இந்தியாவின் 18 ஆவது மக்களவைக்கான தேர்தல்

 

இந்தியாவின் 18 ஆவது மக்களவைக்கான தேர்தல் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 அன்று நடக்கிறது. தேர்தல் முடிவுகள் ஜுன் 4 அன்று வெளியிடப்படும்.

ஆட்சியாளர்கள் மூலம்  நமக்கு ஏற்படும் சோதனைகள் நமது பாவங்களின் பாதிப்புகள் என்பதை உணர வேண்டும்

 

وَمَا أَصَابَكُمْ مِنْ مُصِيبَةٍ فَبِمَا كَسَبَتْ أَيْدِيكُمْ  (30)الشوري

- ظَهَرَ الْفَسَادُ فِي الْبَرِّ وَالْبَحْرِ بِمَا كَسَبَتْ أَيْدِي النَّاسِ لِيُذِيقَهُمْ بَعْضَ الَّذِي عَمِلُوا (41)الروم

-عَنْ أَبِي الدَّرْدَاءِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّ اللَّهَ يَقُولُ:"أَنَا اللَّهُ لا إِلَهَ إِلا أَنَا، مَالِكُ الْمُلُوكِ وَمَلِكُ الْمُلُوكِ، قُلُوبُ الْمُلُوكِ فِي يَدِي، وَإِنَّ الْعِبَادَ إِذَا أَطَاعُونِي حَوَّلْتُ قُلُوبَ مُلُوكِهِمْ عَلَيْهِمْ بِالرَّأْفَةِ وَالرَّحْمَةِ، وَإِنَّ الْعِبَادَ إِذَا عَصَوْنِي حَوَّلْتُ قُلُوبَهُمْ عَلَيْهِمْ بِالسَّخْطَةِ وَالنِّقْمَةِ فَسَامُوهُمْ سُوءَ الْعَذَابِ، فَلا تَشْغَلُوا أَنْفُسَكُمْ بِالدُّعَاءِ عَلَى الْمُلُوكِ، وَلَكِنِ اشْتَغِلُوا بِالذِّكْرِ وَالتَّضَرُّعِ إِلَيَّ أَكْفِكُمْ مُلُوكَكُمْ (طبراني في المحجم الكبير)

 

நீங்கள் எனக்கு கட்டுப்பட்டு நடந்தால் உங்கள் ஆட்சியாளர்களின் உள்ளங்களை உங்களுக்குச் சாதகமாக நான் திருப்புவேன். நீங்கள் எனக்கு மாறு செய்தால் உங்கள் ஆட்சியாளர்களின் உள்ளங்களை உங்களுக்குப் பாதகமாக நான் திருப்புவேன். அவர்கள் உங்களை வஞ்சிப்பர்.எனவே ஆட்சியாளர்களைத் திட்டி உங்களுடைய காலத்தையும் நேரத்தையும் வீணாக்காமல் என்னை அஞ்சி எனக்குக் கட்டுப்படுங்கள் உங்களின் ஆட்சியாளர்களை நான் பார்த்துக் கொள்வேன்.       

 

 

இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் வாக்குரிமை

 

தற்போதைய அரசியல் சூழ்நிலைகளை பொறுத்த வரையில் ஓட்டுப்போடுவது நாம் செய்ய வேண்டிய மிக முக்கியமான கடமையாகும்.  அதிலும் குறிப்பாக வருகிற பாராளுமன்ற தேர்தலில் நாம் ஓட்டுப் போடா விட்டால் இந்தியாவில் முஸ்லிம்களின் எதிர்காலம் மிகவும் கேள்விக்குறியாக ஆகி விடும். மற்றொரு புறம் ராம ராஜ்ஜியம் என்ற எதிரிகளின் சூழ்ச்சிக்கு நாம் மறைமுகமாக ஒத்துழைப்பது போன்றாகி விடும்.         

