வியாழன், ஏப்ரல் 02, 2015

இன்றைய அவசியத்தேவை-மார்க்க ஒற்றுமை


அல்லாஹ் உருவாக்கிய இஸ்லாமிய மார்க்கத்தை பிளவுபடுத்த யாருக்கு அதிகாரமிருக்கிறது! அல்லாஹ் விதித்த ஒற்றுமை எனும் சட்டத்தை மீற யாருக்குக்கேனும் தனி சுநத்திரம் அளிக்கப்பட்டுள்ளதோ?
நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும அவர்களே வெற்றி பெற்றோர், இது உலகப்பொதுமறை திருக்குர்-ஆன் 3:104-ன் வசனமாகும்
இந்த வசனத்தின் முலம் அல்லாஹ் நமக்கு அறிவுறுத்துவது என்னவென்றால் ஒரு சமுதாயமாக இருந்து நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழையுங்கள் என்பதுதான். ஆனால் இன்றைக்கோ தமிழகத்தில் மட்டும் நம் சமூகத்தினர் 72 சமுதாய பிரிவினர்களாக பிரிந்து நானா? நீயா? எனறு பலப் பரிட்சையில் இறங்கிவிட்டனரே இது நியாயமா?
மார்க்கத்தில் ஒன்று சேர வாய்ப்பில்லை என்று கூக்குரலிடும் ஜமா-அத் தலைவர்கள் ஹஜ் மற்றும் உம்ராவில் மட்டும் கூட்டாக ஒன்று சேர்ந்து தாவாபு செய்யலாமா? தனியாக இவர்களுக்கென்று ஜமாஅத் தலைவர்களுக்கு என்று ஒரு ஹஜ் மற்றும் கிப்லா உள்ளதா? மார்க்கத்தை கேலிக்கூத்தாக்க முயல்கிறார்களா? இந்த ஜமாஅத் தலைவர்கள்! உண்மையை உணர்ந்து எல்லா ஆலிம்களும், சமுதாய தலைவர்களும், மக்களும் ஒற்றுமையாக ஜமாஅத் வேற்றுமைகளை மறந்து சமுதாயத்திற்காக பாடுபடவேண்டும்!
அல்லாஹ்வின் கயிற்றை அனைவரும் சேர்ந்து பிடித்துக் கொள்ளுங்கள், பிரிந்து விடாதீர்கள். இது திருக்குர் ஆன் 3:103-ன் வசனமாகும். இதன் விளக்கம் என்ன?
எல்லோரும் ஒரு அணியில் நின்று ஒரு கொள்கையை இறுக்கி பிடித்து சருகிவிடாமல் ஒற்றுமையாக இருப்பதே.
உலகப் பொதுமறை திருக்குர்ஆன் மற்றும் நபிவழி சுன்னத் ஆகிய இரண்டுதான் அல்லாஹ்வின் கயிறாகும்,
லா இலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரசூலில்லாஹி
(வணக்கத்துக்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் திருத்தூதர் ஆவார்கள)
எல்லோரும் மேற்கண்ட ஓரிரை கொள்கையை பற்றிப் பிடிக்க அல்லாஹ் நமக்கு தனது திருக்குர்ஆன் எனும் வார்த்தைகள் முலம் முஸ்லிம்களுக்கு கட்டளையிடுகிறான், ஆனால் நாம் அவ்வாறு ஒன்றுபட்டு நிற்கிறோமா? இல்லவே இல்லைஆளுக்கொரு ஜமாஅத். ஆளுக்கொரு கொள்கை. ஆளுக்கொரு தலைவன் என பிரிந்து நிற்கின்றனர் நம் முஸ்லிம் சகோதரர்கள் கீழே கொடுக்கப்பட்டது போன்று
நான் ........ ஜமாஅத்துக்காரன்,
நான் ........ ஜமாஅத்துக்காரன்.
நான் ........ ஜமாஅத்துக்காரன்,
நான் ரப்பானி,
நான் காதிரி,
நான் ஹனஃபி
நான் ஷாஃபி
நான் மாலிகி,
நான் ஹம்பலி
நான் ........ ஜமாஅத்துக்காரன்,
நான் ........ ஜமாஅத்துக்காரன்,
நான் ........ ஜமாஅத்துக்காரன்,
நான் ........ கழகக்காரன்
எவரும் அல்லாஹ்வின் புனிதமிக்க மார்க்கமான இஸ்லாத்தைச் சேர்ந்த உண்மையான முஸ்லிம் என்று சொல்வதில்லையே ஏன் இந்த அவலம்.
இந்த பிரிவினைக்கு காரணமாகியவர்களை அல்லாஹ் நாளை மறுமையில் கேள்வி கேட்பானே! அல்லாஹ்வுக்கும் மறுமையில் அவனுடைய கேள்விகளுக்கும் பயந்துக்கொள்ளுங்கள்!
அல்லாஹ் உறுவாக்கிய இஸ்லாமிய மார்க்கத்தை பிளவுபடுத்த யாருக்கு அதிகாரமிருக்கிறது! அல்லாஹ் விதித்த ஒற்றுமை எனும் சட்டத்தை மீற யாருக்குக்கேனும் தனி சுநத்திரம் அளிக்கப்பட்டுள்ளதோ?
தமிழகத்தில் முழுவதுமாக மக்களிடமிருந்து குஃப்ரு எனும் இறைநிராகரிப்பை நீங்கி விட்டதா?நாம் நமக்குள் சண்டைபோட்டுக்கொண்டு பிரிந்து நிற்க?இந்த இணைவைப்பவர்களை நேர்வழிப்படுத்து ஏகத்துவ வாதிகளே ஒன்றுபடுங்கள்!சுவனம் செல்ல முந்திக்கொள்ளுங்கள்!
நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும அவர்களே வெற்றி பெற்றோர், இது உலகப்பொதுமறை திருக்குர்-ஆன் 3:104-ன் வசனமாகும்
இந்த வசனத்தின் முலம் அல்லாஹ் நமக்கு அறிவுறுத்துவது என்னவென்றால் ஒரு சமுதாயமாக இருந்து நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழையுங்கள் என்றுதான் ஆனால் இன்றைக்கோ தமிழகத்தில் மட்டும் தவ்ஹீத்வாதிகள்72சமுதாய பிரிவினர்களாக பிரிந்து நானா? நீயா எனறு பலப் பரிட்சையில் இறங்கிவிட்டனரே இது நியாயமா?
திருக்குர் ஆன்3:105ன் வசத்தின் முலம் அல்லாஹ் நமக்கு இவ்வாறு கட்டளையிடுகிறான்,தம்மிடம் தெளிவான் சான்றுகள் வந்த பின்பு முரண்பட்டுப் பிரிந்து விட்டோரைப் போல் ஆகாதீர்கள்,அவர்களுக்கே கடும் வேதனை உண்டு
வானங்களில் உள்ளவையும் பூமியில் உள்ளவையும் அல்லாஹ்வுக்கே உரியன, அல்லாஹ்விடமே காரியங்கக் கொண்டு செல்லப்படும்- என்ற திருக்குர் ஆன் 3:109ன் வசனத்தை இவர்கள் படிக்கவில்லை போலும்,
மார்க்கத்தில் ஒன்று சேர வாய்ப்பில்லை என்று கூக்குரலிடும் ஜமா-அத் தலைவர்கள் ஹஜ் மற்றும் உம்ராவில் மட்டும் கூட்டாக ஒன்று சேர்ந்து தாவாபு செய்யலாமா? தனியாக இவர்களுக்கென்று ஜமாஅத் தலைவர்களுக்கு என்று ஒரு ஹஜ் மற்றும் கிப்லா உள்ளதா? மார்க்கத்தை கேலிக்கூத்தாக்க முயல்கிறார்களா இந்த ஜமாஅத் தலைவர்கள்!
