வெள்ளி, ஆகஸ்ட் 30, 2013

உடல் தானமும்,இரத்த தானமும்

அ. முஹம்மது கான் பாகவி


 அறிவியலின் அதீத முன்னேற்றத்தால், முற்காலத்தில் சாத்தியமில்லாமல் இருந்த கனவுகள் பல தற்காலத்தில் நனவுகளாகி உள்ளன. அவற்றில் மருத்துவத் துறையின் சாதனைகள் திகைக்கவைக்கின்றன. போன உயிரை மீட்க முடியவில்லையே தவிர, மற்றெல்லா ஊகங்களும் நிஜங்களாகிவருகின்றன.
அதே நேரத்தில், சாதனைகளே சிலவேளைகளில் சோதனைகளாகி மனித இனத்தைச் சீரழிக்கவும் செய்கின்றன. ‘புதிய கண்டுபிடிப்புகள்என்று சொல்லி, மனித நாகரிகம், பண்பாடு, சமய மரபுகள், சமூக்க் கோட்பாடுகள் ஆகியஅனைத்துத்தார்மிகநெறிகளும்கேலிக்கூத்தாக்கப்பட்டுவிடுகின்றன.
கடிவாளமில்லாத விலங்கு மட்டுமல்லகட்டுப்பாடில்லாத மனித ஆராய்ச்சியும்பேரழிவுதான்அணுஆயுதங்கள்வேதிப்பொருட்கள்மின்னணுச் சாதனங்கள் ஆகியவை சில எடுத்துக்காட்டுகளாகும்இவற்றால் மனித குலம் அனுபவிக்கும் நன்மைகளைவிடத் தீமைகளே அதிகம்மதுவைப்போல்.
மருத்துவ ஆராய்ச்சி –குறிப்பாக அலோபதி சிகிச்சை முறைஎன்பது உடனுக்குடன் பலன் தந்தாலும் அதன் பக்க விளைவுகள் நீண்ட காலத்திற்குப் பெரிய பாதிப்பையே தரவல்லவைஊசி மருந்துகள்மாத்திரைகள், ’டானிக்குகள் போன்ற சிகிச்சைப் பொருட்கள் தயாரிக்கப் பயன்படும் மூலப் பொருட்கள் மிகவும் ஆபத்தானவை என்பது பலருக்கும் தெரியாது.
அவ்வாறேகருக்கலைப்புக்ளோனிங்வாடகைத் தாய் போன்ற மருத்துவ ஆராய்ச்சிகளால் மனித சமுதாயத்திற்கு மிகப்பெரும் கேடுகள்தான் விளைகின்றனஅறுவை சிகிச்சை முறை கட்டிகளை அகற்றப் பயன்படுவதைப் போன்றேஉறுப்புகளை எடுத்து மற்றொருவருக்குப் பொருத்தவும் பயன்படுகிறது.
*இரத்த தானம்
ஒரு நோயாளிக்கு இரத்தம் செலுத்த வேண்டிய தேவை ஏற்படுவதுண்டுஅவரது இரத்தப் பிரிவு என்ன என்பதை அறிந்துஅதே பிரிவு இரத்தமுள்ள மற்றவரிடம் தானமாகவோ விலை கொடுத்தோ இரத்தம் பெற்று,நோயாளிக்குச் செலுத்தும் முறை மருத்துவ உலகில் வெற்றிகரமாகச் செயல்பட்டுவருகிறது.
இதற்காக இரத்த வங்கியின் தேவைமுதலாம் உலகப் போருக்குமுன் உணரப்பட்டதுஇரத்தத்தைச் சேகரித்து, சேமித்து, பதப்படுத்தி வழங்குகிற நிறுவனமே இரத்த வங்கி (Blood Bank) ஆகும்இரத்த தானம் மூலம் சேகரிக்கப்படும் இரத்தங்களே பெரும்பாலும் இதில் சேமிக்கப்படுகின்றன.
ஒரு தாய் மற்றொருவரின் குழந்தைக்குப் பாலூட்டும் முறை இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றதுஅதற்காக அத்தாய் கூலியும் பெறலாம்(அல்குர்ஆன், 65:6).
தாய்ப்பால் எப்போதும் சுரந்துகொண்டிருப்பதால்அடுத்தவர் குழந்தைக்குப் பாலூட்டுவதால் தாய்க்கோ சேய்க்கோ பெரும்பாலும் பாதிப்பு ஏற்படுவதில்லை.தாய்ப்பாலுக்காக ஏங்கும் குழந்தை ஆரோக்கியமாக வளர உதவும் வாய்ப்பும் இதில் உள்ளது.
பாலைப் போன்றே மனிதனின் உடலில் இரத்தமும் ஊறிக்கொண்டே இருக்கிறது.எனவேநோயாளிக்கு இரத்தம் வழங்குவதால் கொடையாளிக்குப் பாதிப்பும் இல்லைநோயாளிக்குப் பயனும் கிடைக்கும்எனவேஇரத்த தானம் செய்வது மார்க்கச் சட்டப்படி செல்லும்.
ஆனால்அவசியத்தை முன்னிட்டே இரத்த தானம் செய்ய வேண்டும்அத்துடன இரத்த தானம் செய்வதால் கொடையாளிக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்பதைச் சோதனை மூலம் உறுதி செய்துகொள்ள வேண்டும்இரத்தம் கொடுத்துவிட்டுக் கூலி வாங்கக் கூடாது. “இரத்தம் விற்ற காசுக்கு நபி (ஸல்அவர்கள் தடை விதித்தார்கள்”. (புகாரீ)
 
