வெள்ளி, ஜனவரி 27, 2012

குழந்தை வளர்ப்பு சில ஆலோசனைகள்


- எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி)

குழந்தைகளை நல்வழிப்படுத்தி இஸ்லாமிய நிழலில் வளர்த்தெடுப்பது என்பது இந்த நவீன யுகத்தில் பாரிய பொறுப்பு வாய்ந்த பணியாகவே திகழ்கின்றது.குழந்தைகளிடம் ஆதிக்கம் செலுத்தும் வெளி சக்திகளின் ஊடுருவலிலிருந்து அவர்களை மீட்டெடுப்பதும் ரொம்ப சிரமமான பணியாகவே திகழ்கின்றது. இந்த ஆக்கத்தில் குழந்தைகளை நெறிப்படுத்துவதற்கான சில வழிமுறைகள் சுருக்கமாகத் தொகுத்து வழங்கப்படுகின்றது.
 • இஸ்லாத்தின் அடிப்படையான ‘லா இலாஹா இல்லல்லாஹ் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்’ என்ற கலிமாவை உங்கள் குழந்தைகளின் உள்ளங்களில் ஆழமாகப் பதிக்க முயற்சியுங்கள். ஆராட்டும் போதும் தாலாட்டும் போதும் கலிமாவை உரக்க மொழிந்து, அது அவர்களது ஆழ்மனதில் பதிய வைக்க முயலுங்கள். அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன்; அவன் உன்னைப் பார்த்துக் கொண்டிருக்கின்றான்; நீ பேசுவதைக் கேட்டுக் கொண்டிருக்கின்றான் என்பதை உணர்த்துங்கள்.
 • அல்லாஹ்தான் படைத்தவன்; பாதுகாப்பவன்; உணவளிப்பவன்; நிவாரணமளிப்பவன். அனைத்து நிலைகளிலும் நாம் அவனிடமே மீளவேண்டும் என்ற என்ற எண்ணத்தை உங்கள் குழந்தையின் இதயத்தில் வரைந்து விடுங்கள்.
 • ஷிர்க்-குப்ர் குறித்து எச்சரிக்கை செய்யுங்கள். அல்லாஹ் தன்னை வணங்குவதற்காக மட்டுமே உன்னைப் படைத்துள்ளான். எச்சந்தர்ப்பத்திலும் அவனுக்கு இணை வைத்து விடக் கூடாது என்று அவனுக்கு எச்சரிக்கை செய்து வையுங்கள்.
 • ஈமானின் 6 அடிப்படைகளையும், இஸ்லாத்தின் 5 முக்கிய கடமைகளையும் பிள்ளைகளுக்குக் கற்றுக் கொடுங்கள்.
 • நபி(r) அவர்கள் மீது நேசத்தை ஊட்டுங்கள். நறுமணம் கமழும் அவரது வாழ்க்கை வரலாற்றையும், அழகிய பண்பாட்டையும் பற்றிக்குழந்தைகளுக்கு எடுத்துக் கூறுங்கள்.
 • தூய இஸ்லாமிய அகீதாவையும், அதன் ஒழுக்க விழுமியங்களையும்குழந்தைகளின் உள்ளத்தில் விதைத்து விடுங்கள்.
 • இஸ்லாத்தின் ஹலால்-ஹராம் சட்டங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக அவர்களுக்குக் கற்றுக் கொடுங்கள்.
 • பள்ளிக்குச் செல்வது, பள்ளியில் கண்ணியம், தொழுகையை உரிய நேரத்தில் நிறைவேற்றுவது போன்ற விடயங்களில் ஆர்வத்தை ஊட்டுங்கள்.
 • உங்கள் குழந்தைகள் நல்ல நண்பர்களைத் தேர்ந்தெடுக்க நீங்கள் உதவுங்கள். தீய நண்பர்களை விட்டும் அவர்களை விலக்கி வையுங்கள்.
 • அல்குர்ஆனை ஓதுவது, மனனமிடுவது, அறிந்து கொள்வது போன்ற விடயங்களில் ஆர்வமூட்டுங்கள்.
 • தூய நபிவழிகளைக் கற்றுக் கொடுங்கள். உண்ணல், உறங்கள், விழித்தல், மல-சல கூடங்களுக்குச் செல்லுதல் போன்ற ஒழுங்குகளைக் கற்றுக் கொடுப்பதுடன் அவ்வேளைகளில் ஓத வேண்டிய ஒளறாதுகளையும் கற்றுக் கொடுங்கள்.
 • உங்கள் குழந்தைகளுக்கு மத்தியில் நீதமாக நடங்கள். அவர்களுக்கிடையில் பாரபட்சம் காட்டாது அனைவரையும் சமமாக நடத்துங்கள்.
 • உங்கள் குழந்தைகள் உங்களை அப்படியே பின்பற்ற முயற்சிப்பர். எனவே, நீங்கள் நல்ல முன்மாதிரியாக நடந்து அவர்களை வழிநடத்துங்கள்.
 • அவர்கள் உடல் ஆரோக்கியம் மிக்க விளையாட்டுக்களில் ஈடுபட வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுங்கள்.
 • உண்மை, நேர்மை, துணிவு, விட்டுக் கொடுத்தல், மன்னித்தல், அன்பு காட்டல் போன்ற நல்ல பண்புகள் மீது அவர்களுக்கு ஆர்வத்தை ஊட்டுங்கள்.
 • பொய், ஏமாற்று, திருட்டு, அநீதமிழைத்தல், பெருமை, பொறாமை, சூழ்ச்சி செய்தல் போன்ற கெட்ட குணங்களை விட்டும் அவர்களை எச்சரித்து வையுங்கள்.
 • சின்ன வயதிலிருந்தே சுத்தம்-சுகாதாரத்திற்கு அவர்களைப் பழக்குங்கள், ஒழுச்செய்யும் விதத்தைக் கற்றுக் கொடுங்கள். உடல்-உடை சுத்தம் குறித்து விழிப்புணர்வூட்டுவதுடன், உணவு உண்ண முன்னரும்-பின்னரும் கரங்களைக் கழுவிக் கொள்ளப் பழக்குங்கள்.
 • குழந்தைகளின் வெட்க உணர்வைக் குன்றச் செய்யாதீர்கள். முறையான ஆடைக்கு அவர்களைப் பழக்குங்கள். ஆண் பிள்ளைகளுக்குப் பெண் பிள்ளைகள் போன்றோ, பெண் பிள்ளைக்கு ஆண் பிள்ளை போன்றோ ஆடை அணிவிக்காதீர்கள்.
 • காஃபிர்களுக்கு ஒப்பாக நடக்கக்கூடாது என்பதையும், எமக்கெனத் தனித்துவமான கலாச்சாரம் இருக்கின்றது என்பதையும் அவர்களுக்கு உணர்த்துங்கள். காஃபிர்களது பெருநாட்கள்-திருநாட்கள் கொண்டாட்டங்களுக்கு அவர்களை அனுப்பவோ, அவற்றில் கலந்துகொள்ளச் செய்யவோ வேண்டாம்!
 • ஹராமான விளையாட்டுக்களை விட்டும் அவர்களை விலகியிருக்கச் செய்யுங்கள்.
 • குழந்தைகளின் ஆரோக்கியமான பொழுது போக்குகளுக்கு இடமளியுங்கள். நல்ல நூற்களை அவர்களுக்கு அறிமுகம் செய்யுங்கள்.
 • விருந்தினர்களையும், அயலவர்களையும் கண்ணியப் படுத்தக் கற்றுக் கொடுங்கள். அயலவர்களுக்குத் தொல்லை கொடுப்பது கூடாது என்பதை உணர்த்துங்கள். பெற்றோர், உறவினர், அயலவர், பொதுவான அனைத்து மனிதர்களினதும் உரிமைகள் குறித்து உணர்த்துங்கள்.
 • பாதை ஒழுங்குகளைக் கற்றுக்கொடுங்கள். பாதையில் செல்லும் போது அமைதியாகவும், நிதானமாகவும் நடந்துகொள்ளப் பழக்குங்கள்.
 • மொழிகள் மாறுபட்டாலும், இடங்கள் வேறுபட்டாலும் முஃமின்கள் அனைவரையும் நேசிப்பது கடமை என்ற உணர்வை ஊட்டுங்கள்.
 • ஸலாம் கூறவும் முஸாபஹா செய்யவும் பழக்குங்கள். ஸலாத்தின் ஒழுங்குகளைப் போதியுங்கள். பழழன அழசniபெ போன்ற அந்நிய கலாச்சாரத்தை விட இஸ்லாமிய விழுமியத்தின் சிறப்பை உணர்த்துங்கள்.
 • அவர்களின் விளையாட்டு, ஓய்வு நேரம், மகிழ்ச்சிகரமான நேரங்களில் நீங்களும் அவர்களுடன் பங்கெடுங்கள். அவர்கள் பூரண பாதுகாப்புடனும், அன்பான அரவணைப்புடனும் வாழ்கின்றனர் என்பதை அவர்கள் உணரும் வண்ணம் நடந்துகொள்ளுங்கள்.
 • அவர்களுக்குத் தன்னம்பிக்கையை ஊட்டுங்கள்; அச்சமூட்டிச் சொந்தக் காலில் இயங்க முடியாத நிலையை உண்டாக்கி விடாதீர்கள்.
 • பிள்ளைகளுக்கு வழிகாட்ட அன்பான-மென்மையான வழி இருக்கும் போது, கடும் போக்கைக் கடைபிடிக்காதீர்கள்.
 • உங்கள் குழந்தையாக இருந்தாலும் அவர்களை கண்ணியப்படுத்துங்கள். அடுத்தவர் முன்னிலையில் தண்டிக்காதீர்கள். தனிமையில் புத்தி கூறுங்கள்! இல்லையென்றால், அவர்கள் தன்மான முள்ளவர்களாக மிளிர மாட்டார்கள்.
 • அடிக்கடி அவர்களுக்கு அடிக்காதீர்கள். அதனால் அடி மீதுள்ள அச்சம் அவர்களுக்கு அற்றுப் போய் விடும்; அவர்களிடம் முரட்டுத்தனம் உருவாகி விடும். அதன் பின,; அவர்களை வழிநடத்த மாற்று வழி இல்லாது போய் விடும்.
 • குழந்தைகளின் தவறுகளுக்காகக் கடுமையான தண்டனை வழங்கவும் கூடாது; கண்டுகொள்ளாது இருந்து விடவும் கூடாது. இரண்டுக்கும் இடைப்பட்ட நடுநிலை பேணப்படவேண்டும் என்பதில் கவனம் செலுத்துங்கள்.
 • தவறுக்குத் தண்டனை என்றதும் பிரம்பை மட்டும் பார்க்காதீர்கள்! தண்டனைகள் பல ரகமானது! வார்த்தை மூலம் தண்டிக்கலாம்; தவறு செய்தவருடன் பேசாமல் மௌனத்தின் மூலம் கூடத் தண்டிக்கலாம்; கொடுக்க வேண்டிய ஒன்றைக் கொடுக்காமல் தடுக்கலாம். இவ்வாறு பல ரகம் உள்ளன. குழந்தையின் குற்றம், அதன் வயது, தவறு நடந்த சூழல் என்பனவற்றைக் கவனத்திற் கொண்டு பொருத்தமான தண்டனை வழங்குவதூடாக அவர்கள் மீண்டும்-மீண்டும் தவறு செய்யும் நிலையைத் தவிர்க்கலாம்.
 • பிள்ளைகளின் அறிவை கண்ணியப்படுத்துங்கள்; அவர்கள், பிரச்சினைகளை எப்படி எதிர்கொள்கின்றனர் என்பதை அவதானியுங்கள்.
 • குழந்தைகள் நவீன தொழில் நுற்பத்தைக் கற்றுக்கொள்ள உதவுங்கள்; கணினி-இணையப் பயன்பாட்டை அவர்கள் அறிந்துகொள்ளவும், அதன் மூலம் பயன்பெறவும் வழிகாட்டுங்கள்.
 • குழந்தைகள் பேசும் போது, அவர்களது பேச்சை வெட்டி விடாதீர்கள்; காது கொடுத்துக் கேளுங்கள். அதன் மூலம் அடுத்தவர் பேசும் போது, காது கொடுத்துக் கேட்கும் பக்குவத்தை அவர்கள் பெறுவார்கள்.
 • குழந்தைகள் கேள்வி கேட்கும் போது, அவர்களை அதட்டாதீர்கள்; பொறுமையுடன் அவர்களது கேள்விகளுக்குப் பதிலளியுங்கள்;
 • பிள்ளைகளுக்கு வியாபாரம், கொடுக்கல்-வாங்கல் மற்றும் சுயதேவைகளை நிறைவேற்றிக்கொள்ளுதல் போன்ற அம்சங்களில் பயிற்சி அளியுங்கள்; இவற்றில் அவர் குறை விட்டால், தண்டிக்காது வழிகாட்ட முயற்சியுங்கள்.
 • பயனுள்ள கூட்டமைப்புக்களுடன் குழந்தைகளை ஒன்றிணைத்து, அவர்களது ஆளுமை விருத்திக்கு உதவுங்கள்.
 • அறைகளுக்குள் நுழையும் போது ‘ஸலாம்’ கூறி, நுழையப் பழக்குங்கள்; ஆண்-பெண் பிள்ளைகளுக்குத் தனித்தனி படுக்கைகளை ஏற்படுத்துங்கள். 9 வயதுக்கு மேற்பட்டவர்களைத் தனியாகத் தூங்க வழிசெய்யுங்கள். அதுவே அவர்களின் ஆளுமை வளர உதவும்.
 • திரும்பத் திரும்ப நல்ல விஷயங்களைப் போதியுங்கள்; உடனடி மாற்றத்தை எதிர்பார்க்காதீர்கள். சேர்வடையாமல் முயற்சியைத் தொடருங்கள்.
 • நன்மையை ஆர்வமூட்டித் தீமையை எச்சரியுங்கள்; இப்படிச் செய்தால் இந்தப் பாக்கியம் கிடைக்கும்; இப்படிச் செய்தால் இந்தத் தண்டனை கிடைக்கும் என்பதைப் புரிய வையுங்கள்.
 • உங்கள் குழந்தைகளுக்கு வழங்குவதாகக் கூறிய எந்த வாக்குறுதியையும் மீறி விடாதீர்கள்; தண்டிப்பதாகக் கூறினால், அதைத் தவிர்ப்பது பாதிப்பாகாது. ஆனால் எதையாவது ‘தருவேன்’ எனக் கூறி விட்டு, கொடுக்காது இருந்து விடாதீர்கள்.
 • பிள்ளைகளின் பிரச்சினையை அவர்களுடன் பேசி, அறிந்து அவற்றுக்குத் தீர்வுகளைப் பெற்றுக் கொடுங்கள்;
 • இஸ்லாமிய சரித்திரத்தையும், அதன் சாதனை வீரர்களது வரலாறுகளையும் எடுத்துக் கூறுங்கள்;
 • இஸ்லாத்தின் எதிரிகள் குறித்தும், அவர்கள் முஸ்லிம்களுக்கு இழைக்கும் அநீதிகள்; குறித்தும் அவர்களுக்கு உணர்த்துங்கள்;
 • இருப்பதைக் கொண்டு திருப்தியடையப் பழக்குங்கள்; அடுத்தவர்களிடமிருப்பதைப் பார்த்துக் கொட்டாவி விடும் இயல்பை அழிக்க முயலுங்கள்.
 • பொது விடயங்களில் அவர்களுடன் ஆலோசனை செய்யுங்கள்; அவர்களது கருத்து பொருத்தமானதாகப் பட்டால், அதன்படி செயல்படத் தயங்காதீர்கள்.
 • உளவியல் ரீதியில் அவர்களை அணுக முற்படுங்கள்; ‘நல்ல பிள்ளைகள் இப்படித்தான் இருப்பார்கள்; இப்படி-இப்படி செய்ய மாட்டார்கள். நீ நல்ல பிள்ளை; நீ எப்படி நடந்துகொள்ள வேண்டும்?’ என்ற தோரணையில் நீங்கள் கூற விரும்புவதைக் கூறலாம்.
 • இது போன்ற வழிமுறைக;டாக அவர்களிடம் மாற்றத்தை ஏற்படுத்த முயல்வதுடன் அவர்களுக்காக அல்லாஹ்விடம் அனுதினமும் துஆச் செய்யுங்கள்.
அல்லாஹ் அருள்புரிவானாக!

திங்கள், ஜனவரி 23, 2012

மீலாத் விழா ஓர் இஸ்லாமியப் பார்வைபுகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே சொந்தமானது. அவனது அருளும், சாந்தியும், நபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும், அவர்களின் குடும்பத்தவர்கள், தோழர், தோழியர், இமாம்கள், நல்லடியார்கள், மற்றும் இறை விசுவாசத்தோடு உலகைப்பிரிந்து மண்ணறைகளில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற முஸ்லிமான சகோதர, சகோதரிகள் அனைவர்மீதும் நிலையாக உண்டாகட்டுமாக!

மதிப்புக்குரிய இஸ்லாமிய சகோதரர்களே! இஸ்லாமிய மாதங்களின் தொடரில் "ரபீவுல் அவ்வல்" மாதம் மூன்றாவது மாதமாக இடம் பெறுகின்றது, இம்மாதத்தில் நபிகள் நாயகம் (ஸல்) பிறந்து, தனது அறுபத்தி மூன்றாவது வயதில் அதே மாதத்திலேயே இவ்வுலகுக்கு விடை கொடுத்தார்கள்.

மாமனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறந்த தினத்தை முன்னிட்டு நமது பிரதேசங்களில் "மௌலித், மற்றும் "திக்ர்" வைபங்கள் பல ஏற்பாடு செய்யப்பட்டு, அதற்காக அரசியல் பிரமுகர்கள் முதல் சாதராண பிரஜை வரை அழைக்கப்பட்டு மிக விமர்சையாகக் கொண்டாடுவதை நாம் அறிவோம்.

எனவே இம்மாதத்தில் பக்திப்பரவசத்தோடு மேற்கொள்ளப்படுகின்ற, குறிப்பாக "மீலாத் விழா" விற்கும் நபிகள் நாயகம், அவர்களின் வழி முறைக்கும் இடையில் காணப்படும் தொடர்பு பற்றி "காய்தல், உவர்தல் இன்றி" நடுநிலையுடன் அல்குர்ஆன், அஸ்ஸுன்னா, மற்றும் இஸ்லாமிய வரலாற்றின் அடிப்படையில் ஆய்வு செய்வது காலத்தின் தேவையாக இருக்கின்றது.

மீலாத் கொண்டாட்டம் நபிவழியைச்சார்ந்ததா? இல்லையா? என்பதை முடிவு செய்வதற்கு முன் அல்குர்ஆனிலிருந்தும், நபிகள் நாயகம், அவர்களின் பொன் மொழிகளிலிருந்தும், இஸ்லாத்தைக் கற்றறிந்த இமாம்களின் தீர்ப்பில் இருந்தும் அடிப்படையான சில விதிகளை முன்வைக் கின்றோம். அவைகளுக்கு அமைவாக மீலாத் கொண்டாட்டம் அமையப்பெற்றிருக்கின்றதா? இல்லையா? என்பதை ஒத்துப்பாருங்கள். குழப்பங்கள் அகன்று சத்தியம் மலரும் இன்ஷா அல்லாஹ்"

மார்க்கம் முழுமைப்படுத்தப்பட்டுள்ளது: 
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தனது இருபத்தி மூன்று வருட நபித்துவக் காலத்தில் கழிவறை ஒழுக்கங்கள் முதல் ஆட்சி முறை வரை தமது தோழர்களுக்கு கற்றுக்கொடுக்காது இந்த உலகைப் பிரியவில்லை என்பதை பின்வரும் நபி மொழி உறுதி செய்கின்றது.

عَنْ سَلْمَانَ قَالَ قِيلَ لَهُ قَدْ عَلَّمَكُمْ نَبِيُّكُمْ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كُلَّ شَيْءٍ حَتَّى الْخِرَاءَةَ قَالَ فَقَالَ أَجَلْ لَقَدْ نَهَانَا أَنْ نَسْتَقْبِلَ الْقِبْلَةَ لِغَائِطٍ أَوْ بَوْلٍ أَوْ أَنْ نَسْتَنْجِيَ بِالْيَمِينِ أَوْ أَنْ نَسْتَنْجِيَ بِأَقَلَّ مِنْ ثَلَاثَةِ أَحْجَارٍ أَوْ أَنْ نَسْتَنْجِيَ بِرَجِيعٍ أَوْ بِعَظْمٍ (مسلم/برقم:262)

ஒருவர் ஸல்மான் (ஸல்) அவர்களிடம்: உங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அற்பமான காரிங்களைக் கூட உங்களுக்கு கற்றுத்தந்துள்ளார்களே! என (இழிவாக) க் கேட்ட போது ஆமாம் (உண்மைதான்) நாம் மல, சலம் கழிக்கின்ற போது வலதை உபயோகிக்கக் கூடாது என்றும், மூன்று கற்களை விட குறைவானவற்றில் சுத்தம் செய்யக் கூடாது என்றும், மிருக விட்டையினாலோ, எலும்பினாலோ, சுத்தம் செய்யக் கூடாது என்றும் எமக்கு கற்றுத் தந்துள்ளனர். (அது பற்றி பெருமைப்படுகின்றோம்) என பதிலளித்தார்கள். (ஆதார நூல்: முஸ்லிம்).