 

وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَى وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ (2)المائدة - عَنْ خَالِدٍ  سَمِعْنَا النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ إِنَّ النَّاسَ إِذَا رَأَوْا الظَّالِمَ فَلَمْ يَأْخُذُوا عَلَى يَدَيْهِ أَوْشَكَ أَنْ يَعُمَّهُمْ اللَّهُ بِعِقَابٍ و قَالَ عَمْرٌو عَنْ هُشَيْمٍ وَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ مَا مِنْ قَوْمٍ يُعْمَلُ فِيهِمْ بِالْمَعَاصِي ثُمَّ يَقْدِرُونَ عَلَى أَنْ يُغَيِّرُوا ثُمَّ لَا يُغَيِّرُوا إِلَّا يُوشِكُ أَنْ يَعُمَّهُمْ اللَّهُ مِنْهُ بِعِقَابٍ (ابن ماجة)

 

அநியாயத்தை தடுக்கும் சக்தி நம்மிடம் இருந்தும் அதை தடுக்காமல் இருந்தால் அதனால் அல்லாஹ் ஏற்படுத்தும் சோதனைகளுக்கு அத்தனை பேரும் பலியாவார்கள் என்பது மேற்படி ஹதீஸின் கருத்தாகும். இதன்படி அநியாயக்கார பாசிச அரசின் அநியாயத்தை நம் கைகளாலோ, நாவினாலோ தடுக்கும் சக்தி நம்மிடம் இல்லை\

 இந்தக் காலத்தில் யார் தான் யோக்கியம். எல்லா வேட்பாளர்களும் நமக்கு எதிராகத் தானே இருக்கிறார்கள். என்று சிலர் கேட்பதும் சரி தான். ஆனால் விரோதி, மிகவும் விரோதி, மிக மிக மோசமான விரோதி என்று பல்வேறு ரகம் இருக்கிறது. இதில் மூன்றாவது நபர் வர விடாமல் தடுக்க வேறு வழியின்றி கொஞ்சம் சுமாரான எதிரிக்கு ஓட்டுப் போட வேண்டியுள்ளது.

 وَلْتَكُنْ مِّنْكُمْ اُمَّةٌ يَّدْعُوْنَ اِلَى الْخَيْرِ وَيَاْمُرُوْنَ بِالْمَعْرُوْفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ‌ؕ وَاُولٰٓٮِٕكَ هُمُ الْمُفْلِحُوْنَ‏

3:104. மேலும், (மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் - இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர். ". ( அல் குர் ஆன் 3 : 104 )

ஒரு இறை நம்பிக்கையாளன், மற்றவர்கள் செய்கின்ற தவறை கண்டும் காணாமல் செல்லக் கூடாது. அதை தவறு என்று எடுத்துச் சொல்லவேண்டும். அழகிய முறையில் அறிவுறுத்தவேண்டும். அத்துடன் நன்மை செய்ய தூண்ட வேண்டும். நல்லதின் பக்கம் அழைக்க வேண்டும்,

 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், "உங்களில் ஒருவர் ஒரு தீமையை கண்டால் தன் கையால் அதைத் தடுக்கட்டும், அதற்கு இயலாவிட்டால் தன் நாவால் தடுக்கட்டும்.அதற்கும் இயலாவிட்டால் தன் இதயத்தால் (வெறுக்கட்டும்) இது இறைநம்பிக்கையில் மிக பலவீனமானதாகும்". ( அபூஸயீத் அல் குத்ரீ (ரலி) : முஸ்லீம்)

முஸ்லிம் ஓட்டு யாருக்கு?

مَنْ يَشْفَعْ شَفَاعَةً حَسَنَةً يَكُنْ لَهُ نَصِيبٌ مِنْهَا وَمَنْ يَشْفَعْ شَفَاعَةً سَيِّئَةً يَكُنْ لَهُ كِفْلٌ مِنْهَا وَكَانَ اللَّهُ عَلَى كُلِّ شَيْءٍ مُقِيتًا

 

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا كُونُوا قَوَّامِينَ بِالْقِسْطِ شُهَدَاءَ لِلَّهِ وَلَوْ عَلَى أَنفُسِكُمْ أَوْ الْوَالِدَيْنِ وَالْأَقْرَبِينَ إِنْ يَكُنْ غَنِيًّا أَوْ فَقِيرًا فَاللَّهُ أَوْلَى بِهِمَا فَلَا تَتَّبِعُوا الْهَوَى أَنْ تَعْدِلُوا وَإِنْ تَلْوُوا أَوْ تُعْرِضُوا فَإِنَّ اللَّهَ كَانَ بِمَا تَعْمَلُونَ خَبِيرًا

இந்தியாவின் 18 ஆவது மக்களவைக்கான தேர்தல் முறையாக நட்த்த தேர்தல்கமிஷன் அரும்பாடுபட்டு வருகிறது.

குறிப்பாக பணம் கொடுத்து ஓட்டு வாங்கும் கீழ்த்தரமானபோக்கை ஒழிப்பதற்கு அதிக கவனம் எடுத்துக் கொண்டுள்ளது. ஓட்டுக்குப் பணம் என்ற விசயத்தில் தமிழகம் இந்தியாவின்மிக மோசமான முன்னுதாரணமாக மாறி தமிழ்கவாக்களர்களை தலைகுனிய வைத்துள்ளது.ஒரு சில விசயங்களில் தேர்தல் கமிஷனின் நடவடிக்கைமக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தினாலும் இந்த கில்லாடிஅரசியல்வாதிகளை சமாளிப்பதற்கு இது தேவைதான் என்றேபெரும்பாலான மக்கள் கருதுகிறார்கள்.தேர்தல் கமிஷனின் நடவடிக்கைக்கு ஒத்துழைக்க வேண்டியதுஜனநாயகத்தில் அக்கறையுள்ள அனைவ்ரின் கடமையாகும்.தேர்தல் கமிஷனுக்கு இஸ்லாம் பல வகையிலும் உதவிசெய்கிறதுஇந்தியாவின் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்குஇஸ்லாம் செய்கிற உதவி என்றும் இதை கருதலாம்.

இஸ்லாமின் பார்வையில் ஒருவருக்கு ஓட்டுப்போடுவது இவர்இந்த நாட்டின் நிர்வாகப் பொறுப்பிற்கு தகுதியானவர்என்று சாட்சி சொல்வதும்பரிந்துரைப்பதும் ஆகும்.

1.  சாட்சியை நிறைவேற்றுவது எப்படி கடமையோ அதுபோல ஓட்டளிப்பதும் கடமையாகும்.

 

தேர்தல் நாளை விடுமுறை நாள் என்று கருதி சும்மா இருந்துவிடக்கூடாதுபடித்தவர்களும் பண வசதி படைத்தவர்களும்வரிசையில் நின்று வாக்களிப்பதை சிரம்மாக கருதுகின்றனர்.

அடுத்த ஐந்து வருட்த்திற்கு அரசியல் நட்த்துவது யார்என்பதை தீர்மாணிக்க சக்தியை நமது விரல் நுக்கும்இந்திய ஜனநாயகம் வழங்கியுள்ளது.

சினிமா தியேட்டரில் கூட்டம் இருக்கிறதுஎன்பதற்காக நாம் எப்போதாவது திரும்பி வந்து இருக்கிறோமாதடுப்பு ஊசி போடும் இடத்தில் கூட்டம் இருக்கிறது என்பதற்காக நாம் வந்துவிடுகிறோமாஐந்து வருடங்களைத் தீர்மானிக்கும் வேலைக்காக ஐந்து மணி நேரம்கூடக் காத்துக்கிடக்கலாம்.முஸ்லிம்களைப் பொறுத்தவரை நாட்டிற்கு சரியானஆட்சியாளரை அடையாளம் காட்ட சாட்சி சொல்கிறோம் என்றநிய்யத்தோடு வரிசையில் நிற்கிற ஒவ்வொரு நிமிடமும்சவாபிற்குரியதாகும்.

إنما الأعمال بالنيات

சும்மா முகம் கழுவினால் அது சுத்தம் மட்டுமே!. ஒளு என்றநிய்யத்தோடு முகம் கழிவினால் 

சுத்தத்துடன் நன்மையும்சேர்ந்து கிடைக்கிறது அல்லவாஅது போல!சிலர் “என்ஒரு ஓட்டினால் என்ன ஆகிவிடப் போகிறது என்று நினைக்கின்றனர்.

·         கள்ள ஓட்டுப் போடுபவர்களுக்கு இந்த எண்ணம் தான் வாய்ப்பளிக்கிறது.

·         நூறு பேர் இப்படி நினைத்தால் ஒரு நல்ல வேட்பாளர் தோற்றுப் போய்விடுவார்.

·         ஒரு ஓட்டின் முக்கியத்துவம் என்ன என்பதை அரசியல் வாதி புரிந்து வைத்திருக்கிறார். அதனால் தான அவர் சந்து பொந்துக்களில் புகுந்து கூட ஓட்டுகேட்கிறார்.

2.  சாட்சியை நிறைவேற்ற எப்படி கூலிவாங்க்க்க்கூடாதோ அது போல ஓட்டுக்கு காசுபொருள் ஆகியவற்றை பெறக் கூடாது.

இந்திய ஜனநாயகத்திற்கு ஏற்பட்ட்டுள்ள மிகப் பெரிய பாதிப்பு200 க்கும் 500 க்கும் மக்கள் தங்களது ஓட்டுக்களைவிற்றுவருவது.

பணத்துக்கும்பிரி யாணிப் பொட்டலத்துக்கும்மது பானத்துக்கும் வாக்குகளை அடகுவைக்கும் நிலை இனியும் தொட ரக் கூடாது. 'எனது வாக்கு விற்பனைக்கு அல்லஎன்பதை ஒவ்வொரு அரசியல்வாதிக்கும் பொட்டில்அடித்தாற்போல் புரியவைக்க வேண்டும்.

ஒரு வாக்கை விற்பதுஐந்து வருடங்களை விற்பதற்குச் சமமான வேதனை. அந்த ஐந்து வருட ஆட்சியில் தவறு ஏதும் நிகழ்ந்தால்வாக்கைச் சரியாகப் பயன்படுத்தாத நாமும்தான் அதற்குப் பொறுப்பு.

3.  பொய்சாட்சி சொல்லக்கூடாது என்றால் கள்ள ஓட்டுபோடக்கூடாது என்று பொருளாகும்.

பொய்சாட்சி எப்படி நீதியை தடுமாற வைத்து விடுமோ அது போல கள்ள ஓட்டு அரசியலை தடுமாறச் செய்து விடும்.

4.  ஜாதி இன மத அடிப்படையில் தப்பான வேட்பாளரை தேர்வு செய்து விடக்கூடாது.

தங்களுடையவர் என்பதற்காக சாட்சியில் பிறழ்தல் கூடாது என்பது இஸ்லாமின் கடுமையான் அறிவுறையாகும்.

وَلَوْ عَلَى أَنفُسِكُمْ أَوْ الْوَالِدَيْنِ وَالْأَقْرَبِينَ

தங்களுடையவர் என்பதற்காக தப்பானவர்களை ஆதரிப்பது இனவெறி என்று மார்க்கம் கூறுகிறது. அது அழிவிற்கு வழி வகுக்கும் என்றும் மார்க்கம் எச்சரிக்கிறது.

 

 عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ ِ قَالَ مَنْ نَصَرَ قَوْمَهُ عَلَى غَيْرِ الْحَقِّ فَهُوَ كَالْبَعِيرِ الَّذِي رُدِّيَ فَهُوَ يُنْزَعُ بِذَنَبِهِ  - ابوداوود -4453   

அசத்தியமான ஒரு காரியத்திற்காக தன்னுடைய சமுதாயத்திற்கு உதவுகிறவர்ன் கிணற்றில் விழுப் போகிற் ஒட்டகை அதன் வாலைப் பிடித்து இழுப்பவனை போலிருகிறான்.

 مَنْ يَشْفَعْ شَفَاعَةً حَسَنَةً يَكُنْ لَهُ نَصِيبٌ مِنْهَا وَمَنْ يَشْفَعْ شَفَاعَةً سَيِّئَةً يَكُنْ لَهُ كِفْلٌ مِنْهَا وَكَانَ اللَّهُ عَلَى كُلِّ شَيْءٍ مُقِيتًا

முஸ்லிம்கள் அனைவரும் சகோதர்ர்கள் என்ற கருத்தைஇஸ்லாம் வலியுறுத்தியுள்ளது என்றாலும்நீதி சாட்சியம் ஆகியவிசயங்களில் மதமாச்சரியத்திற்கு இடமளிக்காத சமயம்இஸ்லாம்.  இஸ்லாமிய வரலாற்றில் இதற்கு ஏராளமானசான்றுகள் உண்டு.

