சனி, ஆகஸ்ட் 23, 2014

வெளிவந்தது கொகா கோலா ரகசியம் முஸ்லீம்களே உஷார்!

RASMIN M.I.Sc

உலக குளிர்பான வரலாற்றில் ஒரு மைல்கல் என்று வர்ணிக்கப்படும் கொகா கோலா குளிர்பானத்தின் ரகசிய பார்முலா வெளியாகியுள்ளது.
கடந்த 125 வருடங்களாக குளிர்பான தயாரிப்பில் ஈடுபடும் கொகா கோலா நிறுவனம் தனது குளிர்பான தயாரிப்பில் ஒரு கலக்கப்படும் கலவைகளில் ஒரு சில பொருட்களை மாத்திரமே தனது தயாரிப்பில் வெளியிட்டு வந்துள்ளது.
இது வரைக்கும் கொகா கோலாவின் உண்மையான கலவை பற்றிய பார்முலா ரகசியம் யாருக்கும் தெரியாமல் பாதுகாக்கப்பட்டு வந்தது. அந்த ரகசியத்தில் தான் கோலாவின் ருசியின் பார்முலாவே அடங்கியிருந்திருக்கிறது. தற்போது அந்த பார்முலா வெளியாகிவிட்டதினால் கோலா பற்றிய பல தகவல்கள் உலகுக்கு கிடைத்துள்ளது.
கோலாவின் பார்முலாவுக்குறியவர் யார்?
கொகா கோலாவின் மறைக்கப்பட்டிருந்த பார்முலாவை கண்டு பிடித்தவர் ஜான் பெம்பர்டன் என்ற மருந்தாளுனர் ஆவார். அவா் கண்டுபிடித்ததிலிருந்து 125 வருடங்களாக அந்த பார்முலா ரகசியமாக பாதுகாக்கப்பட்டே வந்தது.
1886-ம் ஆண்டு முதன் முதலில் இது தயாரிக்கப்பட்டு விற்பனையானது. அட்லாண்டாவில் மட்டும் விற்கப்பட்ட இந்த குளிர்பானம் தற்போது உலகம் முழுவதும் உள்ள 200 நாடுகளில் வினியோகிக்கப்படுகிறது. நாள் ஒன்றுக்கு 160 கோடி பாட்டில் கொகா கோலா பானம் சப்ளை செய்யப்படுகிறது.
கொகா கோலா எனதால் உருவாகிறது ?
கொகா கோலா அடைக்கப்பட்டு வரும்பாட்டில்களில் கொகா கோலாவின் தயாரிப்புக் கலவைகள் பற்றிய ஒருகுறிப்பும் இருக்கும். அந்தக் குறிப்பில் சக்கரை, தண்ணீர், மற்றும் நிறமிகள் (கலர்)கள் கலக்கப்படுவதாகவும், அத்துடன் காபைன் கலந்த இயற்கை சுவை கூட்டல் பொருட்கள் என்ற ஒரு வாசகமும் இருக்கும்.
ஆனால் இந்த காபன் கலந்த இயற்கை சுவை கூட்டல் பொருட்கள் பற்றிய உண்மையான பார்முலா யாருக்குமே தெரியாது. அது ரகசியமாக பாதுகாக்கப்பட்டு வந்தது.
கசிந்தது பார்முலா ரகசியம்.
இந்த நிலையில் அதில் என்னென்ன பொருட்கள் கலக்கப்படுகிறது என்ற தகவல் 125 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது வெளியாகியுள்ளது. இந்த பார்முலா ரகசியத்தை அமெரிக்காவில் இருந்து ஒளிபரப்பாகும் ஒரு ரேடியோ தெரிவித்துள்ளது. அதன் நிகழ்ச்சி இணையதளத்திலும் வெளியாகி உள்ளது.
அந்தத் தகவலை பிரபல செய்தி ஊடகமான அல்ஜஸீராவும் வெளியிட்டுள்ளது.
இது வரைக்கும் இந்த பார்முலா அடங்கிய ரகசிய காகிதம் கொகா கோலா நிறுவனத்தின் மூலம் அமெரிக்க வங்கி லாக்கரில் பாதுகாக்கப்படுகிறது.
ஏற்கனவே 1979 ல் ஜார்ஜியா மாநில உள்ளூர் நாளிதழ் ஒன்றில் இது வெளியானதாக தெரிகிறது. ஆனால் இப்போது இருப்பது போல கோகா கோலாவின் புகழ் அப்போது பெரிதாக இல்லை என்பதால் அந்த செய்திக்கு முக்கியத்துவம் இல்லாமல் போனது.
கொகா கோலாவின் ரகசிய பார்முலா எது?
கொகா கோலா என்ற குளிர்பானத்தை தயாரிப்பதற்கு பயண்படுத்தப் படும் பொருட்களுன் சேர்த்து காபன் கலந்த இயற்கை சுவை கூட்டல் பொருட்களையும் சேர்ப்பதாக கொகா கோலா நிறுவனம் தனது தயாரி்ப்புகளில் வெளியிட்டாலும் அந்த இயற்கை சுவை கூட்டல் பொருட்கள் என்ன என்ற ரகசிய பார்முலா இப்போது தான் வெளியாகியுள்ளது.
இதுதான் அந்த ரகசிய பார்முலா.
Fluid extract of Coca 3 drams USP.
Citric acid 3 oz .
Caffeine 1oz .
Sugar 30 (it is unclear from the markings what quantity is required).
Water 2.5 gal.
Lime juice 2 pints 1 qrt.
Vanilla 1oz .
Caramel 1.5oz or more to colour.
7X flavour (use 2oz of flavour to 5 gals syrup).
Alcohol 8oz .
Orange oil 20 drops.
Lemon oil 30 drops.
Nutmeg oil 10 drops.
Coriander 5 drops.
Neroli 10 drops.
Cinnamon 10 drops.
பார்முலா வெளிவந்த விதம்.
கொகா கோலாவின் இந்த ரகசிய பார்முலா கலந்த ரகசியம் அந்த நிறுவனத்தின் மிக முக்கிய இரண்டு பேரைக் கொண்டுதான் தயாரிக்ப்படுகிறதாம்.
அவர்கள் மூலம் இந்த ரகசியம் வெளியாகி இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. அமெரிக்க வங்கி லாக்கரில் இருக்கும் இந்த ரகசிய பார்முலாவின் எழுத்து வடிவ காகிதத்தின் போட்டோ பிரதியை This American Life’s என்ற சஞ்சிகை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜஸீரா இணையதளம் வெளியிட்டுள்ள வீடியோவைப் பார்க்க இங்கு க்லிக் செய்யுங்கள்.
கொகா கோலா பற்றிய மார்க்கத்தின் நிலைபாடு என்ன?
கொகா கோலாவின் கலவையில் கலக்கப் படும் பல ரசாயனங்களில் அல்கஹாலும் ஒன்றாக இருக்கிறது. அல்கஹாலைப் பற்றிய மார்க்கதின் நிலைபாட்டை முதலில் நாம் தெரிந்து கொண்டாலே கொகா கோலா பற்றிய மார்க்கத் தெளிவை லேசாகப் புரிய முடியும்.
ஆல்கஹால் பற்றிய இஸ்லாத்தின் நிலைபாடு என்ன?
ஆல்கஹால் போதையை உண்டுபண்ணக் கூடிய ஒன்றாகும். போதை தரும் எந்தப் பொருளையும் நாம் உண்ணக் கூடாது என்பது மார்க்கத்தின் கட்டளை.
போதை ஏற்படுத்தக் கூடிய ஒவ்வொன்றும் ஹராம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
6124 حَدَّثَنِي إِسْحَاقُ حَدَّثَنَا النَّضْرُ أَخْبَرَنَا شُعْبَةُ عَنْ سَعِيدِ بْنِ أَبِي بُرْدَةَ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ قَالَ لَمَّا بَعَثَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَمُعَاذَ بْنَ جَبَلٍ قَالَ لَهُمَا يَسِّرَا وَلَا تُعَسِّرَا وَبَشِّرَا وَلَا تُنَفِّرَا وَتَطَاوَعَا قَالَ أَبُو مُوسَى يَا رَسُولَ اللَّهِ إِنَّا بِأَرْضٍ يُصْنَعُ فِيهَا شَرَابٌ مِنْ الْعَسَلِ يُقَالُ لَهُ الْبِتْعُ وَشَرَابٌ مِنْ الشَّعِيرِ يُقَالُ لَهُ الْمِزْرُ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كُلُّ مُسْكِرٍ حَرَامٌ رواه البخاري
அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
நான் அல்லாஹ்வின் தூதரே! எங்கள் யமன் நாட்டில் தேனில் “அல்பித்உஎனப்படும் ஒரு வகை பானமும் வாற்கோதுமையில் “மிஸ்ர் என்று கூறப்படும் ஒரு வகை பானமும் தயாரிக்கப்படுகிறது (அவற்றின் சட்டம் என்ன?) என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்போதை தரக் கூடிய ஒவ்வொன்றும் தடை செய்யப்பட்டது (ஹராம்) ஆகும்என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அபூ மூஸா அல்அஷ்அரி (ரலி) நூல்: புகாரி 6124
அதிகம் (சாப்பிட்டால்) போதை தரக் கூடிய பொருளில் குறைவானதும் தடுக்கப்பட்டது (ஹராம்) தான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) நூல்: திர்மிதீ 1788 – நஸயீ 5513 –  3725
و حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا وَكِيعٌ عَنْ مُعَرِّفِ بْنِ وَاصِلٍ عَنْ مُحَارِبِ بْنِ دِثَارٍ عَنْ ابْنِ بُرَيْدَةَ عَنْ أَبِيهِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كُنْتُ نَهَيْتُكُمْ عَنْ الْأَشْرِبَةِ فِي ظُرُوفِ الْأَدَمِ فَاشْرَبُوا فِي كُلِّ وِعَاءٍ غَيْرَ أَنْ لَا تَشْرَبُوا مُسْكِرًا  رواه مسلم
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தோல் பையில் தவிர வேறெதிலும் பழச் சாறுகளை ஊற்றிவைக்க வேண்டாம் என உங்களுக்குத் தடை விதித்திருந்தேன். இனி நீங்கள் எல்லாப் பாத்திரங்களிலும் பருகுங்கள். ஆனால் போதை தரக் கூடிய எதையும் பருகாதீர்கள்.
இதை புரைதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். முஸ்லிம் (3995)
3728 وَفِي حَدِيثِ صَالِحٍ أَنَّهَا سَمِعَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ كُلُّ شَرَابٍ مُسْكِرٍ حَرَامٌ رواه مسلم
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தேனிலிருந்து தயாரிக்கப்படும் பானம் (பித்உ) குறித்துக் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் போதை தரும் ஒவ்வொரு பானமும் தடை செய்யப்பட்டதாகும் என்று பதிலளித்தார்கள்.  முஸ்லிம் (4071)
மேற்கண்ட ஹதீஸ்களில் போதை ஏற்படுத்துதல் என்ற காரணத்துக்காக இத்தகைய தன்மையுள்ள பானங்கள் தடை செய்யப்படுகின்றது. ஆல்கஹாலைப் பொறுத்த வரை அதைப் பருகினால் போதை ஏற்படும்.
எனவே அல்கஹாலைப் பருகுவதும் கூடாது அல்கஹால் சேர்க்கப்படும் கொகா கோலாவைப் பருகுவதும் கூடாது என்பது தான் மேற்கண்ட செய்திகளிலிருந்து நமக்குக் கிடைக்கும் மார்க்கத்தின் தெளிவான நிலைபாடாகும்.
அல்லாஹ்வே மிகவும் அறிந்தவன்

கரை தாண்டும் கணவனும் கறை படியும் மனைவியும்

ஹிஷாம் எம்.ஐ.எஸ்.ஸி.

இன்றைய உலகத்தில் அனைத்து விடயங்களும் பொருளாதாரத்தை மையமாக வைத்து அமைந்து இருக்கிறது.
கல்வியாக இருந்தாலும் கல்வி கற்பவர்களின் நோக்கமும் கல்வியை கற்றுகொடுப்பவர்களின் நோக்கமும் பொருளாதாரத்தை மையமாக வைத்து தான் அமைந்து இருக்கின்றது.நாம் நிம்மதியாக வாழவேண்டும் என்றால் அதிகமான பொருளாதரத்தை திரட்டினால் தான் முடியும் என்ற நிலை.எனவே நாம் இந்த பொருளாதாரத்தை திரட்டுவதற்காக பல தியாகங்களை செய்தி பல வழிகளில் திரட்டுகிறோம்.அதிகமானவர்கள் தங்களுடைய ஊர்களில் இருந்து வெளி ஊர்களுக்குச் சென்று பொருளாதாரத்தை திரட்டுகிறார்கள்.இன்னும் சிலர் தங்களுடைய நாடுகளை விட்டுவிட்டு வெளிநாடுகளில் சென்று பொருளாதாரத்தை திரட்டுகிறார்கள.
பொருளாதாரம் அல்லாஹ்வின் அருள்
இஸ்லாமிய மார்க்கம் பொருளாதாரத்தை அல்லாஹ்வின் அருள் என்றும் அதனை திரட்டுவதற்கு ஆர்வமும் ஊட்டுகிறது.
சிலரைவிட மற்றும் சிலரை அல்லாஹ் மேன்மைப்படுத்தியுள்ளதில் பேராசை கொள்ளாதீர்கள்! ஆண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு.பெண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு அல்லாஹ்விடம் அவனது அருளை வேண்டுங்கள்! அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவனாக இருக்கிறான்.(அல்குர்ஆன் 4:32)
பொருளாதாரத்தை திரட்டி அதை அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்தால் மற்றவர்கள் அடையாத நன்மைகளை நமக்கு அடைய முடியும்.எனவே இஸ்லாமிய மார்க்கம் பொருளாதாரத்தை திரட்டுவதற்கு தடையாக நிற்பதில்லை.ஆனால் பொருளாதாரத்தை திரட்டுவதாக இருந்தால் தான் விரும்பியபடி திரட்ட முடியாது.அதற்கு இஸ்லாம் சில நிபந்தனைகளை இடுகிறது.அந்த அடிப்படையில் தான் நாம் பொருளாதாரத்தை திரட்ட வேண்டும்.வேண்டிய நாட்டிற்கு சென்று பொருளாதாரத்தை திரட்டலாம் ஆனால் அதற்கு இஸ்லாம் வரையரையை விதித்து இருக்கிறது.
அடிப்படையான நிபந்ததை என்னவென்றால் திருமணமானவர் வெளிநாடு சென்று பொருளாதரத்தை திரட்டுவதாக இருந்தால் கண்டிப்பாக தன்னுடைய மனைவியையும் அங்கு அழைத்துச் செல்லவேண்டும்.அவ்வாறு அழைத்து செல்ல முடியாத பச்சத்தில் அங்கு சென்று சம்பாரிப்பதை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.இஸ்லாமிய மார்க்கம் அதைனை வன்மையாக கண்டிக்கிறது.
திருமணத்தின் அவசியம்
மற்ற மதங்கள் மற்றும் சித்தாந்தங்களைப் போல் இல்லாமல் இஸ்லாமிய மார்கம் இறைவனை நெருங்குவதற்கு திருமணத்தை தடைக் கல்லாக அமைக்காமல் திருமணத்தை வழியுருத்திகிறது.இதன் காரணத்தினால் இன்று ஆன்மிகத்தின் பெயரால் ஏராளமான தவறுகள் நடப்பதைப் பார்கலாம்.சாமியார்களின் பெயரில் எராளமான பாலியல் பலாத்காரங்கள் நிறைந்து காணப்படுகின்றது.ஆனால் இஸ்லாமிய மார்க்கம் அதற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டது.ஒருவர் எவ்வளவு ஆன்மிகத்தில் மூழ்கிப்போனாலும் திருமணம் செய்யவில்லை என்றால் இஸ்லாத்தை முழுமையாக பின்பற்றியவராகமாட்டார்.எனவே இஸ்லாம் இளைஞர்களுக்கு திருமணத்தை வழியுருத்துகிறது.
நானும் அல்கமா மற்றும் அஸ்வத்(ரஹ்) ஆகியோரும் அப்துல்லாஹ் இப்னு மஸ்¥த்(ரலி) அவர்களிடம் சென்றோம். அப்போது அப்துல்லாஹ்(ரலி) கூறினார்கள்: நாங்கள் (வசதி வாய்ப்பு) ஏதுமில்லாத இளைஞர்களாக நபி(ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது நபி(ஸல்) அவர்கள் எங்களிடம் ‘இளைஞர்களே! தாம்பத்தியம் நடத்த சக்தி பெற்றோர் திருமணம் செய்து கொள்ளட்டும். ஏனெனில், அது (தகாத) பார்வையைக் கட்டுப்படுத்தும்; கற்பைக் காக்கும்.இயலாதோர் நோன்பு நோற்றுக்கொள்ளட்டும்! ஏனெனில், நோன்பு (ஆசையைக்) கட்டுப்படுத்தக் கூடியதாகும்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துர் ரஹ்மான் இப்னு யªத்(ரஹ்) அறிவித்தார்
நூல்: புகாரி 5066
திருமணத்தின் நோக்கம்

நம்முடைய பாலியல் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவதற்காக தான் இஸ்லாம் திருமணத்தை வழியுருத்துகிறது.ஒருவர் திருமணம் முடிக்க சக்தி உள்ளவாராக இருந்தால் கண்டிப்பாக திருமணம் முடித்தே ஆகவேண்டும்.நம்முடைய ஆசையை கட்டுபடுத்திக் கொள்ள இஸ்லாம் இரண்டு வழிமுறைகளை கற்றுத்தருகிறது.அதாவது ஒன்று திருமணம் மற்றொன்று நோன்பு பிடித்தல்.இந்த இரண்டும் இல்லாமல் யார் தன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி கொள்கிறார்கள் என்று கூறுகிறாறோ அவர் கண்டிப்பாக பொய்தான் கூறவேண்டும்.யாராக இருந்தாலும் இந்த இரு வழிமுறைகளில் ஒன்றைப் பின்பற்றினால் தான் தன்னுடைய உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியும்.ஆனால் இன்று நடக்கின்ற கொடுமை என்னவென்றால் திருமணம் முடித்து விட்டு பொருளாதாரத்தை திரட்டுவதற்காக மனைவியை விட்டு விட்டு வெளிநாடு செல்கின்றார்கள்.ஒருபோதும் இஸ்லாம் அதைனை அனுமதிக்கவே இல்லை.திருமணத்தின் நோக்கத்தை நிறைவேற்ற முடியாமல் வெளிநாடுகளில் தங்கி இருப்பது தன்னுடைய மனைவிக்கும் செய்கின்ற துரோகமாகும்.
மனைவிக்கு செய்யவேண்டிய கடமை
இஸ்லாமிய மார்க்கம் வணக்க வழிபாடுகளுக்கு அதிகமாக ஆர்வம் ஊட்டுகிறது.எவ்வளவு ஆர்வம் ஊட்டினாலும் மார்கத்தின் பெயரால் வணக்க வழிபாட்டில் ஈடுபடப்போகிறேன் என்று தன்னுடைய மனைவியை பிரிந்து இருப்பதையே இஸ்லாம் கண்டிக்கிறது.
நபி(ஸல்) அவர்களின் துணைவியரின் வீடுகளுக்கு மூன்று பேர் கொண்ட குழுவினர் வந்து நபி(ஸல்) அவர்களின் வணக்க வழிபாடுகள் குறித்து வினாத் தொடுத்தனர். அதுபற்றி அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டபோது, அவர்கள் நபி(ஸல்) அவர்களின் வணக்க வழிபாடுகளைக் குறைத்து மதிப்பிட்டது போல் தெரிந்தது. பிறகு  ‘முன்பின் தவறுகள் மன்னிக்கப்பட்டுவிட்ட நபி(ஸல்) அவர்கள் எங்கே? நாம் எங்கே என்று சொல்லிக்கொண்டனர். அவர்களில் ஒருவர், ‘(இனிமேல்) நான் என்ன செய்யப்போகிறேன் என்றால், எப்போதும் இரவில் தொழுதுகொண்டே இருக்கப்போகிறேன்” என்றார். இன்னொருவர், ‘நான் ஒருநாள் கூட விடாமல் காலமெல்லாம் நோன்பு நோற்கப்போகிறேன்” என்று கூறினார். மூன்றாம் நபர் ‘நான் பெண்களைவிட்டும் ஒதுங்கியிருக்கப் போகிறேன்” என்று கூறினார். மூன்றாம் நபர் ‘நான் பெண்களைவிட்டும் ஒதுங்கியிருக்கப்போகிறேன். ஒருபோதும் மணந்துகொள்ளமாட்டேன்” என்று கூறினார். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , (அந்தத் தோழர்களிடம்) வந்து, ‘இப்படி இப்படியெல்லாம் பேசிக்கொண்டது நீங்கள்தாமே! அறிந்து கொள்ளுங்கள்: அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களை விட அதிகமாக நான் அல்லாஹ்வை அஞ்சுபவன் ஆவேன். அல்லாஹ்வைப் பயந்து நடப்பவன் ஆவேன். ஆயினும், நான் நோன்பு நோற்கவும் செய்கிறேன்,விட்டுவிடவும் செய்கிறேன்; தொழுகவும் செய்கிறேன், உறங்கவும் செய்கிறேன்; மேலும், நான் பெண்களை மணமுடித்தும் உள்ளேன். எனவே, என் வழிமுறையை கைவிடுகிறவர் என்னைச் சார்ந்தவர் அல்லர்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்
நூல்: புகாரி 5063
எனவே இஸ்லாம் திருமணத்தை வழியுருத்திக் கூறுவதுடன் மனைவிக்கு செய்ய வேண்டிய கடமையையும் வழியுருத்தி கூறுகிறது.மார்கத்தின் பெயரால் கூட அதற்கு பங்கயம் விளைவிக்காமல் கவனித்துக் கொள்கிறது இஸ்லாம்.மனைவிக்கு செய்ய வேண்டிய கடமையை செய்யாமல் வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவதையே இஸ்லாம் கண்டிக்கிறது என்றால் பொருளாதாரம் திரட்டுவதற்கு தன்னுடைய மனைவியைப்பிரிந்து வெளிநாடு செல்வதை ஒருபோதும் இஸ்லாம் அனுமதிக்காது.
மனைவியை எவ்வளவு காலம் பிரிந்து இருக்கலாம்?
கணவன் மனைவியிடத்தில் கோபப்படும் போது மனைவியுடன் கூடுவதில்லை என்று சத்தியம் செய்வதற்கு ஈளா என்று கூறப்படும்.ஆனால் இஸ்லாம் இந்த ஈளாவுக்கும் வழங்கக்கூடிய வரையரை நான்கு மாதங்கள் தான்.
தமது மனைவியருடன் கூடுவ தில்லை என்று சத்தியம் செய்தோருக்கு நான்கு மாத அவகாசம் உள்ளது அவர்கள் சத்தியத்தை திரும்பப் பெற்றால் அல்லாஹ் மன்னிப்பவன் நிகரற்ற அன்புடையோன். (அல்குர்ஆன் 2:226)
ஒருவர் தன் மனைவியை விட்டுப்பிரிந்து இருப்பதற்கு நான்கு மாதங்கள் தான் அனுமதி அழிக்கப்பட்டுள்ளது.ஏன் என்றால் நான்கு மாத காலங்களை விட கணவன் மனைவி பிரிந்து இருந்தார்கள் என்றால் தன்னுடைய உணர்வுகளை கட்டுப்படுத்த தவறான வழியில் தான் செல்ல வேண்டிய நிலை ஏற்படும் எனவே தான் இஸ்லாம் அதிக பட்சமாக நான்கு மாத காலத்தை வழங்குகின்றது.ஒருவர் தன் மனைவியை ஈளா செய்வதற்கே நான்கு மாத காலம் தான் வழங்கி இருக்கிறது என்றால் வேறு எந்த காரணத்தாலும் அதைவிட அதிகமான காலம் பிரிந்து இருப்பதற்கு அனுமதி இல்லை.அவ்வாறு பிரிந்து இருந்தால் கனவன் மனைவி இருவருக்கும் தன் கற்பை பாதுகாத்துக் கொள்வது கஷ்டமான விடயமாகும்.வெளிநாட்டில் இருப்பவர்கள் தன் மனைவியை விட்டுவிட்டு ஒரு வருடம் இரண்டு வருடங்கள் அங்கு தங்கி இருப்பார்கள்.இதனால் தன்னுடைய ஆசைகளை தீர்துக்கொள்ள முடியாத நிலமை.திருமணம் செய்தும் தவறான வழிக்கு அது தன்னை இட்டுச் செல்லும்.
வெளிநாடு செல்வதற்கான காரணம்.
அதிகமான மக்கள் வெளி நாடு செல்வதற்கு காரணம் என்னவென்றால் பணத்தின் மீதான பேராசை தான்.எவ்வளவு பொருளாதாரத்தை திரட்டினாலும் அதனை வைத்து தன்னிறைவு செய்து கொள்ள முடியாத நிலை.
நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள் ஆதமின் மகனுக்குத் தங்கத்தாலான ஒரு நீரோடை இருந்தால் தனக்கு இரண்டு நீரோடைகள் இருக்க வேண்டுமென்று அவன் ஆசைப்படுவான்.அவனுடைய வாயை மண்னைத்தவிர வேறெதுவும் நிரப்பாது.திருந்து பாவமன்னிப்புக் கோரி மீண்டுவிட்டவரின் கோரிக்கையை அல்லாஹ் ஏற்றுக்கொள்கிறான்
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக்(ரலி)அவர்கள்
நூல்: புகாரி 6439
அது மட்டும் இல்லாமல் தன்னை மக்கள் மெச்ச வேண்டும் என்ற எண்ணம்.தான் அடுத்தவர்களைவிட வசதியில் குறைவாக இருந்தால் மக்கள் தன்னை மதிக்கமாட்டார்கள் என்ற நம்பிக்கை.நாம் ஒருபோதும் அடுத்தவர்களுக்காக வாழக்கூடாது.அடுத்தவர்கள் பார்ப்பதற்காக வாழ்ந்து தன்னுடைய இளமை பருவத்தை வெளிநாடுகளில் வீணாக கழித்து விட்டு வயோதிப பருவத்தில் தன்னுடைய குடும்பத்துடன் வந்து வாழ்கிறார்கள்.அனைவரும் “தன்னுடைய வாழ்க்கயை வீணாக கழித்து விட்டோம்” என்று தாமதமாகத்தான் உணர்கிறார்கள்.எனவே நாம் அடிப்படையான நம்பிக்கையை மறந்து விடக்கூடாது. அதாவது அல்லாஹ் நம்முடைய பொருளாதாரத்தில் அபிவிருத்தி ஏற்படுத்துவான் என்பதாகும்.நாம் குறைந்த அளவு பொருளாதாரத்தை திரட்டினாலும் இஸ்லாம் அனுமதித்த விதத்தில் அதனை திரட்டினால் நிச்சியமாக அல்லாஹ் அதில் நம்முடைய அனைத்து தேவைகளையும் நிறைவு செய்து கொடுப்பான்.
மனைவியின் கடமை
கணவன் வெளிநாடு செல்வதற்கு தன் மனைவியும் முக்கிய காரணமாக அமைகிறாள்.தன் கணவன் குறைந்த அளவு பொருளாதாரத்தை திரட்டினார்; என்றால் மனைவி அதில் அல்லாஹ்வின் மறைமுகமான அருள் இருக்கும் என்று நம்பிக்கை கொள்ளாமல் தன் கணவனை இன்னும் பொருளாதாரத்தை திரட்டுவதற்கு தூண்டுகிறார்கள். பெண்கள் வாழ்வில் சிக்கனத்தைக் கடைபிடிக்காமல் கணவனின் சம்பாத்தியத்தின் அளவில் குறை காணுவது எந்த விதத்திலும் நியாயம் இல்லை. கணவன் ஹலாலான முறையிலா பொருளீட்டுகிறான் என்பதை பெண்கள் கவனத்தில் கொள்ளாமைக் கவலைக்குரியது.
பக்கத்து விட்டில் ஒரு பெண் எதாவது ஒரு பொருள் வாங்கிளால் தனக்கும் அதே போல் வேண்டும் என்று தன்னுடைய கணவனின் நிலைமையை அறிந்தும் அறியாமல் அவர்களுக்கு தொல்லைகளை வழங்குகிறார்கள்.எனவே தன் மனைவியின் ஆசையை நிரைவேற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் தன்னுடைய குடும்பத்தை விட்டு விட்டு வெளிநாடு செல்கிறார்கள்.எனவே ஒரு மனைவி தன் கணவனின் நிலையை உணர்ந்து அவர்கள் எதைக் கொடுத்தாலும் நல்ல முறையில் அதை ஏற்றுக் கொண்டு அவர்களுடன் சந்தோஷமாக வாழ்ந்தால் அவர்கள் வெளிநாடு சென்று உழைக்கவேண்டிய நிலை ஏற்படாது.கணவனுக்கு எப்போதும் உருதுனையாக மனைவிமார்கள் நிற்கவேண்டும். பெண்கள் தங்கள் கணவன்மார்களின் வருமானத்தில் திருப்தி காணாமையே கணவன்மார்கள் வெளிநாடு செல்வதற்கு மூல காரணமாக அமைகின்றது.
சீர் குழையும் குடும்பம்
கணவன் தன் மனைவியை விட்டு வெளிநாடு செல்வதினால் ஏராளமான பிரச்சினைகள் ஏற்படுகிறது.தன்னுடைய குடும்பம் எந்த நிலையில் இருக்கிறது என்று கூட தெரியாத நிலையில் தான் குடும்பத் தலைவன் இருக்கிறான்.தன்னுடைய மனைவி தவரான வழிக்குச் செல்வதற்கு இது ஒரு முக்கிய காரணமாக அமைகிறது.அது மட்டுமல்லாமல் தன் குழந்தைகளைக்கூட தன்னுடைய  கண்கானிப்பில் வளர்க்க முடியாத சூழ்நிலை.பிள்ளைகள் வீட்டில் இருக்கும் வரைக்கும் தாயின் கண்கானிப்பில் வளர்ந்து வரும். வெளியில் சென்றவுடன் தன்னை கண்கானிக்க யாரும் இல்லை என்ற நம்பிக்கையில் தவரான வழிக்கு செல்கிறார்கள்.ஆனால் தந்தை இருந்தால் “தந்தை தன்னைப் பார்கக்கூடும”; என்ற பயத்திலாவது தவறு செய்வதை நிறுத்தி விடுவார்கள்.அல்லது தந்தையிடம் யாராவது தன்னைப்பற்றி கூறிவிடக்கூடும் என்ற பயத்திலாவது தவறு செய்வதை நிறுத்தி விடுவார்கள்.அது மட்டுமல்லாமல் குழந்தைகள் தந்தைப்பாசம் என்றால் என்வென்றே தெரியாமல் வளர்க்கப்படுகிறார்கள்.தந்தை என்றாலே காசு அனுப்பக்கூடியவர் தான் என்ற அவர்களில் உள்ளத்தில் பதியப்படுகிறதே தவிர தந்தையின் பாசம் என்ன என்று கூட அவர்களுக்கு உணர முடிவதில்லை.இன்னும் கவலைக்குறிய விஷயம் என்வென்றால் தாய் குழந்தைகளுக்கு தன் தந்தையை அறிமுகப்படுத்த வேண்டிய நிலைமை.குழந்தைகள் தன் தந்தையை பார்த்து பயந்து தந்தை வெளி நபரை போல சில நாட்கள் கழிந்து தான் அவர்களிடம் செல்வார்கள்.தந்தைக்கு ஏன் இந்த அவலமாக நிலை! இதனால் ஆண்கள் திருமணம் முடித்தாலே நிம்மதியில்லாமல் பணம் சம்பாதிக்கும் இயந்திரம் போல ஆகி விடுகிறார்கள்.
தந்தை பக்கத்தில் இருந்து ஒரு குழந்தையை வளர்த்தார்களானால்; அந்தக் குழந்தை நல்ல முறையில் வளரும்.குடும்பத்தின் நலனுக்காக வெளி நாடு சென்று விட்டு தன் குடும்பமே சீர் குலைந்தால் அவர்கள் மிகப்பெரிய கைசேதத்தை அடையவேண்டிய நிலை ஏற்படும்.அவ்வாறு இல்லை என்றால் தன் குடும்பத்தோடு வெளிநாடு சென்று சம்பாதிக்க வசதி படைத்தவர்கள் குடும்பத்துடன் சென்று பொருளாதாரத்தை திரட்டுவதை இஸ்லாம் ஒரு போதும் தடுக்கவில்லை.
எனவே பெரிய அளவில் பொருள் திரட்டி தன் குடும்பத்தை பிரிந்து வாழ்வதை விட குறைந்த அளவு பொருளாதாரத்தை திரட்டினாலும் சரி தன் குடும்பத்தோடு மகிழ்சியாக வாழ்வதே சிறந்தது என்பதை உணர்ந்து வாழக்கூடிய நன்மக்களாக  அல்லாஹ் நம்மை மாற்றி அருள் புரிவானாக!

