வெள்ளி, பிப்ரவரி 13, 2015

facebook &காதல் - ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்Ø  ''நிச்சயமாக உங்கள் செல்வமும், உங்கள் குழந்தைகளும் (உங்களுக்குச்) சோதனையாக இருக்கின்றன; நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் தான் மிகவும் உயர்ந்த நற்கூலி உண்டு' என்பதை நீங்கள் நன்கு அறிந்து கொள்ளுங்கள்" (அல்-குர்ஆன் 8:28)  
Ø  இறுதித் தூதர் நமக்கு இடும் கட்டளை இதுவே:உங்களில் எவரேனும் தீமையைக் கண்டால் கையால் தடுக்க வேண்டும். இயலாவிட்டால் நாவால் தடுக்க வேண்டும். அதற்கும் இயலாவிட்டால் மனதால் வெறுக்க வேண்டும். இதுதான் இறைநம்பிக்கையின் இறுதிநிலையாகும். (நூல்: முஸ்லிம் 78)
உலகம் முழுக்க சமூக வலைதளங்கள் தன் வலையை வலுவாகப் பின்னிக்கொண்டு வருகின்றன. நவீன உலகில் இணையம் பயன்படுத்துவோரின் ஆறாவது மற்றும் ஏழாவது விரலாக, சமூக வலைதளங்கள் மாறிவிட்டன.
பரஸ்பர கருத்துக்கள் மற்றும் உணர்வுகளைப் பரிமாறிக்கொள்ளும் வழி திறப்பாகநவீனஉலகில்பரிணமித்திருக்கும்சமூகவலைதளங்களை(face book)முஸ்லிம் இளைஞர்கள் எவ்வாறு பயன்படுத்தினார்கள்? பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்? இதன் பின்னால்நிகழும் உளவியல், சமூகவியல், அரசியல் பின்னணியை ஆராயவேண்டியுள்ளது. குறிப்பாக, தமிழ்நாட்டு இளைஞர்கள் குறித்து அதிகம் கவலை கொள்ள வேண்டியுள்ளது.
சமூக வலைதளம் என்பது என்ன? அதன் வீச்சு என்ன? தான் சார்ந்திருக்கிற சமயத்தை அல்லது நம்பிக்கையை நேரடியாகவோ, மூர்க்கதனமாகவோ பிரதிபலிப்பதால் சமூகங்களுக்கிடையே அது என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதையே நினைத்துப் பார்க்காமல் இளைஞர்கள் தவறி விடுகிறார்கள்.
இந்தியா 2வது இடம்!
சமூக வலைதளமான ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட வலைதளங்களை உலகெங்கிலும் உள்ள 60-க்கும் மேற்பட்ட நாட்டினர் பரவலாக பயன் படுத்துகின்றனர். இதில், 92 மில்லியன் (7.73%) பயன்பாட்டாளர்களுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறது இந்தியா.
17 வயது மற்றும் அதற்கு கீழ் : 11%
18-24 வயதினர் : 50%
25-34 வயதினர் : 28%
35-44 வயதினர் : 6.6% 
45-54 வயதினர் :  2.2%
55 வயது மற்றும் அதற்கு மேல் 2.2%
இவர்களில் 75 சதவிகிதத்தினருக்கும் அதிக மானோர், ஆண்களே என்பது, பெண்கள் குறித்து வைத்துக்கொள்ள வேண்டிய விஷயமாகும்.சமூக வலைதளங்கள் உருவாகிய காலகட்டத்தில் அரபுநாடுகளில் பணிபுரியும் பல இஸ்லாமிய இளைஞர்கள் தங்களின் பொழுதுபோக்கிற்காக அதனைப் பயன்படுத்தினர். இன்றும்கூட பெரும்பாலானோர் அதற்காகத்தான் பயன்படுத்துகின்றனர். கையில் ஒரு லேப்டாப்பை வைத்துக்கொண்டு பணிமுடிந்து வரும் மாலை வேளையில் தங்கள் அறையில் ஒரு மூலையில் உட்கார்ந்துகொண்டு மேய ஆரம்பித்தனர். நீண்டகால ஆரம்பத்தின் தொடக்கம் இங்குதான் உருவானது. பிற்பாடு அலைபேசியிலும் இது பரவ ஆரம்பித்தது.