                                                                                                               *இரு வகை உறுப்பு தானம்
கண்சிறுநீரகம்இருதயம்ஈரல்கல்லீரல் போன்ற உறுப்புகளைத் தானமாகவோ விலைக்கோ வாங்கிதேவையான நோயாளிக்குப் பொருத்தும் நடைமுறையும் பரவலாகக் காணப்படுகிறது.
உயிருடன் இருக்கும் ஒருவரின் உறுப்பை வெட்டி எடுத்து அடுத்தவருக்குப் பொருத்துவது ஒரு வகைஇறந்துபோனவரின் உறுப்பை வெட்டி எடுத்து அடுத்தவருக்குப் பொருத்துவது இன்னொரு வகை.

முதல் வகை உறுப்பு தானம் மார்க்கத்தில் செல்லாது என்பதில் இஸ்லாமியஅறிஞர்கள்ஒருமித்தகருத்துகொண்டுள்ளனர்காரணம்
வெட்டி எடுக்கப்படும் உறுப்பு உயிருள்ள அந்த மனிதருக்குத் தேவைஇரு கண்களில் எது வேண்டும் என்று கேட்டால் என்ன சொல்வீர்கள்?
இரண்டு சிறுநீரகங்களில் ஒன்று மற்றொன்றுக்கு உறுதுணையாக இருக்கும்என்பதற்காகவேஇறைவன்இரண்டாகப்படைத்துள்ளான்இரண்டில் ஒன்றை அடுத்தவருக்குக் கொடுத்த பிறகுமீதியுள்ள ஒன்று இயங்க மறுத்துவிட்டால்,கொடுத்தவர் என்ன செய்வார்அவ்வாறேஎடுக்கப்பட்ட சிறுநீரகம் அடுத்தவருக்குப் பொருந்தாமல்போய்விட்டால் வீண்தானே!
மனிதனின்உடல்உறுப்புஎதுவாயினும்அதுமதிப்புக்குரியது;விலைமதிப்பற்றதுஅதனைவெட்டிஎடுத்தோகோரப்படுத்தியோஅலங்கோலமாக்குவதற்குஅந்தமனிதனுக்கேஉரிமைஇல்லைமனிதன்கண்ணியமானவன்அவனது கண்ணியத்தை எந்த வகையிலும் சீர்குலைப்பது தகாத செயலாகும்.
நிச்சயமாகநாம்ஆதமின்மக்களை (மனிதர்களை)மேன்மைப்படுத்தியுள்ளோம்” (17:70) என்று இறைவன் தெரிவிக்கின்றான்.
இறந்தவரின் உடலுறுப்புகளைத் தானம் செய்வதைஇன்றைய இஸ்லாமிய அறிஞர்களில் சிலர் அனுமதிக்கின்றனர்.
இதற்கு அவர்கள் முன்வைக்கும் ஆதாரம் பொதுவானதுஇஸ்லாம் வலியுறுத்துகின்ற அதிகமான நன்மைகள் இதன்மூலம் ஏற்படும் என்பதுதான் அது.பொது நன்மைகள்பிறர் துயர் துடைத்தல்கேடுகளில் எளிதானது எதுவோ அதைத் தேர்ந்தெடுத்தல்நன்மைகளில் மேலானது எதுவோ அதைக் கவனத்தில் கொள்ளல் ஆகிய கோட்பாடுகளை இஸ்லாம் வலியுறுத்துகிறது.
மண்ணில் மடிந்து வீணாகிப்போகும் உடலுறுப்பைஉயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் ஒருவருக்கு வழங்கினால் என்னஇறந்தவரின் மரியாதையைவிட உயிர்வாழும் ஒருவரின் நன்மைக்கே முதலிடம் அளிக்க வேண்டும் –என்பது இந்த அறிஞர்களின் வாதமாகும். (ஃபத்தாவா அஷ்ஷபகத்தில் இஸ்லாமிய்யா)

