இடுகைகள்

2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மகிழ்ச்சிகரமான வாழ்வு

  ஷைய்க் . M. பஷீர் ஃபிர்தவ்ஸி   நமது வாழ்க்கை மகிழ்ச்சிகரமாகவும் சந்தோசமாகவும் இருக்க வேண்டுமென்று உலகில் உள்ள அனைவரும் அசைப்படுகிறோம் . அதற்கான வழிகளைத் தேடுகிறோம் பணம் படைத்தவர்கள் அதற்காக என்ன விலை வேண்டுமானாலும் கொடுக்கத் தயாராக இருக்கிறார்கள் , அதிகாரம் படைத்தவர்கள் அதற்காக தங்களது பதவி , பட்டங்களை அனைத்தையும் செலவழிக்கவும் தயாராக உள்ளார்கள் .   ஆனாலும் பெரும்பாலானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியில்லை என்பதை அறியமுடிகிறது இதற்கு காரணம் மகிழ்ச்சியைக்குறித்த அவர்களின் கண்ணோட்டம் தான் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் .   சிலர் பணத்தால் மகிழ்ச்சியைப்பெறலாம் என்று எண்ணுகிறார்கள் . அந்த பணத்தைத்தேடி இருக்கும் சந்தோசத்தைக்கூட தொலைத்துவிடுகிறார்கள் . வேறு சிலர் அதிகாரத்தால் செல்வாக்கால் மகிழ்ச்சியைப்பெறலாம் என்று எண்ணுகிறார்கள் . அதற்காக காலத்தையும் பொருளாதாரத்தையும் பெருமளவு செலவழித்து வாழ்க்கையைத்தொலைத்து விடுகிறார்கள் .   இன்னும் சிலர் ஆரோக்கியம் தான் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு முக்கியம் என்று