இடுகைகள்

ஏப்ரல், 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஓடிப் போன கணவன் - காத்திருக்கும் மனைவி!

ஒரே கேள்வி!  இரு பதில்கள்!! [ .... கணவன் என்னவானான் என்று தெரியாத நிலையிலிருக்கும் பெண் .... ஆட்டுக்குட்டிக்கு ஒப்பாகவே தெரிகிறாள். அவள் விஷயத்தில் அவளின் பொறுப்புதாரிகள் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும் இல்லையெனில் சமூகத்தில் கலந்து வாழும் மனித ஓநாய்கள் அவளது இளமையை - தனிமையை கவனித்து அவளை பாழ்படுத்த எண்ணலாம். தன் கணவன் உயிரோடு இருக்கிறான். இந்த இடத்தில் இருக்கிறான் என்று தெரியவரும் போது அந்த நம்பிக்கையே ஒரு பெண்ணை எவ்வளவு காலத்துக்கு வேண்டுமானாலும் காத்திருக்க வைத்து விடும். சமூக போராட்டங்ளுக்கு மத்தியில் அவள் தன்னை காத்துக் கொள்ள தயாராகி விடுவாள். கணவனைப் பற்றிய நம்பிக்கையே அற்றுப் போன நிலையில் ஒரு பெண் எதை முன்னிருத்தி தன்னை சமாதானப்படுத்திக் கொள்ள முடியும் என்பதை பொறுப்புதாரிகள் சிந்தித்தால் "கிடைத்த பொருள் ஓராண்டுவரை அடைக்கலமாக இருக்கட்டும்" (சில அறிவிப்புகளில் இரண்டு ஆண்டுகள், மூன்று ஆண்டுகள் என்றும் வந்துள்ளது) என்று இந்த ஹதீஸில் வழிகாட்டியுள்ளப்படி அதிகப்பட்சமாக மூன்றாண்டுகள் கணவனைத் தேடும் முயற்சியில் தீவிர கவனம் செலுத்தலாம். தகவல் புரட்சி விண்ணை

யாஜூஜ் மஃஜூஜ்&தஜ்ஜால்

யஃஜூஜ், மஃஜூஜ், தஜ்ஜால்?   மனித சமுதாயம் படிப்பனை பெறுவதற்காக ஏராளமான வரலாறு சம்பவங்களை அல்குர்ஆனில் அல்லாஹ் எடுத்துக் காட்டுகிறான். கடந்த காலச் சம்பவங்களையும், இனி வரப்போகும் காலங்களில் நடபெற வேண்டிய செய்திகளையும் முன்னறிவிப்பாக சொல்கிறான்.     அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரும் சொல்லிய செய்திகள் அனைத்தும் சத்தியமானவை. கதையோ கற்பனையோ அல்ல. சில செய்திகள் நம் சிற்றறிவிற்கு புலப்படாமல் போனாலும், படைத்த ரப்பிடமிருந்து வந்த உண்மை என்று விசுவாசிகள் அனைவரும் விசுவாசம் கொள்கிறோம். இது போன்ற சில சம்பவங்களை நம் அறிவிற்கு விளங்குமளவு அறிவியல் ஆதாரங்களோடு அவ்வப்போது வெளிப்படுத்தவும் செய்கிறான்.     ஒரு வரலாற்று சம்பவத்தை அல்குர்ஆனில் பார்ப்போம். அல்லாஹ்வின் நல்லடியார் துல்கர்னைன் பயணம் செய்கிறார். முதலில் சூரியன் மறையும் மேற்கு திசைக்கும் பின்பு சூரியன் உதயமாகும் கிழக்கு திசை பக்கம் செல்கிறார்.     (அவர்) ஒரு வழியைப் பின் பற்றினார். சூாியன் மறையும் (மேற்குத்) திசைவரை அவர் சென்றடைந்தபோது, அது ஒரு சேறு கலந்த நீாில் (மூழ்குவதுபோல்) மறையக் கண்டார்; இன்னும் அவர் அவ்விடத்தில் ஒரு ச

தஜ்ஜால்

நவாஸ் இப்னு ஸம்ஆன் رَضِيَ اللَّهُ عَنْهُ அறிவிக்கின்றார்கள்: ''ஒரு நாள் காலை தஜ்ஜால் பற்றி நபி صلى الله عليه وسلمஅவர்கள் கூறினார்கள். பேரீத்தம் மரத்தின் கீற்றில் அவன் ஒளிந்து இருக்கலாம் என நாங்கள் எண்ணும் அளவுக்கு அவனைப்பற்றி நபி صلى الله عليه وسلم அவர்கள் தெளிவாகக் கூறினார்கள்.  அவர்களிடம் நாங்கள் மாலை நேரத்தில் சென்ற போது, எங்களைப்பற்றி அவர்கள் புரிந்து கொண்டு, ''உங்கள் விஷயம் என்ன?'' என்று கேட்டார்கள் ''இறைத்தூதர் அவர்களே! காலையில் தஜ்ஜாலைப் பற்றி நீங்கள் கூறினீர்கள். அவன் பேரீத்தம் மரக் கீற்றில் மறைந்து இருப்பானோ என அவனை நாங்கள் எண்ணும் அளவுக்கு நீங்கள் தெளிவாகக் கூறினீர்கள்'' என்று கூறினோம். அப்போது நபி صلى الله عليه وسلم அவர்கள், ''தஜ்ஜாலை விட மற்ற விஷயங்களே, உங்களிடம் என்னை மிகவும் பயப்படச் செய்கிறது. உங்களிடையே நான் இருக்கும் போது, அவன் வெளியேறினாhல் நான் உங்களுக்காக அவனிடம் போரிடுவேன். உங்களிடையே நான் இல்லாத போது அவன் வந்தால் ஒவ்வொருவரும் அவனுக்கு எதிரியே. அல்லாஹ் அனைத்து முஸ்லிம்களுக்கும் எனக்குப் பின் பாதுகாப்பாளனாக உ