இஸ்லாத்தில் எவரும் தமது விருப்பு, வெறுப் புக்களை புகுத்தி விடாத வண்ணம் கழிவறை ஒழுக்கங்களையே கற்றுக் கொடுத்த நபி (ஸல்) அவர்கள் மீலாத் விழா பற்றி தனது தோழர்களுக்குக் கற்றுக் கொடுக்காது மௌனமாக இருந்திருப்பார்களா? அவ்வாறு கற்றுக்கொடுக்கப்பட்டிருக்குமாயின் மனிதர்களால் அசிங்கமாகக் கருதப்படும் கழிவறை ஒழுக்கங்கள் பற்றி அறிவித்த நபித்தோழர்கள் மீலாத் விழா பற்றி அறிவிக்காதிருந்திருப்பார்களா? என சிந்திக்க வேண்டும். அரஃபாத் திடலில் நபித்தோழர்களை ஒன்று சேர்த்து உரையாற்றிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்

ألا هل بلغت கவனியுங்கள்! எனது தூதுத்துவப்பணியை உங்களுக்கு அறிவித்து விட்டேனா? எனக் கேட்ட போது, "ஆம் அல்லாஹ்வின் தூதரே! என ஒட்டு மொத்த நபித்தோழர்களும் பதில் கூறினர்" (புகாரி).

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிற்காலத்தில் உருவெடுக்கும் குழப்பங்கள், கொடியவன் தஜ்ஜால், மற்றும் மறுமை சார்ந்த பல அடையாளங்களை மிகத்துல்லியமாக சுட்டிக்காட்டிய அதே நேரத்தில் மீலாத் கொண்டாட்டம் பற்றி கூறாது விட்டிருப்பார்களா? என சிந்தித்தால் மார்க்கம் முழுமைப் படுத்தப்பட்டுள்ளதை உறுதி செய்ய முடியும். மார்க்கம் முழுமைப்படுத்தப்பட்டதற்கான சில சான்றுகள் இஸ்லாமிய மார்க்கம் முழுமைப் படுத்தப்பட்டுள்ளதை அல்லாஹ் தனது திருமறையில் உறுதி செய்கின்றான். அதனை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும், நபித்தோழர்களும், இமாம்களும் உறுதி செய்துள்ளனர். அதனைப் பின்வருமாறு கவனிப்போம். அல்குர்ஆனிலிருந்து:

اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. (المائدة:3)

இன்றைய தினம் உங்களது மார்க்கத்தை உங்களுக்காகப் பூரணப்படுத்தி விட்டேன். எனது அருட்கொடையை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான (பொது) மார்க்மாகவும் பொருந்திக் கொண்டேன். (அத்:5. வச:3). - இந்த வசனத்தை அறிந்திருந்த ஒரு யூதர் உமர் (ரலி) அவர்களிடம்,

عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ أَنَّ رَجُلًا مِنْ الْيَهُودِ قَالَ لَهُ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ آيَةٌ فِي كِتَابِكُمْ تَقْرَءُونَهَا لَوْ عَلَيْنَا مَعْشَرَ الْيَهُودِ نَزَلَتْ لَاتَّخَذْنَا ذَلِكَ الْيَوْمَ عِيدًا قَالَ أَيُّ آيَةٍ قَالَ الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمْ الْإِسْلَامَ دِينًا قَالَ عُمَرُ قَدْ عَرَفْنَا ذَلِكَ الْيَوْمَ وَالْمَكَانَ الَّذِي نَزَلَتْ فِيهِ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ قَائِمٌ بِعَرَفَةَ يَوْمَ جُمُعَةٍ (بخاري)

அமீருல் முஃமினீன் அவர்களே! உங்கள் வேதத்தில் ஒரு வசனத்தை நீங்கள் ஓதி வருகின்றீர்கள். அது யூதர்களாகிய எம்மீது இறக்கப்பட்டிருக்குமானால் அந்த நாளை பெருநாள் தினமாக எடுத்திருப்போம் என்றார். அது என்ன வசனம் என உமர் (ரலி) அவர்கள் கேட்ட போது, இன்றைய தினம் உங்களது மார்க்கத்தைப்பூரணப்படுத்தி, எனது அருட்கொடையை முழுமைப்படுத்தி, இஸ்லாத்தை மார்க்கமாகப் பொருந்திக் கொண்டேன். (5:3) என்ற பொருளுடைய வசனம் எனக் கூறினார். அதற்கு அந்த நாளையும், அது அருளப்படட்ட இடத்தையும் நாம் அறிவோம் எனக் கூறிய உமர் (ரலி) அவர்கள் "அரஃபாத் திடலில், ஒரு ஜும்ஆத்தினத்தில் அவ்வசனம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது இறங்கியது எனப்பதிலளித்தார்கள். ( புகாரி: ஹதீஸ் இல:45, 4407, 4606, 7268 ).

இதன் மூலம் இஸ்லாமிய மார்க்கம் முழுமைப் படுத்தப்பட்டுள்ளதுடன் விஷேசமான நிகழ்வுகளை முன்னிட்டு விழாக்கள் நடாத்துவது யூத, கிரிஸ்தவர்களின் நடைமுறையுடன் தொடர்புடைய பழக்கம் என்பதையும் சுன்னாவிலிருந்து விளங்க முடிகின்றது.

عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ أَحْدَثَ فِي أَمْرِنَا هَذَا مَا لَيْسَ فِيهِ فَهُوَ رَدٌّ. (بخاري/2697)

எவர் ஒருவர் எமது மார்க்கத்தில் இல்லாத ஒன்றை தோற்றுவிக்கின்றாரோ அது நிராகரிக்கப்படும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (புகாரி: ஹதீஸ் இல:2697).

عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ دَعُونِي مَا تَرَكْتُكُمْ إِنَّمَا هَلَكَ مَنْ كَانَ قَبْلَكُمْ بِسُؤَالِهِمْ وَاخْتِلَافِهِمْ عَلَى أَنْبِيَائِهِمْ فَإِذَا نَهَيْتُكُمْ عَنْ شَيْءٍ فَاجْتَنِبُوهُ وَإِذَا أَمَرْتُكُمْ بِأَمْرٍ فَأْتُوا مِنْهُ مَا اسْتَطَعْتُمْ (خ/برقم: 7288)

நான் உங்களுக்கு விட்டுச் செல்லும் வழியைப்பற்றிக் கொள்ளுங்கள். உங்களுக்கு முன்வாழ்ந்தோர் (பயனற்ற) கேள்விகளாலும், தமது நபிமார்கள் மீது முரண்பட்டுக் கொண்டதாலுமே அழிந்தனர். நான் ஏதாவது ஒரு விஷயத்தை தடுத்தால் அதனை முழுமையாக தடுத்துக் கொள்ளுங்கள். ஏதாவது ஒரு கட்டளை பிறப்பித்தால் அதிலிருந்து முடியுமான அளவு எடுத்து நடவுங்கள் எனக் கூறினார்கள். (ஆதார நூல்: புகாரி ஹதீஸ் இல:7288).

மேற்படி ஹதீஸ்களின் கருத்தில் அமைந்த பல நபிமொழிகள் நபிகள் நாயகத்தின் வழி முறையுடன் மாத்திரம் நின்று கொள்ளுமாறு பணிக்கின்றன.

இமாம்களின் கூற்றிலிருந்து: நபி (ஸல்) அவர்கள் மார்க்கமாக்காத ஒன்றை மார்க்கமாக்கிச் செய்வோரைக் கண்டிக்கும் இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள்:

من ابتدع بدعة يراها حسنة فقد زعم أن محمدا خان الرسالة. (الاعتصام للشاطبي )

"எவன் ஒருவன் ஒரு (பித்ஆவை) புதிய வழிமுறையை உருவாக்குவதோடு, அதனை அழகியதாகவும் காணுகின்றானோ அவன் முஹம்மத் (ஸல்) அவர்கள் தனது தூதுத்துவப் பணியில் மோசடி செய்துவிட்டதாகவே எண்ணுகின்றான்" என குறிப்பிடுகின்றார்கள். இமாம் இப்னுல் காசிம் (ரஹ்) அவர்கள் நவீன வழிமுறைகள் ஏற்படுத்தும் விளைவுகள் பற்றிக் கண்டிக்கின்ற போது பின்வருமாறு கூறினார்கள்.

لا تجد مبتدعا إلا وهو منتقص للرسول، وإن زعم أنه يعظمه بتلك البدعة، فإنه يزعم أنها هي السنة إن كان جاهلا مقلدا، وإن كان مستبصرا فيها فهو مشاق لله ولرسوله. شرح الجامع الصغير. (1/40) ( نقلا من كتاب موازين الصوفية في ضوء الكتاب والسنة . ص280)

பித்அத்வாதியாக இருக்கும் எவனும் நபிகள் நாயகத்தைக் குறைகண்டவனே. அவன் அந்த பித்அஃ (புதிய வழிமுறை) மூலம் அவர்களை கௌரவிப்பதாக மனப்பால் குடித்தாலும் சரியே! அந்த வழிமுறையை கண்மூடித்தனமாக, விபரமின்றிப் பின்பற்றும் ஒருவனாக இருந்தால் அதனை சுன்னத்தாக (நபிவழியாக) எண்ணிக் கொள்கின்றான். அதில் (நவீன வழிமுறைதான் என்பதில்) தெளிவுள்ளவனாக இருந்தால் அவன் அல்லாஹ்வையும், அவனது தூதரையும் நோவிக்கின்றான். எனக் கூறினார்கள். (ஆதார நூல்: ஷரஹுல் ஜாமியிஸ் ஸகீர்.பாகம்: 1.பக்:40).

மார்க்கத்தின் பெயரால் புதிய வழிமுறைகளை தோற்றுவிப்போர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை தூதுத்துவப்பணியில் குறைகாணுபவராகவே இருக்க முடியும். ஏனெனில் இது போன்ற புதிய வழி முறைகளை தோற்றுவிப்போர் மறுமையில் "ஹவ்ழுல் கவ்தர்" நீர்த்தடாகத்தை நோக்கி நீரருந்த வருகின்ற போது "வானவர்கள்" அவர்களை தடுத்து நிறுத்துவார்கள். அப்போது எனது "சமுதாயத்தவர்!! "எனது சமுதாயத்தவர்!" (அவர்களை விட்டு விடுங்கள்) எனக் குரல் கொடுப்பேன். அப்போது வானவர்கள்: إنك لا تدري ما أحدثوا بعدك . "(முஹம்மதே!) உமது மரணத்திற்குப் பின் என்னென்ன புதிய வழிமுறைகளை அவர்கள் உருவாக்கினர்"! என்பதை நீர் அறியமாட்டீர் எனக் கூறுவர். அப்போது, سحقا ،سحقا لمن بدل بعدي எனக்குப்பின்னால் (மார்க்கத்தில்) மாற்றம் செய்தோர் இறையருளிலிருந்து தூரமாகட்டும்! தூரமாகட்டும்! என நான் கூறுவேன். என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (முஸ்லிம்).

இஸ்லாத்தில் அங்கீகரிக்கப்பட்ட இரு பெருநாட்கள்:
வருடத்தில் இரு பெருநாட்களையே இஸ்லாம் மார்க்கமாக்கியுள்ளது. எனவே அதில் அனுமதிக்கப் படாத ஒரு நாளை விஷேசதினமாக்குவதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உயிருடன் இருந்த போதும் கூட அங்கீகரிக்கவில்லை என்பதை பின்வரும் நபிமொழி உறுதி செய்கின்றது.

عَنْ أَنَسٍ قَالَ قَدِمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَدِينَةَ وَلَهُمْ يَوْمَانِ يَلْعَبُونَ فِيهِمَا فَقَالَ مَا هَذَانِ الْيَوْمَانِ قَالُوا كُنَّا نَلْعَبُ فِيهِمَا فِي الْجَاهِلِيَّةِ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ اللَّهَ قَدْ أَبْدَلَكُمْ بِهِمَا خَيْرًا مِنْهُمَا يَوْمَ الْأَضْحَى وَيَوْمَ الْفِطْرِ (أبو داود /1134)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு (ஹிஜ்ரத்) வந்த போது அங்குள்ள மக்கள் இரு நாட்களை ஓதுக்கி விளையாடுவதைக் கண்டார்கள். இந்த இரு நாட்களும் என்ன (எதற்காக விiளாடுகின்றீர்கள்) என கேட்ட போது அதில் "ஜாஹிலிய்யா" அறியாமைக்காலத்தில் விளையாடும் வழக்கமுடையோரக இருந்தோம் எனக் கூறினர். அவ்விரு நாட்களைவிட சிறந்த இரண்டு நாட்களை அல்லாஹ் உங்களுக்கு பகரமாக தந்துள்ளான். (அவைதாம்) ஹஜ்ஜுப் பெருநாளும் நோன்பு பெருநாளும் எனக் கூறினார்கள். (அபூதாவூத். ஹதீஸ் இல: 1134).

வருடத்தில் இரண்டு நாட்களை தேர்வு செய்து அறியாமைக் காலத்தில் விளையாடி வந்த ஒரு பழக்கத்தின் அடிப்படையிலேயே நபித்தோழர்கள் விளையாடி வந்திருக்கின்றனர்.

அது மாற்று மதத்தவரின் செயலுக்கு ஒப்பாக இருந்ததால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதனை அங்கீகரிக்கவில்லை. எனவே யூத கிரிஸ்தவர்கள் தமது நபிமார்களின் பிறந்தநாளைக் கொண்டாடுவது போன்று தனது (மீலாத்) பிறந்தநாள் கொண்டாடப்படுவதை அங்கீகரிப்பார்களா? என சிந்திக்க வேண்டும்.

நபியின் அங்கீகாரமற்ற செயல்கள் நிராகரிக்கப்படும்:
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டித்தந்த வணக்கங்களை அதன் அமைப்பிற்கும், முறைக்கும் மாற்றமாகச் செய்வது மார்க்கம் அங்கீகரிக்காத செயலாகும். இதனை விளக்கும் பல நபி மொழிகள் ஹதீஸ் கிரந்தங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ لَا يَصُومَنَّ أَحَدُكُمْ يَوْمَ الْجُمُعَةِ إِلَّا يَوْمًا قَبْلَهُ أَوْ بَعْدَهُ (بخاري/1985)

ஜும்ஆத் தினத்திற்கு முன்னுள்ள நாளில், அல்லது அதற்கு பின்னுள்ள நாளில் நோன்பு நோற்காது அத்தினத்தில் நோன்பு நோற்க வேண்டாம். என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதை தான் செவிமடுத்த தாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (ஆதார நூல்: புகாரி. ஹதீஸ் இல: 1985).

عَنْ جُوَيْرِيَةَ بِنْتِ الْحَارِثِ رَضِيَ اللَّهُ عَنْهَا أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ دَخَلَ عَلَيْهَا يَوْمَ الْجُمُعَةِ وَهِيَ صَائِمَةٌ فَقَالَ أَصُمْتِ أَمْسِ قَالَتْ لَا قَالَ تُرِيدِينَ أَنْ تَصُومِي غَدًا قَالَتْ لَا قَالَ فَأَفْطِرِي وَقَالَ حَمَّادُ بْنُ الْجَعْدِ سَمِعَ قَتَادَةَ حَدَّثَنِي أَبُو أَيُّوبَ أَنَّ جُوَيْرِيَةَ حَدَّثَتْهُ فَأَمَرَهَا فَأَفْطَرَتْ (بخاري/1986)

இதற்கு மாற்றமாக நபியின் மனைவியரில் ஒருவரான அன்னை ஜுவைரியா (ரழி) அவர்கள் நோன்பு நோற்றிருந்த நிலையில் அவர்களின் (வீட்டில்) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நுழைந்தார்கள். நேற்றய தினம் நோன்பு நோற்றிருந்தாயா? என்று கேட்க இல்லை. எனப்பதில் கூறினார்கள். நாளை நோன்பு நோற்பாயா? என்றதும் இல்லை. என்றார்கள். அப்படியானால் நோன்பை விட்டு விடு எனக் கூறினார்கள். (புகாரி. 1986). மற்றொரு அறிவிப்பில் "நோன்பை விட்டுவிடும்படி கூறவே அவர்கள் அதனை விட்டுவிட்டார்கள்" என இடம் பெற்றுள்ளது.

நோன்பு வணக்க வழிபாடுகளுடன் தொடர்புடைய கடமை என்பதை நாம் அறிவோம். வெள்ளிக்கிழமை தினத்தை விஷேச தினமாகக் கருதி நோற்கப்பட்ட காரணத்தால் நபி (ஸல்) அவர்கள் அதற்கு அங்கீகாரம் வழங்கவில்லையெனில், நபியின் காலத்தில் இல்லாத ஒரு புதிய கொண்டாட்டத்திற்கு எந்த வகையில் அங்கீகாரம் கிடைக்கும் என சிந்திக்கக் வேண்டும்.

நபியை நேசிப்பதன் அளவுகோல்: 
நபியை ஒருவர் நேசிப்பதற்கான அளவு கோலாக அவர்களின் வழி நடப்பதையே அல்குர்ஆனும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பொன் மொழிகளும் எடுத்துக்கூறுகின்றன.

قل إن كنتم تحبون الله فاتبعوني (آل عمران: 31)

"நீங்கள் அல்லாஹ்வை நேசிப்போராக இருந்தால் என்னைப் பின்பற்றுங்கள் என (முஹம்மதே) கூறுவீராக! (அத்:3.வச:31). என அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.

عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ دَعُونِي مَا تَرَكْتُكُمْ إِنَّمَا هَلَكَ مَنْ كَانَ قَبْلَكُمْ بِسُؤَالِهِمْ وَاخْتِلَافِهِمْ عَلَى أَنْبِيَائِهِمْ فَإِذَا نَهَيْتُكُمْ عَنْ شَيْءٍ فَاجْتَنِبُوهُ وَإِذَا أَمَرْتُكُمْ بِأَمْرٍ فَأْتُوا مِنْهُ مَا اسْتَطَعْتُمْ. (خ/برقم 7288)

நான் உங்களுக்கு விட்டுச் செல்லும் வழியைப்பற்றி நில்லுங்கள். உங்களுக்கு முன்வாழ்ந்தோர் (பயனற்ற) கேள்விகளாலும், தமது நபிமார்கள் மீது முரண்பட்டுக் கொண்டதாலுமே அழிந்தனர். நான் ஏதாவது ஒரு விஷயத்தை தடுத்தால் அதனை முழுமையாக தடுத்துக் கொள்ளுங்கள். ஏதாவது ஒரு கட்டளை பிறப்பித்தால் அதிலிருந்து முடியுமான அளவு எடுத்து நடவுங்கள் எனக் கூறினார்கள். (ஆதார நூல்: புகாரி. ஹதீஸ் இல: 7288 மேற்படி ஹதீஸின் கருத்தில் அமைந்த பல நபிமொழிகள் நாயகம் (ஸல்) அவர்களை நேசிப்பதன் அளவு கோலாக அவர்களின் வழி நடப்பதையே வேண்டி நிற்கின்றன.

நபி (ஸல்) அவர்கள் தனது பிறந்த தினத்தில் எவ்வாறு நடந்து கொண்டார்கள்?
நபி (ஸல்) அவர்கள் பிரதி திங்கள் தோறும் நோன்பு நோற்கும் வழக்குமுடையோராக இருந்தார்கள் அது பற்றி நபித்தோழர்கள் வினவிய போது:

عن أبي قتادة الأنصاري رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم سئل عن صوم الاثنين فقال فيه ولدت وفيه أنزل علي (مسلم)

அந்நாளில் நான் பிறந்தேன், அதில்தான் என் மீது (அல்குர்ஆன்) இறக்கப்பட்டது எனப்பதில் கூறினார்கள். (முஸ்லிம்) . முஸ்லிமின் மற்றொரு அறிவிப்பில் "அந்நாளில் நான் நபியாக அனுப்பப்பட்டேன் எனக் கூறியதாகவும், திர்மிதியில் இடம் பெறும் அறிவிப்பில் "பிரதி வியாழன், திங்கட் கிழமைகளில் அடியார்களின் அமல்கள் அல்லாஹ்விடம் எடுத் துக்காட்டப்படுகின்றன. எனது அமல்கள் நான் நோன்பு நோற்றிருக்கும் நிலையில் அவனிடம் எடுத்துக்காட்டப்பட விரும்புகின்றேன் என மற்றொரு காரணம் கூறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நபி (ஸல்) அவர்கள் தனது பிறந்ததினத்தில் எவ்வாறு நடந்து கொண்டார்கள் என்பதை அவர்களின் பிறந்த தினத்தை கொண்டாடுவோர் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளனர்.

