இடுகைகள்

அக்டோபர், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

குர்ஆனை மனனம் செய்பவரின் சிறப்பு

  மாண்புமிகு குர்ஆனை மனனம் செய்வோம்   அல் - குர்ஆனை மனனம் செய்த முதல் மனிதர் யார் ? முஹம்மது நபி ( ஸல் ) அவர்கள் குர்ஆனை நோக்கி மக்கள் படையெடுப்பதற்கு அதன் கருத்தும் , கொள்கையும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருந்தாலும் , பலரும் வியக்கும் ஒரு முக்கிய அம்சம் , ஒலி அலைகளால் பரவி உள்ளங்களைக் கொள்ளை கொள்கின்ற குர்ஆனின் ஓசை நயம் தான் . இசைக்கு இல்லாத குர்ஆனின் ஈர்ப்பு விசை தான் . இந்த ஒலி நயத்தைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் ( ஸல் ) அவர்கள் அற்புதமாகக் குறிப்பிடுகின்றார்கள் . நபி ( ஸல் ) அவர்கள் ( நான் இனிய குரலில் குர்ஆன் ஓதுவதைப் பாராட்டி ) “ அபூ மூசா ! ( இறைத்தூதர் ) தாவூத் ( அலை ) அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த ( சங்கீதம் போன்ற ) இனிய குரல் உங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது ” என என்னிடம் கூறினார்கள் . அறி : அபூமூசா ( ரலி ), நூல் : புகாரி 5048 இசையுடன் கூடிய பாடல்களும் ஒரு சில மணி நேரங்களைத் தாண்டி சில காலங்கள் நீடிக்கின்றன . பின்னால் மறைந்து விடுகின்றன . ஆனால் இந்தத் திருக்குர்ஆன் , இசையை எதிர்த்து , எட்டி