சமூக வலைதளங்களில் முஸ்லிம் இளைஞர்களின் செயல்பாடுகளை மூன்றுவிதமாக வகைப்படுத்தலாம்:
1. பேஸ்புக் என்பது பள்ளிவாசல் போன்று புனிதமானது என்று கருதி, அதில் தொழ நினைப்பவர்கள்; தஸ்பீஹ் எண்ணுபவர்கள்; திக்ரு உச்சரிப்பவர்கள் (ஸுப்ஹானல்லாஹ், மாஷா அல்லாஹ் போன்றவை).
2. இஸ்லாம் எங்களால் மட்டுமே இந்த பூமியில் நிலைபெறும் என்று கருதி தாவா செய்பவர்கள்; அம்மாதிரியான பதிவிடுபவர்கள். இதில் அவ்வப்போது வரம்பு மீறுபவர்களும் இருக்கிறார்கள். இதனை அவர்கள் பாணியில் நியாயப்படுத்தும் பல வசனங்கள் மற்றும் ஹதீஸ்களை அள்ளிவிடுகிறார்கள்.
ஒருவர், இஸ்லாம் குறித்து ஏதாவது ஆதரவாகவோ அல்லது எதிராகவோ பதிவேற்றும்போது ஆதரவாக எழுதினால் அவரை உச்சிமோந்து புகழ்ந்து தள்ளுவது, இதனோடு அவருக்கும் சேர்த்து தாவா செய்வது, மற்ற மதங்களை இகழ்வது போன்றவற்றைச் செய்வது, அதே நேரத்தில் எதிராக எழுதினால் அல்லது மாற்றுக்கருத்து பதிவிட்டால் உடனே எவ்வித வரம்புமின்றி, குறைந்தபட்ச வார்த்தை நாகரீகம் கூட இல்லாமல் அவர்களை மிகவும் கேவலமாகத் திட்டுவது; வசைபாடுவது; இதனை 'கருத்து ஜிஹாத்' என்று தன்னைத்தானே புகழ்ந்துகொள்வது போன்றவை நடந்து கொண்டிருக்கின்றன. ஆராயும்போது சில உலமாக்களின் உப்புச்சப்பற்ற, சமூக அக்கறை சாராத, உள்ளடக்கமற்ற பேச்சுக்களும் இதற்கு ஒரு காரணமாக இருக்கின்றன.
மேலும், நம்மவர்கள் பலருக்கு விமர்சனத்திற்கும், திட்டுவதற்குமான வித்தியாசம் தெரியவில்லை. இஸ்லாம் பற்றிய கருத்திற்காக மற்றவர்களை படுகேவலாமாகத் திட்டியே சுகங்காணும் பலர் இருக்கின்றனர். facebook மற்றும் twitter போன்ற சமூக வலைதளங்களில் பெரும்பாலும் படித்த முஸ்லிம் இளைஞர்கள்தான் தீவிரமாக இயங்கிவருகிறார்கள்.
3. மிகவும் கேவலமாக, ஆபாசமாக நடந்து கொள்வது
சமூக வலைத்தளத்தின் நோக்கம் என்பது பரஸ்பர ஆக்கபூர்வமான கருத்து பரிமாற்றமே.
ஃபேஸ்புக் மற்றும் டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களின் பயன்பாடுகள் மனிதர்களின் அடிப்படைத் தேவைகளான உணவு, காற்று மற்றும் தண்ணீரின் தேவைகளையே கேள்விக்குறியாக்கும் வகையில் மெய்மறக்கச் செய்கின்றன.
உங்களுடைய இதயம் மறக்க இயலாத விஷயங்களை இந்தவலைத் தளங்களில் பதிவு செய்யவும், பகிர்ந்து கொள்ளவும் முடியும். தனியாக இருக்கும்போது இந்த விஷயங்களை செய்வதில் எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லையென்றாலும், நீங்கள் ஒரு உறவுக்குள் வந்த பின்னர் சில மாற்றங்களை பின்பற்ற வேண்டியது அவசியமாகிறது.
இந்த அறிகுறியெல்லாம் இருக்கா..... சான்ஸே இல்லைங்க, கண்டிப்பா அவன் உங்களை ‘லவ்’ பண்றான்! உங்களுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு விட்டாலோ, திருமணம் நடந்து விட்டிருந்தாலோ அல்லது யாருடனாவது தொடர்பில் இருந்தாலோ, உங்களுடைய இணைய வழி செயல்பாடுகளை சற்றே கவனத்துடன் அணுக வேண்டிய தருணம் இதுவாகும்.
ஃபேஸ்புக்குகளில் எந்த வித அறிமுகமும் இல்லாமல் தொடங்கிய பல்வேறு உறவுகளும், விவாகரத்து அல்லது பிரிந்து வாழ்தல் போன்ற நிலைகளுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இன்னும் சிலபேர் தவறான காரணங்களுக்காக போலியான அடையாளம் கொண்ட கணக்குகளை பயன்படுத்துவார்கள்.
நீங்கள் இவ்வாறு போலி கணக்குகளை பயன்படுத்துபவர்களில் ஒருவராக இருந்தால், உடனடியாக நிறுத்திக் கொள்ளுங்கள். இந்த வகை கணக்கை அழித்து விட்டு, உங்களுடைய துணைவருக்கு உண்மையானவராக நடந்து கொள்ளுங்கள். இந்த வகையான போலி அடையாளங்களை உங்களுடைய துணைவர் கண்டறிய மாட்டார் என்று நினைப்பது, நெடுநாட்களுக்கு நீடித்து இருப்பதில்லை.
·         சில நண்பர்கள் தேவையில்லை உங்களுடைய இனிமையான மண வாழ்க்கை அல்லது உறவை தொந்தரவுக்குள்ளாக்கும் சில நண்பர்களை முகநூல் நட்பிலிருந்து வெளி யேற்றுவது நல்லது. இந்தவகை நண்பர்களிடம் தொடர்பில் இருப்பதைவிட, பேஸ் புக் மற்றும் டுவிட்டரில் கூட தொடர்பு கொள்ளாமல் இருப்பது நல்லது.
·         பல கணவர்களும், மனைவிகளும் பிரிந்திருக்க காரணமாக இருப்பது வருத்தத்திற்குரிய இந்த வகையான நட்புகளே.
ஆரம்பத்தில், நண்பருடனான பிரிவு உங்களை வருத்தினாலும், பின் நாட்களில் திருமண உறவை பாதுகாத்ததற்காக நீங்கள் பெருமைப்படுவீர்கள்.
இரகசியம் தேவையில்லை ஆரோக்கியமான உறவு என்பது துணைவருடன் நம்பிக்கை மற்றும் புரிந்துணர்வை பகிர்ந்து கொள்வது தான்.
உங்களுக்கு ‘ஓ.கே’ என்றால் ஃபேஸ்புக் பாஸ்வேர்டை கூட துணைவருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். அதே போல, சில படங்கள் மற்றும் போஸ்ட்-களையும் உங்களுடைய துணைவரிடம் இருந்து மறைப்பதால், தேவையில்லாத சந்தேகங்களை வரவழைத்து, உறவை கெடுத்துக்கொள்வீர்கள். எனவே கவனம் தேவை! பொதுவான தளங்களில் படங்களை போடுவதன் மூலம், அவருடன் நீங்கள் இருப்பதை விரும்புகிறீர்கள் என்றும், அதற்காக வெட்கப்படவில்லை என்றும் உலகுக்கும், துணைவருக்கும் உணர்த்திடவும் முடியும்.
