வெள்ளி, டிசம்பர் 05, 2014

இஸ்லாமிய பார்வையில் நோயாளிகள்


சோதனைகளைப்பற்றி அல்லாஹ் குறிப்பிடும்போது, "உங்களில் யார் அழகிய நற்கருமங்கள் செய்கிறார்கள் என்பதை அறிவதற்காகவே நாம் உங்களை சோதிக்கின்றோம்" (அல்குர்ஆன் 67:2) என்று கூறுகின்றான்.
மனிதனுடைய மகிழ்ச்சியை நிம்மதியை தொலைக்க கூடிய காரியங்களில் மிக முக்கியமானதுஅவனுக்கு வருகிற வியாதிகளாகும் வலி நிறைந்த இந்த நோயின் போது உடையாத உள்ளங்கள்மிக அரிது தான் இந்த நேரத்தில் மனிதனுக்கு மருத்துவ வழிகாட்டுதலும் நம்பிக்கையூட்டும்வார்த்தைகளும் முகம் கோணாமல் சேவை செய்யும் பணியாளர்களும் தேவை அவனுக்குதேவையான இந்த காரியங்கள் செய்யும் சிறந்த சேவையாளர்களாக நாடு முழுவதும்மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர்களான (நர்சுகள்) சகோதர சகோதரிகள்இருக்கின்றார்கள்
[ மனிதன் அன்றாட வாழ்க்கையில் ஈடுபடும்போது இறைவனைப் பற்றியோ, இறைவன் புறத்திலிருந்து அனுபவித்துக் கொண்டு வரும் எண்ணற்ற அருட்கொடைகளைப் பற்றியோ சிறிதும் பொருட்படுத்துவதில்லை.
தன்னிலை மறந்து கண்ணை மூடியவனாக ஓடிக்கொண்டிருக்கும் அவன் அவனது உடல், பொருள் ஆவி என அனைத்துக்கும் சொந்தக்காரன் தன்னைப் படைத்து பரிபாலித்து வரும் இறைவன்தான் என்பதை மறந்து விடுகிறான்.
அவனது கருணை இல்லாமல் தன்னால் இங்கு வாழ முடியாது என்பதையும் அவன் கொடுத்துவரும் எண்ணற்ற அருட்கொடைகளுக்கு நன்றி சொல்லக் கடமைப் பட்டிருக்கிறான் என்பதையும் எளிதாக மறந்து விடுகிறான்.
அப்படிப்பட்ட மனிதனை நிதானப்படுத்த இறைவன் விடுக்கும் எச்சரிக்கையே நோய் என்பது!
நோய் வரும் முன் வரை தனது உடல் இயக்கங்களை சமநிலையில் இயக்கிவந்த இறைவனின் கருணையை நினைவூட்ட வருகிறது நோய்! அவ்வாறு இறைவனை நினைவூட்டி மனிதனை பாவங்களில் இருந்து மீட்டு நல்லவனாக மாற்ற வருகிறது நோய்
மனிதனாய் பிறந்துவிட்ட அனைவருமே ஏதேனும் ஒரு சோதனைக்குள் அகப்படுவர் என்பது காலத்தின் நியதி. இவை மனிதனாலேயே மனிதனுக்கு ஏற்படுவதல்ல. மனித சக்திகளுக்கெல்லாம் அப்பாற்பட்ட இறைவனின் நாட்டப்படி நிகழ்கின்றது.
மனித சோதனையில் நோய் முக்கிய அங்கம் வகிக்கிறது. எனவே இங்கு நோய் ஏன் ஏற்படுகிறது? நோய் வந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்? இதனால் கிடைக்கும் பிரதிபலன் என்ன? போன்றவைகளை பார்ப்போம். நோய் ஏன் வருகிறது?