திங்கட்கிழமை அமல்கள் அல்லாஹ்விடம் எடுத்துக்காட்டப்படுகின்ற காரணத்தாலும், மேலும் அத்தினத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றுள்ளதாலும் நபியைப் போன்று நோன்பு நோற்பது அவர்களை நேசிப்பதற்கான அடையாளமாகும். அவர்கள் தனது பிறந்த நாளைக் கொண்டாடவில்லை என்பதற்கு இந்த ஹதீஸை விட ஆணித்தரமான வேறு சான்று வேண்டியதில்லை. மீலாத் தினத்தை கொண்டாடும் சகோதரர்கள் சிந்திப்பார்களா?

عَنْ أَنَسٍ قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يُؤْمِنُ أَحَدُكُمْ حَتَّى أَكُونَ أَحَبَّ إِلَيْهِ مِنْ وَالِدِهِ وَوَلَدِهِ وَالنَّاسِ أَجْمَعِينَ (بخاري/برقم:15)

உங்கள் ஒருவரின் பெற்றோர், அவரது குழந்தை, உலக மக்கள் அனைவரயும் விட உங்களுக்கு நான் நேசமுள்ளவனாக ஆகும்வரை உங்களில் ஒருவர் கூட பூரண விசுவாசியாக முடியாது என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி.)

நபியை உண்மையாக நேசிப்பதாக வாதிடுவோர் தாங்களே சுயமாக கண்டுபிடித்த புதியவழிகளை கடைப்பிடிப்பதை விட்டுவிட வேண்டுமல்லவா?

நபித்தோழர்களும் மீலாத் விழாவும்:
இரண்டாம் கலீஃபா உமர் (ரலி) அவர்களின் காலத்தில் இஸ்லாமிய ஆண்டை நபியின் பிறந்த நாளில் இருந்து கணிக்காது அவர்களின் "ஹிஜ்ரத்" பயணத்தை கவனத்தில் கொண்டு ஹிஜ்ரி ஆண்டை நிர்ணயம் செய்த நிகழ்வும், நபித்தோழர்களில் காலத்தில் மீலாத் தின கொண்டாட்டங்கள் இடம் பெறாததும், அவர்கள் மத்தியில் மீலாத் தினம் முக்கிய இடத்தைப் பெறவில்லை என்பதை உணர்த்தப் போதுமான சான்றாகும்.

ஃபாதிமய்யாக்கள் என்ற ஷீஆப்பிரிவினரே மௌலிதுகளை உருவாக்கினர்: 
மீலாத் தின கொண்டாட்டங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலம் முதல் ஹிஜ்ரி நான்காம் நூற்றாண்டு வரை இஸ்லாமிய மார்க்கத்தில் இருந்திருக்கவில்லை. ஃபாதிமிய்யாக்கள் (ஃபாதிமா (ரழி) அவர்களின் பரம்பரையில் வந்தவர்கள்.) என தமக்கு பொய் நாமம் சூட்டிக் கொண்ட "பனுஉபைத்" கூட்டத்தினர் பக்தாதிலுள்ள அப்பாஸியர் ஆட்சியை எதிர்த்து எகிப்தில் கிளர்ச்சி செய்து, அங்கு ஆட்சியைக் கைப்பற்றினர்.

தமது நிர்வாகத்தில் மக்களுக்கு ஏற்படும் அதிருப்தியை சமாளிப்பதற்காகவும், தமதாட்சியை தக்கவைத்துக் கொள்ளவும், மக்கள் தமக்கெதிராக புரட்சியில் ஈடுபடாமலிருக்கவும், மக்களின் கவனத்தை தம்பக்கம் ஈர்ப்பதற்காகவும் "மவ்லிதுன் நபி" "மவ்லிது அலி" "மவ்லிது ஹஸன்" "மவ்லிது ஹுஸைன்" "மவ்லிது ஃபாத்திமா" "மவ்லிது கலீபதில் ஹாழிர்" (ஷீஆக்களின் நம்பிக்கைப்படி ஹிஜ்ரி 230 ற்குப் பின் பிறந்து 1200 ற்கும் மேற்பட்ட வருடங்கள் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும் மஹ்தி) என ஆறு மவ்லித்கள் சுன்னத் வல் ஜமாஅத் முஸ்லிம்களை அக்காலத்தில் கருவறுத்த "அல்முயிஸ் லிதீனில்லா ஹில் உபைதி" என்றழைக்கப்படும் ஆட்சியாளனால் ஹிஜ்ரி 362-ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது.

இவனே பாங்கின் அமைப்பில் "ஹய்ய அலாகைரில் அமல்" என முதல் முதலில் மாற்றம் செய்தவன் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இவனைத் தொடர்ந்து "அல்முயிஸ்" என அழைக்கப்படும் இவனது மகன் அதனைப் பேணி வந்தான். இவனது ஆதரவாளர்கள் இவனை பிற்காலத்தில் வெளிவரவிருந்த மஹ்தி என்றும் கூறிவந்தனர். இவர்களுக்குப் பின் ஆட்சியில் அமர்ந்த "சுன்னத் வல்ஜமாஅத்" ஆதாரவாளரான "அல் அஃப்ழல் அமீருல்ஜுயூஷ் பின் பத்ர் அல்ஜமாலி" என்பவரால் நடை முறையில் இருந்து வந்த மவ்லித் ஹிஜ்ரி 448 ல் ஒழிக்கப்பட்டது.

பின்னர், "ஷீஆ" ஆதரவாளரான "அல்ஆமிர் பிஆஹ்காமில்லாஹ்" என்பவரால் ஹிஜ்ரி 524 ம் ஆண்டு மீண்டும் புத்துயிரூட்டப்பட்டது. (இதுவே மவ்லிதின் சுருக்கமான வராலாறு).

மேற்படி தகவல்களை ஷாஃபி மத்ஹப் பேரறிஞர் இமாம் அபூஷாமா அல்மக்திஸி (ரஹ்) அவர்கள் தனது "அர்ரவ்ழதைன் ஃபீ அக்பாரித்தவ்லதைன்" என்ற நூலில் பாகம்:1, பக்கம்: 201-ல் தொகுத்து வழங்கியுள்ளார்கள்.

மவ்லித் பற்றிய உண்மை நிலையை விளக்கும் இமாம் தாஜுத்தீன் அல்பாகிஹானி (ரஹ்) அவர்கள்:

لا أعلم لهذا المولد أصلا في كتاب، ولا سنة، ولا ينقل عمله عن أحد من علماء الأمة الذين هم القدوة في الدين المتمسكون بآثار المتقدمين بل هو بدعة أحدثها البطالون، وشهوة نفسى اعتنى بها الأكالون. انظر : المورد في عمل المولد للفاكهاني صفحة: 20-21 أو الحاوي للفتاوى: (1/189)

இந்த மவ்லிதிற்கு அல்குர்ஆனிலோ, நபியின் வழிமுறையிலோ, எவ்வித அடிப்படையையும் நான் அறியேன். மேலும் முன்னோர்கள் வழி நடக்கும் மார்க்கத்தின் முன்மாதிரிகளான, இந்த சமூத்தின் அறிஞர்கள் அதைச் செய்ததற்கான எந்த ஒரு செய்தியும் இடம் பெறவில்லை. வீணர்களும், (நபுஸ்) மோகம் பிடித்தவர்களுமே அதனை புதிதாக உருவாக்கினர். உணவில் அதிக நாட்டம் உடையோர் அதற்கு முன்னுரிமை வழங்கி, கட்டிக் காத்தனர், எனக் குறிப்பிட்டுள்ளார்கள். பார்க்க: அல்மவ்ரித் ஃபீ அமலில் மவ்லித். பக்: 20- 21). அல்லது(அல்ஹாவி: பாகம்:1, பக்கம்:189).

அரபுப் பாடல்கள் வணக்கமாகுமா?
மௌலித் ஓர் அரபுப்பாடலாகும். அதனை வணக்கமாகக்கருதிப் பாடுவதற்கு முன்னர் அரபுப்பாடல்கள் பற்றிய இஸ்லாத்தின் நிலைப்பாட்டினை ஒருவர் அறிந்து கொள்வதால் "மௌலித்" எந்த தரத்தில் மதிக்கப்பட வேண்டும் என்பதை அறிந்து கொள்ள முடியும்.

அல்குர்ஆன் கவிஞர்கள் பற்றிக்குறிப்பிடும் போது:

وَالْشُّعَرَاءُ يَتَّبِعُهُمُ الْغَاوُوْنَ.ألَمْ تَرَ أنَّهُمْ فِيْ كُلِّ وَادٍ يَّهِيْمُوْنَ وَأنَّهُمْ يَقُوْلُوْنَ مَا لاَ يَفْعَلُوْنَ. (اَلشُّعَرَاءُ:224-226)

கவிஞர்களை வீணர்களே பின்பற்றுவார்கள். அவர்கள் ஒவ்வோரு பள்ளத்தாக்கிலும் தட்டழிந்து திரிவதை (முஹம்மதே) நீர் பார்க்கவில்லiயா? மேலும் அவர்கள் செய்யாததையே சொல்கின்றனர். (அஷ்ஷுரா: வச: 224 -226) . என்றும்,
 
وَمَا عَلَّمْنَاهُ الْشِّعْرَ وَمَا يَنْبَغِيْ لَهُ.(يس: 69 )

நாம் கவிதையை அவருக்குக் (முஹம்மதுக்கு) கற்றுக் கொடுக்கவுமில்லை, அது அவருக்கு அவசியமும் இல்லை. (யாசீன்: 69) என்றும் குறிப்பிடுகின்றது.

عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ بَيْنَا نَحْنُ نَسِيرُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْعَرْجِ إِذْ عَرَضَ شَاعِرٌ يُنْشِدُ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عليه وَسَلَّمَ خُذُوا الشَّيْطَانَ أَوْ أَمْسِكُوا الشَّيْطَانَ لَأَنْ يَمْتَلِئَ جَوْفُ رَجُلٍ قَيْحًا خَيْرٌ لَهُ مِنْ أَنْ يَمْتَلِئَ شِعْرًا (مسلم/2267)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் "அர்ஜ்" என்ற இடத்தில் நாம் இருந்து கொண்டிருந்த போது, ஒரு கவிஞர் கவிபாட ஆரம்பித்தார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அந்த ஷைய்த்தானைப் பிடித்து நிறுத்துங்கள். எனக் கூறி விட்டு, உங்களில் ஒருவரின் வயிறு கவியால் நிரம்பி இருப்பதை விட சீழால் நிரம்பிக்காணப்படுவது மேலானது எனக் கூறினார்கள். (ஆதார நூல்: முஸ்லிம்). இதன் மூலம் கவிதைக்கும் இஸ்லாமிய வணக்க முறைகளுக்கும் இடையில் காணப்படும் உறவைப்புரிந்து கொள்ளலாம்.

ஐயமும் தெளிவும்:
ஐயம்: ஹஸ்ஸான் பின் தாபித் (ரலி) அவர்களிடம் இணைவப்பாளர்களை எதிர்த்துக் கவிபாட அனுமதித்தது மவ்லித் பாடலுக்கான அங்கீகாரம்தானே!

தெளிவு: குரைஷியர், முஷ்ரிகீன்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை கவிதையால் நிந்திப்போராக இருந்தனர். அவர்களுக்கு கவிதையால் பதில் அளிக்க முடியாத நபி (ஸல்) அவர்கள் கவித்துறையில் சிறப்பு தேற்சி பெற்றிருந்த ஹஸ்ஸான் (ரலி) அவர்களை கவிதையிலேயே அவர்களுக்கு பதிலடி கொடுக்கும்படி பணித்தார்கள். அதனால் அவர்கள் நபியை உயர்த்தியும், எதிரிகளைத் இகழ்ந்தும் கவி பாடினார்கள்.

நபியின் அங்கீகாரம் பெற்ற ஹஸ்ஸான் (ரலி) அவர்களின் கவியை நாம் பிரதி வெள்ளிக் கிழமைகளில் "அல்கஹ்ஃப்" அத்தியாயத்தை ஓதி வருவது போன்று நபித்தோழர்கள் வருடா வருடம் ரபீவுல் அவ்வல் மாதத்தில் மஸ்ஜிதுன் நபவியில், அல்லது மதீனாவிலுள்ள வீடுகளில் ஓதி வந்தனரா? என்றால் இல்லை.

நபி (ஸல்) அவர்களை உலகப்பயங்கரவாதத்திற்கு வித்திட்டவர் என அமெரிக்காவில் உள்ள ஒருவன் நவீன காலத்தில் காழ்ப்புணர்வுடன் சாடிப் பேசியதை நீங்கள் அறிவீர்கள். இந்நிலையில் இவன் போன்ற ஷைய்த்தான்களை எதிர்த்தும், நமது நபியை உயர்த்தியும் பாடுவதையும், எழுதுவதையுமே இந்த ஹதீஸ் விளக்குகின்றது.

அது ஒரு புறமிருக்க "சுன்னத் வல் ஜமாஅத்" அறிஞர்கள் தாம் இந்த மவ்லிதை உருவாக்கினார்களா? என்றால் இல்லை. நபித்தோழர்களின் விரோதிகளான "ஷீஆ"க்களாளே இதனை உருவாக்கினர்.

ஷீஆக்களின் நம்பிக்கைகள் சில: 
(1) நபிகள் (ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பிறகு அலி (ரலி) அவர்களும், அவர்களின் பரம்பரையில் வந்த (ஷீஆக்களின் நம்பிக்கைப்படி) பன்னிரெண்டு இமாம்களுமே ஆட்சி செய்யத் தகுதியானோர் என்பதும்.

(2) அல்குர்ஆனில் அலி (ரலி) அவர்களின் ஆட்சியை அறிவுறுத்தும் வகையில் அமைந்த "அல்விலாயா" என்ற அத்தியாயத்தை? குர்ஆனை ஒன்று சேர்த்த போது நபித்தோழர்கள் -குறிப்பாக- அபூபகர் (ரலி), உமர் (ரலி) ஆகியோர் திட்டமிட்டே இருட்டடிப்புச் செய்துள்ளனர் என்பதும்.

(3) பன்னிரெண்டு சொச்சம் நபித்தோழர்களைத் தவிர ஏனெய அனைவர்களும் இஸ்லாத்தை விட்டும் மதம் மாறினர். என்பதும்.

(4) அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் தகாத நடத்தையுடைய பெண் என்பதும்.

(5) நபியின் மரணத்தின் பின்னால் அலி (ரலி) அவர்களுக்கு கைமாற வேண்டிய ஆட்சியை அபூபகர் (ரலி) உமர் (ரலி) ஆகியோர் தமது தந்திர புத்தியால் தமதாக்கிக் கொண்டனர் என்பதும்.

(6) நபித்தோழர்களும், அவர்கள் வழிவந்த இமாம்களும், நபிவழி நடக்கும் சுன்னத் வல்ஜமாஅத்தினரும், காபிர்கள் என்பதும். ஷீஆக்களின் நம்பிக்கை கோட்பாட்டு சாக்கடையில் இருந்து சில சொட்டுக்களாகும்.

இதன் பின்னரும் மவ்லித் ஓதப்பிரியப்படுவோர் ஷீஆக்களை மறைமுகமாக ஆதிப்போரா? என சந்தேகிக்க வேண்டியுள்ளது.ஐயம்: மவ்லித் நபியின் காலத்தில் இல்லாததாக இருந்தாலும் சுன்னத்தான ஒன்றாகாதா?

தெளிவு: முஸ்லிம் உலகில் அங்கீகரிக்கப்பட்ட இஸ்லாமிய அறிஞர்களுள் ஒருவரான இமாம் "இப்னுஸ்ஸலாஹ்" (ரஹ்) அவர்கள் சுன்னா(நபியின் வழி முறையை) ஹதீஸ்களின் துணை கொண்டு இரண்டாக வகுக்கின்றார்கள்.

(1) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்து காட்டியவை. உதாரணமாக: ஸிவாக் (மிஸ்வாக்) செய்தல், தர்மம் கொடுத்தல், உண்ணுதல், பருகுதல், சிகை அலங்காரம் செய்தல் போன்றவை.

(2) செய்யாது விட்டவை.

உதாரணமாக: ஐங்காலத் தொழுகை முடிந்ததும் கூட்டாகப்பிரார்த்திக்காது தனிமையாக திக்ர் செய்தமை, பெருநாள் தொழுகைகளை பாங்கு, இகாமத் இன்றி நடாத்தியமை, பாங்கின் முன் ஸலவாத் இன்றி பாங்கைக் கற்றுத்தந்தமை போன்றவற்றைக் குறிப்பிட முடியும். (ஆதார நூல்: ஸியானது ஸஹீஹ் முஸ்லிம். பக்கம்: 2-5)

அடுத்ததாக நபியின் காலத்தில் இல்லாத ஒரு வழி முறையை தொழுகை, மற்றும் இதர வணக்கங்கள் போலாக்கி ஓதி வருவதை, கொண்டாடுவதை உலகில் அங்கீகரித்தவர்கள் யார்? நபித்தோழர்கள் முதல் அவர்களின் வழி வந்த எந்த இமாம்மும் அதனை அங்கீகரிக்கவில்லையே! மவ்லிதைப் பாடுவோர் அறிவால் விளக்கத்தால் முன்னோர்களான நபித்தோழர்கள், இமாம்களை விடவும்சிறந்தவர்களா? இதனால்தான் இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள்:

وما لم يكن يومئذ دينا فلا يكون اليوم دينا ( الاعتصام للشاطبي )

அந்தக்காலத்தில் மார்க்கமாக இல்லாமல் இருந்தது இந்தக்காலத்திலும் மார்க்கமாக இருக்க முடியாது. எனக் கூறினார்கள். (அல் இஃதிஸாம்).

அன்பான அழைப்பு:

மவ்லிதை ஓதி, மீலாத் விழா நடத்தும் சகோதரர்களே! முதலாவதாக உங்கள் நடைமுறையால் நபி (ஸல்) அவர்களை நேசியுங்கள். எப்படித் தொழுதார்கள்? எவ்வாறு திருமணம் செய்தார்கள்? அல்லது எப்படி திருமணம் செய்யச் சொன்னார்கள்? எவ்வாறு ஆடை அணியச் சொன்னார்கள்? எவ்வாறு இல்லற வாழ்வில் ஈடுபடும்படி கூறினார்கள்.? குழந்தைகளை எவ்வாறு வளர்த்தார்கள்? அண்டை அயலவர்கள், ஏழைகள் விருந்தினர்கள், எதிரிகள், குழந்தைகள், மனைவியர் ஆகியோருடன் எவ்வாறு நடந்து கொண்டார்கள்? தாடி எவ்வாறு வளர்த்தார்கள்? மீசை எவ்வாறு வைத்திருந்தார்கள்? எவ்வாறு உறங்கினார்கள்? உணவருந்தினார்கள்? நீர் பருகினார்கள்? காலை, மாலையில் என்ன ஃதிக்ர்" பிரார்த்தனை ஓதினார்கள். என்பன போன்ற நூற்றுக்கணக்கான நபியின் உண்ணத நடைமுறையை உங்கள் அன்றாட வாழ்வில் கடைப்பிடியுங்கள். அப்படி செய்தால், உங்கள் வாழ்வில் நடக்கும் பெரிய மீலாத் விழா வேறொன்றுமில்லை.
 
துணை நின்றவை:

1- புகாரி, முஸ்லிம், திர்மிதி, அஹ்மத்.

2- மவாசீனுஸ்ஸுஃபிய்யா. (ஆசிரியர்: அலி பின் அஸ்ஸெய்யித் அல்வஸீஃபி).

3- ஹுக்முல் இஹ்திஃபால் பில் மவ்லிதின்னபவிய்யி. ஆசிரியர்: இப்ராஹீம் பின் முஹம்மத் அல் ஹுகைய்யில்.

4-அல்குதூதுல் அரீழா. ஆசிரியர்: முஹிப்புத்தீனுல் கதீப் (ரஹ்)

5-அஷ்ஷீஆ வஸ்ஸுன்னா. ஆசிரியர்: இஹ்ஸான் இலாஹி ழஹீர் (ரஹ்) அவர்கள்.

6-அல்ஹுகூமதுல் இஸ்லாமியா. ஆசிரியர்: ஆயதுல்லாஹ் குமைனி.

7- அத்தபர்ருக் அன்வாஉஹுவஅஹ்காமுஹு ஆசிரியர்: நாஸிர் பின் அப்துர்ரஹ்மான் பின் முஹம்மத் அல்ஜுதய்யிஃ.

8- இக்திழாஉஸ் ஸிராதில் முஸ்தகீம். (ஆசிரியர்: இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள்).

நன்றி: (இஸ்லாமிய அழைப்பு மையம். தபூக்)

மீலாது விழா கொண்டாடலாமா?فَلْيَحْذَرْ الَّذِينَ يُخَالِفُونَ عَنْ أَمْرِهِ أَنْ تُصِيبَهُمْ فِتْنَةٌ أَوْ يُصِيبَهُمْ عَذَابٌ أَلِيمٌ

எவர் அவருடைய (முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின்) கட்டளைக்கு மாறு செய்கிறார்களோ அவர்கள் தங்களை சோதனை பிடித்துக் கொள்வதையோ, அல்லது தங்களை நோவினை தரும் வேதனை பிடித்துக்கொள்வதையோ அஞ்சிக் கொள்ளட்டும். (அல்குர்ஆன் 24:63)
நபி(ஸல்)அவர்களின் பிறந்த நாள் விழா
ரபீவுல் அவ்வல் என்ற உடனேயே அது நபி(ஸல்) அவர்கள் பிறந்த மாதமல்லவா! என்ற நினைவு வருகிறது. முஸ்லிம்களுக்கு மத்தியில் இவ்வளவு பிரபலமாகியிருக்கும் இம்மாதத்தில் நடைபெறும் செயல்கள் அல்லாஹ்வும் அவனது தூதர்(ஸல்) அவர்களும் வழிகாட்டியதின் அடிப்படையில் அமையவேண்டுமல்லவா? எனவே இம்மாதத்தில் நாம் செய்யும் செயல்களை அல்குர்ஆன் மற்றும் நபிமொழியின் ஒளியில் ஆராய்வோமே!
மீலாது விழா ஆரம்பமானது எப்போது?
நபி(ஸல்) அவர்களோ, நாற்பெரும் கலீஃபாக்களோ, மற்ற நபித்தோழர்களோ, அவர்களுக்குப் பின் தோன்றிய தாபியீன்களோ, அல்லது நபி(ஸல்) அவர்களால் போற்றப்பட்ட முந்தய மூன்று நூற்றாண்டுகளில் வாழ்ந்தவர்களோ மீலாது விழா கொண்டாடவில்லை. அப்படியானால் மீலாது விழா ஆரம்பமானது எப்போது? திருக்குர்ஆன் விரிவுரையாளர்களில் ஒருவரான இமாம் இப்னு கஸீர்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
ஹிஜ்ரீ 357 முதல் 567 வரை மிஸ்ரை (எகிப்து) ஆண்டு வந்த ஃபாத்திமியீன்களின் ஆட்சியில் அப்துல்லாஹ் பின் மைமூன் அல் கதாஹ் என்ற யூதனால் இஸ்லாத்தின் பெயரால் பல விழாக்கள் அரங்கேற்றப்பட்டன. அதில் நபி(ஸல்) அவர்களின் பிறந்த நாள் விழாவும் ஒன்று. (நூல்: பிதாயா வன் நிஹாயா பாகம் 11 – பக்கம் 172)
ஆக இவ்விழா ஹிஜ்ரீ நான்காம் நூற்றாண்டில் யூதர்களால் அரங்கேற்றப்பட்டுள்ளது.
மீலாது விழாவும் சஹாபாக்களும்
நாற்பெரும் கலீஃபாக்களும் மற்ற நபித்தோழர்களும் அவர்களுக்குப் பின் தோன்றிய தாபியீன்களும் மார்க்கத்தை நன்கறிந்தவர்கள். நபி(ஸல்) அவர்களை மிக அதிகமாக நேசித்து மார்க்க அடிப்படையிலேயே தம் முழு வாழ்க்கையையும் அமைத்துக் கொள்ள முழுமையாக பாடுபட்டவர்கள் என்பதை நாம் அனைவரும் ஏற்றுள்ளோம், மீலாது விழா கொண்டாடுவது நன்மையான செயல் என்றோ, அது நபி(ஸல்) அவர்களுக்கு புகழ் சேர்க்குமென்றோ எண்ணியிருந்தால் அவர்கள் பலவிழாக்களை கொண்டாடியிருப்பார்கள். ஆனால் அவர்கள் நபி(ஸல்) அவர்களின் பிறந்த நாளுக்கென எந்த விழாவும் கொண்டாடவில்லை.
மீலாது விழாவும் கிரிஸ்மஸும்
ஈஸா(அலை) அவர்களுக்கு கிருத்துவர்கள் பிறந்தநாள் விழாக் கொண்டாடுவது போன்று முஸ்லிம்களான நாம் நபி(ஸல்) அவர்களுக்கு விழாக் கொண்டாடுகிறோம். ஆனால் இந்த ஒப்பீடு சரிதானா?
பிறசமயக் கலாச்சாரத்தைப் பின்பற்றுபவன் அந்த சமயத்தையே சார்ந்தவன் என நபி(ஸல்)அவர்கள் கூறியுள்ளார்கள். (நூல்: அபூதாவூத்)
கிருத்துவர்கள் பிறந்த நாளை விழா நாளாக கருதுவது போன்று நாமும் கருதினால் இவ்விஷயத்தில் நாம் கிருத்துவ மதத்தை சார்ந்துள்ளோம் என்றே இந்த நபிமொழி கூறுகிறது. எனவே நபிகளாரின் எச்சரிக்கைக்குப் பயந்து பிறந்த நாள் விழா மற்றும் இதுபோன்ற பிறமதக் கலாச்சாரங்களை விட்டும் முற்றிலும் விலகி, முழுமையான இஸ்லாமியராக வாழ முயற்சிக்க வேண்டும்.
அரபுக் கவிதைகள்
பிறந்த நாளை கொண்டாடும் விதமாக பல விசேஷ வழிபாடுகள் நம் சமுதாயத்தில் அரங்கேற்றப்பட்டுள்ளன. அதில் இன்றியமையாததாகக் கருதப்படுவது மவ்லிது என்ற பெயரால் பாடப்படும் அரபுக் கவிதைகள்தான். இக்கவிதைகளுக்கு நம் சமுதாயத்தில் மகத்தான மதிப்பிருக்கிறது. ஆனால் இஸ்லாத்தில் இதற்கெதிரான எச்சரிக்கைதான் இருக்கிறது. ஆனால் அவை பள்ளிவாசலிலும் கூட கூட்டம் கூடி, புனித வழிபாடாகக் கருதிப்பாடப்படுகிறது. நபி(ஸல்) அவர்களைப் புகழ்வதற்காக இயற்றப்பட்ட இப்பாடல்களின் பல வரிகள் புகழ்ச்சியில் வரம்புமீறி நபி(ஸல்) அவர்களுக்கு இறைத்தன்மைகளை கொடுத்துக் கொண்டிருக்கின்றன. நபி(ஸல்) அவர்களிடம் உதவிதேடுவது, அவர்களிடம் பாதுகாப்புத் தேடுவது, அவர்களுக்கு மறைவான ஞானம் உண்டு என்று நம்புவது போன்ற ஷிர்க்கான (இறைவனுக்கு இணைவைக்கும்) கருத்துக்களை இப்பாடல்கள் தன்னுள் கொண்டுள்ளன.
எந்தக் கொள்கையை விட்டும் மக்களைத் தடுப்பதற்காக நபி(ஸல்) அவர்கள் நபியாக அனுப்பப்பட்டார்களோ அதே கொள்கையைக் கொண்ட பாடல்களை அவர்களை புகழ்வதற்கே பாடப்படுகிறது. இது மிகப்பெரிய அநீதி இல்லையா? அதைவிடக் கொடுமை என்னவெனில் அல்லாஹ்வை மட்டுமே அழைக்கப்படவேண்டிய பள்ளிவாயிலிலேயே அவனுக்கு இணைவைக்கும் இக்கவிதைகள் மிகவும் பக்திப்பரவசத்தோடு பாடப்படுவதுதான். அல்லாஹ்வின் தண்டனைக்கு பயப்படக்கூடிய மக்களாக இருந்தால் தவ்பாச் செய்து உடனே இச்செயலை விட்டும் விலகிவிட வேண்டும்.
பிறந்த நாள் விழாவா? இறந்த நாள் விழாவா?
இதில் கவனிக்க வேண்டிய மற்றொரு முக்கிய விஷயம் என்னவெனில் எந்த நாளில் நபி(ஸல்)அவர்கள் பிறந்தார்கள் என்று கூறுகின்றார்களோ அதே நாளில்தான் நபி(ஸல்)அவர்கள் இறந்தும் உள்ளார்கள். இவ்வாறிருக்க இவர்களின் விழாக்களும் வழிபாடுகளும் நபி(ஸல்)அவர்களின் பிறப்பிற்காகவா? அல்லது இறப்பிற்காகவா?
இது சரியான காரணம்தானா?
மீலாது விழாவிற்கு மார்க்கத்தில் எந்த ஆதாரமும் இல்லாவிட்டாலும் நபிகளாரை கண்ணியப்படுத்தும் விதமாக நாமாகக் கொண்டாட வேண்டும் என்று சிலர் காரணம் கூறுவர்.
வெளிப்படையாகப் பார்த்தால் இக்கருத்து நபி(ஸல்) அவர்களை போற்றுவது போன்று தோன்றினாலும் உண்மையில் இது நபி(ஸல்) அவர்கள் மீது அபாண்டமாக பழி சுமத்தும் வார்த்தையாகும். இதனடிப்படையில் நபி(ஸல்) அவர்கள் சில நல்லறங்களை இச்சமுதாயத்திற்கு சொல்லவில்லை, மறைத்துவிட்டார்கள் என்று கூற வேண்டிவரும். நபித்தோழர்களும் இந்நல்லறங்களை செய்யவில்லை என்று அவர்கள் மீதும் குறை கூறவேண்டிவரும். -நவூது பில்லாஹ்- இந்நிலையை விட்டும் அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக!
நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள்:
நல்லறங்கள் அனைத்தையும் தத்தமது சமுதாயத்திற்கு அறிவித்துவிடுமாறு அல்லாஹ் அனைத்து நபிமார்களுக்கும் கட்டளையிட்டுள்ளான். (ஹதீஸின் சுருக்கம் – முஸ்லிம்)
நிச்சயமாக நபி(ஸல்) அவர்கள் தனக்கு வழங்கப்பட்ட தூதுப்பணியை முழுமையாக நிறைவேற்றியவர்களும் இறுதி நபியும் ஆவார்கள். அவர்கள் இச்சமுதாயத்திற்கு தேவையான எந்தச் சட்டத்தையும் உபதேசத்தையும் கூறாமல் விட்டுவிடவில்லை. மீலாது விழாக் கொண்டாடுவது மார்க்கத்தில் ஒரு அங்கமாக இருக்குமேயானால் நிச்சயம் அதனையும் சொல்லியிருப்பார்கள். செய்திருப்பார்கள். அதனை நபித்தோழர்களும் பின்பற்றியிருப்பார்கள்.
நபி(ஸல்) அவர்களை நேசிப்பது எப்படி?
வருடத்தில் இது போன்ற ஓரிரு விழாக்களை கொண்டாடிவிட்டு, அதன் பிறகு நாம் நினைத்தது போன்று வாழ்ந்து கொள்வது நபி(ஸல்)அவர்களை நேசிப்பதாகாது. நம் வாழ்வின் அனைத்துத்துறைகளையும் அனைத்துச் செயல்களையும் அல்லாஹ்வின் தூதர்(ஸல்)அவர்களின் வழிகாட்டுதலின் அடிப்படையில் அமைத்துக் கொள்ளவேண்டும். அவர்களை முழுமையாக பின்பற்றவேண்டும்.
இதனை அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான்:

قُلْ إِنْ كُنْتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمْ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ

நீங்கள் அல்லாஹ்வை நேசிக்கக் கூடியவர்களாக இருந்தால் என்னைப் பின்பற்றுங்கள்! அப்போது தான் அல்லாஹ் உங்களை நேசிப்பான் என்று நபியே நீர் கூறுவீராக! (அல்குர்ஆன் 3:31)
உங்களில் ஒவ்வொருவரும் சொர்க்கத்தில் நுழைந்து விடுவீர்கள் மறுப்பவரைத் தவிர என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களே! மறுப்பவர் என்றால் யார்? என்று தோழர்கள் கேட்டனர். என்னைப் பின்பற்றுபவர் சொர்க்கத்தில் நுழைந்துவிடுவார். எனக்கு மாறுசெய்பவர் நிச்சயமாக என்னை மறுத்தவராவார் -அவர் சொர்க்கத்தில் நுழையமாட்டார்- என்று நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். (நூல்: முஸ்லிம்)
எனவே நபி(ஸல்)அவர்களை பின்பற்றி நடப்பதே அவர்களை மதிப்பதின் அடையாளமாகும்.
மார்க்கம் முழுமையாக்கப்பட்டுவிட்டது. அல்லாஹ் நபி(ஸல்)அவர்களோடு இம்மார்க்கத்ததை முழுமையாக்கிவிட்டதாக குர்ஆனில் அறிவித்துவிட்டான்.

الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمْ الْإِسْلَامَ دِينًا

இன்றய தினம் உங்களுடைய மார்க்கத்தை உங்களுக்காக நாம் முழுமையாக்கி விட்டேன். நம்முடைய அருட்கொடையை உங்கள் மீது பரிபூரணப்படுத்தி விட்டேன். உங்களுடைய மார்க்கமாக நான் இஸ்லாத்தைப் பொருந்திக் கொண்டேன். (அல்குர்ஆன் 5:3)
இந்த வசனம் ஹஜ்ஜத்துல் விதாவில் (விடைபெரும் ஹஜ்ஜில்) அரஃபா தினத்தன்று இறங்குகிறது. நபி(ஸல்) அவர்கள் உயிரோடு இருக்கும் போதே மார்க்கம் முழுமை பெற்றுவிட்டது எனும்போது, நபி(ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பிறகு அவர்கள் கற்றுத்தராத ஒன்றை மார்க்கத்தில் இணைக்கவோ, அவர்கள் கட்டளையிட்டவற்றை நீக்கவோ யாருக்கும் உரிமை கிடையாது. இதனடிப்படையில் மீலாது விழா என்பது நபி(ஸல்) அவர்கள் மரணித்து நான்கு நூற்றாண்டுகளுக்கு பிறகு ஆரம்பிக்கப்பட்டது எனும்போது அதற்கு மார்க்க சாயம் பூசுவது இறைவனுடைய அதிகாரத்தில் நமது கரங்களை நுழைப்பதாகும். இதுபோன்று மார்க்க விஷயத்தில் விளையாடிய யூத, கிருத்துவர்களுக்கு கிடைத்த தண்டனைகளையும் கிடைக்கவிருக்கும் மறுமை வேதனைகளையும் திருக்குர்ஆனில் அல்லாஹ் பல இடங்களில் கூறுகிறான். எனவே நாம் இதுபோன்று மார்க்கத்தில் புதிய செயல்களை உறுவாக்குவதை விட்டும் முற்றிலும் தூரமாகி விடவேண்டும்.
மார்க்கத்தில் நூதனச் செயல்
மார்க்கத்தில் புதிதாக உறுவாக்கப்படுபவை அனைத்தும் பித்அத்(மார்க்கத்தில் நூதனச்) செயலாகும். அல்லாஹ்வும் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களும் கற்றுதராதவற்றை மார்க்கத்தின் அங்கமாக நினைத்து செயல்படுத்தப்பட்டால் நிச்சயமாக அது வழிகேடாகும். அது மறுமையில் நிராகரிக்கப்பட்டுவிடும். அதற்குரிய தண்டனையும் கிடைக்கும்.
நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்:
மார்க்கத்தில் புதிதாக உண்டாக்கப்படும் அனைத்தும் வழிகேடாகும். (நூல்: புகாரி)
யார் நம்முடைய இந்த மார்க்க விஷயத்தில் அதில் இல்லாத ஒன்றை புதிதாக உறுவாக்குகின்றாரோ அது மறுக்கப்பட்டுவிடும். (நூல்: முஸ்லிம்)
மஹ்ஷரில் கவ்ஸர் எனும் தடாகத்திலிருந்து நபி(ஸல்) அவர்கள் தண்ணீர் புகட்டிக் கொண்டிருப்பார்கள். அதில் நீர் அருந்துவதற்காக மார்க்கத்தில் நூதனச் செயல்களை உண்டாக்கியவர்களும் வருவார்கள். அவர்களை தண்ணீர் அருந்த விடாமல் மலக்குகள் இழுத்துச் சென்று விடுவார்கள். (ஹதீஸின் சுருக்கம்: புகாரி)
எனவே மீலாது விழாவும் மார்க்கத்தில் புதிதாக உண்டாக்கப்பட்டவையே! இதற்காக செலவிடப்படும் பணத்திற்கோ, உழைப்பிற்கோ அல்லாஹ்விடத்தில் எந்த நன்மையும் கிடைக்காது. மாறாக மஹ்ஷரில் நபி(ஸல்)அவர்கள் புகட்டும் தண்ணீரை அருந்தும் வாய்ப்பை இழந்து கொடிய வெப்பத்தில் தாகத்தால் பரிதவிக்க நேரிடும்.
எனவே அன்பிற்கினிய சகோதரர்களே! மீலாது விழா உட்பட மார்க்கத்தில் முரணான எந்தச் செயலுக்கும் பொருளாலோ, உழைப்பாலோ, ஆலோசனையாலோ வேறு எந்த விதத்திலும் உதவவேண்டாம் என அன்புடன் வேண்டுகிறோம்.

வியாழன், ஜனவரி 12, 2012

முஸ்லிமல்லாதவருடன் எவ்வாறு பழகுவது?PrintE-mail
முஸ்லிமல்லாத மக்களுடன் எவ்வாறு நடந்து கொள்வது என்பதில் அதிகமான முஸ்லிம்களுக்கு தெளிவான பார்வை இல்லை.
முஸ்லிம் அல்லாத மக்கள் அனைவரையும் அறவே வெறுத்து அவர்களை அடியோடு ஒரு சாரார் புறக்கணித்து ஒதுக்கிவிடுகின்றனர். முஸ்லிமல்லாத மக்களும் இஸ்லாத்தைப் புரிந்து ஏற்க வேண்டுமானால் அவர்களுடன் நெருங்கிப் பழகுவதன் மூலமே அது சாத்தியமாகும். இதை உணராமல் முஸ்லிமல்லாத மக்களை அறவே ஒதுக்குவதும், அவர்களிடமிருந்து முழுமையாக ஒதுங்கிக் கொள்வதும் முற்றிலும் தவறாகும்.
மற்றொரு சாரார் அவர்களுடன் இரண்டறக் கலந்து விடுகின்றனர். இஸ்லாம் தடை செய்துள்ள காரியங்களை அவர்கள் செய்யும் போது அதில் பங்கெடுத்துக் கொண்டு தாமும் அது போல் செய்ய ஆரம்பித்து விடுகின்றனர். அவர்கள் செய்யும் பலதெய்வ வழிபாட்டில் கூட கலந்து கொள்ளும் அளவுக்கு நடந்து தம்மை இஸ்லாத்தை விட்டும் வெளியேற்றிக் கொள்கின்றனர். இதுவும் தவறாகும்.
இஸ்லாத்தின் கொள்கை கோட்பாடுகளில் எதையும் விட்டுக் கொடுக்காமலும் மனிதர்கள் என்ற அடிப்படையில் அவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும் உரிமைகளையும் பேணி நடப்பதுதான் அவர்களுடன் முஸ்லிம்கள் நடந்து கொள்ள வேண்டிய சரியான முறையாகும்.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மதினாவில் வாழ்ந்த காலகட்டத்தில் அவர்களின் முதன்மையான எதிரிகளாக யூதர்கள் இருந்தார்கள். நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை கொலை செய்யவும் அவர்கள் பல்வேறு திட்டங்களைத் தீட்டி செயல்பட்டனர். அப்படி இருந்த யூதர்கள் அனைவரையும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எதிரிகளாகக் கருதி நடந்து கொள்ளவில்லை.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு பணிவிடை செய்யும் பொறுப்பை சில இளைஞர்கள் செய்து வந்தனர். அவர்களில் யூத இளைஞர் ஒருவரும் இருந்தார். (ஆதாரம்: புகாரி 1356)
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வீடுவரை செல்லவும் பணிவிடை செய்யவும் ஒருவருக்கு வாய்ப்பு கிடைத்தால் அவரால் நபிகள் நாயகத்தின் உயிருக்கே உலை வைக்க முடியும். அப்படி இருந்தும் எதிரி சமுதாயத்திலும் நல்லவர்கள் இருப்பார்கள் என்ற நம்பிக்கையில் அவரைத் தனது அந்தரங்க ஊழியராகச் சேர்த்துக் கொண்டார்கள். பின்னர் அந்த இளைஞர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார் என்பது தனி விஷயம்.
ஒரு யூதப் பெண் சமைத்த ஆட்டு இறைச்சி நபிகள் நாயகத்திற்கு உண்ணக் கொடுத்தார். ஆனால் அதில் அவர் விஷம் கலந்து வைத்திருந்தார். நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவர் எதிரி சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்று எண்ணாமல் அந்த இறைச்சியில் ஒரு துண்டைச் சாப்பிட்டார்கள். அதில் விஷம் கலந்திருப்பதைக் கண்டு கொண்ட பின் அந்தப் பெண்ணுக்கு மரண தண்டனை விதிக்க நபியின் தோழர்கள் வற்புறுத்திய போது அதை அவர்கள் ஏற்கவில்லை. அப் பெண்ணை மன்னித்தார்கள். (ஆதாரம் புகாரி 2617)
எதிரி சமுதாயத்தவரும் நபிகள் நாயகத்திடம் அன்பளிப்புகளை பரிமாறிக் கொள்ளும் வழக்கம் இருந்ததையும் அதை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அங்கீகாரம் செய்ததையும் இதில் இருந்து அறியலாம்.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொந்த ஊரில் இருந்து விரட்டப்பட்டு மதினாவுக்கு அகதியாக வந்தாலும் நாளடைவில் அவர்களே அரபு நாட்டின் அதிபராக வளர்ந்தார்கள்.
இப்படி இருந்தும் அவர்கள் தமது தேவைக்காக தமது கவசத்தை ஒரு யூதரிடம் அடைமானம் வைத்து கோதுமையைப் பெற்றார்கள். (ஆதாரம்: புகாரி 1926)
நாட்டின் அதிபர் அடைமானம் வைப்பவராகவும் சிறுபான்மைச் சமுதாயத்தைச் சேர்ந்தவர் அடைமானம் பெறுபவராகவும் இருந்துள்ளனர். இதில் இருந்த மற்ற மக்களின் உரிமைகள் எந்த அளவுக்கு நபிகளால் மதிக்கப்பட்டன என்பதை அறிந்து கொள்ளலாம்.
நபிகள் நாயகம் ஒரு சபையில் அமர்ந்திருந்த போது ஒரு பிரேதம் கொண்டு செல்லப்பட்டது. அதைக் கண்ட நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எழுந்து நின்றார்கள். உடனிருந்த தோழர்கள் இது யூதரின் பிரேதம் என்று சுட்டிக் காட்டினார்கள். அதைக் கண்டு கொள்ளாத நபிகள் நாயகம் அவர்கள் உங்களை ஒரு பிரேதம் கடந்து சென்றால் அது உங்களைக் கடந்து செல்லும் வரை எழுந்து நில்லுங்கள் என்று கூறினார்கள். (ஆதாரம் புகாரி 1228)
நபிகள் நாயகம் அவர்களைக் கொலை செய்திட சொந்த ஊரைச் சேர்ந்தவர்கள் முயன்ற போது அவர்களும் அவர்களின் நெருங்கிய தோழரான அபூபக்கரும் ஊரைவிட்டு இரகசியமாக வெறியேறினார்கள். மதினாவுக்கு செல்லும் வழியைக் காட்டுவதற்காக முஸ்லிம் அல்லாத ஒருவரை நம்பி அவரிடம் அப்பொறுப்பை ஒப்படைத்தார்கள். (ஆதாரம் புகாரி 2103)
எந்தச் சமுதாயம் கொலை செய்வதற்கு திட்டமிட்டுவிரட்டி விடுகிறதோ அதே சமுதாயத்தைச் சேர்ந்த நம்பகமானவரிடம் வழி காட்டும் பொறுப்பை ஒப்படைத்தார்கள். நபிகள் நாயகம் வாழ்க்கையில் இது போன்ற ஏராளமான நிகழ்ச்சிகள் நடந்துள்ளன. ஒருவர் முஸ்லிமாக இல்லை என்ற காரணத்துக்காக உலக விஷயங்களில் அவரை வெறுத்து ஒதுக்குவது நபிகள் நாயகம் காட்டித் தராத வழியாகும்.
இஸ்லாத்தின் ஐந்து கடமைகளில் ஜகாத் ஒரு கடமையாகும். செல்வந்தர்களிடம் இருந்து திரட்டப்படும் இந்த நிதியை எட்டு வகையான மக்களுக்கு அளிக்க வேண்டும் என்று குர்ஆன் கூறுகிறது. அவர்களில் இஸ்லாத்தின் பால் ஈர்க்கப்படுவதற்காக முஸ்லிம் அல்லாதவர்களுக்கு வழங்கப்படுவதும் சேர்க்கப்பட்டுள்ளது. (திருக்குர்ஆன் 9:60 பார்க்க.)
ஜகாத் என்ற நிதியைக் கூட முஸ்லிம் அல்லாதவருக்கு கொடுக்கலாம் என்றால் இஸ்லாத்தின் தாராளத் தன்மையை இதில் இருந்து அறிந்து கொள்ளலாம்.
ஆயினும் முஸ்லிம் அல்லாதவர்களுடன் இப்படி நட்புடன் பழகுவது என்பது அனைவருக்கும் பொதுவானதல்ல. முஸ்லிம் அல்லாத மக்களில் முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும் ஒழிப்பதை மட்டுமே இலட்சியமாகக் கொண்டவர்களும் உள்ளனர். இவர்கள் மிக மிக குறைவு என்றாலும் இத்தகையவர்களும் உள்ளனர் என்பதை மறுக்க முடியாது.
நம்மை ஒழிப்பதே ஒரே லட்சியம் என்று நடப்பவர்களை மற்றவர்களிடம் இருந்து பிரித்துப் பார்த்து இவர்கள் விஷயத்தில் மட்டும் அலட்சியப்படுத்தி ஒதுக்குமாறு இஸ்லாம் வழி காட்டுகிறது.
தன்னை அழிப்பதையே கொள்கையாகக் கொண்ட எவருடனும் யாரும் பழக மாட்டார்கள் என்பது இயல்பான ஒன்றுதான். இதைக் குறை கூற முடியாது. இதைத்தான் இஸ்லாமும் கூறுகிறது.
மார்க்க விஷயத்தில் உங்களுடன் போரிடாதோருக்கும் உங்கள் வீடுகளில் இருந்து உங்களை வெளியேற்றாதோருக்கும் நன்மை செய்வதையும் அவர்களுக்கு நீதி செலுத்துவதையும் அல்லாஹ் உங்களுக்கு தடை செய்யவில்லை. நீதி செலுத்துவோரை அல்லாஹ் விரும்புகிறான். மார்க்க விஷயத்தில் உங்களுடன் போரிடுவோர் உங்கள் இல்லங்களில் இருந்து உங்களை வெளியேற்றியோர் உங்களை வெளியேற்றியதற்கு உதவி புரிந்தோர் ஆகியோரை உற்ற நண்பர்களாக ஆக்குவதையே அல்லாஹ் உங்களுக்குத் தடை செய்கிறான். அவர்களை உற்ற நண்பர்களாக்கிக் கொள்வோரே அநீதி இழைத்தவர்கள் (திருக்குர்ஆன் 60:8,9)
சங்பரிவாரம் போன்றவர்களுடன் நாம் எந்த ஒட்டும் உறவும் வைக்க முடியாது. அது நம்மை நாமே அழிப்பதாகவும் தான் அமையும் இத்தகைய போக்கு உள்ளவர்கள் இந்துக்களில் கால் சதவிதம் கூட இருக்க மாட்டார்கள். இவர்களைத் தவிர மற்ற மக்கள் அனைவரிடமும் நமது மார்க்கத்தை விட்டுக் கொடுக்காத வகையில் பழகுவதும் உதவிக் கொள்வதும் மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டதுதான்.

சீரிய பண்பாடே சிறப்பான வாழ்வு


பணம், பதவி, புகழ் இருந்தால் சுகத்தோடு வாழலாம் என்ற தவறான எண்ணம் நம்மிடையே இருக்கிறது. ஆனால் பணம், புகழ், பதவி இருந்தால் மட்டும் வாழ்க்கைக்குப் போதுமானதல்ல. ஒரு மனிதன் தன் நிலை தவறாது, தனித்தன்மையுடனும், சிந்திக்கும் ஆற்றலுடன் இருந்தால் மட்டுமே சிறப்பாக வாழ முடியும். அதற்கு உதாரணமாக ஒரு பட்டு வியாபாரியும் அவனுடைய சக நான்கு வியாபாரிகளின் கதையினை
இங்கே சொல்லுவதுப் பொருத்தமாக இருக்கும் என நம்புகிறேன். ஒரு பட்டு வியாபாரி நல்ல தொழில் செய்து நாலு காசு சம்பாதித்தார். ஆனால் அவர் போல தனது நான்கு வியாபாரிகளுக்கும் வருமானமில்லை. அந்த பட்டு வியாபாரி மீது பொறாமைப் பட்ட மற்ற வியாபாரிகள் அவரை குழப்பத்தில் ஆழ்த்த முடிவு செய்தார்கள். ஒரு நாள் காலை பட்டு வியாபாரி தனது வீட்டிலிருந்து வெள்ளை பைஜாமா மற்றும் குர்த்தா அணிந்தும் தலையில் வெள்ளைத் தொப்பியுடனும் புறப்பட்டார் அவர் கடைக்கு.
வழியில் அவர் மீது பொறாமைப் பட்ட சக வியாபாரி முதாலமவர் அவரை வழிமறித்து உங்கள் ஆடை பிரமாதம் ஆனால் சிகப்புத் தொப்பிதான் சரியில்லை என்று சொல்லி விட்டுச் சென்று விட்டார். பாட்டு வியாபாரிக்கு தொப்பியின் நிறம் பற்றி சந்தேகம் வந்து எடுத்துப் பார்த்து உறுதி செய்து விட்டு கொஞ்ச தூரம் நகன்றார். இரண்டாவது வியாபாரி அவரைப் பார்த்து உங்கள் உடை நேர்த்தியாக உள்ளது ஆனால் பச்சைத் தொப்பிதான் சரியில்லை என்று சொல்லி விட்டுச் சென்றார்.
மறுபடியும் பட்டு வியாபாரி தொப்பியினை எடுத்துப் பார்த்தார். அவர் சொன்னது சரியில்லை என்று தெரிந்து தன் நடையினைக் கட்டினார். மூன்றாம் வியாபாரி அவரைப் பார்த்து உங்கள் உடை அழகாக உள்ளது ஆனால் மஞ்சள் தொப்பிதான் சரியில்லை என்றார். பட்டு வியாபாரி குழம்பி கடைப் பக்கத்தில் சென்றதும் நான்காம் வியாபாரி அவரை பார்த்து உங்கள் வெள்ளை டிரஸ் மிகவும் நேர்த்தியாக உள்ளது ஆனால் மஞ்சள் தொப்பிதான் பொருத்தமாக இல்லை என்று
சொன்னாரேப் பார்க்கலாம் தன் தொப்பியினை கீழே தூக்கி எரிந்து விட்டுக் கடைக்குச் சென்று குழம்பிக் கொண்டு இருந்ததால் அன்று வியாபாரம் சரியாக செய்ய முடியவில்லை. அதன் பின்பும் வீட்டுக்கு போன பின்பும் சரியாக சாப்பிடாமல் தன் மனதினை குழப்பத்தில் ஆழ்த்தி விட்டார். கடைக்கும் சரியாக போகவில்லை. அவர் வியாபாரம் நொடித்து மற்ற வியாபாரிகளின் வியாபாரம் மிக விமரிசையாக நடந்ததால் அவர்களுக்கு எல்லாம் சந்தோஷம். ஆகவே மனிதன் எப்போதும் சுய சிந்தனையோடும் தன் நிலை தடு மாறாமலும் இருந்தால் சிறப்பாக வாழலாம் என்ற கருத்தினை வலியுறுத்தி எழுதப் பட்டுள்ளது இந்த கட்டுரை.
எதிலும் தனித்தன்மையுடன் விளங்குங்கள் :
ஒரு கருத்தினை இருவர் சொல்லும்போது ஒருவருடைய பேச்சில் சுவை இருக்காது, மற்றொருவர் பேச்சில் கவரும் தன்மை இருக்கும். ஒரு கருத்தருங்கில் ஒரு கருத்தினை இருவர் சொல்லும் விதத்தில் மாறுதலினைப் பார்க்கலாம். ஒருவர் கருத்தை நாம் ஏற்க முடியாது அடுத்தவர் கருத்து ஏற்கும்படி இருக்கும்.
ஒரு பள்ளிகூடத்தில் இரு ஆசிரியரிடையே வேற்றுமை இருக்கும். ஒரு ஆசிரியரை மாணவர்கள் மொய்ப்பார்கள், இன்னொருவரைப் பார்த்தால் மாணவர் ஒதிங்கிச் செல்வர். வீட்டில் ஒரு தந்தை நுழையும்போது அவருடைய மகன்கள் சிங்கம் புலியினைப் பார்ப்பதுபோல் ஓடி ஓளிவார்கள். இன்னொரு தந்தையினைப் பார்த்தல் பாசத்துடன் குழந்தைகள் வந்து கழுத்தைக் கட்டிக்கொள்ளும். ஆகவே நீங்கள் ஓடி ஓடி உழைப்பதுடன் பாசத்துடனும் இருங்கள். "செல்வத்தினை பெருவதிர்க்காக பாசத்தினை இழந்து விடாதீர்கள்".
அன்புடன் பழகுங்கள்:
நீங்கள் உங்கள் தாயாரின் அன்பு மழையில் நனையும் பொது உங்களுக்கு எவ்வளவு சந்தோஷம் இருந்திருக்கும். அதே பாசத்தினை நீங்கள் உங்கள் குடும்பத்தில் காட்டினால் நீங்கள் சிறந்த குடும்பத் தலைவனாக கருதப் படுவீர்கள்.
நீங்கள் ஒருவரை ஒரு இடத்தில் பார்க்க நேரிடுகிறது. அந்த ஒரு தடவையிலும் அவர் நேசிக்கும் நபராக இருக்க வேண்டும். வெளியில் அன்புடன் பழகும் நீங்கள் வீட்டில் கடுகடுப்பாக இருக்கக் கூடாது. மின்சார தட்டுப்பாட்டில் கரண்ட் போய் விட்டால் யாரையும் திட்டுவதினை தவிர்த்து மண்ணெண்ணெய் விளக்கினை பொறுத்த தயாராக விட வேண்டும்.
ஏழைகளிடம் அன்புக் காட்டுங்கள்:
"ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காண்கிறேன் என்றார் சான்றோர்" ஆனால் சிலர் ஏழைகளைக் கண்டால் காத தூரம் விலகிச் செல்வர். சிலர் ஒரு கூட்டத்தில் ஏழை ஒரு சிரிப்புச் சொனனால் சிரிக்க மாட்டார்கள். அனால் ஒரு பணக்காரர் ஒரு செய்தியினைச் சொனனால் விழுந்து விழுந்து சிரிப்பர். சிலர் ஏழைகள் சிறு தவறு செய்தாலும் பூதக் கண்ணாடி கொண்டு பெரிதாக்குவர். ஆனால் அதே தவறை தன் உற்றார் உறவினர் செய்தால் அமுக்கப் பார்ப்பர். நீங்கள் ஏழையிடம் அன்பு செலுத்தினால் உங்கள் தரம் உயரும் அல்லவா ?
வீட்டுப் பெண்களைக் கண்ணியமாக நடத்துங்கள்:
ஒரு கிராமப் பழமொழியுண்டு. "ஒரு பெண் ஆட்டினைப் புறக்கணித்தால் ஒரு ஆண் ஆட்டின் துணையினை அது நாடும் என்று". இன்று பெண்கள் வழி தவறும் பெரும்பாலான குடும்பங்களில் அவர்களுக்கு அன்பும் பாசமும் பரிவும் கிடைப்பதில்லை என்றக் குற்றச் சாட்டினை சொல்கிறார்கள். வீட்டில் கணவன் மனவியினைப் புறக்கணித்தால் மனைவி தடம் புரள வைப்புக் கொடுதவர்கலாவோமல்லவா? ஆண்கள் கட்டு மஸ்தான உடல்கள் கொண்டவர்கள் தான். ஆனால் பெண்கள் மென்மையான இதயம் கொண்டவர்கள். ஒரு குடும்பத்தில் ஒரு பெண் தன் கணவனுடைய வறுமை, அழகின்மை, ஓய்வற்ற வேலை, அல்லது வேலையின்மை ஆகிய கஷ்ட நஷ்ட காலங்களில் உறு துணையாக இருக்கும்போது, ஆண்கள் ஏன் பணமும், புகழும் பெற்றால் பெண்களை கொடுமைப் படுத்துவதும், புறக்கணிப்பதும் எந்த வகையில் நியாயம்? பெண்கள் ஆண்களுக்கு ஆடையாகவும், ஆண்கள் பெண்களுக்கு ஆடையாகவும் இருக்கக் கூடாதா?
குழந்தைகளின் செயல்களுக்கு உங்களின் முன் மாதிரியாக எடுத்துக் கொள்ளுங்கள்:
உங்களது குழந்தை வீட்டில் சுட்டி செய்யும்போது, பள்ளியில் சண்டையிட்டு புகார் வரும்போது நீங்கள் அடிக்கப் பாய்வீர்கள். ஆனால் நீங்கள் பள்ளியில் படிக்கும் பொது செய்த சுட்டிகளையும் வீட்டில் பிடித்த அடத்தினையும் எண்ணி சாந்தம் அடையுங்கள். குழந்தை களிமண் போன்றவர்கள். ஒரு குயவன் எவ்வாறு களிமண்ணைப் பிடித்து உருளையில் வைத்துச் சுற்றுகிறானோ அது போன்றுதான் நீங்கள் உங்கள் குழந்தைகளை எவ்வாறு உருவாக நினைக்கின்றீர்களோ அதேபோன்று தான் அவன் உருவாவான்.
மக்கள் மனதினைக் கவரும் விதம்:
மனிதர்கள் ஒரு விதம் ஆனால் மக்கள் மனதினை கவருவது பல விதம்'. ஒரு வியாபாரி தன் பொருளை விற்பனை செய்வதிற்கு பல விதத்தில் விளம்பரம் செய்வார். ஓர் டி.வீ. சானெல் பிரதானமாக்க பல்வேறு நிகழ்ச்சிகளை புகுத்துவார். அதேபோன்றுதான் மனிதர்களின் மனதினைக் கவருவதும் ஒரு கலையென்றால் மிகையாகாது.
நீங்கள் ஒரு சபைக்குள் நுழையும்போது தெரிந்த முதலாமவருக்குக் கை கொடுக்கிறீர்கள். அவர் விருப்பமில்லாமல் கை கொடுக்கிறார். இரண்டாமவருக்கு கை கொடுக்கும்போது அவர் செல் போனில் பேசிக்கொண்டே கை கொடுக்கிறார், மூன்றாமவர் அடுத்தவரிடம் பேசிக் கொண்டே கை கொடுப்பார். ஆனால் நான்காமவர் உங்களுக்குத் தெரியாத நபராக இருந்தாலும் தனது இருக்கையிலிருந்து எழுந்து உங்களுக்கு கைகொடுத்து நீங்கள் உட்கார இடம் கொடுக்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் மனதில் யார் இடம் பிடிப்பார்.
உங்களுக்கு அறிமுகமில்லாத நபரினைதான் பிடிக்குமல்லாவா. ஆகவே அடுத்தவர் உள்ளத்தில் இடம் பிடிக்க உங்கள் செல்வத்தாலோ, பதவியாலோ அல்லது அதிகாரத்தாலோ முடியாது. மாறாக அன்பினாலேதான் முடியும். ஒரு செலவந்தர் தனது செல்வத்தின் மூலம் மனைவி, மக்களுக்கு நல்ல உணவினைக் கொடுத்ததின் மூலம் அவர்களுடைய வயிற்றினை நிரப்பலாம். ஆனால் அவர்களை கீழ்த்தரமாக நடத்தினால் அவர்களின் அன்பைப் பெற முடியுமா?
பொருத்தமான விஷயங்கள் தெரிந்து பேசுங்கள்:
பேசும் பொது சரியான தலைப்பினை எடுத்துப் பேசுங்கள். ஒருவரிடம் பேசும்போது அவருக்குப் பொருத்தமான விஷயம் அறிந்து பேசுங்கள்.ஒரு அறிஞரிடம் பேசுவதை போல மனைவியிடம் பேசாதீர்கள். மனைவியிடம் பேசும் தகவல்களை சகோதரிகளிடம் பேசாதீர்கள். இளைஞர்களுக்குச் சொல்ல வேண்டிய கருத்துக்களை வயதானவர்களிடம் சொல்லாதீர்கள். அதேபோல் குழந்தைகளிடம் சிரிப்பான செய்திகள் சொன்னால் அவர்களை சந்தோசப் படுத்தலாம். ஒரு விதவைத் தாய்க்கு நன்கு மகன்கள். நால்வரும் திருமணமாகி தனித்தனியே வசிக்கிறார்கள். வாரத்தில் ஒரு நாள் அவர்கள் வந்து தாயைப் பார்த்துச் செல்வது வழக்கம். மூன்று பேர் தாயைப் பார்க்க வந்த கொஞ்ச நேரத்தில் திரும்பி விடுவார்கள். ஆனால் ஒரு மகன் மட்டும் தாயிடம் வெகு நேரம் பேசிவிட்டுச் செல்வாராம்.
அதனைக் கவனித்த பக்கத்து வீட்டுக்காரர் ஒரு நாள் அவரை அழைத்து 'ஏன் தம்பி உங்கள் உடன் பிறப்புகளில் நீங்கள் மட்டும் வெகு நேரம் உங்கள் தாயிடம் பேசிக் கொடு உள்ளீர்களே அப்படி என்ன பேசுவீர்கள்' என்றுக் கேட்டார். அதற்கு மகன் 'என் தாய் எங்கள் அப்பாவினை இழந்து தனியே இருக்கிறார். அவர் பேச்சைக் கேட்பதிற்கு யாருமில்லை. ஒவ்வொரு தடவை நான் அவரைப் பார்க்க வரும்போதெல்லாம் புதுப் புது உலக, கிரமாத்தின் மற்றும் குடும்பத்தின் பழங்காலத் தகவல்களைச் சோவார். அதனை நான் காது கொடுத்துக் கேட்டால் அவர் மனது சந்தோசப் படும் அவரும் தந்தையும் எப்படியெல்லாம் சோகங்கள், துக்கங்கள், தழும்புகளினைத் தாங்கிக் கொண்டு எங்களை வளர்த்தார்கள் என்ற விபரத்தினை அறிந்து வியப்படைந்தேன். ஆகவேதான் நாம் அதிக நேரம் அவர் பேச்சினைக் கேட்டு விட்டுச் செல்கிறேன்' என்றார். ஆகவே சிலர் நம்மை மதித்து பேசும் பொது அவரைப் புறக்கணிக்காதீர்கள்.
கலந்துரையாடலில் அன்பாக இருங்கள்:
உங்களில் பலர் நிறுவன மேலாளராக இருப்பீர்கள். அல்லது கல்வி நிலையங்களில் ஆசிரியராக இருப்பீர்கள். உங்களிடம் இருக்கும் பணியாளர்கள் மற்றும் மாணவர்களிடம் அன்பாக இருங்கள். இதற்கு உதாரணமாக ஒரு சம்பவத்தினை இங்கே சொல்வது பொருத்தமாக இருக்கும். ஒரு தொழிச்சாலையில் பல்வேறு இடங்களில் வேலைப் பார்க்கும் தொழிலார்களுக்கான ஒரு கருத்தரங்கிற்கு நடத்தினார்கள். அதில் பேசுவதிற்காக மேலாளர் வருமுன் கருத்தரங்கில் உள்ள தொழிலாளர்கள் ஒருவருக்கொருவர் நலம் விசாரித்துக் கொண்டிருந்தார்கள். அங்கே இரச்ச்சலாக இருந்தது.
மேலாளர் உள்ளே நுழைந்ததும் ஒருவரைப் பார்த்து ஏன் இறைந்து பேசிக்கொண்டு இருக்கிறீர்கள். வெளியே போங்கள் என்று அனுப்பி விட்டார். அதன் பின்பு ஒவ்வொருவராக அங்கு வந்தவர்களிடம் தங்களை அறிமுகப் படுத்திக் கொள்ளுங்கள் என்றார். தனது பேச்சினைத் துவங்குமுன் அங்கிருந்த தொழிலாளர்களிடம் ஒவ்வொரு தாளிணைக் கொடுத்து தனது பேச்சின் தன்மையினை எவ்வாறு இருந்தது என எழுதுங்கள் என்றார். ஆனால் அந்த தாள்களில் உங்கள் பெயர் இருக்கக் கூடாது என்றார். அதன் பின்பு தனது பேச்சினைத் துவங்கி முடித்தார்.
தான் கொடுத்த தாள்களில் கருத்துக்களை எழுதித் தாங்கள் என்றார். அதன் பின்பு அங்கிருந்தவர்களிடம் நீங்கள் இந்தக் கருத்தரங்கிற்கு பல இடங்களில் இருந்து குடும்பத்தினை விட்டு வந்துள்ளீர்கள். நான் வெளியே அனுப்பிய நபர் மட்டும் ஏன் வெளியே நிற்க வேண்டும் ஆகவே அவரை உள்ளே அழைக்கலாம் என்று அவரை அழைத்து அறிவுரை சொல்லி உள்ளே உட்கார வைத்து விட்டு தனது பேச்சினை மேலும் தொடர்ந்து முடித்தார். இப்போது வேறொரு தாள்களை அவரிகளிடம் கொடுத்து இப்போது தான் ஆற்றிய உரையின் மதிப்பினை எழுதித் தாருங்கள் என்றார்.
எல்லாத் தொழிலாளியும் பெயர் போடாது எழுதித் தந்தார்கள். அப்போது மேலாளர் தான் ஒரு தொழிலாளரை வெளியே அனுப்பி விட்டு கருத்துக் கேட்ட்தினையும் அதன் பின்பு வெளியே நின்ற தொழிலாளியினை உள்ளே அழைத்து தனது உரைக்க கருத்து வித்தியாசத்தினை தொழிலாளர்களுக்கு படித்துக் காண்பித்தார். முதலில் எழுதிய கருத்துக்களில் தொழிலாளர்கள் பெரும்பாலும் மேலாளரை கொஞ்சம் கூட இரக்கமில்லாதவர் என்றும் ஆனால் மறு கருத்துக்களில் அவர் மனிதாபமானவர் என்றும் எழுதி இருந்தது. அப்போது மேலாளர் சொன்னார் இதேபோன்று தான் நீங்கள் உங்கள் சக தொழிலாளர்களிடமும், வீட்டிலும் மற்றும் வாடிக்கையாளர்களிடமும் அன்பாக பழக வேண்டும் என அறிஉரை சொன்னார்.
 
மனிதன் பலவிதம், அவர் ஒவ்வொருவரும் ஒரு விதம் : 
பூமியில் இருக்கும் தாதுப் பொருள்கள் பல விதமாக இருப்பதுபோல மனிதர்களும் பல விதமாக இருப்பார். அவர்களுடைய குணாதிசயங்களை அறிந்து அவர்களுடன் நட்பினை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். ஒரு மனிதனிடம் தீய செயல்கள் குறைவாக இருந்து நல்ல செயல்கள் அதிகமாக இருந்தால் நல்ல செயலுக்காக அவருடன் பழகுங்கள்.
மறைந்த முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த பக்கரி முகம்மது கோவையில் நீதிபதியாக இருந்தபோது நான் டி.எஸ்.பீ யாக இருந்தேன். அவர் ஒரு தீர்ப்பு எழுதுமுன் இரண்டு இரக்காது தொழுது விட்டு தனது தீர்ப்பு நேர்மையாக இருக்க வேண்டும் என்று எழுதுவாகச் சொல்லுவார். அதுபோன்றே உங்களிடம் ஒரு பஞ்சாயத் சம்பந்தமாக ஒரு வழக்கு வந்தால் பசியுடனோ அல்லது தாகத்துடனோ அல்லது கோபத்துடன் இருக்கும்போதோ அல்லது இயற்கை உபாதை ஏற்படும்போதோ தீர்ப்புக் கூறாதீர்கள். மன அமைதியுடன் இருக்கும்போதே எந்த தீர்ப்பும் சொல்ல வேண்டும்.
தீயை தீயால் அணைக்க முற்படாதீர்கள்:
தீயினை தீயால் அணைக்க முற்ப்பட்டால் அது தீயின் வேகத்தினை அதிகரிக்குமல்லவா?
இதற்கு உதாரணமாக இரண்டு ஆசிரியர்களின் வழிமுறைகளின் வேறுபாடுகளைச் சொல்லி விளக்கலாம் என நினைக்கின்றேன். ஒரு ஆசிரியர் தனது வகுப்பில் நுழைந்து மாணவர்களைப் பார்த்து ஆளுக்கு ஒரு பேப்பரை எடுத்துக் கொள்ளுங்கள் நான் ஒரு பாடம் சம்பந்தமாக உங்களிடம் டெஸ்ட் வைக்கப் போகிறேன் என்றார். மற்ற மாணவர்கள் பேப்பரை எடுத்து எழுத தயாராக இருக்கும்போது ஒரு முரட்டு மாணவன் மட்டும் திடீர் என்று சொன்னால் எப்படி எழுதுவது என்றான். உடனே அந்த ஆசிரியர் அந்த மாணவனை 'மடையா, முட்டாள், நீ மாடு மேய்க்கத தான் லாயக்கு என்று திட்டினார்.
வெட்கப்பட்ட அந்த மாணவனும் ஆசிரியரை பதிலுக்குத் திட்ட ஆரம்பித்தான். புகார் பள்ளி நிர்வாகத்திற்குப் பொய் அந்த மாணவனுக்கு அபராதம் விதிக்கப் பட்டது. ஆனால் அந்த ஆசிரியர் ஒரு மாணவனிடம் திட்டு வாங்கிய செய்தி காட்டுத் தீபோல் மாணவர் மற்றும் ஆசிரியர்களிடையே பரவி அந்த ஆசிரியரை பள்ளியில் எல்லோரும் ஒரு மாதிரியாக பேச ஆரம்பித்தால் வெட்கப் பட்ட அந்த ஆசிரியர் பள்ளியினை விட்டு வேறு பள்ளிக்குச் சென்று விட்டார்.
அதே வேலைக்கு இன்னொரு ஆசிரியார் வந்தார். அவரும் ஒரு திடீர் டெஸ்ட் வைத்தார். முரட்டு மாணவனும் முன்பு நடந்ததுபோல் மறுத்தான். ஆனால் ஆசிரியர் உன்னால் எழுத முடியா விட்டால் வகுப்பினை விட்டுப் பொய் விடலாம். விருப்பமுள்ள மாணர்கள் எழுதட்டும் என்றார். எல்லா மாணவர்களும் பேப்பரினை எடுத்து எழுதும் பொது அந்த மாணவனும் வேறு வழியில்லாமல் எழுத ஆரம்பித்தான். ஆகவே ஒரு முரம்பாடான முரண்பட்ட நடத்தையினை தவிர்ப்பது நல்லதல்லவா?
ஒரு கொலையாளி சிறு கோபத்திற்குக் கூட தன் சொந்த பந்தங்களை நண்பர்களை கொலை செய்வார்கள். ஒரு மனிதன் பலசாலி என்பது ஒருவரை தரையில் வீழ்த்துவதில்லை. மாறாக ஒருவடைரு கோபத்தினை அடக்குவதுதான்
நெஞ்சம் திறக்கும் சாவிகள்:
ஒவ்வொரு வீட்டின் கதவிற்கும் ஒரு சாவி உள்ளது. அதேபோன்று மனிதர்களின் மனதினைத் திறக்க அவர்களின் குணாதிசயங்கள் அறிந்தும், அவர்களுடைய பிரச்சனைகள் தீர்க்க வழி செய்வதின் மூலம் அவர்கள் அன்பினைப் பெற முடியும். உதாரனத்திற்க்கு ஒரு மகனுக்கும், தகப்பனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு மகனை தந்தை வீட்டிற்கு வரக்கூடாது என்று சொல்லி விட்டார். அதனை அறிந்த அவருடைய நண்பர் தந்தையிடம் சென்று அவர் மகனை வளர்க்க எவ்வாறெல்லாம் பாடுபட்டார் என்பதினையும், அவர் மகன் தற்போது படும் துன்பத்தினையும் அவர் மனதினைத் தொடும் அளவிற்கு எடுத்துச் சொன்னதின் மூலம் அவர் மனம் இலக வைத்து விட்டார். உடனே அவரிடமே சொல்லி மகனை அழைத்து வரச் சொல்லிவிட்டார். .
மனநிலை அறிந்து செயலாற்றுங்கள்:
ஒரு மனிதனுடைய மனநிலை அவனுடைய இன்பம், துன்பம், செல்வம், வறுமை ஆகியவையினைப் பொறுத்தே அமையும். ஒரு மனிதன் ஒரு ஜோக்கினைக் கேட்டால் அவன் சிரிப்பது அவன் மன நிலையினைப் பொறுத்தே அமையும். அவன் வருத்தத்தில் இருந்தால் சிரிக்க மாட்டான். அவன் சந்தோசத்தில் இருந்தால் சிரிப்பான். நாம் மனிதர்களின் இதயங்களுடன் பேச வேண்டுமே ஒழிய அவர்களின் உடல்களிடம் பேசக் கூடாது.
மற்றவர்களின் நலனில் அக்கறைக் காட்டுங்கள்:
ஒரு தந்தைக்கு நான்கு மகன்கள். அவர் வேலைக்குச் சென்று விட்டு களைப்புடன் வீட்டுக்குள் நுழைகிறார். முதல் மகன் டி.வி. பார்த்துக் கொண்டு இருந்தான். இரண்டாவது மகன் ஹோம் ஓர்க்கு செய்து கொண்டு இருந்தான். மூன்றாமவன் பொம்மை வைத்து விளையாடிக் கொண்டிருந்தான். கடைப் பையன் தந்தையுனைப் பார்த்தும் அவரிடம் ஓடி வந்து கழுத்தைக் கட்டிக் கொண்டான். இப்போது செல்லுங்கள் தந்தை யார் மீது பிரியமாக இருப்பாரென்று? நீங்கள் அன்பினை யாரிடம் காட்டுகிண்றீர்களோ அதேபோன்று நாம் அவர்களிடமிருந்து அன்பினைத் திரும்பப் பெரமுடுமல்லவா?
உங்களுடைய தகப்பனார் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக இருக்கிறார்.அவரை நீங்கள் அருகில் இருந்து கவனித்துக் கொண்டு இருக்கின்றீர்கள். உங்கள் நண்பர் அதனை அறிந்து உங்களுக்குப் போன் செய்து 'நான் உனக்கு அல்லது உன் குடும்பத்திற்கு எதாவது உதவி செய்யவா? என்று கேட்கின்றார். தன் நண்பன் கஷ்ட காலத்தில் உதவ முன் வந்ததினைக் கண்டு நீங்கள் உண்மையிலே சந்தோசப் படுவீர்கல்லவா? இன்னொரு நண்பர் உங்களுக்கு போன் செய்து வார விடுமுறையில் சந்தோசமாக கழிக்க வெளியே செல்லலாமா? எனக் கேட்கின்றார். நீங்கள் உங்கள் தந்தையின் நிலைமையினை சொல்லியும் கூட விடாது உங்களை வற்புறுத்துகிறார் இப்போது சொல்லுங்கள் யார் உங்களின் உண்மையான நண்பர் என்று! ஆகவே நீங்கள் மற்றவர்களின் நலனில் அக்கறை செலுத்துவதின் மூலம் அவர்களின் அன்பினை பெறமுடியும்.
ஒரு சில மருத்துவமனைகளில் உள்ள டாக்டர்கள் வெறும் எம்.பி.பி.எஸ். மட்டும் படித்திருப்பார்கள் ஆனால் அவர்களின் மருத்துவ மனைகளில் கூட்டம் அலைமோதும். அனால் சில மேல்படிப்பு படித்த மருத்துவ மனைகளில் ஈ ஓட்டிக்கொண்டு இருப்பார்கள். காரணம் டாக்டர்கள் வைத்தியம் செய்வதில் பாதி குணம் அன்பாக பேசுவதில் பாதி குணம் நோயாளிகள் அடைவரில்லையா?
பெயர்களை ஞாபகபடுத்திக் கொள்ளுங்கள்:
நீங்கள் பலரை ரயில், பஸ், விமானங்கள், நடைப் பயிற்சியின்போது, கூட்டங்களில் பார்த்து பேசி விட்டு அவரி பெயரினை கேட்டுத் தெரிந்து ஞாபகப் படுத்திக் கொள்ளுங்கள். அடுத்த தடவை அவரைப் பார்க்கும்போதோ அல்லது தொலை பேசியில் பேசும்போதோ அவர் பெயரினைச் சொல்லி அழைத்தால் உங்களுடன் அவர் நெருக்கத்தினை ஏற்படுத்திக் கொள்வார்.அதற்காக தேவை இல்லாதவர் பெயரினை ஞாபகப்படுத்த வேண்டிய அவசியமில்லை.
விழிப்போடு கவனிப்பவராகவும், மற்றவர்களை பாராட்டுவராகவும் இருங்கள்:
உங்களை மற்றவர் எப்படி நடத்த வேண்டும் என எதிர்பார்க்கிறீர்களோ அதேபோன்று நீங்களும் அடுத்தவர்களை நடத்த வேண்டும் என எதிர்பார்ப்பது இயற்கைதானே! உங்களை ஒருவர் சாப்பாட்டுக்காக அழைக்கின்றார். அந்த சாப்பாட்டில் உள்ள குறைகளை பொறுத்துக் கொண்டு நிறைவினை பாராட்டினால் உங்களுக்காக கால் கடுக்க அடுக்களையில் நின்று சமைத்த அவரது தாய்க்கோ, அல்லது மனைவிக்கோ அல்லது சகோதரிக்கோ மனம் சந்தோசப்படுத்துமல்லவா? சில துர்மனங்கொண்ட பூக்களில் கூட நீங்கள் தேந்துளிகளை சேகரிக்கும் தேனீக்களாக இருக்க ஆசைப் படுங்கள். நீங்கள் புண்களில் மொய்க்கும் ஈக்களாக இருக்காதீர்கள்.
ஒரு சொர்ப்பழிவிற்க்குச் செல்லுகிறீர்கள், பேச்சாளர் தான் தயார் செய்து வந்த பேச்சினை ஒரு மணி நேரம் பேசுகிறார். அவர் பேச்சில் நீங்கள் விரும்பினால் அவரை நேரில் பாராட்டுங்கள். அவர் ஒரு மணி நேரம் தயார் செய்த பேச்சின் பலனை அடைவார். அதே நேரத்தில் அளவோடு பாராட்டுங்கள். நீங்கள் ஒரு நோயாளியினைப் பார்க்க மருத்துவமனை செல்லுகிறீர்கள், அவருக்கு மகிழ்ச்சியாக சில வார்த்தைகளை செல்லுவதினை விட்டு விட்டு நீங்கள் மிகவும் மெலிந்து உள்ளீர்கள், உங்கள் முகம் வெளிரியிருக்கிறது என்று சொல்லி அவரை மேலும் கலவரப் படுத்தார்தீர்கள்
குடும்பத்தில் சர்வாதிகாரியாக மாறாதீர்கள்:
ஒரு பள்ளி செல்லும் மாணவன் டி.வி. வீட்டில் பார்த்துக் கொண்டிருப்பான். அதனை மூன்று தகப்பனார்கள் எவ்வாறு அணுகுகிறார்கள் என்றுப் பாப்போம். ஒரு தந்தை அதிகாரத்துடன், 'டி.வியினை ஆப் செய்து விட்டு படத்தினை திருப்பிப் பார் என்று அதிகாரத் தோரணையில் சொல்லுவார்.
இரண்டாவது தந்தை, 'நீ பாடத்தினை திருப்பிப் பார்க்கவிட்டால் உன்னை அடிப்பதோடு, உன் பாக்கெட் செலவிற்கு ஒரு காசு தரமாட்டேன் என மிரட்டுகிறார்.
மூன்றாமவர் சொல்வார், 'பாடத்தினை திருப்பிப் பார்ப்பது உனக்கு உசிதமாக தெரியவில்லையா?' என கேள்வி எழுப்புகிறார். இந்த மூவரில் மூன்றாமவரின் அணுகுமுறை பலனைக் கொடுக்கும். நீங்கள் தேன்கூட்டைக் கலைக்காமல் தேனைப் பருக முயலுங்கள்
அனாவசிய சம்பவங்களில் உங்கள் மூக்கை நுழைக்காதீர்கள் ஒரு சபையில் நீங்கள் இருக்கின்றீர்கள். உங்கள் நண்பருக்கு ஒரு போன் வருகிறது. அவர் பேசி முடித்ததும் அது யார் போன், என்ன விஷயம் என்று கேள்விக்குமேல் கேள்விக் கேட்டுத் துளைக்காதிஈர்கள். ஒரு நபர் அடுத்தவருடைய பொருள்களை அனுமதியில்லாமல் எடுத்து உபயோகிப்பாது நல்ல பண்பாடு இல்லை?
குச்சியினை நடுவில் பிடியுங்கள்:
ஒருவரின் குறைகளை சுட்டிக் காட்டும்போது அவரின் நிறைகளைப் புகழ்ந்து குறைகளைச் சொன்னால் அவர் குறைகளைத் திருத்திக் கொள்வார். ஒரு பெட்டிக் கடைக்கு நீங்கள் செல்கிறீர்கள். கடைக்கு முன் வாழைப் பழத் தோல், சிகரெட் அட்டை, பாதி எறிந்த சிகரெட் போன்றவை அசுத்தமாக கிடந்தன. அந்தப் பெட்டிக்கடைக்காரரிடம் உங்கள் கடையில் மிகவும் பிசியாக வியாபாரம் நடக்கிறது. ஆனால் மற்ற கடைகளெல்லாம் அப்படியில்லை என்று சொல்லுங்கள் அவர் மிகவும் சந்தோசப் படுவார். இப்போது அவரிடம் சொல்லுங்கள் உங்கள் வாடிக்கையாளர்கள் கழிவுப் பொருளைப் போடுவதிற்கு ஒரு அட்டைப் பேட்டியினை வைத்தால் நலமாக இருக்கும் என்று சொல்லுங்கள். உடனே உங்கள் பேச்சுக்கு மதிப்பு அளித்து ஒரு அட்டைப் பெட்டி வைத்து விடுவார். ஆகவே குறைகளைச் சொல்ல நேர்ந்தால் நிறைகளை முதலில் சொல்லுங்கள். அவர் திருத்திக் கொள்வார்
தவறினை திருத்த முயலுங்கள்:
மனிதனின் உருவப் படைப்பில் பல வேறுபாடுகளைப் பார்க்கலாம். அதேபோன்று தான் அவர்களின் கருத்தும் வேறுபடும். முடிந்தவரை அடுத்தவரின் தவறினைத் திருத்த முயலுங்கள். அவ்வாறு முடியாவிட்டால் அவரை உங்களின் எதிரியாகக் கருத வேண்டாம். ஆனால் அவரின் தவறை திருத்தும் நம்பிக்கையிலிருந்து தழன்று விடாதீர்கள்.
உங்களை மட்டமாக நினைத்தவர்களிடமும் கருணைக் காட்டுங்கள்:
மென்மையான அணுகுமுறை உங்களுக்குப் பெருமை சேர்க்கும். கடுமையான அணுகுமுறை உங்கள் புகழைக் கெடுக்கும்.
சிலர் பலனை அனுபவிக்க மட்டும் வருவார்கள். ஆனால் உடல்,பொருள் பங்களிப்பில் அவர்கள் ஈடுபடமாட்டார்கள். அதற்காகக அவர்களை கடிந்து கொண்டால் நீங்கள் அவர்களுக்கு விரோதியாக மாறுவீர்கள்.
ஒரு காட்டில் இரு வழிப் போக்கர்கள் ஒரு வார பயணம் கொண்டார்கள். முதல் வழிப் போக்கர் தனது உடமைகளுடன் தனக்கு வேண்டிய உணவு தயாரிக்கத் தேவையான பொருக்களையும் சுமந்து சென்றார். அனால் இரண்டாம் வழிபோக்கர் உணவுப் பொருள் எதனையும் எடுத்துச் செல்லவில்லை. இரண்டு நாட்கள் நடந்த களைப்பில். இருவரும் ஒரு மர நிழலில் தங்கினார்கள். முதலாமவர் தான் கொண்டு வந்த உணவுப் பொருளை வெளியே எடுத்து வைத்தார். இரண்டாமவரிடம் நீங்கள் இதனை சூடு செய்ய சில காய்ந்த விறகுகளை எடுத்து வரச் சொன்னார். அதற்கு இரண்டாம் வழிப் போக்கர் தான் மிகவும் களைப்பாக இருப்பதாகவும், நீங்கள் போய் எடுத்து வாருங்கள் என்றார்.
முதலாமர் சிரமம் பார்க்காது விறகு சேகரித்து வந்து அடுப்பினை பற்ற வைத்து சமைத்து முடித்தார். அதன் பின்பு இரண்டாமவரிடம் நான் சாப்பாடு எடுத்து வைக்கிறேன் நீங்கள் குடிக்க கொஞ்சம் தண்ணீர் எடுத்து வாருங்கள் என்றார். இரண்டாமவரோ மறுபடியும் களைப்பாக இருக்கிறது என்றார். சிரமம் பார்க்காது முதலாமவர் தண்ணீர் கொண்டுவர கிளம்பி விட்டார். இந்த சந்தர்ப்பத்தினை சாதகமாக எடுத்துக் கொண்ட இரண்டாமவர் சமைத்திருந்ததினை சாப்பிட ஆரம்பித்து விட்டார். முதலாமவர் தண்ணீர் எடுத்து வந்ததினையும் வாங்கிக் குடித்து தூங்கச் சென்று விட்டார். இரண்டாமவர் போன்று வேட்டிகுமேல் சொரியும் கனத்த தோளினைக் கொண்டவர்களை அடித்தா திருத்த முடியும். ஆகவே உங்கள் மென்மையான அணுகுமுறையின் மூலமே திருத்த முடியும்.
அடுத்தவரை குறை சொல்லாதீர்கள்:
ஒருவரின் குறைகளை திரும்ப, திரும்ப குத்திகாட்டாதீர்கள். அதுவும் பலர் முன்னிலையில் குறை சொல்லுவது பிறருக்குப் பிடிக்காது. ஆனால் தனியாகச் சொன்னாள் ஏற்றுக் கொள்வார்கள். ஒரு லாரி டிரைவர் தன் குடும்பத்தினைக் காப்பாற்ற இரவில் பல நாட்கள் கண்விழித்து ஓட்டுகிறார். ஒரு நாள் அவ்வாறு ஓட்டும்போது கண் திறந்து கண் திறப்பதிற்குள் ஒரு சைக்கிள் ஒட்டி மீதி மோதி லாரியும் விபத்துக்குள்ளானது. பாத சாரிகள் காயம் பட்ட சைக்கிள் ஒட்டியினையும் லாரி டிரைவரையும் மருத்துவமனையில் சேர்க்காது லாரி டிரைவரை ஏக வசனத்தில் பேசி விட்டுச் சென்றார்கள். ஒரு சிலர்தான் உதவ முன் வந்தனர். வசை பாடுவர்கள் அந்த லாரி டிரைவர் நிலையில் இருந்து பார்த்தால் அவரை திட்ட மாட்டீர்கள்.
குரங்கு தனக்கு ஒரு புண் வந்தால் அதனை சொரிந்து சொரிந்து பெரிதாக்குமாம். அதேபோன்று அடுத்தவர் குறையினை ஊதி பெரிதாக்காதீர்கள்
அதேபோன்று ஒரு மனிதரைப் பற்றி தவறான செய்தி உங்கள் கவனத்திற்கு வந்தால் அதன் நண்பகத்தன்மையினை ஆராயுங்கள். காதில் விலும் செய்தி எல்லாம் உண்மையில்லை
காலத்திற்கு கட்டுப் படுங்கள்:
நீங்கள் எதிரியின் கையை முருக்க முடியவில்லையா, அவரின் கையைப் பற்றி வாழ்த்து தெரிவியுங்கள்.
உங்கள் மனைவி பல நல்ல குணங்களைக் கொண்டவராக இருக்கலாம். ஆனால் அவரின் சில நடத்தைகள் உங்களுக்குப் பிடிக்காமல் இருக்கலாம். அவரின் நல்ல குணங்களுக்காக அவரை நேசியுங்கள். அவரின் மறைவான குறைகளையும் வலை போட்டு அலசாதீர்கள். பழம் பழமொழி ஒன்று இங்கே சொல்லுவதுப் பொருத்தமாக இருக்கும், 'அமுங்கிக் கிடக்கின்ற தூசியினை கிளப்பாதீர்கள். அப்படி தூசி மேலே கிளம்பினாலும் உங்கள் கைகுட்டையால் மூக்கை மூடிக் கொள்ளுங்கள்'.
இன்னொரு பழமொழி, 'உங்களுக்குக் காலம் கட்டுப்படட்டும், அல்லது காலத்திற்கு நீங்கள் கட்டுபடுங்கள்'
குடும்ப பாங்கானவராக இருங்கள்:
ஒரு கணவன் தன் மனைவியிடம், 'பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு சீக்கரம் சாப்பாடு செய், அவர்களுக்கு சீருடை அணிந்து விடு, வீட்டினை சுத்தமாக வை, ஆபீஸ் துணிகளை துவை' போன்ற உத்தரவுகளை அடுக்கடுக்காக சொல்லிக்கொண்டே போவார். ஆனால் அவர் மட்டும் ஆபீஸ் முடிந்து சீக்கிரமாக வராமல் நண்பர்களுடன் அரட்டை அடித்து விட்டு வீட்டுக்கு கால தாமதமாக வருவார்.
ஒரு பள்ளி விடுமுறை நாளில் மனைவி, அவரிடம் ஏங்க இன்று பிள்ளைகளுக்கு விடுமுறை தெரியுமுள்ள, நீங்கள் ஆபீஸ் முடிந்ததும் உங்கள் நண்பர்களுடன் வழக்கம்போல் அரட்டை அடித்துவிட்டு லேட்டாக வராதீர்கள் என்றால் அது எனக்குத் தெரியும் என்று ஒரு முறைப்புடன் பார்த்து விட்டுச் செல்லாதீர்கள். குடும்ப பாங்கானவராக இருங்கள்.
சோகத்தில் உங்களை இழந்து விடாதீர்கள்:
ஒருவருடைய தந்தையோ, தாயோ,மனைவியோ, குழந்தையோ இறந்து விட்டால் விழுந்து விழுந்து அழுது அதனால் நீங்கள் மயக்கமுற்று அல்லது நெஞ்சு வலித்து அதனால் ஏற்கனவே துக்கத்தில் இருக்கும் வீட்டில் மேலும் சோகத்தினை ஏற்படுத்தாதீர்கள். ஆகவே சோகத்திலும் உங்களைத் தேற்றிக்கொள்ளும் மனப்பக்குவம் வேண்டும்.
1980 ஆம் ஆண்டு சஞ்சய் காந்தி விமான விபத்தில் இறந்ததும் அதனைக் கேள்விப்பட்ட உலகத் தலைவர்கள் புது டெல்லி அன்னை இந்திரா இல்லத்தில் துக்கம் விசாரிக்க வந்து விட்டனர். சோகத்திலும் இந்திரா அனைவரையும் வாசலில் நின்று வரவேற்ற காட்சியினை தொலைக்காட்சியில் காட்டினார்கள். அந்த நிகழ்ச்சி அனைவரின் உள்ளத்தினையும் தொட்டது. ஆகவே சோகத்தில் உங்களை இழந்து விடாதீர்கள்.
இறைவன் கொடுத்ததை வைத்து நிறைவோடு வாழுங்கள்:
ஒரு சிலர் பணக்காரர்களாக இருக்கலாம். ஆனால் அவர்களுக்கு மன நோய் ஏற்பட்டால் அவர்களை மற்ற மன நோயாளிகளுடன் தான் தங்க வைப்பர். ஆகவே மன தைரியத்தினை தவற விடாதீர்கள். நாம் மன தைரியத்துடன் இருப்பதினை அறிந்து சந்தோசப் படுங்கள். ஒருவருக்கு பல கோடி சொத்து இருக்கலாம். ஆனால் அவருக்கு இனிப்பு நீர் இருந்தால் எந்த பொருளும் ஆசையுடன் சாப்பிட முடியுமா? ஆகவே நீங்கள் வாழ்க்கையின் பிரகாசத்தினை எண்ணி எங்காது உங்கள் வாழ்வின் இருண்ட காலத்தினை எண்ணி மகிழ்ச்சியோடு வாழுங்கள்
மலைபோல் எதிர்ப்பில் எழுந்து நில்லுங்கள்:
உங்களுடைய நல்ல முயற்சியினை தொடரவிடாமல் எதிர்ப்பு ஏற்பட்டால் மலைபோல் நின்று சமாலியுங்கள். காற்று மணல், தூசிகளைதன் இடம் பெயர்க்கச் செய்ய முடியும். ஆனால் மலையினை அசைக்க முடியுமா? நீங்கள் ஒரு சபையிலோ, வீட்டிலோ, விரிவுரையாற்றும்போதோ, டி.வி. நிகழ்ச்சியிலோ பங்கேற்கும்போது ஒருவர் வேண்டும் என்றே சீண்டினால் அதற்காக கோபம் அடையாதீர்கள். உங்கள் கருத்தினை பொறுமையாக எடுத்து வையுங்கள். 'பொறுத்தவர் பூமியாழ்வார் என்ற பழமொழி என்றும் பொய்த்ததில்லை'
இருக்கின்றதினை வைத்து சிறப்புடன் வாழுங்கள்:
உங்கள் கார் பழையது, ஏர் கண்டிஷன் பழுதாகிவிட்டது, சீட் கவர் பழுதாகிவிட்டது. தற்போது அதனை சீர் செய்ய போதிய பண வசதியில்லை. கார் ரிப்பேராக இருக்கிறதே என்று வருந்துவதி விட, குறைந்த பட்சம் அந்த பழைய காராவது இருக்கிறதே என எண்ணி மகிழ்ச்சி அடையுங்கள். ஒருவர் சக்கரை நோயாளியாக இருப்பதினால் டீயில் சக்கரை இல்லாமல் குடிக்கலாம். ஆனால் அந்த டீகூட குடிக்க காசு இல்லாதவர் எத்தனையோ பேர் உள்ளனர் என்று எண்ணி சந்தோசப்படுங்கள்.
நீங்கள் ஒரு கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கச் செல்கிறீர்கள். ஆனால் அந்தப் பாடத்தில் இடம் கிடைக்கவில்லை. மாறாக ஆங்கில இலக்கியத்தில் இடம் கிடைத்து சேர்ந்து விட்டீர்கள். அதன் பின்பு மூன்று வருடமும் விருப்பப் பாடமான கம்ப்யூட்டர் சயன்ஸ் கிடைக்க வில்லையே என வருத்தப் பட்டே ஆங்கில இலக்கியத்தினை படிக்காமல் இருந்து விடப் போகிறீர்களா என்ன
கருத்து வேருபாடுகளிடையே நல்ல நண்பர்களாக இருக்க முடியும்:
சில டி.வி. நிகழ்சிகளில் பங்கேற்பவர் ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்வதினை பார்க்கலாம். ஒருவருடைய கருத்து அடுத்தவருக்கு ஏற்புடையதில்லாது இருக்கலாம். அதற்காக அவரை எதிரியாக கருதாது நிகழ்ச்சியின் முடிவில் ஒருவருக்கொருவர் சிரித்த முகத்துடன் கைகுலுக்கிக் கொண்டு இனியும் நண்பர்களாக இருப்போம் என்று சொல்லி விடை கொடுங்கள்.அவர் உங்களை என்றும் மதிக்கும் நண்பராக இருப்பார்.
மென்மையாக இருத்தல் உங்களை அழகுப் படுத்தும்:
ஒருவரை மிகவும் அமைதியானார், பண்பாளர்:என்று பாராட்டுவதுடன், இன்னொருவரை அவசரப் படுபவர், குரோதம் நிறைந்தவர் என்றும் தூற்றுகிறோம். ஒருவரின் குறையினைச் சொல்லும்போது அவரை பகைத்துக் கொள்ளாமல் சொல்லுங்கள். திருமணமான தம்பதிகள், பொற்றோர், ஒரு நிறுவன நிர்வாகிகள், ஆட்சியாளர்கள் மென்மையாக நடந்து கொண்டால் பெரும்பாலான குழப்பங்கள் தவிர்க்கலாம்.. ஒரு கிராமிய பழமொழி, 'மென்ன்மை அழகு படுத்தும், கடுமை அதனை சிதைக்கும்'
சுவையுடன் வாழுங்கள், உயிரில்லாதவர் போல் வாழாதீர்கள்:
ஒரு மனிதர் தன வீட்டரிடமோ, பக்கத்து வீட்டரிடமோ, உடன் பிறந்தவர்களிடமோ, நண்பர்களிடமோ, குழண்டைகளிடமோ பாச பிடிப்பில்லாமல் வாழ்வார். ஒரு கல்லூரியில் பி.ஏ முதலாண்டு படிக்கும் மகன் தந்தையிடம் வந்து தனது லெக்சரர் வைத்த மாடல் பரிச்சையில் ஒரு திருத்தம் இல்லாமல் வினா எழுதியிருப்பதினைக் காட்டுவான். ஆனால் தந்தையோ அவனை பாராட்டாது 'ஆமாம் இவர் பி.எச்.டி. பரிச்சையில் மார்க் வாங்கிவிட்டது போன்ற மகிழ்ச்சியாக்கும்' என்று பாரா முகமாக இருந்தால் மகனுக்கு எப்படி இருக்கும்., ஒருவர் தன உறவினர் வீட்டுக்குச் செல்கிறார். அந்த உறவினரும் அவரை வரவேற்று டீ கொடுக்குறார். அதன் பின்பு வீட்டுக்குள் சென்று சமீபத்தில் பிறந்த தனது பேரனை ஒரு போர்வையில் வைத்து எடுத்து வந்து உறவினருக்குக் காட்டுகிறார். உறவினர் குழந்தையினை வாங்கி ஒரு முத்தம் கொடுத்து திரும்ப டீ. குடிப்பதிற்குப் பதிலாக குழந்தையினை ஏறப் பார்த்து விட்டு டீ யை மடக் மடக் என்று குடிப்பதிலேயே கவனமாக இருக்கிறார்.
ஆகவே உயிரில்லாதவர் போல வாழாது சுவையுடன் வாழ்ந்து உங்கள் இன்ப, துன்பங்களை வெளிக்காட்டுங்கள்
உங்கள் நாவினை சுவையுள்ளதாக ஆக்குங்கள்:
மனித உடல் பகுதியில் மிகவும் காக்கப்பட வேண்டிய சதைபிண்டம் நாக்குதான்.
உங்கள் மனைவி உங்களுக்காக சுடச்சுட வஞ்சரம் மீன் குழம்பு சமைத்து சாப்பிடப் பரிமாறுகிறார். நீங்கள் முதல் கவள சாப்பாட்டினை எடுத்து வையில் வைக்கிறீர்கள். குழம்பில் உப்பு அதிகமாக இருக்கிறது. அதற்காக வானத்திற்கும் பூமிக்கும் குதித்து உங்கள் கோபத்தினைக் காட்டினால் உங்கள் மனைவி மனம் வருந்தும். ஆகவே, உன் மீன் குழம்பு மிகவும் ஜோர், கொஞ்சம் உப்பை குறைத்திருந்தால் இன்னும் சுவையாக இருக்கும் என்று சொல்லிப் பாருங்கள். அடுத்தத் தடவை மிக கவனமாக சாப்பாடு உங்கள் மனைவி தயாரிப்பார்.
ஒரு நண்பர் மற்றொரு நண்பரிடம் ஒரு புத்தகத்தினை படிக்க இரவல் வாங்கிச் சென்றார். பல நாள் கழித்து அதனை திருப்பிக் கொடுத்தார். அப்போது அந்தப் புத்தகத்தில் பல பக்கங்கள் தண்ணீரில் நனைத்தும், சிறு சிறு உணவுப் பொருளும் இருந்ததால் அழுக்காகவும் மற்றும் கசங்கியும் இருந்தது. அதே நண்பர் சில நாட்கள் கழித்து திரும்ப வந்து இன்னொரு புத்தகத்தினைப் படிக்கக் கேட்டார். நண்பர் தன் வீட்டுக்குள் சென்று அவர் கேட்ட புத்தகத்தினை ஒரு தட்டில் வைத்துக் கொடுத்து எடுத்துச் செல்லுங்கள் என்றார்.
இரவல் கேட்ட நண்பர் சொன்னார் நான் புத்தகம் மட்டும் தானே கேட்டேன், நீங்கள் தட்டையும் சேர்த்துக் கொடுக்கிறீர்களே என்றார். அதற்கு புத்தக நண்பர் சொன்னார், புத்தகம் நீங்கள் படிப்படிற்கு, தட்டு நீங்கள் படிக்கும்போது சாப்பிடும் உணவுப் பொருள் வைப்பதிற்கும், தண்ணீர் மூடுவதிற்கும் என்று சொன்னாரே பார்க்கலாம், இரவல் கேட்ட நண்பர் நாணப் பட்டு இனிமேல் அதுபோன்று நடக்காது என்று சொல்லி தட்டுவினைத் திருப்பிக் கொடுத்து விட்டு நகன்றார்.
'ஒவ்வொரு கனிவான வார்த்தையும், ஒரு அன்பளிப்பாகவும் அருளிரக்கச் செயலாகவும் அமையும்' என்பது முன்னோர் பழமொழி
அடுத்தவர் குறை சொல்லுவார்கள் என அஞ்ச வேண்டாம்:.
குறை சொல்லுபவர் பல விதம்:
1) சிலர் உண்மையிலேயே அறிவுரை சொல்ல வேண்டும் என நினைப்பர். ஆனால் அவருக்கு திறமை போதாது.
2) சிலருக்கு உங்கள் மீது பொறாமை கொண்டு உங்களை அவர்களின் வார்த்தைகளால் வருந்தச் செய்வர்.
3) சிலருக்கு தாம் என்ன செய்கிறோம் என்றே தெரியாது குறை சொல்வர்.
4) சிலர் இருண்ட உள்ளம் கொண்டவர். எப்போதுமே குறை சொல்லுவதையே வழக்கமாகக் கொண்டவர் ஆவர்.
சீன பழமொழி, 'மக்களுக்கு ஒரே சுவையுணர்வு இல்லாவிட்டால் உலகில் வியாபாராமே நடக்காது'
ஆகவே வேண்டு என்றே குறை சொல்லுபவர் உலகில் ஏராளம். அவர்கள் கூற்றினை சட்டை செய்யக் கூடாது.
ஒருவர் தனது பழைய காரை விற்றவுடன் நண்பர் ஒருவர் வந்து விற்ற விபரம் கேட்டுவிட்டு எனக்குத் தெரிந்திருந்தால் இன்னும் அதிக விலைக் கொடுத்து வாங்கி இருப்பேன் என்று. உடனே உங்கள் மனம் சஞ்சலப்படும். அதனைத் தவிர்க்க நீங்கள், 'காரை விற்றாகி விட்டது பின்பு அதைப் பற்றிய பேச்சை விடுங்கள்' என்று சொல்லவேண்டும்,
மனிதனுக்கு பகையில்லாத இவ்வுலகமில்லை. அதற்காக நீங்கள் இமயமலைக்குப் போய்யா தனியாக வாழ்ந்து உங்களை வருத்த வேண்டும்?
சிரித்துக் கொண்டே இருங்கள்:
சிரிப்பது கோபம் கொள்வதினை தவிர்க்கும். துணிச்சலானவர் யார் என்றால் கோபத்தினை அடக்கி துன்பத்திலும் சிரிப்பவர் ஆவர்.
மகாத்மா காந்தி, கோட்சேயின் துப்பாக்கிக் குண்டுக்கு இறையானபோதும், நபிகள் நாயகத்தின் கழுத்தில் கிடந்த துண்டினை முறுக்கிய கடன் கொடுத்தவர் கண்டு பலர் கோபப்பட்டும் அவர்கள் கோபம் அடையவில்லை. ஆகவே தான் அவர்கள் உலகில் உயர்ந்தவர்களாக கருதப் படுகிறார்கள்.
கிராமப் பழமொழி, 'வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும்'
ரகசியம் காக்க:
எந்த ஒரு ரகசியமும் ஒருவரினை மீறிப் போகிறதோ அவை ரகசியமாக இருக்க முடியாது. எது அந்த இருவர் என்பதிற்கு பலர் பல விளக்கங்களை சொல்வர். ஆனால் உண்மையில் அந்த இருவர் ஒரு மனிதனின் இரு உதடுகளே என்றால் மிகையாகாது.
ஒருவர் ஒரு இரகசியத்தினை சில காலம் பத்திரமாக பூட்டுப் போட்டு வைத்திருப்பார். காலச் சக்கரம் சுழல சுழல அந்த ரகசியம் வெளி வரத் தொடங்கும். அது பல நபர்களை அடைந்து பல்வேறு உருவம் கொடுக்கப்பட்டு பூதாகாரமாக கிளம்பும்.
ஒருவர் இரகசியத்தினை காக்க திறனில்லாதவராக இருந்தால் அது மனைவியே ஆனாலும் அவரிடம் சொல்லாதீர்கள்.
நீங்கள் ஒரு இரகசியத்தினை எவ்வளு தூரம் காபாத்துகிரீர்கள் என்பதினைப் பொருத்து உங்கள் மீது பிறர் வைத்து இருக்கும் நண்பகத்தன்மையும், மதிப்பும் அதிகர்க்கும்.
எவர் ஒருவர் உங்கள் இரகசியத்தினை அறிவாரோ அவர் உங்களை சீக்கிரமே அடிமைப் படுத்தி விடுவார்.
மக்களுக்கு உதவி செய்யுங்கள்:
பலன் நோக்கா உதவி செய்பவர் புகழ் என்றுமே மறைவதில்லை:
அடுத்தவர்களுக்காக வாழ்ந்தவர் பிற்காலத்தில் வறுமையில் வாழலாம். ஆனால் அவர் பிறர் மனதில் நீகா இடம் பிடித்து புகழுடன் மறைவார்.
உங்கள் திறமை மீறி உங்கள் தொழில் பழுவினை ஏற்றாதீர்கள்
சிலர் எந்தக் காரியத்தையும் நான் நான் என்று அள்ளிப் போட்டுக் கொண்டு செய்வர். அதனால் சில குறைபாடுகள் ஏற்படும்.
ஒரு பொது சேவை நண்பரினைத் தேடி பலரும் உதவி கேட்டு வருவர். அத்தனை உதவியையும் ஒருவர் செய்து கொடுக்க முடியாது. முடிந்த காரியத்தினை செய்து கொடுத்து
விட்டு முடியாத காரியத்தினை தவிர்த்து விடுங்கள். இல்லையென்றால் பலரின் பகையினையும் பெற வேண்டியிருக்கும்
'மக்களுக்கு உதவி செய்பவர்களுக்கு இறைவன் உதவி செய்வான்', பல வேதங்கள் கூறும் பொன்மொழி.
'அடுத்த வீட்டுப் பிள்ளைக்கு ஊட்டி வளத்தால் தன் பிள்ளை தானே வளரும்' கிராமிய பழமொழி.
உங்கள் சோம்பேறித்தனம் பலரைப் பாதிக்கும்:
ஒரு கம்பனி மேனேஜர் சோம்பேறியாக இருக்கிறார். அவர் மேஜையில் பைலுக்கு மேல் பைல் தேங்கிக் கிடந்தது. ஒரு நாள் அவருடைய எம்.டி இடமிருந்து தொலைபேசி வந்தது. அதில் அந்த அலுவலகத்திற்கு அடுத்த நாள் காலையில் ஆய்வுக்காக வருவதாகச் சொன்னார். உடனே மேனேஜர் சுதாரித்துக் கொண்டு முயல் வேகத்தில் தன் பி.ஏ வினைக் கூப்பிட்டு 'ஏன் இத்தனை பைல்கள் தேங்கிக் இடக்கின்றன என்று சொல்ல வில்லை என்று சப்தம் போட்டு அதனை பைல்களையும் எடுத்துச் சென்று இன்று மாலைக்கும் அனைத்து ஊழியர்களும் முடித்துக் கொடுத்து விட்டுத்தான் வீடு போக வேண்டும் என்று கட்டளையிட்டார்.
பி.ஏவும் அனைத்து பைல்களையும் எடுத்துச் சென்று எரிச்சலுடன் ஒவ்வொரு மேசையாக வீசி விட்டு மேனேஜர் கட்டளையினைச் சொன்னார். அப்போது ஒரு ஊழியர் சொன்னார், 'சார், என் மகனுக்கு இன்று பிறந்த தினம், மாலை சீக்கிரமாக வீட்டுக்குப் போக வேண்டும் என்றார். அதற்கு பி.ஏ முடியாது என்று சொல்லி விட்டார். அந்த ஊழியரும் மற்றவர்களைப் போல முனு முணுத்து விட்டு வெகு நேரம் இருந்து வேலையினை முடித்துக் கொடுத்து விட்டுச் சென்றார். வீட்டுக்குள் சென்றதுமே செருப்புகள் ஒரு பக்கமும், ஆபீஸ் பை ஒரு பக்கமும் பறந்தது.
அதற்கு மேல் மனைவி,' ஏங்க கொஞ்ச சீக்கிரம் வரக்கூடாதா பிள்ளை நீங்கள் வருவீர்கள் என எதிர்பார்த்து ஏமாந்து தூங்கி விட்டான்' என்று சொன்னது தான் தாமதம் தன் மேனேஜர் மேல் உள்ள கோபத்தினை தன் மனைவியிடம் காட்ட ஆரம்பித்து விட்டார். அத்தனைக் குழப்பதிற்கும் சோம்பேறி மேனேஜர் தான் காரணம். ஆகவே வேலையினை பலரிடம் பகிர்ந்து கொடுத்து குறிப்பிட்டக் காலத்திற்குள் முடிக்கப் பாருங்கள். நீங்கள் சோம்பேறியாக இருந்தால் அடுத்தவர் உங்கள் மீது சவாரி செய்ய நினைப்பார். .
குறிப்பறிந்து உதவுங்கள்:
உங்களை ஒருவர் அவமதிக்கும்போதோ, அல்லது சீண்டும்போதோ உங்கள் நண்பர் உங்களுக்கு உதவிக்கு வருகிறார் என்றால் உங்கள் முகம் எவ்வளு பிரஹாசம் அடையும். அதேபோன்று நீங்களும் அடுத்தவருக்கு உதவுங்கள். ஒருவனுடைய வேஸ்டி ஆற்றில் அடித்து செல்லும்போது கரையில் இருக்கும் நண்பர் தனது வேஸ்டியினைக் கொடுத்தால் எவ்வளவு மகிழ்வார்.
உங்களது நண்பர் வீட்டுக்குச் செல்கிறீர்கள். உங்கள் வருகையினை பார்த்து மகிழ்ச்சியில் உங்கள் நண்பரின் ஒன்பது வயது மகன் அவனது தாயார் கொடுத்த டீயினை தட்டில் வைத்து எடுத்து வருகிறான். அப்போது உங்கள் முன் டீயினை வைக்கும் பதட்டத்தில் டீயினை சிந்தி விடுகிறான். அப்போது அவனை உங்கள் நண்பர் திட்டுகிறார். நீங்கள் அந்தப் பையனுக்காக பரிந்து பேசினால் அந்த சிறுவனுடைய மகிழ்ச்சிக்கு அளவே இருக்காதல்லவா?
அறிவாளிகள் எப்போதும் அடுத்தவர் மனங்கவர்ந்து அன்பைத் தேடுவர்.:
வெளித்தோற்றங்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்:
நீங்கள் ஒரு நண்பருடைய வீட்டுக்குச் செல்கிறீர்கள். அவர் வீட்டில் செருப்புகள் பல பக்கத்திலும், ஸ்கூல் பைகள் மற்றும் புத்தகங்கள் வீட்டு ஹாலுக்குள் இரைந்தும், பாத்திரங்கள் சில பக்கங்களில் அலங்கோலமாக கிடக்கின்றன என்றால். அந்த நண்பர் வீட்டினைப் பற்றிய நன் மதிப்பு உங்களிடம் வருமா? நீங்கள் வேலை பார்க்கும் அலுவலகம் சுத்தமாக வைக்கப் பழகிக்கொள்ளுங்கள்.
அதே போன்று தான் உங்களைப் பார்க்கும் முதல் பார்வையிலே உங்கள் தோற்றத்தினை வைத்து அடுத்தவர் எடை போடுவார். நீங்கள் நல்லாடைகளை உடுத்த எப்போதுமே ஆர்வமாக இருங்கள். 'ஆள் பாதி ஆடை பாதி என்பது' கிராமிய பழமொழி இன்றைய நவீன உலகத்திற்கும் பொருந்தும்.
பொய் சொல்லுவதினை தவிர்ங்கள்:
சிலர் பொய் சொல்ல்வதினையே வாடிக்கையாக வைத்திருப்பார். பொய் சொல்லுவது உங்களுடைய நண்பர்களையும், உறவினர்களையும், சக ஊழியர்களையும் உங்களிடமிருந்து பிரித்து விடும். 'புலி வருது, புலி வருது' என்று விளையாட்டாக சொல்லி உண்மையிலே ஆபத்து வந்தால் யாரும் காப்பாற்ற மாட்டார்கள்.
சிலர் சில சம்பவங்கள் சுவாரிசமாக இருக்கவேண்டும் என்று கண்ணும் காதும் வைத்து பலர் ரசிக்கச் சொல்லுவார்கள். அவர்கள் எத்தனை காலத்திற்குத்தான் மிகை படுத்திச் சொல்ல முடியும். அவர்களுடைய சாயம் சீக்கிரமே வெளுத்து விடும்.
கொண்ட கொள்கையில் உறுதியாக இருங்கள்:
ஒரு மனிதனை எடை போடும்போது அவன் கொள்கையில் எவ்வாறு உறுதியாக இருக்கின்றான் என்பதினைப் பொறுத்தே அமையும். ஒரு ஊழியர் லஞ்சம், கையூட்டு, மது, மாது, அடுத்தவர் விருந்தோம்பலை விரும்புவதில்லை என்றால் அவர் மீது சக ஊழியர் மதிப்புடன் பழகுவர்.
ஒரு கணவர் மது, புகைத்தல், சூதாடுதல், விலை மாதர்களில் நாட்டம் கொண்டவர் என்றால் மனைவி அவரை கண்டிக்க தவறக் கூடாது. கணவரின் ஊதாரித் தனத்தினை முளையிலே கட்டுபடுத்த வில்லை என்றால் பிற்காலத்தில் ஒரு குடும்பமே பாதிப்பினை அடைய நேரிடும்.
நீங்கள் பொய் சொல்லுபரின் செயலை ஆதரிக்காதீர்கள். அப்படி நீங்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்தால் உங்கள் மீது உள்ள நன்பகத் தன்மையும் போய்விடும்
வறியவருக்கு தீங்கு விளைவிப்பதினைத் தடுப்போம்:
ஒருவர் பிறரைப் பற்றி அவதூறு பேசுவதால் பலருக்கு அவரைப் பிடிப்பதில்லை. அவரை யார் விரும்புவார் என்றால் அவர் போன்று புறம் பேசுபவரே!
வசதிப் படைத்தவர் வறியவரின் சொல்லை சட்டை செய்வதில்லை. ஒரு சிலர் சிங்கம் போல ஏழைகளை அடிப்பதும், வறியவரை ஓட, ஓட விரட்டுவதுமாக இருப்பார். ஆனால் அவர்களுக்கு ஒரு சங்கடம் வந்தால் தீக்கோழி தன் தலையினை மணலுக்குள் புதைத்துக் கொள்வதுபோல் மறைந்து விடுவர்.
'ஒரு நாள் அகங்காரம் கொண்டவர் ஓய்வு எடுக்கும்போது ஒடுக்கப் பட்டவர் வீறு கொண்டு எழுவர்' என்பது உலக நியதி.
எதிரிகளின் எண்ணிக்கையினை அதிகமாக்காதீர்கள்:
நீங்கள் பலரிடம் பழகும்போது, சிலர் கோபம் கொள்பவராக இருப்பார், சிலர் அறியாமையின் சிகரங்களாக இருப்பார், சிலர் தீய எண்ணங்கள் கொண்டவராக இருப்பார், சிலர் விதண்ட வாதம் செய்பவர்களாக இருப்பார். அவர்கள் எல்லோரையும் நீங்கள் பகைத்துக் கொள்ள முடியாது. நீங்கள் உலகில் வாழும் நாள் குறுகியதே ஆனதால் அதிகமான எதிரிகளை தேடிக்கொள்ளதீர்கள்.
தாராள மனப் பான்மை கொள்ளுங்கள்:
உற்றார், சுற்றத்தார்,மிகவும் விரும்பக் கூடியவர், விருந்தோம்பலுக்குப் பெயர் போனவர், அடுத்தவர் கேட்காமலே உதவுவர்தான் தாராள மனப் பான்மை கொண்டவர்.
ஆனால் புகழுக்காகவும்,, தலைமைப் பதவிக்காகவும், அடுத்தவர் புகழ வேண்டும் என்று தாராள மனப் பான்மையுடன் நடந்து கொள்பவர் சாயம் சீக்கிரமே வெளுத்து விடும்.
அதே நேரத்தில் கையினை ரெம்போ தாராளமாக விரிக்கவும் கூடாது, கஞ்சதனத்தில் இறுக்கிப் பிடிக்கவும் கூடாது
உணர்வுப் பூர்வமாக இருங்கள்:
ஒரு மனிதர் உங்களை கடைத் தெருவில் பார்கிறார். அவர் முகம் இறுகிப் போயிருந்தது. அதே நபரை சில நாட்கள் கழிந்து ஒரு திருமண நிகழ்ச்சியில் பார்கிறீர்கள்., அப்போதும் அதே இறுகிய முகத்துடன் காட்சி தருகிறார். நீங்கள் உங்கள் வீட்டுக்குச் சென்றால் அந்த இறுகிய முகம் தான் நினைவுக்கு வரும். அதே நேரத்தில் ஒருவர் உங்களை நடை பயிற்சியின் பொது ஹல்லோ என்று சிரித்த முகத்துடன் சொல்லி விட்டு செல்கிறார். நீங்கள் வீட்டுக்குச் சென்றாலும் அந்த சிரித்த முகம் தான் நினைவுக்கு வரும்.
ஆனால் அன்றாடம் உங்கள் வாழ்க்கையில் சந்திக்கும் உங்கள் மனைவி, குழந்தை, பெற்றோர், உற்றார், உடன் பிறந்தோர், அலுவலக நண்பர்கள் ஆகியோர்களை சிரித்த முகத்துடன் அதே நேரத்தில், கோபத்திலும், வாக்குவாதத்திலும், குறை சொல்லும்போதும் சந்திக்க நேரிடும். ஆனால் அவர்களுக்கும் நாம் காட்டும் அன்பும், பரிவுமே என்றென்றும் நிலைத்து இருக்கும்.
ஆகவே வாழ்கையில் உணவுப் பூர்வமாக இருங்கள்.
முடிந்தவரை உதவுங்கள்:
ஒரு மனிதர் உங்களிடம் ஒரு உதவியினை பெற நினைத்து அதைப் பெற முடியாமல் திரும்பும்போது உங்களது மனம் வருந்துமல்லவா?
ஆகவே கூடியமானவரை உதவி கேட்டு வரும் நபரின் தேவைகளை குறைந்தளவாது நிறைவேற்ற முயற்சி செய்யுங்கள். இல்லை என்றால் உங்களிடம் உதவி பெற முடியாதவர் உங்களைப் பற்றி அவதூறு பரப்புவார். ஒருவர் கேட்ட உதவியினை கொடுக்க முடியாவிட்டால் அவரை உபசரித்து ஒரு கிளாஸ் தண்ணீராவது கொடுத்து கனிவாகப் பேசி அனுப்பி வையுங்கள்.
இரண்டு கண்களாலும் பாருங்கள்:
நாம் இயற்கையிலேயே குறைகளை கண்டு பிடிப்பவர்களாக இருக்கின்றோம்.
ஒரு பள்ளி ஆசிரியர் சோம்பேறி மாணவரை குறை சொல்லுவதும், ஒழுங்காக படிக்கும் மாணவனைப் பாராட்டுவதும், ஒரு வீட்டில் சுட்டி செய்யும் மகனை தந்தை கண்டிப்பதும், அமைதியான பிள்ளைகளை செல்லமாக நடத்துவதினையும் காணலாம். அதே நேரத்தில் மக்கு மாணவனின் வேறு திறமையினை ஆசிரியர் அறிந்து பாராட்டியும், சுட்டி செய்யும் பிள்ளைகளின் நல்ல குணங்களை கண்டறிந்து பலர் முன்னிலையில் தந்தை பெருமை கொள்ளும்போது அவர்கள் திருந்தி வாழ வழி பெறக்கும். அத்துடன் நீங்கள் அவர்கள் மனதில் என்றும் நீங்காமல் இருப்பிஈர்கள்.
காரியம் சாதிக்க தாராளமாக புகழுங்கள்:
ஒரு குழந்தை தன் காரியத்தினை சாதிக்க தந்தையின் கழுத்தைக் காட்டிப் பிடித்துக் கொண்டு கொஞ்சி தனக்கு வேண்டியதினைப் பெறும். அதேபோன்று ஒருவரிடம் உதவியினை நாட வேண்டுமென்றால் அவரை தாராளமாக புகழுங்கள்.
உங்கள் நண்பரை உங்கள் வீட்டுக்கு சாப்பிடுவதிற்காக அழைக்க எண்ணினால் உங்கள் மனைவிடம் எவ்வாறு கெஞ்சி ஒத்துக் கொள்ள வைக்கிறீர்களோ அதேபோன்று வார்த்தைகளை தாராள உபயோகிங்கள்.
'பெரிய கவலை சாப்பாடு முழுங்குமுன் பற்களால் அரைத்துக் கொள்ள பழகிக் கொள்ளுங்கள். இல்லையென்றால் அந்த உணவு செரிக்காது'.
நீங்கள் எப்போதும் வெற்றியினை அடைய முடியாது:
மேலே குறிப்பிட்ட பல பண்பாட்டுச் செயல்களால் வாழ்க்கையினை சிறப்புடன் நடத்த முடியும். அவ்வாறு முடியா விட்டாலும் உங்கள் முயற்சியினை விட்டு விடாதீர்கள்,
ஏனென்றால் நான் சொல்லாத பண்பாடுகள் பல இருக்கின்றன. அவை மேலும் அனுபவத்தில் தெரிந்து கொள்ள வேண்டியவை.
Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)