திங்கள், டிசம்பர் 07, 2020

குர்ஆனைத் தொடலாம், படிக்கலாம் தடையில்லை

 ரஸ்மின் MISc நன்றி - frtj

இறுதித் தூதராக முஹம்மத் நபி صلى الله عليه وسلم அவர்கள் அகில உலகத்திற்கும் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து, அவர்களுக்கு இறக்கியருளப்பட்ட குர்ஆனும் அகில உலகத்திற்கும் பொதுவானது என்பது தெளிவாகிவிட்டது. அதனை குர்ஆன் பல இடங்களில் அறிவிக்கிறது:

'இந்த குர்ஆன் முழு மனித சமுதாயத்திற்கும் வழிகாட்டி. சத்தியத்தையும், அசத்தியத்தையும் அது பிரித்தறிவிக்கிறது.' (அல்-குர்ஆன் அத்தியாயம் 2 ஸூரத்துல் பகராவின் 185வது வசனம்).
இதே கருத்துடைய வசனங்கள் அருள்மறை குர்ஆனின் கீழ் குறிப்பிட்ட அத்தியாங்களில் உள்ளன: 3:138, 38:87, 68:52, 81:27.

இந்த குர்ஆனுடைய போதனை நாத்திகர்களுக்கும், யூதர்களுக்கும், கிறஸ்தவர்களுக்கும், சிலையை வணங்குபவர்களுக்கும், ஆண்களுக்கும், பெண்களுக்கும் பொதுவானது. உலகிலுள்ள 600கோடி பேர்களில் 200 கோடி பேர் முஸ்லிம்கள். மீதமுள்ள 400 கோடியும் முஸ்லிம் அல்லாதவர்கள்தான். அவர்களும் இறை நேசம் பெற வேண்டுமானால் குர்ஆனை படித்தாக வேண்டும். பிரச்சாரத்தின் மூலம் குர்ஆனை கொண்டு போகலாம் என்பது பொருந்தாத வாதம்.
பிரச்சாரத்தின் மூலம் குர்ஆனடைய வசனங்களில் சிலவற்றை பரவலாக கொண்டு போக முடியுமேத் தவிர, மொத்த குர்ஆனையும் கொண்டு போக முடியாது. குர்ஆனைப் படிக்கத் துவங்கினால்தான் மொத்த குர்ஆனுடனும் ஐக்கியமாகி புரிந்து கொள்ள முடியும். அதற்கு தங்கு தடையை குர்ஆன் ஏற்படுத்தவில்லை. முஸ்லிம் அல்லாதவர்களே எந்த சந்தர்ப்பத்திலும் குர்ஆனைத் தொடலாம்.

புடிக்கலாம். சிந்திக்கலாம் என்றாகிவிடும் போது - இறை நம்பிக்கை யாளர்களான முஸ்லிம்களுக்கு இதில் எந்தத் தடையும் இருக்க முடியாது.

தூய்மையானவர்களைத் தவிர வேறு எவரும் இந்த குர்ஆனை தொடக் கூடாது என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளதாக சில அறிவிபப்புகள் உள்ளன. அந்த அறிவிப்புகளின் தரம் எப்படிப்பட்டது என்பதை காண வேண்டும்.

1.ما روي من حديث ابن عمر رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم قال : " لا تقرأ الحائض ولا الجنب شيئاً من القرآن " رواه الترمذي (131) وابن ماجه (595) والدارقطني (1/117) والبيهقي (1/89) وهو حديث ضعيف لأنه من رواية إسماعيل بن عياش عن الحجازيين وروايته عنهم ضعيفة ، قال شيخ الإسلام ابن تيمية (21/460) : وهو حديث ضعيف باتفاق أهل المعرفة بالحديث أ.هـ . وينظر : نصب الراية 1/195 والتلخيص الحبير 1/183 .

குளிப்பு கடமையானவர்கள், மாதவிடாய் ஏற்பட்ட பெண்கள், குர்ஆனி லிருந்து    எதையும்   ஓதக்   கூடாது    என்று    நபி      صلى الله عليه وسلم   சொன்னதாக 
 இப்னு உமர்  رضي الله عنه அறிவிக்கிறார்கள். அபுதாவூத், திர்மிதி, இப்னுமாஜாவில் இந்த செய்தி இடம் பெறுகிறது.
இந்த ஹதீஸை அறிவிப்பவர்களின் தொடரில் 'இஸ்மாயில் பின் அய்யாஸ்' என்ற ஒருவர் இடம் பெறுகிறார். இவர்; ஹிஜாஸ்வாசிகளிடமிருந்து கேட்டு அறிவிப்பவை பலவீனமான செய்தியாகும். இந்த செய்தியை 'மூஸா பின் உக்பா' என்ற ஹிஜாஸ்வாசி வழியாகவே இவர் அறிவிக்கிறார். எனவே இந்த ஹதீஸ் பலகீனமானதாகும். இந்த ஹதீஸை ஏற்கத் தேவையில்லை என்று அஹ்மத் பின் ஹம்பல் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸின் கருத்து போன்றே தாரகுத்னியின் ஒரு ஹதீஸ் வருகிறது. அந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரும் பலவீனமானது.

2بأن النبي صلى الله عليه وسلم كان يقضي حاجته ثم يخرج فيقرأ القرآن ، ولا يحجزه - وربما قال - ولا يحجبه عن ذلك شيء ليس الجنابة رواه الإمام أحمد وأبو داود والترمذي والنسائي وابن خزيمة والحاكم وقال : هذا حديث صحيح الإسناد والشيخان لم يحتجا بعبد الله بن سلمة فمدار الحديث عليه ، وعبد الله مطعون فيه .
ورواه ابن الجارود في المتقى ، وقال : قال يحيى : وكان شعبة يقول في هذا الحديث : نعرف وننكر . يعني أن عبد الله بن سلمة كان كبر حيث أدركه عمرو .
وأطال الشيخ أبو إسحاق الحويني في تخريجه وذكر طُرقه ، وذلك في غوث المكدود بتخريج منقى ابن الجارود ( ح 94 ) ، ورجّح ضعفه .
ومن قبله الشيخ الألباني – رحمه الله – فقد أطال في تخريجه والكلام عليه في الإرواء ( ح 485 )
ثم إن هذا الحديث لو صـح فإنه لا يدل على المنع ؛ لأنه حكاية فعل ، وحكاية الفعل المُجرّد لا يدل على المنع ولا يدل على الوجوب .
قال ابن حجر : قال ابن خزيمة : لا حجة في هذا الحديث لمن منع الجنب من القراءة ؛ لأنه ليس فيه نهي ، وإنما هي حكاية فعل . انتهى .
ومع أنه حكاية فعل إلا أنه حديث ضعيف لا تقوم به حُجّـة .
ومما استدلوا به أيضا حديث علي رضي الله عنه قال : رأيت رسول الله صلى الله عليه وسلم توضأ ، ثم قرأ شيئا من القرآن ، ثم قال : هكذا لمن ليس بجُـنب ، فأما الجنب فلا ولا آية . رواه الإمام أحمد وأبو يعلى والضياء في المختارة ، وضعفه الشيخ الألباني في الإرواء . الموضع السابق .

நபி(ஸல்) அவர்கள் மலஜலம் கழித்த பின், குர்ஆன் ஓதுவார்கள். எங்களுடன் மாமிசம் உண்பார்கள். ஜனாபத் (பொருந்தொடக்கு) தவிர வேறெதுவும் குர்ஆன் ஓதுவதிலிருந்து அவர்களை தடுக்காது என்று அலி  رضي الله عنه அவர்கள் அறிவிக்கிறார்கள். அபூதாவூத், இப்னுமாஜா, நஸயி, திர்மிதி, பைஹகி போன்ற நூல்களில் இந்த செய்தி வருகிறது.
இமாம் ஷாஃபி அவர்கள் இந்த ஹதீஸை மறுக்கிறார்கள். ஏனெனில் இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் இடம்பெறும் அப்துல்லாஹ் பின் ஸலாமா என்பவர்தான். இவருக்கு வயதான காலத்தில் நினைவு தடுமாற்றம் ஏற்பட்டு விட்டது. இந்த ஹதீஸை முதுமையில்தான் அறிவிக்கிறார் என்று ஷிஃபா அவர்கள் கூறுகிறார்கள். இதே காரணத்திற்காகத்தான் இமாம் ஷாஃபி அவர்களும் இந்த ஹதீஸை மறுக்கிறார்கள். அஹ்மத்,
அத்தாபி, நவவி போன்ற அறிஞர்களும் அந்த ஹதீஸஸ விமரிசித்து உள்ளார்கள். எனவே இந்த ஹதீஸ்; பலவீனமானதாகும்.

3. நபி صلى الله عليه وسلم அவர்கள் எமன் நாட்டவருக்கு எழுதிய கடிதத்தில் 'தூய்மையானவர்களைத் தவிர, மற்றவர்கள் குர்ஆனைத் தொடக் கூடாது' என்று குறிப்பிட்டார்கள். அமீருப்னு ஹஸ்மு  رضي الله عنه) மூலம் ஹாக்கிம், தாரகுத்னி, நூல்களில் இந்த செய்தி வருகிறது. இந்த செய்தியில் ஸுவைத் பின் அபீஹாத்திம் என்பவர் வருகிறார். இவர் பலகீனமான அறிவிப்பாளர். இவர் இடம்பெறும் ஹதீஸ்கள் அனைத்துமே பலகீனமாகும்.
நஸயீயில் இடம்பெற்ற ஹதீஸில் ஸுலைமான் பின் அர்கம் என்பவர் வருகிறார். ஹதீஸ்கலை அறிஞர்கள் அனைவருமே இவரையும் பலகீனமான அறிவிப்பாளர் என்று ஒப்புக் கொண்டுள்ளனர். எனவே இந்த செய்தியும் பலகீனமாகும். (ஒரு ஹதீஸ் எப்படி பலகீனப்படுகிறது என்பதை 'ஹதீஸ்கள் பலவீனப்படுமா?. எப்படி?.. என்ற கட்டுரையில் சுருக்கமாக விளக்கியுள்ளோம். படித்து பாருங்கள்).

ஆக துய்மையானவர்களைத் தவிர வேறு யாரும் குர்ஆனைத் தொடக்கூடாது என்று நபி صلى الله عليه وسلم  அவர்கள் சொன்னதாக வரும் செய்திகள் எதுவும் நிரூபிக்கப்பட்டதாக இல்லை. இவற்றை வைத்து எந்தச் சட்டமும் எடுக்க முடியாது.

இனி அல்-குர்ஆனின் 56வது அத்தியாயம் ஸூரத்துல் வாகியாவின் 79வது வசனத்திற்கு வருவோம்.
இந்த வசனத்தை எடுத்துக் காட்டியும், 'தூய்மையானவர்களைத் தவிர வேறு யாரும் குர்ஆனைத் தொடக்கூடாது' என்று சிலர் வாதிடுகின்றனர். எனவே அதுபற்றியும் முழுமையாக அறிவது அவசியம்.

'நிச்சயமாக இது மிகவும் கண்ணியமும், சங்கையும் மிக்க குர்ஆனாகும். பாதுகாக்கப்பட்ட ஏட்டில் இது இருக்கின்றது. தூய்மையானவர்களைத் தவிர இதனைத் தொடமாட்டார்கள்.' (அல்-குர்ஆன் அத்தியாயம் 56 ஸூரத்துல் வாகிஆ வின் 77, 78, 79ஆம் வசனங்கள்).

இந்த வசனத்தில் இடம் பெறும் 'தூய்மையானவர்கள்' யார்? என்பதையும், அதனைத்தொடமாட்டார்கள் என்பதில் வரும் 'அதனை' என்பது எது என்பதையும் விளங்கிக் கொண்டால் தெளிவு கிடைத்துவிடும்.

'அதனை தொடமாட்டார்கள்' என்கிறான் இறைவன். இது குர்ஆனை குறிப்பதாக இருந்தால் 'தொடக் கூடாது' என்ற கட்டளை மனிதர்களை முன்னிலைப் படுத்தி குறிப்பிடப் பட்டிருக்க வேண்டும். கட்டளையாக வராமல் 'தொடமாட்டார்கள்' என்று படர்க்கையாக 'செயல்வினைச்சொல் பயன்படுத்தப் பட்டுள்ளது. அதாவது இனி நடக்க வேண்டிய ஒரு காரியத்தைப் பற்றி இறைவன் பேசாமல், ஏற்கெனவே நடந்து கொண்டிருக்கும் ஒரு விஷயம் பற்றி பேசுகிறான்.

தொடமாட்டார்கள் என்பது மனிதர்களை குறிப்பதாக இருந்தால் அந்த வசனம் அர்த்தமில்லாமல் போகிறது. எப்படி?.

ஒளு செய்துவிட்டு தொடுவதுதான் தூய்மை என்றால் - ஒளுவும், தொழுகையும் நபி صلى الله عليه وسلم அவர்களின் 52வது வயதில்தான் கடமையாகிறது. அதாவது திருக்குர்ஆனின் வசனங்கள் நபி صلى الله عليه وسلم அவர்களின் 40வயதாக இருக்கும்போது வஹியாக வரத்துவங்கியது. அவ்வாறு வஹியாக வரத்துவங்கி 12 ஆண்டுகளுக்குப் பிறகுதான் ஒளுவும், தொழுகையும் கடமையாகிறது. அப்படியெனில் குர்ஆன் வஹியாக வரத் துவங்கி 12 ஆண்டுகள் வரை
நபித் தோழர்கள் அசுத்தமான நிலையிலேயே குர்ஆனை பதிவு செய்துள்ளார்கள் என்ற பொருள் வருகிறது. மேற்கண்டவாறு விளங்கினால் அந்த வசனம் சொல்லும் கருத்துக்கு அர்த்தமில்லாமல் போகிறது.

'இனி தொடமாட்டார்கள்' என்ற கருத்தில் அந்த வசனம் வந்திருக்கிறது என்று எவராவது சொன்னால், இந்த வசனம் இறங்கிய பிறகாவது நபித்தோழர்கள் ஒளு செய்துவிட்டு வந்துதான் வஹியை - குர்ஆனை பதிவு செய்தார்கள். நபி صلى الله عليه وسلم இப்படித்தான் இந்த வசனத்தை விளக்கினார்கள் என்பதற்கு ஆதாரம் காட்ட வேண்டும். எந்த ஹதீஸ் நூலிலும் இதற்கான ஆதாரம் கிடைக்கவில்லை.

எனவே 'தொடமாட்டார்கள்' என்பது மனிதர்களை குறிப்பதற்கு வாய்ப்பேயில்லை. மனிதர்களை குறிப்பதாக இருந்தால் 'தொடக்கூடாது' என்ற கட்டளை வந்திருக்க வேண்டும் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

'அதனை' என்பது என்ன?.

'அதனை' என்பதற்கு குர்ஆன் என்று பொருள் கொண்டால் - குர்ஆன் தொடக்கூடிய வடிவத்தில் இறங்கியிருக்க வேண்டும். குர்ஆன் தொட்டு உணரக் கூடிய நூல் வடிவத்தில் இறங்கவில்லை. மாறாக ஓதி அறியக்கூடிய 'வஹி' யாகத்தான் இறக்கியருளப்பட்டது. அதற்கு ஆதாரமாக அருள்மறை குர்ஆனின் கீழ்கண்ட வசனங்கள் உள்ளன.

'இறைவனின் கட்டளைப்படி ஜிப்ரீல் இதனை உம்முடைய உள்ளத்தில் இறக்கி வைத்தார்.' (அல்-குர்ஆன் அத்தியாயம் 2 - ஸூரத்துல் பகராவின் 97வது வசனம், அத்தியாயம் 26 ஸூரத்துஷ் ஷூஃராவின் 192வது வசனம்).

'(நபியே!) நாம் உம்மை ஓதி காட்டச் செய்வோம் பிறகு நீர் மறக்கமாட்டீர்' (அல்-குர்ஆன் அத்தியாயம் 87 ஸூரத்துல் அஃலாவின் 6வது வசனம்)
மேற்படி வசனங்கள் குர்ஆன் நபி صلى الله عليه وسلم அவர்களின் உள்ளத்தில் வஹியாக அறவிக்கப்பட்டதேத் தவிர ஏடாக வரவில்லை என்பதை அறிவிக்கிறது.
'எழுதப்பட்ட வேதத்தை நாம் உம்மீது இறக்கியிருந்தால் அதை தமது கரங்களால் தொட்டுப் பார்த்து இது வெறும் சூனியமேத் தவிர வேறில்லை என்று கூறியிருப்பார்கள்.' (அல்-குர்ஆன் அத்தியாயம் 6 ஸூரத்துல் அன்-ஆம் 7வது வசனம்)

இந்த வசனத்தின் மூலம் குர்ஆன் ஒரு எழுதப்பட்ட ஏடாக வரவில்லை என்பதை தெளிவாக அறிந்து கொள்ளலாம்.