முதலில் நோய் ஏன் வருகிறது? பல பதில்களை நாம் அறிந்திருந்தாலும் அது நம்மைப் படைத்தவன் புறத்திலிருந்து எச்சரிக்கை என்பதை அதிமுக்கியமாக நாம் உணர வேண்டும்! கண்களை மூடிக்கொண்டு ஓடிக்கொண்டிருக்கும் குதிரையை அதன் மேலுள்ள குதிரைஒட்டி மெதுவாக கடிவாளம் கொண்டு இழுக்கும் போது அக்குதிரை நிதானத்தை அடைகிறது. அதுபோன்ற ஒரு செயலே நோய் என்பதும்!
மனிதன் அன்றாட வாழ்க்கையில் ஈடுபடும்போது இறைவனைப் பற்றியோ, இறைவன் புறத்திலிருந்து அனுபவித்துக் கொண்டு வரும் எண்ணற்ற அருட்கொடைகளைப் பற்றியோ சிறிதும் பொருட்படுத்துவதில்லை. தன்னிலை மறந்து கண்ணை மூடியவனாக ஓடிக்கொண்டிருக்கும் அவன் அவனது உடல், பொருள் ஆவி என அனைத்துக்கும் சொந்தக்காரன் தன்னைப் படைத்து பரிபாலித்து வரும் இறைவன்தான் என்பதை மறந்து விடுகிறான். அவனது கருணை இல்லாமல் தன்னால் இங்கு வாழ முடியாது என்பதையும் அவன் கொடுத்துவரும் எண்ணற்ற அருட்கொடைகளுக்கு நன்றி சொல்லக் கடமைப் பட்டிருக்கிறான் என்பதையும் எளிதாக மறந்து விடுகிறான். அப்படிப்பட்ட மனிதனை நிதானப் படுத்த இறைவன் விடுக்கும் எச்சரிக்கையே நோய் என்பது! நோய் வரும் முன் வரை தனது உடல் இயக்கங்களை சமநிலையில் இயக்கிவந்த இறைவனின் கருணையை நினைவூட்ட வருகிறது நோய்! அவ்வாறு இறைவனை நினைவூட்டி மனிதனை பாவங்களில் இருந்து மீட்டு நல்லவனாக மாற்ற வருகிறது நோய்!
மேற்கூறப்பட்ட இறைவசனத்திலிருந்து மனிதன் ஏன் சோதிக்கப்படுகிறான் என்பது தெளிவாகின்றது. மனிதன் எந்தச் சூழலிலும் மனம் தளராது நற்காரியங்கள் செய்கின்றனரா என்பதை அல்லாஹ் பார்க்க விரும்புகிறான். நபி(ஸல்) அவர்கள் நோயை பற்றி கூறும் போது சொன்னார்கள் அல்லாஹ் ஒரு முஃமினுக்குநோயை கொடுத்து பிறகு உடல் சுகத்தை கொடுத்து 
விட்டால் அது அவனுடைய கடந்த காலபாவத்திற்கு பரிகாரமாகவும்
 எதிற்காலத்திற்கு நல்ல உபதேசமாகவும் அமையும் முனாபிக்கான
மனிதனுக்கு நோய் வந்து பிறகு அவனுக்கு உடல் சுகம் வழங்கப்பட்டால் 
அவன் கழுதையைப்போன்று கால் நடையைப் போன்று ஆகி விடுகின்றான் அது சேட்டை செய்கின்ற பொழுது அதைஅதனுடைய உரிமையாளன் 
கட்டி போடுகின்றான் பிறகு அவிழ்த்து விடுகின்றான் ஆனால் அதற்கு
தெரிவதில்லை ஏன்? கட்டி போட்டு பிறகு ஏன் விடுவித்தார்கள் என்று இவ்வாறு நபி சொன்னபோது ஒரு மனிதர் நோய் என்றால் என்ன இதுவரை நோய் எனக்கு வந்ததே இல்லை என்றார்உடனே நபி அவரிடம் 
நீ நம்மை விட்டும் விலகி விடு நீ நம்மை சார்ந்தவன் இல்லை என்றார்கள்
இவர் உண்மையில் முனாபிக்காக இருந்தார்.  நூல் .அபூதாவூத்
மேலும் நபிமொழிகளான ஹதீஸ்களை ஆராயும் பொழுது மனிதர்களுக்கு நோய் வருவது இரண்டு காரணங்களினால்தான் என்பது புலனாகின்றது.
