இடுகைகள்

ஏப்ரல், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நோன்பின் சிறப்புகள்

  1-  நோன்பு   எனக்குரியது : நபி  ( ஸல் )  அவர்கள்   கூறினார்கள் :   ‘ நோன்பு   எனக்குரியது .  நானே   அதற்குப்   பிரதிபலன்   வழங்குவேன் .  நோன்பாளி   தன்   இச்சைகளையும்   தன்   உணவையும்   பானத்தையும்   எனக்காகவே   விட்டுவிடுகின்றார் ’   என்று   அல்லாஹ்   கூறுகின்றான் . ( அறிவிப்பவர் :  அபூ   ஹுரைரா  ( ரலி )  அவர்கள் ,  புஹாரி  7492).   அல்லாஹ்வின்   தூதர்  ( ஸல் )  அவர்கள்   கூறினார்கள் : ஆதமின்   மகனுடைய  ( மனிதனுடைய )  ஒவ்வொரு   நற்செயலுக்கும்   ஒன்றுக்குப்   பத்து   முதல்   எழுநூறு   மடங்குகள்வரை   நன்மைகள்   வழங்கப்படுகின்றன ;  அல்லாஹ்   கூறுகின்றான் :  நோன்பைத்   தவிர .  ஏனெனில் ,  நோன்பு   எனக்கு   உரியதாகும் .  அதற்கு   நானே   நற்பலன்   வழங்குகிறேன் .  அவன்   எனக்காகவே   தனது   உணர்வையும்   உணவையும்   கைவிடுகிறான்  ( என   அல்லாஹ்   கூறுகின்றான் ). ( அறிவிப்பவர் :  அபூ   ஹுரைரா  ( ரலி )  அவர்கள் ,  முஸ்லிம்  2119).   2-  நோன்பு   ஒரு   கேடயம் :   நபி  ( ஸல் )  அவர்கள்   கூறினார்கள் : " நோன்பு  ( பாவங்களிலிருந்து   காக்கும் )  கேடயமாகும் ." ( அறிவிப்பவர் :  அபூ   ஹுரைரா