட உணவுகள், பான், உரொட்டி, பிஸ்கேட், சொக்லேட், சுவிங்கியம், இனிப்புப் பண்டங்கள், மற்றும் மிருக இறைச்சியினால் செய்யப்படாத ஏனைய உணவு வகைகள் சுத்தமானதாகும். அவைகளை உண்பது ஹலாலாகும். அவைகள் இஸ்லாமிய நாடுகளில் தயாரிக்கப்படாதவைகளாக இருந்தாலும், அல்லது முஸ்லிம் அல்லாதவர்களிடம் வாங்கியிருந்தாலும் சரியே. ஆனால், உணவுப் பொருள் நஜிஸென்று உறுதியடையும் போது அதன் சட்டங்கள் பின்வருமாறு அமையும்.
அ) காபிருடையமேனியோ, அல்லது ஈரமோ படாமல், அல்லது வேறு எந்த வகையிலும் நஜிஸாகவில்லையென்று தெரிந்திருந்தால் அது சுத்தம், ஹலாலாகும்.
ஆ)     நஜிஸாகி விட்டதா? இல்லையாவென சந்தேகிக்கும் போதும் அது சுத்தம், ஹலாலாகும்.
இ) நஜிஸாகி விட்டது என்று நினைக்கும் போது, அனால், உறுதியாக தெரியாது இருக்குமிடத்தில் அது சுத்தம், ஹலாலாகும்.
ஈ)  காபிரினது மேனியின் மூலமோ, அல்லது வேறு ஏதாவது வழியில் நஜிஸாகி இருக்குமென தெரிந்திருப்பின் அது நஜிஸ், ஹராமாகும்.

சிகிச்சைக்காக வேண்டி ஏதாவதொன்றை உண்ணுதல், பருகுதல்.

கீழ்க் காணும் நிலைமைகளில் ஏதாவதொரு ஹராமானவற்றை சாப்பிடுவதோ, குடிப்பதோ மார்க்கத்தின் பார்வையில் பிரச்சினையைக் கொண்டு வராது.
1. உயிரைப் பாதுகாப்பது ஹராமானவற்றின் மீது தங்கியிருக்கும் போது. உதாரணமாக ஹராமான உணவைத் தவிர வேறெதுவுமில்லாத நிலையில் அதைச் சாப்பிடாது விட்டால், பசியின் கொடுமையால் இறந்து விடுவோமென்று கருதும் போது.
2. ஒரு நோயின் நிவாரணி ஹராமான உணவில் தங்கியிருக்கும் பொது.
3. ஹராமான உணவை சாப்பிட வற்புறுத்தப்படும் போது. எவ்வாறெனில் அதைச் சாப்பிடா விட்டால் தனது, அல்லது தனது பாதுகாப்பில் உள்ளவர்களது உயிருக்கோ அல்லது மானத்திற்கோ, அல்லது உடமைகளுக்கோ தீங்கு ஏற்படும் என்றிருந்தால்.

உணவருந்துவதன் ஒழுக்கம்.

சுன்னத்துகள்.
1. சாப்பிடுவதற்கு முன்பும் பின்பும் கைகளைக் கழுவிக் கொள்ளல்.
2. சாப்பிடும் முன் பிஸ்மி சொல்லுதல். முடிந்ததும் அல்ஹம்துலில்லாஹ் கூறுதல்.
3. வலது கையால் சாப்பிடுதல்.
4. சிறிய சிறிய பிடிகளாக எடுத்து உண்ணுதல்.
5. உணவை நன்றாக சப்பிச் சாப்பிடுதல்.
6. பழங்களாயின் கழுவிச் சாப்பிடுதல்.
7. பலர் ஒரு சகனில் சாப்பிடும் போது தனக்கு முன்னிருப்பவைகளைச் சாப்பிடுதல்.
8. விருந்தளிப்பவர், விருந்தாளிகள் எல்லோருக்கும் முன்னால் உணவருந்த ஆரம்பித்து கடைசியில் எழும்புதல்.
மக்ரூஹாத்
1. வயிறு நிரம்பியிருக்கும் போது உண்ணுதல்.
2. அதிகம் உண்ணுதல்.
3. சாப்பிடும் போது மற்றவர்களின் முகத்தைப் பார்த்தல்.
4. சூடான உணவைத் தின்னுதல்.
5. சாப்பிடும் உணவை வாயினால் ஊதுதல்.
6. கத்தியினால் உரொட்டியை வெட்டுதல்.
7. பாத்திரத்திற்குக் கீழ் உணவை வைத்தல்.
8. பழ வகைகளை பூரணமாக சாப்பிடுவதற்கு முன் அவற்றை வீசுதல்.
தண்ணீர் பருகுவதன் ஒழுக்கம்.
1. பகலில் நின்று குடித்தல்.
2. ஆரம்பத்தில் பிஸ்மி கூஙி, கடைசியில் அல்ஹம்துலில்லாஹ் கூறுதல்.
3. மூன்று மிடறு குடித்தல்.
மக்ரூஹாத்துகள்.
1. அதிகம் அருந்துதல்.
2. கொழுப்புள்ள உணவை உண்ட பின் நீரருந்தல்.
3. இடது கையினால் நீரருந்தல்.
4. இரவில் நின்று குடித்தல்.

Index

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

1.கணவனைக் கவரும் வழிகள் 40

பத்ருப் போர் உணர்த்தும் பாடமும் படிப்பினைகளும்!

மண்ணறை வேதனை 001