எனினும், நெருக்கமான அல்லது தனிப்பட்ட படங்களை நீங்கள் பதிவிடும்போது கவனமாக இருக்கவும், பின் நாட்களில் உங்களுடைய துணைவரை தர்மசங்கடமான நிலைக்கு இந்த படங்கள் தள்ளி விடும்.         காதல் - ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்
Ø  ''நிச்சயமாக உங்கள் செல்வமும், உங்கள் குழந்தைகளும் (உங்களுக்குச்) சோதனையாக இருக்கின்றன; நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் தான் மிகவும் உயர்ந்த நற்கூலி உண்டு' என்பதை நீங்கள் நன்கு அறிந்து கொள்ளுங்கள்" (அல்-குர்ஆன் 8:28)  
மேற்கத்திய கலாசாரம் ஈன்றெடுத்த குழந்தைகள்தான் இன்றைய காதலும் காதலர் தினங்களும் சீரழிந்த இந்த மேற்கத்திய கலாசாரத்தின் வெளிப்பாடுகள்தான் இவைகள். இன்றைய இளவல்களை கவர்ந்திழுக்கின்ற ஒரு காரணியாக நவீன காதல் அமைந்திருக்கின்றது.
v  ஓடிப்போவதற்கான முக்கியக் காரணங்கள்:
தாயோடும், குடும்பத்தோடும் நெருங்கிய தொடர்பு இல்லாமை.
டீன் ஏஜ் அறியாமை.
மார்க்கத்தை சொல்லி வளர்க்காதது.
இந்த வயதுக்கே உரிய அதிகப்படியான எதிர்பார்ப்பு.
தான் எடுக்கும் முடிவு சரிதான் என்று தன் மேல் தனக்கிருக்கும் அதிகப்படியான நம்பிக்கை.
சில நாட்கள் அனுபவம் காலம் முழுவதும் வேண்டும் என்ற வெறித்தனமான ஆசை.
தமது திருமண வாழ்வைத் தீர்மானிப்பதில் தம்மை தாலாட்டி சீராட்டி வளர்த்த தமது தாய் தந்தையரின் தலையீடுகள் சிறிதும் இன்றி முழுவதுமாக தமது சுயவிருப்பின் அடிப்படையிலேயே தமது திருமண வாழ்வை அமைத்துக் கொள்ள விரும்புகின்றது இன்றைய இளைஞர் சமுதாயம்.
தற்போதைய சூழற்காரணிகளும் அதற்கு ஏதுவாக அமைந்திருக்கின்றது. அந்நிய ஆண்களும் பெண்களும் தனிமையில் சந்தித்துக் கொள்வதற்கான வாய்ப்புக்களும் கலந்து பழகுவதற்கான வாய்ப்புக்களும் தாராளமாகவே காணப்படுகின்றன.
பாடசாலைகள் பல்கலைக்கழகங்கள் தனியார் கல்விநிலையங்கள் அலுவலகங்கள் மற்றும் பூங்காக்கள் போன்றவற்றில் அந்நிய ஆண்களும் பெண்களும் எந்தவிதமான தடங்கல்களுமின்றி கலந்து பழகுகின்றனர். பழக்கம் தொடர்ந்து கடைசியில் தம்மை ஈன்றெடுத்த தாய் தந்தையருக்கு தெரியாமலேயே அல்லது அவர்களது விருப்பத்திற்கு மாற்றமாக திருமணம் நடந்தேறுகிறது.
தற்போதைய தகவல் தொழிநுட்பயுகத்தில் இன்றைய காதலையும் காதல் திருமணங்களையும் ஊக்குவிப்பதில் இணையங்களும் (internet) சினிமாக்களும் பெரும் பங்கு வகிக்கின்றன.
இந்த காதல் திருமணங்கள் ஆற அமர நிதானமாக சிந்தித்து நடப்பவை அல்ல. மாறாக உணர்வுகளின் உந்துதல்களால் நடைபெறுபவை ஆகும். இவ்வாறு நடந்தேறிய திருமணங்கள் சில மாதங்கள் சில வருடங்கள் சந்தோஷமாக கழிகின்றன. பின்னர் கோலங்கள் கலைந்து வாழ்வின் யதார்த்தங்கள் புரிகையில் இவர்களால் அதற்கு முகம் கொடுக்க முடிவதில்லை. பரஸ்பரம் விட்டுக் கொடுத்தல் என்கின்ற தன்மைகள்அஸ்த்தமித்துஅற்பப்பிரச்சினைகளும் சுனாமியாய் உருவெடுக்கின்றன.
உறவுகள் சீர்குலைந்து காதல் கசந்து விருப்புக்கள் வெறுப்பாய் மாறி பூகம்பமாய் வெடிக்கின்றது. நிறைகள் அஸ்த்தமனமடைந்து குறைகள் உதயமாகி குறைகளே பூதாகரமாக காட்சியளிக்கத் தொடங்குகின்றன. கடைசியில் இது விவாகரத்தில் சென்று முடிகின்றது.
அண்மைக்கால பத்திரிகைச் செய்திகளும் ஆய்வறிக்கைகளும் உணர்த்தி நிற்கின்ற ஒரு விடயம் விவாகரத்தில் அதிகளவு இடத்தைப் பிடித்திருப்பதும் தற்போதைய திருமணங்களில் மிகக் குறைந்த ஆயுளை கொண்டதுமான திருமணங்கள் தற்போதைய காதல் திருமணங்களேயாகும்.
மேலும் தமிழ் சினிமாக்களில் சித்தரிக்கப்படுவது போன்று தற்போதைய காதலானது தெய்வீகத் தன்மை வாய்ந்ததாயின் அதில் துளியளவு கூட ஏமாற்றம் தோல்வி துரோகம் என்பன இருக்கக் கூடாது. எனவே இன்றைய இந்த காதல் திருமணங்கள் தெய்வீகத் தன்மை வாய்ந்தது புனிதமானது என்ற வாதங்கள் போலித்தனமானவையாகும்.
ü  நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் கூறினார்கள்: ''யார் மலையின் மீதிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொள்கிறாரோ அவர் நரக நெருப்பில் என்றென்றும் குதித்துக் கொண்டேயிருப்பார். யார் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொள்கிறாரோ அவர் நரகத்திலும் நிரந்தரமாக விஷத்தைக் கையில் வைத்துக் கொண்டு குடித்துக் கொண்டேயிருப்பார். யார் கூறிய ஆயுதத்தால் தற்கொலை செய்து கொள்கிறாரோ அவ்வாயுதம் தமத கையில் இருக்கும் நிலையில் நரகத்தில் தமது வயிற்றில் தாமே என்றென்றும் குத்திக் கொண்டேயிருப்பார்.'' (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புஹாரி 5778
இன்றைய காதல் சில நேரங்களில் தற்கொலைக்கும் வழிவகுத்து நம்மை நிரந்தர நரகவாதியாகவும் ஆக்கி விடுகிறது. மேலும் அந்நிய ஆண்களும் பெண்களும் நெருங்கிப் பழகுவதை மார்க்கம் வன்மையாக கண்டிக்கின்றது.

v  கள்ளக்காதல் கொள்வதையும் இஸ்லாம் தடை செய்கிறது.
ஏக நாயன் அருள் மறையாம் திருமறையில் எடுத்தியம்புவதைப் பாருங்கள்.
''உங்களில் எவருக்குச் சுதந்திரமுள்ள முஃமினான பெண்களை விவாகம் செய்து கொள்ள சக்தியில்லையோ அவர்கள் முஃமினான அடிமைப்பெண்களிலிருந்து உங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்ட பெண்களை (மணமுடித்துக் கொள்ளலாம்;) அல்லாஹ் உங்கள் ஈமானை நன்கு அறிகிறவன்.
