இடுகைகள்

ஏப்ரல், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தவ்பா (பாவமன்னிப்பு) ஏன் ? எப்படி?

  தவ்பா என்றால் இறைவன் பக்கம் மீள்வது என்பது பொருள் ஆகும்! மனிதன் பலகீனமானவனாக படைக்கப்பட்டு உள்ளான் அதனால் சில நேரங்களில் அவன் தெரிந்து அல்லது தெரியாமல் பாவம் செய்து விடுவான்! அதனால் தான் அல்லாஹ் தன் அடியார்களின் பாவங்களை எப்பொழுதும், எச்சந்தர்ப்பத்திலும் மன்னிப்பதற்காக எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றான்! நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், பகலில் பாவம் புரிந்தவர்கள் பாவமன்னிப்புக் கோருவதற்காக இரவில் தனது கையை நீட்டுகிறான்! இரவில் பாவம் புரிந்தவர்கள் பாவமன்னிப்புக் கோருவதற்காக பகலில் கையை நீட்டுகிறான்! சூரியன் மேற்கிலிருந்து உதிக்கும் (கியாமத் நாள்) வரை ஒவ்வொரு நாளும் இவ்வாறு செய்து கொண்டிருக்கிறான்!(நூல் : முஸ்லிம் : 5324) கியாமத் நாள் வரை அல்லாஹ் நம்முடைய சிறிய பெரிய பாவங்களை மன்னிக்க தயராக உள்ளான் நம்மில் எத்தனை பேர் தவ்பா செய்ய தயாராக உள்ளோம்? ஏதேனும் ஒரு பாவம் செய்து விட்டால் உள்ளத்தில் அல்லாஹ்வை பற்றி பயம் ஏற்படுவது பாவம் செய்து விட்டோம் அதற்கு தவ்பா செய்யவேண்டும் என்ற எண்ணம் உள்ளத்தில் ஏற்படுவது அல்லாஹ் நம்மை மன்னிக்க தயாராக உள்ளான் அல

இறுதிப்பத்தில் இறைத்தூதர் (ஸல்)

  நாம் ரமலானின் கடைசிப் பத்து நாட்களில் உள்ளோம் . இந்த கடைசி பத்து நாட்கள் கிடைத்தற்கரியாத பத்து நாட்களாகும் . அந்த கடைசி பத்து நாட்களை வீணாக்கிடாமல் பயனுள்ளதாக்கிட வழிகள்   அ ல்லாஹ்வின்   ﷻ   பேரருளால்    [ رمضان  ]      ர மளான் மாதத்தின்   நா ன்காம்   வார ஜுமுஆவில்  , இறைவனுக்கும் பிடித்தமான நோன்பை நோற்ற நோன்பாளியாகவும் , இறைவனுக்கும் பிடித்த இல்லமான இறையில்லத்திலும் அமர்ந்திருக்கிறோம் ,  அ ல்ஹம்துலில்லாஹ் .  இன்றோடு சேர்த்து   22   நாட்கள் அல்லாஹ்வுக்காக நோன்பிருந்திருக்கிறோம் .   நாம் இதுவரைக்கும் வைத்த அனைத்து நோன்புகளையும் , அமல்களையும் , அல்லாஹ்   ﷻ   அங்கிகரிப்பானாக ! ஆமீன் .  இன்னும்    மீதமுள்ள எல்லா நோன்புகளையும் , இதர வணக்க , வழிபாடுகளையும் , எவ்வித தடங்கல் இன்றி பரிபூரணமாக நிறைவேற்றுகிற நற்பேற்றினை நம் அனைவருக்கும் நல்குவானாக ! ஆமீன் !!. அல்லாஹ்விடத்தில் அதிகமாக    اللْهُمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي   என்ற பிரார்தனையை அதிகமாக செய்வோமாக !  இன்னும்   மூன்றில் ஒரு பங்கு உள்ள நா