இடுகைகள்

ஜூலை, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாளுடன் தொடர்பு பட்ட சில சட்டங்கள்

  1- இரு பெருநாட்கள்: நபியவர்கள் மதீனாவுக்கு வருகை தந்த நேரத்தில் மதீனா வாசிகள் இரு நாட்களில் விளையாடி மகிழ்வதைப் பார்த்து அல்லாஹ் இதை விட சிறந்த இரு நாட்களை உங்களுக்குப் பகரமாக ஆக்கியிருக்கின்றான் அவைதான் நோன்புப் பெருநாளும் ஹஜ்ஜுப் பெருநாளும். " எனக் கூறினார்கள் (அறிவிப்பவர்: அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள், நஸாயி 1556). 2- பெருநாளுடைய நாட்களில் தக்பீர் கூறுதல்:  وَاذْكُرُوا اللّٰهَ فِىْٓ اَيَّامٍ مَّعْدُوْدٰتٍ‌ؕ "குறிப்பிடப்பட்ட நாட்களில் அல்லாஹ்வை திக்ரு செய்யுங்கள்"  (அல்குர்ஆன் 2: 203) இந்த வசனத்திற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் விளக்கமளிக்கும் போது துல் ஹஜ் பிறை 10,11,12,13 ஆகிய நாட்களையை இது குறிக்கும். كَذٰلِكَ سَخَّرَهَا لَـكُمْ لِتُكَبِّرُوا اللّٰهَ عَلٰى مَا هَدٰٮكُمْ‌ؕ وَبَشِّرِ الْمُحْسِنِيْنَ‏ "அல்லாஹ் உங்களுக்கு நேர்வழி காண்பித்ததற்காக அவனை நீங்கள் பெருமைப் படுத்தும் பொருட்டு - இவ்வாறாக அவற்றை உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்திருக்கிறான்; ஆகவே நன்மை செய்வோருக்கு நீர் நன்மாராயங் கூறுவீராக!" (அல்குர்ஆன் 22: 37). உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் கூறிய

இப்றாஹீம் (அலை) அவர்களின் தியாகத்தை நினைவு கூறும் சில முத்துக்கள்

 இப்றாஹீம் (அலை) அவர்களின் தியாகத்தை நினைவு கூறும் இந்த ஈகைத் திருநாளில் அவர்களது வாழ்விலிருந்து சில முன்மாதிரி முத்துக்களை அறிந்து கொள்வோம்: 1- அவர்கள் தனது வாழ்வில் சகல காரியங்களிலும் இறைவனையே சார்ந்திருந்தார்: “எங்கள் இறைவா! உன்னையே முற்றிலும் சார்ந்திருக்கிறோம்; (எதற்கும்) நாங்கள் உன்னையே நோக்குகிறோம்; மேலும், உன்னிடமே எங்கள் மீளுதலும் இருக்கிறது,” (அல்குர்ஆன் 60: 4). 2- வாக்குறுதியை நிறைவேற்றுபவராக இருந்தார்: "(அல்லாஹ்வின் ஆணையைப் பூரணமாக) நிறைவேற்றிய இப்ராஹீமுடைய (ஆகமங்களிலிருந்து அவனுக்கு அறிவிக்கப்படவில்லையா?)"  (அல்குர்ஆன்53: 37). 3- ஒரு சமுதாயம் என அவர் போற்றபடுவதற்கு அவரிடம் காணப்பட்ட உயரிய பண்புகள் என்ன?: 1- அல்லாஹ்வுக்கு அடி பணிந்து செயல் பட்டார். 2- அசத்தியலிருந்து முற்றிலும் விலகி நேரான வழியில் பயணித்தார். 3- இனை வைப்பிலிருந்து முற்றிலுமாக விலகி ஓரிறைக் கொள்கையில் பயணித்தார். 4- அல்லாஹ்வின் அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துபவராக இருந்தார். (படியுங்கள் அத்தியாயம் அந்நஹ்ல் 16: 120,121). 4- அன்னாரிடம் காணப்பட்ட மூன்று உயரிய நற்குணங்கள்: "நிச்சயமாக இப்ராஹீம் சகி

வாருங்கள் கொண்டாடுவோம் ஈதுல் அல்ஹா எனும் #தியாகப் #பெருநாளை

 🌸அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..🌼 👍 ❕ ❕ ➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖ 🔻இஸ்லாமிய மார்க்கத்தில் இரு ✌முக்கிய பண்டிகைகளில் 👉"ஈதுல் அள்ஹா"👈 (தியாகப் பெருநாள்) , இறுதித்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு முன்னர் வாழ்ந்த 👉"ஆப்ரஹாம்"👈என்று அழைக்கப்படும் இப்ராஹிம் (அலை) எனும் இறைத்தூதரின் தியாக வாழ்க்கை வரலாற்றை முன் மாதிரியாக கொண்டு கொண்டாடப்படுகிறது.. 🔻எண்ணற்ற படைப்புகளை🐄🔥🌊🌔 #கடவுள்களாக வணங்கி அநியாயத்திலும் 🚫, அக்கிரமத்திலும் ஈடுபட்டு அமைதி 😣இழந்த மக்களை "#ஒன்றே👆#குலம் , #ஒருவனே ☝#இறைவன்"👈எனும் உயரிய கொள்கையின் பக்கம் இப்ராஹிம் நபி (அலை) 🗣அழைத்தார். 🔺மேலும் எண்ணிலடங்கா♒ அருட்கொடைகளை👁👅👂🌎🌤⛈🌊 வழங்கிய இறைவனுக்கு முற்றிலும் 🚶🏻கட்டுப்பட்டு வாழ்வதன் மூலமே 👉நிலையற்ற 🌎இவ்வுலகிலும்👈 , இறப்பிற்கு 🛌பின் உள்ள 👉நிலையான 🌁சுவனத்திலும்👈அமைதியும் , வெற்றியும் கிடைக்கும் என தெளிவாக எடுத்து🗣கூறினார்.அதில் உறுதியாக நம்பிக்கை💪🏻 கொண்டார். ♨இப்ராஹிம் நபி (அலை) அவர்களின் இறை நம்பிக்கையை பலவழிகளில் , பல நேரங்களில் படைத்த இறைவனான அல்லாஹ்☝ 👉🙇🏻சோதித்தான்.👈 இறைகட்டளைய