திங்கள், ஜூன் 01, 2015

திருநங்கைகளை பற்றி இஸ்லாமும், சவுதியின் நிலையும்!

தகவல் உதவி; சவுதி கெஜட்
அரப் நியூஸ். பிபிசி

தன் மகன் பிறவிக் குறைபாட்டுடன் பிறந்து விட்டானே என்று வருந்தி …. அவனுக்குரிய சிகிச்சை செய்து குணப்படுத்தாமல் அவனுக்கு ஒரு ஆண் மகனை பெற்ற தாயே தேர்ந்தெடுக்கும் கொடுமையை என்னவென்பது?. அதிலும் கூட இந்த அம்மா சாதியை விடாமல் ‘அய்யர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும்’ என்று அறிவிக்கிறது. இதிலுமா அந்த பாழாய்ப் போன சாதியை பிடித்து தொங்க வேண்டும். நமது தமிழகத்தில் கூத்தாண்டவர் கோவில் என்று கூறி உலகத்திலிருந்து அனைத்து அரவாணிகளையும் விழுப்புரத்துக்கு அழைத்து வந்து கலாசார சீர்கேட்டையும் ஊக்குவிக்கின்றனர்.

இதற்கு மேலும் இது பற்றி எழுதினால் என் மதத்தில் மூக்கை நுழைக்காதே என்று சென்னி மலையும் ராம் நிவாஸூம் சண்டைக்கு வருவார்கள். எனவே இதுபற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது என்று இனி பார்போம்.
———————————————–

“மனிதர்களே! உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்த உங்கள் இறைவனை அஞ்சுங்கள்! அவரிலிருந்து அவரது துணையைப் படைத்தான். அவ்விருவரிலிருந்து ஏராளமான ஆண்களையும் பெண்களையும் பல்கிப் பெருகச் செய்தான் எவனை முன்னிறுத்தி ஒருவரிடம் மற்றவர்கள் கோரிக்கை வைப்பீர்களோ அந்த அல்லாஹ்வை அஞ்சுங்கள்! உறவினர்கள் விஷயத்திலும் (அஞ்சுங்கள்!) அல்லாஹ் உங்களைக் கண்காணிப்பவனாக இருக்கிறான்” (குர்ஆன் – 4:1)

இதிலிருந்து ஆண் பெண் என்ற இரண்டு பாலினம் தான் இறைவன் படைப்பில் உள்ளது. மூன்றாம் பாலினம் அதாவது ‘அரவாணிகள்’ என்ற படைப்பே கிடையாது என்று விளங்குகிறோம். நெருங்கிய உறவினர்களிடையே திருமணம் அதிகம் நடைபெறும் போது இது போன்ற குரோமசோம்களின் குறைபாடுடைய குழந்தைகள் பிறக்கின்றன. நெருங்கிய உறவினர்களை திருமணம் செய்து கொள்ளாதீர்கள் என்று குர்ஆனும் தடை செய்கிறது. சிறு வயதிலேயே இதனை கண்காணித்து அவர்களை மருத்துவ மனைகளில் சேர்ப்பித்து விட வேண்டும். வயது முதிர்ச்சி அடைந்து விட்டால் பிறகு குணப்படுத்துதல் சிரமமாகி விடும்.

நபி(ஸல்) அவர்கள் பெண்களைப் போன்று ஒப்பனை செய்துகொள்ளும் ஆண்களையும் ஆண்களைப் போன்று ஒப்பனை செய்து கொள்ளும் பெண்களையும் சபித்தார்கள். மேலும், அவர்க(அரவாணிகளை)ளை உங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றுங்கள் என்றும் சொன்னார்கள். அவ்வாறே நபியவர்கள் ‘இன்னாரை’ வெறியேற்றினார்கள்; உமர்(ரலி) அவர்களும் ‘இன்னாரை’ வெளியேற்றினார்கள். (புஹாரி – 6834)

இதிலிருந்து நமக்கு தெரிய வருவது பெண்களை போல் நளினமாக நடந்து குழைந்து பேசினாலும் அவர்கள் ஆண்களே என்று விளங்குகிறோம். சிறு வயதில் பெண் குழந்தைகளுக்கு ஆண் உடைகளையும் ஆண் குழந்தைகளுக்கு பெண் உடைகளையும் அடிக்கடி போட்டு மனதளவில் பாலின மாற்றம் நடக்க பெற்றோரே காரணமாகி விடுகிறோம். ஆண்களை ஆண்களாகவும் பெண்களை பெண்களாகவும் வளர்த்தால் குறைபாடுடைய பிள்ளைகளை ஓரளவு சரி செய்து விடலாம்.

மனித உடம்பில் உள்ள ஒவ்வொரு கோடானகோடி செல்லிலும் 46 குரோமோசோம்கள் உள்ளன. இந்த 46 குரோமோசோம்களும் இரண்டிரண்டாக மொத்தம் 23 ஜோடிகளாக காணப்படும். இவற்றில் 22 ஜோடிகள், பால் சம்பந்தப்பாடாத உடலின் மற்ற அனைத்துப் பண்புகளையும் செயற்பாடுகளையும் கட்டுப்படுத்துபவை. கடைசி 23-வது ஜோடி குரோமோசோம்கள் மட்டும் பாலினம் (Sex) சம்பந்தப்பட்டவை. இதில் ஏற்படும் குளறுபடிகளே ஒருவனின் செயல்களில் சிற்சில மாற்றங்களை ஏற்படுத்துகிறது. இவர்கள் ‘பெண்பண்புகள் அதிகம் கொண்ட பெண்கள்’ (47XXX), அல்லது ‘ஆண்பண்புகள் அதிகம் கொண்ட ஆண்கள்’ (47XYY) அல்லது ‘பெண்பண்புகள் கொண்ட ஆண்கள்’ (47XXY) என வித்தியாசமானவர்களாக இருப்பர்.

சவுதி அரேபியாவில் இது போன்று பாலின மாறுபாட்டுடையவர்களை கண்டு பிடித்து அரசு செலவில் அவர்களை சரி செய்கின்றனர். மன்னர் அப்துல் அஜீஸ் மருத்துவ பல்கலைக்கழக மருத்துவர் யாஸிர் ஜமால் கூறுகிறார் ‘நெருங்கிய உறவினர்களிடையே திருமண பந்தம் அமைத்துக் கொள்பவர்களின் குடும்பத்தில் இது போன்ற குரோமசோம் குறைபாடுடைய குழந்தைகள் பிறக்கின்றன. சிறு வயதிலேயே அவர்களின் நடத்தையில் மாற்றங்கள் இருந்தால் உடன் எங்களிடம் கொண்டு வந்து விடுங்கள். கவுன்சிலிங் மூலமாக பலரை சரிபடுத்தி விடுகின்றோம். ஹார்மோன்கள் செலுத்தியும் சிலரை குணப்படுத்தியுள்ளோம். ஆண்களை பெண்களாகவோ பெண்களை ஆண்களாக மாற்றுவதையோ நாங்கள் செய்வதில்லை. அதனை இஸ்லாமும் அனுமதிப்பதில்லை. சவுதி அரசாங்கமும் அனுமதிப்பதில்லை. இது வரை எங்கள் மருத்துவ குழு 200 க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகள் செய்து குறைபாடுடையவர்களை முழு ஆண்களாகவும், முழு பெண்களாகவும் மாற்றி அமைத்துள்ளோம்’ என்கிறார். கடந்த 25 ஆண்டுகளில் 300க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளதாக சவுதி கெஜட் தெரிவிக்கிறது. தனியாருக்கு இதற்கான செலவு 10000 ரியாலில் இருந்து 50000 ஆயிரம் ரியால் வரை ஆகும. வசதியுள்ள பெற்றோர் குழந்தைகளை ஜெத்தா அழைத்து சென்று அவர்களை முழு ஆண்களாகவ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக