மக்தப் மதரஸாவின் வளர்ச்சி மார்க்கத்தின் எழுச்சி...!
மௌலவி ஹஸீப் பாகவி ஃபாஜில் தேவ்பந்த். நமது இந்தியத் திருநாட்டில் கடந்த நூற்றி ஐம்பது வருடங்களாக மஸ்ஜித்கள் தோறும் காலை மாலை குர்ஆன் மதராஸாக்கள் நடைபெற்று வருகின்றன. அவை மக்தப் மதரஸா என்று அழைக்கப்படுகின்றன. மக்தப் மதரஸா என்றால் ஆரம்ப பாடசாலை என்று பொருள். நமது இளவல்களுக்கு மார்க்கத்தின் அடிப்படை கொள்கைகள்- கட்டாய கடமைகள் -பெரும் பாவங்கள் -உபரியாக நற்செயல்கள் ஆகியவற்றை குறித்த முதன்மை அறிமுகத்தை வழங்குவது தான் மக்தப் மதரஸாவின் பிரதான நோக்கமாகும். *பொதுக் கல்வியும் சமயக் கல்வியும்*... ஆங்கிலேயர் ஆட்சிக்கு முன் குருகுலக்கல்வி மற்றும் ஓராசிரியர் முறை நடைமுறையில் இருந்தது. பொருளாதாரத் தேவைகளுக்கு ஏதேனும் தொழில் ஒன்றை தெரிந்து கொள்வதும் குடும்ப வணிகத்தை தொடர்வதும் அப்போதைய வழமையாக இருந்தது. இன்றும் தொடரும் பிரிட்டிஷார் அறிமுகப்படுத்திய கல்விமுறை அப்போது மக்களிடையே பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. கல்வி நிறுவனமயமாக்கப்பட்டது. ஒரு ஆசிரியர் முறை அகற்றப்பட்டு பல ஆசிரியர்கள் பயிற்றுவிக்கும் பள்ளிக்கூடங்களும் கல்லூரிகளும் உருவாக்கப்பட்டன. ஒரு ஆசிரியர் பல மாணவர்களை உருவாக்கிய நடைமுறை மாறி பல ஆசிரியர்...