முஸ்லிம்களின் ஓட்டு

இந்திய அரசிய்லில் முஸ்லிம்கள் இஸ்லாமின் வழி காட்டுதலின் காரணத்தினால் தங்களது மத்த்தைச் சேர்ந்தவன் என்பதற்காக ய்ர்ருக்கும் ஓட்டுப்போட்ட்து இல்லை.

நாட்டின் மீது கொண்ட பற்றினால், நாட்டிற்கு நல்லது செய்வார்கள் எனறு சில அரசியல் கட்சிகள் மீது கொண்ட அபிமானத்தினால் அத்தகைய அரசியல் கட்சிகளுக்கு அவர்கள் கண்ணை மூடிக் கொண்டு வாக்களித்தார்கள்

(தமிழ் நாட்டில்  திமுக இந்தியாவில் காங்கிரஸ்)

 உங்களுக்கு ஓட்டுப் போடுவதற்காக என்ன தருவீர்கள் என்று அவர்கள் அரசியல் வாதிகளிடம் டிமாண்ட வைக்கவே இல்லை. இந்தியாவின் சமயச் சார்பின்மைக்கு நம்பிக்கையளிக்கிற கட்சிக்கு அவர்கள் மொத்தமொத்தமாக வாக்களித்தார்கள்.

சமயச் சார்பின்மை என்ற ஒரு கோஷத்தை மட்டுமே வைத்துக்கொண்டு அந்தக் கட்சிகள் முஸ்லிம்களின் ஒட்டுக்களைஇலகுவாக பறித்துக் கொண்டன.  ஆரம்பத்தில் அவர்களதுகட்சியில் இருந்த முஸ்லிம்களுக்கு ஆட்சியிலும் நிர்வாகத்திலும்ஓரளவுக்கு வாய்ப்பளித்தார்கள்காலப் போக்கில் அதுவும்குறைந்து போனது.

இப்போது சிறுபான்மை முஸ்லிம் அரசியல் என்பது கேலிக்குரிய விளையாட்டு பொம்மையாக ஆகிவிட்ட்து. எலும்புத்துண்டுகளை தூக்கி வீடுவது போல வீசி முஸ்லிம்களின் மொத்த ஓட்ட்டுக்களை எதிர்பார்க்கிறார்கள்.

தமிழக மக்கள் தொகையில் ஏழு சதவீத்திற்கும் அதிகமாக் இருக்கிற முஸ்லிம்களுக்கு அரசியல் அதிகபட்சமாக ஒதுக்கும் தொகுதிகள் 2 அல்லது 3 மட்டுமே!

ஒரு காலத்தில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மீது அதிக நம்பிக்கை வைத்திருந்த முஸ்லிம் அரசியல் தலைவர்கள் பேருக்கு 2 சீட்டு மட்டுமே பெற்றுக் கொண்டு சமுதயாத்தின் ஆதரவை அவர்களுக்கு பெற்றுத்தந்தார்கள்.

காலம் கடந்து செல்ல.. கடந்து செல்ல.. ஒரு அரசியல் சக்தியாக தாங்கள இல்லாமல் போனதை முஸ்லிம்கள் தாமதமாக உணர்ந்திருக்கிறார்கள். சமுதாய ரீதியாக மிகவும் பிறபடுத்தப் பட்ட  புறக்கணிக்கப் பட்ட சமுதாயமாக தாங்கள் இருப்பதை அறிந்தார்கள்.

 

அரசுத்துறைகளில் மட்டுமல்ல அரசியல் கட்சிகளின் பதவிகளில் கூட அவர்கள் முஸ்லிம் என்ற காரணத்திற்காக புறக்கணிக்கப் பட்டார்கள். உடல் தேய விசுவாசத்தோடு உழைத்தும் அவர்களுக்குரிய மரியாதை கிடைக்கவில்லை.

நேற்று உருவான ஜாதிய அமைப்புக்கள் கூட்ட்த்தை காட்டி தங்களது ஓட்டு வங்கியை காட்டி 7  10 என தொகுதிகளை பெற்றிருக்கின்றன. நாம் அதிகப் பட்சமாக 3 தொகுதிகளோடு சமாதானம் செய்த்டு கொள்ள வேண்டிய நிர்பந்த்த்திற்கு தள்ளப் பட்டிருக்கிறோம். அரசிய்ல் தலைமைகள் இன்னமும் நமக்குரிய இட்த்தை தர மறுக்கின்றன.

