இடுகைகள்

மே, 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மாணவர்களே .....

  தமிழகத்தில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த 6/5/24   வெளியிடப்பட்டன.   அதில், கடந்த ஆண்டு தேர்வெழுதியவர்களில் 94.03 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்ற நிலையில் இந்த ஆண்டு 94.56 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 10/5/24 இன்று 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் மொத்தம் 90.07 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்   உலகில் ஒரு முஸ்லிம் அடையக்கூடியவற்றில் மிகச்சிறந்தது கல்வியாகும் . அதிலும் குறிப்பாக மார்க்க கல்வி . இஸ்லாம் இதற்கு ஏராளமான சிறப்புகளை வழங்கியுள்ளது . அதனை கற்பதை நம் மீது கடமையாகவும் ஆக்கியுள்ளது . இறைநம்பிக்கையாளர்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் உயர்வும் அந்தஸ்தும் கல்வியைக்கொண்டுதான் .  يَرْفَعِ اللّٰهُ الَّذِيْنَ اٰمَنُوْا مِنْكُمْ ۙ وَالَّذِيْنَ اُوْتُوا الْعِلْمَ دَرَجٰتٍ ‌ ؕ உங்களில் ஈமான் கொண்டவர்களுக்கும் ; கல்வி ஞானம் அளிக்கப்பட்டவர்களுக்கும் அல்லாஹ் பதவிகளை உயர்த்துவான் 58:11 ஆமிர் பின் வாஸிலா ( ரஹ் ) அவர்கள் கூறியதாவது : நாஃபிஉ பின் அப்தில் ஹாரிஸ் ( ரலி ) அவர்கள் , ( கலீஃபா ) உமர் ( ரலி ) அவர்களை உ