*ஃபிக்ஹு அகாடமி bbbbb

அவ்வாறேஇந்தியாவிலுள்ள ஃபிக்ஹு அகாடமி வெளியிட்டுள்ள ஃபத்வா தொகுப்பில் பின்வருமாறு காணப்படுகிறது:

ஒருவரின் உறுப்பை வெட்டி எடுத்து அவருக்கே வேறு இடத்தில் பொருத்துவது செல்லும். (எடுத்துக்காட்டுவிரல்)
மனிதன் அல்லாத வேறு உயிரினங்களின் உறுப்புகள் பயன்படாதபோதுஒருவரின் உயிரைக் காக்க மற்றொரு மனிதரின் உறுப்பை எடுத்துப் பொருத்துவது செல்லும்.
நெருக்கடியான நேரத்தில் ஒருவர் தன்னுடைய இரண்டு சிறுநீரகங்களில் ஒன்றைத் தானம் செய்யலாம்ஆனால்இறந்தபின் உறுப்புகளைத் தானம் செய்வதாக வாக்களிக்கக் கூடாது.
*மற்றவர்கள் கருத்த
வேறுபல அறிஞர்கள்இறந்தவரின் உறுப்புகளைத் தானம் செய்வது கூடாது என்கின்றனர்உயிருடன் இருக்கும்போதும் இறந்தபிறகும் உடலுறுப்பு தானம் என்பது செல்லாது என்பதே இவர்களின் கருத்தாகும்ஷைகு இப்னு பாஸ்ஷைகு இப்னு உஸைமீன்ஷைகு அபூஹைஸமா முதலானோர் இந்த முடிவையே தெரிவித்துள்ளனர்.
உடல் மனிதனிடம் அளிக்கப்பட்டுள்ள அமானிதமாகும்எனவேஅதை அகற்றுவதற்கோ அகற்றுமாறு ‘வஸிய்யத்’ செய்வதற்கோ அவனுக்கு உரிமை கிடையாது. ‘வஸிய்யத்’ செய்தாலும் அதை நிறைவேற்றுவது கூடாதுஇறந்தவரின வாரிசுகளுக்கும் அந்த உரிமை இல்லை.
இறந்தவரின் எலும்பை உடைப்பதானதுஉயிருள்ளவரின் எலும்பை உடைப்பதைப் போன்றதே” என்று நபி (ஸல்அவர்கள் கூறினார்கள். (அபூதாவூத்இப்னுமாஜா,முஸ்னது அஹ்மத்). அதாவது இரண்டும் குற்றமே.
மேலும்அடக்கத் தலத்தின் (கப்று)மேல் அமர்வதற்கு நபி (ஸல்அவர்கள் தடை விதித்துள்ளார்கள். (அபூதாவூத்)
ஒரு மனிதர் காலணி அணிந்துகொண்டு கப்றுகள்மேல் நடந்து போய்க்கொண்டிருந்தார்அவரிடம் நபி (ஸல்அவர்கள், “உமக்குக் கேடுதான்!உமது காலணியைக் கழற்றுவீராக!” என்று சொன்னார்கள்உடனே அவர் தம் காலணிகளைக் கழற்றி எறிந்துவிட்டார். (அபூதாவூத்)
நபி (ஸல்அவர்கள் மற்றொரு ஹதீஸில் குறிப்பிட்டார்கள்உங்களில் ஒருவர்,நெருப்புக் கங்கின்மீது அமர்ந்து அது அவரது ஆடையைக் கரித்து சருமம்வரை சென்றடைவதானதுஅடக்கத் தலத்தின் மீது அவர் அமர்வதைவிட அவருக்குச் சிறந்ததாகும். (முஸ்லிம்)
இறந்துபோனவர் அடக்கம் செய்யப்பட்டுள்ள கப்றுமீது அமர்வதே இத்துணை பெரும் குற்றம் என்றால்சடலத்தைச் சிதைப்பது எவ்வாறு தகும்?
*உடல் தானம்bbbbb bbfthbbbb Body Donation       
இறந்துபோன ஒருவரது முழு உடலையும் தானம் செய்வதுஅவரே ‘வஸிய்யத்செய்திருந்தாலும் கூடாதுமருத்துவக் கல்லூரி மாணவர்களின் ஆராய்ச்சிக்காக இவ்வாறு உடலைத் தானம் செய்யும் பழக்கம் உள்ளது.
ஒரு முஸ்லிமின் உயிர் பிரிந்தவுடன்அவரது சடலத்தை நீராட்டிகஃபனிட்டு,இறுதித் தொழுகை (ஜனாஸாநடத்திமுறையாக மண்ணில் நல்லடக்கம் செய்ய வேண்டும்அதாவது குழி வெட்டிஅதனுள் மய்யித்தை வைத்துமண்ணைத் தள்ளி மூடிவிட வேண்டும்இதுவே மார்க்கம் சொல்லியிருக்கும் வழிமுறையாகும்.
இதை விடுத்துசடலத்தைப் பதனிட்டு நீண்ட காலம் வைத்துக்கொண்டிருப்பதோ,கிழித்து ஆய்வுக்குப் பயன்படுத்துவதோ இஸ்லாமிய நடைமுறை ஆகாது.
ஆகநவீன சிகிச்சை முறைகள் வந்துவிட்டன என்பதற்காகமார்க்கத்தின் நெறிமுறைகளையும் நபிவழியையும் மாற்றிக்கொள்ள முடியாதுஅந்தச் சிகிச்சை முறை மார்க்கத்தில் தடை செய்யப்பட்டதாகவோநபிவழிக்கு முரண்பட்டதாகவோ இல்லாமல் இருக்கும் வரைதான் முஸ்லிம்கள் பயன்படுத்தலாம்.