முஸ்லிம்கள் வெற்றி பெறுவதற்கு வாய்புள்ள தொகுதிகளில் கூட அவர்களது கட்சியை சேர்ந்த முஸ்லிம் வேட்பாளரை நிறுத்தாமல் மாற்று வேட்பாளரை நிறுத்தியிருக்கிறார்கள் .

ஆக்வே இந்த தேர்தலில் முஸ்லிம்கள் தங்களது சமுதாயத்தின் பலம் என்ன எனப்தை காட்ட வேண்டிய நிர்பந்த்த்திற்கு ஆளாகியிருக்கிறார்கள்.  

அதனால் முஸ்லிம் வேட்பாளர்களுக்கே முஸ்லிம்கள் ஓட்டளிக்க வேண்டும்.

சட்ட மனறத்தில் முஸ்லிம் எம் எல் க்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்க வேண்டும். அவர் எந்தக் கட்சியை சார்ந்தவராக இருந்தாலும் சரி என்ற எண்ணம் முஸ்லிம்களிடம் உருவாகியுள்ளது.  அதற்கேற்ப முஸ்லிம்கள் வாக்களிக்க வேண்டும்.

முஸ்லிக்ள் வெற்றி பெற வாய்ப்புள்ள தொகுதிகளில் முஸ்லிம் வேட்பாளரை அறிவிக்காத கட்சியை கண்டிக்கும் வகையில் முஸ்லிம் வேட்பாளர்கள் ஏரேனும் நின்றால் அவருக்கு ஓட்டுப் போட வேண்டும்.

கொலை கொள்ளை மோசடி ஆட்கடத்தல் போன்ற குற்ற வழக்கில்ஈடுபட்ட கிரிமினல்களை

முஸ்லிம் புறக்கணிக்க வேண்டும். அவர் முஸ்லிம் வேட்பாளராக இருந்தாலும் சரி.

மந்தை தனமாக இல்லாமல் சிந்தித்து வாக்களித்தால்,யாருக்கு வாக்களித்தாலும் அது நல்ல வாக்கு தான்.முஸ்லிம் வாக்களர் சிந்தித்து வாக்களித்தால் அவரது வாக்கு நாட்டுக்கு நன்மையாய் அமையும். அவருக்கும் நன்மையை தேடித்தரும். மீண்டும் அல்லாஹவிடம் கேட்போம்.

ஜனநாயக தேர்தல் முறை!

தமிழகத்தில் மே 16 அன்று சட்டசபைக்கான தேர்தல் நடைபெற இருக்கிறது. பெரும் பான்மை மக்கள் யாரை ஆட்சியாளர்களாகத் தேர்ந்தெடுக்கி றார்களோ அவர்களை ஆட்சிக் கட்டிலில் அமர்த்தி அழகு பார்ப்பதே ஜன நாயகம். இது மனிதக் கற்பனையில் உதித்த ஒரு வழிகேடே அல்லாமல் நேர் வழி இல்லை. பெரும்பான்மை மக்கள் சத்தியத்தை நேர்வழியை ஒருபோதும் ஏற்க மாட்டார்கள். கோணல்வழிகளை, வழிகேடுகளைத்தான் நேர் வழியாகத் தேர்ந்தெடுப்பார்கள் என்று குர்ஆன் 6:116 முதல் எண்ணற்ற வசனங்களில் நேரடியாக அல்லாஹ் கூறியுள்ளான். ஆம்! அயோக்கியர்களும், கொலைகாரர்களும், அராஜகப் பேர் வழிகளும், மக் கள் சொததை அநியாயமாகவும், அட்டூழியங்கள் மூலமும், லஞ்ச லாவண்யங்கள் மூலமும் அபகரிக்கும், பாவம், புண்ணியம் பற்றி சிறிதும் கவலைப் படாத மனித நேயம், மனிதா பிமானமற்ற இரண்டு கால் மிருகங்களே ஆட்சியாளர்களாக இந்த ஜன நாயக முறைப்படித் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

1.கணவனைக் கவரும் வழிகள் 40

பத்ருப் போர் உணர்த்தும் பாடமும் படிப்பினைகளும்!

மண்ணறை வேதனை 001