1. பாவங்களைக் குறைப்பதற்காக,
2. அந்தஸ்தை உயர்த்துவதற்காக.
இவ்விரு காரணத்திற்காகத்தான் நோய் ஏற்படுகிறது. நோய்களால் கிடைக்கும் இறைவனின் கருணை மன்னிப்பு
 உயர் அந்தஸ்துகள்
முஸ்லிமான ஒருவனுக்கு ஏற்படும் சிரமம் நோய் கவலை துக்கம் நோயின் மனவேதனையிலிருந்து . அவனுடைய காலில் குத்தும் முள் உள்பட இவற்றின் மூலம் அவனுடையபாவங்களை போக்கி விடுகின்றான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல். மிஸ்காத்.
ஒரு மனிதனுக்கு மிக அதிகமாக நோயைக் கொடுத்து அல்லாஹ் சோதிக்கின்றான் என்றால், அவனை ஏதோ ஒரு நற்காரியத்திற்காகத் தேர்ந்தெடுக்கின்றான் என்று பொருள். இவ்வுலகில் பயன் கிட்டவில்லையென்றாலும் மறுமையில் கிடைப்பது உறுதி.


நோயும் மறுமையின் நிலையும்
நபி அவர்கள் சொன்னார்கள்.    உலகில் உடலாலும் இன்னும் பல்வேறு 
வகையிலும்சோதிக்கப்பட்டவர்களுக்கு மறுமையில் இறைவன் உயர்ந்த நற்கூலியை வழங்கும் போதுஉலகில் நிம்மதியாக வாழ்ந்தவர்கள் விரும்புவார்கள் நம்முடைய உடலின் தோல் உலகில்கத்தரிக்கோலால் 
துண்டிக்கப்பட்டிருக்க வேண்டுமே நாமும் இந்த அந்தஸ்தை
 பெற்றிருக்கலாமேஎன்று விரும்புவார்கள்.நூல்.  திர்மிதி
எனவே நோய்வாய்ப்பட்டவர்கள் மனம் தளர்ந்து விடாமல் இருப்பதும், அதிகமாக ''துஆ''ச் செய்வதும் அவசியமாகும். ஏனெனில், "நோயாளியைச் சந்தித்தால் து ஆச்செய்யும்படி அவர்களிடன் கூறுங்கள். நோயாளிகளின் ''துஆ'', மலக்குமார்களின் ''துஆ'' போன்றதாகும்" என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். (நூல்: இப்னு மாஜா)
நோயும் அதற்கு எதிரான புலம்பலும்
وعن ابن عباس : أن النبي صلى الله عليه وسلم دخل على أعرابي يعوده وكان إذا دخل على مريض يعوده قال : " لا بأس طهور إن شاء الله " فقال له : " لا بأس طهور إن شاء الله " . قال : كلا بل حمى تفور على شيخ كبير تزيره القبور
. فقال : " فنعم إذن " . رواه البخاري
நபி அவர்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒரு கிராமவாசியை நலம் 
விசாரிக்க சென்றார்கள்அப்பொழுது அவர்களின் வழமைப்படி 
சொன்னார்கள் இந்த நோயால் உங்களுக்கு பிரச்சனைஇல்லை இது 
உங்களின் பாவத்தை சுத்தப்படுத்த கூடியது என்றார்கள் ஆனால் அவர் 
சொன்னார்நீங்கள் சொல்வது போன்று அல்ல இந்த வயோதிகரின் மீது
 கொழுந்து விட்டு எரியும் காய்ச்சல்கப்ரில் கொண்டு போய் சேர்த்து விடும் போல் தெரிகிறது என்றார் உடனே நபி சொன்னார்கள்அப்படியானால்
 நீ சொல்வது போன்று அப்படியே ஆகும் என்றார்கள் அவரின் எண்ணப்படி
 அந்தகாய்ச்சலே அவரின் மரணத்திற்கு காரணமாகி விட்டது
 நூல். புகாரி.