ஆண் பெண்ணாக மாறுவதுபெண் ஆணாக மாறுவதுயாரோ ஒருவனின் விந்தணுவை எடுத்து வாடகைத் தாய்க்குச் செலுத்தி குழந்தை பெற்றுக்கொள்வது போன்ற நவீன முறைகளும் இருக்கத்தான் செய்கின்றனஅதற்காக மார்க்கத்தைப் புறக்கணித்துவிட்டுஅறிவியல் எதைச் சொன்னாலும் அதைச் செய்வதென்பதை ஏற்க முடியாது.
இறைக் கட்டளைக்கு முதலிடம் அளித்துஅதற்கு முரண்படாத அறிவியல் வளர்ச்சியையே நாம் ஏற்க வேண்டும்.
[p j]அதே நேரத்தில் உடல் முழுவதையும் தானம் செய்வதற்கு மார்க்கத்தில் அனுமதி இல்லைஏனெனில் உடல் தானம் என்பது கண் தானத்தைப் போன்றதல்லஉடல் தானம் செய்யும் மனிதனின் உடலிலுள்ள பாகங்களை எடுத்து பிற மனிதர்களுக்குப் பொருத்துவதில்லைமாறாக உடலின் ஒவ்வொரு பாகத்தையும் எடுத்து மருத்துவக் கல்வியின் பாடத்திற்காகவும் ஆய்வுக்காகவுமே பயன்படுத்தப்படுகின்றனகண் தானத்தின் போது கண்ணோ மற்ற உறுப்புகளோ சிதைக்கப்படுவதில்லை. இறந்தவரின் கண்ணை எடுத்து அடுத்தவருக்குப் பொருத்தப்படுகின்றது. ஆனால் உடல் தானம் செய்தவரின் உறுப்புகள் ஒவ்வொன்றும் தனித்தனியாக சிதைக்கப்படுகின்றன. இதற்கு மார்க்கத்தில் அனுமதி இல்லை. கொள்ளையடிப்பதையும் ஒருவரின் அங்கங்களை (உயிருடன் இருக்கும் போதோ அல்லது இறந்த பிறகோ) சிதைப்பதையும் நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் யஸீத் (ரலி), நூல் : புகாரி 2474, 5516                                                                                                  உடலைக் குளிப்பாட்டும் போது அவ்வுடலில் பல குறைபாடுகள் இருக்கலாம். உலகில் வாழும் போது அந்தக் குறைபாடுகளை அவர் மறைத்து வாழ்ந்திருக்கலாம். உடலைக் குளிப்பாட்டுபவர் அதைக் காண வேண்டிய நிலை ஏற்படும். இவ்வாறு காண்பவர் அந்தக் குறைபாடுகளை வெளியில் சொல்லாமல் மறைப்பது அவசியமாகும். 'ஒரு முஸ்லிமைக் குளிப்பாட்டுபவர் அவரிடம் உள்ள குறைகளை மறைத்தால் அவரை அல்லாஹ் நாற்பது தடவை மன்னிக்கிறான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ராஃபிவு (ரலி) நூல்கள்: பைஹகீ 3/395, ஹாகிம் 1/505, 1/516 தப்ரானி 1/315
 இறந்த பின்னரும் ஒரு மனிதரின் வெட்கத்தலம் மறைத்து பாதுக்காக்கப்பட வேண்டும். ஆனால் உடல் தானம் செய்தால் அந்த உடலை மற்றவர்கள் அன்றாடம் நிர்வாணமாகக் காணும் நிலை ஏற்படும். மருத்துவப் படிப்புக்கு உடல் தேவைப்படும் என்ற காரணத்தால் இதை இஸ்லாம் அனுமதிக்காது. மனித உடல் போன்ற மாதிரிகளை வைத்து மருத்துவப் படிப்புக்கு பயன்படுத்த முடியும்.. பெரியார்தாசன் தனது உடலை தானம் செய்வதாக எழுதிக் கொடுத்தாரா? குடும்பத்தினருக்கு சொல்லிச் சென்றாரா என்பது நமக்குத் தெரியவில்லை. அப்படி சொல்லிச் சென்று இருந்தாலும் எழுதியே கொடுத்தாலும் குடும்பத்தினர் உடலைக் கொடுக்க விரும்பாவிட்டால் கட்டாயமாக உடலைப் பெற முடியாது. எழுதிக் கொடுத்து இருந்தால் கூட நான் முஸ்லிமாக மாறிவிட்டேன். எனது உடலை இஸ்லாமிய முறைப்படி நல்லடக்கம் செய்வேன் என்று மாற்றி எழுதிக் கொடுக்கலாம். தனது உடலை தானம் செய்ய வேண்டும் என்று அவர் தனது குடும்பத்தினருக்குச் சொல்லிச் சென்றிருக்கக் கூடாது. இஸ்லாத்தில் நம்பிக்கை உள்ளவர்களால் அப்படிச் சொல்ல முடியாது என்பதையும் கூடுதலாக சொல்லிக் கொள்கிறோம்.

டாக்டர் அப்துல்லாஹ்வின் மரணம் தரும் படிப்பினை! -செங்கிஸ் கான்.
வாழும் வரைக் கற்றுக் கொடுப்பவராக இருந்த டாக்டர் அப்துல்லாஹ் அவர்கள் இறப்பில் கூட இஸ்லாமிய சமுதாயத்திற்கு சில படிப்பினைகளை விட்டு சென்றுள்ளார்.    
 1.இஸ்லாத்திற்கு வரும் சகோதர சகோதரிகளின் வருகையைக் கொண்டாடும் நாம் வந்த பின் செய்ய வேண்டிய கடமைகளில் பொடுபோக்காக இருக்கிறோம். முஸ்லிம்களாக அன்றி மரணிக்காதீர்கள் எனும் இறை வசனத்தின் படி வந்தவர்களை முஸ்லிம்களாக மரணிக்க செய்யும் கடமையும் நமக்குள்ளது.                              
 2.நாம் செய்ய வேண்டியதெல்லாம் இஸ்லாத்தை ஏற்க வரும் போடும் அபிடவுட் உடன் எனது இறுதி சடங்கு இஸ்லாமிய அடைப்படையில் இருக்க வேண்டும் என்பதையும் உறுதி மொழியாக வாங்கி சம்பந்தப்பட்ட அமைப்புகள் வைத்துக் கொள்ள வேண்டும்.

3.அழைப்புப் பணியை அல்லாஹ் நம் மீது சுமத்தி இருக்க அதை மறந்து விட்டு இருக்கும் பெரும்பாலான முஸ்லிம்களுக்கு மத்தியில், இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட காலம் முதல் இறக்கும் வரை எதிர்ப்புகளுக்கு அஞ்சாமல் பம்பரமாக சுற்றி உலகெங்கும் அழைப்புப் பணியை மேற்கொண்டு இயலவில்லை எனும் நிலயில் இருக்க விரும்பாமல் இறைவனடி சேர்ந்த விதத்திலும் நமக்கு படிப்பினை உள்ளது.