உங்களில் சிலர் சிலரைச் சேர்ந்தவர்கள்; ஆகவே முஃமினான அடிமைப்பெண்களை அவர்களின் எஜமானர்களின் அனுமதி கொண்டு மணமுடித்துக் கொள்ளுங்கள் - அவர்களுக்குரிய (மஹர்) தொகையை முறைப்படிக் கொடுத்து விடுங்கள்; அப்பெண்கள் பரிசுத்தமானவர்களாகவும் விபச்சாரம் செய்யாதவர்களாகவும் கள்ளக் காதல் கொள்ளாதவர்களாகவும் இருக்க வேண்டும்.
எனவே அப்பெண்கள் முறைப்படி திருமணம் முடிக்கப்பட்டபின் மானக்கேடாக நடந்து கொண்டால் விவாகம் செய்யப்பட்ட சுதந்திரமான பெண்கள் மீது விதிக்கப்படும் தண்டனையில் பாதியே அப்பெண்களுக்கு விதிக்கப்பெறும்;
தவிர உங்களில் எவர் தன்னால் பாவம் ஏற்பட்டுவிடும் என்று (அல்லாஹ்வுக்குப்) பயப்படுகிறாரோ, அவருக்குத்தான் இந்த சட்டம். எனினும் நீங்கள் பொறுமையாக இருப்பது உங்களுக்கு மிகவும் நல்லதாகும்;
இன்னும் அல்லாஹ் மன்னிப்போனாகவும்இ மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்'' (அல்குர்ஆன் 4:25)
மேலுள்ள அருள் மறை வசனம் திருட்டுத் தனமாக காதல் கொள்வதை தடைசெய்கிறது.
திருமணத்திற்கு முன் ஓர் ஆண் பெண்ணைத் திருமணம் செய்ய விரும்புவது அல்லது ஓர் பெண் ஆணைத் திருமணம் செய்ய விரும்புவதுதான் காதல் என்று சொன்னால் அதனை இஸ்லாம் தாராளமாக அனுமதிக்கின்றது. மாறாக இன்றைய காலகட்டத்தில் காதலின் பெயரால் இடம்பெறுகின்ற வரம்பு மீறிய செயற்பாடுகளைத்தான் தடை செய்கின்றது.
மேலும் திருமணம் செய்ய விரும்புகின்ற பெண்ணை நேரில் நன்கு பார்த்து நாம் எதிர்பார்க்கும் விடயங்கள் பண்புகள் அவளிடம் உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுமாறும் இஸ்லாமிய மார்க்கம் வலியுறுத்துகின்றது. இது தொடர்பாக நபிகளாரின் பொன்மொழிகள் பின்வருமாறு எடுத்தியம்புகின்றன.
''நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களுடன் வீட்டிலிருந்த போது ஒருவர் வந்து தான் அன்சாரி பெண்ணொருத்தியை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக கூறினார். அதைக் கேட்ட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் அப்பெண்ணை நீங்கள் பார்த்தீர்களா? எனக் கேட்டார்கள். அதற்கு அவர் இல்லை நாயகமே! நான் அவளைப் பார்க்கவில்லை என்றார். அப்படியானால் முதலில் அவளைப் பார்த்துக் கொள்ளுங்கள். மதீனாவாசிகளின் கண்களில் சிறிது கோளாறு இருக்கின்றது என்றார்கள்''(அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம்)
''நான் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளத் தூதனுப்பினேன். இதனைக் கேள்வியுற்ற நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் நீங்கள் பெண்ணைப் பார்த்தீர்களா? என வினவினார்கள். இல்லை என்றேன். அவ்வாறாயின் அப்பெண்ணை பார்த்துக் கொள்ளுங்கள். இம்முறையைக் கையாள்வதால் உங்களுக்கிடையில் நட்பும் நல்லிணக்கமும் ஏற்பட வழிபிறக்கும் எனக்கூறினார்கள். (அறிவிப்பவர்: முகீரா பின் ஹுஃபாரளியல்லாஹு அன்ஹு, நூல்: திர்மிதீ நஸயீ)
மேற்படி நபிமொழிகளில் இருந்து ஒருவர் திருமணம் செய்வதாக இருந்தால் கட்டாயம் பெண்ணைப் பார்த்துக்கொள்ள வேண்டுமென்பதை அறியலாம். மேலும் திருமணம் செய்து கொடுக்கப்படுவதாக இருந்தால் கட்டாயம் பெண்ணின் விருப்பம் கேட்கப்பட வேண்டும்.
பெண்ணின் சம்மதமின்றி செய்யப்பட்ட திருமணத்தை நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் ரத்து செய்துவிட்டார்கள்'' (ஆதாரம்: ஸஹீஹுல் புஹாரி 5136/ 6968/ 6970)
அதே சமயம் பெண் ஒருவனை விரும்புகின்ற போது அவன் இஸ்லாமிய அடிப்படையில் சீதனமின்றி மஹர் கொடுத்து திருமணம் முடிக்க முன்வருகின்ற போது பெற்றோர் பெண்ணின் உணர்வினை மதித்து அவளது விருப்பப்படி திருமணம் செய்து கொடுக்க முன் வர வேண்டும்
மேலும் திருமணம் செய்து கொள்வதற்காக ஒருவரை ஒருவர் விரும்புகின்ற போது விரும்புபவரும் விரும்பப்படுபவரும் முஸ்லிமாக இருத்தல் வேண்டும். முஸ்லிம்கள் முஸ்லிமல்லாதோரை திருமணம் செய்வதை இஸ்லாம் தடைசெய்கின்றது.
ஏக நாயன் அருள் மறையாம் திருமறையில் எடுத்தியம்புவதைப் பாருங்கள்.
''(அல்லாஹ்வுக்கு) இணைவைக்கும் பெண்களை -அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை- நீங்கள் திருமணம் செய்து கொள்ளாதீர்கள்;
இணை வைக்கும் ஒரு பெண் உங்களைக் கவரக்கூடியவளாக இருந்தபோதிலும் அவளைவிட முஃமினான ஓர் அடிமைப் பெண் நிச்சயமாக மேலானவள் ஆவாள்;.
அவ்வாறே இணைவைக்கும் ஆண்களுக்கு- அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை (முஃமினான பெண்களுடன்) நீங்கள் திருமணம் செய்து வைக்காதீர்கள்;
இணை வைக்கும் ஆண் உங்களுக்குக் கவர்ச்சியூட்டுபவனாக இருந்த போதிலும் ஒரு முஃமினான அடிமை அவனைவிட மேலானவன்; (நிராகரிப்போராகிய) இவர்கள் உங்களை நரக நெருப்பின் பக்கம் அழைக்கிறார்கள்;
ஆனால் அல்லாஹ்வோ தன் கிருபையால் சுவர்க்கத்தின் பக்கமும் மன்னிப்பின் பக்கமும் அழைக்கிறான்;
மனிதர்கள் படிப்பினை பெறுவதற்காக தன் வசனங்களை அவன் தெளிவாக விளக்குகிறான்.'' (அல்குர்ஆன் 2:221)
அதே சமயம் ஒரு ஆணோ பெண்ணோ விரும்புகின்ற வாழ்க்கை மார்க்கத்திற்கு முரணில்லாத வகையில் காணப்படும்போது அதனைத் தடுப்பது குற்றமாகும்.
எனவே அல்லாஹ்வும் அவனது தூதரும் கற்றுத்தந்த வகையில் எமது வாழ்வை அமைத்து ஈருலகிலும் ஏகநாயனின் திருப்தியையும் மன்னிப்பையும் பெறுவோமாக!
சமூகப் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை முன்வைக்கும் முன் இஸ்லாம் தனிமனித சீர்திருத்தத்தை வலியுறுத்துகிறது.
மனிதன் தவறு செய்யாமல் அல்லது பாவம் செய்யாமல் வாழ வேண்டுமானால் மிக மிக முக்கியமாக அவனுக்குள் இறையச்சம் இருக்கவேண்டும். அதாவது என்னைப்  படைத்தவன் என்னை கண்காணித்துக் கொண்டிருக்கிறான். நான் செய்யும் செயல்களுக்கு நாளை அவனிடம் விசாரணை உள்ளது, பாவம் செய்தால் அவன் என்னை தண்டிப்பான் என்ற உணர்வு மனிதனுக்குள் விதைக்கப் படவேண்டும். அது இல்லாத பட்சத்தில் எந்தப் பாவம் செய்யவும் மனிதன் சிறு தயக்கமும் இல்லாமல் துணிகிறான்.
இறைவன் விதிக்கும் வரம்புகள்
 அவ்வாறு ஆரோக்கியமான ஒரு சமூகத்தை உருவாக்குவதற்காகத்தான் கீழ்காணும் வரம்புகளையும் கட்டுப்பாடுகளையும் விதிக்கிறான் இறைவன்.
-    ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஆடைக் கட்டுப்பாடு, (திருக்குர்ஆன் 24:31, 33 :59)
-    பாலியல் வக்கிரத்தைத் தூண்டக்கூடிய செயல்களின் பக்கம் நெருங்கத் தடை (ஹதீஸ் மற்றும் திருக்குர்ஆன் 17:32)
-    ஆணுக்கும் பெண்ணுக்கும் கற்பொழுக்கம், பார்வைக் கட்டுப்பாடு  (திருக்குர்ஆன் 24:30,31)
-    பத்து வயதுக்கு மேல் ஆண்குழந்தைகளையும் பெண்குழந்தைகளையும் பிரித்துப் படுக்க வைத்தல், (ஹதீஸ்)
-    இரு பாலர்க்கும் கட்டாயக் கல்வி, (ஹதீஸ்)
-    பெண்கள் உரிய ஆண் துணையின்றி நீண்ட பயணங்கள் மேற்கொள்ளத் தடை,, (ஹதீஸ்) 
-    அந்நிய ஆண்களும் பெண்களும் சரளமாகப் பழகுவதற்க்குத் தடை (திருக்குர்ஆன் 24:27, 33: 55)
-    அந்நிய ஆண்களோடு பெண்கள் குழைந்து பேசத் தடை, (திருக்குர்ஆன் 33:32)
-
    வயது வந்த அந்நிய ஆணும் பெண்ணும் தனித்திருக்கத் தடை (ஹதீஸ்)
-    வயது வந்த ஆண்களுக்கும் பெண்களுக்கும் விரைவாகத் திருமணம், (திருக்குர்ஆன் 24:32 மற்றும் ஹதீஸ்)
-    மணப்பெண்ணின் சம்மதமின்றி மணமுடிக்கத் தடை (திருக்குர்ஆன் 17:31)
-    வரதட்சணைக்குத் தடை, பெண்ணுக்கு மணக்கோடை கொடுக்க கட்டளை (4:4, 17:31)
-    குடும்பத் தலைமையும் பொருளாதார சுமையும் ஆண் மீது கடமை,.  குடும்ப நிர்வாகம் பெண் மீது கடமை, பொருளாதாரச் சுமை மீது அல்ல. (4:34)
-    கற்பொழுக்கமுள்ள பெண்கள் மீது அவதூறு கூறினால் கசையடி (24:4)
-    விபச்சாரக் குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகள் (24:2)
-    அவற்றை பொதுமக்களுக்கு முன் நிறைவேற்றுதல் (24:2)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக