வெள்ளி, மார்ச் 13, 2015

இஸ்லாத்தின் பார்வையில் கடன்

மனிதர்கள், படைத்த இறைவனுக்கு செய்ய வேண்டிய கடமைகள் எவ்வாறு இஸ்லாத்தில் தெளிவாக விபரிக்கப்பட்டுள்ளனவோ அதே போன்று ஒரு முஸ்லிம் பிற முஸ்லிமிற்கோ அல்லது அடுத்த மதத்தை சேர்ந்தவருக்கோ என்ன கடமைகள் செய்ய வேண்டும் என்ற அடிப்படை அம்சங்களும் தெளிவாக விபரிக்கப்பட்டுள்ளன
ஒரு அடியான் மற்றுமொரு அடியானுக்கு உதவி செய்யும் காலமெல்லாம் இறைவன் அவனுக்கு உதவி செய்து கொண்டே இருப்பான் என இம்மார்க்கம் இயம்புகின்றது அந்தளவு பிறருக்கு உதவும் காரியத்தை எமது மார்க்கம் எமக்கு கற்றுத்தருகின்றது இஸ்லாத்தில் சகோதரத்துவ வாஞ்சைக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது இஸ்லாத்தில் இனவேறுபாடு இல்லை! இஸ்லாத்தில் ஏற்றத்தாழ்வுகள் இல்லை!இஸ்லாத்தில் குலப்பெருமை இல்லை! இவ்வாறு இஸ்லாத்தின் சிறப்புக்களை அடுக்கிக் கொண்டே போகலாம்
ஒரு மனிதன் வாழ்க்கையில் இன்னல்படுகிறான் என்றால் அவனுக்கு நாம் செய்யும் மிகப் பெரிய கைங்கரியமே கடனுதவி ஆகும் ஒரு மனிதனுக்கு கடனுதவி வழங்கினால் அவனது சந்தோஷத்திற்கு அளவேயில்லை அதே போன்று அவன் தனது கடனை அடைக்க சிரமப்படும் போது அவனுக்கு ஏற்படும் வருத்தத்திற்கும் அளவே இல்லை என்று கூறலாம்
கடன் வாங்குவதென்பது ஏழைகளுக்கு சொந்தமானது, கடன் வழங்குவது தனவந்தர்களுக்கு சொந்தமானது என்றோ நாம் புரிந்து கொள்ளக் கூடாது இன்றைய சூழலை அவதானித்தால் ஏழைகள் கடனாளியாகின்றார்கள் தனவந்தர்கள் கடனாளியாகின்றார்கள் ஏன் அரசாங்கமே சில வேளை கடனாளியாகி விடுகின்றது
இந்தியாவின் கடன்:34 லட்சத்து 6 ஆயிரத்து 322 கோடி

இந்தியா கடந்த சில ஆண்டுகளாக ஆண்டுதோறும் ரூ.3 லட்சம் கோடி கடன் வாங்கி வருகிறது. அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் இந்த பொது கடன் ரூ.34 லட்சத்து 6 ஆயிரத்து 322 கோடியாக உயரும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவின் தற்போதைய மக்கள் தொகை 115 கோடியே 40 லட்சம் ஆகும். இதன் அடிப்படையில், அடுத்த ஆண்டு மார்ச் மாதவாக்கில், ஒவ்வொரு இந்திய குடிமகனின் சராசரி கடன் ரூ.30 ஆயிரம் ஆக உயரும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
தமிழக அரசுக்கு தற்போதுள்ள கடனில், ஒவ்வொரு குடிமகனும், 13 ஆயிரத்து 862 ரூபாய்க்கு பொறுப்பாளியாக உள்ளனர். தமிழக அரசின் கடன் தொகை, 2013-14ல், 1.41 லட்சம் கோடியாக உயரும். இதற்கு, 10 ஆயிரம் கோடி ரூபாய் வட்டி செலுத்த வேண்டும் என, பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.{1/03/2015}

