திங்கள், அக்டோபர் 24, 2011

இஸ்லாமியரான உங்களுக்கு எதிர்ப்பு வரவில்லையா?தொப்பி அணிவது இஸ்லாத்தின் அடையாளம் அல்லது இஸ்லாமியச் சின்னம் என்றெண்ணி,

தொப்பி அணியாமல் நபி (ஸல்) வழியைப்  பின்பற்றி தொழும் சகோதரர்களை  துன்புறுத்தும் மூடர்கள் / பசுந்தோல் போர்த்திய புலிகள் / கயவர்கள்,

இந்த மூடனை, தொப்பி அணிந்து, முஸ்லிம் பெயர் வைத்துக் கொண்டு படைத்த இறைவனுக்கு இணை வைக்கும் இந்த இழியவனை என்ன செய்யப்போகிறார்கள்??
 
 28.09.11    மற்றவை
டத்தில் குடும்பத்துடன் இருக்கும் இஸ்லாமியர் அமானுல்லா, வடலூர் வள்ளலார் ராமலிங்க அடிகளாருக்கு கோயில் கட்டி, வணங்கி வருகிறார் என்றால் நம்ப முடிகிறதா?  ஆனால் அதுதான் உண்மை. அன்றாடம் பூஜையும், அன்னதானமும் வழங்கி வருவதால் ஏரியா முழுக்க வள்ளலார் நாமம் வரிசை கட்டுகிறது.
‘‘எனக்கு திண்டுக்கல் மாவட்டம் பள்ளப்பட்டி சொந்த ஊர். வறுமை காரணமாக, குடும்பம் சென்னைக்குக் குடியேறியது. இங்கே வந்தும், பெரிதாக வளர்ச்சி இல்லை.  ஃபோட்டோகிராபராக வேலை செய்தேன். அன் றாடம் வயிற்றுப் பாடு கழிந்தது.  திருமணம் முடிந்த பின்னரும் நிலைமையில் முன்னேற்றமில்லை. அப்பதான் ஏழு மலைங்கிறவர் வள்ளலார் ராமலிங்க அடிகளார் பற்றிச் சொன்னார். அவரோடு ஒருமுறை வடலூர் போய்ட்டு வந்தேன். என்னுள் ஏதோ ஒரு மாற்றம். வாழ்க்கையில் அ துவரை அனுபவித்து வந்த துன்பங்கள் ஒவ்வொண்ணா விலகற மாதிரியான உணர்வு. ஆச்சரியம். எனக்கு அரசுப் பணியும் கிடைத்தது. அன்று முதல் வள்ளலார்  பக்தனாக மாறிவிட்டேன்!’’ என்று நெகிழ்ந்தபடி சொல்லும் அமானுல்லா, சென்னை மாநகராட்சியில் தற்போது ஒப்பந்த ஊழியராக  பணியாற்றி வருகிறார்.  வியாழக்கிழமைகளில் பிரதான பூஜைகள் செய்வது, சொற்பொழிவாளர்களை அழைத்துக் கூட்டம் போடுவது என அமர்க்களப்படுத்தவும் அமானுல்லா தவறுவதில்லை.

இஸ்லாமியரான உங்களுக்கு எதிர்ப்பு வரவில்லையா?

‘‘துவக்கத்தில் உள்ளூர் ஜமாத்திலிருந்து (முஸ்லிம் கூட்டமைப்பு) எதிர்ப்பு வந்தது. ‘உருவ வழிபாட்டை இஸ்லாம் ஏற்பதில்லை. கடவுளுக்கு இணை வைப்பதும், அவனைத்  தவிர வேறு யாரையும் வணங்குவதும் கூடாது. இறைவனே மிகப் பெரியவன்; அருளாளன்!’ என்றெல்லாம் சொல்லி, எதிர்ப்புத் தெரிவித்தார்கள். ஆனால்  வள்ளலார் மனி தனாக வாழ்ந்து மறைந்தாலும், ஜோதி வடிவில் மட்டுமே காட்சி தருகிறார். அதனை தரிசிப்பதும், புகழைச் சொல்வதும், வணங்குவதும் தவறில்லை என எனது கருத்தை  எடுத்துச் சொன்னேன். ஏற்றுக் கொண்டார்கள்!’’ என்று சிரித்தபடியே சொல்லும் அமானுல்லாவுக்கு மனைவி ஜாஸ்மின், பாத்திமா, ஆஷிகா என்று இரு மகள்கள்.  அவர்களும் குரல் உயர்த்திப் பாடி, கரம் குவித்து ஜோதியை வணங்குவது அற்புதம்..

பெண் நறுமணத்துடன் வெளியேறுதல்
பெண்கள்வீட்டை விட்டு வெளியேறும் போது நறுமணம் பூசுவதையும் நறுமணத்துடன் ஆண்களை கடந்து செல்வதையும் மார்க்கம் தடுக்கிறது. இப்பழக்கம் இக்காலத்தில் பல்கிப்பெருகியுள்ளது. இதனை நபி(ஸல்)அவர்கள் மிகக் கடுமையாக எச்சரித்துள்ளார்கள்.

நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள்: யாரேனும் ஒரு பெண் நறுமணம் பூசிக் கொண்டு அதன் வாசனையை பிறர் நுகர வேண்டும் என்பதற்காக ஒரு கூட்டத்தனரை கடந்து சென்றால் நிச்சயமாக அவள் விபச்சாரியாவாள். (அறிவிப்பவர்: அபூமூஸா(ரலி) நூல்: அஹமத்)

வாகன ஓட்டுனர்நடத்துனர்கடைக்காரர்பள்ளிக் கூடங்களின் வாயில் காவலர்கள் ஆகியோரின் விஷயத்தில் சில பெண்கள் மிகவும் அலட்சியமாக நடந்து கொள்கின்றனர். இதனை மார்க்கம் கடுமையாக எச்சரிக்கிறது. நறுமணம் பூசிய பெண் வெளியே செல்ல நினைத்தால் -அது பள்ளிவாயிலுக்கு தொழச் செல்வதானாலும் சரியே- கடமையான குளிப்புபோல் குளித்து அவ்வாசனையைப் போக்கி விட்டுத்தான் வெளியே செல்ல வேண்டும்.

நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள்: யாரேனும் ஒரு பெண் நறுமணம் பூசிபள்ளிக்கு வந்தால் அவளிடம் நறுமணம் வீசினால் கடமையான குளிப்பு போன்று குளிக்கும் வரை அவளுடைய தொழுகை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்: அஹமத்)

திருமணங்களிலும் பெண்களின் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளப்புறப்படும் பெண்கள் நறுமணங்களும் சந்தனப் புகையும் இட்டுக் கொண்டுதான் வீட்டை விட்டு வெளியேறுகின்றனர். மனதை ஈர்க்கும் நறுமணங்களை பூசிக் கொண்டு கடை வீதிகளிலும்வாகனங்களிலும்ஆண்பெண் இருபாலரும் கலக்கும் இடங்களிலும் உலாவருகின்றனர். அல்லாஹ்தான் இப்பெண்களுக்கு நேர்வழி காட்டவேண்டும்!
வெளி இடத்திற்கு செல்லும் பெண்கள் நிறம் வெளிப்படையாக தெரியக் கூடியஅதே சமயம் அதிக மணமற்ற நறுமணங்களை மட்டுமே பயன்படுத்த பெண்களுக்கு மார்க்கம் அனுமதிக்கிறது.
யா அல்லாஹ்! எங்களை நீ தண்டித்து விடாதே! மடத்தனமாக நடந்து கொள்ளும் ஆண்களும் பெண்களும் செய்யும் பாவத்தின் காரணமாக நற்பண்புள்ள ஆண்களையும் பெண்களையும் நீ -உனது தண்டணையால்- பிடித்துவிடாதே! எங்கள் அனைவருக்கும் உனது நேரான பாதையைக் காட்டுவாயாக!

ஞாயிறு, அக்டோபர் 23, 2011

குர்பானியின் சட்டங்கள்

இஸ்லாத்தின் இரண்டு பெருநாட்களான நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரு பெருநாட்களும் இரண்டு விதமான தர்மங்களை அடிப்படையாக கொண்டவை. நோன்புப் பெருநாள் தினத்தில் 'சதகத்துல் ஃபித்ர்' என்னும் தர்மம் கடமையாக்கப்பட்டு இருப்பது போல் ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் 'உள்கிய்யா' எனும் குர்பானி கடமையாக்கப்பட்டுள்ளது. ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவற்றை இறைவனுக்காக அறுத்துப் பலியிடுவது தான் குர்பானி எனப்படுகிறது. இந்தக் குர்பானியின் சட்டங்களைப் பற்றி பார்ப்போம்.
Print


குர்பானி கொடுக்கும் நாட்கள்

E-mail
குர்பானி கொடுக்க கடமைப்பட்டவர்கள் பெருநாள் தினத்தில் பெருநாள் தொழுகை முடிந்த பிறகுதான் கொடுக்க வேண்டும். தொழுகைக்கு முன்னால் கொடுத்தால் அது குர்பானியாக ஆகாது என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கால நிர்ணயம் செய்துள்ளார்கள்.


நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்  ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் தொழுகைக்குப் பின் உரை நிகழ்த்தினார்கள். அவ்வுரையிலேயே யார் இத்தொழுகையை நிறைவேற்றி விட்டு குர்பானி கொடுக்கிறாரோ அவர் தான் அக்கடமையை நிறைவேற்றியவர் ஆவார். யார் தொழுகைக்கு முன்னால் அறுக்கிறாரோ அவர் அக்கடமையை நிறைவேற்றியவர் ஆகமாட்டார் என குறிப்பிட்டார்கள்.அறிவிவப்பவர் பரா ரளியல்லாஹு அன்ஹுநுல் புகாரி (955,5556)

இந்த ஹதீஸிலிருந்து குர்பானியின் ஆரம்ப நேரம் பெருநாள் தொழுகை நிறைவேற்றியதில் இருந்து தொடங்குகிறது. என்பதை அறிந்து கொள்ளலாம்.
ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் மட்டுமின்றி ஹஜ்ஜுப் பெருநாளை தொடர்ந்து வரக்கூடிய 11,12,13 ஆகிய நாட்களும் குர்பானி கொடுப்பதற்கு ஏற்ற நாட்களாகும். (பார்க்க நூல்:அஹ்மத்-6151)
பெருநாள் தினத்தில் கொக்காதவர்கள் அதைத் தொடர்ந்து வரும் 3 நாட்களிலும் இந்தக் குர்பானியை கொடுத்துக் கொள்ளலாம்.
அறுக்கும் முறை
குர்பானி பிராணியை அறுக்கும் போது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிஸ்மில்லாஹி வல்லாஹு அக்பர் எனக் கூறி அறுத்து இருக்கிறார்கள். கால்கள், வயிறு, முகம் ஆகியவை கறுப்பாக அமைந்து உள்ள கொம்புள்ள ஓர் ஆட்டை வாங்குமாறு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கட்டளை இட்டார்கள். வாங்கி வரப்பட்டவுடன் ஆயிஷாவே கத்தியை எடுத்து வா என்றார்கள். பின்னர் அதைக் கல்லிலே தீட்டி கூர்மையாக்கு என்றார்கள். நான் அவ்வாறே செய்தேன். கத்தியை எடுத்துக் கொண்டு ஆட்டைப் பிடித்து அதைப் படுக்கையில் கிடத்தி அறுத்தார்கள். அப்போது பிஸ்மில்லாஹ் என்று கூறிவிட்டு இவை இதை முஹம்மதிடம் இருந்தும் முஹம்மதின் குடும்பத்தாரிடம் இருந்தும் முஹம்மதின் சமுதாயத்திடமிருந்தும் ஏற்றுக் கொள்வாயாக எனக் கூறினார்கள். அறிவிப்பவர் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா நுல் முஸ்லிம் (3637)முஸ்லிம் நூலில் மற்றொரு அறிவிப்பில் ''பிஸ்மில்லாஹி வல்லாஹு அக்பர்'' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிஸ்மில்லாஹ்வும், தக்பீரும் கூறியதாக புகாரியில் இடம் பெற்றுள்ளது. எனவே அறுப்பவர்கள் பிஸ்மில்லாஹி வல்லாஹு அக்பார் எனக் கூறி அறுக்க வேண்டும். அத்துடன் அறுக்கும் போது கத்தியைக் கூர்மையாக்கிக் கொள்ள வேண்டும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் எவ்வாறு குர்பானி கொடுக்கப்பட்டு வந்தது? என்று அபூ அய்யூப் ரளியல்லாஹு அன்ஹுஅவர்களிடம் நான் கேட்டேன். அதற்கவர்கள் ஒருவர் தமக்கும் தமது குடும்பத்திற்கும் சேர்த்து ஒரு ஆட்டையே குர்பானி கொடுப்பார். தாமும் சாப்பிட்டு மற்றவர்களுக்கும் சாப்பிடக் கொடுப்பார். இன்று மக்கள் பெருமையடிப்பதற்காக நீர் காணக் கூடிய நிலை ஏற்பட்டு விட்டது என்று விடையளித்தார்கள். அறிவிப்பவர் அதா பின் யஸார், நுல் திர்மிதி 1425, இப்னுமாஜா (3137) முஅத்தா (921)
எனவே ஒருவர் தமக்காகவும் தமது குடும்பத்திற்காகவும் சேர்த்து ஒரு ஆட்டை குர்பானி கொடுத்தால் அவரது கடமை நீங்கிவிடும் என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம். அதே சமயம் ஒன்றுக்கு மேல் கொடுக்கக்கூடாது என்பதற்கு தடையேதும் இல்லை. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நுறு ஒட்டகங்களை குர்பானி கொடுத்துள்ளார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நுறு ஒட்டகங்களை குர்பானி கொடுத்தார்கள். அப்போது அவற்றின் இறைச்சிகைளைப் பங்கிடுமாறு எனக்குக் கட்டளையிட்டார்கள். அவ்வாறே நான அவற்றைப் பங்கிட்டேன். பின்பு அவற்றின் சேனங்களைப் பங்கிடுமாறு எனக்குக் கட்டளையிட்டார்கள். அவ்வாறே நான் பங்கிட்டேன். பிறகு அவற்றின் தோல்களைப் பங்கிடுமாறு எனக்குக் கட்டளையிட்டார்கள். அவ்வாறே நான் அவற்றைப் பங்கிட்டேன். அறிவிப்பவர் அலீ ரளியல்லாஹு அன்ஹுநூல்: புகாரி (1718)
ஒட்டகம், மாட்டுக்குரிய குர்பானி
மாட்டையோ ஒட்டகத்தையோ குர்பானி கொடுக்க விரும்பினால் 7 பேர் சேர்ந்து ஒரு மாட்டையோ அல்லது ஓர் ஓட்டகத்தையோ குர்பானி கொடுக்கலாம். ஒரு மாடு அல்லது ஓர் ஓட்டகம் 7 ஆடுகளுக்குச் சமமாக இஸ்லாத்தில் கருதப்படுகிறது.நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹுதைபிய்யா உடன்படிக்கை ஏற்பட்ட ஆண்டில் 7 பேர் சார்பாக ஓர் ஒட்டகத்தையும் 7 பேர் சார்பாக ஒரு மாட்டையும் குர்பானி கொடுக்கச் செய்தனர். அறிவிப்பவர் ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹுநூல்: முஸ்லிம் (2323)
எனவே ஆட்டைத் தான் குர்பானி கொடுக்க வேண்டும் என்று கருதாமல் விரும்பினால் 7 பேர் சேர்ந்து ஒரு மாட்டை குர்பானி கொடுக்கலாம். ஆட்டை குர்பானி கொடுத்தவர்களுக்குக் கிடைக்கும் நன்மையில் சிறிதும் இவர்களுக்குக் குறையாது என்பதை இந்த ஹதீஸில் இருந்து நாம் அறிந்து கொள்ளலாம்
விநியோகம் செய்தல்
குர்பானி கொடுக்கப்பட்ட இறைச்சியை 3 நாட்களுக்கு மேல் சேமித்து வைக்கக் கூடாது என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆரம்பத்தில் கட்டளையிட்டிருந்தார்கள். ஆரம்ப காலத்தில் முஸ்லிம்களிடம் நிலவிய வறுமை விலகி செழிப்பான நிலை ஏற்பட்ட பொழுது நீங்கள் உண்ணுங்கள் வேண்டுமென அளவு சேமித்து வைத்துக் கொள்ளுங்கள் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் அனுமதி அளித்தார்கள். இது புகாரியில் இடம் பெற்றுள்ளது.
எனவே குர்பானி கொடுப்பவர்கள் ஏழைகளுக்குக் கொடுத்துவிட்டு தேவையான அளவுக்கு சேமித்து வைத்துக் கொள்ளலாம். பிற ஊர்களுக்கு எடுத்துச் செல்லலாம் என்பதை இந்த ஹதீஸிலிருந்து நாம் அறிந்து கொள்கிறோம்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குர்பானி கொடுத்த ஒட்டகத்தின் இறைச்சியைப் பங்கிட்டுக் கொடுக்கும் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தர்கள், அதனுடைய இறைச்சி தோல் ஆகியவற்றை எல்லாம் விநியோகிக்குமாறு உத்தரவிட்டார்கள். ஆட்டை உரித்து அறுத்து பங்கிடக்கூடியவருக்குக் கூலியாக அந்த இறைச்சியையோ தோலையோ கொடுக்கக்கூடாது எனவும் கட்டளை இட்டார்கள். அறிவிப்பவர் அலீ, நூல்: புகாரி. (1717)
இந்த ஹதீஸில் இருந்து அறுப்பவர்களுக்கு உரிப்பவர்களுக்கு தனியாகத் தான் கூலி கொடுக்க வேண்டுமே தவிர குர்பானி எந்த ஒரு பகுதியையும் கூலி என்ற அடிப்படையில் கொடுக்கக் கூடாது என்பதை அறிந்து கொள்ளலாம்.
குர்பானி கொடுக்கக் கூடியவர்கள் யாருக்கும் அதன் இறைச்சியை வழங்காமல் தாமே வைத்துக் கொள்ளலாம் என்று கூறுகின்றனர். இது திருக்குர்ஆனின் க்டளைக்கு முரணானதாகும். அல்ஹஜ் 28வது வசனத்தில் அவற்றை நீங்களும் உண்ணுங்கள் வறிய ஏழைகளுக்கும் வழங்குகள் என்று அல்லாஹ் கட்டளையிடுகிறான்.
எவ்வளவு உண்ணலாம் எவ்வளவு வழங்கலாம் என்ற வரம்பு எதுவும் நிர்ணயிக்கப்படாவிட்டாலும் இறைவனுக்கு பயந்து நியாயமான முறையில் நமக்கு தேவையான அளவு மட்டும் நாம் எடுத்துக் கொண்டு எஞ்சியவற்றை ஏழைகளுக்கு வழங்க வேண்டும்.
சில இடங்களில் குர்பானி இறைச்சியை பங்குகளாக வைத்து ஒரு பங்கு தங்களுக்கும் இன்னொரு பங்கு உறவினர்களுக்கும் மற்றொரு பங்கு ஏழைகளுக்கும் கொடுக்கும் வழக்கம் இருந்து வருகிறது. இதற்கு நபி வழயில் எந்த ஆதாரமும் இல்லை.
குர்பானிப் பிராணிகளின் தன்மைகள்
நான்கு குறைகள் உள்ளவை குர்பானிக்கு ஏற்றவையவல்ல. வெளிப்படையாகத் தெரியக்கூடிய குருட்டுத் தன்மை. வெளிப்படையாகத் தெரியக்கூடிய நோய், வெளிப்படையாகத் தெரியக்கூடிய ஊனம். கொம்பு முறிந்தது ஆகியவற்றைக் குர்பானி கொடுக்கக் கூடாது என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் கூறினார்கள்.
அல்லாஹ்வின் துதரே கொம்பில் ஒரு குறை பல்லில் ஒரு குறை இருப்பதால் அதைக் கொடுக்க நான் விரும்பவில்லை என்று கூறினேன். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் 'உனக்கு எது விருப்பமில்லையோ அதை விட்டுவிடு மற்றவருக்கு அதை ஹராமாக்கி விடாதே' என்று கூறினார்கள். அறிவிப்பவர் பரா ரளியல்லாஹு அன்ஹுநூல்: நஸயீ (4293)
இந்த ஹதீஸின் அடிப்படையில் வெளிப்படையாகத் தெரிக் கூடிய பெரிய குறைபாடுகள் இருந்தால் தவிர்த்துக் கொள்ள வேண்டும். அற்பமான குறைகள் இருந்தால் அதையும் தவிர்க்க விரும்புவோர் தவிர்க்கலாம். கட்டாயமாகத் தவிர்க்க வேண்டியதில்லை என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
குர்பானிப் பிராணியின் வயது
ஆடு, மாடு ஒட்டகம் ஆகிய முன்று பிராணிகளைத் தான் குர்பானி கொடுக்க வேண்டும் என்பதை முன்னர் நாம் அறிந்தோம். குர்பானிக்காகத் தேர்வு செய்யப்படும் பிராணிகள் குறிப்பிட்ட வயதை அடைந்திருக்க வேண்டும் என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நிர்ணயம் செய்துள்ளனர்.
நீங்கள் முஸின்னத் (இரண்டு வயதுடையது) தவிர வேறெதனையும் (குர்பானிக்காக) அறுக்காதீர்கள். உங்களுக்குச் சிரமமாக இருந்தால் தவிர அவ்வாறு சிரமமாக இருந்தால் வெள்ளாட்டில் ஜத்அத் (பல்விழும் பருவத்தில் உள்ள) தை அறுங்கள் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பபவர் ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம் (3631)
குர்பானி கொடுப்பவர் செய்யக்கூடாதவை ஒருவர் குர்பானி கொடுப்பதற்காக முடிவு செய்துவிட்டால் அவர் துல்ஹஜ் மாதத்தின் முதல் பிறை கண்டது முதல் குர்பானி கொடுக்கும் வரை நகம் வெட்டக் கூடாது. முடிகளை நீக்கக் கூடாது என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கட்டளையிட்டார்கள். அறிவிப்பவர் உம்மு ஸலமா ரளியல்லாஹு அன்ஹா, நூல்: நஸயீ (4285)
நாமே அறுக்க வேண்டும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதீனாவில் குர்பானி கொடுத்த போதுதமது கையால் தாமே அறுத்து இருக்கிறார்கள் என்று புகாரி முஸ்லிம் உட்பட பல நுல்களிலும் இடம் பெற்று உள்ளது. எனவே அறுக்கும் முறை தெரிந்தவர்கள் மற்றவர்களை வைத்து அறுக்காமல் தாமே அறுத்துக் கொள்வதே சிறந்ததாகும்.
தொழுகைக்கு முன் குர்பான் கொடுத்தால் கூடாது
பராஃ ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார்கள்; ''நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹஜ்ஜுப் பெருநாள்தினத்தில் தொழுகைக்குப் பின் எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். (அவ்வுரையில்) 'நம்முடைய தொழுகையைத் தொழுது, (அதன் பிறகு) நாம் குர்பானி கொடுப்பதுபோன்று கொடுக்கிறவரே 'உண்மையில் குர்பானி கொடுத்தவராவார். தொழுகைக்கு முன்பே அறுத்து விடுகிறவர் தொழுகைக்கு முன் (தமக்காக) அறுத்தவராவார். குர்பானி கொடுத்தவரல்லர்." என்று குறிப்பிட்டார்கள்.
அப்போது அபூ புர்தா இப்னு நியார் ரளியல்லாஹு அன்ஹு'இறைத்தூதர் அவர்களே! இன்றைய தினம் உண்ணுவதற்கும் பருகுவதற்கும் உரிய தினமாகும் என்று விளங்கி நான் தொழுகைக்கு முன்பே என் ஆட்டை அறுத்து விட்டேன். என் வீட்டில் அறுக்கப்படும் ஆடுகளில் என்னுடைய ஆடே முதன் முதலில் அறுக்கப்படுவதாக அமைய வேண்டும் என்றும் விரும்பி அறுத்து விட்டேன். எனவே நான் தொழுகைக்கு வருவதற்கு முன்பே என் ஆட்டை அறுத்து (அதையே) காலை உணவாகவும் உட்கொண்டேன்" என்றார்.
அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் 'உம்முடைய ஆடு மாமிசத்திற்காக அறுக்கப்பட்ட ஆடாகத்தான் கருதப்படும்" என்று கூறினார்கள். அப்போது அவர் 'இறைத்தூதர் அவர்களே! என்னிடம் ஓராண்டு நிறையாத ஆட்டுக்குட்டிகள் உள்ளன. எங்களிடம் இரண்டு ஆடுகளை விட விருப்பமாக ஆறு மாதம் நிரம்பிய ஆட்டுக் குட்டி ஒன்று உள்ளது. அதை அறுப்பது எனக்குப் போதுமா? என்று கேட்டார். 'ஆம்! இனிமேல் உம்மைத் தவிர வேறு எவருக்கும் அது பொருந்தாது" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் விடையளித்தார்கள் (புகாரி 955) அனஸ்
ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார்கள்;''நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதீனாவில் நான்கு ரக்அத்கள் லுஹர் தொழு(வித்)தார்கள். துல்ஹுலைஃபாவில் இரண்டு ரக்அத்கள் அஸர் தொழுதுவிட்டு அங்கேயே இரவு தங்கினார்கள். காலை விடிந்ததும் தம் வாகனத்தில் ஏறிக் கொண்டு 'லா இலாஹ இல்லல்லாஹ்'வும் 'ஸுப்ஹானல்லாஹ்'வும் கூறிக் கொண்டே சென்றார்கள். பைதா என்னுமிடத்தைச் சென்றடைந்ததும் ஹஜ் - உம்ராவுக்காக தல்பியா கூறலானார்கள். மக்காவை அடைந்ததும் இஹ்ராமிலிருந்து விடுபடுமாறு மக்களுக்குக் கட்டளையிட்டார்கள். மேலும், நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களின் கையாலேயே ஏழு ஒட்டகங்களை நிற்க வைத்து அறுத்து பலியிட்டார்கள். (பெருநாளில்) பெரிய கொம்புகளையுடைய கருப்புநிறம் கலந்த வெள்ளைநிற ஆடுகள் இரண்டை மதீனாவில் குர்பானி கொடுத்தார்கள்'' இது பற்றி குரான் வசணங்கள் இல்லை எனவும் கூறுகிறார்.

அரஃபா தினத்தன்று நோன்பு
இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார்கள்; ''நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்மதீனா வந்தபோது யூதர்கள் ஆஷுரா நாளில் நோன்பு நோற்றதைக் கண்டார்கள். 'இது என்ன நாள்?' என்று கேட்டார்கள். யூதர்கள் 'இது நல்ல நாள், இஸ்ரவேலர்களை அவர்களின் எதிரிகளிடமிருந்து அல்லாஹ் காப்பாற்றிய நாள்; இதற்காக மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நோன்பு நோற்றார்கள்' என்று கூறினார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், 'உங்களைவிட மூஸாவுக்கு அதிக உரிமை படைத்தவன் நான்" என்று கூறிவிட்டுத் தாமும் நோன்பு நோற்று, நோன்பு நோற்குமாறு (மக்களுக்குக்) கட்டளையும் இட்டார்கள்'' (புகாரி 2004)

துல் ஹஜ் மாதத்தின் முந்திய பத்து நாட்களின் சிறப்புகளும் உழ்ஹிய்யாவின் சட்டங்களும்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களும் மிக சிறப்புக்குரிய நாட்களாகும் ஆகவே இந்த நாட்களில் செய்யும் நல் அமல்களை தெரிந்து நாமும் அமல் செய்து அல்லாஹ்வின் அருட்கொடைகளை பெற்றவர்களாகுவோமாக.
சிறப்புகள்1- துல் ஹஜ் மாத முதல் பத்து நாட்களில் செய்யக்கூடிய நல் அமல்களுக்கு ஈடாக வேறு எந்த நாட்களில் செய்யும் நல் அமல்களும் அல்லாஹ்வுக்கு மிகப்பிரியமானவைகளாக இல்லை என நபி (ஸல்) அவர்கள் கூறியபோது அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்வதை விடவுமா? என நபித்தோழர்கள் கேட்டார்கள். அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்வதை விடவும்தான் ஆனால் அல்லாஹ்வின் பாதையில் பொருளையும் உயிரையும் அர்ப்பணித்து வீரமரணம் அடைந்தவரைத் தவிர என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஆதாரம் : புகாரி
2- நாட்களில் மிகச்சிறந்த நாள் அரஃபாவுடைய நாள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஆதாரம் : ஸஹீஹ் இப்னு ஹிப்பான்
சிறப்பான இந்த நாட்களில் செய்யும் அமல்கள்1- ஹஜ் உம்ரா:- ஒரு உம்ரா மற்ற உம்ராவுக்கு இடைப்பட்ட பாவங்களுக்கு பரிகாரமாகும் மேலும் ஏற்றுக்கொள்ப்பட்ட ஹஜ்ஜுக்குரிய கூலி சுவர்க்கத்தைத்தவிர வேறு எதுவும் இல்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஆதாரம் – புகாரி முஸ்லிம்
2-உபரியான தொழுகைகள் நோன்புகள் தர்மங்கள் உறவினர்களுக்கு உதவுவது குர்ஆன் ஓதுவது பாவமன்னிப்பு தேடுவது நன்மையை ஏவுவது தீமையை தடுப்பது போன்ற நல் அமல்களில் ஈடுபடுவது.
குறிப்பு:- துல் ஹஜ் மாதத்தின் பத்தாம் நாளாகிய பெருநாளன்று நோன்பு நோற்பது தடை செய்யப்பட்டுள்ளது.
ஆதாரம் – புகாரிமுஸ்லிம்
3- அரஃபா நோன்பு :- அரஃபா நோன்பு (நோற்பவருக்காக) அந்த நாளுக்கு முந்திய வருடத்தின் பாவங்களையும் அதற்கு பின்னுள்ள வருடத்தின் பாவங்களையும் அல்லாஹ் மன்னிப்பான் என நான் நம்புகின்றேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஆதாரம்-முஸ்லிம்
குறிப்பு:- அரஃபா நோன்பை ஹாஜிகள் நோற்க்கக்கூடாது ஹஜ் செய்யாதவர்கள் இந்த நோன்பை நோற்பது மிகவும் சிறந்தது.
அரஃபா தினத்தன்று அரஃபாவில் தங்கியிருந்த நபி (ஸல்) அவர்கள் தன்னிடம் கொண்டுவந்த பாலை அருந்தி தான் நோன்பு நோற்கவில்லை என்பதை மக்களுக்கு அறிவித்திருக்கின்றார்கள்.
ஆதாரம் புகாரி முஸ்லிம்
4- தக்பீர் கூறுவது:- கடமையான தொழுகைகளுக்குப் பின்னரும் பள்ளிவாசல் வீடு கடைவீதி போன்ற எல்லா இடங்களிலும் தக்பீர் கூறுவதுதுல் ஹஜ் மாத முதல் பத்து நாட்களில் செய்யக்கூடிய நல் அமல்களுக்கு ஈடாக வேறு எந்த நாட்களில் செய்யும் நல் அமல்களும் அல்லாஹ்வுக்கு மிகப்பிரியமானவைகளாக இல்லை. ஆகவே லாஇலாஹா இல்லல்லாஹ் அல்லாஹ{ அக்பர் அல்ஹம்து லில்லாஹ் போன்ற திக்ருகளை அதிகமாக செய்யுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஆதாரம் : அஹ்மத்
இப்னு உமர் (ரலி) அபூஹுரைரா (ரலி) ஆகிய இரு நபித்தோழர்களும்துல்ஹஜ் (மாதம் ஆரம்ப) பத்து தினங்களிலும் கடைவீதிகளுக்கு செல்லும் போதெல்லாம் தக்பீர் கூறுவார்கள் இவ்விருவரும் கூறுவதை கேட்கின்ற மற்ற மக்களும் தக்பீர் கூறுவார்கள்.
ஆதாரம் – புகாரி
பெருநாளைக்காக கூறக்கூடிய தக்பீரை அரஃபா நாளின் ஸுப்ஹு தொழுகையிலிருந்து பிறை 13ம் நாள் அஸ்ர் தொழுகை வரைக்கும் கூறுவது.
5- ஹஜ் பெருநாள் தொழுகை இன்னும் குத்பா பிரசங்கத்தில் கலந்து கொள்வது
நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜுப்பெருநாளிலும் கன்னிப்பெண்கள் மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்கள் (உட்பட) முஸ்லிம்களின் பிரார்த்தனைகளிலும் நல்ல அமல்களிலும் கலந்து கொள்ள வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு கட்டளையிட்டார்கள். மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்கள் தொழுகையில் கலந்து கொள்ளாமல் தொழுகை நடக்கும் பகுதிக்கு வெளியே இருந்து கொள்ள வேண்டும் என்றார்கள்.
ஆதாரம் :- புகாரி முஸ்லிம்
6- உழ்ஹிய்யா:- உழ்ஹிய்யா என்பது ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகைக்கு பின் இறை திருப்தியை நாடி அறுக்கப்படும் பிராணிக்கு சொல்லப்படும் இது நபியவர்கள் வலியுறுத்திய சுன்னத்தாகும்.
கொம்புள்ள கறுப்பு நிறம் கலந்த இரண்டு வெள்ளை நிற ஆடுகளை நபி (ஸல்) அவர்கள் உழ்ஹிய்யாவாக கொடுத்தார்கள் அப்போது பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர் என்று கூறி அவ்விரண்டின் ஒரு பக்கத்தின் மீது தனது காலை வைத்து கையால் அறுத்தார்கள்.
ஆதாரம் – புகாரி
உழ்ஹிய்யா கொடுப்பதற்கு தகுதியான பிராணிகள்
- ஆடு. மாடு ஒட்டகம் (புகாரி)
- ஒரு குடும்பத்திற்கு ஒரு ஆடு போதுமாகும் – (திர்மிதி)
- மாட்டிலும் ஒட்டகத்திலும் ஏழு பேர்கள் பங்கு கொள்ளலாம் – (திர்மிதி)
உழ்ஹிய்யாவிற்கான கால் நடைகளில் கீழ்க்கண்ட குறைகள் இருக்கக்கூடாது:
கண் குறுடு கடுமையான நோயானவை மிகவும் மெலிந்தவை நொண்டியானவை அங்கங்கள் குறையுள்ளவை.
நேரம்ஹஜ்ஜுப்பெருநாள் தொழுகைக்கு பின் அறுக்க வேண்டும்யார் தொழுகைக்கு முன் அறுக்கின்றாரோ அது உழ்ஹிய்யாவாக ஆகாது அவர் தன் குடும்பத்தின் தேவைக்காக அறுத்ததாகவே கணக்கிடப்படும்.யார் தொழுகைக்கு முன் அறுக்கின்றாரோ அவர் இன்னும் ஒரு முறை குர்பாணி கொடுக்கட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஆதாரம் – புகாரி, முஸ்லிம்
யார் (பெருநாள்) தொழுகைக்கு முன் அறுக்கின்றாரோ அது அவரின் குடும்பத்தேவைக்காக அறுத்ததாக கணக்கிட்டுக்கொள்ளட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
அறுக்கும் முறை
- ஆடு மாடுகளை படுக்கவைத்து ஒருக்கணித்து அறுக்க வேண்டும் (முஸ்லிம்)
- ஒட்டகத்தை நிற்கவைத்து அறுபடும் நரம்புகள் வெட்டப்படும் அளவுக்கு அறுக்கும் கருவியால் கீறிவிடவேண்டும். (முஸ்லிம்)
- அறுக்கும் போது பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர் என்று கூற வேண்டும். (புகாரி)
உழ்ஹிய்யா கொடுக்கப்பட்ட பிராணிகளை பயன்படுத்தும் முறைஉழ்ஹிய்யா கொடுக்கப்பட்ட பிராணிகளின் முடிகளையோ தோல்களையோ மாமிசங்களையோ அறுத்தவருக்கு கூலியாக கொடுக்கக்கூடாது.குர்பானி கொடுப்பதற்கான ஒட்டகங்களை மேற்பார்வை செய்வதற்கு என்னை நபி (ஸல்) அவர்கள் நியமித்தார்கள் அவைகளின் மாமிசம் தோல் ஆகியவற்றை தர்மமாகவே கொடுக்க வேண்டும் என்றும் அவற்றில் எதையும் அறுப்பவருக்கு கூலியாக கொடுக்கக்கூடாது என்றும் கூறினார்கள் அறுப்பதற்குரிய கூலியை நாங்கள் தனியாகவே கொடுப்போம் என அலி (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
ஆதாரம்:- புகாரி, முஸ்லிம்
உழ்ஹிய்யா கொடுப்பவர் செய்யக் கூடாதவைகள்துல் ஹஜ் மாதம் பிறந்ததும் உழ்ஹிய்யா கொடுக்க நாடியவர் தன்னுடைய முடி மற்றும் நகத்திலிருந்து எதையும் அகற்றக்கூடாது என நபி (ஸல்) அவர்கள் தடைசெய்தார்கள்.
ஆதாரம்:- முஸ்லிம்
குறிப்பு:- இத்தடை உழ்ஹிய்யா கொடுப்பவருக்கு மாத்திரம்தான் அவரின் குடும்பத்தினருக்கு அல்ல.

உழ்ஹிய்யா


முன்னுரை

அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும், ஸலவாத்தும் ஸலாமும் இறுதித்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும் அவரைப் பின்பற்றியோர், பின்பற்றுவோர் அனைவர் மீதும் மறுமை நாள் வரை நிலவட்டுமாக.
முஸ்லிம்களின் கடைசி மாதமான துல்ஹஜ் பிறை பத்தில் பெருநாள் தினத்தன்று நிறைவேற்றப்படும் மிகவும் முக்கியமான, இறைவனின் விருப்பத்திற்குரிய வணக்கமாகிய உழ்ஹிய்யா தொடர்பாக எமது சகோதரர்களுக்கு விளக்கமளிக்கும் விதத்தில் தொகுப்பதற்கு உதவிய எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்.
இஸ்லாத்தின் அடிப்படை ஆதாரங்களுக்கு முரணான செய்திகள் இதில் இருப்பின் அதிலிருந்து நான் முன்கூட்டியே விலகிவிட்டேன் என்பதையும், அவ்வாறான செய்திகளைக் காணும் சகோதரர்கள் அதை சுட்டிக்காட்டினால் அவர்களுக்கு என்றும் நன்றியுடையவனாய் இருப்பேன்.
மொழி வழக்கில் உழ்ஹிய்யா என்பது சூரியன் உதயமாகி அது உயர்வடைந்துள்ள நேரத்தைக் குறிக்கும். இஸ்லாமிய வழக்கில்உழ்ஹிய்யாஎன்பது, “சில நிபந்தனைகளுடன் குறித்த ஒரு தினத்தில் இறைவனின் நெருக்கத்தைப் பெறும் நோக்கில் அறுக்கப்படும் குறிப்பிட்ட வயதையுடைய ஒரு பிராணிக்குச் சொல்லப்படும் பெயராகும்.” என்று அறிஞர்கள் வரைவிலக்கணப்படுத்தியுள்ளார்கள்.
உழ்ஹிய்யாவின் முக்கியத்துவமும், சிறப்பும்
இறைவனின் கட்டளைப்படி இப்றாஹீம் (அலை) அவர்கள் தன் அன்பு மகன் இஸ்மாயீலை அறுக்க முனைந்தபோது அல்லாஹ் அதற்குப் பதிலாக சுவர்க்கத்திலிருந்து ஒரு ஆட்டை இறக்கி அதை அறுக்குமாறு சொன்னான். இந்த சோதனையில், இறைவனுக்கு முழுமையாக கட்டுப்பட்டு நடப்பவர் இப்றாஹீம் (அலை) என்பது தெளிவாக நிரூபிக்கப்பட்டது.
இதனை நினைவூட்டும் வகையில் அமையப்பெற்ற முக்கியமான வணக்கங்களில் ஒன்றே உழ்ஹிய்யாவாகும். அதாவது இறைவனின் கட்டளையை நிறைவேற்றுவதற்காக i’த்தானிய சக்திகளுக்கு அடிபணியமாட்டேன், இஸ்லாத்திற்காக எனது உடல் பொருள், சொந்தங்கள் அனைத்தையும் இழக்கத் தயார், மற்றவர்களுடன் இதற்காக போராடவும், இப்றாஹீம் (அலை) அவர்களைப் போன்று எந்த சவாலையும் ஏற்றுக்கொண்டு எல்லாச் சந்தர்ப்பங்களிலும் ஒரு ஏகத்துவவாதியாக வாழவும் நான் தயார் எனும் உணர்வை உருவாக்கும் உன்னத வணக்கம் இது என்பதால் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது. எல்லோரும் உண்டு கழித்து உற்சாகமாகவும் சந்தோசமாகவும் இருக்கும் ஹஜ்ஜூப் பெருநாள், மற்றும் அதை அடுத்துவரும் தினங்களில் தன் குடும்பத்தாரையும் ஏனைய ஏழைகளையும் சந்தோசப்படுத்தி அவர்களின் உணவுத் தேவையை பூர்த்தி செய்யும் மிகச் சிறந்த வணக்கமாகவும், ஈகைப் பண்பை உருவாக்குவதாகவும், இறைவனுக்கு மிகவும் விருப்பத்திற்குரிய ஒரு செயலாகவும் காணப்
படுகின்றது.
“யாருக்கு வசதி இருந்தும் அவர் உழ்ஹிய்யா கொடுக்கவில்லையோ அவர் நாங்கள் தொழும் திடலை நெருங்க வேண்டாம்.” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (இப்னு மாஜா, ஹாகிம்)

உழ்ஹிய்யா கொடுப்பவர்:

உழ்ஹிய்யா கொடுப்பவர் வெறும் மாமிசத்தைப் பங்கிடுவதை மாத்திரம் தனது இலக்காக் கொள்ளாமல் பின்வரும் விடயங்களை கவனத்திற் கொள்வது கடமையாகும்.
01. இஹ்லாஸ் (மனத்தூய்மை):
உழ்ஹிய்யா கொடுப்பவர்களின் புகழும், அவர் நல்லவர் என்ற எண்ணமும் சமுதாயத்தில்வளர்வது இயல்பானது. ஆனால், அதை அவர் எதிர்பார்க்கக்கூடாது. இறைவனின் திருப்தியை மட்டும் இலக்காக்கொண்டு அவனுக்காக என்ற கலப்பற்ற தூய்மையான எண்ணத்துடன் அதை நிறைவேற்றல் வேண்டும். இவ்வாறு செய்வதாலேயே இஸ்லாம் காட்டித் தந்த கடமையை நிறைவேற்றியவராக அவர் மாறமுடியும். மற்றவர்களின் புகழுக்காகவும் பெயருக்காகவும் செய்துவிட்டு இறைவனிடம் கூலியை எதிர்பார்ப்பது எந்த
வகையிலும் நியாயமானதல்ல.
“உமது இரட்சகனுக்காகவே தொழுது அவனுக்காகவே அறுத்துப் பலியிடுவீராக.” (108:02)
“(இவ்வாறு குர்பானி செய்யப்பட்ட) வற்றின் மாமிசங்களோ அல்லது அவற்றின் இரத்தங்களோ அல்லாஹ்வை ஒருபோதும் அடைந்து விடுவதில்லை, எனினும் உங்களிலுள்ள பயபக்திதான் அவனை அடையும்.” (22:37)
இறைவன் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: “யார் எனக்காக ஒரு அமலைச் செய்து பிறருக்கும் அதில் பங்கு கொடுக்கிறானோ அவனையும் அவன் செய்த அமலையும் நான் விட்டு விடுகிறேன்.” (முஸ்லிம்)
“நான் உங்களிடத்தில் மிகவும் அதிகமாக அஞ்சுவது சிறிய இணைவைப்பைத்தான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியபோது, சிறிய இணைவைப்பு என்றால் என்ன என்று ஸஹாபாக்கள் கேட்டார்கள். அதற்கு நபியவர்கள்: முகஸ்துதி என்று பதிலளித்தார்கள். இவ்வாறு முகஸ்துதிக்காக செயற்பட்டவர்களை நாளை மறுமையில் அல்லாஹ்: யாருக்கு காட்டுவதற்காக அவர்கள் அமல் செய்தார்களோ அவர்களிடமே செல்லுமாறும், அவர்களிடம் கூலி கிடைக்கிறதா என்று பார்க்குமாறும் கூறுவான்.” (அஹ்மத், பைஹகீ)
02. நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றுதல்:
எமது எல்லா வணக்க வழிபாடுகளிலும் இஹ்லாஸ், நபியின் வழிமுறை என்ற இரண்டு விடயங்களும் கவனத்திற் கொள்ளப்பட வேண்டும். இவை கவனிக்கப்படும் வணக்க வழிபாடுகள் மட்டுமே இறைவனால் ஏற்றுக் கொள்ளப்படுகின்றது. அந்த வகையில் உழ்;ஹிய்யாவை நிறைவேற்ற விரும்பும் ஒருவர் நபியவர்கள் காட்டிய விதத்திலேயே தனது உழ்ஹிய்யாவும், ஏனைய விடயங்களும் அமைய வேண்டும் என்பதற்காக முயற்சி செய்ய வேண்டும். இறைவன் அவனது கட்டளைகளை அவனது தூதர் மூலமே கற்பிக்கிறான் அவரிடமிருந்து நாம் அவைகளைப் பெற்றுக் கொள்ளாமல், இஸ்லாமிய கடமையை நிறைவேற்றி விட்டதாகவும் கூலி கிடைக்கும் என்றும் நினைப்பது, புத்திஜீவிகளின் முடிவாக இருக்காது.
“உங்களுடைய தூதர் உங்களுக்கு எதைக் கொண்டு வந்தாரோ அதை எடுத்துக் கொள்ளுங்கள், எதை விட்டும் உங்களைத் தடுத்தாரோ அதைத் தவிர்ந்து கொள்ளுங்கள்.” (59: 07)
03. முடி, நகம் களைதல் கூடாது:
உழ்ஹிய்யா கொடுக்க நினைக்கும் ஒருவர் துல்ஹஜ் பிறை கண்டதிலிருந்து தனது நகம், முடி என்பவற்றை களைதல் கூடாது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “உழ்ஹிய்யா கொடுப்பதற்கு யாராவது விரும்பினால் துல்ஹஜ் பிறை கண்டதிலிருந்து பிறை பத்து (பெருநாள் தினம்) வரை தன் முடி, நகங்களை அகற்றாமலிருக்கட்டும்.” (முஸ்லிம், அஹ்மத்)
இதிலிருந்து உழ்ஹிய்யா கொடுக்க நினைப்பவர் மாத்திரமே நகம், முடி ஆகியவற்றை அகற்றக்கூடாது என்பதும், அவர் யாருக்காக உழ்ஹிய்யா கொடுக்கிறாரோ அவர்கள் இதைப் பின்பற்றத் தேவையில்லை என்பதும் தெளிவாகின்றது.
04. நல்ல்ல வார்த்தை பேசுதல்:
உழ்ஹிய்யா கொடுப்பவர்களின் வீடு தேடி வரும் ஏழைகளுடன் நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டும். அவர்களை நச்சரிப்பதோ, நாம் கொடுத்தவற்றை சொல்லிக்காட்டி அவர்களை சிறுமைப்படுத்துவதோ நம் அமலை வீணாக்கிவிடும் செயல்களாகும். எனவே அதில் கவனமாக இருக்க வேண்டும், எப்போதும் நல்ல வார்த்தைகள் பேச பழகிக்கொள்ள வேண்டும்.
“தர்மம் செய்துவிட்டு (அதற்காக) துன்புறுத்துவதை விட நல்ல வார்த்தையும், மன்னிப்பும் (அல்லாஹ்விடத்தில்) மிகவும் சிறந்தவையாகும். இன்னும் அல்லாஹ் (தன்
படைப்புகளை விட்டும்) தேவை அற்றவன், மிகவும் சகிப்புத் தன்மை உடையவன்.”(2: 263)

உழ்ஹிய்யா கொடுக்கப்படும் பிராணி :

உழ்ஹிய்யா கொடுக்கப்படும் பிராணியில் கவனிக்கப்படவேண்டிய நிபந்தனைகளை மூன்று வகையாக பிரித்து நோக்கலாம்.
01.பிராணிகளில் ஆடு, மாடு, ஒட்டகம் மட்டுமே உழ்ஹிய்யாவுக்கு தகுதியானதாகும்:
இதில் எந்த அறிஞரும் கருத்து முரண்பாடு கொள்ளவில்லை. எருமை மாட்டின் ஒரு வகையாக இருப்பதனால் அதையும் கொடுக்க முடியும் என்று அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். எனவே இவை அல்லாதவைகளை நாம் கொடுக்க முடியாது. இதை விரிவாக வாசிக்க விரும்புவோர் அல்குர்ஆனில் 5:01,95ஃ 06:142,143ஃ 22:28 போன்ற இடங்களில் அவதானிக்கலாம்.
02. குறித்த வயதை அடைந்திருத்தல்:
ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவற்றில் நாம் நினைப்பவற்றையெல்லாம் கொடுத்துவிட முடியாது, அவற்றில் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு வயது சொல்லப்பட்டுள்ளது. ஆவைகளை கவனத்திற் கொள்ள வேண்டும்.
செம்மறியாடு: ஆறு மாதங்கள் பூர்த்தியடைந்தது.வெள்ளாடு: ஒரு வருடம் பூர்த்தியடைந்தது.மாடு: இரு வருடம் பூர்த்தியடைந்திருத்தல்.
ஓட்டகம்: ஐந்து வருடங்கள் பூர்த்தியடைந்திருத்தல்.
03. குறைகளற்றதாக இருத்தல்:
உழ்ஹிய்யா கொடுக்கப்படும் பிராணிகளில் உள்ள குறைகள் பற்றி சொல்லப்படுபவற்றை தெளிவாக விளங்கிக் கொள்வதற்காக அவைகளை மூன்று வகையாகப் பிரித்து நோக்குவோம்.
1. ஹதீஸ்களில் தெளிவாகச்சொல்லப்பட்டுள்ள குறைகள்: இவைகளுள்ள பிராணியை உழ்ஹிய்யாவுக்காக அறுக்க முடியாது. அந்த வகையில் பின்வரும் குறைகளைக் குறிப்பிடலாம்.
தெளிவான குருடு: ஒற்றைக்கண் செயலிழந்து போதல், குருடாக இருத்தல்.
தெளிவான நோய்: அதாவது குறித்த பிராணியின் இறைச்சியை கெடுக்கக்கூடிய அல்லது
அதன் மெலிவுக்கு காரணமான நோய்கள் என்று இமாம் இப்னு குதாமா (ரஹ்) குறிப்பிடுகிறார்கள்.
தெளிவான முடம்.
மிகவும் மெலிந்தது, பலவீனமானது.
“ஒரு முறை எங்களுக்கு மத்தியில் எழுந்த நபியவர்கள்: தெளிவான குருடு, தெளிவான நோய், தெளிவான முடம், தேர முடியாத மெலிவு எனும் நான்கு குறைகளை உடைய பிராணிகளை உழ்ஹிய்யா கொடுக்க முடியாது” என்றார்கள்.(அறிவிப்பவர்: பராஃ பின் ஆஸிப் (ரழி),
நூல்: அபூதாவுத், திர்மிதி, நஸாஈ, இப்னுமாஜாஹ்)
மேலே சொல்லப்பட்ட குறைகளுடன் குருடு, ஆட்டின் பின்புறத்திலுள்ள கொழுப்புடன் கூடிய சதைப்பிண்டம் அகற்றப்பட்டிருத்தல் போன்றவற்றையும் அல்லது அதுபோன்ற நிலையில் உள்ள குறைகளையும், அதைவிடவும் கூடிய நிலையிலுள்ள குறைகளையும் அதனுடன் அறிஞர்கள் சேர்த்துள்ளனர். எனவே இவைகளில் ஏதாவது ஒன்று குறித்த பிராணியில் இருப்பின் அது உழ்ஹிய்யாவிற்கு தகுதியற்றதாகவே கருதப்படும்.
2. இருக்க முடியுமான குறைகள்:
உழ்ஹிய்யா கொடுக்கப்படும் பிராணியில் உள்ள சில குறைகளால் அந்தப் பிராணியைநாம் ஒதுக்கத் தேவையில்லை என்ற நிலையில் உள்ள குறைகளையே இது குறிக்கும்.
பின்வருவனவற்றை அத்தகைய குறைகளாக அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.
நலம் போடப்பட்டவை.அடிப்படையிலேயே கொம்பு இல்லாதது.அடிப்படையிலேயே காது இல்லாதது.சிறிய காதுள்ளது.
சில பற்க்கள் விழுந்த்தவை.
கர்ப்பிணி:
இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: “கர்ப்பிணியாக உள்ள பிராணிகளைக் கொடுக்க முடியும், அதன் குட்டி செத்த நிலையில் வெளியேறினால் அதை அறுக்க வேண்டியதில்லை என்பதே இமாம் ‘ஷாஃபிஈ, அஹ்மத் போன்றவர்களின் கருத்தாகும்’ அது உயிருடன் வெளியேறினால் அதையும் அறுக்க வேண்டும்.” (மஜ்மூஉல் பதாவா)
3. பின்வரும் குறைகள் இருக்கும் பிராணிகளை உழ்ஹிய்யா கொடுக்க முடியுமா, முடியாதா என்பதில் அறிஞர்களுக்கு மத்தியில் கருத்து முரண்பாடு நிலவுகின்றது.
காது முன்புறமாகவோ பின்புறமாகவோ வெட்டப்பட்டது அல்லது துளையிடப்பட்டது அல்லது சிதைக்கப்பட்டது. காது, கொம்பின் அரைப்பகுதி வெட்டப்பட்ட பிராணிகளையும் உழ்ஹிய்யாவுக்காக தேர்வு செய்ய முடியுமா என்பதில் அறிஞர்களிடையே கருத்து முரண்பாடு நிலவுகின்றது. எது எவ்வாறாயினும் உழ்ஹிய்யாவின் முழுமை கருதி இவை போன்றவற்றை தவிர்த்துக்கொள்வது நல்லது.
பொதுவாக, உழ்ஹிய்யாவுக்காக நாம் தெரிவு செய்யும் பிராணிகள் கொழுத்ததாகவும் எல்லா நோய்களை விட்டும் தூரமாகியும் இருப்பதுடன் பார்ப்பதற்கு அழகானதாயும் புசிப்பதற்கு சிறந்ததாகவும் இருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது.
நபி (ஸல்) அவர்கள் “கொம்புகளை உடைய, கறுப்பு வெள்ளை நிறம் கலந்த இரண்டு ஆண் ஆடுகளை உழ்ஹிய்யாவாக கொடுத்தார்கள், தனது கரத்தினால் அறுத்தார்கள், அல்லாஹ்வின் பெயர் சொல்லி தக்புph சொன்னார்கள்.” (புஹாரி, முஸ்லிம்)
மதீனாவில் நாம் கொழுத்த (பிராணிகளை) உழ்ஹிய்யா கொடுத்தோம் முஸ்லிம்களும் அவ்வாறே செய்தார்கள் என்று அபூ உமாமா பின் ஸஹ்ல் அவர்கள் குறிப்பிடுகிறார்கள். (புஹாரி)
உழ்ஹிய்யா கொடுப்பதற்கான நேரம்:
ஹஜ்ஜூப் பெருநாள் தொழுகை என்பது நோன்புப் பெருநாள் தொழுகையை விடவும் சற்று முன்னர் இடம்பெறுகிறது. எனவே தொழுகை முடிந்ததன் பின்பே உழ்ஹிய்யாவுக்காக பிராணிகளை அறுத்தல் வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “யார் தொழுவதற்கு முன்னர் அறுத்தாரோ நிச்சயமாக அவர் தனது (தேவைக்காகவே) அறுத்தார். (அது உழ்ஹிய்யா அல்ல.)தொழுகையும் இரண்டு குத்பாக்களும் முடிந்ததன் பின்பு யார் அறுத்தாரோ அவர் தனது வணக்கத்தைப் பூரணப்படுத்தினார், சுன்னத்தையும் நிறைவேற்றினார்.” (புஹாரி, முஸ்லிம்)
“நாம் தொழும் வரை யார் அறுக்கவில்லையோ அவர்கள் அல்லாஹ்வின் பெயர் சொல்லி அறுக்கட்டும்” என நபியவர்கள் கூறினார்கள். (புஹாரி, முஸ்லிம்)
நபியவர்கள் பெருநாள் தொழுகை முடிந்தபின் கூறினார்கள்: “யார் தொழுவதற்கு முன் அறுத்தாறோ அவர் உழ்ஹிய்யாவுக்காக வேறு ஒன்றை (ஒரு பிராணியை) அறுக்கட்டும்.”  (புஹாரி)
உழ்ஹிய்யா என்பது தொழும் திடலில் தொழுகையை முடித்த பின்பு கூட்டாக நிறைவேற்றப்படுவதே சிறந்ததாகும் அவ்வாறே நபியவர்களின் காலத்தில் நடந்திருக்கிறது.

பிராணியை அறுக்கும் போது:

உழ்ஹிய்யாவுக்காக கொண்டு வரப்படும் பிராணிகள் சாகப்போகிறதுதானே என்பதற்காக நோவினை செய்வதோ, அதற்கு தீனி வழங்காமல் இருப்பதோ நாம் அதற்குச் செய்யும் அநியாயங்களாகும். இறைவன் கூறுகிறான் என்ற ஒரே காரணத்திற்காகவே நாம் அவைகளை அறுத்து புசிக்கவும், மற்றவர்களுக்கு கொடுக்கவும் செய்கிறோம் என்பதை
மனதிலிருத்திக் கொள்ள வேண்டும்.
உழ்ஹிய்யாவுக்காக கொண்டு வரப்பட்டுள்ள பிராணிகளை அறுக்கும்போது பின்வரும் விடயங்களை கவனிக்க வேண்டும்.
01. கத்தியை தீட்டுதல், பிராணியை விட்டும் மறைத்தல்:
“உங்களில் ஒருவர் பிராணியை அறுக்க விரும்பினால் அதற்காகத் தயாராகட்டும், கத்தியை தீட்டிக்கொள்ளட்டும், அறுக்கப்படும் பிராணியை விட்டும் அதை மறைவாக வைக்கட்டும்.” என்று நபி (ஸல்) அவர்கள் ஏவினார்கள். (இப்னு மாஜாஹ், பைஹகீ)
02. உழ்ஹிய்யாவை கொடுப்ப்பவர் அறுப்பது சிறந்தது:
“நபி (ஸல்) அவர்கள்: தான் உழ்ஹிய்யா கொடுக்கும் பிராணிகளை தனது கரத்தினாலேயே அறுக்கக்கூடியவராக இருந்தார்கள்.” என அனஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (இப்னு மாஜா, ஹாகிம்)
இதே செய்தி சில வார்த்தை மாற்றங்களுடன் புஹாரியிலும் பதிவாகியுள்ளது.
பிறரிடம் கொடுத்தும் அறுக்கலாம் ஆனால் அறுப்பவர் முஸ்லிமாக இருக்கின்றாரா? நன்றாக அறுக்கத் தெரிந்தவரா? என்று பார்த்துக்கொள்ள வேண்டும்.
03. அல்லாஹ்-வின் பெயர் சொல்லுதல்.
அல்லாஹ்வின் பெயர் சொல்லி அறுக்கப்படாத எந்த மாமிசமும் உண்பதற்கு தடைசெய்யப்பட்டதாகும். எனவே, பிராணியை அறுக்கும்போது அல்லாஹ்வின் பெயர் சொல்லி அறுக்க வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள்: “கொம்புகளை உடைய, கறுப்பு வெள்ளை நிறம் கலந்த இரு ஆண் ஆடுகளை உழ்ஹிய்யா கொடுத்தார்கள், அவற்றை தனது கரத்தினாலேயே அறுத்தார்கள், அல்லாஹ்வின் பெயர் சொல்லி தக்பீர் சொன்னார்கள்.” (புஹாரி, முஸ்லிம்)
“பிஸ்மில்லாஹி அல்லாஹூ அக்பர்” என்று சொல்லுதல் வேண்டும்.
“பிஸ்மில்லாஹ்” என்று சொன்னாலும் போதுமானது.
04. அறுக்கப்பட்ட பிராணியின் உயிர் முழுமையாகப் பிரியும் வரை ஓய்வாக விடுதல்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “உங்களில் ஒருவர் அறுத்தால் அறுப்பதை நன்றாக அறுக்கட்டும், கத்தியை கூர்மையாக்கிக் கொள்ளட்டும், அறுக்கப்பட்ட பிராணியை ஓய்வெடுக்க விடட்டும்.” (முஸ்லிம்)
பங்கு வைத்தல்.
உழ்ஹிய்யாவுக்காக அறுக்கப்பட்ட பிராணிகளை பங்கு வைக்கும்போது மூன்று பங்குகளாக அதைப்பிரிக்கலாம், தனக்கும் தனது குடும்பத்திற்கும் ஒரு பகுதி மற்ற இரண்டும் வீடு தேடி வராத ஏழைகளுக்கும், கேட்டு வருவோருக்கும் வழங்கப்படுதல் வேண்டும்.
“அ(றுக்கப்பட்ட)வைகளிலிருந்து நீங்களும் புசியுங்கள், கஷ்டப்படும் ஏழைக்கும் உண்ணக்கொடுங்கள்.” (22:18)
“அதிலிருந்து நீங்களும் உண்ணுங்கள், (தேவையுடையோராய் இருந்தும் பிறறிடம்) கேட்காதவர்களுக்கும், அதை யாசிப்போருக்கும் உண்ணக்கொடுங்கள். நீங்கள் நன்றி செலுத்துவதற்காக அவ்வாறு அதனை உங்களுக்கு வசப்படுத்தித் தந்தோம்.” (22:36)
நபியவர்கள் தனது இறுதி ஹஜ்ஜின்போது தான் அறுத்த ஒவ்வொரு பிராணியிலிருந்தும்
ஒவ்வொரு துண்டு வீதம் எடுத்து சமைத்து சாப்பிட்டார்கள்.
பங்குவைக்கும் போது தோல், தலை என்பனவும் பங்கு வைக்கப்படுதல் வேண்டும் அவற்றை அறுத்தவருக்கு கூலியாகக் கொடுப்பதோ, அதை விற்பதோ தடை செய்யப்பட்டுள்ளது.
“யார் உழ்ஹிய்யாப் பிராணியின் தோலை விற்றானோ அவன் உழ்ஹிய்யா கொடுத்தவனாக கருதப்படமாட்டான்.” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (பைஹகி, ஹாகிம்)
நபி (ஸல்) அவர்கள் அலி (ரழி) அவர்களை உழ்ஹிய்யாவுக்காக கொண்டு வரப்பட்ட ஒட்டகத்தை கவனிக்குமாறும் அதை பங்கிடுமாறும், அதன் இறைச்சி, தொழி, அதைப் போர்த்தியிருந்த ஆடை எல்லாவற்றையும் ஏழைகளுக்கு கொடுக்குமாறும் அவற்றில் எதையும் அறுத்தவருக்கு கொடுக்க வேண்டாம் என்றும் ஏவினார்கள். (புஹாரி, முஸ்லிம்)

ஐயமும் தெளிவும்.

01. உழ்ஹிய்யாவின் போது நிய்யத்தை வாயால் மொழிய வேண்டுமா?
இல்லை, நிய்யத் என்பது எண்ணம் அது வாயால் சொல்லப்படுவதில்லை. ஆனால் பிறருக்காக உழ்ஹிய்யா கொடுக்கும் ஒருவர் இறைவா! இதை இன்னாருக்காக ஏற்றுக் கொள்வாயாக என்று சொல்வதில் தப்பில்லை. இது பிரார்த்தனையாகும்.
02. உழ்ஹிய்யாவுக்காக பசு மாடு கொடுக்கலாமா?
மாடு என்ற பொதுப் பெயரில் பசுவும் அடங்குகின்றது. பசுவை கொடுக்கக்கூடாது என்பதற்கான ஆதாரங்கள் எதுவும் இருப்பதாக எமக்குத் தெரியவில்லை. எனவே அதை கொடுப்பதில் தவறில்லை. ஆனால், மிகவும் சிறந்தவற்றை கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் பசுவைத் தவிர்ப்பவரை குறைகாண முடியாது.
03. வயது கூடிய பிராணியை கொடுக்கலாமா?
ஆடு, மாடு, ஒட்டகை போன்ற பிராணிகளுக்கு சொல்லப்பட்டுள்ள வயதை விட குறைந்த வயதை கொடுப்பதே தடை செய்யப்பட்டுள்ளது. குறித்த வயதெல்லையை தாண்டியதை வழங்கலாம். ஆனால் வயது சென்றதால் மிகவும் மெலிந்து காணப்படுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
04. எருமை மாடு கொடுக்கலாமா?
மாடு என்ற வட்டத்தில் எருமை மாடும் அடங்குகின்றது எனவே அதைக்கொடுக்கலாம்
என்று அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.
05. பலர் சேர்ந்து ஒரு பிராணியை கொடுக்கலாமா?
மாடு, ஒட்டகம் இரண்டிலும் ஒரு பிராணிக்கு ஏழு பேர் வீதம் கூட்டுச்சேர்ந்து கொடுக்கலாம்.
“மாடு, ஒட்டகம் இரண்டிலும் ஒரு பிராணிக்கு ஏழு பேர் வீதம் கூட்டுச்சேருமாறு நபியவர்கள் எமக்கு ஏவினார்கள்.” (புஹாரி, முஸ்லிம்)
இவர்கள் குறித்த நபரின் குடும்ப அங்கத்தவர்களாகவும், அல்லது குடும்பமில்லாதவர்களாகவும் இருக்கலாம். ஏனெனில், ஹதீஸ் பொதுவாகவே வந்துள்ளது.
ஆட்டில் கூட்டுச்சேர முடியாது.
06. மற்றவருக்காக நாம் அறுக்கலாமா?
மற்றவரின் பெயரில் நாம் உழ்ஹிய்யாவை நிறைவேற்றலாம், நபி (ஸல்) அவர்கள் தனது மனைவியர்களுக்காக அறுத்துள்ளார்கள். அதுபோல் தனது சமுதாயத்தில் உழ்ஹிய்யாவை நிறைவேற்ற முடியாதவர்களுக்காகவும் அறுத்துள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் இறைவனின் பெயர் சொல்லி ஒரு ஆட்டை அறுத்துவிட்டு இறைவா! இதை முஹம்மதிடமிருந்தும் அவருடைய குடும்பம், அவருடைய சமுதாயத்திடமிருந்தும் ஏற்றுக் கொள்வாயாக என்று பிரார்த்தனை செய்தார்கள். (முஸ்லிம்)
07. தன் வீPட்டில் உள்ளவர்களுக்குமாகச்சேர்த்து ஒருவர் ஒரு பிராணியை உழ்ஹ்ஹிய்ய்யாவாக கொடுக்க்க முடியுமா?
கொடுக்கலாம் நபி (ஸல்) அவர்கள் தனது மனைவியருக்காகவும் தனக்காகவும் ஒரு ஆட்டை உழ்ஹிய்யாவாக கொடுத்துள்ளார்கள்.
08. ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவற்றில் உழ்ஹிய்யாவிற்க்கு மிகவும் சிறந்தது எது?
முதலில் ஒட்டகம் அதையடுத்து மாடு அதற்கடுத்த தரத்தில் ஆடு சிறப்புப் பெருகிறது ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் “ஜும்மாவிற்கு முதலில் வருபவர் ஒரு ஒட்டகம் கொடுத்ததற்கான கூலியை பெருவதாகவும், இரண்டாமவர் ஒரு மாடு கொடுத்ததற்கான கூலியையும் மூன்றாமவர் ஒரு ஆடு கொடுத்ததற்கான கூலியையும் அதற்கடுத்தவர் ஒரு கோழி அவருக்கு பின் வருபவர் ஒரு முட்டையை கொடுத்ததற்கான கூலியை பெருவதாகவும்” குறிப்பிடுகிறார்கள். (புஹாரி)
09. பிறகு பணம் தருவதாகச் சொல்லி இன்னுமொருவரிடம் உழ்ஹிய்யாவை அறுக்கச் சொல்லலாமா?
அவ்வாறு செய்ய முடியும் என்று சவூதி அரேபிய உலமாப்பேரவை தீர்ப்பளித்துள்ளது.
10. மரணித்தவருக்காக உழ்ஹிய்யா கொடுக்கலாமா?
இதில் அறிஞர்களுக்கு மத்தியில் கருத்து முரண்பாடு நிலவுகின்றது.
மரணித்தவர்களுக்காக நாம் தர்மம் செய்ய முடியும், உழ்ஹிய்யாவும் ஒரு தர்மமே எனவே அதை செய்வதில் தப்பில்லை என்று சில அறிஞர்களும், நபியவர்களோ ஸஹாபாக்களோ
இதை செய்யவில்லை எனவே நாமும் செய்ய முடியாது என்று சில அறிஞர்களும் குறி;ப்பிடுகின்றார்கள்.
11.உழ்ஹிய்யாவுக்காக அறுக்கப்பட்ட பிராணியின் எழும்பு;புகளை உடைக்கக்கூடாது என்பது சரியா?
அது தவறான கருத்து.
12. உழ்ஹிய்யாவை அறுத்தவருக்கு கூலியாக அல்லாமல் அந்த உழ்ஹிய்யாவிலிருந்து கொடுப்பது தவறா?
அதை கூலியாகக் கொடுப்பதே தடைசெய்யப்பட்டுள்ளது. ஆனால், அவரை விடவும் தேவையுடையவர்கள் இருப்பின் அவர்களை முற்படுத்த வேண்டும்.
13. உழ்ஹிய்யா இறைச்சியை சேமித்து வைத்து காலம் தாழ்த்தி சாப்பிடலாமா?
ஆரம்பத்தில் உழ்ஹிய்யா இறைச்சியை சேமிப்பது தடைசெய்யப்பட்டிருந்தது. பின்பு நபியவர்கள் அதை மாற்றி சேமித்து வைத்து சாப்பிடுவதற்கு அனுமதி வழங்கினார்கள்.
ஆனால் சமூகத்தில் கஷ்டம் நிலவினால் மற்றவர்களுக்கு பங்குவைப்பதே சிறந்தது.
“(உழ்ஹிய்யாவுக்காக அறுத்தவற்றில் இருந்து) நீங்கள் சாப்பிடுங்கள், பிறருக்கும் உண்ணக் கொடுங்கள், சேமித்து வையுங்கள். அந்த ஆண்டு மனிதர்களுக்கு கஷ்டம் இருந்தது அதனால் அவர்களுக்கு நீங்கள் உதவுவீர்கள் என்று நினைத்தேன்” (அதனாலேயே சேமிப்பதற்கு தடைவிதித்திருந்தேன்.) என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.(புஹாரி, முஸ்லிம்)
14. உழ்ஹிய்யாவுக்காக அறுக்கப்பட்ட பிராணியின் மாமிசத்திலிருந்து மாற்று மத சகோதரர்களுக்கு வழங்க முடியுமா?
மாற்று மத சகோதரர் இஸ்லாத்திற்கு எதிராக போராடாதவராக இருந்தால் கொடுக்கலாம்.
“(விசுவாசிகளே!) மார்க்க (விஷய)த்தில் உங்களுடன் எதிர்த்துப்போரிடாமலும் உங்கள்
இல்லங்களிலிருந்து உங்களை வெளியேற்றாமலும் இருந்தார்களே அத்தகையோருக்கு நீங்கள் நன்மை செய்வதையும், அவர்கள் பால் நீங்கள் நீதமாக நடந்து கொள்வதையும் இறைவன் தடுக்க வில்லை, நிச்சயமாக அல்லாஹ் நீதி செய்வோரை நேசிக்கிறான்.” (60:08)
அதுபோலவே அபூபக்ரின் மகள் அன்னை அஸ்மா (ரழி) அவர்களின் தாய் இனைவைப்பவளாக இருந்தபோதிலும் அவளை சேர்ந்து நடக்குமாறும் பன ரீதியான உதவிகளை செய்யுமாறும் நபியவர்கள் ஏவினார்கள் என்ற செய்தி புஹாரியில் பதிவாகியுள்ளது.
15. உழ்ஹிய்யாவை எதுவரை கொடுக்கலாம்?
ஹஜ்ஜூப் பெருநாள் தினம், அதை அடுத்துவரும் 03 தினங்களிலும் கொடுக்கலாம் என்பதே அதிகமான அறிஞர்களின் கருத்தாகும்.
16. உழ்ஹிய்யாவாக கொடுக்கப்பட்ட பிராணியின் தலை, தோழ், எழும்பு போன்றவற்றை ஒரு இடத்தில் அடக்கம் செய்ய வேண்டுமா?
இவ்வாறு செய்வதனால்தான் நாளை மறுமையில் இவைகள் வரும் என்றொரு மூட நம்பிக்கை எம் சமூகத்திடம் உள்ளது. அதற்கும் இஸ்லாத்திற்கும் எந்தத் தொடர்புமில்லை.