வெள்ளி, செப்டம்பர் 16, 2011

இஸ்லாமிய இல்லம்!

வீடு மனித வாழ்வில் அத்தியாவசியத் தேவைகளுள் ஒன்றாகும். உடை, உணவு, உறையுல் என்பன அடிப்படை அத்தியாவசிய அம்சங்களாகக் கருதப்படுகின்றன. வீடு இஸ்லாமிய மயப்படுத்தப்படுவது அவசியமாகும்--                                                                                      வீடு அமைதியின் அடித்தளம்:
“உங்கள் வீடுகளில் உங்களுக்கு அல்லாஹ் அமைதியை ஏற்படுத்தினான். நீங்கள் பிரயாணத்தில் இருக்கும் போதும், தங்கியிருக்கும் போதும் இலகுவாக நீங்கள் எடுத்துச் செல்லக்கூடிய கூடாரங்களை கால்நடைகளின் தோல்களிலிருந்து அவனே உங்களுக்கு ஏற்படுத்தினான். செம்மறி ஆட்டின் உரோமங்கள், ஒட்டகத்தின் உரோமங்கள், வெள்ளாட்டின் உரோமங்கள் ஆகியவற்றிலிருந்து பொருட்களையும், குறிப்பிட்ட காலம் வசதி வாய்ப்புக்களையும் (ஏற்படுத்தினான்.)” (16:80)
இந்த வசனம் வீடு என்பது மனிதனுக்கு மட்டுமல்ல; எல்லா உயிரினங்களுக்கும் அமைதியையும், பாதுகாப்பையும், சுதந்திரத்தையும் வழங்கும் இடமாக இருப்பதைத் தெளிவுபடுத்துகின்றது.
வீடு கேடயம்:
பித்னாக்களின் போது வீட்டில் முடங்கி விடுவது பாதுகாப்புக்கான வழியென இஸ்லாம் கூறுகின்றது.
“யார் தனது நாவைக் கட்டுப்படுத்தித் தனது வீட்டிலேயே தங்கி விடுகின்றாரோ அவரும், யார் தனது தவறுகளை நினைத்து அழுகின்றாரோ அவரும் நற்செய்தி பெறட்டும்!” என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
(தபரானீ 212)
“தனது வீட்டில் ஒருவர் அமர்ந்து அதனால் அவரது பிரச்சினையிலிருந்து மக்களும், மக்களது பிரச்சினையிலிருந்து அவரும் பாதுகாப்புப் பெறுகின்றனரோ அத்தகைய மனிதர் அல்லாஹ்வின் பொறுப்பில் இருக்கின்றார்!” என நபி(ரழி) அவர்கள் கூறியுள்ளார்கள். (அஹ்மத் 22093, தபரானீ 16485)
பித்னாவின் போது ஒருவர் தனது வீட்டிலேயே தங்கி விடுவது அதன் பாதிப்பிலிருந்து பாதுகாப்புப் பெறுவதற்கான வழியாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
எனவே ஒரு மனிதன் தனது பணி நேரம் போக ஏனைய நேரத்தை வீட்டில் கழிப்பது சிறப்பானதாகும். இந்த வகையில் வீடு ஒரு கேடயமாகத் திகழ்கின்றது எனலாம்.
சிலர் வீட்டில் தொல்லை தாங்க முடியாது என்று பாதையோரங்களில் காலத்தைக் கடத்துகின்றனர். இதனால் பல பித்னாக்கள் உண்டாவதை அவதானித்து வருகின்றோம். இது தவிர்க்கப்பட வேண்டும்.
உயிருள்ள வீடுகள்:
உங்கள் இல்லங்களில் அல்லாஹ்வை அடிக்கடி நினைவுகூறுங்கள்!
அபூமூஸா(ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்;
“அல்லாஹ் நினைவுகூரப்படும் வீட்டுக்கும், அல்லாஹ் நினைவுகூரப்படாத வீட்டுக்குமான உதாரணம் உயிருள்ளவனுக்கும், செத்த பிணத்துக்கும் ஒப்பானதாகும்!” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(முஸ்லிம் 221, 1859, இப்னு ஹிப்பான் 854)
அல்லாஹ் நினைவுகூரப்படாத வீடு செத்த பிணத்துக்கு ஒப்பாக்கப்படுகின்றது. எனவே உங்கள் வீட்டை உயிருள்ளதாக மாற்றுங்கள்!
அல்லாஹ் நினைவுகூரப்படுவதன் மூலம் உங்கள் வீட்டை உயிரோட்டமுள்ளதாகவும், ஆன்மீக ஆறுதலை வழங்கும் இடமாகவும் மாற்றுங்கள்!
இன்று எமது இல்லங்களில் அல்லாஹ் நினைவுகூரப்படுவதை விட அதிகமாக ஷைத்தான் நினைவுகூரப்படுகின்றான். இந்த இழிநிலை நீங்க வேண்டும்.
வீட்டை விட்டும் ஷைத்தானை விரட்டுங்கள்!
உங்கள் இல்லங்களில் குர்ஆன் ஓதப்பட வேண்டும். இன்று எமது இல்லங்கள் குர்ஆன் ஓதப்படாத மையவாடிகளாக மாறிவிட்டன.
“உங்கள் வீடுகளைக் கப்றுகளாக ஆக்கி விடாதீர்கள்! ஸூறதுல் பகறா ஓதப்படும் வீட்டை விட்டும் ஷைத்தான் வெருண்டோடுகின்றான்!” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(முஸ்லிம் 212, 1860, திர்மிதி 2877, அஹ்மத் 7821)
இந்த ஹதீஸ் குர்ஆன் ஓதப்படாத வீடுகளைக் கப்றுகளாகச் சித்தரிக்கின்றது. ஸூறதுல் பகறாவைக் குறிப்பாக வீட்டில் ஓத வேண்டும். அதன் மூலமே ஷைத்தானை விரட்ட வேண்டுமென இந்த ஹதீஸ் கூறுகின்றது.
இன்றைய எமது இல்லங்கள் ஷைத்தான்களின் இருப்பிடங்களாக மாறிவிட்டன. இசை, சினிமா, பாட்டு, கூத்து என ஷைத்தானின் கீதங்கள் இசைக்கப்படுகின்ற அதே வேளை, ஷைத்தானை விரட்டுவதற்கான எந்த முயற்சியையும் நாம் செய்யாமல் இருக்கின்றோம்.
“உங்கள் வீடுகளில் ஸூறதுல் பகறாவை ஓதுங்கள்! ஏனெனில் எந்த வீட்டில் ஸூறதுல் பகறா ஓதப்படுகின்றதோ அந்த வீட்டில் ஷைத்தான் நுழைய மாட்டான்!” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(முஸ்தத்ரக் 2062, 2063, 3029, தபரானீ 8564)
ஷைத்தான் நுழையாமல் இருக்கவும், நுழைந்த ஷைத்தானை விரட்டவும் வீடுகளில் ஸூறதுல் பகறா ஓதப்பட வேண்டுமென ஹதீஸ்கள் கூற, நாமோ ஷைத்தான்களை அழைத்து எமது இல்லங்களில் குடியமர்த்தி விருந்தும் படைத்து வருகின்றோம். எனவே முதலில் ஷைத்தானை விரட்ட வீட்டில் குர்ஆன் ஓதப்பட வேண்டும். இதை நாம் கவனத்திற்கொள்ள வேண்டும்.
ஷைத்தானுக்கு உணவளிக்காதீர்கள்!
நாம் நமது இல்லத்தில் ஷைத்தான்களுக்கு இடங்கொடுப்பதுடன் உணவும் அளித்து வருகின்றோம்.
“ஒரு மனிதர் தனது வீட்டுக்குள் நுழையும் போதும், உணவுண்ணும் போதும் அல்லாஹ்வின் பெயரை நினைவுகூர்ந்தால் ஷைத்தான் மற்ற ஷைத்தான்களிடம் “இங்கே உங்களுக்குத் தங்க இடமோ, உண்ண உணவோ இல்லை!” என்று கூறுவான். வீட்டுக்கு நுழையும் போது அல்லாஹ்வின் பெயரை நினைவுகூராவிட்டால் “உங்களுக்குத் தங்க இடம் கிடைத்து விட்டது!” என ஷைத்தான் கூறுவான். அவர் உண்ணும் போது அல்லாஹ்வின் பெயரை நினைவுகூராவிட்டால் “தங்க இடமும், உண்ண உணவும் கிடைத்து விட்டது!” என்று கூறுவான்!” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(முஸ்லிம் 103, 5381, அபூதாவூத் 3767, 3765, இப்னுமாஜா 3887)
இன்று எத்தனையோ தந்தைமார் தொழில் முடிந்து வீட்டுக்கு வரும் போது ஷைத்தானையும் கூட அழைத்துக்கொண்டே வருகின்றனர். குடும்பத்தினர் அனைவரும் தமது உணவில் ஷைத்தானுக்குப் பங்கு கொடுக்கின்றனர். எனவே வீட்டுக்குள் நுழையும் போதும் அல்லாஹ்வின் பெயர் நினைவுகூரப்பட வேண்டும்; உண்ணும் போதும் அல்லாஹ்வின் பெயர் நினைவுகூரப்பட வேண்டும். இதன் மூலம் ஷைத்தானுக்குத் தங்க இடமும், உண்ண உணவும் கொடுப்பதைத் தவிர்க்கலாம்.
கூட வரும் ஷைத்தான்:
இரவு உறங்க வரும் போது கூட வரும் ஷைத்தான் நீங்கள் தொழிலுக்குச் செல்லும் போதும் கூடவே வருவான். அவனைத் துரத்த வேண்டியது உங்கள் பொறுப்பு!
நீங்கள் வீட்டை விட்டும் வெளியேறும் போது “பிஸ்மில்லாஹ் தவக்கல்து அலல்லாஹ் லா ஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லாஹ்!” என்று ஓதிக் கொண்டு வீட்டை விட்டும் வெளியேறுவதன் மூலம் ஷைத்தானின் தொடர்பைத் துண்டிக்கலாம். அதாவது வீட்டுக்குள் நுழையும் போதும், வீட்டை விட்டு வெளியேறும் போதும் அல்லாஹ்வை நினைவுகூருங்கள்!
தொழுகை மூலம் வீட்டை உயிர்பெறச் செய்யுங்கள்!
“மூஸாவுக்கும், அவரது சகோதரருக்கும், “எகிப்தில் உங்களிருவரின் சமூகத்திற்கும் வீடுகளை அமைத்து, உங்கள் வீடுகளை நீங்கள் கிப்லாவாக ஆக்கித் தொழுகையை நிலை நாட்டுங்கள். இன்னும் நம்பிக்கையாளர்களுக்கு நன்மாராயம் கூறுங்கள்!” என நாம் வஹி அறிவித்தோம்.” (10:87)
பர்ழான தொழுகையைப் பொறுத்த வரையில் ஆண்கள் அதனைப் பள்ளியில் தொழுவது அவசியமாகும். ஆனால் ஸுன்னத்தான தொழுகைகளை வீட்டில் தொழுவதே சிறந்ததாகும். பெண்களைப் பொறுத்த வரையில் பர்ழான தொழுகைகளையும் வீட்டில் தொழுவதே சிறப்பானதாகும். இந்த வகையில் வீட்டில் தொழுகை நிலைநாட்டப்பட வேண்டும். இதன் மூலம் வீட்டில் ஆன்மீக உயிரோட்டம் மங்கி மறையாமல் பாதுகாத்துக்கொள்ள முடியும்.
வீடு கல்விக்கூடமாக!
வீட்டைக் கல்விக் கூடமாகப் பாவிப்பது மிக அவசியமாகும். நபி(ஸல்) அவர்கள் தமது மனைவியருக்கு வீட்டில் வைத்துத்தான் மார்க்கத்தைப் போதித்தார்கள். குழந்தைகளுக்கு இஸ்லாமியப் பழக்க வழக்கங்களைக் கற்றுக் கொடுத்தார்கள். இன்று மத்ரஸாக்களிலும், பாடசாலைகளிலும் கற்றுக் கொடுக்கப்படும் நல்ல விடயங்களை நடைமுறை வாழ்வில் கொண்டு வரும் பயிற்சியை வழங்குவதில் வீட்டுச் சூழலுக்கு முக்கிய பங்கு உள்ளது என்பதைப் பெற்றோர் மறந்து விடக்கூடாது.
உண்ணும் போது “பிஸ்மில்லாஹ்!” கூற வேண்டும் என்பதை மத்ரஸாவில் கற்றுக் கொடுக்க முடியும். இதை நடைமுறையில் கொண்டு வருவதற்கான பயிற்சியை வீடு தானே வழங்க வேண்டும்.
நபி(ஸல்) அவர்களிடம் சில பெண்கள் வந்து, “ஆண்கள் எங்களை மிகைத்து விட்டார்கள்! எங்களுக்கு மார்க்கத்தைப் போதிப்பதற்குத் தனியான ஒரு நாளை ஒதுக்குங்கள்!” எனக் கேட்ட போது நபி(ஸல்) அவர்கள் ஒரு பெண்ணின் வீட்டைக் குறிப்பிட்டு அந்த வீட்டுக்கு வருமாறு கூறி அங்கு வைத்து அவர்களுக்கு மார்க்கம் போதித்தார்கள்.
(அஹ்மத் 7357, 7351, இப்னு ஹிப்பான் 2941, நஸாஈ 5898)
எனவே, வீட்டுச் சூழலைக் கல்விச் சூழலாக்குங்கள்! நல்ல நூற்களை வாங்கி வையுங்கள்! உங்கள் வீட்டில் ஒரு சிறிய நூலகம் இருக்கட்டும்! முடிந்தால் மார்க்க உரைகள் அடங்கிய ஒலி-ஒளி நாடாக்களுக்கான ஒரு ஏற்பாட்டையும் செய்யுங்கள்! கிடைக்கும் ஓய்வுகளை மார்க்க அறிவையும், உணர்வையும் வளர்த்துக்கொள்வதற்குப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்!
ஒன்றாக உண்ணுங்கள்!
உணவு உண்ணும் போது குடும்பமாக ஒன்றாக அமர்ந்து உண்ணப் பழகுங்கள்! குறைந்த பட்சம் இரவு உணவையாவது அனைவரும் ஒன்றாக அமர்ந்து உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்!
இதன் மூலம் குடும்ப உறவு வலுப்பெறும். பகிர்ந்து உண்ணும் பக்குவம் வரும். அடுத்தோரை அனுசரித்துச் செயற்பட வேண்டும் என்ற எண்ணமும், பக்குவமும் ஏற்படும். இந்தப் பழக்கம் இல்லாததால்தான் இளைஞர்கள் இரவு நேரத்தில் வீதியில் அலைந்து திரிந்து வம்புகளை வளர்க்கின்றனர். நான் உரிய நேரத்துக்குப் போக வேண்டும். வீட்டில் நான் போகும் வரை யாரும் உண்ண மாட்டார்கள் என ஒருவன் எண்ணினால் வீதியில் அலைந்து திரிவானா? எனவே ஒன்றாக இருந்து உண்ணும் நல்ல பழக்கத்தைக் கைவிடாது தொடர வேண்டும்.
நல்லோர் வரவு:
“எனது இரட்சகனே! என்னையும், எனது பெற்றோரையும், நம்பிக்கையாளராக எனது வீட்டில் நுழைந்தவரையும், மேலும் நம்பிக்கையாளர்களான ஆண்களையும், பெண்களையும் மன்னிப்பாயாக! இன்னும் இவ்வநியாயக்காரர்களுக்கு அழிவைத் தவிர வேறெதையும் நீ அதிகப்படுத்த வேண்டாம்!” (என்றும் பிரார்த்தித்தார்.)
மேற்படி வசனத்தில் எனது வீட்டில் நுழையும் முஃமின்கள் என்ற வார்த்தையை அவதானியுங்கள்! இந்த அடிப்படையில் வீட்டுக்கு நல்ல மனிதர்களின் வருகையை அதிகரிக்க வேண்டும். இதன் மூலம் உங்களது குழந்தைகளுக்கு நல்லோரது தொடர்பு ஏற்படும். நல்லோரை அதிகம் சந்திக்கும் போது அவர்களைப் போல இருக்க வேண்டும் என்ற எண்ணம் அவர்களிடம் வளரும். இதே வேளை கெட்டவர்கள் வீட்டுக்குள் நுழைவதைத் தவிர்க்கவும் வேண்டும்.
ஆலோசனை செய்யுங்கள்!
வீட்டு விவகாரங்களில் வீட்டில் உள்ளோரிடம் குறிப்பாக வளர்ந்த பிள்ளைகளிடம் ஆலோசனை செய்யுங்கள்! அவர்களது சிந்தனைத் திறன் வளரவும், பொறுப்புணர்ச்சி ஏற்படவும், பெற்றோரை மதிக்கும் மனோபக்குவம் வளரவும் இது வழி வகுக்கும்.
குழந்தைகள் விவகாரத்தில் அவதானம் தேவை:
உங்கள் பிள்ளைகளது நண்பர்கள் யார்? அவர்கள் எங்கே செல்கின்றார்கள்? என்ன செய்கின்றார்கள்? வகுப்புகள் நடக்கும் நேரம், நடக்கும் இடம், நடக்கும் நாட்கள், முடிவடையும் நேரம் என்பவற்றை அறிந்து வைத்திருங்கள்!
உங்கள் வீட்டுப் பெண் பிள்ளைகள் குறித்தும் இதே அவதானத்துடன் இருங்கள்! அவர்களது தொலைபேசித் தொடர்புகள் எத்தகையவை என்பதையும் கவனம் செலுத்துங்கள்! பெற்றோரின் கவனயீனம்தான் அதிகமான பிள்ளைகள் தடம் மாறிச் செல்வதற்கு அடிப்படைக் காரணமாக இருக்கின்றது. முடிந்த வரை வீட்டுச் சூழலை இஸ்லாமிய மயப்படுத்துதல் இஸ்லாமிய தஃவாவில் மிக முக்கியமான விதியாகும். இது விடயத்தில் நாம் அனைவரும் 
கவனம் செலுத்துவது காலத்தின் கட்டாயமாகும்.

குழந்தை வளர்ப்பு சில ஆலோசனைகள்

குழந்தைகளை நல்வழிப்படுத்தி இஸ்லாமிய நிழலில் வளர்த்தெடுப்பது என்பது இந்த நவீன யுகத்தில் பாரிய பொறுப்பு வாய்ந்த பணியாகவே திகழ்கின்றது.குழந்தைகளிடம் ஆதிக்கம் செலுத்தும் வெளி சக்திகளின் ஊடுருவலிலிருந்து அவர்களை மீட்டெடுப்பதும் ரொம்ப சிரமமான பணியாகவே திகழ்கின்றது. இந்த ஆக்கத்தில் குழந்தைகளை நெறிப்படுத்துவதற்கான சில வழிமுறைகள் சுருக்கமாகத் தொகுத்து வழங்கப்படுகின்றது.
 • இஸ்லாத்தின் அடிப்படையான ‘லா இலாஹா இல்லல்லாஹ் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்’ என்ற கலிமாவை உங்கள் குழந்தைகளின் உள்ளங்களில் ஆழமாகப் பதிக்க முயற்சியுங்கள். ஆராட்டும் போதும் தாலாட்டும் போதும் கலிமாவை உரக்க மொழிந்து, அது அவர்களது ஆழ்மனதில் பதிய வைக்க முயலுங்கள். அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன்; அவன் உன்னைப் பார்த்துக் கொண்டிருக்கின்றான்; நீ பேசுவதைக் கேட்டுக் கொண்டிருக்கின்றான் என்பதை உணர்த்துங்கள்.
 • அல்லாஹ்தான் படைத்தவன்; பாதுகாப்பவன்; உணவளிப்பவன்; நிவாரணமளிப்பவன். அனைத்து நிலைகளிலும் நாம் அவனிடமே மீளவேண்டும் என்ற என்ற எண்ணத்தை உங்கள் குழந்தையின் இதயத்தில் வரைந்து விடுங்கள்.
 • ஷிர்க்-குப்ர் குறித்து எச்சரிக்கை செய்யுங்கள். அல்லாஹ் தன்னை வணங்குவதற்காக மட்டுமே உன்னைப் படைத்துள்ளான். எச்சந்தர்ப்பத்திலும் அவனுக்கு இணை வைத்து விடக் கூடாது என்று அவனுக்கு எச்சரிக்கை செய்து வையுங்கள்.
 • ஈமானின் 6 அடிப்படைகளையும், இஸ்லாத்தின் 5 முக்கிய கடமைகளையும் பிள்ளைகளுக்குக் கற்றுக் கொடுங்கள்.
 • நபி(r) அவர்கள் மீது நேசத்தை ஊட்டுங்கள். நறுமணம் கமழும் அவரது வாழ்க்கை வரலாற்றையும், அழகிய பண்பாட்டையும் பற்றிக்குழந்தைகளுக்கு எடுத்துக் கூறுங்கள்.
 • தூய இஸ்லாமிய அகீதாவையும், அதன் ஒழுக்க விழுமியங்களையும்குழந்தைகளின் உள்ளத்தில் விதைத்து விடுங்கள்.
 • இஸ்லாத்தின் ஹலால்-ஹராம் சட்டங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக அவர்களுக்குக் கற்றுக் கொடுங்கள்.
 • பள்ளிக்குச் செல்வது, பள்ளியில் கண்ணியம், தொழுகையை உரிய நேரத்தில் நிறைவேற்றுவது போன்ற விடயங்களில் ஆர்வத்தை ஊட்டுங்கள்.
 • உங்கள் குழந்தைகள் நல்ல நண்பர்களைத் தேர்ந்தெடுக்க நீங்கள் உதவுங்கள். தீய நண்பர்களை விட்டும் அவர்களை விலக்கி வையுங்கள்.
 • அல்குர்ஆனை ஓதுவது, மனனமிடுவது, அறிந்து கொள்வது போன்ற விடயங்களில் ஆர்வமூட்டுங்கள்.
 • தூய நபிவழிகளைக் கற்றுக் கொடுங்கள். உண்ணல், உறங்கள், விழித்தல், மல-சல கூடங்களுக்குச் செல்லுதல் போன்ற ஒழுங்குகளைக் கற்றுக் கொடுப்பதுடன் அவ்வேளைகளில் ஓத வேண்டிய ஒளறாதுகளையும் கற்றுக் கொடுங்கள்.
 • உங்கள் குழந்தைகளுக்கு மத்தியில் நீதமாக நடங்கள். அவர்களுக்கிடையில் பாரபட்சம் காட்டாது அனைவரையும் சமமாக நடத்துங்கள்.
 • உங்கள் குழந்தைகள் உங்களை அப்படியே பின்பற்ற முயற்சிப்பர். எனவே, நீங்கள் நல்ல முன்மாதிரியாக நடந்து அவர்களை வழிநடத்துங்கள்.
 • அவர்கள் உடல் ஆரோக்கியம் மிக்க விளையாட்டுக்களில் ஈடுபட வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுங்கள்.
 • உண்மை, நேர்மை, துணிவு, விட்டுக் கொடுத்தல், மன்னித்தல், அன்பு காட்டல் போன்ற நல்ல பண்புகள் மீது அவர்களுக்கு ஆர்வத்தை ஊட்டுங்கள்.
 • பொய், ஏமாற்று, திருட்டு, அநீதமிழைத்தல், பெருமை, பொறாமை, சூழ்ச்சி செய்தல் போன்ற கெட்ட குணங்களை விட்டும் அவர்களை எச்சரித்து வையுங்கள்.
 • சின்ன வயதிலிருந்தே சுத்தம்-சுகாதாரத்திற்கு அவர்களைப் பழக்குங்கள், ஒழுச்செய்யும் விதத்தைக் கற்றுக் கொடுங்கள். உடல்-உடை சுத்தம் குறித்து விழிப்புணர்வூட்டுவதுடன், உணவு உண்ண முன்னரும்-பின்னரும் கரங்களைக் கழுவிக் கொள்ளப் பழக்குங்கள்.
 • குழந்தைகளின் வெட்க உணர்வைக் குன்றச் செய்யாதீர்கள். முறையான ஆடைக்கு அவர்களைப் பழக்குங்கள். ஆண் பிள்ளைகளுக்குப் பெண் பிள்ளைகள் போன்றோ, பெண் பிள்ளைக்கு ஆண் பிள்ளை போன்றோ ஆடை அணிவிக்காதீர்கள்.
 • காஃபிர்களுக்கு ஒப்பாக நடக்கக்கூடாது என்பதையும், எமக்கெனத் தனித்துவமான கலாச்சாரம் இருக்கின்றது என்பதையும் அவர்களுக்கு உணர்த்துங்கள். காஃபிர்களது பெருநாட்கள்-திருநாட்கள் கொண்டாட்டங்களுக்கு அவர்களை அனுப்பவோ, அவற்றில் கலந்துகொள்ளச் செய்யவோ வேண்டாம்!
 • ஹராமான விளையாட்டுக்களை விட்டும் அவர்களை விலகியிருக்கச் செய்யுங்கள்.
 • குழந்தைகளின் ஆரோக்கியமான பொழுது போக்குகளுக்கு இடமளியுங்கள். நல்ல நூற்களை அவர்களுக்கு அறிமுகம் செய்யுங்கள்.
 • விருந்தினர்களையும், அயலவர்களையும் கண்ணியப் படுத்தக் கற்றுக் கொடுங்கள். அயலவர்களுக்குத் தொல்லை கொடுப்பது கூடாது என்பதை உணர்த்துங்கள். பெற்றோர், உறவினர், அயலவர், பொதுவான அனைத்து மனிதர்களினதும் உரிமைகள் குறித்து உணர்த்துங்கள்.
 • பாதை ஒழுங்குகளைக் கற்றுக்கொடுங்கள். பாதையில் செல்லும் போது அமைதியாகவும், நிதானமாகவும் நடந்துகொள்ளப் பழக்குங்கள்.
 • மொழிகள் மாறுபட்டாலும், இடங்கள் வேறுபட்டாலும் முஃமின்கள் அனைவரையும் நேசிப்பது கடமை என்ற உணர்வை ஊட்டுங்கள்.
 • ஸலாம் கூறவும் முஸாபஹா செய்யவும் பழக்குங்கள். ஸலாத்தின் ஒழுங்குகளைப் போதியுங்கள். பழழன அழசniபெ போன்ற அந்நிய கலாச்சாரத்தை விட இஸ்லாமிய விழுமியத்தின் சிறப்பை உணர்த்துங்கள்.
 • அவர்களின் விளையாட்டு, ஓய்வு நேரம், மகிழ்ச்சிகரமான நேரங்களில் நீங்களும் அவர்களுடன் பங்கெடுங்கள். அவர்கள் பூரண பாதுகாப்புடனும், அன்பான அரவணைப்புடனும் வாழ்கின்றனர் என்பதை அவர்கள் உணரும் வண்ணம் நடந்துகொள்ளுங்கள்.
 • அவர்களுக்குத் தன்னம்பிக்கையை ஊட்டுங்கள்; அச்சமூட்டிச் சொந்தக் காலில் இயங்க முடியாத நிலையை உண்டாக்கி விடாதீர்கள்.
 • பிள்ளைகளுக்கு வழிகாட்ட அன்பான-மென்மையான வழி இருக்கும் போது, கடும் போக்கைக் கடைபிடிக்காதீர்கள்.
 • உங்கள் குழந்தையாக இருந்தாலும் அவர்களை கண்ணியப்படுத்துங்கள். அடுத்தவர் முன்னிலையில் தண்டிக்காதீர்கள். தனிமையில் புத்தி கூறுங்கள்! இல்லையென்றால், அவர்கள் தன்மான முள்ளவர்களாக மிளிர மாட்டார்கள்.
 • அடிக்கடி அவர்களுக்கு அடிக்காதீர்கள். அதனால் அடி மீதுள்ள அச்சம் அவர்களுக்கு அற்றுப் போய் விடும்; அவர்களிடம் முரட்டுத்தனம் உருவாகி விடும். அதன் பின,; அவர்களை வழிநடத்த மாற்று வழி இல்லாது போய் விடும்.
 • குழந்தைகளின் தவறுகளுக்காகக் கடுமையான தண்டனை வழங்கவும் கூடாது; கண்டுகொள்ளாது இருந்து விடவும் கூடாது. இரண்டுக்கும் இடைப்பட்ட நடுநிலை பேணப்படவேண்டும் என்பதில் கவனம் செலுத்துங்கள்.
 • தவறுக்குத் தண்டனை என்றதும் பிரம்பை மட்டும் பார்க்காதீர்கள்! தண்டனைகள் பல ரகமானது! வார்த்தை மூலம் தண்டிக்கலாம்; தவறு செய்தவருடன் பேசாமல் மௌனத்தின் மூலம் கூடத் தண்டிக்கலாம்; கொடுக்க வேண்டிய ஒன்றைக் கொடுக்காமல் தடுக்கலாம். இவ்வாறு பல ரகம் உள்ளன. குழந்தையின் குற்றம், அதன் வயது, தவறு நடந்த சூழல் என்பனவற்றைக் கவனத்திற் கொண்டு பொருத்தமான தண்டனை வழங்குவதூடாக அவர்கள் மீண்டும்-மீண்டும் தவறு செய்யும் நிலையைத் தவிர்க்கலாம்.
 • பிள்ளைகளின் அறிவை கண்ணியப்படுத்துங்கள்; அவர்கள், பிரச்சினைகளை எப்படி எதிர்கொள்கின்றனர் என்பதை அவதானியுங்கள்.
 • குழந்தைகள் நவீன தொழில் நுற்பத்தைக் கற்றுக்கொள்ள உதவுங்கள்; கணினி-இணையப் பயன்பாட்டை அவர்கள் அறிந்துகொள்ளவும், அதன் மூலம் பயன்பெறவும் வழிகாட்டுங்கள்.
 • குழந்தைகள் பேசும் போது, அவர்களது பேச்சை வெட்டி விடாதீர்கள்; காது கொடுத்துக் கேளுங்கள். அதன் மூலம் அடுத்தவர் பேசும் போது, காது கொடுத்துக் கேட்கும் பக்குவத்தை அவர்கள் பெறுவார்கள்.
 • குழந்தைகள் கேள்வி கேட்கும் போது, அவர்களை அதட்டாதீர்கள்; பொறுமையுடன் அவர்களது கேள்விகளுக்குப் பதிலளியுங்கள்;
 • பிள்ளைகளுக்கு வியாபாரம், கொடுக்கல்-வாங்கல் மற்றும் சுயதேவைகளை நிறைவேற்றிக்கொள்ளுதல் போன்ற அம்சங்களில் பயிற்சி அளியுங்கள்; இவற்றில் அவர் குறை விட்டால், தண்டிக்காது வழிகாட்ட முயற்சியுங்கள்.
 • பயனுள்ள கூட்டமைப்புக்களுடன் குழந்தைகளை ஒன்றிணைத்து, அவர்களது ஆளுமை விருத்திக்கு உதவுங்கள்.
 • அறைகளுக்குள் நுழையும் போது ‘ஸலாம்’ கூறி, நுழையப் பழக்குங்கள்; ஆண்-பெண் பிள்ளைகளுக்குத் தனித்தனி படுக்கைகளை ஏற்படுத்துங்கள். 9 வயதுக்கு மேற்பட்டவர்களைத் தனியாகத் தூங்க வழிசெய்யுங்கள். அதுவே அவர்களின் ஆளுமை வளர உதவும்.
 • திரும்பத் திரும்ப நல்ல விஷயங்களைப் போதியுங்கள்; உடனடி மாற்றத்தை எதிர்பார்க்காதீர்கள். சேர்வடையாமல் முயற்சியைத் தொடருங்கள்.
 • நன்மையை ஆர்வமூட்டித் தீமையை எச்சரியுங்கள்; இப்படிச் செய்தால் இந்தப் பாக்கியம் கிடைக்கும்; இப்படிச் செய்தால் இந்தத் தண்டனை கிடைக்கும் என்பதைப் புரிய வையுங்கள்.
 • உங்கள் குழந்தைகளுக்கு வழங்குவதாகக் கூறிய எந்த வாக்குறுதியையும் மீறி விடாதீர்கள்; தண்டிப்பதாகக் கூறினால், அதைத் தவிர்ப்பது பாதிப்பாகாது. ஆனால் எதையாவது ‘தருவேன்’ எனக் கூறி விட்டு, கொடுக்காது இருந்து விடாதீர்கள்.
 • பிள்ளைகளின் பிரச்சினையை அவர்களுடன் பேசி, அறிந்து அவற்றுக்குத் தீர்வுகளைப் பெற்றுக் கொடுங்கள்;
 • இஸ்லாமிய சரித்திரத்தையும், அதன் சாதனை வீரர்களது வரலாறுகளையும் எடுத்துக் கூறுங்கள்;
 • இஸ்லாத்தின் எதிரிகள் குறித்தும், அவர்கள் முஸ்லிம்களுக்கு இழைக்கும் அநீதிகள்; குறித்தும் அவர்களுக்கு உணர்த்துங்கள்;
 • இருப்பதைக் கொண்டு திருப்தியடையப் பழக்குங்கள்; அடுத்தவர்களிடமிருப்பதைப் பார்த்துக் கொட்டாவி விடும் இயல்பை அழிக்க முயலுங்கள்.
 • பொது விடயங்களில் அவர்களுடன் ஆலோசனை செய்யுங்கள்; அவர்களது கருத்து பொருத்தமானதாகப் பட்டால், அதன்படி செயல்படத் தயங்காதீர்கள்.
 • உளவியல் ரீதியில் அவர்களை அணுக முற்படுங்கள்; ‘நல்ல பிள்ளைகள் இப்படித்தான் இருப்பார்கள்; இப்படி-இப்படி செய்ய மாட்டார்கள். நீ நல்ல பிள்ளை; நீ எப்படி நடந்துகொள்ள வேண்டும்?’ என்ற தோரணையில் நீங்கள் கூற விரும்புவதைக் கூறலாம்.
 • இது போன்ற வழிமுறைக;டாக அவர்களிடம் மாற்றத்தை ஏற்படுத்த முயல்வதுடன் அவர்களுக்காக அல்லாஹ்விடம் அனுதினமும் துஆச் செய்யுங்கள்.
அல்லாஹ் அருள்புரிவானாக!- எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி)

திங்கள், செப்டம்பர் 12, 2011

கூட்டுத் தொழுகையின் அவசியமும், சிறப்பும்PrintE-mail

மௌலவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி
‘தொழுகையைக் கடைப்பிடியுங்கள், ஜகாத்தையும் (ஒழுங்காகக்) கொடுத்து வாருங்கள், ருகூஃ செய்வோரோடு சேர்ந்து நீங்களும் ருகூஃ செய்யுங்கள்" (அல்குர்ஆன் 2:43).
‘ருகூஃ செய்வோரோடு சேர்ந்து நீங்களும் ருகூஃ செய்யுங்கள்" என்ற வசனத்தின் மூலம், கூட்டுத் தொழுகை கட்டாயமானது என்ற ஆதாரத்தை அதிகமான அறிஞர்கள் எடுக்கின்றனர். (தப்ஃஸீர் இப்னு கஸீர்).
போர் நிலையில் கூட ஜமாஅத் :
‘(நபியே! போர் முனையில்) அவர்களுடன் நீர் இருந்து, அவர்களுக்குத் தொழ வைக்க நீர் (இமாமாக) நின்றால் அவர்களில் ஒரு பிரிவினர் தம் ஆயுதங்களைத் தாங்கிக் கொண்டு உம்முடன் தொழட்டும், அவர்கள் உம்முடன் ஸஜ்தா செய்து (தொழுகையை முடித்ததும்) அவர்கள் (விலகிச் சென்று) உங்கள் பின்புறம் (உங்களைக் காத்து நிற்கட்டும்), அப்பொழுது, தொழாமலிருந்த மற்றொரு பிரிவினர் வந்து உம்முடன் தொழட்டும். ஆயினும் அவர்களும் தங்கள் ஆயுதங்களைத் தாங்கிய வண்ணம், தங்களைப் பற்றி எச்சரிக்கையாக இருக்கட்டும் – ஏனெனில் நீங்கள் உங்கள் ஆயுதங்களைப் பற்றியும், உங்கள் சாமான்களைப் பற்றியும் கவனக்குறைவாக இருந்தால், அப்பொழுது உங்கள் மீது ஒரேயடியாகச் சாய்ந்து (தாக்கி) விடலாமென்று காஃபிர்கள் விரும்புகின்றனர், ஆனால் மழையினால் உங்களுக்கு இடைஞ்சல் இருந்தாலோ, அல்லது நீங்கள் நோயாளிகளாக இருப்பதினாலோ, உங்களது ஆயுதங்களைக் (கையில் பிடிக்க இயலாது) கீழே வைத்து விடுவது உங்கள் மீது குற்றம் ஆகாது, எனினும் நீங்கள் எச்சரிக்கையாகவே இருந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்;லாஹ்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்திருக்கின்றான்." (அல்குர்ஆன் 4:102).
தொழுகையாளிகளுக்கு கேடு :
தொழுமையாளிகளுக்குக் கேடு தான். அவர்கள் எத்தகையோர் என்றால் தம் தொழுகையில் பாராமுகமாக(வும், அசிரத்தையாக)வும் இருப்போர். அவர்கள் பிறருக்குக் காண்பிக்(கவே தான் தொழு)கிறார்கள். (அல்குர்ஆன் 107:4,5,6).
இவ்வசனம் தொழுகையாளிகள் மிக நிதானமாக கவனிக்க வேண்டிய ஒரு வசனமாகும், ஏனெனில் இவ்வசனத்தில் உள்ள எச்சரிக்கை தொழுகையாளிகளுக்குரியதாகும். கூட்டுத் தொழுகையை தவரவிடுவதும் தொழுகையில் ஏற்படும் மிகப்பெரும் அலட்ச்சியமாகும்.
மூன்று பேர் இருந்தால் :
"மூன்று பேர் இருப்பார்களேயானால் அதில் ஒருவர் இமாமத் செய்யட்டும், அவர்களில் இமாமத் செய்வதற்கு மிகத்தகுதியானவர் அல்குர்ஆனை நன்றாக ஓதுபவரே" என நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஸஈதுல் குத்ரிய் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், நூல்: முஸ்லிம்).
இமாம் இப்னுல் கய்யூம் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் குறிப்பிடும் போது: நபியுடை கட்டளை கூட்டுத் தொழுகை கடமை என்பதை குறித்து நிற்கின்றது.
பிரயாணத்திலும் கூட்டுத் தொழுகை கட்டாயம் :
இருவர் நபியிடத்தில் ஒரு பிரயாணத்தை நாடியவர்களாக வந்தனர், நீங்கள் இருவரும் வெளியேறினால் (தொழுகை நேரம் வந்தவுடன்) பாங்கு சொல்லுங்கள், பின்னர் இகாமத் சொல்லுங்கள், பிறகு உங்களில் வயதில் பெரியவர் இமாமத் செய்யவும்" என நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: மாலிக் இப்னுல் ஹுவைரிஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி).
இமாம் புஹாரி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் குறிப்பிடும் போது: இந்த ஹதீஸின் அடிப்படையில்: இருவர், இருவருக்கு அதிகமானவர்கள் ஜமாஅத்தாக கருதப்படுவர்.
அதானுக்குப் பின் மஸ்ஜிதை விட்டு வெளியேறுவது தடை :
‘முஅத்தின் அதான் சொன்னதன் பின் ஒருவர் மஸ்ஜிதை விட்டு வெளியேறினார், இந்த மனிதர் காஸிமின் தந்தை ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மாறு செய்து விட்டார்" என அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள். ஷரீக் அறிவிக்கும் ஒரு செய்தியில் ‘நீங்கள் மஸ்ஜிதில் இருக்கும் நிலையில் தொழுகைக்காக அழைக்கப்பட்டு விட்டால் தொழுகையை நிறைவேற்றும் வரை உங்களில் எவரும் வெளியேற வேண்டாம்" என நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எமக்கு கட்டளையிட்டார்கள். (நூல்: அஹ்மத்).
‘நாம் ஒரு முறை மஸ்ஜிதில் அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்களுடன் அமர்ந்திருந்தோம், முஅத்தின் (தொழுகைக்காக) அதான் சொன்னார், அதன் பின் ஒரு மனிதர் மஸ்ஜிதை விட்டு வெளியேறுவதை பார்த்துக் கொண்டிருந்த அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் இவர் காஸிமின் தந்தை ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மாறு செய்தவராவார். (நூல்: முஸ்லிம்).
சலுகை வழங்காமை :
கண்கள் தெரியாத ஒரு மனிதர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே! என்னை மஸ்ஜிதுக்கு அழைத்துச் செல்வதற்கு ஒரு துணை இல்லை எனக்கு வீட்டில் தொழுவதற்கு சலுகை உள்ளதா? நபியவர்கள் அவர்களுக்கு சலுகை வழங்கினார்கள். அவர் திரும்பிச் சென்ற கோது மறுபடியும் அழைத்து நீர் பாங்கோசையை கேட்கின்றீரா? அவர் ஆம் என்று கூற அப்படியானால் நீர் மஸ்ஜிதுக்கு சமூகமளிக்க வேண்டும்" என கட்டளையிட்டார்கள். (நூல்: முஸ்லிம்).
நயவஞ்சகனுக்கு சிரமமானதாகும் :
‘பஃஜ்ர், இஷாவை விட நயவஞ்சகர்களுக்கு சிரமமான தொழுகை வேறொன்றுமில்லை. அவர்கள் அதன் (நன்மையை) அறிவார்களானால் தவழ்ந்த நிலையிலாவது (அதை நிறைவேற்றுவதற்கு) சமூகமளிப்பார்கள். முஅத்தினுக்கு தொழுகைக்கு இகாமல் சொல்வதற்கு ஏவி, மனிதர்களுக்கு தொழுகை நடத்த மற்றுமொருவருக்கு ஏவி, அதற்குப் பிறகும் மஸ்ஜிதுக்கு வராதவர்களை (வராதவர்களின் வீடுகளை) எரித்து விட (நான் விரும்புகிறேன்)" என நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி).
‘ஒரு முறை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பஃஜ்ருடைய தொழுகையை எமக்கு தொழுவித்தார்கள். இன்ன மனிதர் வந்திருக்கின்றாரா இல்லை என்று சொன்னார்கள் ? இன்ன மனிதர் வந்திருக்கின்றாரா? இல்லை என்று சொன்னார்கள். நிச்சயமாக இந்த இரு தொழுகைகளும் நயவஞ்சகர்களுக்கு சிரமமானதாகும். அந்த இரு தொழுகையின் (சிறப்புகளை) அவர்கள் அறிவார்களானால் முழங்கால்களால் தவழ்ந்த நிலையிலாவது சமூகமளித்திருப்பார்கள். நிச்சயமாக (தொழுகையின்) முதல் வரிசையானது வானவர்களின் வரிசையைப் போன்றதாகும். அதன் சிறப்பை நீஙகள் அறிவீர்களானால் மிக வேகமாக அதன் பால் விரைவீர்கள். ஒருவர் மற்றொருவருடன் (கூட்டாக) தொழுவது தனியாகத் தொழுவதை விட சிறப்பானதாகும். இருவருடன் (கூட்டாகத்) தொழுவது, ஒருவருடன் (கூட்டாகத்) தொழுவதை விட சிறப்பானதாகும். இவ்வாறு எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க (அது) அல்லாஹவின் விருப்த்திற்குரியதாக இருக்கும்" என நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (உபைய் இப்னு கஃப் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: அபூதாவுத்).
பகிரங்க முனாபிஃக் :
‘ஐந்து நேரத் தொழுகைக்காக எங்கிருந்து அழைப்பு வருகின்றதோ (அதை அங்கு) பேணிப்பாதுகாத்து தொழுது வாருங்கள். நிச்சயமாக அது நேரிய சுன்னாக்களில் நின்றும் உள்ளவையாகும், அல்லாஹ், தனது தூதருக்கு மார்க்கமாக்கியது நேரிய சுன்னாக்களைத் தான், வெளிப்படையான நயவஞ்சகனைத் தவிர வேறு எவரையும் ஜமாஅத்துக்கு வராமல் நாங்கள் பார்க்கவில்லை. நிச்சயமாக (இயலாதவைரக் கூட) இருவரின் துணை கொண்டு ஸப்ஃபில் தொழுகைக்காக அழைத்து வந்து நிறுத்தப்படுவதைப் பார்த்தோம். உங்களில் எவருக்கும் வீட்டில் மஸ்ஜித் இல்லை. நீங்கள் உங்கள் வீடுகளில் தொழுது மஸ்ஜித்களை விட்டு விடுவீர்களானால் நீங்கள் நபியுடைய வழி முறையை விட்டவர் ஆவீர்கள். நீங்கள் நபியுடைய சுன்னத்தை விட்டு விட்டீர்களானால் நீங்கள் நிராகரித்து விட்டீர்கள்" என அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் கூறினார்கள். (நூல்: அபூதாவுத்).
‘நாளை எவன் ஒரு (உண்மை) முஸ்லிமாக அல்லாஹ்வை சந்திக்க விரும்புகின்றானோ ‘ஐந்து நேரத் தொழுகைக்காக எங்கிருந்து அழைப்பு வருகின்றதோ (அதை அங்கு) பேணிப்பாதுகாத்து தொழுது வரட்டும். நிச்சயமாக அது நேரிய சுன்னாக்களில் நின்றும் உள்ளவையாகும், அல்லாஹ், தனது தூதருக்கு மார்க்கமாக்கியது நேரிய சுன்னாக்களைத் தான். நீங்கள் இந்த (நயவஞ்சனைப் போன்று) வீட்டில் தொழுவீர்களானால், உங்கள் தூதரின் வழி முறையை விட்டவர்கள் ஆவீர்கள். உங்கள் தூதரின் வழி முறையை விட்டு விட்டால் நீங்கள் வழிதவறி விட்டீர்கள். உங்களில் எவர் அழகான முறையில் வுழுச் செய்து ஏதாவது ஒரு மஸ்ஜிதுக்கு செல்வாரானால் அவர் வைக்கும் ஒவ்வொரு எட்டுக்கும் பாவங்கள் மன்னிக்கப்படும், அந்தஸ்து உயர்த்தப்படும், நன்மைகள் பதியப்படும். வெளிப்படையான நயவஞ்சகனைத் தவிர வேறு எவரையும் ஜமாஅத்துக்கு வராமல் நாங்கள் பார்க்கவில்லை. நிச்சயமாக (இயலாதவைரக் கூட) இருவரின் துணை கொண்டு ஸப்ஃபில் தொழுகைக்காக அழைத்து வந்து நிறுத்தப்படுவதைப் பார்த்தோம்" என அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள். (நூல்: முஸ்லிம்).
ஷைத்தானின் ஆதிக்கம் :
‘எந்த ஒரு ஊரிலாவது, கிறாமத்திலாவது, மூன்று பேர் இருந்து அங்கு ஜமாஅத்தாக தொழுகை நிலை நாட்டப் படவில்லையானால் ஷைத்தான் அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தி விடுகின்றான். உங்களுக்கு ஜமாஅத்தை நான் வலியுறுத்துகின்றேன். தனியாக இருக்கும் ஆட்டைத் தான் ஓநாய் பிடித்து சாப்பிடும்" என நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் அபூதர்தா ரளியல்லாஹு அன்ஹு, அபூதாவுத், நஸாயி).
கூட்டுத் தொழுகையின் சிறப்பு :
இறையில்லத்துடன் எவருடைய உள்ளம் ஒன்றிப்போயிருந்ததோ அவருக்கு அர்ஷின் கீழ் நிழல் கிடைக்கும்:
‘எவரது உள்ளம் இறையில்லத்துடன் ஒன்றிப்போயிருக்கிறதோ அவருக்கு நாளை மறுமையில் அர்ஷின் கீழ் நிழல் கிடைக்கும்" என நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல்: முத்தபகுன் அலைஹி).
இமாம் நவவி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் இந்த ஹதீஸுக்கு விளக்கம் அளிக்கும் பொழுது ‘உள்ளம் இறையில்லத்துடன் ஒன்றிப்போயிருப்பதென்பது" மஸ்ஜிதுடன் உள்ள இருக்கமான தொடர்பு, கூட்டுத்தொழுகையில் தவராது பங்கேற்றல் ஆகியவையாகும், இதுவல்லாது தொடர்ந்து பள்ளியில் தங்கியிருப்பது என்பது இதன் கருத்தல்ல.
இந்த ஹதீஸ் தொடர்பாக இமாம் அல்லாமா அயினி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் விளக்கமளிக்கும் பொழுது மஸ்ஜித் என்பது அல்லாஹ்வின் வீடாகும் அதை நோக்கி வருகை தருபவர்கள் அவனது விருந்தினராவர், அவன் எவ்வாறு தனது விருந்தாளிகளை கௌரவப்படுத்தாமல் இருப்பான்?
அல்லாஹ்விடத்தில் மிக விருப்பமான செயல்கள் :
அப்துல்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் அல்லாஹ்விற்கு மிக விருப்பமான செயல்கள் யாவை? எனக் கேட்டேன் தொழுகையை அதற்குரிய நேரத்தில் நிறைவேற்றுவதாகும். பிறகு எது என கேட்டேன், பெற்றோருக்கு நன்மை செய்தலாகும் பிறகு எது எனக் கேட்டேன் இறை வழியில் போர் புரிவதாகும்" எனக்கூறினார்கள். (நூல்: புகாரி).
கூட்டுத்தொழுகையை நிறைவேற்றுவதற்கு நடந்து செலவதன் சிறப்பு :
ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்: மஸ்ஜிதைச் சூழ காலியான நிலங்கள் இருந்து போது, பனு ஸலமா தனது வீட்டை மஸ்ஜிதுக்கு அன்மையில் அமைத்துக்கொள்ள விரும்பினார், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு இச்செய்தி அறியக் கிடைத்த பொழுது, நீங்கள் உங்கள் வீடுகளை மஸ்ஜிதுக்கு அண்மையில் மாற்றுவதற்கு விரும்புகின்றீர்களா? ஆம் அல்லாஹ்வின் தூதரே! என பதிலளித்தனர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் உங்களது வீடுகளும் நன்மைகளை பதிவு செய்கின்றன், உங்களது வீடுகளும் நன்மைகளை பதிவு செய்கின்றன என்று கூறினார்கள். (நூல்: முஸ்லிம்).
கூட்டுத்தொழுகையை நிறைவேற்றுவதற்கு ஒருவர் நடந்து செல்வதன் மூலம் அவரது பாவங்கள் மன்னிக்கப்படுவதுடன், அவரது அந்தஸ்தும் உயரும் :
அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: உங்களது பாவங்கள் மன்னிக்கப்படக்கூடிய, அந்தஸ்துகள் உயரக்கூடிய ஒரு செயலை அறிவிக்கட்டுமா? அதற்கு நபித்தோழர்கள் அறிவியுங்கள் அல்லாஹ்வின் தூதரே? எனக்கூறினர். சிரமமான நேரங்களில் நல்ல முறையில் வுழூச் செய்வது, மஸ்ஜிதுக்கு அதிக எட்டுக்களை வைத்து நடந்து செல்வது, ஒரு தொழுகைக்குப் பின் மற்றொரு தொழுகையை எதிர்ப் பார்த்து அமர்ந்திருப்பது" இது உறுதி மிக்கதாகும்" என நபிபள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல்: முஸ்லிம்).
உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ஒருவர் தொழுகைக்காக பரிபூரணமாக வுழுச் செய்து, பிறகு கடமையான தொழுகையை நிறைவேற்றுவதற்காக நடந்து சென்று, மக்களுடன் கூட்டாக மஸ்ஜிதில் தொழுகையை நிறைவேற்றுவாரானால் அவரது பாவங்களை அல்லாஹ் மன்னித்து விடுவான்" என நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் (நூல்: முஸ்லிம்).
அப்துல்லாஹ் இப்னு அம்ர் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது: ‘ஒருவர் மஸ்ஜிதை நோக்கி வைக்கக்கூடிய ஒவ்வொரு எட்டுக்கும் அவரது பாவங்கள் மன்னிக்கப்படும். ஓவ்வொரு எட்டுக்கும் நன்மைகள் பதியப்படும். வரும் போதும் செல்லும் போதும் அவ்வாறே நடக்கிறது" என நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல்: அஹ்மத்).
அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘கூட்டாக நிறைவேற்றப்படும் தொழுகை தனியாக வீட்டிலோ வியாபார ஸ்தலத்திலோ நிறைவேற்றப்படும் தொழுகையை விட இருபத்தி ஐந்து மடங்கு உயர்ந்ததாகும். உங்களில் ஒருவர் அழகாக வுழூச் செய்து, தொழுகையை மாத்திரம் நோக்கமாகக் கொண்டு மஸ்ஜிதுக்குச் செல்லும் போது அவர்; வைக்கும் ஒவ்வொரு எட்டுக்கும் அவரது அந்தஸ்து உயர்வு பெறுகிறது, பாவங்கள் மன்னிக்கப்படுகிறது, இன்னும் வானவர்கள் அவர்; மஸ்ஜிதில் தொழுகையை எதிர்ப்பார்த்து அமர்ந்திருக்கும் காலமெல்லாம் அல்லாஹ்வின் அருள்வேண்டி அவருக்காக பிரார்த்திக்கின்றனர். யா அல்லாஹ் அவருக்கு அருள் புரிவாயாக!" (என பிரார்த்திக்கின்றனர்) என நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரி).
தொழுகையை நிறைவேற்றுவதற்காக வுழூச்செய்து வெளியேறியவருக்கு கிடைக்கும் கூலி இஹ்ராம் அணிந்து ஹஜ்{க்காக தயாராகி செல்பவருக்கு கிடைக்கும் கூலியைப் போன்றதாகும்.
அபூ உமாமா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘ஒருவர் தனது இல்லத்திலிருந்து வுழூச்செய்து பர்லான தொழுகைக்காக வெளியேறிச் செல்கிறார் அவருடைய கூலி ஹஜ்ஜுக்காக இஹ்ராம் அணிந்து வெளியேறிச் செல்பவருக்கு கிடைக்கும் கூலியைப் போன்றதாகும்" என நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல்கள்: அபூதாவுத், அஹ்மத்).
தொழுகைக்காக வெளியேறிச் செல்பவர் அல்லாஹ்வின் பாதுகாப்பில் இருக்கிறார் :
‘மூவர் அல்லாஹ்வின் பொறுப்பில் இருக்கின்றனர்: அல்லாஹ்வின் பாதையில் போர் புரிவதற்காக வெளியேறிச் சென்ற வீரர். அவர் மரணிக்கும் வரை அல்லாஹ்வின் பாதுகாப்பில் இருக்கின்றார். (அவர் அதில் ஷஹீதகாகி விட்டால்) சுவர்க்கத்தில் நுழைவிக்கப்படுவார். அல்லது (மகத்தான) நன்மையுடனும், கஃனீமத்துடனும் திரும்புவார். (இரண்டாமவர்) மஸ்ஜிதுக்குச் சென்றவர் இவரும் மரணிக்கும் வரை அல்லாஹ்வின் பொறுப்பில் இருக்கின்றார் (இவர் இதே நிலையில்) மரணித்தால் சுவர்க்கம் நுழைவிக்கப்படுவார். அல்லது நன்மைகளுடனும், நற்பாக்கியங்களுடனும் திரும்புவார். (மூன்றாமவர்) தனது வீட்டுக்குள் ஸலாம் சொன்ன்வராக நுழைந்தவர். இவரும் அல்லாஹ்வின் பொறுப்பில் இருக்கின்றார்" என நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஉமாமா அல்பாஹிலிய் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: அபூதாவுத்).
பரிபூரண ஒலி :
புரைதா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் இருளில் மஸ்ஜிதுக்கு நடந்து செல்பவருக்கு நாளை மறுமையில் பரிபூரண ஒலி கிடைக்கும் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நன்மாராயம் கூறினார்கள்". (நூல்கள்: அபூதாவுத், திர்மிதி).
முன்னைய பாவங்கள் மன்னிக்கப்படல் :
அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: இமாம் ‘ஆமின்" சொன்னால் நீங்களும் ‘ஆமீன்" சொல்லுங்கள், எவருடைய ஆமீனும் வானவர்களுடைய ஆமீனும் நேர்பட்டு விடுகின்றதோ அவரது முன்னைய பாவங்கள் மன்னிக்கப்படும்" என நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரி).
நரகத்தை விட்டு விடுதலை :
அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: எவர் நாற்பது நாட்கள் முதல் தக்பீருடன் அல்லாஹ்விற்காக தொழுது வருவாரோ அவருக்கு இரண்டு விடுதலைப் பத்திரங்கள்; எழுதப்படும். ஓன்று நரகத்தை விட்டு விடுதலை, மற்றது நயவஞ்சகத் தனத்தை விட்டு விடுதலை" என நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல்: திர்மிதி).
இஷாவையும், பஜ்ரையும் ஜமாஅத்துடன் தொழுது வருவதன் சிறப்பு :
அப்துர் ரஹ்மான் இப்னு அபீ அம்ரா அறிவிக்கிறார்: உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு மஃரிப் தொழுகையின் பின் மஸ்ஜிதில் தனியாக அமர்ந்திருந்தார் நான் அவர் பக்கத்தில் அமர்ந்தேன். என் சகோதரனின் மகனே! நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்லக்கேட்டிருக்கிறேன். எவர் இஷாவுடையத் தொழுகையை ஜமாஅத்துடன் தொழுவாரோ அவர் பாதி இரவு நின்று வணங்கியவர் போன்றவராவார், எவர் ஸ{பஹ{டைய தொழுகையையும் ஜமாஅத்துடன் தொழுவாரோ அவர் முலு இரவும் நின்று வணங்கியவர் போன்றவராவார் (நூல்: முஸ்லிம்).
முதல் ஸப்ஃ :
ஒரு கூட்டம் முதல் ஸப்ஃபை விட்டு தாமதித்தவர்களாகவே இருக்கின்றனர், எதுவரை எனில் அவர்களை அல்லாஹ் நரகிலும் பிற்படுத்தும் வரை" என நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, நூல்: அபூதாவுத்)
‘ஒரு முறை நபியவர்கள் எம்மிடம் வந்து வானவர்கள் தனது ரப்பிடம் அணிவகுப்பது போன்று நீங்கள் அணிவகுக்க மாட்டீர்களா? என வினவினார். வானவர்கள் தனது ரப்பிடம் எவ்வாறு அணிவகுக்கின்றனர். அவர்கள் முதல் வரிசையை முழுமைப்படுத்திய பின்னர் இரண்டாவது வரிசையை ஆரம்பிப்பர்" என நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர் இப்னு ஸமுரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: நஸாயி)
நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முதல் ஸப்பில் இருப்பவர்களுக்கு மூன்று முறை அருள் வேண்டிப் பிரார்த்தித்தார்கள். இரண்டாவது ஸப்பில் உள்ளவர்களுக்கு ஒரு முறை அருள்வேண்டிப் பிரார்த்தித்தார்கள்" என இர்பாலிப்னு ஸாரியா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் (நூல்: அஹ்மத்).
அபூ உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘நிச்சயமாக அல்லாஹ் முதல் ஸப்பில் உள்ளவர்களுக்கு அருள் புரிகிறான், அவனது வானவர்களும் அவர்களுக்காக அருள் வேண்டிப் பிரார்த்திக்கின்றனர், அப்பொழுது நபித்தோழர்கள் அல்லாஹ்வின் தூதரே! இரண்டாவது ஸப்பில் உள்ளவர்களுக்கு எனக்கேட்டனர், நிச்சயமாக அல்லாஹ் முதல் ஸப்பில் உள்ளவர்களுக்கு அருள் புரிகிறான், அவனது வானவர்களும் அவர்களுக்காக அருள் வேண்டிப் பிரார்த்திக்கின்றனர், அப்பொழுதும் நபித்தோழர்கள், இரண்டாவது ஸப்பில் உள்ளவர்களுக்கு எனக்கேட்டனர், ஆம் இரண்டாவது ஸப்பில் உள்ளவர்களுக்கும் தான், ஆம் இரண்டாவது ஸப்பில் உள்ளவர்களுக்கும் தான் எனக் கூறினார். (நூல்: அஹ்மத்).
அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: நீங்கள், அல்லது அவர்கள் முதல் ஸப்பின் சிறப்பை அறிவீர்களானால் சீட்டுக் குலுக்கிப் பார்த்து அந்த சந்தர்ப்பை பெற்றுக் கொள்வீர்கள்" என நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல்: முஸ்லிம்).

ஞாயிறு, செப்டம்பர் 11, 2011

கணவன் மீது மனைவிக்குரிய கடமைகள்


Print
E-mail

ஒரு பெண்ணுக்கு அவளது கணவன் செய்ய வேண்டிய சில குறிப்பிட்ட கடமைகளிருக்கின்றன. இக்கடமைகள் தனது கணவனுக்கு அவள் செய்ய வேண்டிய சில குறிப்பிட்ட கடமைகளுக்குப் பகரமாகி விடுகின்றன.
அவை அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் மாற்றிமில்லாக் காரியங்களில் கணவனுக்குக் கட்டுப்பட்டு நடப்பது, அவன் உண்பதற்கும் பருகுவதற்கும் தயார் செய்து கொடுப்பது, குழந்தைகளுக்குப் பாலூட்டுவது, அவர்களை வளர்ப்பது, அவனது பொருளையும் மானத்தையும் பாதுகாப்பது, தனது கற்பைப் பாதுகாத்துக் கொள்வது, அனுமதிக்கப்பட்ட வகைகளில் அவனுக்காக தன்னை அலங்கரித்துக் கொள்வது, அழகுபடுத்திக் கொள்வது போன்றவைகளாகும்.
இவை ஒரு பெண் அவளது கணவனுக்குச் செய்ய வேண்டிய கடடாயக் கடமைகளாகும்.
அல்லாஹ் கூறுகிறான் :
மனைவியர் மீது கணவர்களுக்கு உள்ள உரிமைகளைப் போலவே முறைப்படி கணவர்கள் மீது மனைவியருக்கும் உரிமையுண்டு. (2:228)
முஃமினான பெண் இவற்றை அறிந்து எவ்வித நாணமும் பயமுமின்றி இவ்வுரிமைகளைக் கேட்டுப் பெற வேண்டும் என்பதற்காக இவற்றைக் கூறுகிறோம். இவைகளில் சிலவற்றை அவள் மன்னித்து விட்டாலன்றி, கணவன் இவைகளை முழுமையாக மனைவிக்கு வழங்குவது கடமை. அவள் விட்டுக் கொடுப்பதும் கூடும்.
அவன் தனது வசதி, ஏழ்மை நிலையைக் கவனித்து அவளுக்குச் செலவுக்குக் கொடுக்க வேண்டும். ஆடை, உணவு, குடிப்பு, மருத்துவம், தங்குமிடம் இவைகளுக்காக செலவை அவள் பெற்றுக் கொள்ள வேண்டும்.
ஆண், பெண்ணை நிர்வகிக்க வேண்டியவனாகயிருப்பதால் அவளின் மானம், மரியாதை, உடல், பொருள், மார்க்கம் இவை அனைத்திலும் அவளைப் பாதுகாக்க வேண்டும். ஒரு பொருளைப் பாதுகாத்து கவனித்து வருவதென்பது அதனை நிர்வகித்து வருபவனின் பொறுப்பிலுள்ளதாகும்.
அவளின் மார்க்க விசயங்களில் அவசியமானவற்றை அவளுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும். அவனுக்கு இயலா விட்டால் அல்லாஹ்வின் இல்லங்களிலும், கல்விக் கூடங்களிலும் நடைபெறுகின்ற பெண்களுக்குரிய மார்க்கக் கூட்டங்களுக்குச் சென்று வர அனுமதியளிக்க வேண்டும். ஆனால் அவ்விடங்கள் குழப்பத்தை விட்டும் பாதுகாப்பானதாக இருப்பதோடு அவனுக்கோ அவளுக்கோ அதில் இடையூறு ஏற்படாமலிருப்பதும் அவசியமாகும்.
அவளிடம் அழகிய முறையில் நடந்து கொள்ள வேண்டும்.
அல்லாஹ் கூறுகிறான் : அவர்களோடு நல்லமுறையில் வாழ்க்கை நடத்துங்கள் (4:119)
நல்ல முறையில் வாழ்க்கை நடத்துங்கள் என்பதில் உடலுறவில் அவளுக்குரிய உரிமையைக் குறைத்திடாமலிருப்பது, திட்டமிடுவது, இழிவுபடுத்தவது, கேவலப்படுத்துவது போன்றவற்றால் அவளுக்குத் தொல்லை கொடுக்காமலிருப்பது ஆகியவை அடங்கும்.
இன்னும் அவள் தனது உறவினர்களைச் சந்தித்து வருவதால் குழப்பம் ஏற்படுமென அவன் பயப்படாத போது அவனைத் தடுக்காமலிருப்பதும், அவளுக்கு முடியாத வேலைகளைச் செய்யும்படி சிரமம் கொடுக்காமலிருப்பதும், சொல்லிலும், செயலிலும் அவளுடன் அழகிய முறையில் நடந்து கொள்வதும் அதில் அடங்கும்.
ஏனெனில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள் : தம் மனைவியரிடத்தில் சிறந்தவரே உங்களில் சிறந்தவர். உங்களில் நான் எனது மனைவியரிடத்தில் சிறந்தவளாக இருக்கின்றேன். மேலும் கூறினார்கள் : பெண்களைக் கண்ணியமாக நடத்துபவர்களே நல்லவர்கள். அவர்களை இழிவாக நடத்துபவர்கள் தாம் கெட்டவர்கள்.
பர்தா அணிதல்
நிச்சயமாக இஸ்லாம் குடும்ப அமைப்பு வீழ்ந்து சின்னா பின்னப்பட்டுப் போகாமல் அதைப் பாதுகாப்பதில் அக்கறை கொண்டுள்ளது. இதனால் அதைச் சுற்றி ஒழுக்கங்கள் மற்றும் நற்குணங்களாலான உறுதி வாய்ந்த வேலியை எழுப்பியுள்ளது.
காரணம் மனிதர்கள் நிம்மதியாகவும் சமுதாயம் தூய்மையானதாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக. அச்சமுதாயத்தில் காம உணர்வு தூண்டப்பட முடியாது. காமம் கிளறப்பட முடியாது. இயற்கைச் சூழ்நிலையைக் கேடுபடுத்திட முடியாது. இன்னும் நிச்சயமாக இஸ்லாம் குழப்பத்தில் பால் இட்டுச் செல்லக் கூடிய அனைத்து வாசல்களிலும் திரையை ஏற்படுத்தியுள்ளது. ஆண் பெண் இருபாலரும் தம் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளும்படியும் ஏவியுள்ளது.
நிச்சயமாக அல்லாஹ் பெண்ணைக் கண்ணியப்படுத்துவதற்காகவும்,
இழிவிலிருந்து அவளின் மான மரியாதையைப் பாதுகாப்பதற்காகவும்,
குழப்பவாதிகள் மற்றும் தீய எண்ணம் உடையவர்களின் கெடுதியை விட்டும் அவளைத் தூரப்படுத்துவதற்காகவும்,
கண்ணியத்தினுடைய விலைமதிப்பை அறியாதவர்களிடமிருந்து அவளைப் பாதுகாத்துக் கொள்தவதற்காகவும்,
விஷப்பார்வைகளுக்குக் காரணமாக குழப்பத்தின் வாசலை அடைத்திடுவதற்காகவும்,
பெண்ணின் கண்ணியத்தையும் கற்பையும் பாதுகாத்துக் கொள்வதற்காகவுமே
அல்லாஹ் பெண்களுக்குப் பர்தா அணிவதை சட்டமாக ஆக்கியுள்ளான்.
இஸ்லாமிய அறிஞர்கள் பெண்கள் தங்களின் இரு முன் கைகளையும் முகத்தையும் தவிர உள்ள எல்லாப் பாகங்களையும் மூடி மறைத்துக் கொள்ள வேண்டும். இன்னும் அந்நிய ஆண்களின் முன்னிலையில் தனது அழகையும், கவர்ச்சியையும் வெளிப்படுத்தக் கூடாது என ஏகமனதாக முடிவு செய்துள்ளனர். முகத்தையும் முன் கைகளையும் மறைக்க வேண்டுமா? என்பதில் அறிஞர்களிடையே கருத்துவேறுபாடு உள்ளது. ஒவ்வொரு பிரிவினரிடத்திலும் தங்களது கருத்திற்கேற்ப ஆதாரங்களும் உள்ளன.
நாம் வாழுகின்ற இந்தக் காலப் பிரிவில் குழப்பங்கள் மலிந்துள்ளன. பெண்களுக்கெதிரான பாலியல் துஷ்பிரயோகங்கள் மிகுந்து காணப்படுகின்றன. பொது இடங்களில் பெண்களைச் சீண்டுவதும் அதிகரித்திருக்கின்றது. காரணம் இறைவழிகாட்டுதல்களைப் பெற்றுக் கொள்ளாத சமூகத்தில் உள்ளவர்கள், இறையச்சம் இல்லாதவர்கள் தான் இத்தகைய இழி செயல்களில் ஈடுபடுகின்றார்கள்.
இஸ்லாம் பெண்கள் அந்நிய ஆடவர்களுடன் கலந்துறவாடுவதைத் தடைசெய்துள்ளது. இவையனைத்தும் பண்பாடுகள், சிறப்புகள், குடும்பங்கள் முதலியவற்றைப் பாதுகாப்பதற்கும், குழப்பத்தின் வாசல்களையும் குழப்பதை ஏற்படுத்தக் கூடிய வழிகளையும் அடைப்பதற்கும் அவற்றைப் பாதுகாப்பதற்கும் இஸ்லாம் அக்கறை கொள்கிறது. பெண் வெளியே செல்வதால், அந்நிய ஆடவர்களுடன் கலந்து விடுவதால், பர்தா முறையை மேற்கொள்ளாமலிருப்பதால் இச்சைகள் தூண்டப்படுகின்றன, தவறுக்கான காரண காரியங்களை எளிதாக்கப்படுவதோடு அவற்றை அடைவதும் இலேசாக்கப்படுகின்றன.
அல்லாஹ் கூறுகின்றான் :
''(நபியின் மனைவியர்களே!) நீங்கள் உங்களின் வீடுகளிலேயே தங்கி விடுங்கள். முன்னர் அறியாமைக் காலத்துப் பெண்கள் திரிந்ததைப் போன்று திரிந்து கொண்டிருக்காதீர்கள். (33:33)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மனைவியரிடம் நீங்கள் ஏதாவது ஒன்றைக் கேட்பதாக இருந்தால் திரை மறைவிலிருந்து கேட்டுக் கொள்ளுங்கள்.''(33:53)
ஆண்களும் பெண்களும் கலந்து விடுவதை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்கள் கண்டிப்பாகத் தடை செய்துள்ளார்கள். இன்னும் அப்படி கலந்து விடுவதற்குக் காரணமான அனைத்தையும் - வணக்க வழிபாடுகள் நடைபெறும் இடங்களிலும் கூட தடுத்துள்ளார்கள்.
ஒரு பெண் சில சந்தர்ப்பங்களில் தனது அவசியத் தேவைகளை நிறைவு செய்த கொடுப்பவரில்லாத போது தனது தேவைகளை நிறைவு செய்து கொள்வதற்கும் அல்லது தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் உணவைத் தேடிக் கொள்வதற்காக விற்பதற்கும் வாங்குவதற்கும் அல்லது இது போன்ற அவசியத் தேவைகளுக்காக ஆண்களிருக்கும் இடத்திற்கு போக வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகி விடுகிறாள். இந்தச் சமயத்தில் அவள் மார்க்க வரம்புகளைப் பேணி தனது அலங்காரத்தை வெளிப்படுத்தாமல் இஸ்லாமிய முறைப்படி தன்னை மறைத்துக் கொண்டு வெளியேறி, ஆண்களை விட்டும் நீங்கி, அவர்களுடன் கலந்திடாதவாறு சென்று வருவதில் குற்றமில்லை.
ஒரு பெண் அந்நியருடன் தனித்திருப்பதை இஸ்லாம் தடுத்திருப்பதானது, குடும்பத்தையும் பண்பாட்டையும் பாதுகாப்பதற்கு இஸ்லாம் அமைத்துள்ள சிறந்த வழியாகும்.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்கள் ஒரு பெண் தன்னுடைய கணவன் அல்லது அவள் மணம் முடித்துக் கொள்ள விலக்கப்பட்டவன் இல்லாத போது அந்நிய ஆணுடன் அவள் தனித்திருப்பதை கடுமையாக எச்சரித்துள்ளார்கள். ஏனெனில் நிச்சயமாக ஷைத்தான் உள்ளங்களையும் குணங்களையும் கெடுப்பதற்கு மிகவும் பேராசை உள்ளவனாக இருக்கின்றான்.
இன்னும் மாதவிடாய் மற்றும் பிரசவ இரத்தத் தீட்டு போன்ற சமயங்களில் அவளை வீட்டை விட்டு ஒதுக்கி வைக்கும் பழக்கத்தை இஸ்லாம் அடியோடு மாற்றி அமைத்து, அந்த சமயங்களில் அவர்கள் பேண வேண்டி வழிமுறைகள் என்ன என்ன என்பதை தனிச் சட்டமாகவே இஸ்லாம் பெண்களுக்குத் தொகுத்துத் தந்துள்ளது என்பது மற்ற மதங்களில் இல்லாத, இஸ்லாத்திற்கே உள்ள தனிச்சிறப்பாகும்.
இவ்வளவையும் மதம் என்ற நிலையில் நின்று இஸ்லாம் இந்த மனித சமுதாயத்திற்கு சட்ட திட்டங்களை வகுத்துத் தரவில்லை. மாறாக, அவற்றை ஒரு வாழ்க்கை நெறியாகத் தந்து, இந்த மனித சமுதாயம் இந்தப் பூமியில் அமைதியான முறையில் வாழ்வதற்கும், இயங்குவதற்கும் வழிவகை செய்து கொடுத்துள்ளது என்றிருக்கும் போது, மற்ற மதங்களைப் போலவே இஸ்லாமும் பெண்ணடிமை மார்க்கம் என்று தூற்றுவோர், உண்மையில் தங்களது இதயங்களைச் சுத்தப்படுத்திக் கொண்டு விமர்சனப் பார்வையை வீசுவது நல்லது.
கம்யூனிஸமும், முதலாளித்துவமும் இன்னும் பிற இஸங்களும் மனிதர்களை ஒரு பொருளாதாரப் பிராணியாகவே பார்க்கின்றன. ஆனால் இஸ்லாமோ, இறைவனின் உன்னதப் படைப்பாகவே பார்க்கிறது.

ஆத்திரமும் அவசரமும் கொண்ட ஆண்களே! உங்களைத்தான்!


அவராஅவர் வள்ளலாயிற்றேஅவரால் எத்தனை பள்ளிகள்அல்குர்ஆன் மதரஸாக்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றதுஅவரிடம் கல்வி கற்றவர்கள் நாங்கள்அவர் நடந்தால் புல் கூட சாகாதுஅவர் பல தடவைகள் மக்கா சென்று வந்த ஹாஜியார்;. பொதுப்பணிகளை தம் பணியாக சிரமேற் கொண்டு செய்பவர் என்பது போன்ற வெளித்தோற்றங்கள் மாத்திரமே சமூகத்தின் பார்வைக்குத் தெரிகின்றது.
வீடுகளுக்குள் சிறைச்சாலை அமைத்து மனைவியர்களைக் கொடுமைப்படுத்தும் இம்மகான்களை யாரும்கண்டுகொள்வதாகத் தெரியவில்லை.
மனைவியர்களைத் திருப்திப்படுத்த முடியாத ஆண்மையற்ற பலரும் இந்த வட்டத்திற்குள் உள்ளனர்.உணவுஉடை போன்றவற்றைக் கொடுத்துகொடுக்க வேண்டியதைக் கொடுக்காது கொடுமைப் படுத்துகின்றனர்.
தனது பாலியல் பலவீனத்தை மறைக்க பாதி இரவில் எழுந்து தொழுகையில் ஈடுபடுகின்றனர்இவை அனைத்திற்கும் மத்தியில் மனைவி நியாயம் தேட முற்பட்டால் மடமைப் பெண் என்று முத்திரை குத்தி விடுகின்றனர்.
இன்னும் சிலரைப் பொருத்தவரை; படுக்கையறைக்கு மாத்திரம் சில மணிநேரங்கள் அவர்களுக்கு மனைவிதேவைதான் வெளியில் காண்கின்ற அழகிய பெண்களுக்கு நிகராக அவள் இல்லை என்கின்ற ஒரேகாரணத்திற்காக நடைப்பிணங்களாக அப்பெண்கள் அல்லற்படுகின்றனர்.
அப்பெண்களாகவேநீங்கள் உங்களுக்கு பிடித்தமான ஒருவரைப் பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறினாலும் வெளியில் சமூகம் என்ன நினைக்கும் என்கின்ற ஆதங்கம் (சமூகத்தில் இந்த தெளிவு இன்னும் இருளாகவே உள்ளது). இத்தகையவர்கள்தான் சம்பாதித்திருக்கும் வரட்டுக் கௌரவங்களுக்காக தானும் சிரமப்பட்டு இன்னொருத்தியையும் ஏன் சிரமப்படுத்துகின்றார்கள்.]
பொதுவாகவே மனைவியர்கள்கணவர்களின் சுபாவம்தொழிலின் தன்மைசமூகப் பணிகள்தனிப்பட்ட வேலைகள் என எவ்வளவுதான் புரிந்துணர்வோடு நடக்க முற்பட்டாலும் சில கணவர்கள் தமது அவசரப் புத்தியினால் எடுத்தெறிந்து பேசிவிடுவதுடன்சில நேரங்களில் கைநீட்டியும் விடுகின்றனர்.
பாசம்பரிவால் இணைத்து வைத்திருக்கும் இத்தூய உறவை தமது அற்பமான எண்ணங்களாலும்செயற்பாடுகளாலும் பாழாக்கிவிடும் அதே வேளை மனைவியர்கள் தமக்கு செய்யும் அளப்பரிய பணிகளுக்கு முன்னால் நாம் என்ன செய்கிறோம் என்பதைக் கூட இவர்கள் கவனிப்பதில்லை.
இதில் வேதனைக்குரிய விடயம் யாதெனில்மார்க்க காரணங்களைக் காட்டி கூட மனைவிமார்களின் கடமைகளைச் செய்யத் தவறி விடுகின்றனர்.
''அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சல்மான் ரளியல்லாஹு அன்ஹுஅபூதர்தா ரளியல்லாஹு அன்ஹு ஆகிய இருவரையும் சகோதரர்களாக ஆக்கினார்கள்சல்மான்,அபூதர்தாவைச் சந்திக்கச் சென்றபோது (அபூதர்தாவின் மனைவிஉம்முத் தர்தாவை அழுக்கடைந்த ஆடை அணிந்திருக்கக் கண்டார்உமக்கு என்ன நேர்ந்ததுஎன்று அவரிடம் சல்மான் கேட்டார்.
அதற்கு உம்முத் தர்தா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள்உம் சகோதரர் அபூதர்தாவுக்கு இவ்வுலகில் எந்தத் தேவையுமில்லை என்று விடையளித்தார். (சற்று நேரத்தில்அபூதர்தா ரளியல்லாஹு அன்ஹுவந்து சல்மானுக்காக உணவு தயாரித்தார்சல்மான் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அபூதர்தாவிடம்,உண்பீராகஎன்று கூறினார்.
அதற்கு அபூதர்தா ரளியல்லாஹு அன்ஹுநான் நோன்பு நோற்றிருக்கிறேன் என்றார்சல்மான்ரளியல்லாஹு அன்ஹுநீர் உண்ணாமல் நான் உண்ண மாட்டேன் என்று கூறியதும் அபூதர்தாரளியல்லாஹு அன்ஹு உண்டார்இரவானதும் அபூதர்தா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் நின்று வணங்கத் தயாரானார்கள்அப்போது சல்மான் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள்உறங்குவீராகஎன்று கூறியதும் உறங்கினார்பின்னர் நின்று வணங்கத் தயாரானார்மீண்டும் சல்மான்உறங்குவீராக!என்றார்இரவின் கடைசி நேரம் வந்ததும் சல்மான் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள்இப்போது எழுவீராகஎன்று கூறினார்கள்இருவரும் தொழுதனர்.
பிறகு அபூதர்தாவிடம் சல்மான் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள்நிச்சயமாக உம் இறைவனுக்கு நீர் செய்ய வேண்டிய கடமைகள் இருக்கின்றனஉமக்கு நீர் செய்ய வேண்டிய கடமைகள் இருக்கின்றன.உம் குடும்பத்தாருக்கு நீர் செய்ய வேண்டிய கடமைகள் இருக்கின்றனஅவரவருக்குரிய கடமைகளை நிறைவேற்றுவீராகஎன்று கூறினார்கள்.
பிறகு அபூதர்தா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள்அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து இந்த விஷயத்தைக் கூறினார்கள்அதற்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்சல்மான் உண்மையையே கூறினார்என்றார்கள்.’ (அறிவிப்பவர்அபூஜுஹைபா ரளியல்லாஹு அன்ஹுநூல்ஸஹீஹுல் புகாரி-1968)
அபூதர்தா ரளியல்லாஹு அன்ஹுசல்மான் ரளியல்லாஹு அன்ஹு ஆகிய இருவரும் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் சகோதரர்களாக பிணைக்கப்பட்ட இரு நபித்தோழர்கள்.தன்னை அபூதர்தா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் வரவேற்றளவிற்கு அவர்களது மனைவி கவனித்ததாகத் தெரியவில்லை என்பதை உணர்ந்த சல்மான் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் ஏன் இந்தக் கோலம்எனப் பரிதவிக்கின்றார்கள்.
அபூதர்தா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் மனைவியின் கடமைகளை ஒழுங்காக நிறைவேற்றவில்லை என்பதை உணர்ந்து சல்மான் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் எடுத்த முயற்சிகளை அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முழுமையாக சரிகண்டார்கள்.
 எம் சமூகத்தில் அல்குர்ஆன் ஓதுகின்றேன்திக்ர் செய்கின்றேன்தஃலீம் வாசிக்கின்றேன் என்று கூறிக் கொண்டு மனைவியானவள் தனக்கு துணி துவைக்கவும்,உணவு சமைக்கவும்குழந்தைகளை வளர்க்கவும்தான் வழங்கப்பட்டுள்ளாள் என்கின்ற எண்ணத்தில் பல கணவர்கள் முனிவர்களைப் போன்றே இருந்துவிடப் பாரக்கின்றனர்.தனது மனைவி ஒரு துணைவி என்பதை மறந்துஅவளுக்கும் ஆசா பாசங்கள்,எதிர்பார்ப்புக்கள் இருக்கும்தனக்கும் தனது பிள்ளைகளுக்குமாக வீட்டின் நான்கு சுவர்களுக்குள்ளும் கிணற்றுத்தவளை போன்று அடைபட்டுக் கிடக்கின்றாள் என்பதை இவர்கள் கவனத்திற் கொள்வதில்லை.
இத்தகையவர்களுக்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பயணங்கள் செல்லும் போது எந்த மனைவியை கூட்டிச் செல்வது என சீட்டு குலுக்கிப் பார்ப்பார்கள் என்ற ஸுன்னாவெல்லாம் ஞாபகத்தில் வருவதில்லைஆனால்சில மனிதர்களோ இவற்றையெல்லாம் தாண்டி தன் மனைவி ஆன்மா இல்லாதவள் என்கின்ற எண்ணத்தில் இன்னும் ஜாஹிலிய்யத்தில் மிதந்து கொண்டிருக்கின்றனர்எப்போதாவது வாயைத் திறந்து தனக்கு ஏதும் வித்தியாசமான உணவோ,உடையோஉறவினர் வீடுகளுக்கோ அழைத்துச் செல்லுமாறு கேட்டால் எரிமலையாக குமுறுவதைக் காணுகின்றோம்.
குறிப்பாக சில அரச ஊழியர்களிடம் இந்நிலை காணப்படுகின்றதுபடுக்கையறைக்கு மாத்திரம் சில மணிநேரங்கள் அவர்களுக்கு மனைவி தேவைதான் வெளியில் காண்கின்ற அழகிய பெண்களுக்கு நிகராக அவள் இல்லை என்கின்ற ஒரே காரணத்திற்காக நடைப்பிணங்களாக அப்பெண்கள் அல்லற்படுகின்றனர்அப்பெண்களாகவேநீங்கள் உங்களுக்கு பிடித்தமான ஒருவரைப் பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறினாலும் வெளியில் சமூகம் என்ன நினைக்கும் என்கின்ற ஆதங்கம் (சமூகத்தில் இந்த தெளிவு இன்னும் இருளாகவே உள்ளது). இத்தகையவர்கள்தான் சம்பாதித்திருக்கும் வரட்டுக் கௌரவங்களுக்காக தானும் சிரமப்பட்டு இன்னொருத்தியையும் ஏன் சிரமப்படுத்துகின்றார்கள்.
வீடுகளுக்குள் சிறைச்சாலை அமைத்து மனைவியர்களைக் கொடுமைப்படுத்தும் இம்மகான்களை யாரும் கண்டுகொள்வதாகத் தெரியவில்லைஅவராஅவர் வள்ளலாயிற்றேஅவரால் எத்தனை பள்ளிகள்,அல்குர்ஆன் மதரஸாக்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றதுஅவரிடம் கல்வி கற்றவர்கள் நாங்கள்,அவர் நடந்தால் புல் கூட சாகாதுஅவர் பல தடவைகள் மக்கா சென்று வந்த ஹாஜியார்;.பொதுப்பணிகளை தம் பணியாக சிரமேற் கொண்டு செய்பவர் என்பது போன்ற வெளித்தோற்றங்கள் மாத்திரமே சமூகத்தின் பார்வைக்குத் தெரிகின்றது. (இவ்வாறான மனைவிகள் விடயத்தில் பல காழிகள் கூட கண்விழிக்காதிருக்கின்றனர்.) நபித்தோழர் ஸல்மான் ரளியல்லாஹு அன்ஹு போன்று அவர்களது வீடுகளுக்கு சென்று பார்த்தால் உண்மை நிலை புலப்படும்.
 மனைவியர்களைத் திருப்திப்படுத்த முடியாத ஆண்மையற்ற பலரும் இந்த வட்டத்திற்குள் உள்ளனர்உணவுஉடை போன்றவற்றைக் கொடுத்துகொடுக்க வேண்டியதைக் கொடுக்காது கொடுமைப் படுத்துகின்றனர்தனது பாலியல் பலவீனத்தை மறைக்க பாதி இரவில் எழுந்து தொழுகையில் ஈடுபடுகின்றனர்இவை அனைத்திற்கும் மத்தியில் மனைவி நியாயம் தேட முற்பட்டால் மடமைப் பெண் என்று முத்திரை குத்தி விடுகின்றனர்.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஸாபித் ரளியல்லாஹு அன்ஹுஅவர்களது மனைவி சாடையாகக் கூறியதைப் புரிந்து கொண்டு அவர்களின் திருமண பந்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து தீர்ப்பு வழங்கியதை பின்வரும் நபிமொழி மூலம் அறிந்து கொள்ளலாம்.
''ஸாபித் பின் கைஸ் பின் ஷம்மாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் துணைவியார் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்துஅல்லாஹ்வின் தூதரே! (என் கணவர்)ஸாபித் பின் கைஸின் குணத்தையோமார்க்கப் பற்றையோ நான் குறை கூறவில்லைஆனால்நான் இஸ்லாத்தில் இருந்து கொண்டே இறை நிராகரிப்புக்குரிய செயலைச் செய்து விடுவேனோ என்று அஞ்சுகிறேன் என்று கூறினார்அப்போது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்கள் ஸாபித் உனக்கு (மணக்கொடையாகஅளித்த தோட்டத்தை நீ அவருக்கே திருப்பித் தந்துவிடுகிறாயாஎன்று கேட்டார்கள்அவர் ஆம் (தந்துவிடுகிறேன்)என்று கூறினார்.அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (ஸாபித் அவர்களிடம்), தோட்டத்தை ஏற்றுக் கொண்டு அவளை ஒரு முறை தலாக் சொல்லி விடுங்கள் என்று கூறினார்கள்.’ (அறிவிப்பவர்இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹுநூல்ஸஹீஹுல் புஹாரி-5273)
எமது சமுதாயத்தில் காணப்படுகின்ற மற்றொரு ஜாஹிலிய்யத்துதான் இரண்டாம்,மூன்றாம் திருமணம் செய்ய வசதியும்ஆளுமையுமுள்ளவர்கள் அதற்காக முன்வருவதை வித்தியாசமாகப் பார்ப்பதும்விமர்சிப்பது மாகும்இதனால்தான் முதல் மனைவியில் பூரண திருப்தி யடையாத கணவன்முதலாவது மனைவி இருக்க இரண்டாவது திருமணம் செய்தால் சமூகம் வித்தியாசமான கோணத்தில் பார்க்கும் என நினைக்கின்றான். (மார்க்கமில்லாத மனிதர்களின் இன்றைய நிலை இதுதான்)எனவேஎவ்வழியிலாவது இல்லாததுபொல்லாததை எல்லாம் இட்டுக் கட்டி விபச்சாரி என்று கூறி அயலவர்களையும் நம்ப வைக்க முற்படுகின்றான்.
மாப்பிள்ளைமார்களைப் பெற்றெடுத்த தாய்மார்களும்உடன் பிறந்த சகோதரிகளும் கூட ஒரு பெண் என்ற வகையில் அம்மனைவிகளின் வலிகளைப் புரிந்து கொள்ள தயாரில்லை.
திருமண உடன்படிக்கையின் போது அரபு மொழியில் (நன்மை கிடைக்கும் என்கின்ற தவறான எண்ணத்தில்எனும் அல்குர்ஆன் வசனம் உள்ளடங்கலாக மந்திரம் சொல்லிக் கொடுக்கும் மார்க்க அறிஞர்கள் அவ்வசனத்தின்படி வாழ்கின்றானாஎன்பதையாவது கொஞ்சம் சந்திக்கின்ற இடத்தில் கேட்டறிந்து கொள்ள வேண்டும்சும்மாவது அவளிடம் எப்படி நடக்கின்றான் உன் கணவன் என்று கேட்க வேண்டும்.
மௌலவி SLM நஷ்மல், பலாஹி