இவ்வாறு கடன் என்பது யாருக்கும் சொந்தமான தனியுடமையாக அன்றி பொதுவுடமையான ஒன்றாகவும் மனித வாழ்க்கையில் இன்றியமையாத ஒன்றாகவும் இருப்பதால் இது சம்பந்தமாக மார்க்கம் கூறிய சட்டவிதிகளை நாம் இங்கு சுட்டிக்காட்ட விழைகின்றோம்
கடன் வழங்குவதின் சிறப்பு
பிறர் கஷ்டப்படும் போது கடனுதவி செய்வது சிறப்புக்குரிய ஒரு காரியம் என்பதை அல்குர்ஆன் வசனம் "அல்லாஹ்வுக்காக அழகிய கடன் வழங்குவோர் யார்?" என்ற கேள்வியினூடாக எமக்கு புரிய வைக்கின்றது
கடன் வாங்கும் போது எழுதுங்கள்! என கட்டளையிடும் அல்குர்ஆன்:
நம்பிக்கை கொண்டோரே குறிப்பிட்ட காலக்கெடு விதித்து ஒருவருக்கொருவர் கடன்கொடுத்தால் அதை எழுதிக் கொள்ளுங்கள் எழுதுபவர் உங்களிடையே நேர்மையான முறையில் எழுதட்டும் அல்லாஹ் தமக்கு கற்றுக் கொடுத்தது போல் எழுதிட எழுத்தர் மறுக்காது எழுதட்டும் கடன்வாங்கியவர் எழுதுவதற்குரிய வாசகங்களை சொல்லட்டும் தனது இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளட்டும் அதில் எதையும் குறைத்து விடக் கூடாது கடன் வாங்கியவர் விபரமறியாதவராகவோ பலவீனராகவோ எழுதுவதற்கு ஏற்பச் சொல்ல இயலாதவராகவோ இருந்தால் அவரது பொறுப்பாளர் நேர்மையாக சொல்லட்டும் உங்கள் ஆண்களில் இருவரை சாட்சியாக்கிக் கொள்ளுங்கள் இரு ஆண்கள் இல்லாவிட்டால் சாட்சிகள் என நீங்கள் திருப்தியடையும் ஓர் ஆணையும் இரண்டு பெண்களையும் (ஆக்கிக் கொள்ளுங்கள்) அவ்விரு பெண்களில் ஒருத்தி தவறாகக் கூறினால் மற்றொருத்தி நினைவு படுத்துவாள் அழைக்கப்படும் போது சாட்சிகள் மறுக்கக் கூடாது சிறிதோ பெரிதோ தவணையைக் குறிப்பிட்டு எழுதிக் கொள்வதை அலட்சியம் செய்யாதீர்கள் இதுவே அல்லாஹ்விடம் நேர்மையானது சாட்சியத்தை நிரூபிக்கத்தக்கது ஒருவருக்கொருவர் சந்தேகம் கொள்ளாமலிருப்பதற்கு ஏற்றது(2-282)
அல்குர்ஆனிலேயே மிகப் பெரும் அத்தியாயம் இதுதான் இதில் பலவிதமான சட்ட ஒழுக்கங்களை இறைவன் கூறிக்காட்டுகிறான்
இன்று அதிகமான முஸ்லிம்கள் கடன் பரிமாற்றத்தின் பொது எழுதிக் கொள்ளும் வழக்கத்தை கைவிட்டு வருகின்றனர் இதற்குக் காரணம் அடுத்தவர்களை இவர்கள் நம்பியிருப்பதே எனலாம்
மனிதன் எவ்வளவுதான் தனது மனதைக்கட்டுப்படுத்திக் கொள்ள முனைந்தாலும் பணத்தையோ அல்லது பொருளையோ அவன் காணும் போது சில வேளை அவனது மனம் மாறிவிடக்கூடிய வாய்ப்பு அதிகமாகவே உண்டு இதனால்தான் இஸ்லாம் எழுதுவதை ஒரு பாதுகாப்பாக கருதுகின்றது
நபி(ஸல்) அவர்கள் ஒரு தடவை இவ்வாறு கூறினார்கள்
ஆதமின் மகனக்கு (மனிதனுக்கு) இரண்டு நீரோடைகள் (நிறைய) செல்வம் இருந்தாலும் மூன்றாவதையும் அவன் தேடுவான். ஆதமின் மகனுடைய வயிற்றை மண்ணை (மரணத்தை)த் தவிர வேறெதுவும் நிரப்பாது. (பாவங்களிலிருந்து) பாவமன்னிப்புக் கோரி மீண்டுவிட்டவரின் கோரிக்கையை அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான்.
அறிவிப்பவர் அபூஹுறைரா(ரழி) ஆதாரம் புஹாரீ இலக்கம்6436
அதே போன்று பிரிதொரு சந்தர்ப்பத்தில் இவ்வாறு கூறினார்கள்
பொற்காசுவெள்ளிக்காசுகுஞ்சம் உள்ள (ஆடம்பர) ஆடைசதுரக் கம்பளி ஆடை ஆகியவற்றுக்கு அடிமையாகிவிட்டவன் துர்பாக்கியவான் ஆவான். அவனுக்கு (செல்வம்) வழங்கப்பட்டால் திருப்தியடைவான். (செல்வம்) வழங்கப்படாவிட்டால் அதிருப்தியடைவான்.
அறிவிப்பவர் அபூஹுறைரா(ரழி) ஆதாரம் புஹாரீ இலக்கம்6435
இந்த நிலையில் மனிதன் இருப்பதால் கடன் பரிமாற்றத்தின் போது எழுதுவது அனைவருக்கும் உண்மையிலேயே நல்ல பாதுகாப்பானது கடன் கொடுத்தவனும் தப்ப முடியாது கடன்வாங்கியவனும் தப்ப முடியாது அந்தளவு பாதுகாப்பான ஒன்றாக கடன் பரிமாற்றம் எழுதப்படும் அம்சம் இருக்கின்றது
கடனாளி வாக்குமீறக்கூடாது:
எம்மில் எத்தனையோ பேர் கடனை வாங்கி விட்டு அதை இன்ன திகதியில் திருப்பி வழங்குகிறேன் என வாக்களித்து விட்டு அதை உரிய நேரத்தில் வழங்காமல் ஏமாற்றுவதை பரவலாக காண்கிறோம் சில வேளை பல இலட்சம் ரூபா கடனை ஏற்படுத்திக் கொண்டு சொந்த ஊரை விட்டே தலைமாறிவிடுகின்றார்கள் கடன் கொடுத்தவன் கடனாளியின் வீட்டிற்கு வந்து அவனது மனைவி மக்களை கேவலப்படுத்தும் அவல நிலையும் எமது சமூகத்தில் இல்லாமலில்லை கடன் வாங்கி விட்டால் அதை உரிய நேரத்தில் வழங்கி விட வேண்டும் என்பதற்கு நபி(ஸல்) அவர்கள் முற்காலத்தில் நடந்த சரித்திரத்தை தனது தோழர்களுக்கு அழகிய முறையில் எடுத்துக் கூறுகிறார்கள் அந்த சரித்திரம் இதுதான்
“இஸ்ரவேலர்களில் ஒருவர் மற்றொருவரிடம் தமக்கு ஆயிரம் தங்கக்காசுகள் கடனாகக் கேட்டார். கடன் கேட்கப்பட்டவர் 'சாட்சிகளை எனக்குக் கொண்டு வா! அவர்களைச் சாட்சியாக வைத்துத் தருகிறேன்என்றார். கடன் கேட்டவர் 'சாட்சிக்கு அல்லாஹ்வே போதுமானவன்!என்றார். 'அப்படியானால் ஒரு பிணையாளியை என்னிடம் கொண்டுவா!என்று கடன் கேட்கப்பட்டவர் கூறினார். அதற்குக் கடன் கேட்டவர் 'பிணை நிற்க அல்லாஹ்வே போதுமானவன்என்று கூறினார். கடன் கேட்கப்பட்டவர் 'நீர் கூறுவது உண்மையே!என்று கூறி,குறிப்பிட்ட தவணைக்குள் திருப்பித் தர வேண்டும் என்று ஆயிரம் தங்கக் காசுகளை அவருக்குக் கொடுத்தார். கடன் வாங்கியவர் கடல் மார்க்கமாகப் புறப்பட்டுதம் வேலைகளை முடித்துவிட்டுகுறிப்பிட்ட தவணையில் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டும் என்பதற்காக வாகனத்தைத் தேடினார். எந்த வாகனமும் அவருக்குக் கிடைக்கவில்லை. உடனேஒரு மரக்கட்டையை எடுத்துஅதைக் குடைந்து அதற்குள் ஆயிரம் தங்கக் காசுகளையும் கடன் கொடுத்தவருக்கு ஒரு கடிதத்தையும் உள்ளே வைத்து அடைத்தார். பிறகு கடலுக்கு வந்து, 'இறைவா! இன்னாரிடம் நான் ஆயிரம் தங்கக் காசுகளைக் கடனாகக் கேட்டேன்அவர் பிணையாளி வேண்டுமென்றார்நான் 'அல்லாஹ்வே பிணைநிற்கப் போதுமானவன்!'' என்றேன்அவர் உன்னைப் பிணையாளியாக ஏற்றார். என்னிடம் சாட்சியைக் கொண்டுவரும்படி கேட்டார்; 'சாட்சிக்கு அல்லாஹ்வே போதுமானவன்!'' என்று கூறினேன். அவர் உன்னை சாட்சியாக ஏற்றார்அவருக்குரிய (பணத்)தை அவரிடம் கொடுத்து அனுப்பி விடுவதற்காக ஒரு வாகனத்திற்கு நான் முயற்சி செய்தும் கிடைக்கவில்லை என்பதையெல்லாம் நீ அறிவாய்! எனவேஇதை உரியவரிடம் சேர்க்கும் பொறுப்பை உன்னிடத்தில் ஒப்படைக்கிறேன்!'' என்று கூறி அதைக் கடலில் வீசினார். அது கடலுக்குள் சென்றதும் திரும்பிவிட்டார். அத்துடன் தம் ஊருக்குச் செல்வதற்காக வாகனத்தையும் அவர் தேடிக் கொண்டிருந்தார். அவருக்குக் கடன் கொடுத்த மனிதர்தம் செல்வத்துடன் ஏதேனும் வாகனம் வரக்கூடும் என்று நோட்டமிட்ட வண்ணம் புறப்பட்டார். அப்போதுபணம் அடங்கிய அந்த மரக்கட்டையைக் கண்டார். தம் குடும்பத்திற்கு விறகாகப் பயன்படட்டும் என்பதற்காக அதை எடுத்தார். அதைப் பிளந்து பார்த்தபோது பணத்தையும் கடிதத்தையும் கண்டார். பிறகுகடன் வாங்கியவர் ஆயிரம் தங்கக் காசுகளை எடுத்துக்கொண்டு இவரிடம் வந்து சேர்ந்தார்.'அல்லாஹ்வின் மீது ஆணையாக! உம்முடைய பணத்தை உமக்குத் தருவதற்காக வாகனம் தேடும் முயற்சியில் நான் ஈடுபட்டிருந்தேன். இப்போதுதான் வாகனம் கிடைத்து வந்திருக்கிறேன்!'' என்று கூறினார். அதற்கு கடன் கொடுத்தவர், 'எனக்கு எதையாவது அனுப்பி வைத்தீரா?' என்று கேட்டார். கடன் வாங்கியவர், 'வாகனம் கிடைக்காமல் இப்போதுதான் வந்திருக்கிறேன் என்று உமக்கு நான் தெரிவித்தேனே!'' என்று கூறினார். கடன் கொடுத்தவர், 'நீர் மரத்தில் வைத்து அனுப்பியதை உம் சார்பாக அல்லாஹ் என்னிடம் சேர்ப்பித்துவிட்டான்எனவேஆயிரம் தங்கக் காசுகளை எடுத்துக் கொண்டு (சரியான) வழியறிந்து செல்லும்!''என்று கூறினார்.”
அறிவிப்பவர் அபூஹுறைரா(ரழி) ஆதாரம் புஹாரீ இலக்கம்:2290
கடனை வாக்களித்தபடி உரிய நேரத்தில் நிறைவேற்றி விட வேண்டும் என்பதற்கு மேற்குறித்த சரித்திரம் நல்லதொரு சான்றாக திகழ்கின்றது
கடன் வழங்கியவர் கடனாளிக்கு அவகாசம் வழங்க வேண்டும்
கடனை வாங்கியவர் உரிய நேரத்தில் வாக்களித்தபடி கடனை திருப்பி ஒப்படைக்க வேண்டும் என்று இம்மார்க்கம் கூறுவது போல் கடன் வழங்கியவர் கடனாளிக்கு சற்று அவகாசம் வழங்க வேண்டும் எனவும் கூறுகின்றது
இறைவன் அவனது திருமறையிலே இவ்வாறு கூறுகிறான்
وَإِنْ كَانَ ذُو عُسْرَةٍ فَنَظِرَةٌ إِلَى مَيْسَرَةٍ وَأَنْ تَصَدَّقُوا خَيْرٌ لَكُمْ إِنْ كُنْتُمْ تَعْلَمُونَ(280-2)
அவன் சிரமப்படுபவனாக இருந்தால் வசதி ஏற்படும் வரை அவகாசம் கொடுக்க வேண்டும் நீங்கள் அறிந்து கொண்டால் அதை தர்மமாக்கி விடுவது உங்களுக்கு சிறந்தது(பகரா-280-2
நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள்:
யார் கடனை அடைக்க சிரமப்படும் ஒருவருக்கு (சற்று) அவகாசம் வழங்குகிறாரோ அல்லது (கடனை) தள்ளுபடி செய்கிறாரோ எந்நிழலும் இல்லாத அந்நாளில் இறைவன் தனது நிழலை அவருக்கு வழங்குவான் என்று கூறினார்கள் அறிவிப்பவர்கஃப் இப்னு அம்ர்(ரழி) ஆதாரம் சுனன் அத்தாரமீ இலக்கம்:2630
கடனாளியாக மரணித்தால் சுவர்க்கம் நுழைய முடியாது
கடன் கொடுக்க வேண்டிய நிலையில் ஒருவர் மரணித்தால் அவர் சுவர்க்கம் நுழைய முடியாது என இஸ்லாம் கூறுகின்றது
2633 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، عَنْ سُفْيَانَ، عَنْ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ عُمَرَ بْنِ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «نَفْسُ الْمُؤْمِنِ مُعَلَّقَةٌ مَا كَانَ عَلَيْهِ دَيْنٌ(سنن الدارمي)
[تعليق المحقق] إسناده حسن من أجل عمر بن أبي سلمة ولكن الحديث صحيح
விசுவாசியின் ஆத்மா கடன் இருக்கும் வரை (மேலே) தொங்கியதாக இருந்து கொண்டிருக்கும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்
அறிவிப்பவர் அபூஹுறைரா(ரழி) ஆதாரம் தாரமீ இலக்கம்:2633
கடனுடைய நிலையில் மரணித்தவருக்கு நபி(ஸல்) அவர்கள் ஜனாஸா தொழுகை நடாத்தவில்லை
நபி(ஸல்) அவர்களது காலத்தில் பல நபித்தோழர்கள் மரணித்தனர் அவர்களில் கடன் கொடுக்க வேண்டிய நிலையிலுள்ளோருக்கு நபி(ஸல்) அவர்கள் தொழுகை நடாத்தவில்லை அவ்வாறு நடாத்துவதாயின் யாரேனும் ஒருவர் அவரது கடனுக்கு பொறுப்பெடுக்க வேண்டும் என்ற நிபந்தனையையும் நபி(ஸல்) அவர்கள் ஏற்படுத்தியிருந்தார்கள்
"நாங்கள் நபி(ஸல்) அவர்களிடம் அமர்ந்திருந்தபோது ஒரு ஜனாஸாகள். 'நீங்கள் இவருக்குத் தொழுகை நடத்துங்கள்'' என்று நபி(ஸல்) அவர்களிடம் கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், 'இவர் கடனாளியா?' என்று கேட்டபோது நபித்தோழர்கள் 'இல்லைஎன்றனர். 'ஏதேனும் (சொத்தை) இவர்விட்டுச் சென்றிருக்கிறாரா?' என்று நபி(ஸல்) கேட்டபோது 'இல்லைஎன்றனர். நபி(ஸல்) அவருக்குத் தொழுகை நடத்தினார்கள். பிறகு மற்றொரு ஜனாஸா கொண்டு வரப்பட்டபோது 'இறைத்தூதர் அவர்களே! இவருக்குத் தொழுகை நடத்துங்கள்என்று நபித்தோழர்கள் கேட்டனர். அதற்கு 'நபி(ஸல்) அவர்கள் 'இவர் கடனாளியா?' என்று கேட்டபோது 'ஆம்எனக் கூறப்பட்டது. 'இவர் ஏதேனும்விட்டுச் சென்றிருக்கிறாரோ?' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டபோது 'இல்லை'என்றனர். 'இவர் எதையேனும்விட்டுச் சென்றிருக்கிறாரோஎன்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். 'இவர் கடனாளியாஎன்று நபி(ஸல்) அவர்கள் கேட்டபோது 'மூன்று தங்கக் காசுகள் கடன் வைத்திருக்கிறார்என்று நபித்தேழர்கள் கூறினார். நபித்தோழர்கள் கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள் 'உங்கள் தோழருக்கு நீங்களே தொழுகை நடத்துங்கள்என்றனர். அப்போது நடத்துங்கள்என்றனர். அப்போது அபூ கதாதா(ரலி) 'இவரின் கடனுக்கு நான் பொறுப்புதொழுகை நடத்துங்கள்என்று கூறியதும் நபி(ஸல்) அவர்கள் அவருக்குத் தொழுகை நடத்தினார்கள்
நபி(ஸல்) அவர்கள் கடனாளி விடயத்தில் எந்தளவு அக்கரை செலுத்தியுள்ளார்கள் என்பதற்கு மேற்குறித்த ஹதீஸ் சிறந்ததொரு சான்றாகும்
நபி(ஸல்) அவர்களே கடனை பொறுப்பேற்ற சந்தர்ப்பம்:
மக்காவில் இருந்த காலத்தில் நபி(ஸல்) அவர்கள் பிறரது கடனை அடைக்கவோ அல்லது தனது கடனை அடைக்கவோ முடியாத நிலையில்தான் இருந்துள்ளார்கள் பின்னர் அவர்களுக்கு அல்லாஹ் ஏராளமான வெற்றிகளை கொடுத்தான் பல யுத்தங்களில் அவர்கள் வெற்றி பெற்றார்கள் மதீனமா நகரின் சக்கரவர்த்தியாக அவர்கள் மாறினார்கள் அவ்வாறு மாறிய நிலையிலும் அவர்கள் தனது ஆரம்ப நிலையை ஒரு போதும் மறந்ததில்லை கடனை அடைக்க முடியாமல் அல்லல் படும் ஏழைகளுக்கு கடனை அடைக்க பெரிய உதவி செய்தார்கள் அதற்கு பின்வரும் செய்தி ஆதாரமாகும்
கடன்பட்டு இறந்தவர் நபி(ஸல்) அவர்களிடம் (ஜனாஸாத் தொழுகைக்காகக்) கொண்டு வரப்படுபவார்;அப்போது 'இவர் கடனை அடைக்க ஏதேனும்விட்டுச் சென்றிருக்கிறாரா?' என்று கேட்பார்கள். 'கடனை அடைப்பதற்குப் போதுமானதைவிட்டுச் சென்றிருக்கிறார்என்று கூறப்பட்டால் (அவருக்காகத்) தொழுகை நடத்துவார்கள். இல்லையென்றால் 'நீங்கள் உங்கள் தோழருக்காகத் தொழுகை நடத்துங்கள்!'' என்று முஸ்லிம்களிடம் கூறிவிடுவார்கள். அல்லாஹ் அவர்களுக்கு ஏராளமான வெற்றிகளைக் கொடுத்தபோது (அதன் மூலம் செல்வம் குவிந்ததால்), 'இறைநம்பிக்கையாளர்களைப் பொறுத்தவரை அவர்களின் விஷயத்தில் நானே அதிக உரிமையுடையவன்! இறைநம்பிக்கையாளர்களில் யாரேனும் கடன்பட்ட நிலையில் இறந்துவிட்டால் அதை நிறைவேற்றுவது என் பொறுப்பாகும்! யாரேனும் செல்வத்தைவிட்டுச் சென்றால் அது அவர்களின் வாரிசுகளுக்குரியதாகும்!'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் ஸலமதிப்னு அக்வஃ(ரழி) ஆதாரம் புஹாரீ இலக்கம்:2289
கடனாளிக்கு அவகாசம் வழங்கியதால் மன்னிப்பு கிடைத்தது
கடனாளி கடனை அடைக்க சிரமப்படும் போது அவனுக்கு அவகாசம் வழங்குவதென்பது எம்மை சுவர்க்கத்தில் நுழை வைப்பதற்கான ஒரு நல்ல காரியமாகும்
(முன் காலத்தில்) மக்களுக்குக் கடன் கொடுக்கக் கூடிய ஒரு வியாபாரி இருந்தார். கடனைத் திருப்பிச் செலுத்தச் சிரமப்படுபவரை அவர் கண்டால்தம் பணியாளர்களிடம் இவரின் கடனைத்தள்ளுபடி செய்யுங்கள்;அல்லாஹ் நம்முடைய தவறுகளைத் தள்ளுபடிச் செய்யக்கூடும் என்று கூறுவார். அல்லாஹ்வும் அவரின் தவறுகளைத் தள்ளுபடி செய்தான்.
அறிவிப்பவர் அபூஹுறைரா(ரழி) ஆதாரம் புஹாரீ இலக்கம்:2078
கடனை அழகிய முறையில் திருப்பி ஒப்படைப்பது
நாம் கஷ்டப்படும் போது ஒருவர் எமக்கு கடனுதவியளிக்கிறார் அவருக்கு அக்கடனை திருப்பி ஒப்படைக்கும் போது நாமாக விரும்பி அவர் அளித்த கடன் தொகையை விட சற்று அதிகமாக அவருக்கு வழங்குவது வரவேற்கத்தக்க அம்சமாகும் கடனளித்தவர் இவ்வளவு ரூபா கடனுதவி செய்துள்ளேன் கடனை அடைக்கும் போது இவ்வளவு ரூபா அதிகரித்து தர வேண்டும் என நிபந்தனையிட்டால் அது வட்டியாகும்
நபி(ஸல்) அவர்கள் ஒரு மனிதருக்குகுறிப்பிட்ட வயதுடைய ஒட்டகம் ஒன்றை (கடனாகப் பெற்றதைத் திரும்பிச் செலுத்தும் வகையில்) கொடுக்க வேண்டிய வகையில்) கொடுக்க வேண்டியிருந்தது. அதை அவர் (திரும்பிச் செலுத்தும்படி) கேட்டு வந்தார். நபி(ஸல்) அவர்கள் (தம் தோழர்களிடம்) 'அவருக்கு அதைக் கொடுத்து விடுங்கள்என்றார்கள். அந்த வயதுடைய ஒட்டகத்தைத் தேடிய போது. அதை விட அதிக வயதுடைய ஒட்டகத்தைத் தேடியபோதுஅதை விட அதிக வயதுடைய ஒட்டகத்தைத் தேடியபோதுஅதை விட அதிக வயதுடைய ஒட்டகத்தைத்தான் தோழர்கள் கண்டார்கள்அதையே கொடுத்து விடுங்கள்என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அதற்கு அம்மனிதர், 'எனக்கு நீங்கள் நிறைவாகத் தந்து விட்டீர்கள். அல்லாஹ்வும் உங்களுக்கு நிறைவாகத்தருவான் என்று கூறினார். அப்போது நபி(ஸல்) அவர்கள்'அழகிய முறையில் திரும்பிச் செலுத்துபவரே உங்களில் சிறந்தவர்என்றார்கள்
அறிவிப்பவர்அபூஹுறைரா(ரழி) ஆதாரம் புஹாரீ இலக்கம்2305.
நபியவர்களும் அழகிய முறையில் திருப்பி ஒப்படைத்தார்கள்
நபி(ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் இருக்கும்போது நான் அவர்களிடம் வந்தேன். 'இரண்டு ரக்அத் தொழுவீராக!'' என்று கூறினார்கள். எனக்கு நபி(ஸல்) தர வேண்டிய கடன் ஒன்றும் இருந்தது. அந்தக் கடனை திருப்பி தந்ததுடன் மேலதிகமாகவும் தந்தார்கள்.
அறிவிப்பவர் ஜாபிர்(ரழி) ஆதாரம் புஹாரீ இலக்கம்:443
எனவே கடன் வழங்குபவர்கள், கடன் வாங்குபவர்கள் அனைவரும் கடன் சம்பந்தமாக இஸ்லாம் கூறிய விதிகளுக்கமைய நடந்தால் எக்குழப்பமும் வராது என்பதை இங்கு கூறிக் கொள்கிறோம்
எல்லாம் வல்ல இறைவன் எம்மனைவருக்கும் நல்லருள் பாலிப்பானாக

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக