இடுகைகள்

செப்டம்பர், 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இஸ்லாமிய பார்வையில் வளர்ப்பு பிள்ளை

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) உங்களின் இணைய தளத்தில் பிரசுரிக்கப்படும் கேள்வி பதில்கள் அனைவராலும் புரிந்து கொள்ளும் விதத்தில் எளிமையாகவும், பதிலளிக்கும் முறை மிக நன்றாகவும் உள்ளது. எங்களுக்கு ஒரு சந்தேகம் உள்ளது. இஸ்லாமிய அடிப்படையில் அதற்குத் தெளிவான பதிலை உங்களிடமிருந்து எதிர்பார்க்கின்றோம். தத்தெடுக்கப்படும் குழந்தைகள் அவர்களின் உண்மையான தந்தை பெயரிலேயே அறியப்பட வேண்டும் என்பது இஸ்லாமிய விதிமுறை என்று தெரியும். தந்தை யாரென்று அறியப்படாத ஒரு (திருமணமாகாத) பெண்ணுக்குப் பிறந்த குழந்தை, அப்பெண்ணின் எதிர்காலம் கருதி குழந்தை பிறந்த நிமிடம் முதல் அது வேண்டாம் என அப்பெண்ணால் கைவிடப்பட்ட நிலையில் இறைவனின் கருணையினால் எங்களுக்குக் கிடைக்கப்பெற்றது. பிறந்த நிமிடம் முதல் எங்களிடம் இக்குழந்தை இருக்கும் நிலையிலும், உண்மையான தந்தை யாரென்று அறியப்படாத நிலையிலும், பெற்ற தாய்க்கும் வேண்டாத நிலையில் நாங்கள் பால் கொடுத்து வளர்த்தினால் அதனை எங்கள் குழந்தையாக வளர்க்க இஸ்லாம் அனுமதிக்கின்றதா ? அல்லாஹ் உங்களின் செயல்களுக்கு தக்க கூலிகளை வழங்கிடுவானாக. நம் அனைவரையும் நேர் வழியில் இறுதிவரை உறுதியுடன் இர