அல்லாஹ்வின் கயிற்றைபற்றிப்பிடிப்போம்
என அருமை சகோதர, சகோதரிகளே நாம் அரபி இலக்கணம் அறியாத உம்மிகள் நமது நபியும் நம்மைப் போன்று உம்மிதான் ஆனால் அல்லாஹ் நமக்கு அறிவை கொடுத்துள்ளான். இனியும் இந்த பிறிந்து நின்று, பிறிவினைவாதிகளின் பின் நிற்காமல் உலகப் பொதுமறை திருக்குர்ஆன் மற்றும் நபிவழி சுன்னத் ஆகிய அல்லாஹ்வின் கயிற்றை பலமாக பற்றிப்பிடித்து தைரியமாக முஸ்லிம்கள் என்று சொல்வோமாக,
யார் சொன்னாலும் காது கொடுத்து கேட்போம் ஆனால் உலகப் பொதுமறை திருக்குர்ஆன் மற்றும் நபிவழி சுன்னத் ஆகிய இரண்டின் பக்கம் தான் தலை சாய்ப்போம் என்று சூளுரைத்து அல்லாஹ்வின் பக்கம் திரும்புவோமாக, மஹஷர் வெற்றிக்காக பொறுத்திருந்து, ஏகத்துவத்தை நிலைநாட்டி நம்மால் இயன்ற அளவு இஸ்லாத்தை எல்லோரிடமும் எத்தி வைத்து இல்வாழ்க்கையிலும் மறுமையிலும் பிரியாமல் மறுமை வெற்றிக்காக காத்திருப்போமாக, இன்ஷா அல்லாஹ் சுவனம் செல்வோமாக,
அல்லாஹ்வின் கயிற்றை அனைவரும் சேர்ந்து பிடித்துக் கொள்ளுங்கள், பிரிந்து விடாதீர்கள். - திருக்குர் ஆன் 3:103
ஒரு சில இஸ்லாமிய பெரும் தலைவர்களோ மார்க்கத்தை பரப்புகிறார்கள். உண்மைதான். அவர்களைப்பற்றி நான் குறைகூறவில்லை ஆனால் ஒரு தனி அமைப்பை ஒருவாக்கி ஜமாஅத் என்ற பெயரில் (இஸ்லாம் 72 பிரிவுகாளக பிரிந்து விடும் என்று எதை பற்றி நபிகள் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் பயந்தார்களோ? மேலும் இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் குர்ஆன்-சுன்னாவைப்பற்றிக்கொள்ளுங்கள் வழிதவரமாட்டீர்கள்! என்று அறிவித்தார்களே! இது இந்த ஜமாஅத் தலைவர்களின் காதுகளில் விழவில்லையா?) அதன் (ஜமாஅத்) மூலம் தங்களுக்கு பின்னால் ஒரு பெரிய கூட்டம் வரவேண்டும் என்றே எண்ணி வாழ்ந்துவருகின்றனர்! இது தவறாகும்.
எண்ணிக் கொள்ளுங்கள் பேரும், புகழும் பலனளிக்காது (இது அல்லாஹ்வுக்கே உரித்தானது!) மேலும் நாம் மரணித்தால் நாம் உருவாக்கிய கூட்டம் கப்ரு வரைதான் வரும் அதன் பிறகு நமக்கு ஏது கூட்டம்! நாமோ கப்ருகளில் அநாதைகளாக அடைபட்டுத்தான் வாழவேண்டும்!
இந்த உண்மையை உணர்ந்து எல்லா ஆலிம்களும், சமுதாய தலைவர்களும், மக்களும் ஒற்றுமையாக ஜமாஅத் வேற்றுமைகளை மறந்து சமுதாயத்திற்காக பாடுபடவேண்டும்! குர்ஆன்-சுன்னா முறைப்படி வாழவேண்டும் அப்போது தான் இஸ்லாத்தைப் பற்றியும் முஸ்லிம்கள் பற்றியும் காஃபிர்கள் மிரளுவார்கள்!
கீழே உள்ளநபிமொழியை
கவனமாக படியுங்கள்
கவனமாக படியுங்கள்
கவனமாக படியுங்கள்
மண்ணறையில் வெற்றிபெறுங்கள்!
ஒரு அன்சாரித் தோழரின் ஜனாஸாவை அடக்கம் செய்வதற்காக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களுடன் சென்றோம். கப்ரடியில் சென்ற போது உட்குழி தோண்டப்படாத நிலையில் இருந்ததால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் கப்ருக்கு அருகில் அமர்ந்து கொண்டு ஒரு குச்சியினால் பூமியை கிளறிக் கொண்டிருந்தார்கள்.
எங்களின் தலைகளின் மீது பறவைகள் அமர்ந்திருப்பது போன்று (அமைதியாக) நாங்களும் அந்தக் கப்ருக்கு அருகாமையில் அமர்ந்தோம். (திடீரென) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்தன் தலையை உயர்த்தி நீங்கள் கப்ரின் வேதனையிலிருந்து அல்லாஹ்விடத்தில் பாதுகாப்புத் தேடுங்கள் என இரண்டு அல்லது மூன்று முறை கூறி பின்வரும் வார்த்தைகளைக் கூறினார்கள்.
இறைவிசுவாசியான அடியான் ஒருவன் உலகத் தொடர்புகளைத் துண்டித்துக்கொண்டு மறுமையை எதிர்நோக்கிக் கொண்டிருக்கையில், (சக்ராத்தின் நேரத்தில்) சூரிய ஒளிக்கு ஒப்பான பிரகாசம் கொண்ட முகத்துடன் வானத்திலிருந்து வானவர்கள் சிலர் அவரிடம் வருவார்கள். இவர்கள் தங்களுடன் சுவர்க்கத்து கபன் துணிகளிலிருந்து ஒரு கபன் துணியையும், சுவர்க்கத்தின் நறுமணங் களிலிருந்து நறுமணத்தையும் வைத்துக் கொண்டு அவருடைய பார்வைக்கு எட்டும் தூரமளவு அமர்ந்திருப்பார்கள்.
அப்பொழுது உயிரைக் கைப்பற்றும் வானவர் வந்து, அவரருகில் அமர்வார். அவரை நோக்கி, நல்ல ஆத்மாவே! நீ ஏக இறைவனுடைய மன்னிப்பை நோக்கியும் அவனுடைய திருப்தியை நோக்கியும் இந்த உலகிலிருந்து வெளியேறிவிடு என்று கூறுவார். தோல் பையிலிருந்து (அதனை வளைத்தால்) நீர்வழிந்து விடுவது போன்று (அந்த ஆத்மா உடலில் இருந்து இலகுவாக) வெளியேறி விடும். அந்த உயிரை எடுத்ததும் கொஞ்ச நேரம் கூட கையில் வைத்துக் கொள்ளாமல் அந்தக் கபனில் (கொண்டு வந்த) மணத்தோடு வைத்து விடுவார்கள். உலகத்தில் இருக்கும் கஸ்தூரி வாசனையை விட மிக மணம் வீசக்கூடியதாக அது இருக்கும்.
பின்பு அந்த உயிரை அல்லாஹ்விடம் கொண்டு செல்வார்கள்)வானவர்கள் இருக்கும் கூட்டத்திற்கு அருகாமையில் அந்த உயிரை கொண்டு போகும் போதெல்லாம் இது யாருடைய நல்ல உயிர்? என அவ்வானவர்கள் கேட்பார்கள். அதற்கு உலகில் இவருக்கு சொல்லப்பட்ட நல்ல பெயரைக் கொண்டு இன்னாருடைய மகன் இன்னார் என்று சொல்லப்படும்.
இவருக்காக முதல் வானத்தை, திறக்கும்படி அவ்வானவர் வேண்டுவார், அவருக்காக முதல் வானம் திறக்கப்படும். ஒவ்வொருவானத்திலும் உள்ள மலக்குகள் அடுத்த வானம் வரை (அந்த உயிரை) பின் தொடருவார்கள். இப்படி ஏழு வானம் வரை அதனை எடுத்துச் செல்வர்.
அப்போது ஏக இறைவன், ஆத்மாவைச் சுமந்து சென்ற வானவர்களை நோக்கி, என் அடியானுடைய செயல்களை ''இல்லிய்யீனிலே' (நல்லடியார்களுடைய செயல்களின் பதிவேடுகள்இருக்குமிடத்திலே) பதிந்து விட்டு (விசாரணைக்காக) பூமியிலுள்ள அவருடைய உடலில் (கப்ரில்) அவருடைய ஆத்மாவைச் சேர்த்து விடுங்கள் என்று கூறுவான். (அவரின் உயிரை அவரின் உடலில் மீட்டப்படும்)
அவரிடத்தில் இரு மலக்குகள் வந்து அவரை அமரவைத்து,
உன்னுடைய இறைவன் யார்? எனக் கேட்பார்கள்.
என் இறைவன் அல்லாஹ் என்று கூறுவார்.
உன்னுடைய மார்க்கம் எது? எனக் கேட்பார்கள்,
எனது மார்க்கம் இஸ்லாம் எனக் கூறுவார்.
உமக்கு அனுப்பப்பட்ட தூதர் யார்? எனக் கேட்பார்கள்.
அல்லாஹ்வின் தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் எனக் கூறுவார்.
அது உமக்கு எப்படித் தெரியும்? என அவ்விருவரும் கேட்பார்கள்.
நான் குர்ஆனை ஓதினேன். (அதன் மூலம்) அவர்களை ஈமான் கொண்டு உண்மைப்படுத்தினேன் எனக் கூறுவார்.
அப்போது வானத்திலிருந்து ஓர் அழைப்பாளன்(அல்லாஹ்)அழைத்து என் அடியான் உண்மை சொல்லிவிட்டான் என்று சொல்லப்படும்.ஆகவே அவருக்கு சுவர்க்கத்திலிருந்து ஒரு விரிப்பை விரித்து விடுங்கள்.இன்னும் சுவர்க்கத்திலிருந்து ஒரு வாசலையும் திறந்து விடுங்கள் என்று சொல்லப்படும்.அதன் வழியாக அவருக்கு நல்ல வாசனைகளும்,நறுமணமும் வந்து கொண்டிருக்கும்.அவருடைய கண் எட்டிய தூரத்திற்கு அவருடைய கப்ரு விசாலமாக்கப்படும்.இன்னும் அவரிடத்திலே நறுமணம் வீசக்கூடிய,நல்ல ஆடை
அணிந்த, அழகிய தோற்றமுள்ள ஒருவர் வந்து, இதுவே (உலகில்) உமக்கு வாக்களிக்கப்பட்ட நாளாகும். உமக்கு சந்தோஷம் தரக்கூடிய ஒன்றைக் கொண்டு நற்செய்தி கூறுகின்றேன் என்பார். (அதற்கு கப்ரில் அடக்கம்செய்யப் பட்டவர்) நற்செய்தி கூறுபவரைப் போன்றே உன் தோற்றம் இருக்கின்றதே,
நீர் யார்? எனக் கேட்பார்.
நான்தான் உன் நல் அமல் என அம்மனிதர் கூறுவார்.
அப்போது அவர், இறைவா! என் குடும்பத்தவரிடத்திலும், என் பொருளிடத்திலும் நான் செல்வதற்காக, கியாமத்து நாளை (வெகு சீக்கிரம்) கொண்டு வருவாயாக! இறைவா! கியாமத்து நாளை (வெகு சீக்கிரம்) கொண்டு வருவாயாக எனக் கூறுவார்.
நிராகரிப்பவன் மரண வேளையை நெருங்கி விட்டால்...
நிராகரிப்பவன் மரண வேளையை நெருங்கி விட்டால், கறுத்த (விகாரமான) முகத்துடன் சில வானவர்கள் வந்து அவனுடைய கண்பார்வை எட்டும் தூரத்தில் அமர்ந்து விடுவார்கள். அவர்களிடத்தில் ஒரு கம்பளித் துணி இருக்கும். அப்பொழுது உயிரைக் கைப்பற்றக்கூடிய மலக்கு வந்து அவனருகில் அமர்வர்.
அவர் அவனை நோக்கி, கெட்ட ஆத்மாவே! அல்லாஹ் அளிக்கவிருக்கும் இழிவை நோக்கியும் அவனுடைய கோபத்தை நோக்கியும் நீ வெளியேறி வா! என்று கூறுவார். அப்பொழுதுஅவ்வுயிர் ஒளிந்து கொள்வதற்காக உடல் முழுவதும் ஓட ஆரம்பித்து விடும்.
நனைத்த கம்பளி துணியிலிருந்து முள்ளுக் கம்பியை பிடுங்கி எடுப்பது போன்று உயிரைக் கைப்பற்றக்கூடிய வானவர் அவனுடைய உடலிலிருந்து (பலவந்தமாக) உயிரைப் பிடுங்கி எடுப்பார். (இவ்வாறு பலவந்தமாக அடித்துப் பிடுங்கிஎடுத்த உயிரை) கொஞ்ச நேரங்கூட தன் கையில் வைத்துக் கொள்ளாமல் அந்தக் கம்பளித் துணியில் வைத்துவிடுவார்.
இவ்வுலகில் வீசும் துர்நாற்றத்தை விட அதிகமான துர்நாற்றம் அதிலிருந்து வீசும். பின்பு அந்த உயிரை எடுத்துக் கொண்டு முதல் வானத்துக்குக் கொண்டு செல்வார் அந்த வானவர். வானவர்கள்இருக்கும் கூட்டத்திற்கு அருகாமையில் அந்த உயிரை கொண்டு போகும் போதெல்லாம் இது எவனுடைய கெட்ட உயிர்? என அவ்வானவர்கள் கேட்பார்கள்.
அதற்கு உலகில் இவனுக்குச் சொல்லப்பட்ட கெட்ட பெயரைக் கொண்டு இன்னாருடைய மகன் இன்னார் என்று சொல்லப்படும். இவனுக்காக முதல் வானத்தை திறக்கும்படி அவ்வானவர் வேண்டுவார், ஆனால் வானம் அவனுக்காக திறக்கப்படமாட்டாது என்று கூறிவிட்டு பின்வரும்ஆயத்தை நபி (ஸல்) அவர்கள் ஓதிக்காட்டினார்கள்.
إِنَّ الَّذِينَ كَذَّبُوا بِآيَاتِنَا وَاسْتَكْبَرُوا عَنْهَا لَا
تُفَتَّحُ لَهُمْ أَبْوَابُ السَّمَاءِ وَلَا يَدْخُلُونَ الْجَنَّةَ
حَتَّى يَلِجَ الْجَمَلُ فِي سَمِّ الْخِيَاطِ وَكَذَلِكَ نَجْزِي
الْمُجْرِمِينَ
நிச்சயமாக நம்முடைய வசனங்களைப் பொய்ப்பித்து, அவற்றை (ஏற்பதை) விட்டும் பெருமையும் கொண்டார்களே அத்தகையோர் - அவர்களுக்கு (அல்லாஹ்வின் அருளுக்குரிய) வானத்தின் (அருள்) வாயில்கள் திறக்கப்படமாட்டாது, மேலும் ஊசியின் துவாரத்தில் ஒட்டகம் நுழையும் வரையில் அவர்கள் சுவனத்தில்நுழையமாட்டார்கள், மேலும் குற்றவாளிகளுக்கு இவ்வாறே நாம் கூலி கொடுப்போம். (அல்குர்ஆன் 7:40)
ஏக இறைவன், உயிரைச் சுமந்து வந்த வானவரைப் பார்த்து, அவனுடைய செயல்களை பூமியின் அடிப்பாகத்திலுள்ள ''ஸிஜ்ஜீன்'' (ஸிஜ்ஜீன் என்றால் தீயவர்களின் செயல்கள் பதிவு செய்யப்படும் இடமாகும்) என்ற இடத்தில் பதியுமாறுஉத்தர விடுவான். பின்னர், அந்த உயிர் (முதலாம் வானத்திலிருந்து ஸிஜ்ஜீன் (என்ற இடத்துக்கு) எறியப்படும். பிறகு பின்வரும் ஆயத்தை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் ஓதிக்காட்டினார்கள்.
حُنَفَاءَ لِلَّهِ غَيْرَ مُشْرِكِينَ بِهِ وَمَنْ يُشْرِكْ بِاللَّهِ
فَكَأَنَّمَا خَرَّ مِنْ السَّمَاءِ فَتَخْطَفُهُ الطَّيْرُ أَوْ تَهْوِي
بِهِ الرِّيحُ فِي مَكَانٍ سَحِيقٍ
இன்னும், எவன் அல்லாஹ்வுக்கு இணைவைக்கின்றானோ அப்பொழுது அவன், வானத்திலிருந்து (முகங்குப்புற) விழுந்து பறவைகள் அவனை இராய்ஞ்சிக் கொண்டு சென்றதைப் போன்றோ அல்லது (பெருங்) காற்று அவனை வெகு தூரத்தில்உள்ள இடத்திற்கு அடித்துக் கொண்டு சென்றதைப் போன்றோ இருக்கின்றான். (அல்குர்ஆன் 22:31)
இவ்வாறு ஸிஜ்ஜீனில் அவனுடைய செயல்கள் பதியப்பட்டு, பின்னர் அவனது உயிர் அவனுடைய உடலில் ஊதப்படும். அவனிடத்தில் இரு மலக்குகள் வந்து அவனை அமரவைத்து உன்னுடைய இறைவன் யார்? எனக் கேட்பார்கள். ''கை சேதமே, கை சேதமே எனக்குத் தெரியாது'' என்பான். உன்னுடைய மார்க்கம் எது? எனக் கேட்பார்கள், ''கை சேதமே, கை சேதமே எனக்குத் தெரியாது'' என்பான். உமக்கு அனுப்பப்பட்ட தூதர் யார்? எனக் கேட்பார். ''கை சேதமே, கை சேதமே எனக்குத் தெரியாது'' என்பான்.
அப்போது வானத்திலிருந்து ஓர் அழைப்பாளன் (அல்லாஹ்) அழைத்து அவன்பொய் சொல்லிவிட்டான் என்று சொல்லப்படும். ஆகவே அவனுக்கு நரகத்திலிருந்து ஒரு விரிப்பை விரித்து விடுங்கள். இன்னும் நரகத்திலிருந்து ஒரு வாசலையும் திறந்து விடுங்கள் என்று சொல்லப்படும்.
அதன் வழியாக அவனுக்கு அதன் சூடும்விஷக்காற்றும் வந்து கொண்டிருக்கும். அவனுடைய விலா எலும்புகள் ஒன்றோடு ஒன்று சேரும் அளவு கப்ரு அவனை நெருக்கும். இன்னும் அவனிடத்திலே கோர முகமுடைய, மோசமான ஆடை அணிந்த, துர்நாற்றமுள்ள ஒருவர் வந்து, இதுவே (உலகில்) உமக்கு வாக்களிக்கப்பட்ட நாளாகும்.
உமக்கு கவலை தரக்கூடிய ஒன்றைக் கொண்டு கெட்ட செய்தி கூறுகின்றேன் என்பார். (அதற்கு கப்ரில் அடக்கம் செய்யப்பட்டவர்) கெட்ட செய்தி கூறுபவரைப் போன்றே உன் தோற்றம் இருக்கின்றதே, நீ யார்? எனக் கேட்பார். நான்தான் உன்னுடைய கெட்ட செயல்கள் என அம்மனிதர் கூறுவார். அப்போது அவன், றைவா! மறுமை நாளை கொண்டு வந்துவிடாதே என்று கூறுவான். (நூற்கள்: அஹ்மத், அபூதாவூத்)
கப்ரின் விசாரணைக்கு பயந்துக்கொள்ளுங்கள்! உங்கள் மார்க்கம் எது என்பதில் உறுதியாக நில்லுங்கள்! ஆளாளுக்கு ஏதேனும் காரணம் காட்டி அல்லாஹ் உருவாக்கிய இஸ்லாம் எனும் சுவனப்பாதையை பிளவுபடுத்தி கூறு போடாதீர்கள்!
மரணித்துவிட்டால் உங்கள் ஜமாஅத் அல்லது ஜமாஅத் தலைவர் உங்களுக்கு பரிந்துரைக்க வருவாரா? கைசேதப்பட்டு நிற்காமல் இன்றே முடிவு செய்யுங்கள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிய ஒற்றுமை முக்கியமா? உங்கள் ஜமாஅத் தலைவர்கள் கூறும் வேற்றுமை முக்கியமா?
அவ்லியாக்களை தலைவர்களாக பின்பற்றி சென்றுக்கொண்டிருக்கிறது ஒரு கூட்டம்!
ஜமாஅத் தலைவர்களை பின்பற்றி சென்றுக்கொண்டிருக்கிறது ஒரு கூட்டம்!
குர்ஆன் மற்றும் ஹதீஸ்களை பின்பற்றி சென்றுக் கொண்டிருக்கிறது ஒரு கூட்டம்! உங்களுக்கு குர்ஆன், ஹதீஸ் வந்த பின்னரும் பிரிந்து கிடக்கலாமா?
அல்லாஹ் கண்காணிக்கிறான் என்பது இந்த பிரிவினை வாதிகளுக்கு தெரியவில்லையா?
மிகத் தொலைவில் இருக்கும் உங்கள் நண்பரை அழைப்பதற்கு செல்ஃபோன்-ஐ பயன்படுத்துவீர்கள் அதற்கு கூட ஒருநிமிட நேரம் பிடிக்கும் ஆனால் உங்கள் இறைவன் அல்லாஹ் உங்கள் பிடரி நரம்பிற்கு மிக சமீபமாக இருக்கிறான் ஒருசெகண்டு கூட ஆகாது அவனை அழைத்து பிரார்த்திக்க ஆனால் நாம் இன்று அவனைஅழைத்து உள்ளத்தால் பிரார்த்திக்கிறோமா!
ஒரு வினாடி சிந்திங்கள்! நாம் ஏகத்துவத்தில் வந்துவிட்டோம் சுவனப்பாதையை அடையும் வழிகளில் களமிறங்கிவிட்டோம் ஆனால் ஷைத்தான் இங்கு ஜமாஆத் என்ற ஒரு மாயையை ஏற்படுத்தி நம்மை சுவனப்பாதைகளிலிருந்து விலக்கி மண்ணரைகளின்விசாரணைகளுக்கு பதில் சொல்லவிடாமல் தடுக்கப்பார்க்கிறான்! சகோதரர்களே மரணத்தை நாம் எல்லோரும் அடைவது நிச்சயம்! ஒன்றுபடுவோம் முஸ்லிம் என்று சொல்வோம், அனைத்து தரப்பு மக்களிடமும் தூய இஸ்லாத்தை பரப்பி தாஃவா புனிதமான எத்திவைக்கும் பணியை நிறைவேற்றுவோம்!
ஆயுதத்தால் பலனில்லை! ஒற்றுமையால்தான் பலனுண்டு!
மேற்கண்ட விளக்கம் எனது சொந்தக் கருத்துத்தான் இதில் தவறு கண்டால் எனக்கு தெரியப்படுத்தவும் நான் மனதார ஏற்றுக்கொள்கிறேன் ஏனெனில் ஒருமுறை நபிகளார்ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் தேன் அருந்தமாட்டேன் என்று தன்னிச்சையாக முடிவெடுத்து அதனை அல்லாஹ் கண்டித்தவுடன் தனது தவற்றை உணர்ந்து தவறுகளை திருத்திக் கொண்டார்கள் இநத் மனோ பக்குவத்தை எனக்கும் உங்களுக்கும் ஏக இறைவன் வழங்கி அருள்புரிவானாக.
(கொண்ட கொள்கைதான் பெரியது என நம்பி வாழும் நம் ஆலிம் பெருமக்களுக்கும் சேர்த்து துவா செய்து கொள்வோமாக! அல்லாஹ் நம் பிரிந்து நிற்கும் சமதாயத்திற்கு ஒற்றுமையை அருளி நம்மை தனது அர்ஷின் நிழலில் நிற்கச்செய்து கேள்விக்கணக்கின்றி சுவனத்தில் புகுத்துவானாக! ஆமீன்!)
நாம் முஸ்லிம்கள்! நாம் அமைதியாக இஸ்லாத்தை கடைபிடித்து எவருக்கும் எந்த மனிதனுக்கும், இந்து, முஸ்லிம். கிருத்தவ ஏன் எந்த இன, மத, மொழி பேசக்கூடியவர்களுக்கும் தீங்கிழைக்காமால் வாழுவோம் என்று சபதமேற்று சுவனப்பதையை வளமாக்கிக்கொள்வோமாக!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக