இடுகைகள்

ஜூன், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இஸ்லாத்தின் நிழலில் இளைஞர்கள்

      اَللهُ الَّذِي خَلَقَكُمْ مِنْ ضُعْفٍ ثُمَّ جَعَلَ مِنْ بَعْدِ ضُعْفٍ قُوَّةً ثُمَّ جَعَلَ مِنْ بَعْدِ قُوَّةٍ ضُعْفًا وَشَيْبَةً يَخْلُقُ مَا يَشَاءُ وَهُوَ الْعَلِيمُ الْقَدِيرُ [الروم: 54]   இஸ்லாம் இளைஞர்களுக்கு மிக முக்கியமான இடத்தை வழங்கியுள்ளது ;  இஸ்லாமிய சமூகத்தின் மிக மகத்தான சொத்தாக மதிக்கிறது . உலகில் சத்தியம் நிலைக்கவும் ,  அசத்தியம் அழியவும் ,  அர்ப்பணிப்புடன் அயராது உழைத்தவர்கள் இஸ்லாமிய இளைஞர்களே ! நபி ( ஸல் ) அவர்கள்தமதுஏகத்துவப்பிரசாரத்தை ,  ஜாஹிலிய்யத்துக்கு எதிராக மக்காவில் ஆரம்பித்த போது ,  முதலில் விளங்கி ,  அதிகளவு விரும்பி ஏற்று ,  செயற்பட்டு அதனைப் பிரசாரப்படுத்த துணை நின்றவர்களும் இளைஞர்களே !   நபி ( ஸல் ) அவர்களுக்கு முன்னர் உலகில் அல்லாஹ்வினால் தேர்ந்தெடுக்கப்பட்டு அனுப்பப்பட்ட தூதர்களின் ஆத்மீக ,  பிரசார வரலாற்றிலும் இளைஞர்களின் பணி மகத்தானது ஆனால் இன்றைய சமூக சூழலில் இளைஞர்களின் ஆற்றலும் திறமையும் இஸ்லாத்தின் வளர்ச்சிக்கும் முஸ்லிம் சமூகத்தின் உயர்வுக்கும் பயன்படுவதில்லை என்பதையும்