ஓசையும் - உச்சரிப்பாகவும் மட்டும்தான் குர்ஆன் வஹியாக அருளப்பட்டது. ஓசையையும், உச்சரிப்பையும் - யாராலும் தொட முடியாது. அப்படியானால் 'அதனை' என்று தொடக் கூடிய வடிவத்தில் இருக்கும் ஒன்றைத்தான் இறைவன் கூறியிருக்க முடியும். குர்ஆன் தொடக் கூடிய வடிவத்தில் இறைவனிடமிருந்து இறங்கவில்லை என்பதால் 'அதனை' என்பது குர்ஆனை குறிக்காது என்பதை தெளிவாக அறிந்து கொள்ளலாம்.
தூய்மையானவர்கள் என்றால் யார்?.

இஸ்லாமிய மொழி வழக்கில் அதாவது குர்ஆன் - ஸூன்னா வழியில் தூய்மை என்பது பல அர்த்தங்களில் வந்துள்ளது.
உள்ளத்தூய்மை, ஒளு, மாதவிடாய் மற்றும் பிரசவத் தீட்டிலிருந்து தூய்மை அடைதல், தீய காரியங்களிலிருந்து விலகி நிற்றல் என்று ஏராளமாக சொல்லலாம். இதில் எதுவும் நாம் மேற்குறிப்பிட்ட வசனத்திற்கு பொருந்தாது. ஏனெனில் 'அதனை' என்று குர்ஆன் அல்லாத ஒன்றை இறைவன் சொல்வதால் இந்த அர்த்தங்கள் அங்கு பொருந்தாது.
இப்போது இந்த வசனத்தின் வரலாற்றுப் பின்னனியை அணுகினால் முடிவான விடை கிடைத்துவிடும்.

இறைத்தூதர் முஹம்மது நபி صلى الله عليه وسلم அவர்கள் மக்காவில் ஏகத்துவ பிரச்சாரம் செய்தபோது எதிரிகளால் பல 'சொல்' தாக்குதலுக்கு உள்ளானார்கள். அதில் ஒன்று 'ஷைத்தான்கள் இவருக்கு கற்றுக் கொடுப்பதைதான், இவர் மக்களுக்கு ஓதிக் காட்டுகிறார்' என்பதாகும்.
மேற்படி 'சொல்' தாக்குதலை மறுத்து இரண்டு வசனங்கள் இறங்கின.
'இதை ஷைத்தான்கள் இறக்கிவைக்கவில்லை. அது அவர்களுக்கு தகுதியானதுமல்ல. அதற்கு அவர்கள் சக்தி பெறவும் மாட்டார்கள்.' (அல்-குர்ஆன் அத்தியாயம் 26 ஸூரத்துஷ் ஷுஃராவின் 210 மற்றும் 211ஆம் வசனங்கள்)

'இது கண்ணியமிக்க குர்ஆனாகும். பாதுகாக்கப்பட்ட (லவ்ஹூல்- மஹ்ஃபூல்) என்னும் ஏட்டில் அது இருக்கிறது. தூய்மை யானவர்(மலக்கு)களைத் தவிர வேறு யாரும் அதனை (லவ்ஹூல்- மஹ்ஃபூல் என்ற மூல ஏட்டை) தொடமாட்டார்கள்.' (அல்-குர்ஆன் அத்தியாயம் 56 ஸூரத்துல் வஆகியா 77 முதல் 79வது வசனம் வரை)

மக்காவில் உள்ள இறை நிராகரிப்பாளர்களின் குற்றச்சாட்டுக்கு மறுப்பாக நீங்கள் கூறுவது போல் ஷைத்தான்கள் இதனை இறக்கவில்லை. அதை இறக்கக் கூடிய சக்தி அவர்களுக்குக் கிடையாது. பாதுகாக்கப்பட்ட மூல ஏட்டிடம் ஷைத்தான்கள் நெருங்க முடியாது. பாவம் என்றால் என்னவென்றே அறியாத 'தூய்மையான மலக்குகளைத் தவிர வேறு எவரும் 'அதனைத் தொடமாட்டார்கள்' என்று இறைவன் தெளிவாக அறிவித்து
விட்டான். இப்னு அப்பாஸ்  رضي الله عنه ஸயீத் பின் ஜூபைர்رضي الله عنه, அனஸ்رضي الله عنهபோன்ற நபித்தோழர்கள் அனைவரும் மேற்கண்ட விளக்கத்தையே கொடுகத்துள்ளார்கள். (இப்னு கஸீர் விளக்கவுரை).
அருள்மறை குர்ஆன் உலக மக்கள் அனைவருக்கும் பொதுவானது என்பதாலும்,
நபி صلى الله عليه وسلم அவர்கள் சொன்னதாக வரும் செய்திகள் அனைத்தும் பலகீனமாக இருப்பதாலும்,
'தூய்மையானவர்களைத் தவிர' என்பது மனிதர்களை குறிக்கவில்லை என்பதாலும்,
அருள்மறை குர்ஆனை எந்த சந்தர்ப்பத்திலும், எந்நிலையிலும் தொடலாம், ஓதலாம். அதைத் தடுப்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லை.

ஓசையும் உச்சரிப்புமாக இறங்கிய குர்ஆன் பிற்கால மக்களுக்காக எழுத்து வடிவமாக பதிவு செய்து, பாதுகாக்கப்பட்டு வருகின்றது. எழுத்து வடிவத்தைப் படிக்கும்போது ஓசையும், உச்சரிப்பும் அதேவிதத்தில் வருவதால் எல்லா புத்தகங்களைப் போன்றதுதான் என்று சமமாக பார்க்க முடியாது. குர்ஆனில் இருக்கும் பொருளின் காரணத்தால் - குர்ஆனுக்கு கண்ணியம் அவசியமாகிறது என்பதை விளங்கலாம்.

குர்ஆனை மக்கள் தொடும் விஷயத்தில், ஓதும் விஷயத்தில் ஒளு வேண்டும், தூய்மை வேண்டும் என்று நாமாகப் பல தடைகளைப் விதித்திருப்பதால்தான் மக்கள் குர்ஆனிலிருந்து விலகி நிற்கின்றனர். குர்ஆனிலிருந்து மக்களை விடுபடச் செய்யும் இந்த போக்கு அநீதி என்றே முடிவு செய்ய முடிகிறது.

thanks :  http://islamintamil.blogspot.com

***************************************************************************************************************   

கேள்வி : அஸ்ஸலாமு அழைக்கும் !!!ஒழு இல்லாமல் குரான் ஐ தொடலாமா? மாதவிடாய் சமயத்தில் உதிரப்போக்கு நிற்காத போது மூன்று நாட்கள் கழித்து குரான் ஐ தொடுவதும் ஓதுவதும் கூடுமா ? ஹதீஸ் ஆதாரங்களோடு கூறவும் . Mubashareena S. – India 

 பதில் : உழு இல்லாமலும், மாதவிடாய் காலத்திலும் குர்ஆனைத் தொடக்கூடாது என்ற சிலர் வாதிடுகிறார்கள் அதற்கு அவர்கள் எடுத்து வைக்கும் ஆதாரத்தின் உண்மைத் தன்மையை நாம் ஆய்வு  செய்தால் அவர்களின் வாதம் தவறானது என்பதையும், உழு இல்லாமலும், மாதவிடாய் நேரத்திலும் திருமறைக் குர்ஆனைத் தொடுவதற்கு எந்தத் தடையும் இல்லை என்பதை நாம் அறிந்துகொள்ள முடியும். குர்ஆனைத் தூய்மையின்றித் தொடக்கூடாது என்று வாதிடுபவர்கள் எடுத்து வைக்கும் ஆதாரங்களுக்குறிய பதில்களைப் பார்ப்போம்.

  தூய்மையில்லாதவர்கள் திருமறைக் குர்ஆனைத் தொடக் கூடாது  என்று வாதிடுபவர்கள் உமர் رضي الله عنه அவர்கள் தொடர்பான ஒரு தகவலை ஆதாரமாக் காட்டுகிறார்கள். முதல் வாதமும், பதிலும். உமர் رضي الله عنه அவர்கள் இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்னால் அவர்களின் சகோதரியிடம் குர்ஆனின் வசனங்கள் எழுதப்பட்ட ஏட்டைக் கேட்ட நேரத்தில் அவருடைய சகோதரி அவர்களை நோக்கி, "நீங்கள் அசுத்தமாக இருக்கின்றீர்கள். தூய்மையானவர்களைத் தவிர இதை எவரும் தொடக் கூடாது'' என்று கூறினார்கள். (முஸ்னத் பஸ்ஸார் – 279) முதலாவது இந்தச் செய்தியை ஆதாரமாகக் கொள்ள முடியாது ஏன் என்றால் மேற்கண்ட செய்தி நபியவர்கள் கூறியதாகவோ, அல்லது நபியவர்களின் நடைமுறையாகவோ அறிவிக்கப்படவில்லை. மாறாக உமர் رضي الله عنه அவர்களின் சகோதரியின் கூற்றாகத் தான் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆதலால் இதனை ஆதாரமாகக் ஏற்றுக் கொள்ள முடியாது. இரண்டாவது விஷயம் இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் இடம் பெரும் உஸாமத் பின் ஸைத் என்பவர் பலவீனமானவர் என்று இமாம் ஹைஸமீ குறிப்பிடுகின்றார். (மஜ்மவுஸ் ஸவாயித்) பைஹகியில் இதே ஹதீஸ் இடம் பெற்றுள்ளது அதில் இடம் பெரும் காஸிம் பின் உஸ்மான் அல்பஸரி என்பவர் பலவீனமானவர் என்றும் இவருடைய ஹதீஸ்கள் பின்பற்ற ஏற்றமானது அல்ல என்றும் ஹதீஸ் கலை மேதை இமாம் இப்னு ஹஜர் அவர்கள் குறிப்பிடுகிறார்கள் (லிஸானுல் மீஸான்)

  இரண்டாவது வாதமும், பதிலும். அடுத்ததாக திருமறைக் குர்ஆனின் 56வது அத்தியாயத்தின் 79வது வசனத்தை ஆதாரமாகக் காட்டுகிறார்கள். தூய்மையானவர்களைத் தவிர (மற்றவர்கள்) அதைத் தொடமாட்டார்கள். (அல்குர்ஆன் - 56 : 79) இந்த வசனத்தைத் தான் வலுவான ஆதாரமாக இவர்கள் காட்டுகிறார்கள் இந்த வசனத்தை மேலோட்டமாகப் பார்க்கும் போது குர்ஆனை உலு இல்லாதவர்களும் மாதவிடாய் பெண்களும் திருமறைக் குர்ஆனைத் தொடக்கூடாது என்பது போன்ற தோற்றத்தை  இது ஏற்படுத்தினாலும், இந்த வசனத்திற்கு முந்தைய வசனங்களையும், இது போல் அமைந்த மற்ற வசனங்களையும் நாம் ஆராய்கின்ற நேரத்தில் இவர்களின் வாதம் தவறானது என்பதை தெளிவாக அறியக்கிடைக்கிறது. மேற்கண்ட வசனத்தில் இடம் பெற்றுள்ள தூய்மையானவர்கள் யார் என்பதையும், அதைத் தொடமாட்டார்கள் என்பது எதைப்பற்றியது  என்பதையும் முதலில் அறிந்து கொள்வோம்.

  முதலாவது விஷயம் நபியவர்களுக்கு இறக்கியருளப்பட்ட திருமறைக் குர்ஆன் புத்தக வடிவில் அவர்களுக்கு இறக்கப்படவில்லை. மாறாக ஒலி வடிவில்தான் இறக்கப்பட்டது. திருமறைக் குர்ஆன் இறங்கும் போது நபி صلى الله عليه وسلم அவர்கள் அதனை மனப்பாடம் செய்து  கொள்வார்கள். ஒலி வடிவில் திருமறைக் குர்ஆன் இறக்கப்பட்டிருக்கும் போது அதனைத் தொடுதல் என்ற பேச்சுக்கே இங்கு இடமில்லாமல் போகிறது. புத்தக வடிவில் அல்லது தொடும் விதத்தில் அல்லாஹ் திருக்குர்ஆனை இறக்கியிருந்தால் மட்டுமே தொடுதல் என்ற ஆய்வுக்கு
இங்கு தேவை ஏற்படும். ஆக தொடுதல் என்ற வாதம் நமது கையில் உள்ள குர்ஆனைப் பற்றியதல்ல என்பதை இதன் மூலம் நாம் விளங்க முடியும். இதற்கு முந்தைய வசனத்தை கவணிக்கும் போது இதனை நாம் தெளிவாக விளங்களாம். இது பாதுகாக்கப்பட்ட பதிவேட்டில் இருக்கும் மகத்துவமிக்க குர்ஆனாகும். தூய்மையானவர்களைத் தவிர (மற்றவர்கள்) அதைத் தொட மாட்டார்கள். அகிலத்தின் இறைவனிடமிருந்து (இது) அருளப்பட்டது. (அல்குர்ஆன் - 56 : 77. 79) 56 : 79 வசனத்திற்கு முன்புள்ள இரண்டு  வசனங்களையும் பார்க்கும் போது ஒரு விஷயம் நமக்குத் தெளிவாகத் தெரிகின்றது.

   அதாவது இது பாதுகாக்கப்பட்ட பதிவேட்டில் இருக்கும் மகத்துவமிக்க குர்ஆன் என்று அல்லாஹ் கூறுகிறான். அடுத்த வசனத்தில் தூய்மையானவர்களைத் தவிர (மற்றவர்கள்) அதைத் தொட மாட்டார்கள் என்று கூறுகிறான். இப்போது அதை என்ற சொல் நம் கையில் இருக்கும் திருக்குர்ஆனைப் பற்றிப் பேசவில்லை. மாறாக பாதுகாக்கப்பட்ட ஏட்டில் (லவ்ஹுல் மஹ்ஃபூலில்) உள்ள திருக்குர்ஆனைப் பற்றித் தான் பேசுகின்றது என்ற உண்மை தெரியவருகிறது. இதற்கு ஆதாரமாக மேலும் சில திருமறை வசனங்கள் அமைந்திருக்கின்றன. அவ்வாறில்லை! இது ஓர் அறிவுரை. விரும்பியவர் படிப்பினை பெற்றுக் கொள்வார். இது தூய்மைப்படுத்தப்பட்டு உயர்வாக்கப்பட்ட மதிப்புமிக்க ஏடுகளில் உள்ளது. மரியாதைக்குரிய நல்லோர்களான எழுத்தர்களின் கைகளில் உள்ளது. (அல்குர்ஆன் - 80 : 11-16) இவ்வசனமும் திருக்குர்ஆனின் மூலப் பிரதி எங்குள்ளது என்பதைப் பற்றி பேசுகின்றது. இவ் வசனங்களிலும் 56 : 79 வசனத்தில் கூறப்பட்டதைப் போன்றே  கூறப்பட்டிருந்தாலும் 56 : 79 வசனத்தை விட கூடுதல் தெளிவுடனும்  விளக்கத்துடனும் காணப்படுகின்றது.

  தூய்மையானவர்கள் என்று 56 : 79 வசனத்தில் கூறப்பட்டவர்கள் வானவர்கள் தாம் என்பதை இவ்வசனம் தெளிவுபடுத்துகிறது. இறை நிராகரிப்பாளர்கள் இந்தக் குர்ஆனை ஷைத்தான்கள் கொண்டு  வருகின்றனர் என எண்ணிணார்கள். அவர்களுக்கு அல்லாஹ் பின்வருமாறு பதில் கூறினான். இதை ஷைத்தான்கள் இறக்கிடவில்லை. அது அவர்களுக்குத் தகுதியானதும் அல்ல. அதற்கு அவர்களால் இயலாது. அவர்கள் செவியேற்பதை விட்டும் தடுக்கப்பட்டவராவர். (அல்குர்ஆன் - 26 : 210 212) இந்த வசனத்தில் சொல்லப்பட்டதைப் போன்று திருக்குர்ஆன் தூய்மையானவர்களான மலக்குமார்களின் கையிலே பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. ஷைத்தான்களால் இதைத் தொடமுடியாது என்ற பொருளில் தான் 56 : 79 வது வசனமும் அமைந்துள்ளது. தொட மாட்டார்கள் என்பதற்கும் தொடக் கூடாது என்பதற்கும் உள்ள வேறுபாட்டை நாம் அறிவோம். தொடக் கூடாது என்றால் அது கட்டளையிடுகிறது  என்பது பொருள். தொட மாட்டார்கள் என்றால் அது ஒரு  செய்தியை  நமக்கு எடுத்துக் கூறுகிறது என்று பொருள். மேற்கண்ட வசனத்தில் தொடக் கூடாது எனக் கூறப்படவில்லை. மாறாக தொட மாட்டார்கள் எனக் கூறப்படுகிறது. உளூ இல்லாதவர்களும், மாதவிடாய்ப் பெண்களும் குர்ஆனைத் தொடக் கூடாது என்ற அர்த்தம் தான் இந்த வசனத்தின் பொருள் என்றால் தூய்மையானவர்களைத் தவிர வேறு யாரும் இக்குர்ஆனைத் தொடக் கூடாது என்று தொடுவதற்கு தடைபோடும் விதத்தில் அல்லாஹ் கூறியிருப்பான்.

   ஆனால் மற்றவர்கள் இதைத் தொட மாட்டார்கள் என்று அல்லாஹ் கூறியிருப்பது பாதுகாக்கப்பட்ட ஏட்டில் உள்ள குர்ஆனை  மலக்குமார்களைத் தவிர மற்றவர்களால் தொட முடியாது என்ற பொருளையே தருகிறது. மேலுள்ள வசனங்கள் அனைத்தையும் ஒன்று சேர்த்துப் பார்க்கும் போது 56 : 79 வது வசனத்தில் சொல்லப்பட்ட தூய்மையானவர்கள் என்பது வானவர்கள் என்பதும், அதை  என்று  கூறப்பட்டுள்ளது வானத்தில் பாதுகாக்கப்பட்ட ஏட்டில் உள்ள குர்ஆன் என்பதும், ஐயத்திற்கு இடமின்றி தெளிவாகின்றது. எனவே இந்த வசனத்தை வைத்துக் கொண்டு தூய்மையான நிலையில் தான் குர்ஆனைத் தொட வேண்டும் என்று வாதிட முடியாது. காபிர்களுக்கே  நபியவர்கள் திருமறை வசனத்தை எழுதி  அனுப்பியிருக்கிறார்கள்.

   அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم அவர்கள் ரோமாபுரியின் அரசர் ஹெர்குலிஸுக்கு எழுதிய கடிதத்தில் பின்வருமாறு கூறப்பட்டிருந்தது: பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் அல்லாஹ்வின் அடியாரும் அவனது  தூதருமான முஹம்மது என்பார், ரோமாபுரிச் சக்கரவர்த்தி  ஹெர்குலிஸுக்கு எழுதிக் கொள்வது: நேர்வழியைப் பின்பற்றுவோர் மீது சாந்தி நிலவட்டுமாக! நிற்க! இஸ்லாத்தைத் தழுவுமாறு உமக்கு நான் அழைப்பு விடுக்கின்றேன். நீர் இஸ்லாத்தை ஏற்பீராக! நீர் ஈடேற்றம் பெற்றிடுவீர்! அல்லாஹ் உமக்கு இரு மடங்கு சன்மானம் வழங்குவான். நீர் புறக்கணித்தால் (உமது) குடிமக்களின் பாவமும் உம்மைச் சாரும். "வேதமுடையோரே! நாம் அல்லாஹ்வைத் தவிர (யாரையும்) வணங்கக் கூடாது; அவனுக்கு  இணையாக எதையும் கருதக் கூடாது; அல்லாஹ்வையன்றி நம்மில் ஒருவர் மற்றவரைக் கடவுள்களாக ஆக்கக் கூடாது என்ற எங்களுக்கும், உங்களுக்கும் பொதுவான கொள்கைக்கு  வாருங்கள்!'' என்று கூறுவீராக! அவர்கள் புறக்கணித்தால் "நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு  நீங்களே சாட்சிகளாக இருங்கள்!'' எனக் கூறி விடுங்கள்! (அல்குர்ஆன் 3:64) அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் رضي الله عنه , நூல் : புகாரி 7, 2941

   இந்த ஹதீஸில் நபி صلى الله عليه وسلم அவர்கள் முஸ்லிமல்லாத ஒரு  மன்னருக்கு  "பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்' மற்றும் 3:64 ஆகிய குர்ஆன் வசனங்களை எழுதி அனுப்பியுள்ளார்கள். தூய்மையற்றவர்கள் குர்ஆனைத் தொடக் கூடாது என்றிருந்தால் மாற்று மதத்தில் உள்ளவர்களுக்கு நபி صلى الله عليه وسلم அவர்கள் இவ்வாறு எழுதிக் கொடுத்திருக்க  மாட்டார்கள். ஆகவே திருமறைக் குர்ஆனை  உழு இல்லாதவர்களும், மாதவிடாப் பெண்களும் தொடுவதற்கு எந்தத் தடையும் இல்லை என்பதை மேற்கண்ட ஆதாரங்களின் மூலம் அறிந்து  கொள்ள முடியும். அல்லாஹ்வே மிக அறிந்தவன்.


 

வெள்ளி, நவம்பர் 08, 2019

நபியின் மீது உண்மையான அன்பு எது?ﻋﻦ ﺟﺎﺑﺮ ﺑﻦ ﻋﺒﺪ ﺍﻟﻠﻪ ﺭﺿﻲ ﺍﻟﻠﻪ ﻋﻨﻬﻤﺎ ﻗﺎﻝ , ﻗﺎﻝ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ : ﺃﻣﺎ ﺑﻌﺪ : ﻓﺈﻥ ﺧﻴﺮ ﺍﻟﺤﺪﻳﺚ ﻛﺘﺎﺏ ﺍﻟﻠﻪ , ﻭﺧﻴﺮ ﺍﻟﻬﺪﻱ ﻫﺪﻱ ﻣﺤﻤﺪ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ , ﻭﺷﺮ ﺍﻷﻣﻮﺭ ﻣﺤﺪﺛﺎﺗﻬﺎ ﻭﻛﻞ ﺑﺪﻋﺔ ﺿﻼﻟﺔ ( ﺭﻭﺍﻩ ﻣﺴﻠﻢ 2002: ) ﻭﻓﻰ ﺭﻭﺍﻳﺔ ﻟﻠﻨﺴﺎﺋﻲ 1577: : ﻭﻛﻞ ﺿﻼﻟﺔ ﻓﻰ ﺍﻟﻨﺎﺭ .
சிறந்த வார்த்தை அல்லாஹ்வின் வேதமகும், அழகிய வழிகாட்டல் முஹம்மத் (ஸல்) அவர்களின் வழிகாட்டல்களாகும், (மார்க்கத்தில்) புதிதாக ஏற்படுத்தப்பட்டவைகள், தீயவிடயஙகளாகும,;, பித்அத் எல்லாம் வழிகேடுகளாகும், ‘வழிகேடுகளெல்லாம் நரகத்தில்தான். என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரழி) அவர்கள் கூறுகிறார்கள.; (முஸ்லிம் ஹதீஸ் இல: 2002, நஸாயீ :1577).

நமது உயிரை விடவும் மேலாக நபியவர்களை நேசிக்க வேண்டும் என்று திருக்குர்ஆன் கூறுகிறது.
اَلنَّبِىُّ اَوْلٰى بِالْمُؤْمِنِيْنَ مِنْ اَنْفُسِهِمْوَاَزْوَاجُهٗۤ اُمَّهٰتُهُمْ
நம்பிக்கை கொண்டோருக்கு தங்களை விட இந்த நபி (முஹம்மத்) தான் முன்னுரிமை பெற்றவர். அவரது மனைவியர் அவர்களுக்கு அன்னையர்.அல்குர்ஆன் 33:6           இதையே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் கூறியுள்ளார்கள்.
قل ان كنتم تحبون الله فاتبعو ني يحببكم الله ويغفرلكم ذنوبكم والله غفورالرحيم 
பொருள்;- ‘’நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பவர்களாக இருந்தால் என்னைப் பின்பற்றி நடப்பீர்களாக, அப்பொழுதுதான், அல்லாஹ் உங்களை நேசித்து, உங்கள் குற்றங்களை மன்னிப்பான் அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன் கிருபை உள்ளவன் என்று (நபியே! முஸ்லிம்களுக்கு) கூறுவீராக’’(3;31)
ü  இறைத்தூதர் (ஸல்) அவர்களை நேசிப்பதும் இறை நம்பிக்கையின் ஓர்அம்சமாகும்.
என்னுடைய உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மீது ஆணையாக, உங்களில் ஒருவருக்கு அவரின் தந்தையையும் அவரின் மக்களையும் விட நான் மிக்க அன்பானவராகும் வரை அவர் ஈமான் எனும் இறைநம்பிக்கை உள்ளவராக மாட்டார்' என்றுஇறைத்தூதர்(ஸல்)அவர்கள்கூறினார்கள்:
எனஅபூஹுரைரா(ரலி)அறிவித்தார்.
Ø  உங்களில் ஒருவருக்கு அவரின் தந்தை, அவரின் குழந்தைகள், ஏனைய மக்கள் அனைவரையும் விட நான் மிக அன்பானவராகும் வரை அவர் (உண்மையான) இறைநம்பிக்கையாளராக மாட்டார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அனஸ்(ரலி) அறிவித்தார்.
ü  இறைவன் மற்றும் இறைத்தூதரை நேசிப்பது என்பது, ஒன்று மற்றொன்றுடன் தொடர் புடையது. ஒருவரை நேசித்து, மற்றவரை நேசிக்காமல் இருக்கமுடியாது. ஒருவரை வெறுத்தாலும் மற்றவரை வெறுக்க வேண்டியது வரும்.
இருவரின் நேசத்தையும் ஒருசேர அடைய சில எளிய வழிகளை கடைப்பிடித்தால் போதும். அது என்ன வழி? இறைவனும், இறைத்தூதரும் கட்டளையிட்டதை முடிந்தளவு கடைப்பிடித்து வாழவேண்டும். அவ்விருவரும் தடுத்ததை முற்றிலும் தவிர்ந்து நடக்கவேண்டும். அவர்களுக்கு எது பிரியமானதோ அது நமக்கும் பிரியமானதாகவும், அவர் களுக்கு எது வெறுப்பானதோ அது நமக்கும் வெறுப்பானதாகவும் இயற்கையாகவே ஆக வேண்டும்.
சொல்லாலும், செயலாலும், இன்பத்திலும்-துன்பத்திலும், லாபத்திலும்-நஷ்டத்திலும், செழுமையிலும்-வறுமையிலும், ஆரோக்கியத்திலும்-நோயிலும், இளமையிலும்- முதுமையிலும் வாழ்க்கையின் அனைத்து கட்டங்களிலும் முழுமையாக அவர்களை பின்பற்ற வேண்டும்.
மனோ இச்சைக்கு எதிராக எதை தூண்டினார்களோ அதை தேர்ந்தெடுத்து நடக்க வேண்டும். பிரியப்படும் இருவரையும் அதிகம் நினைவு கூரவேண்டும். பிரியமான இருவரையும் நினைவு கூரப்படும் போது பணிவு, பயபக்தியுடன் கண்ணியப்படுத்திட வேண்டும்.
இருவரும் யாரை நேசித்தார்களோ அவரையும் நாம் நேசிக்க வேண்டும்.வெறுத்தோரைநாம்வெறுக்கவேண்டும்.அவ்விருவரின் எண்ணம் போன்று நமது வாழ்வு அமைந்திட வேண்டும்.

