இடுகைகள்

ஏப்ரல், 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சுவனம் செல்லும் பாதைகளில் சில...

நபிமொழிகளில் கூறப்பட்டுள்ள சொர்க்கம் செல்லும் பாதைகளில் சில...   1. ஏகத்துவமும் தூதுத்துவமும்   அல்லாஹ்வை தன் இரட்சகனாகவும் , இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாகவும் , முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை இறைத்தூதராகவும் யார் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கின்றாரோ அவருக்கு சொர்க்கம் கிடைப்பது உறுதியாகிவிட்டது. ( நபிமொழி , அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ ரளியல்லாஹு அன்ஹு , நூல்: முஸ்லிம்)   2. அல்குர்ஆன்    அல்குர்ஆனில் தேர்ச்சி பெற்றவர் தூய்மையான கண்ணியமிக்க மலக்குகளுடன் இருப்பார். '' அல்குர்ஆனைத் திக்கித்திக்கி கஷ்டப்பட்டு ஓதுபவருக்கு இரண்டு -மடங்கு- கூலியுண்டு. '' ( நபிமொழி , அறிவிப்பவர்: ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா , நூல்: முஸ்லிம்) '' கடமையான ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னரும் யார் ஆயத்துல் குர்ஸிய்யை ஓதுகின்றாரோ அவர் சொர்க்கம் செல்வதற்கு அவரின் மரணம்தான் தடையாக உள்ளது. '' ( நபிமொழி , அறிவிப்பவர்: அபூ உமாமா ரளியல்லாஹு அன்ஹு , நூல்: நஸயீ) '' அல்குர்ஆனில் 30 வசனங்களைக் கொண்ட ஒரு அத்தியாயம் உள்ளது. அதை ஓதிய மனிதனின் பாவங்கள் மன்னிக்க