இடுகைகள்

மார்ச், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நோன்பு ஏன்?

  ரமளான் மாதத்தில் நோன்பு ஏன் கடமையாக்கப்பட்டது ? ரமளான் மாதத்தில் நம்முடைய வாழ்க்கையை எவ்வாறு சீர்திருத்தம் செய்து கொள்ள வேண்டும் ? இறையச்சத்தை வளர்த்துக் கொள்வது எப்படி ? திருக்குர்ஆனோடு தொடர்பை அதிகரித்துக் கொள்வது எப்படி ? ரமளான் மாதம் முழுக்க முழுக்க நன்மையின்பால் நம்மைத் திருப்பிக் கொள்வது எப்படி ? இந்த வினாக்களுக்கான விடை தேடும் மாதமாக இந்த ரமளானை நாம் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் . நம்மால் இயன்ற அளவுக்கு நன்மையான காரியங்களில் ஈடுபட முயல வேண்டும் . ‘ இறைநம்பிக்கையாளர்களே !  உங்களுக்கு முன் இருந்த ( நபிமார்களைப் பின்பற்றிய ) வர்கள் மீது கடமையாக்கப்பட்டது போல் , உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டிருக்கிறது . ( அதன் மூலம் ) நீங்கள் இறையச்சமுள்ளவர்களாய்த் திகழக்கூடும் '. ( திருக்குர்ஆன் 2:183)   நோன்பு நோற்பது கட்டாயக் கடமை புனித ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பது சக்தி பெற்ற அனைத்து முஸ்லிம்கள் மீதும் கட்டாயக் கடமையாகும் . இதைத் திருக்குர்ஆன் தெளிவாகப் பிரகடனம் செய்கிறது . நம்பிக்கை கொண்டோரே ! ந