செவ்வாய், ஆகஸ்ட் 12, 2014

இந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள்!

                    
இந்திய விடுதலைக்கு சிறை சென்றவர்களிலும், உயிர் நீத்தவர்களிலும் முஸ்லிம்கள் அதிகமாக இருந்தனர். அவர்களது மக்கள் தொகை விகிதாச்சாரத்தை விட விடுதலைப் போரில் மாண்டோர் எண்ணிக்கையின் முஸ்லிம்களின் விகிதாச்சாரம் அதிகமாகவே இருந்தது. பிரபல எழுத்தாளர் குஷ்வந்த்சிங் (இல்லஸ்டிரேட் வீக்லி 29.12.1975)
இந்திய விடுதலைக்காக வித்திட்ட முதல் போர் சிப்பாய் கழகம், இதில் 90%பங்கேற்றவர்கள் முஸ்லிம்கள் ,80 % கொல்லபட்டவர்கள் முஸ்லிம்கள்,
யாருக்காவது இது தெரியுமா? இந்த சிப்பாய் கழகத்தின் படை தளபதி அஹமதுல்லாஹ் ஷாஹ், ஆனால் மங்கள் பாண்டெய் வை பற்றி பேசுபவர்கள் உண்டு,
இது பச்சை துரோகம் இல்லையா?
ஐரோப்பியர்களின் இந்திய வருகைக்கு முன்பாக, இந்தியாவை ஆண்டவர்கள் முகலாய முஸ்லிம் மன்னர்கள். ஒளரங்கசீப் அவர்கள் தான் அகண்ட பாரதத்தை உருவாக்கியவர். இன்றைய ஆப்கான், பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் இன்றைய இந்தியாவில் காஷ்மீர் முதல் மதுரை வரையிலும் அவர் ஆட்சி நடந்தது. அவருக்குப் பின்னால் முகலாய பேரரசு பலவீனம் அடைந்தது. அதன் வீழ்ச்சிதான் ஆங்கிலேயர் கள், டச்சுக்காரர்கள், பிரெஞ்சுக்காரர்கள், போர்ச்சுகீசியர்கள் ஆகியோர் இந்தியாவை ஆக்கிரமித்தனர். இதில் 95 சதவீத இந்தியாவை ஆக்கிரமித்தவர்கள் ஆங்கிலேயர்கள். இவர்கள் அனைவருக்கும் எதிராக வீரம் செறிந்த போர்களை முதலில் தொடங்கியவர்கள் முஸ்லிம்களே! அவர்களில் சிலரைப் பற்றிய சிறு குறிப்புகள் ……
1.குஞ்சாலி மரைக்காயர்கள்
போர்ச்சுகீசியர்கள்தான் முதன் முதலில் இந்தியாவை நோக்கி படை யெடுத்தவர்கள். அவர்கள் கேரளாவின் கடலோரப் பகுதிகளை கடற்படையுடன் முற்றுகையிட்ட போது, கேரளாவின் பகுதிகளை ஆட்சி செய்து வந்த குஞ்சாலி மரைக்காயர்கள்தான் அவர்களை படு தோல்வி அடையச் செய்தனர். முதலாம் குஞ்சாலி மரைக்காயர், இரண்டாம் குஞ்சாலி மரைக்காயர் என தலைமுறையாக தொடர்ந்த முதல் விடுதலைப் போரில் அனைவரும் தங்கள் இன்னுயிர்களை நீத்தனர். 16ஆம் நூற்றாண்டிலேயே விடுதலை தீபத்தை ஏற்றிவைத்து முதலில் உயிர்த்தியாகத்தை அர்ப்பணம் செய்தவர்கள் இவர்களே. 

2.சிராஜுத் தௌலா
17ஆம் நூற்றாண்டில் வங்காளத்தில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக பிளாசி என்ற இடத்தில் கடும் போர் நடத்தி ஆங்கிலேயர்களை திணறடித்தவர் சிராஜுத் தௌலா. சூழ்ச்சிகள் மூலம் துரோகிகளின் துணையுடன் சிராஜுத் தௌலா கைது செய்யப்பட்டார். அவரைப் பணியவைக்க ஆங்கிலேயர்கள் எடுத்த முயற்சி பலிக்கவில்லை. அந்த மாவீரனை கல்கத்தா துறைமுகத்தில் ஆங்கிலேயர்கள் தூக்கிலிட்டு கொன்றனர்.
3.மருதநாயகம்
பிரெஞ்சுக்காரர்கள் படையில் சாதாரண வீரனாக இருந்து தம் திறமைகளால் படைத்தளபதியானவர் மருதநாயகம். இஸ்லாத்தில் தன்னை இணைத்துக் கொண்ட யூசுப்கான் என்ற அடையாளத்துடன் பின்னாளில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக வீரப்போர் புரிந்தார். நவீன ஆயுதங்களுடன் கூடிய ஆங்கிலப் படை மருதநாயகத்தின் வீரத்தின் முன் பலமுறை மண்டியிட்டது. அந்த மாவீரன் பிராமணன் ஒருவனின் காட்டிக் கொடுக்கும் சூழ்ச்சியால் ஆங்கிலேயர்களால் கைது செய்யப்பட்டு 15.10.1764ல் தூக்கிலிடப்பட்டார். அவரது உடலை பல பாகங்களாக வெட்டி ஆங்கிலேயர்கள் பல்வேறு இடங்களில் புதைத்தனர். இறந்த பிறகும் அவரது உடலைக் கண்டு ஆங்கிலேய தளபதிகள் குலைநடுங்கியதையே இச்சம்பவம் எடுத்துக் காட்டுகிறது.
4.ஹைதர் அலி
17ஆம் நூற்றாண்டில் கர்நாடகத்தில் விடுதலை அதிர்வுகளை முதலில் தொடங்கியவர் ஹைதர் அலி அவர்கள்தான். அவர் நடத்திய விடுதலைப் போர் 'முதலாம் கர்நாடகப் போர்' என வர்ணிக்கப்படுகிறது. ஆங்கிலேயர்களை நாலா புறமும் திணறடித்த ஹைதர் அலி இறுதியில் கொல்லப்படுகிறார். அவர் வழியிலேயே அவர் மகன் திப்பு சுல்தான் விடுதலைப் போரை தொடர்ந்து நடத்தினார்.
5.திப்பு சுல்தான்   'பல நாள் நாயாக வாழ்வதை விட, ஒரு நிமிடம் சிங்கமாக வாழ்ந்துவிட்டு சாவது மேல்' என கர்ஜித்த மாவீரன் திப்பு சுல்தான். ஸ்ரீரங்கப் பட்டினத்தை தலைநகராகக் கொண்டு கர்நாடகம், கேரளம், தமிழ்நாடு, ஆந்திரா என தென்னிந்தியாவின் சரிபாதி பகுதிகளை தன் சாம்ராஜ்யத்தில் இணைத்தார். இவர்தான் இந்தியாவில் மதுவிலக்கு கொள்கையை முதன் முதலில் அமல்படுத்தியவர். உலக ஏவுகணை தொழில்நுட்பத்தின் முன்னோடி என அப்துல் கலாம் போன்றவர்களே வியந்து போற்றும் விஞ்ஞானி. இந்தியாவை ஆண்ட மன்னர்களில் தனது அரண் மனையில் பிரம்மாண்ட நூலகத்தை வைத்திருந்த ஒரே மன்னனும் திப்பு சுல்தான் தான்.
ஆங்கிலேயர்களை வீழ்த்த அவர்களின் படைகளை ஐரோப்பாவில் குலைநடுங்கச் செய்த பிரெஞ்ச் மன்னர் நெப்போலியனுடனும் ராணுவ ஒப்பந்தத்திற்கு ஏற்பாடு செய்த ராஜதந்திரியும் கூட. இந்துக்களின் உரிமைகளைப் பெரிதும் மதித்த பண்பாளர். இவரது வீர வாள் சுழலும் போதெல்லாம் ஆங்கிலேயர்களின் துப்பாக்கிகள் வீழ்ந்தன. இவரது குதிரைப் படைகள் முன்னேறும் போதெல்லாம் ஆங்கிலேயர்களின் பீரங்கிகள் பின்வாங்கின. இறுதியில் காட்டிக் கொடுக்கும் துரோகிகளால் திப்பு கொல்லப்பட்டார். ஆனால் வரலாற்றில் இன்றும் எழுந்து நிற்கிறார் தியாகியாக! அவர் 4.5.1799 அன்று கொல்லப்பட்டார்.
திப்புவின் வாரிசுகள் வேலூர் கோட்டையில் சிறை வைக்கப்பட்டனர். அவர்கள் தங்களது தாத்தா ஹைதர் அலி, தந்தை திப்புவின் வழியில் சிறை வைக்கப்பட்ட சூழலிலும் புரட்சியில் ஈடுபட்டு ஆங்கிலேய தளபதிகளையும், சிப்பாய்களையும் கோட்டைக்குள் கொன்றனர். இது 1806-ஆம் ஆண்டு நடைபெற்றது. இது வேலூர் புரட்சி என அழைக்கப்படுகிறது. இதில் திப்புவின் வாரிசுகள் அனைவரும் கைது செய்யப்பட்டு பீரங்கிகளால் துளைக்கப்பட்டு ஷஹீதுகளாய் வீழ்ந்தார்கள் வேலூரில். அவர்களது ரத்தம் வேலூரின் கோட்டையிலும், சுற்றி ஓடும் அகழியிலும் கொட்டிக் கிடக்கிறது.
6.இரண்டாம் பகதூர்ஷா      1857ல் நாடு தழுவிய புரட்சி ஆங்கிலேயர்களுக்கு எதிராகக் கிளம்பியது. இந்துக்களும் முஸ்லிம்களும் ஒருங்கிணைந்து வீரப்போரை தொடங்கினர். ஜான்ஸி ராணி லெட்சுமிபாய் போன்ற குறுநில மன்னர்களெல்லாம் ''எங்கள் இந்தியாவின் பேரரசர் இரண்டாம் பகதூர்ஷாதான்'' என பிரகடனம் செய்து புரட்சியில் குதித்தனர். இதுதான் ''சிப்பாய் கலகம்'' என ஆங்கிலேயர்களாலும், ''முதல் இந்திய சுதந்திரப் போர்'' என இந்தியர்களாலும் போற்றப்படுகிறது. இதில் டெல்லியில் மட்டும் 27 ஆயிரம் முஸ்லிம்கள் நாட்டுக்காக உயிர் துறந்தனர். இறுதியில் புரட்சி ஒடுக்கப்பட்டு மன்னர் பகதூர்ஷா நாடு கடத்தப்பட்டார். பர்மாவின் ரங்கூன் சிறையில் மனைவி ஜீனத் மஹலுடன் அடைக்கப்பட்டு உயிர் துறந்தார். நேதாஜி அவர்கள் பர்மா வந்ததும், பேரரசர் பகதூர்ஷாவின் கல்லறைக்குச் சென்று தன் அன்பை வெளிப்படுத்தினார். மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களும் பர்மா சென்றபோது இவரது கல்லறைக்கு சென்று தன் மரியாதையை வெளிப்படுத்தினார். பாபரில் தொடங்கிய முகலாய பேரரசு இரண்டாம் பகதூர்ஷாவுடன் நிறைவுற்றது.

7.பக்ஷீஸ் அலி, குலாம் கவுஸ்கான்
ஜான்சி ராணி லெட்சுமிபாய் விடுதலைப் போரில் பங்கெடுத்தார். இன்றைய உ.பி. மற்றும் ம.பி. மாநிலங்களின் சில பகுதிகள் இவரது ஆட்சியில் இருந்தது. இவரது படைத் தளபதி காஸாகான் என்பவர்தான் ஆங்கிலேயர்களை வீழ்த்தி கோட்டையைக் கைப்பற்றினார். ஜான்சி ராணியை ஆங்கிலேய தளபதி கேப்டன் கென் என்பவன் கொல்ல முயன்றபோது, அவனை வீழ்த்தி ஜான்சி ராணியைக் காப்பாற்றியவர் பக்ஷீஸ் அலி என்பவராவார். ஜான்சி ராணியை ஆங்கிலேயர்கள் தாக்கியபோது, அவர்களுக்கு கடும் தோல்வியைக் கொடுத்து தன்னுயிரை ஈத்தவர் குலாம் கவுஸ்கான் என்பவராவார்.
8.முதல் இந்திய இடைக்கால அரசு முதல் பிரதமராக பரக்கத்துல்லாஹ் உள்துறை அமைச்சர் உபைதுல்லாஹ்
1915ல் ஆப்கானிஸ்தானில் ஆங்கிலேயப் படையை முஸ்லிம்கள் தோற்கடித்தனர். ஆப்கானிஸ்தானில் இந்தியாவுக்கு வெளியே இந்தியாவுக்கான முதல் இந்திய சுதந்திர அரசை தற்காலிகமாக அமைத்தவர்கள் முஸ்லிம்கள்தான். முதல் பிரதமராக இருந்தவர் பரக்கத்துல்லாஹ், உள்துறை அமைச்சராக இருந்தவர் உபைதுல்லாஹ் என்பதும் குறிப்பிடத்தக்கது.
9.இந்தியாவின் இன்றைய மூவர்ணக் கொடியை உருவாக்கியவர் பத்ருதீன் தையாப்ஜி
இந்தியாவின் இன்றைய மூவர்ணக் கொடியை உருவாக்கியவர் ஒரு முஸ்லிம். அவர் பெயர் பத்ருதீன் தையாப்ஜி. இவர் 1902ல் பம்பாய் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இவர்தான் ஆர்எஸ்எஸ்காரர்கள் மதிக்கும் பால கங்காதர திலகரை விடுதலை செய்தவர். இவரது மனைவி பீபி ரஹ்மத்-உன்-நபா என்பவர் இந்திய தேசிய மகளிர் சங்கத்தை உருவாக்கினார். இதுதான் இந்தியாவில் உருவான முதல் மகளிர் மேம்பாட்டுக்கான அமைப்பாகும். பத்ருதீன் தயாப்ஜியை நினைவுகூரும் வகையில் இந்தியாவில் ஒரு தெருக் கோடிக்கு கூட அவர் பெயர் சூட்டப்பட வில்லை என்பதுதான் வேதனையிலும் வேதனை.
10.காங்கிரஸில் முஸ்லிம்கள் அபுல்கலாம் ஆசாத். முஹம்மது அலி ஜின்னா
காங்கிரஸின் முதல் தலைவராக சைமன் என்ற ஆங்கிலேயர் இருந்தார். ஆங்கிலேயர்களில் சில நல்லவர்கள் தான் காங்கிரஸ் கட்சியைத் துவக்கினார். இரண்டாவது தலைவராக ரஹ்மத்துல்லாஹ் சயானி என்பவரும், மூன்றாவது தலைவராக பத்ருதீன் தையாப்ஜியும் பணியாற்றினார்கள். அப்போது காந்தி இந்தியாவுக்கே வரவில்லை, அவர் அப்போது தென்னாப்பிரிக்காவில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. காந்தி 1915-ல்தான் இந்தியாவுக்கு வருகை தந்தார். 1915ல் இந்திய தேசிய காங்கிரசின் தலைவராக மௌலானா முகம்மது அலி தேர்ந்தெடுக்கப்பட்டார். 1930ல் நடைபெற்ற வட்டமேஜை மாநாட்டில் அவர்தான் இந்தியாவின் சார்பில் கலந்து கொண்டார்.      1935ல் காங்கிரஸின் தலைவராக அபுல்கலாம் ஆசாத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தனது 'அல்லிஹிலால்' என்ற இதழ் மூலம் முஸ்லிம்களிடம் விடுதலைத் தீயை மூட்டினார். முஹம்மது அலி ஜின்னாவும் ஒருமுறை காங்கிரஸ் தலைவராக பணியாற்றியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
11.முஸ்லிம் பெண்கள்    இந்திய விடுதலைப் போரில் முஸ்லிம் பெண்களும் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர். இரண்டாம் பகதூர்ஷா ஜாபரின் மனைவி ஜீனத் மஹல், திப்பு வின் குடும்பப் பெண்கள். பேகம் ஹஜ்ரத் மஹல், அலி சகோதரர்களின் தாயார் பீபியம்மாள் எனப்படும் ஸாஹிபா பானு ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
12.அலி சகோதரர்கள்     கிலாபத் இயக்கத்திலும் ஒத்துழையாமை இயக்கத்திலும் பங்கெடுத்த மௌலானா முகம்மது அலி மற்றும் சௌகத் அலி ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டனர். அப்போது முகம்மது அலியின் மனைவி பேகம் சாஹிபாவும், அவரது தாயார் ஸாஸியா பானுவும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு, அந்தக் காலத்திலேயே விடுதலைப் போருக்கு ரூ.30 லட்சத்தை நிதியாகத் தந்தனர். என் பிள்ளைகள் சிறையில் இருக்கும்போது, ஒருவேளை அவர்கள் ஆங்கிலேயர்களிடம் மன்னிப்புக் கேட்டு விடுதலையானால், அவர்களது குரல் வளையை நானே நெறித்துக் கொல்வேன் என கர்ஜித்தார் அவரின் தாயார் பீபியம்மாள்! அவரைப் போலவே அவர்களின் பிள்ளைகள் இரட்டைக் குழல் துப்பாக்கிகளாக வீரத்தோடு களமாடினார்கள். இந்த வீரத்தாய் பீபியம்மாள்தான் காந்திஜிக்கு கதர் ஆடையைப் போர்த்தி கண்ணியப்படுத்தினார். (கதர் என்ற அரபுச் சொல்லுக்கு கண்ணியம் என்று அர்த்தம்). பின்னர் காந்தியால் கதர் இயக்கமாக தொடங்கப்பட்டு இன்றுவரை நீடிக்கிறது.
13.ஆசிப் அலி   மாவீரன் பகத்சிங்கிற்கு, காந்தி போன்றோர் 'தண்டனை தரவேண்டும்' என போலிக் கொள்கை பேசியபோது, பகத்சிங்கின் தூக்குத் தண்ட னையை எதிர்த்து நீதிமன்றத்தில் பல வழக்கறிஞர்கள் வாதாடினர். அதில் முக்கியமானவர் வழக்கறிஞர் ஆசிப் அலி என்பவராவார். இவரை ஆங்கில அரசு பல்வேறு காலக்கட்டங்களில் 13 ஆண்டுகள் சிறையில் அடைத்தது.


14.முஸ்லிம் வள்ளல்கள்   இதன் தொடர்ச்சியாக இந்தியர்களுக்கு என சுதேசி கப்பல் கம்பெனியை வ.உ.சிதம்பரனார் பிள்ளை தொடங்கிய போது, அந்தக் காலத்தில் ரூ.2 லட்சத்தை தந்து உதவியவர் ஹாஜி பக்கீர் முஹம்மது ராவுத்தர் என்பவராவார். கப்பல் கம்பெனி நஷ்டத்தில் இயங்கிய போது வ.உ.சி. அவர்களுக்கு யாகூப் சேட், உமர் கத்தாப், இப்ராகிம் செய்யது ராவுத்தர், அஹமது சாஹிப், முகம்மது சுலைமான் ஆகியோர் தொடர்ந்து பல லட்சங்களை வாரி வழங்கினர். வ.உ.சிதம்பரனார் அவர்கள் 1912ல் வறுமையில் வாடியபோது அவருக்கு உதவிகளை செய்து மகிழ்ந்த வர் அகமது மீரான் என்பவராவார். வ.உ.சி.யின் விடுதலைக்காக வாதாடிய ஒருவரும் முஸ்லிம் வழக்கறிஞர்
15.மதரஸாக்களின் சுதந்திர வேட்கை   சுதேசி இயக்கம் நடந்தபோது அந்நியப் பொருட்களை முஸ்லிம்கள் புறக்கணித்தனர். கதர் ஆடைகளையே அணிந்தனர். கதர் ஆடை உடுத்திய மணமக்களின் திருமணங்களுக்கு மட்டுமே முஸ்லிம் தலைவர்கள் வருகை தந்தனர். முஸ்லிம்கள் ஆங்கிலேய தயாரிப்புகளை தீயிலிட்டுக் கொளுத்தினர். வேலூரில் மவ்லவி கலீலுர் ரஹ்மான் தலைமையில் பாக்கியத்துஸ் ஸாலிஹாத் மதரஸா வளாகத்தில் அந்நிய துணிகள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. மதரஸாக்களிலும் சுதந்திர வேட்கை வீறிட்டு பரவியது.
.ஒத்துழையாமை இயக்கத்தில் முஸ்லிம்கள்   காந்தி தலைமையில் ஒத்துழையாமை இயக்கம் நடந்தபோது நாடெங்கும் முஸ்லிம்கள் களத்தில் குதித்தனர். 1920ல் காயிதே மில்லத் போன்றோர் கல்லூரிப் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு போராட்டத்தில் குதித்தனர். ஆங்கிலக் கல்விக்கூடங்களுக்கு தங்கள் பிள்ளை களை அனுப்பாமல் ''ஆங்கிலம் படிப்பது ஹராம்'' என அறிஞர்கள் ஃபத்வா வழங்கினர்.
ஜாலியன் வாலாபாக்   இன்றைய தடா, பொடா சட்டத்திற்கு முன்னோடியான ரௌலட் சட்டத்தை எதிர்த்து நாடெங்கும் போராட்டம் வெடித்தது. அப்போது பஞ்சாப் மாநிலம் ஜாலியன் வாலாபாக்கில் பெரும் கூட்டம் கூடியது. அந்த மைதானத்தில் ஒருவழிப் பாதை மட்டுமே உண்டு. அங்கே நுழைந்த ஜெனரல் டயர் என்ற ஆங்கிலேய தளபதியின் தலைமையிலான படை சுற்றி வளைத்து 1650 தோட்டாக்களை சரமாரியாகப் பாய்ச்சியது. அதில் சுமார் 1000 பேர் இறந்ததாக விசாரணைக் கமிஷன் கூறியது. அதில் சரிபாதிக்கும் மேலானோர் முஸ்லிம்கள் என்பதை அங்கிருக்கும் கல்லறைகள் சாட்சியாக கூறிக் கொண்டிருக்கின்றன.