முஸ்லிம் சகோதரர்கள் நோய்வாய்ப்பட்டால் அவரிடம் சென்று நலம் விசாரிப்பது இஸ்லாமிய அடிப்படைக் கடமைகளில் ஒன்றாகும்
.
 நலம் விசாரிப்பது நம் கடமை
وعن أبي هريرة رضي الله عنه قال : قال رسول الله صلى الله عليه وسلم : " حق المسلم على المسلم خمس : رد السلام وعيادة المريض واتباع الجنائز وإجابة الدعوة وتشميت العاطس
ஒவ்வொரு முஸ்லிமும் மற்ற முஸ்லிமுக்கு செய்யும் கடமையாக
5 விஷயங்கள் இருக்கின்றதுஸலாமுக்கு பதில் சொல்வது நோயாளியை
 நலம் விசாரிப்பது ஜனாஸாவை பின் தொடர்வதுஅழைப்புக்கு பதில் 
சொல்வது தும்மியவனுக்கு யர்ஹமுகல்லாஹ் சொல்வது என்று நபி (ஸல்)சொன்னார்கள். நூல். புகாரி
மேலும் இது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழமைகளிலும் உள்ளதாகும்.
நாயகமும் நலம் விசாரிப்பும்
நாயகம் (ஸல்) அவர்கள் முஸ்லிமான ஒருவரை நலம் விசாரிக்க சென்றார்கள் அவர்பலஹீனத்தின் காரணமாக சப்தம் குறைந்தவராக ஆகி குருவி குஞ்சு போன்று ஆகி விட்டார்நாயகம் அவரிடத்தில் நீ அல்லாவிடத்தில் ஏதேனும் துஆ செய்தாயா என்று கேட்டார்கள் அவர்ஆம் என்று கூறி விட்டு சொன்னார் இறைவா ஏதேனும் பாவத்தை கொண்டு நீ என்னமறுமையில் தண்டிப்பதாக இருந்தால் அந்த தண்டனையை உலகிலேயே கொடுத்து விடு என்றுதுஆ 
செய்தேன் என்றார் அப்போது நபி அந்த மனிதரிடம் இறை தண்டனையை
 பெறுவதற்கு நீஉலகிலேயே சக்தி பெற மாட்டாய் மறுமையிலும் அந்த சக்தியை தேடாதே என்று கூறி விட்டு  நீ
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار          
 என்ற துஆவை சொல்லியிருக்க வேண்டாமா என்று கேட்டார்கள்அவர் 
இதைக் கொண்டு துஆ செய்தார் அல்லாஹ் அவருக்கு சுகம் அளித்தான்.