ஒன்றை நேசிப்பது அது உன்னை குருடனாகவும், செவிடனாகவும் மாற்றிவிடும்என்பது அரேபிய பழமொழி. நாம் இறைவனையும், இறைத்தூதரையும் உண்மையாக நேசிக்கும் போது மற்றதை காணமாட்டோம். மற்றதை கேட்க மாட்டோம். இருவரின் ஆழமான நட்பில் நாம் மூழ்கும் போது கண்முன் நடப்பது தெரியாது.
காதுக்கு நேராக பேசுவது கேட்காது. நமது பார்வையும், செவிப்புலனும் நாம் யாரை நேசிக்கிறோமோ அவர்களுக்காகவே மட்டும் செயல்படும். மற்றவர்களுக்காக செயல்படாது. இதுதான் உண்மையான நேசத்தின் அடையாளம். இந்தத் தன்மை இறைவனையும், இறைத்தூதரையும் நேசிப்பவர்களிடம் வெளிப்பட வேண்டும்.
இறைவனை நேசிப்பதினால் நன்மையான காரியங்கள்தான் வெளிப்படுமே தவிர தீமைகள் அல்ல.
ü  ஹஜ்ரத் அலீ(றழி) அவர்களிடம் அண்ணல் நபீ(ஸல்) அவர்களிடம் தங்களுக்கு எந்த அளவு அன்பு இருந்தது? என்று ஒருவர் கேட்டார், “அல்லாஹ்வின் மீது சத்தியமாகச் சொல்கின்றேன். எங்களுடைய சொத்துக்கள், பெற்றெடுத்த மக்கள், அன்பு அன்னை மார்கள், ஆகியவர்களை விடவும், கடுமையான தாகத்தின் போது கிடைக்கும் குளிர்ந்த நீரை விடவும் நாங்கள், அண்ணலாரை நேசித்தோம்என்று கூறினார்கள். 
அலீ(றழி) அவர்கள் கூறியது முற்றிலும் உண்மையே! அண்ணலாரின் தோழர்கள் அனைவருமே அப்படித்தான் அண்ணலார் மீது அன்பு கொண்டிருந்தார்கள். அதற்கு முக்கிய காரணம், அவர்கள் கொண்டிருந்த பரிபூரணமான இறை உறுதியே! எனவே, ஏன் அவர்கள் அவ்வாறு இருக்கக் கூடாது? அல்லாஹ் தஆலா திருக்குர் ஆனில் கூறுகின்றான். 
قُلْ اِنْ كَانَ اٰبَآؤُكُمْ وَاَبْنَآؤُكُمْ وَاِخْوَانُكُمْ وَاَزْوَاجُكُمْ وَعَشِيْرَتُكُمْ وَ اَمْوَالُ ۨاقْتَرَفْتُمُوْهَا وَتِجَارَةٌ تَخْشَوْنَ كَسَادَهَا وَ مَسٰكِنُ تَرْضَوْنَهَاۤ اَحَبَّ اِلَيْكُمْ مِّنَ اللّٰهِ وَرَسُوْلِهٖ وَ جِهَادٍ فِىْ سَبِيْلِهٖ فَتَرَ بَّصُوْا حَتّٰى يَاْتِىَ اللّٰهُ بِاَمْرِهٖؕ وَاللّٰهُ لَا يَهْدِى الْقَوْمَ الْفٰسِقِيْنَ
(நபியே!) நீர் கூறும்: உங்களுடைய தந்தைமார்களும், உங்களுடைய பிள்ளைகளும், உங்களுடைய சகோதரர்களும், உங்களுடைய மனைவிமார்களும், உங்களுடைய குடும்பத்தார்களும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நஷ்டம் (எங்கே) ஏற்பட்டு விடுமோ என்று நீங்கள் அஞ்சுகின்ற (உங்கள்) வியாபாரமும், நீங்கள் விருப்பத்துடன் வசிக்கும் வீடுகளும், அல்லாஹ்வையும் அவன் தூதரையும், அவனுடைய வழியில் அறப்போர் புரிவதையும் விட உங்களுக்கு பிரியமானவையாக இருக்குமானால், அல்லாஹ் அவனுடைய கட்டளையை (வேதனையை)க் கொண்டுவருவதை எதிர்பார்த்து இருங்கள் - அல்லாஹ் பாவிகளை நேர்வழியில் செலுத்துவதில்லை
அல்லாஹ்வின் இந்த அறிவிப்பிலே, மேற்கானும் எல்லோரையும் விட, அல்லாஹ்வின் மீதும் அவனது தூதர் மீதும் அன்பு குறைந்து விடுபவர்களுக்குக் கடுமையான எச்சரிக்கை தரப்பட்டுள்ளதை காண்கிறோம். 
நேசம் இரு வகைப்படுகின்றது! ஒன்று, தான் விரும்பி நேசிப்பது, மற்றெது இயற்கையாகவே நேசிப்பது! விருப்பமான தேசத்தில் இயற்கையும் கலந்து விட்டது என்றால், அது பரிசுத்தமான, பரிபூரணமான நேசமாகி விடுகிறது. இத்தகைய நேசத்தைத்தான் கொண்டிருந்தார்கள், அண்ணலார் மீது அவர்களது தோழர்கள்”. 
நபி (ஸல்) மீது அன்பு நபித்தோழர்கள் போட்டி
இந்த ஈமானின் சுவையை அனுபவிப்பதற்காக நபித்தோழர்கள், நீ முந்தியா? நான் முந்தியா? என ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக் கொள்வார்கள்.போர்க் களத்திற்குப் போவதற்காக, அங்கு தங்கள் உயிர்களை அர்ப்பணம் செய்வதற்காகப் போட்டி போட்டுக் கொள்வார்கள். அவர்களுக்குத் தேவை நபி (ஸல்) அவர்களின் அன்பு தான். அதற்காக அவர்கள் எதையும் இழக்கத் தயாரானார்கள்
ü  உமர்(றழி) அவர்கள், அண்ணலாரின் சமூகத்தில் ஒரு தடவை கூறினார்கள்.அல்லாஹ்வின்தூதரே!எனதுஉயிரைத்தவிர...... மற்றெல்லாத்தையும்விடதாங்களேஎனக்குஅதிகம் பிரியமுள்ளவர்களாயிருக்கின்றீர்கள்”! 
தனது உயிரை விட என்னை அதிகமாக நேசிக்காத வரை ஒருவர், பூரணமான விசுவாசியாகமாட்டார்என்று அண்ணலார் அதற்கு பதிலாகக் கூறினார்கள். உடனே, உமர்(றழி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரே, தாங்கள்என்னுயிரைவிட இப்பொழுது அதிகப்பிரியமுள்ளவராக இருக்கிறீர்கள்! என்றார்கள். 
ஓ உமரே! இப்பொழுது தான்!என்று அண்ணலார் கூறினார்கள்.

Ø  அண்ணலாரின் தோழர் ஒருவர் ஒருதடவை அண்ணாலரின் சமூகத்திற்கு வந்து இறுதி நாள் எப்பொழுது வரும்? என்று கேட்டார். அந்த நாளை எதிர் பார்க்கும் நீர் அதற்குரிய எந்த சாதனையை திரட்டிவைத்திருக்கின்றீர்கள்! என்று அண்ணலார் கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதரே! நான் நிறைய தொழுகைகளையும், நோன்புகளையும், தானதருமங்களையும் சேர்த்து வைக்கவில்லை! ஆனால், அல்லாஹ் மீதும், அவனுடைய தூதர் மீதும் எனதுள்ளத்தில் நிறைய அன்பு சேர்த்து வைத்துள்ளேன்!என்றார். 
Ø  எவரை நீர் நேசித்தீரோ, மறுமையில் அவருடனேயே இருப்பீர்கள்!என்றார்கள் பெருமானார் அவர்கள். அதாவது மனிதன், உலகில் எதை அதிகம் நேசிக்கின்றானோ, அதனுடன் தான் அவன் மறுமையில் எழுப்பப்படுவான், என்பது இதன் பொருளாகும்.
இந்த நபிமொழியை அண்ணலாரின் தோழர்கள் பலர் அறிவித்துள்ளனர். இவர்களில், அப்துல்லா இப்னு மஸ்ஊத்(றழி), அபூ மூஸா அஸ்அரி(றழி), ஸப்வான்(றழி), அபூதர்(றழி) பொன்றோரும் உள்ளனர். 
அண்ணலாரின் இந்த அறிவிப்பை கேட்டதும், அவர்களது தோழர்கள் அடைந்த ஆனந்தத்திற்கு அளவே இல்லாது போய் விட்டது. என்று அனஸ்(றழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். ஏனெனில் அண்ணலாரின் அன்பு அவர்களின் தோழர்களின் நரம்பு நாளங்களிலெல்லாம் ஊடுருவி சென்றிருந்ததல்லவா
ஒருதடவைஅண்ணலாரின்(ஸப்வான்(றழி)    அண்ணலாரின் சமூகத்தில் வந்து அல்லாஹ்வின் தூதரே! எனக்கு எனது உயிர், எனது பெருள், எனது குடும்பத்தார், உறவினர் அனைவரையும் விட தங்கள் மீது அதிக பாசம் இருந்து வருகின்றது. எனக்குத் தங்கள் நினைவு வந்து விட்டால், என்னால் அதனை பொறுக்க முடியாமல் போய்விடுகிறது. ‘’அல்லாஹ்வின் தூதரே, தங்கள் மீது எந்த அளவு நேசம் கொண்டுள்ளேன் என்றால், தங்களது நினைவு வந்ததும் தங்களை உடனே வந்து பார்க்காவிடில் எங்கு எனது உயிரே பிரிந்துவிடுமோ! என்று கூட சந்தேகப்படவேண்டியதாக இருக்கிறது. உடனே தங்களை வந்து தரிசித்துக் கொள்ளாதவரை நிம்மதி ஏற்படுவதில்லை. இப்பொழுது எனக்கு ஒரே கவலை ஏட்பட்டுவிட்டது. மரணம்தங்களுக்கும்இருக்கிறது.ஏனெனில்,தங்களோஅல்லாஹ்வுடையதூதராக இருக்கின்றீர்கள். எனவே தூதர்களது அந்தஸ்தில் தரிசனம் கிடைக்காது போய்விடுமே!என்று முறையிட்டுக் கொண்டார்கள்.மறுமையில் பிரவேசித்தாலும் கூட நான் தாழ்ந்த அந்தஸ்தில் தான் இருந்து வேண்டி வரும். எனவே தங்களை தரிசிக்காத நிலையில் அந்த சுவர்க வாழ்வும் எனக்கு மிகக்கடினமாகத்தானே இருந்து வரும்
அண்ணலார் இதற்கு விடை கூறாது மௌனம் சாதித்ததார்கள். உடனே, ஜிப்ரயீல் (அலை) அவர்கள் ஆஜராகி, கீழ்வரும் திருவசனத்தை ஓதிக்காட்டினார்கள் 
ومن يطع الله والرسول فألئك مع الذين انعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين. وحسن أولئك رفيقا ذلك الفضل من الله وكفى بالله عليما
பொருள் : எவர் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கீழ்படிந்து நடந்து கொள்கிறார்ளோ அவர்கள் அல்லாஹ்வின் அருள் பெற்ற நபிமார்கள், மெய்யடியார்கள், உயிர்தியாகிகள், நல்லடியார்கள் ஆகியோருடன் இருப்பர். இவர்களே தோழமைக்கு சிறந்தவர்களாக இருக்கிறாகள் இந்தத் தோழமையானது அல்லாஹ்வுடைய ஓர் அருளாகும். அல்லாஹ் எல்லாவற்றையும் நன்கறிந்தவனாக இருக்கிறான்.
‘’எனக்குப் பின்னால் தோன்றக்கூடியவர்களிலும் என்னை அதிகம்நேசிக்கக் கூடியவர்கள் சிலர் இருப்பார்கள், அவர்கள் என்னை காண்பதற்காகவேண்டி தங்கள் உயிர், பொருள், குடும்பத்தார் அனைவரையும் அர்பணித்து விட இருப்பார்கள். (துர்ருள் மன்தூர்) 
ü  இப்னு காலித் (றழி) அவர்கள் கூறினார்கள். ‘’எனது தந்தை உறங்கச் சென்றால், அவர்களுக்கு உடனே நித்திரை வந்து விடாது; அண்ணலாரோடு கழித்த நாட்களை ஞாபகப்படுத்திக்கொண்டே இருப்பார்கள்; அவர்களோடு. அன்போடு அளவளாவிக் கொண்டிருந்ததை நினைவு கூறுவார்கள். மக்கா தோழர்கள், மதீனா தோழர்கள் ஒவ்வருவருடைய பெயரையும் குறிப்பிட்டு நினைவு கூறுவார்கள். இவர்கள்தான் எனது உடன் பிறந்தார் உறவினர் எல்லாம்! என் மனம் இவர்கள் பக்கம்தான் ஈர்கப்படுகிறது. யாஅல்லாஹ்! எனக்கு விரைவில் மரணம் அழிப்பாயாக! நானும் இவர்களோடு போய் சேர்ந்து கொள்கிறேன்’’ என்று கூறியவாறே தூங்கிவிடுவார்கள்.
ü  ஒரு தடவை அபூபக்கர் (றழி) அவர்கள் அண்ணலாரிடம் கூறினார்கள்! 
‘’அல்லாஹ்வின் தூதரே! எனக்கு எனது தந்தை முஸ்லிமாவதைவிட, தங்கள் சிறிய தந்தையார் அபூதாலிப் அவர்கள் முஸ்லிம், ஆகிவிட வேண்டும் என்றே நான் ஆசைப்படுகின்றேன்! ஏனெனில், அவர்கள் முஸ்லிமாவதைக் கொண்டு தாங்கள் அதிக சந்தோஷப்படுவீர்கள் அல்லவா? அதாவது தமது சந்தோஷத்திற்கு பதிலாக அண்ணலாரின் சந்​தோசத்தையே அவர்கள் அதிகம் விரும்பினார்கள். 
உமர் (றழி) அவர்கள், ஹழ்றத் அப்பாஸ் (றழி) அவர்களிடம் ‘’எனது தந்தையார் முஸ்லிமாவதை விட தாங்கள் முஸ்லிமாவதைக் கொண்டு நான் அதிகம் சந்தோஷப்படுகிறேன்! எனெனில் தாங்கள் முஸ்லிமாவது அண்ணலாருக்கு அதிகப் பிரியமாக இருக்கின்றது’’ என்று கூறினார்கள். 
ü  பிலால் (றழி) அவர்கள், மரணப்படுக்​கையில் இருந்தார்கள்; இறுதி மூச்சின் கடைசி எல்லை நெருங்கிக் கொண்டிருந்தது. கணவரின் கடைசிக்கட்டத்தை காணச்சகியாது அவர்களது மனைவியார், ‘அதோ என் கதியே! என்று அழுது புலம்பிய வண்ணமிருந்தார்கள். அச்சமயம்,பிலால் (றழி) அவர்கள், தம் மரணத்தைக் குறித்து சந்தோஷமடைந்தவராக ‘’ ஸுப்ஹானல்லாஹ்! என்ன சுவையான விஷயம்! நான் நாளை அண்ணலாரை தரிசிப்பேன்! அவர்களது இதர தோழர்களையும் சந்திப்பேன்! ‘’என்று கூறினார்கள். 
ü  ஜைத்(றழி) அவர்களைத் தூக்கு மேடையில் ஏற்றி, அபூஸுப்யான் ஜைத் (றழி) அவர்களை நோக்கி, ‘’உம்மை விடுதலை செய்து விட்டு, உமக்குபதிலாக முஹம்மதுக்கு இந்தத்தண்டனை அளிப்பதாயிருந்தால் நீர், அதற்கு சம்மதிப்பீரா? என்று கேட்டார்! அதற்கு ஜைத் (றழி) அவர்கள் ‘’ அல்லாஹ்வின் மீது சத்யமாக, அண்ணலார், அவர்களது வீட்டில் இருக்கும் பொழுது, அவர்களுக்கு ஒரு சிறு முள் தைத்து விட்டதாக இருந்தால் கூட, நான் சுகமாயிருப்பதை என்னால் சகிக்க முடியாதே! என்று கூறினார்கள். அப்போது அபூஸுப்யான், ‘’முஹம்மதுவை அவர்களது தோழர்கள் நேசிப்பதைப்போல வேறெவரையும் யாரும் இப்படி நேசிப்பதை நான் கண்டதில்லை! ‘’என்று ஆச்சரியப்பட்டு கூறினார்கள். 

ü ரபீஆ பின் கஅப் அல்அஸ்லமி (ரலி),அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இரவில் தங்கிக் கொண்டிருந்தேன். அவர்களுக்கு உளூச் செய்ய தண்ணீர் மற்றும் தேவையானவற்றைக் கொண்டு வந்தேன். அப்போது அவர்கள், “நீ என்னிடம் (தேவையானதைக்) கேள்என்று கூறினார்கள். நான் உங்களுடன் சுவனத்தில் இருப்பதையே கேட்கின்றேன்என்று சொன்னேன். அதற்கு அவர்கள், “இதைத் தவிர வேறு ஒன்றுமில்லையா?” என்று கேட்டார்கள். அது மட்டும் தான்என்று கூறினேன். அப்படியானால் நீ அதிகமாகத் தொழுவதன் மூலம் உனக்கு அது கிடைப்பதற்கு என்னுடன் ஒத்துழைப்பாயாகஎன்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.நூல் : முஸ்லிம் 754, நஸயீ 1126, அபூதாவூத் 1125
இந்த நபித்தோழரிடம் நபி (ஸல்) அவர்கள், கேள் என்றதும் பொன்னையும் பொருளையும் கேட்டு விடவில்லை. அந்த அன்சாரித் தோழர்களைப் போன்று மறுமையில் சுவனத்தில் நபி (ஸல்) அவர்களுடன் சேர்ந்திருக்கும் பாக்கியத்தைத் தான் கேட்கின்றார்.

பெண்மணியின் அன்பு.

ü  நபி (ஸல்) அவர்களின் மீது கொண்ட அன்பினால் ஒரு பெண் எப்படி நடந்து கொண்டார்? என்பதை அறியும் போது நம்மை மெய்சிலிர்க்கவைக்கிறது.
ஒரு அன்ஸாரிப் பெண்மணியின் தந்தை, அவரின் சகோதரர், அவரின் கணவர்மூவரும்உஹதுப்போரில்நபியவர்களுடன்கலந்து கொண்டனர்.அதில்வீரமரணமும்அடைந்தனர்.
அந்தப்பெண் போர்க்களம் காண வந்தபோது, அந்த மூவரும் கொல்லப்பட்ட செய்தி அவருக்கு தெரிவிக்கப்பட்டது. நபி (ஸல்) எப்படி இருக்கிறார்கள்?’ என்றுதான் முதலில் விசாரித்தார். நபியை கண்கூடாக கண்ட போதுதான் அவரின் கவலை மாயமாகிப் போனது. இதுதான் மெய்யான அன்பு.

ü  அப்துல்லாஹ் என்ற அன்னையின் வீர மைந்தன் கூறுகிறார் : நானும் என் தாயும் உம்மு அம்மாராவே!  நபி (ஸல்) அவர்களைக் காக்கும் பணியில் ஈடுபட்டிருந்தோம். அப்போது என் தாய்க்குக் கடினமான வெட்டு விழுந்தது. நபி (ஸல்) அவர்கள் என்னைப் பார்த்து தாயின் காயத்திற்குக் கட்டிடச் சொன்னார்கள். பின்னர் உங்கள் குடும்பத்திற்கு அல்லாஹ் பரக்கத் செய்வானாக! உன் தாய் இங்கிருந்து போராடுவது (சில பெயர்களைக் கூறி) இன்னின்ன யுத்த வீரர்கள் இங்கிருந்து போராடுவதை விடச் சிறந்தது. அவர்களின் கணவர் இங்கிருந்து போராடுவது இன்னின்ன நபர்கள் போராடுவதை விடச் சிறந்தது. உங்கள் குடும்பத்திற்கு அல்லாஹ் கருணை காட்டுவானாக! என்று பிரார்த்தித்தார்கள்.
அப்போது என் தாய் அல்லாஹ்வின் தூதரே! சுவனத்திலும் நான் உங்களுக்கு அருகிலிருக்கப் பிரார்த்தியுங்கள் என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ{ம்ம இஜ்அல்ஹ{ம் ருபகாயீ பில் ஜன்னா - யா அல்லாஹ் இவர்களை சுவனத்திலும் என் நண்பர்களாக ஆக்கி விடுவாயாக! என்று பிரார்த்தித்தார்கள். இதைக் கேட்ட என் தாய் இந்தப் பாக்கியம் கிடைத்த பின் அழிந்து போகும் இந்தத் துன்யாவில் எமக்கு என்ன இழப்பு ஏற்பட்டால் தான் என்ன? என்று கூறி மீண்டும் போராடத் தொடங்கி விட்டார்கள் என்கிறார்கள்.
 இந்நிகழ்ச்சிகள் யாவும் அன்னை உம்மு அம்மாரா அவர்கள் நபி (ஸல்) அவர்கள் மீது கொண்டிருந்த பாசத்தையும், அவர்களைக் காப்பதில் கொண்டிருந்த கரிசனையையம், ஆண்களையும் மிஞ்சும் அவர்களின் வீரத்தையும், துணிவையும் எடுத்துக் காட்டுகின்றன.
ஒரு பெண் புலியாக நின்று போராடியுள்ளார்கள். இவர்களது ஈமானிய உணர்விலும் உறுதியிலும் ஒரு துளியாவது எம்மிடமிருந்தால் எம் வாழ்வில் எத்தகைய மாற்றம் ஏற்படும் என்று எண்ணிப்பாருங்கள்.


குறிப்பு;- அண்ணலார் மீது அன்பு கொள்வது சம்மந்தமாக மார்க மேதைகள் பல அடையாளங்கள் கூறியுள்ளனர். காழீ இயாழ் (றழி) அவர்கள் கூறுகிறார்கள். 
ஒரு மனிதன் ஒரு பொருளின் மீது மோகங் கொள்வதாயின், மற்றெல்லாவற்றையும் விட அதன் மீது அன்பு கொண்டே தீருவான் இதுவே அந்த அன்பின் உன்மையான அடயாளமாகும். அவ்வாறு இல்லையாயின், அந்த அன்பு வெறும் போலி அன்புதான்!’’ 
எனவே அண்ணல் நபி(ஸல்) அவர்கள் மீது நாம் உண்மையான அன்பு கொள்வதாயின், அவர்களை ஒவ்வொரு விஷயத்திலும் நாம் முழுக்க முழுக்கப் பின்பற்றுபவர்களாக இருக்க வேண்டும். அவர்கள் சொற்படி நடக்க வேண்டும்; செய்த முன்மாதிரிகளையே பின்பற்றிச் செய்ய வேண்டும். எதனை விட்டு தடுத்தார்​களோ அதனை அறவே விட்டுவிட வேண்டும். சுகத்திலும், துக்கத்திலும், வறுமையிலும்,செல்வத்திலும், எந்த நிலையிலும் அண்ணலாரையே பிள்பற்றி நடந்துகொள்ள வேண்டும்.


ﻻ ﺗﻄﺮﻭﻧﻲ ﻛﻤﺎ ﺃﻃﺮﺕ ﺍﻟﻨﺼﺎﺭﻯ ﺑﻦ ﻣﺮﻳﻢ ﻓﺈﻧﻤﺎ ﺃﻧﺎ ﻋﺒﺪﻩ ﻓﻘﻮﻟﻮﺍ ﻋﺒﺪ ﺍﻟﻠﻪ ﻭﺭﺳﻮﻟﻪ ’ ( ﺍﻟﺒﺨﺎﺭﻱ 3445: )
கிறிஸ்தவர்கள் மரியமுடைய மகன் ஈஸா (அலை) அவர்களை அளவு கடந்து புகழ்ந்தது போன்று என்னைப் புகழாதீர்கள். நான் அவனின் அடிமைதான், எனவே அல்லாஹ்வின் அடிமை என்றும் திருத்தூதர் என்றும் செhல்லுங்கள்’ (புஹாரி : 3445)