16.வள்ளல் ஜமால் முஹம்மது  
காந்தி அவர்கள் தமிழகம் வருகை தந்து விடுதலைப் போராட்டத்திற்கும், ஆங்கிலேயர்களுக்கு எதிரான பிரச்சாரத்திற்கும் நிதி சேர்க்க முயன்றார். அப்போது வெற்றுக் காசோலையை காந்தியிடம் கொடுத்து நீங்கள் விரும்பும் தொகையை பூர்த்தி செய்து கொள்ளலாம் என காந்திக்கு இன்ப அதிர்ச்சியை அளித்தவர் ஜமால் முஹம்மது. அவரது பெயரால் தான் இன்று திருச்சியில் ஜமால் முஹம்மது கல்லூரி விளங்குகிறது.  காந்தியின் கதர் துணி பிரச்சாரத்திற்கு வலுவூட்ட காஜா மியான் ராவுத்தர் 50 ஆயிரம் ரூபாயில் கதர் நெசவு ஆலையை நிறுவினார். அவரது பெயர் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரிக்குள் இருக்கும் விடுதிக்கு சூட்டப்பட்டிருக்கிறது
17. கேரள மாப்பிள்ளைமார்கள்  …1921ல் கேரளாவில் மாப்பிள்ளை மார்கள் நடத்திய போராட்டம் வரலாற்றில் ஒரு மைல்கல். அந்தப் புரட்சியால் ஆங்கிலேயப் படைகள் சிதறி தெறித்து புறமுதுகிட்டனர். அந்தப் புரட்சி ஒடுக்கப்பட்டு மாப்பிள்ளைமார்களில் பலர் கைது செய்யப்பட்டனர். ஏராளமானோர் சன்னல்கள் இல்லாத கூட்ஸ் ரயிலில் அடைக்கப்பட்டு கோவைக்கு அனுப்பப் பட்டனர். கோவை ரயில் நிலையம் வந்ததும், கூட்ஸ் வண்டி திறக்கப்பட்டது. அதில் மூச்சுத் திணறி 65 முஸ்லிம் வீரர்கள் தம் இன்னுயிர் நீத்தனர். அவர்களது ஜனாஸாக்கள் கோவை ரயில் நிலையம் அருகில் புதைக்கப்பட்டன. இப்போதும் கோவை ரயில் நிலையத்திற்கு சென்று பார்த்தால் அருகில் ஒரு பள்ளிவாசல் இருக்கும். அங்கிருக்கும் அம்மண்ணறைகள் ஒன்றும் அவர்களின் தியாகத்தை சாட்சி கூறிக் கொண்டிருக்கின்றன.
தொகுப்பு: எம். தமிமுன் அன்சாரி, ஓ.யூ.ரஹ்மத்துல்லாஹ்  நன்றி: தமுமுகவின் அதிகாரபூர்வ இணையதளம்
………………………………………………………………………………………………………
இந்திய விடுதலைக்காக போராடியவர்கள்...  மறைக்கபட்ட.. மறுக்கபட்ட... உன்மை....
                                    தெரிந்தவை சில தெரியாதவை பல...
தொகுப்பு:p.j face book..
முஸ்லிம்கள் இந்த நாட்டை ஆண்டோம், நாமே இந்த நாட்டை நிர்வாகம் செய்தோம் நாமே இழந்தோம் அதர்க்காக நாமே போரடினோம் ,வென்றோம்
ஆனால் போரடிய பெயர் வேரொருவனுக்கா?
1. வரலாற்று நாயகன் திப்பு சுல்த்தான்,போர்கள் மற்றும் நவீன ஆயுதங்களால் வெள்ளையர்களை நிலைகுழைத்து வெருண்டோட வைத்தவர் ஆனால் இன்று அவரை பற்றி யாராவது பேசினோமா இவர் தான் பாடு பட்டார் என்று..?
2. இந்திய விடுதலைக்காக வித்திட்ட முதல் போர் சிப்பாய் கழகம், இதில் 90% பங்கேற்றவர்கள் முஸ்லிம்கள் ,80 % கொல்லபட்டவர்கள் முஸ்லிம்கள்,யாருக்காவது இது தெரியுமா? இந்த சிப்பாய் கழகத்தின் படை தளபதி அஹமதுல்லாஹ் ஷாஹ், ஆனால் மங்கள் பாண்டெய் வை பற்றி பேசுபவர்கள் உண்டு, இது பச்சை துரோகம் இல்லையா?
3.முஸ்லிம் ஆட்சியாளர்கள் மார்க்க கடமை என்று ஃபத்வா கொடுத்தார்கள் ஆங்கிலேய படிப்பை துரக்க வேண்டும், அவர்களின் ஆடையை அனிய கூடாது என்று ! இது போன்று வேரு மதத்தவர்களில் எவேரேனும் உண்டா? இதனால் தான் இன்று கல்வியில் பின் தங்கியிருக்கிறது முஸ்லிம் சமுதாயம்!
4.முஸ்லிம் மன்னர்கள் பல நாடுகலாக பிரிந்து கிடந்த மாநிலங்கள், சிற்றூர்களை எல்லாம் ஒன்று சேர்த்து ஒரே மாநிலமாக தமிழகம் போன்றவற்றை மாற்றினார்களே இது பங்களிப்பு இல்லையா? 800 வருடமாக முஸ்லிம் மன்னர்கள் ஆட்சி செய்தார்களே இவற்றை மாற்றி காட்டினார்களே இது பங்களிப்பு இல்லையா?
5.முஸ்லிம் மன்னர்கள் பல வழக்குகளை தீர்ப்பதர்க்காக தனித்தனியே பன்சாயாத்து,மாவட்ட ஆட்சியகம், உயர் நீதி மன்றங்கள்,மாஜிஸ்தரேட் நீதி மன்றங்கள், போன்ற அமைப்பை உருவாக்கி இன்றும் வெற்றி கானுகின்றோமே இது பங்களிப்பு இல்லையா? இன்றும் புழக்கத்தில் உள்ள வக்கீல்,மாஜிஸ்தரேட்,வாயிதா , வசூல், கஜானா ,ஆஜர், போன்ற அரபி வார்தைகளை தந்து உதவியாக இருக்கிறதே இதை மாற்ற முடிந்ததா?
6.தங்கம் ,வெள்ளி நானயங்கள் புழகத்தில் இருந்தால் நாட்டின் பொருளாதாரம் அடி வாங்கும் என்று ருபாய் நோட்டுகளை உபயொக படுத்த அறிமுகபடுத்தியவர் மன்னர் முஹம்மது பின் துக்லக், மேலும் இவர் தான் நிலம் சம்பந்தமான வழக்குகளை தீர்க்க முதன் முதலில் சட்டம் இயற்றியவர், இவர் தான் தொல்லியல் துரையையும் நிருவி நாட்டுக்கு பெரிதும் இதை அர்ப்பனித்து உதவியவர்,,
7.முஸ்லிம்கள் ஆங்கிலேயரை எதிர்த்து போராடுவதற்க்கு பல காரணங்கள் அமைந்தாலும் மத ரீதியாக அமைந்த காரணம் ,உதுமானிய பேரரசால்(otoman empire) மத தலமையகமாக இயங்கிகொண்டிருந்த துருக்கியை ப்ரிடிஷ் அரசு கைபற்றியது,இதன் காரணமாக முஸ்லிம்கள் பொங்கி எழுந்து மேலும் இந்தியாவில் போராட்ட பங்களிப்பை வீரியப்படுத்தினர்.
8.நாட்டில் பிரச்சாரம் செய்தால் சிறை தண்டனை அமலில் இருந்த காலத்தில் யாருமே பிரச்சாரம் செய்ய முன் வராத நேரத்தில் ஜுமுஅ சொற்பொழிவை பிரச்சார களமாக மாற்றி ஆங்கிலேயர்களால் சுட்டு தள்ளப்பட்டு தமது பங்களிப்பை காற்றி தமது இன்னுயிரையும் தியாகம் செய்து ரத்த கறை இன்னும் காட்ச்சியளிக்கும் கூனி மஸ்ஜித், தேவ் பந்த், உத்திர பிரதேசம், இந்தியா... இதை போன்று இந்துக்கள் கோயில்களில் செய்தார்களா? கிருஸ்த்துவர்கள் தேவாலயங்களில் செய்தார்களா? சீக்கியர்கள் குருதுவாரங்களில் செய்தார்களா? அல்லது இந்த படுகொலை பற்றி யாருக்காவது இன்று தெரியுமா? ஆனால் ஜாலியன் வல்ல பாக் படுகொலை மட்டும் நியாபகம் இருக்கும் .. இது முஸ்லிம்கலுக்கு செய்யும் துரோகம் இல்லையா?
9.இந்திய தேசிய படையை(சுதேசி இயக்கம்) நாட்டிற்க்காக போராட உருவாக்கியவர் நேத்தாஜி சுபாஷ் சந்திர போஸ், ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஆயுதம் வாங்க நிதி வசூல் செய்யும் பொழுது இந்தியாவில் போதிய நிதி வசூல் செய்ய முடியாததால் பர்மா சென்று உதவி நாடிய பொழுது வள்ளல் ஹபீப் அன்றய காலத்திலயே 1.5 கோடி நிதி கொடுத்து பெரிதும் உதவினார்,இவரை பற்றி யாருக்காவது இன்று தெரியுமா அல்லது சுதந்திர ஏட்டிலாவது குறிக்க பட்டு இருக்கிறதா? இது முஸ்லிம்களுக்கு இழைக்கும் துரோகம் இல்லையா?.. (குறிப்பு:- அன்று ஒரு பவுன் தங்கத்தின் விலை 24 பைசா)...
10.அன்று நேதாஜிக்கு தெரியும் முஸ்லிம்கள் தான் நாட்டிற்க்காக தியாக செய்ய முன் வந்து தம் உயிரையும் துச்சமாக மதித்து போராடுவார்கள் என்று அதனால் தான் நேத்தாஜியின் படையில் படை அனைத்திற்க்கும் தளபதியாக இருந்தவர் ஷா நவாஸ் கான், இவரது படையில் 90% முஸ்லிம்கள் , ரத்தம் சிந்தியது முஸ்லிம்! ரத்தம் சிந்தப்படுவதற்க்கு முஸ்லிம் ! பெயர் மட்டும் முஸ்லிம்களுக்கு இல்லை! இது தான் இந்த நாட்டின் சுதந்திரமான துரோகம்!
11.சுதந்திர இந்தியாவில் சுதந்திரதுக்கு முன் பாராளமன்றத்தில் இருபது மந்த்ரிகளில் ஐந்து முஸ்லிம்கள் கரீம் கனி உட்பட ஆனால் இன்று? ஏன் இந்த துரோகம்?
12.நாட்டின் பல போராடங்களில் ஜனநாயக போராட்டம் மிகமுக்கியமானது ரயில் எரிப்பு கள்ளுக்கடை மறியல் உப்பு சத்தியாகரகம் போன்றவை, இதர்க்கு காங்கிரஸ் மேலிடம் தான் தலைமையகம் இதன் பொருப்பு அன்றய காலத்தில் சாதரணமானது அல்ல, சுதந்திரம் வாங்கும் வரை இதன் பொருப்பு வகித்து தலைமைக்கு தலைவராக இருந்தவர் மௌலானா அபுல் கலாம் ஆசாத்..ஆனால் சுதந்திரம் வாங்கியதிலிருந்து இன்று வரை யாரவது தலைமை பொருப்பில் உண்டா?
13.அன்று சுதேசி கம்பெனிக்கு 19 நபர் கொண்ட கமிட்டீக்கு பொது செயளாலராய் இருந்தவர் பக்கிர் முஹம்மது ராஊத்தர், துனை செயளாலராய் இருந்தவர் நம் அணைவருக்கும் தெரிந்த கப்பலோட்டிய தமிழன் வா.ஊ..சிதம்பரம், மேலும் கப்பல் வாங்குவதர்க்காக நிதி திரட்ட பட்டது அப்பொழுது இந்தியா முழுவதும் திரட்டிய நிதி 215.13/- அனா மட்டுமே இந்த நிதி போதாது என்று இதர்க்காக பக்கிர் முஹம்மது ராஊத்தர் மட்டும் கொடுத்த பணம் அன்றே ஒரு லட்சம் ரூபாய், கப்பலின் முதலாளி பணம் தரவேண்டும் டிரைவர்(கப்பலோட்டிய தமிழன் வா.ஊ..சிதம்பரம்) பெயர் எடுக்க வேண்டும், இது தான் சுதந்திர இந்தியாவின் லட்ச்சணம்! இது மெகா துரோகம்!
14.கப்பல் ஓட்டியதர்காக கைது செய்யபட்டு விட்டார் சிதம்பரம் ,சிறை சென்றார் இவரை விடுவிப்பதர்க்காக வாய் மூச்சு கூட விட முடியாத காலத்தில் சிறைக்கு வெளியே போரட்டம் நடத்தபட்டது இதில் பங்கேற்றவர்களில் பாதிக்கு மேற்பட்டவர்கள் முஸ்லிம்கள் போரட்ட களத்தில் முஹம்மது யாசீன் என்பவர் ஒருவர் மட்டுமே கொல்லபட்டார் இவரை பற்றி இந்தியாவில் யாருக்காவது இன்று தெரியுமா?
15.ஆங்கிலேயர்களுக்கு தொல்லை கொடுத்ததில் முக்க்ய பங்கு வகித்ததில் வேலு நாச்சியாரும், மருது பாண்டியரும் ஒருவர் இவர்களுக்கு பாதிக்க பட்ட காலத்தில் தங்க அடைக்களம் கொடுத்து உயிரை காத்தவர் மா மன்னர் திப்பு சுல்த்தான்,
16.காந்தியின் கள்ளுக்கடை மறியல் முக்கியமானவை, இதில் பங்கேற்றால் மூன்று வருடம் சிறை தண்டனை மட்டும் அல்ல கடுங்காவல் சிறை தண்டனை இதை தெரிந்தும் மதுரை கோரிப்பாளயத்தில் 19 பேர் முன்வந்து போராட்டம் நடத்தினர் இதில் 10 பேர் முஸ்லிம்கள் இன்றும் கோரிப்பாளயம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்ய பட்ட ரிக்கார்ட் உல்லது..இதை கூட மறைத்து ஏன் இந்த துரொகம் முஸ்லிம் சமுதாயத்திற்க்கு?
17.அன்று நாட்டின் தேசிய கொடியை ஏந்தி சென்றால் சுடப்படுவார்கள் மேலும் 7 வருடம் சிறை தண்டனை அவ்வாரு கொடி ஏந்தி செல்வதும் சாதரண விஷயமும் அல்ல அவ்வாரு தைரியமுடன் செய்தவர் பட்டியலில் கொடி காத்த திருப்பூர் குமரன் மட்டுமே உள்ளார் , ஆனால் முஹைதீன் கான்,அப்துல் லத்தீப்,அப்துல் ரஹீம், மதுரை பாவா சாஹிபு, மதராசபட்டினம் ஷேக் சாஹிபு போன்ற பெயர்கள் மறைக்க பட்டு விட்டது ஏன் இந்த பச்சை துரோகம்?
18.போரட்ட சூட்டை தனிக்க ஆங்கிலேய அரசு புது யுக்தியை கையாண்டது அதில் ஒன்று பட்டம் அளிப்பது.. முஸ்லிம்களுக்கு சம்சுல் உலமா( உலமாக்களின் சூரியன்), கான் சாஹிப் பட்டம் மேலும் மற்ற மதத்தவர்களுக்கு ராவ் பஹதுர் ,சர் பட்டம்.. ஆணால் இந்த பட்டங்களை எல்லாம் துறந்து முழு எதிர்ப்பை காட்டியவர்கள் முஸ்லீம்கள் மட்டுமே மற்றவர்கள் இதை பயன் படுத்தி நாட்டிர்க்கு துரோகம் இழைத்து மேல் சென்று விட்டனர் இதனால் தான் இன்று படிப்பில் பின் தங்கிய நிலை நம் சமுதாயத்திற்க்கு.. (குறிப்பு: கான் சாஹிப் பட்டம் இருந்தால் இன்றய கவர்னராக இருந்தால் என்ன மதிப்பும் மரியாதையும் கிடைக்குமோ அதே மதிப்பு அந்த பட்டத்திர்க்கு உண்டு என்பதை என்னி பாருங்கள் ,இதை வைத்து இருப்பவர் அன்று எந்த காவல் நில்யதிலும் சென்று யாரை வெண்டுமானாலும் விடுவிக்கலாம், ஆங்கிலயே அரசு ஆளுனரிடம் நேரடியாக சந்தித்து பேசி தேவையானதை நிறைவேற்றலாம்)

19. பல முஸ்லிம்கள் சிறை வாசம் செண்று செத்து மடிந்தனர், ஆனால் நம் முன்னால் பிரதமர் வாஜ்பாய் போராட்ட்த்தை பார்க்க சென்ற பொழுது கைதாகி சிறைக்குள்ளே எழுதிய கடிதம் இன்றும் உள்ளது அதில் அவர் எழுதியது என்னவென்றால் " நான் ஒரு ஓரமாக என்ன நடக்கிறது என்று பார்க்க தான் சென்றிருந்தேன் இதற்க்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை"... இவ்வாரு எழுதிய இவரை நம் நாட்டின் பிரதமர் ஆக்கிவைத்தோம் , ஆனால் சிறை சென்று செத்து மடிந்த முஸ்லிம்களின் பெயரை கூட நாட்டின் ஏட்டில் எழுத மணம் வரவில்லை!
20.இன்று இருப்பது போல் அன்று இடஒதுக்கீடு என்னிக்கையை வைத்து தரவில்லை மதத்தை வைத்து தான் முஸ்லிம்களுக்கு 55% இட ஒதுக்கீடு ஆங்கிலேய அரசு கொடுத்தது இதையும் துச்சமாக மதித்து முஸ்லிம் உலமாக்களும், அரசியல் தலைவர்களும் இட ஒதுக்கீடு ஹராம் என்று ஃபத்வா கொடுத்து எதிர்ப்பை வீரியமாக்கினர் அதனால் தான் இன்றும் இட ஒதுகீட்டிற்க்கு கெஞ்சும் சமுதாயமாக நம் முஸ்லிம் சமுதாயமாக இருக்கின்றோம்! 

இந்த நிலையை உருவாக்கியவர்கள் என்ன இன்பம் கண்டுள்ளீர்கள்? இந்த பச்சை துரோகத்திர்க்கு பதில் இம்மையிலும் மருமையிலும் சொல்லியே ஆக வேண்டும் கயவர்களே! முஸ்லிம் சமுதாயமே இழந்த உரிமையை கல்வியின் மூலம் மீட்டு எடு அல்லாஹ்வின் உதவியொடு, அவன் என்றும் அநீதிக்கு எதிராய் துனை நிற்க்க மாட்டான்! அவனுக்கே அஞ்சுங்கள் அவனுக்கே சிரம் பனிய்யுங்கள்!..

ஞாயிறு, ஆகஸ்ட் 10, 2014

அலைபேசி அருமைகளும், அவலங்களும்....


 அஷ்ஷேய்க். முபாரக் மதனி
மோட்டாரோலாவின் செங்கல் போன்ற மொபைல் போனிலிருந்து இன்றைய ஆப்பிள் 3ஜி போன், பிளாக் பெர்ரி (Black berry) போன் வரை வளர்ச்சியைக் கொண்ட மொபைல் போனின் வயது சுமார் 27 ஆகிறது.

1983ல் டாக்டர் மார்டின் கூப்பர் 2500 பவுண்ட் விலையில் முதன் முதல் மோட்டாரோலா டைனா ஏ.டி.சி 800 எக்ஸ் என்னும் மொபைல் போனை வர்த்தக ரீதியாகக் கொண்டு வந்தார்.

அப்போதெல்லாம் பெரும் செல்வந்தர்களின் சொகுசு சாதனமாக செல்போன் இருந்து வந்தது. இந்நிலை நீண்ட நாட்களாக இருந்து வந்த போதிலும் அண்மைக்காலமாக அன்றாட வாழ்க்கையின் அத்தியாவசிய சாதனமாக அது மாறிவிட்டது.

மொபைல் போன் முதன் முதலில் வந்து ஓராண்டு கழிந்த பின்னர் உலகில் சுமார் 12ஆயிரம் பேரே அதன் உபயோகிப்பாளர்களாக இருந்தனர். ஆனால் இன்று அனைத்து நாடுகளிலும் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர். இந்தியாவில் மட்டும் மொபைல் போனை உபயோகிப் பவர்களின் எண்ணிக்கை 670 மில்லியன் என அரசு செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

பேசுவதற்கு மட்டும் வந்த இந்த மொபைல் போன் இன்று டெக்ஸ்ட் மெஸேஜ்களை (எஸ்எம்எஸ்) அனுப்புவதற்கும் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பெரிய அளவில் டேட்டா (Data) பரிமாற்றத்திற்காக ஏற்படுத்தப்பட்டதே இன்று3ஜி மற்றும் இனி வர இருக்கும் 4ஜி மொபைல் சேவைகள் ஆகும். இந்த வேக மாற்றங்கள் இனிவரும் காலங்களில் மொபைல் போனில் எத்தகைய மாற்றங்கள் ஏற்படும் என்பது கற்பனை கூடசெய்து பண்ணிப் பார்க்க முடியாத நிலையிலுள்ளது.

அல்லாஹ் மனிதனுக்கு வழங்கியுள்ள அருட்கொடைகளில் மொபைல் போனும் ஒன்று என்றே சொல்லலாம். இருப்பினும் இவ்வருட் கொடையைப் பயன்படுத்துவதில் இஸ்லாம் காட்டும் வழிமுறைகள் புறக்கணிக்கப்பட்டதால் அது மிகப்பெரும் ஆபத்தாக மாறிவருகிறது. இஸ்லாத்தை தமது வாழ்க்கை திட்டமாக ஏற்று அதனடிப்படையில் வாழ விரும்பும் மக்களுக்கு மொபைல் போன் உபயோகத்தை எவ்வாறு இஸ்லாமிய முறையில் அமைத்துக் கொள்வது என்பதைத் தெளிவு படுத்துவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

கீழே குறிப்பிடப்படுபவை மொபைல் போனைப் பயன்படுத்துவோர் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்களாகும்.

1. தொடர்பு கொள்ளும் நேரத்தை கவனத்தில் கொள்ளல்

பொதுவாக இஸ்லாம் பிறருக்கு தொல்லை கொடுப்பதை அனுமதிக்கவில்லை. இந்த வகையில் மொபைல் மூலமாகவும் தொல்லை கொடுப்பது தடை செய்யப்பட்டதே! நாம் தொடர்பு கொள்ளக் கூடிய சகோதரர்கள் நோயாளியாக, பிஸியாக அல்லது ஏதாவது கூட்டங்களில் இருக்கலாம் எனவே அவர்களிடமிருந்து நமது அழைப்புக்கு பதில் வராத சந்தர்ப்பங்களில் அவர்களை மீண்டும் மீண்டும் அழைத்து தொல்லை கொடுக்காமல் இருக்க வேண்டும். அவ்வாறே தூங்கக் கூடிய நேரங்கள், தொழுகை போன்ற வணக்கங்களில் ஈடுபடக் கூடிய சந்தர்ப்பங்களில் பிறரை அழைத்து தொல்லை கொடுப்பது மார்க்கம் அனுமதிக்காத விஷயமாகும்.

2. தொடர்பு கொள்பவரை சங்கடத்தில் ஆழ்த்தாமல் இருப்பது.

தொலைபேசி மூலமாக ஒருவருடன் தொடர்பு கொள்ளக் கூடியவர் ஆரம்பத்தில் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்வதே ஒழுங்காகும். ஒருமுறை ஜாபிர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் இல்லம் சென்று அவர்களை அழைத்த போது, யார்? என்று நபியவர்கள் வினவினார்கள். அதற்கு ஜாபிர் (ரலி) அவர்கள் ‘நான்’ என்று பதில் சொன்னார்கள். அப்போது வெளியே வந்த நபி (ஸல்) அவர்கள் அவர் (பெயர் கூறி தன்னை அடையாளப்படுத்தாமல்) ‘நான்’ என்று கூறியதை கண்டித்தார்கள். (புகாரீ, முஸ்லிம்)

எனவே ஒருவரோடு தொடர்பு கொள்ளும் போது நாம் யார் என்பதை அடையாளப்படுத்துவது அவசியம் என்பது தெளிவாகின்றது. குறிப்பாக, தொலைபேசி மூலமாக பேசும்போது நாம் யார் என்பதை அடையாளப்படுத்தாவிட்டால் தொடர்பு கொண்டவர் கோபத்தில் அழைப்பைத் துண்டிக்க வாய்ப்பிருக்கிறது. சிலர் தொடர்பு கொண்டுவிட்டு மறுதரப்பில் உள்ளவர்களிடம் ‘நீங்கள் யார்?’ என வினவுவது அநாகரீகமான செயலாகும். எனவே தொடர்பு கொண்டவரே தன்னை அறிமுகப் படுத்துவதுதான் தொலைபேசி ஒழுங்கும் இஸ்லாம் கூறும் வழிகாட்டலும் ஆகும். மேலும் தொடர்பு கொள்ளக் கூடிய ஒருவர் மறுதரப்பில் இருந்து பதில் எதுவும் கிடைக்காத போது உடனடியாக தனது மொபைலை ஆஃப் செய்துவிடுவதும் அவரை ஒரு வகையில் சங்கடத்தில் ஆழ்த்தும். எனவே இதுவும் தவிர்க்கப்பட வேண்டியதே!

3. கூட்டங்களில் (மீட்டிங்ஸ்) அதிகமாக மொபைலை பயன்படுத்துவது.

கூட்டங்களில் அமர்ந்திருக்கும் ஒருவர் பிறரோடு தொடர்பு கொள்வதும் தனக்கு வரும் அழைப்புகளுக்கு பதில் தருவதும் நாகரீகமற்ற செயலாகும். அவ்வாறு நடந்து கொள்வது கூட்டத்தில் அமர்ந்திருப்போருக்கும் அதை நடத்து பவருக்கும் தொல்லை தரும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. எனவே மொபைலை உபயோகிப்பவர்கள் இச்செயலை கண்டிப்பாக தவிர்ந்து கொள்ள வேண்டும். மொபைலை ‘ஸைலென்ட் மோடில் வைத்துக் கொள்ளலாம். அல்லது ஆஃப் செய்துவிடலாம். இன்று பெரும்பாலான கூட்டங்களின் ஆரம்பத்தில் இவ்விஷயம் நினைவூட்டப்படுவது குறிப்பிடத்தக்கது.

4. பள்ளிவாசலினுள் நுழையும் போது மொபைல் போனை ஆஃப் செய்தல்

தொழுகையில் இறையச்சத்துடனும் உயிரோட்டத்துடனும் ஈடுவது மார்க்கம் வலியுறுத்தியுள்ள விஷயமாகும். எனவே இவ்வாறு பயபக்தியுடன் தொழுது கொண்டிருப்போரையும், அதை வைத்திருப்பவரையும் திசை திருப்பும் அம்சமாக மொபைல் மாறிவிடாமல் இருப்பதற்காக பள்ளிவாசலினுள் நுழையும் போதே அதை ஆஃப் செய்துவிட வேண்டும்.

5. ரிங் டோனாக இசைகளையும், அல்குர்ஆன் வசனங்கள் மற்றும் துஆக்களையும் பயன்படுத்துவது

எனது உம்மத்தில் ஒரு கூட்டம் இருக்கும் அவர்கள் விபச்சாரம், பட்டு, மதுபானம் மற்றும் இசைக்கருவிகளை ஹலாலாக்கிக் கொள்வார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி) இசையும் இசைக்கருவிகளும் தடை செய்யப்பட்டவை என்பதில் நான்கு மத்ஹபுடைய இமாம்கள் உட்பட அனைத்து அறிஞர்களும் ஏகோபித்த கருத்தில் உள்ளனர். மேலும் ஸவூதி அரேபியாவின் ஆய்வுக்குழுவும் இசை ஹராம் என தீர்ப்புவழங்கியுள்ளது. எனவே நமது தேவைகளை பரிமாறிக் கொள்வதற்காக நாம் பயன்படுத்தக் கூடிய மொபைல்களில் இவ்வாறான இசைகளை தவிர்ந்து கொள்வது அவசியமாகும்.

ஒருவர் பயன்படுத்தும் ரிங்டோனை வைத்தே அவரது ஆளுமையை புரிந்து கொள்ளலாம். இளைய தலைமுறையினர் மட்டுமன்றி பெரியவர்களும் சில வேளைகளில் மார்க்க ஈடுபாடு கொண்டோரும் இவ்வாறான இசைகளுக்கு அடிமைப்படுவது வேதனை அளிக்கக்கூடிய விஷயமாகும்.

அவ்வாறே சிலர் அல்குர்ஆன் வசனங்கள்,துஆக்கள் மற்றும் அதான் எனும் பாங்கு போன்றவற்றை ரிங் டோனாகப் பயன்படுத்துகின்றனர். இது பற்றி சமகால இஸ்லாமிய அறிஞர்களுள் ஒருவரான அஷ்ஷெய்க் ஸாலிஹ் அல்ஃபவ்ஸான் அவர்களிடம் வினவப்பட்ட போது, இவற்றை ரிங்டோனாகப் பயன்படுத்துவது அவற்றை இழிவுபடுத்துவதாகவே அமையும் என்று பதிலளித்தார். எனவே, இவ்விஷயத்தில் முஸ்லிம்கள் மிக கவனமாக இருக்க வேண்டும்.

6. வாகனத்தை ஓட்டும் போது மொபைலை உபயோகிப்பது.

வாகன ஓட்டுனர்கள் வாகனங்களை ஓட்டும் போது மொபைல் போன்களை பயன்படுத்துவது அதிக அளவில் விபத்துக்கள் ஏற்படுவதற்கு காரணமாக அமைவதாக ஆய்வுகள் கூறுகின்றன. விபத்துக்களில் 28 சதவீதமானவை வாகனங்களை ஓட்டும் போது மொபைல் போன்களில் பேசுவதாலும், எஸ்எம்எஸ் அனுப்புவதாலும் ஏற்படுவதாக ‘தி வாஷிங்டன் போஸ்ட்’ இணையதளம் கூறுகிறது. இதனாலேயே பல நாடுகளில் இது ஒரு தண்டனைக்குரிய குற்றமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்லாத்தில் உயிர்கள் பெறுமதிப்புமிக்கவையாக உள்ளன. பிறர் உயிர்களுக்கு ஆபத்தை உண்டு பண்ணுவதும், தன்னைத்தானே அழித்துக் கொள்வதும் இஸ்லாம் தடைசெய்திருக்கும் பாவங்களாகும். எனவே வாகனங்களை ஓட்டும் போது மொபைல் போனை பயன்படுத்துவதைத் தவிர்ப்பது மார்க்க ரீதியில் கடமை என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

7. எஸ்எம்எஸ் (குறுஞ் செய்தி) அனுப்பும் போது பேண வேண்டியவை

மொபைல் போனின் பயன்பாடுகளில் டெக்ஸ்ட் மெஸேஜ் அனுப்புவது மிக முக்கியமான ஒன்றாக உள்ளது. ஆனால் இதில் மார்க்கமும் ஒழுக்கமும் பேணப்படாமல் பயன்படுத்துவோர் நடந்து கொள்வது வேதனை தரும் அம்சமாகும். ஆபாசமான, விரசமான செய்திகளையும் உறுதிப்படுத் தப்படாத தகவல்களையும் அனுப்புவதும் அடுத்தவர்களின் மனங்களை புண்படுத்தக் கூடிய செய்திகளை பரப்புவதும் இஸ்லாம் தடைசெய்துள்ள பாவங்களாகும்.

‘தான் கேட்கின்ற அனைத்தையும் (உறுதிப் படுத்தாமல்) உடனே அறிவிப்பது ஒருவன் பொய்யன் என்பதற்குப் போதுமான சான்றாகும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

‘ஈமான் கொண்டவர்கள் மத்தியில் ஆபாசம் பரவ வேண்டுமென விரும்புகிறவர்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் நோவினை தரும் தண்டனை உண்டு’ (24:19) என்று அல்லாஹ் கூறுகின்றான்.

எனவே எஸ்எம்எஸ் அனுப்பும் போது அல்லாஹ் நம்மை பார்த்துக் கொண்டிருக்கின்றான் என்ற உணர்வு நம்மிடம் இருக்கவேண்டும். மொபைல் போன்களின் மூலமாக ஆபாசத்தையும் அவதூறுகளையும் வதந்திகளையும் பரப்புவோர் மறுமையில் கடுமையான தண்டனைக்கு உட்படுத்தப் படுவார்கள் என்பதையும் மறந்துவிடக் கூடாது.

8.மொபைல் போன்கள் மூலமாக முஸ்லிம்களின் குறைகளைத் தேடுவதும் பரப்புவதும் கூடாது

பொதுவாக மனிதர்களின் குறிப்பாக முஸ்லிம்களின் மானம் புனிதமானது என்று இஸ்லாம் கூறுகிறது. ஒரு முஸ்லிமின் குறைகளைத் தேடுவதும் அவனை மானபங்கப்படுத்துவதும் மார்க்கத்தில் கடுமையாக தடைசெய்யப்பட்டுள்ளது.

‘நாவினால் ஈமான் கொண்டு உள்ளத்தில் ஈமான் நுழையாமல் இருக்கும் மக்களே! முஸ்லிம்களை நோவினை செய்யாதீர்கள்! அவர்களை மானபங்கப்படுத்தாதீர்கள்!

மேலும் அவர்களின் குறைகளைத் தேடாதீர்கள்! யார் தனது சகோதர முஸ்லிமின் குறைகளைத் தேடுகிறாரோ அவரது குறைகளை அல்லாஹ் தேடுவான். மேலும் அவர்களின் உள் வீட்டில் வைத்தேனும் அவர்களை இழிவுபடுத்திவிடுவான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மது, அபூதாவூத், திர்மிதீ)

மொபைல் போன் என்பது தகவல் தொடர்பு வசதிக்காக வந்த ஒரு சாதனமாக இருந்த போதிலும் அதையே வேடிக்கையாகப் பயன்படுத்தும் போக்கு இன்று பலரிடம் வளர்ந்து வருகிறது. மேற்கூறப்பட்ட ஹதீஸில் வந்துள்ள வழிகாட்டல்கள் அனைத்தையும் மறந்து சிலர் செயல்படுவது வேதனை அளிக்கக் கூடியதாகும்.

மொபைல் போன்களில் உள்ள வீடியோ, போட்டோ கேமராக்களை வைத்து அந்நியப் பெண்களை படம் எடுப்பதும் அவற்றை அசிங்கமான முறையில் பயன்படுத்துவதும் தம்முடன் தொடர்பு கொள்வோரின் உரையாடல்களை திருட்டுத்தனமாக பதிவு செய்வதும் இஸ்லாம் தடைசெய்துள்ள மோசமான செயல்களாகும். இதனால் பல விபரீதமான விளைவுகளும் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. போன்கள் பழுதடையும்போது அவற்றைத் சரிசெய்வதற்காக டெக்னீஷியனிடம் ஒப்படைக்கும் போது மிக கவனமாக இருக்க வேண்டும். மொபைல் போனிலுள்ள மெமரி கார்டை எடுக்காமல் கொடுத்ததனால் சில பெண்கள் தங்களது கற்புகளை இழந்த நிகழ்வுகளும் உள்ளன.

9. பிள்ளைகள் மொபைல் போன் பயன்படுத்தும் போது அவர்களை கவனிப்பது பெற்றோரின் பொறுப்பு
பிள்ளைகள் பெற்றோரிடம் அமாநிதமாக ஒப்படைக்கப்பட்ட செல்வங்கள். எனவே அவர்களை மார்க்கப்பற்றுடனும் ஒழுக்கத் துடனும் வளர்த்தெடுப்பது பெற்றோரின் கடமையாகும். இதில் கோட்டை விட்டால் அவர்கள் மறுமையில் கடுமையான விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள். “நீங்கள் ஒவ்வொருவரும் பராமரிப்பாளர்கள், உங்கள் பராமரிப்புப் பற்றி (மறுமையில்) விசாரிக்கப் படுவீர்கள். ஓர் ஆண் தனது குடும்பத்தைப் பராமரிக்க வேண்டியவன். அதுபற்றி அவன் விசாரிக்கப்படுவான்..” என்று நபி(ஸல்) கூறினார் கள். (புகாரி)

மொபைல் போன் என்பது நல்ல நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டது. ஆனால் இன்றைய இளைய தலைமுறையினர் அதை வேடிக்கைக்காகவும் பொழுதுபோக்கிற்காகவும் பயன்படுத்த ஆரம்பித்து விட்டனர். இதனால் பல மோசமான விளைவுகள் ஏற்படுகின்றன. இளைஞர்களிடம் ஒழுக்கச் சீர்கேடுகள் வேகமாகப் பரவுகின்றன. அவர்களது கல்வியிலும் பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதனால்தான் உத்தரப்பிரதேசம் போன்ற சில இடங்களில் திருமணமாகாத பெண்கள் மொபல் போனில் பேசத் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, பெற்றோர் தேவையில்லாமல் தமது பிள்ளைகளுக்கு மொபைல் போன் வாங்கிக் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். அவர்கள் அதனை வைத்துக் கொள்ள வேண்டுமென்ற? நிலை ஏற்பட்டால் அவர்களை சரியான முறையில் கவனித்து வழிகாட்ட வேண்டும்.

10. மொபைல் போனால் வீண் விரயங்கள் தவிர்க்கப் படல் வேண்டும்.

“உண்ணுங்கள் பருகுங்கள், வீண் விரயம் செய்யாதீர்கள்” என்றும் “வீண் விரயம் செய்யாதீர் நிச்சயமாக வீண் விரயம் செய்வோர் ஷைத்தானின் தோழர்கள் என்றும் அல்குர்ஆன் கூறுகின்றது. மொபைல் போன் உபயோகிப்பாளர்கள் பணம், நேரம் போன்றவற்றை வீண் விரயம் செய்வது பரவலாக உணரப்படுகிறது, எனவே, வீண் விரயம் செய்வது மொபைல் விஷயத்திலும் ஹராம் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அவ்வாறே மொபைல் போனை நீண்ட நேரம் பயன்படுத்துவதால் உடல் நலத்திற்குரிய பாதிப்புகளை ஏற்படுத்துவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஆக, அல்லாஹ்வின் அருட்கொடைகளில் ஒன்றாக கருதப்படும் மொபைல் போனை இஸ்லாமிய வரையறைகளுக்குள் பயன்படுத்தி நன்மைகளை அடைய முயற்சி செய்வோம்.

வெள்ளி, ஆகஸ்ட் 08, 2014

பெருமையடிப்பது ஷைத்தானின் குணம்


அல்லாஹ் கூறுகிறான் :
ஆதமுக்குப் பணிந்து சுஜூது செய்யுங்கள் என்று வானவர்களுக்கு நாம் கூறியபோது, அனைவரும் பணிந்து சுஜூது செய்தனர். இப்லீஸைத் தவிர. அவன் விலகிக் கொண்டான்.       ''பெருமை அடித்தான். இன்னும் காஃபிர்களில் ஒருவனாகவும் ஆகிவிட்டான்.'' (அல்குர்ஆன்: 2:34)
இதே கருத்தில் இன்னும் பல வசனங்கள் உள்ளன. அல்குர்ஆனை முழுமையாக உற்று நோக்கினால் இறைக் கட்டளைக்கு எதிராக முதல் புரட்சி ஏற்பட்டதற்கு அடிப்படைக் காரணம் “பெருமை”தான் என்பதை விளங்கிக் கொள்ளலாம்.
இப்லீஸ் காஃபிராக-ஷைத்தானாக-தீயசக்திகளின் தலைவனாக ஆனதற்குக் காரணம் “பெருமை’ தான். ஷைத்தானுடைய குணமாகிய “பெருமை’ பற்றி ஒவ்வொரு முஸ்லிமும் தெளிவான முறையில் விளங்கி வைத்திருக்க வேண்டும்.ஆனால்...
பெருமை என்றால் என்ன?
என்னென்ன செயல்கள் பெருமையில் கொண்டுபோய்ச் சேர்க்கும்?
பெருமையின் விளைவுகள் என்ன?
 என்பது பற்றி எல்லாம் தெளிவான கண்ணோட்டம் நம்மிடத்தில் இல்லை. எனவே பெருமை பற்றி மார்க்கம் இடும் கட்டளைகளைப் பார்ப்போம்.
அல்லாஹ் கூறுகிறான் :   கண்ணியம் எனது கீழாடையாகும். பெருமை எனது மேலாடையாகும். இவ்விரண்டில் ஏதேனுமொன்றோடு ஒருவன் என்னிடம் தர்க்கம் செய்தால் (போட்டியிட்டால்) அவனை நான் கடுமையாகத் தண்டிப்பேன் என்று அல்லாஹ் எச்சரிப்பதாக, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி) ஆதார நூல்: முஸ்லிம் 2620)
தூதுச் செய்தி: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு முதன் முதலில் 96வது அத்தியாயத்தின் ஐந்து வசனங்கள் இறக்கப்பட்டன. அதன் பிறகு சில காலம் வஹீ வரவில்லை. பின்னர் அல்லாஹ்வின் புறத்தில் இருந்து வந்த முதல் கட்டளையே இறைவனைப் பெருமைப்படுத்துவீராக என்பதுதான்.
யாவற்றையும் மிகைத்தவனாகவும், நுண்ணறிவு மிக்கவனாகவும் இருப்பதால், அனைத்துப் பெருமைகளும், தனக்கே சொந்தம் என அல்லாஹ் உரிமை கொண்டாடுகிறான்.
பெருமை என்னும் பண்பில், தன்னோடு எவரேனும் போட்டியிட்டால்-தர்க்கம் செய்தால், கடுமையாகத் தண்டிப்பேன் என்று எச்சரிக்கவும் செய்கிறான். பெருமைப் பற்றிப் பார்ப்போம்.
  நெருக்கம் :   அல்லாஹ் கூறுகிறான் :
''வானங்களிலும், பூமியிலும் உள்ளவர்களெல்லாம் அவனுக்கே உரியவர்கள். இன்னும் அவனிடம் (நெருங்கி) இருப்பவர்கள் அவனுக்கு அடிபணிவதை விட்டும் பெருமை அடிக்கமாட்டார்கள். சோர்வடையவும் மாட்டார்கள்.'' (அல்குர்ஆன் : 21:19, 7:206)
''உயிர்ப் பிராணிகளில் வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும், அல்லாஹ்வுக்கே “”சஜ்தா” (சிரவணக்கம்) செய்கின்றன. இன்னும் வானவர்களும் (அவ்வாறே செய்கின்றனர்) அவர்கள் பெருமை அடிப்பது இல்லை.'' (அல்குர்ஆன் : 16:49)
''நம் வசனங்கள் மீது நம்பிக்கை கொண்டவர்கள் யாரென்றால், அவற்றின் மூலம் நினைவூட்டப்படும் போது, விழுந்து சஜ்தா (சிரவணக்கம்) செய்தவர்களாக, தங்களது ரட்சகனைப் புகழ்ந்து துதிப்பார்கள். அவர்கள் பெருமை அடிக்கவும் மாட்டார்கள்.'' (அல்குர்ஆன் : 32:15)
  பெருமை அடிக்காதீர் !    அல்லாஹ் கூறுகிறான்:
''நீர் பூமியில் பெருமையாக நடக்க வேண்டாம். (ஏனென்றால்) நிச்சயமாக நீர் பூமியைப் பிளந்து விடவும் முடியாது. மலையின் உச்சிக்கு உயர்ந்து விடவும் முடியாது.'' (அல்குர்ஆன் 17:37)
  நேசிப்பதில்லை :    அல்லாஹ் கூறுகிறான்.
''உபகாரம் செய்யுங்கள். கர்வம் உடையவர்களாக, பெருமை அடிப்பவர்களாக இருப்பவர்களை அல்லாஹ் நேசிப்பது இல்லை.'' (அல்குர்ஆன் 4:36, 57:23, 16:23)
உயிர்ப் பிராணிகளும், வானவர்களும் பெருமை அடிக்காததால் இறைவனுக்கு நெருக்கமாக இருக்கிறார்கள் எனவும், பெருமை அடிப்பவர்கள் இறை நெருக்கத்தைப் பெற முடியாது எனவும் கூறும் அல்லாஹ், நம்மை நோக்கி, “”பெருமை அடிக்காதீர்கள்” என்றும், “பெருமை அடிப்பவர்களை நேசிக்க மாட்டேன்” என்றும் எச்சரிக்கை விடுக்கிறான்.
  பெருமை அடித்தால் !    அல்லாஹ் கூறுகிறான்;
''எவ்விதமான நியாயமுமின்றி, பூமியில் பெருமையடித்து நடப்பவர்களை, எனது கட்டளைகளை விட்டும் திருப்பிவிடுவேன். அவர்கள் எல்லா அத்தாட்சிகளைக் கண்டபோதிலும், அவற்றை நம்பமாட்டார்கள். அவர்கள் நேர்வழியைக் கண்டால், அதனை (தங்களுக்குரிய) வழியயன ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். ஆனால் தவறான வழியைக் கண்டால் அதனை (நேர்) வழி என எடுத்துக் கொள்வார்கள்.'' (அல்குர்ஆன் : 7:146)
  நரகமே :     ஹாரிஸா இப்னு வஹப் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், சொர்க்கவாசிகள் யார் என உங்களுக்குத் தெரிவிக்கவா? என்று எங்களை நோக்கிக் கேட்டுவிட்டு, அவர்கள் (மக்களின் பார்வையில்) பலவீனமானவர்கள், பணிவானவர்கள். (ஆனால்) அவர்கள் அல்லாஹ்மீது ஆணையிட்டு (எதையேனும்) கூறிவிடுவார்களேயானால், அல்லாஹ் அதனை நிறைவேற்றி வைப்பான் என்று கூறினார்கள். பிறகு. நரகவாசிகள் யாரென உங்களுக்குத் தெரிவிக்கவா? என்று கேட்டு விட்டு, அவர்கள் இரக்கமற்றவர்கள் அகம்பாவம் பிடித்தவர்கள் பெருமை அடிப்பவர்கள் என்று கூறினார்கள். (புகாரீ 4918, 6071, 6657)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
சொர்க்கமும் நரகமும் வாக்குவாதம் செய்து கொண்டன. அப்போது நரகம், பெருமை அடிப்பவர்களுக்காகவும் அக்கிரமக்காரர்களுக்காகவும் நான் சொந்தமாக்கப்பட்டுள்ளேன் என்று கூறியது. எனக்கு என்ன நேர்ந்ததோ, மக்களில் பலவீனர்களும், அவர்களில் கீழ் நிலையினருமே என்னுள் நுழைவார்கள் என்று சொர்க்கம் கூறியது. (ஆதார நூல்: புகாரி : 4850)
அல்லாஹ் கூறுகிறான்:  ''அந்த மறுமையின் வீட்டை, இந்தப் பூமியில் (தங்களை) பெருமைப்படுத்திக் கொள்ளவும், குழப்பத்தை உண்டாக்கவும், விரும்பாதவர்களுக்கே நாம் சொந்தமாக ஆக்கி வைப்போம்.'' (அல்குர்ஆன் : 28:83)
அல்லாஹ்(ஜல்)தஆலா பெருமை அடிப்பவர்களைத் தன்னுடைய கட்டளையை விட்டுத் திருப்பி விடுவான். நேர்வழியைத் தவறான வழியாகவும், தவறான வழியை நேர்வழியாகவும் நம்பவைத்து முடிவில் நரகத்தில் தள்ளிவிடுவான். பெருமை அடிக்காதவர்களுக்குத்தான் சொர்க்கம் என்பதையும் அல்லாஹ் வரையறுத்துக் கூறி உள்ளான்.
  எது பெருமை?  :    மனிதர்களை நரகம் என்னும் அதலபாதாளத்தில் தள்ளக்கூடிய பண்புதான் பெருமை என்பது. எந்த விதமான நடைமுறைகள் எல்லாம் பெருமையில் சேரும் என்பது பற்றி, ஒவ்வொருவரும் மனோ இச்சையைப் பின் பற்றுகிறார்களே தவிர, மார்க்கத்தைப் பேணுவது இல்லை.
பெருமையின் இலக்கணம் தெரியாததால், வசதி இருந்தும் பலர் உணவு-உடை விஷயத்தில் கஞ்சத்தனத்தைப் பேணுகின்றனர். வசதிக்குறைவு உள்ள பலர், கடன் வாங்கியாவது படோபமாக, தம்மைக் காட்டிக் கொள்ளுகின்றனர். பெருமை என்றால் என்ன? என்பதற்கு இஸ்லாம் அழகான இலக்கணத்தை வரையறுத்துள்ளது.

இப்னுமஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்.
எவனுடைய உள்ளத்தில் அணுவளவேனும் பெருமை இருக்கிறதோ, அவன் சுவர்க்கத்தில் நுழைய முடியாது என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (மக்களை நோக்கி) கூறிய போது, ஒரு மனிதர் யாரசூலுல்லாஹ் தனது ஆடை மற்றும் காலணிகள் போன்றவை அழகாக இருக்க வேண்டுமென ஒருவர் விரும்புகிறார். அது பெருமை ஆகுமா? என்று கேட்டார். அதற்கு நபி(ஸல்)அவர்கள், அல்லாஹ் மிகவும் அழகானவன். அழகாக இருப்பதை விரும்பக்கூடியவன். எனவே, இவை பெருமை ஆகாது என்று பதில் கூறிவிட்டு, பெருமை என்றால் என்னவென்று தெரியுமா? “சத்தியத்தை மறுப்பதும்-மற்றவர்களை இழிவாக எண்ணுவதுமே (பெருமை ஆகும்) என்றும் கூறினார்கள். (ஆதாரநூல்: முஸ்லிம்-திர்மிதி-அபூதாவூத் )
மொத்தத்தில் பெருமையின் இலக்கணம் இரண்டு தான்.
1. சத்தியத்தை ஏற்க மறுப்பது,
2. மற்ற மனிதர்களை இழிவாக எண்ணுவது.
  சத்தியத்தை மறுப்பது :   அல்லாஹ் கூறுகிறான்.
''உங்களது இறைவன் ஒரே இறைவன்தான். எவர்கள் மறுமையை நம்பவில்லையோ, அவர்களுடைய உள்ளங்கள் (இதை) மறுப்பவையாக உள்ளன. மேலும் இவர்கள், பெருமை அடிப்பவர்களாகவே இருக்கின்றனர்.'' (அல்குர்ஆன் : 16:22)
நிச்சயமாக தங்களிடம் வந்துள்ள, அல்லாஹ்வின் வசனங்களைப் பற்றி, எவ்விதமான ஆதாரமும் இல்லாமல் தர்க்கம் செய்கிறார்களே, அத்தகையவர்களுடைய உள்ளங்களில் பெருமையைத் தவிர (வேறெதுவும்) இல்லை.
''இவ்வாறு பெருமை அடித்து ஆணவம் கொள்ளும், ஒவ்வொரு உள்ளத்தின் மீதும் அல்லாஹ் முத்திரை இட்டு விடுகிறான்.'' (அல்குர்ஆன்: 40:35,56)
''உங்கள் ரட்சகன் கூறுகிறான். என்னிடமே நீங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். நான் உங்களுக்குப் பதில் அளிக்கிறேன். நிச்சயமாக எவர்கள் எனக்கு அடிபணிவதை விட்டும் பெருமை அடிக்கிறார்களோ, அவர்கள் சிறுமை அடைந்தவர்களாக நரகில் நுழைவார்கள்.'' (அல்குர்ஆன் : 40:60)
எவர்கள் நம் வசனங்களைப் பொய்ப்பித்து (அவற்றை ஏற்காமல்) பெருமை அடிக்கிறார்களோ அவர்கள் நரகவாசிகள்; அதில் நிரந்தரமாக இருப்பார்கள். (அல்குர்ஆன் : 7:36-40)
ஓரிறை கோட்பாட்டை மறுப்பது. அல்குர்ஆன் வசனங்கள் பற்றி தர்க்கம் செய்வது. அல்லாஹ்வுக்கு அடி பணிய மறுப்பது, அல்குர்ஆன் வசனங்களை பொய்ப் பிக்க முயற்சிப்பது ஆகியவை எல்லாம் சத்தியத்தை மறுப்பது ஆகும்.
அது மட்டுமல்ல
அல்லாஹ் கூறுகிறான் :
''அவனுக்கு நமது வசனங்களை ஓதிக் காண்பிக்கப்பட்டால்,அவன் அவற்றைக் கேட்காதவனைப் போல தனது இரு காதுகளிலும் செவிட்டுத்தனம் இருப்பது போல பெருமை கொண்டவனாகத் திரும்பி விடுகிறான்.'' (அல்குர்ஆன் : 31:7)
''மனிதனை ஏதேனும் ஒரு துன்பம் தீண்டுமேயானால், அவன் நம்மிடமே பிரார்த்தனை செய்கிறான். பிறகு நம்மிட மிருந்து ஒரு அருட்கொடையை வழங்கினோமேயானால், இதுவெல்லாம் எனது அறிவின் காரணமாகவே வழங்கப்பட்டுள்ளது என்று கூறுகிறான்.'' (அல்குர்ஆன் : 39:49)
''அவனுக்கு ஏற்பட்ட துன்பத்திற்குப்பின், நாம் நமது அருட்கொடைகளை அவனுக்குச் சுவைக்கச் செய்தால், என்னைவிட்டு கேடுகள் போய்விட்டன என்று நிச்சயமாகக் கூறுவான். நிச்சயமாக அவன் பெரு மகிழ்ச்சியும், பெருமையும் அடிப்பவனாக இருக்கின்றனர்.'' (அல்குர்ஆன் : 11:10)
கஷ்டம்-துன்பம் ஏற்படும்போது அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்வதும், அல்லாஹ் கஷ்டத்தை நீக்கியதும், அவனுக்கு நன்றி செலுத்தாமல் இருப்பது அவனது வசனத்தை புறக்கணிப்பது ஆகியவையும் சத்தியத்தை மறுப்பது ஆகும்.
  இழிவாக எண்ணுதல் :    அல்லாஹ் கூறுகிறான்.
''(பெருமையோடு) உன் முகத்தை மனிதர்களை விட்டும் திருப்பிக் கொள்ளாதே! பூமியில் பெருமையாகவும் நடக்காதே! தற்பெருமை உடையவர், ஆணவம் கொண்டவர் எவரையும் அல்லாஹ் நேசிக்க மாட்டான்.'' (அல்குர்ஆன் : 31:18)
  பிறப்பு :    ''மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணில் இருந்தே படைத்துள்ளோம். நீங்கள் ஒருவரை மற்றவர் அறிந்து கொள்வதற்காகவே, உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கியுள்ளோம். உங்களில் எவர் இறை அச்சம் உள்ளவரோ, அவரே அல்லாஹ்விடம் கண்ணியம் மிக்கவர்.'' (அல்குர்ஆன்: 49:13)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
ஒரு அரபியை விடை அரபியில்லாதவருக்கு எவ்விதச் சிறப்பும் இல்லை; அரபியல்லாதவரை விட அரபியருக்கு எவ்விதச் சிறப்பும் இல்லை. கருப்பரை விட வெள்ளையருக்குச் சிறப்பு இல்லை. வெள்ளையரை விட கருப்பருக்கு எவ்விதச் சிறப்பு இல்லை. அறியாமைக்கால மூட பழக்க வழக்கங்களை என் காலடியில் போட்டு மிதித்து விட்டேன். (ஆதார நூல்: முஸ்லிம்)
பிறப்பின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வு கூடாது என்று மார்க்கம் கூறி இருக்கும்போது, குலம், கோத்திரம், சாதி அடிப்படையில் ஒருவர் மற்றவரை இழிவாகக் கருதுவது பெருமை ஆகும். நான் ராவுத்தர், நீ மரக்காயர், நான் ஸையது வம்சம். நீ லெப்பை, நான் உருது, நீ தமிழ் என்றெல்லாம் பிறப்பின் அடிப்படையில் மொழியின் அடிப்படையில் இழிவாகக் கருதுவது பெருமை ஆகும்.
  செல்வம் :    அல்லாஹ் கூறுகிறான்.
''அல்லாஹ் தான் நாடியவருக்கும் செல்வத்தை அதிகமாக வழங்குகிறான். (தான் நாடியவர்க்கு) அளவாகவும் வழங்குகிறான்.'' (அல்குர்ஆன் 2:245)
செல்வந்தர்களாக இருப்பவர்கள், தனக்குக் கீழே இருப்பவர்களை ஏளனமாகப் பார்ப்பதும், பேசுவதும், ஆடைகள் விஷயத்தில் கரண்டைக் காலுக்கும் கீழே ஆடை அணிந்து மற்றவர்களைக் கேவலமாகப் பேசுவதும் பெருமையின் அடையாளமே ஆகும். இது போலவே கல்வி கற்றுள்ளோம் என்று எண்ணுபவர், படிப்பறிவு இல்லாதவரை இழிவாக எண்ணுவது, பதவி பொறுப்புக்களைக் கொண்டு பெருமை அடிப்பது மற்றும் தனக்குக் கீழ் நிலையில் உள்ளவர்களை இழிவாக எண்ணுவது அதிகமதிகம் உள்ளது. இவை எல்லாம் பெருமையின் அடையாளமே.
  விளைவு :    வசதிக் குறைவு உள்ளவன் வசதி உள்ளவன் போல பகட்டுக் காட்டி பெருமை அடிக்கிறான். படிப்பறிவு இல்லாதவன் படித்தவன் போல நடித்து பெருமைப்பட்டுக் கொள்கிறான்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள்.
மறுமையில் மூவருடன் அல்லாஹ் பேசவும் மாட்டான். பாவங்களை மன்னித்து பரிசுத்தமாக்கவும் மாட்டான். கருணைக் கண்கொண்டு பார்க்கவும் மாட்டான். அவர்கள் யாரெனில்
1. முதுமையில் விபச்சாரம் செய்தவர்.
2. பொய்யுரைக்கும் அரசன்,
3. பெருமை அடிக்கும் ஏழை ஆகியவர்கள் ஆவார். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, ஆதார நூல்: முஸ்லிம், நஸாயீ)
  முடிவாக :    அல்லாஹ் கூறுகிறான்.
''அளவற்ற அருளாளனுடைய அடியார்கள் (யாரென்றால்) அவர்கள் தாம், பூமியில் பணிவுடன் நடப்பார்கள்; மூடர்கள், அவர்களுடன் வாதாட முற்பட்டால் “”சாந்தி உண்டாகட்டும்” என்று கூறி (விலகி) சென்றுவிடுவார்கள்.'' (அல்குர்ஆன் : 25:63)