நோயாளிகளை நலம் விச்சாரிக்கவில்லையெனில் அதைப் பற்றியும் கியாமத் நாளில் விசாரணை செய்யப்படும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்; "அல்லாஹுத்தஆலா கியாமத் நாளில் அடியார்களைப் பார்த்து, 'ஏ ஆதமின் மகனே! நான் நோய்வாய்ப்பட்டிருந்தேனே, ஏன் என்னிடம் நீ நலன் விசாரிக்க வரவில்லை?' என்று கேட்பான். அதற்கு அடியான், 'இறைவனே! நீயோ அகிலத்தின் பரிபாலன். உன்னை நான் எவ்வாறு நலன் விசாரிக்க முடியும்?' என்று கூறுவான். பின்பு இறைவன் 'உலகில் இன்ன மனிதன் நோயுற்று இருந்தானே! அவனை நீ சென்று நலன் விசாரிக்க வில்லையே, ஏன்?' என்று விசாரணை நடத்துவான்." (நூல்: முஸ்லிம்)
இதன் மூலம் நோயுற்றவரை விசாரிப்பது எந்தளவிற்கு தலையாயக் கடமை என்பது புரிகின்றது                                                                                                                  நோயுற்றோரை விசாரித்து ஆறுதல் கூறுவதன் மூலம் நோயாளிக்கு நிம்மதி ஏற்பட்டு நோய் குணமாகிவிடும் என்ற நம்பிக்கை உள்ளத்தில் தோன்றி நோய் குறைய வாய்ப்பு ஏற்படுகிறது என்பது மருத்துவ அறிஞர்களின் கூற்றாகும்.
இதுபோன்ற விஷயங்களை அடிப்படையாக வைத்து பார்க்கிறபோது மனிதனுக்கு நோய் உண்டாவதே ஒரு இறை அருள் (ரஹ்மத்) என்பது மிகத் தெளிவாகவே புரிகின்றது.
. விஷயம் இவ்வாறிருக்க நம்மில் அநேகர் நோய்வாய்பட்டு விட்டால் அல்லாஹவை வசைபாடி இறைக்கோபத்திற்கு ஆளாகிவிடுகின்றோம். நோயின் மூலம் ஆவேசப்படுவதால் அல்லல் படுவது நாம் தான் என்பதை உணர்ந்துகொண்டோமானால் பிரச்சனைகளுக்கு வாய்ப்பிருக்காது
. நலம் விசாரிப்பின் நன்மைகள்
அபூ மூஸா (ரலி) அவர்கள் ஹஸன் பின் அலியை நலம் விசாரிக்கச்
 சென்றார்கள் அங்குஅலி(ரலி) அவர்கள் அபூ மூஸாவிடம் நீங்கள் ஏன் வந்தீர்கள்என்று கேட்ட பொழுது அபூ மூஸாசொன்னார்கள் நான் உம்மை பார்க்க வரவில்லை நபியின் பேரரை நலம் விசாரிக்க வந்தேன்அலி (ரலி) அவர்கள் அபூ மூஸாவிடம் உங்கள் மீது எனக்கு உள்ள கோபம் நலம் 
விசாரிப்பதுதொடர்பான ஹதீஸை கூறுவதை விட்டும் என்னை தடுக்கவில்லையா என்று கூறி விட்டுசொன்னார். நபி சொன்னார்கள் ஒரு மனிதனை 
நலம் விசாரிக்கசென்றால் அவன்அல்லாஹ்வின் அருகில் அருளில் மூழ்கி
 விடுகின்றான் அவன் நோயாளியின் அருகில் அமர்ந்துவிட்டால் அந்த அருள்
 அவனை மிகைத்து விடும் என்றார்கள்.நூல். பைஹகீ.
நலம் விசாரிப்பின் முறையும் அதன் ஒழுக்கமும்
நபி அவர்கள் சொன்னார்கள் நலம் விசாரிப்பின் முழுமையாகிறது உங்களில் ஒருவர் நலம்விசாரிக்கும் போது நோயாளியின் நெற்றியின் மீது அல்லது 
அவருடைய கையின் மீதுதனதுகையை வைத்து விசாரிக்க வேண்டும்
 என்றார்கள். நூல்.  மிஷ்காத்
நபி அவர்கள் சொன்னார்கள் சீக்கிரம் நலம் விசாரிக்க செல்வதே 
மிகச் சிறந்த நலம் விசாரிப்புஎன்றார்கள்.நூல். மிஷ்காத்
 நோயாளியின் துஆவும் அவரை புறக்கணிப்பதால் ஏற்படும்அவரின் சாபமும்
நபி அவர்கள் சொன்னார்கள் நோயாளி இடம் நீ சென்றால் அவரை உனக்கு துஆ செய்யும்படியாக ஏவுவீராக ஏனெனில் அவருடைய துஆ மலக்குகளின் துஆவை போன்று என்றார்கள்.  நூல் இப்னு மாஜா
தமது வீடுகளில் நோயாளியாக உள்ள பெற்றோரையும் உறவுகள் கவனிக்காமல் உதாசினம்செய்து கொடுமைபடுத்த கூடியவர்கள் புரிந்து கொள்ளவும் அவருடைய சாபம் பொல்லாததுஎன்பதை புரிந்து கொள்ளவும் 
நோய் வரும்போது இறை உதவி தேடுவது எவ்வாறு?
