இடுகைகள்

ஜனவரி, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மன்னிப்பு

    قُلْ يٰعِبَادِىَ الَّذِيْنَ اَسْرَفُوْا عَلٰٓى اَنْفُسِهِمْ لَا تَقْنَطُوْا مِنْ رَّحْمَةِ اللّٰهِ‌ ؕ اِنَّ اللّٰهَ يَغْفِرُ الذُّنُوْبَ جَمِيْعًا‌ ؕ اِنَّهٗ هُوَ الْغَفُوْرُ الرَّحِيْمُ‏ என் அடியாளர்களே ! எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்து கொண்டபோதிலும் , அல்லாஹ்வுடைய ரஹ்மத்தில் நம்பிக்கை இழந்து விடவேண்டாம் . நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன் , மிக்க கருணையுடைவன் என்று நபியே நீர் கூறுவீராக . ( அல்குர்ஆன் 39:53)  كُلُّ بَنِي آدَمَ خَطَّاءٌ وَخَيْرُ الْخَطَّائِينَ التَّوَّابُونَ ” ‘ எல்லா மனிதர்களும் தவறு செய்பவர்களே ! தவறு செய்பவர்களில் சிறந்தவர்கள் மன்னிப்பு தேடுபவர்களே !’   என நபி ( ஸல் ) அவர்கள் கூறினார்கள் . அறிவிப்பவர் : அனஸ் ( ரலி ), ஆதாரம் : திர்மிதி .   2499 இஸ்லாத்தின்பார்வையில்மனிதன்என்பவன்தவறிழைப்பவனாகவே இருக்கின்றான் . சில நேரங்களில் அவன் யோசிக்காமல் அல்லது எந்த ஒரு உள்நோக்கமும் இன்றி தவறிழைக்கின்றான் . ஆனால் சில நேரங்களில் நன்கு அறிந்து கொண்டே பாவங்களில் ஈடுபடுகின்றான் அல்லது பிறருக்கு தீங்கிழைக