இடுகைகள்

ஆகஸ்ட், 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இஸ்லாம் கூறும் ஆடை ஒழுங்கு

ஆடையில்லா மனிதனை அரை மனிதன் என்பார்கள் . ஆடையைக்கொண்டே மனிதன் மதிக்கப்படுகிறான் . அதனால் மனிதனுக்கு ஆடை ஒழுங்கு அவசியம் . அதை இஸ்லாம் அற்புதமாகக் கூறுகிறது . அதைப் பேணுவது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் அவசியமாகும் . ஆடை , மனிதனின் அந்தரங்க பகுதிகளை மறைக்கக்கூடியதாகவும் , எளிமையானதாகவும் , மார்க்கம் அனுமதித்த துணிவகையிலிருந்தும் , மார்க்கம் அனுமதித்த அளவிலும் , ஆண்கள் , பெண்களை வேறுபடுத்திக் காட்டும் வகையிலும் , இறையச்சத்தை தரும் அமைப்பிலும் அமைதல் வேண்டும் .       ஆனால் நாகரீகம் என்ற அமைப்பில் தற்காலத்தில் உடுத்தப்படுகின்ற ஆடை வகைகளில் பெரும்பாலும் உடலின் அந்தரங்க பகுதிகளை மறைப்பதில்லை . ஆண்கள் அணியக்கூடிய ஆடைகளில் நாகரீகம் என்ற பெயரில் பல இடங்களில் கிழிசல்கள் இருப்பதாலும் , ஆடையை கீழிறக்கி உடுத்துவதாலும் , பெண்களால் அணியப்படுகின்ற சல்வார் கமீஸ் , மிடி , சேலை போன்ற ஆடைகள் மிகவும் இளகலாக அமைந்திருப்பதாலும் , இறக்கம் குறைந்த ஆடைகளை பெண்கள் அணிந்து வருவதாலும் அவர்களின் மறைக்கப்பட வேண்டிய பகுதிகள் அனைத்தும் வெளிப்