நமக்கோ குழந்தைகளுக்கோ நமக்கு வேண்டியவர்களுக்கோ திடீரென நோய் வந்து விட்டால் இயல்பு வாழ்க்கை பாதிப்படைகிறது.. நிம்மதியை இழந்து விடுகிறோம். சில அடிப்படையான விஷயங்களைப் புரிந்து கொண்டு அவற்றை மனதில் இருத்தி அதன்படி செயல்பட்டால் நோயும் குணமாகும், அந்த நோய் கொண்டுவரும் உடல்ரீதியான, மனரீதியான, மற்றும் பொருள்ரீதியான இழப்புகளில் இருந்தும் நாம் நம்மை சுதாரித்துக் கொள்ளலாம்.
எனவே நோய் வரும்போது நாம் மிக மிக முக்கியமாக உணர வேண்டியவை :படைத்தவனை உணர்வோம்
அப்படிப்பட்ட இறைவனை நேரடியாக விளித்துப் பிரார்த்திக்க வேண்டும். நமக்கு வாய்த்துள்ள கஷ்டங்களையும் குறைகளையும் நீக்குமாறு முறையிட வேண்டும். நோயிலிருந்து விரைவில் நிவாரணம் நல்குமாறு கோர வேண்டும். நமது குறைகளை நமது இறைவனிடம் முறையிட எந்த இடைத்தரகர்களையும் நாடக்கூடாது. அவனுக்கு இணையாக வேறு யாரையும் தெய்வங்கள் என்று கருதி வணங்கக்கூடாது. உயிரும் உணர்வும் அற்ற உருவங்களை நோக்கி ‘கடவுளே’ என்று அழைத்து அவனை இழிவு படுத்தக் கூடாது. மருத்துவம் மேற்கொள்ள வேண்டும்:
மேற்கண்ட வாழ்வின் அடிப்படை உண்மைகளை நினைத்து மனதை உறுதிப்படுத்தி மேற்கொண்டு நோய்க்கான சிகிச்சைகளை மேற்கொள்ள முயற்சிக்க வேண்டும். நோயை வாழ்வின் சோதனையாக ஏற்படுத்திய இறைவனே அதற்கு மருத்துவம் மேற்கொள்ளவும் பணிக்கிறான்.
“மருத்துவம் செய்யுங்கள்! ஏனெனில் மரணம் என்ற நோயைத் தவிர மற்ற எல்லா நோய்களுக்கும் அல்லாஹ் மருந்தை உருவாக்கியுள்ளான்” என்று நபி(ஸல்) கூறினார்கள். (நூல்: அபூதாவூத்)
“ஒவ்வொரு நோய்க்கும் மருந்துண்டு: மருந்து நோயை அடைந்தால் அல்லாஹ்வின் அனுமதியுடன் நோய் நீங்கிவிடுகிறது” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் : முஸ்லிம்)
எனவே, ஒவ்வொரு விஷயங்களும் ஏன் உண்டாகின்றது என்ற அடிப்படை ரகசியங்களை அறிந்து பொறுமையுடன் சகித்துக்கொல்வது வாழ்வை வளமாக்கும், ஈருலகிலும் நற்பயன் கிட்டும்.கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக