திங்கள், ஜனவரி 18, 2016


இன்றைய பெண்கள் நிலையும் பெற்றோரின் அறியாமையும் !!!

ஒரு குழந்தையின் வளர்ப்பு அதன் பெற்றோரின் கைகளிலேயே இருக்கின்றது. அந்தப் பெற்றோரே குறையுடன் வளர்த்தால் பின்னர் குழந்தையின் நிலைய இவ்வாறுதான் இருக்கும்.

ஆண்களும் பெண்களும் சரியான ஈமானுடனும் நல்ல வழிகாட்டல்களுடனும் வளர வேண்டியவர்கள். இது பெற்றோர்களாகிய உங்கள் கடமையாகும். இன்று பெண்கள் தன photoகளை Facebook இல் share பண்ணுவது சர்வ சாதரணமாகிவிட்டது. அதிலும் முஸ்லிம் பெண்கள் எந்தவொரு அச்சமும் அறிவும் இன்றி இருப்பதுதான் கவலைக்குரிய விடயம். இதற்குக் காரணம் மார்க்க விடயத்தில் போதிய அவதானம் இன்மையாகும்.

அந்நிய ஆடவர்களின் கண்களுக்கு விருந்தாக அமையும் எங்கள் முஸ்லிம் பெண்கள் தன கணவனின் கண்களுக்கு மருந்தாக கசக்கப் போகிறார்கள். கணவனுக்கு மட்டுமே காட்ட வேண்டிய தன அழகை காண்பவர்கலுக்கெல்லாம் காட்டிக்கொண்டிருப்பது கசப்பான உண்மையாகும். காலங்கள் எதை மறந்தாலும் கருகிப்போன இதயம் என்றும் கறை படிந்தே இருக்கும்.

இது ஒரு தந்தைக்கும், ஒரு அண்ணனுக்கும் ஒரு தம்பிக்கும் மற்றும் ஒரு கணவனுக்கும் ஆன அறிவித்தல்! உங்கள் மகளோ, அக்காவோ, தங்கையோ அல்லது மனைவியோ உங்களால் நரகம் போவதை நீங்க விரும்புகிறீர்களா? உங்கள் வீட்டு பெண்களை நீங்களே அறிவுரை கூறி அறியாமையில் இருந்து அகழ்ந்தெடுங்கள் .
நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் அடிமை என்பதை அரை நொடியேனும் மறந்து விட வேண்டாம்! அவன் எல்லாவற்றையும் விட மகா வல்லவன்! அல்லாஹ்வின் அருளை நாடி அவனியில் வாழ்ந்திடுங்கள். இந்த அநாகரிகமான அடையாளங்கள் எங்கள் அறியாமையின் அத்திவாரமாகிவிடாமல் அல்லாஹ்வின் அருளை எப்பொழுதும் வேண்டி நிற்போம். அல்லாஹ் எண்கள் அனைவரையும் பாதுகாப்பானாக! ஆமீன் .....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக