இடுகைகள்

நவம்பர், 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஹலால், ஹராம் என்றால் என்ன? ஏன்? எப்படி?

  இப்படி எமக்கு மத்தியிலேயே சரியான புரிதலின்றிய ஒரு விடயத்தை மேடை போட்டுப் பேசி அடுத்தவர்களுக்கு விளங்கப்படுத்தி விட முடியுமா என்பது கேள்விக்குறியே!. இன்று பெரும்பான்மையினருக்கு மத்தியிலும் ஹலால் என்ற சொல்லுக்குக் கொடுக்கப்பட்டிருக்கின்ற தோற்றப்பாட்டை ஹலால் ஹராம் பற்றிய சரியான பார்வையைக் கொடுப்பதன் மூலமாக மாற்றியமைக்கலாம். அப்படி மாற்றியமைத்து விட்டோமென்றால் பிடிவாதமாக இருக்கும் அதிகார சக்திகள் அழைப்பு விடுத்தாலும் கூட பொது மக்கள் அதன் பின்னால் போக மாட்டார்கள். இது அப்படியான ஒரு முயற்சியாகும். இன்று பொதுவாக முஸ்லிம்களுக்கு மத்தியிலும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு மத்தியிலும் பரவலாகக் காணப்படுகின்ற சில கேள்விகளுக்கான பதில்களைத் தேட முயன்றதன் விளைவே இவ்வாக்கமாகும். • ஹலால் என்றால் என்ன? ஹராம் என்றால் என்ன? இவை இரண்டும் இரண்டு அரபுச் சொற்களாகும். ஹலால் என்பது அனுமதிக்கப்பட்டது என்றும் ஹராம் என்பது அனுமதிக்கப்படாதது என்றும் தமிழுக்கு மொழிமாற்றம் செய்யப்படலாம். அதாவது மனித வாழ்க்கையின் போது கடைப்பிடிக்க வேண்டிய சகல நடவடிக்கைகளிலும் அனுமதிக்கப்பட்டவைகள் அனுமதிக்கப்படாதவைகள் என இரு
ஹலால் - ஹராம் பேணல் ஜாபிர் (றழி) கூறுகிறார்: (ஒரு முறை) ஒரு மனிதர் நபியவர்களிடம் வந்து,'(அல்லாஹ்வுடைய றஸுல்) நான் கடமையான தொழுகைளை நிறைவேற்றி, றமழானில் நோன்பும் நோற்று, ஹராமானதை ஹராமானதாகக் கருதி (தவிர்த்து வாழ்ந்து) ஹலாலை ஹலாலாகக் கருதி வாழ்ந்தால் சுவர்க்கம் புகுவேனா, என்பதை எனக்குக் கூறுங்கள்' என்றார். அதற்கு, 'ஆம்' என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். அப்போது அவர், 'அல்லாஹ்வின் மீது ஆணையாக இவற்றை விட அதிகமாக எதனையும் நான் செய்யமாட்டேன்' எனக் கூறினார். (ஆதாரம்: முஸ்லிம்) றஸுலுல்லாஹ்வின் பாசறையில் பயிற்சி பெற்ற அன்னாரின் தோழர்கள் எவ்வளவு தூரம் சுவர்க்கத்தை அடைவதில் ஆசையும் ஆர்வமும் கொண்டோராயும், அதனை அடைந்து கொள்வதற்கு உரிய வழிகளைத் தெரிந்து கொள்வதில் தீராத வேட்கை கொண்டோராயும் இருந்தனர் என்பதற்கு ஓர் உயர்ந்த உதாரணமாக இந்த ஹதீஸ் காணப்படுகிறது. நபித் தோழர்கள், சுவர்க்கத்தையும் நரகையும் உலகிலேயே தம் கண்களால் காண்பது போன்ற உணர்வைப் பெற்றிருந்தனர் என்பதற்கும், இத்தகைய ஹதீஸ்கள் நல்ல சான்றுகளாகத் திகழ்கின்றது. நாம் விளக்க எடுத்துக்கொண்டுள்ள இந்த ஹதீஸில் ஸக்காத்

786 என்றால் என்ன? இஸ்லாத்திற்கும் இதற்கும் என்ன சம்மந்தம்? இதை பயன்படுத்தலாமா?

                    நியூமராலஜி என்ற கலையில் ஆங்கில எழுத்துக்களுக்கு எண்களைக் குறியீடாகப் பயன்படுத்துவர். அது போல் அரபு எழுத்துக்களுக்கும் சிலர் எண்களைக் குறியீடாகப் பயன்படுத்தலாயினர். உதாரணத்திற்கு அலீஃப் ற்கு 1, பே விற்கு 2, ஜீம் மிற்கு 3 தால் லிற்கு 4.“"பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்" என்பதில் இடம் பெற்ற ஒவ்வொரு எழுத்தின் எண்களையும் மொத்தமாக கூட்டினால் 786 வரும். பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்பதன் சுருக்கமாக கருதி இதைப் பயன்படுத்தி வருகின்றனர். இஸ்லாமிய அடிப்படையில் இது ஏற்க முடியாததாகும். எண்கள் எழுத்துக்களாக முடியாது. அஸ்ஸலாமு அலைக்கும் என்பதற்குப் பதிலாக 238 என்று சொன்னால் அதை எவரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.ஒருவர் 6666 வசனங்களைக் கொண்ட குர்ஆனை ஓதுவதற்குப் பதிலாக அதன் கூட்டுத் தொகை எண்ணைப் பயன்படுத்தினால் அவர் குர்ஆனை ஓதியவர் என்று கருதப்பட மாட்டார்.அது போல் 786 என்று சொன்னால் அல்லது எழுதினால் அவர் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் சொன்னவராகவும் எழுதியவராகவும் ஆக மாட்டார். 786 என்ற எண் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்பதற்கு மட்டும் தான் வரும் என்று கூற முடியாது. ம