இடுகைகள்

ஏப்ரல், 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மதுவை மறப்போம்! மதுவை ஒழிப்போம்!

“மது தீமைகளின் தாய்” – நபிகள் நாயகம் திருவாரூரைச் சேர்ந்த 9-ஆம் வகுப்பு மாணவன் ஒருவன் தனது இடுப்பில் மறைத்துக்கொண்டு சென்ற பீர் பாட்டில் வெடித்து இறந்திருக்கிறான்! எத்தனை சிறிய வயதிலேயே குடிப்பழக்கம் தொடங்கிவிடுகிறது என்பதற்கான ஒரு சின்ன ஆதாரம் இது! வெறும் 45 மில்லியில் தொடங்கும் மதுப் பழக்கம் தன்னை ஒரு நோயாளியாகவே மாற்றிவிடும் என்பது ஆரம்பக் குடிகாரர்கள் பலருக்குத் தெரிவதில்லை. இந்தக் குடிநோயின் அறிகுறிகள் என்னென்ன? இந்தப் புதைகுழிக்குள் விழாமல் இருப்பது எப்படி? தப்பித்தவறி விழுந்துவிட்டவர்கள் குடியின் ஆக்டோபஸ் பிடியிலிருந்து மீண்டு வருவது எப்படி? குடிநோயிலிருந்து ஒருவர் மீண்டுவர சொந்தமும் நட்பும் எப்படி உதவ முடியும்? அடுக்கடுக்காகப் பிறக்கும் அத்தனை கேள்விகளுக்கும் வல்லுநர்களிடம் விடை உண்டு. ”ஆரம்பத்தில் வெறும் ஆசை, நண்பர்களின் வற்புறுத்தலுக்காக மது அருந்துவார்கள்; பின்பு அதில் தொடர்ந்து  நாட்டம் ஏற்பட்டு குடிக்க ஆரம்பிக்கிறார்கள். நாளடைவில், இன்னும் அதிக அளவில் குடித்தால்தான் போதை ஏற்படும் என்கிற நிலை உருவாகும். எங்கே, எப்படிக் குடிக்கலாம் என்று மதுவைப் பற்றிய சிந்தனைதான் அத

பார்வை – ஒரு பார்வை

قُل لِّلْمُؤْمِنِينَ يَغُضُّوا مِنْ أَبْصَارِهِمْ وَيَحْفَظُوا فُرُوجَهُمْ ذَلِكَ أَزْكَى لَهُمْ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا يَصْنَعُونَ (நபியே!) முஃமின்களான ஆடவர்களுக்கு நீர் கூறுவீராக அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; அது அவர்களுக்கு மிகப் பரிசுத்தமானதாகும்; நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தவன். (24:30) இறைவன் மனிதனின் உடலில் அமைத்திருக்கும் அத்துணை உறுப்புகளும் இன்றியமையாதவைதான். ஆனாலும் அதில் மிக முக்கியமான உறுப்பாக பார்வை பிரதான இடத்தை பெறுகிறது. பார்வையற்ற பல சகோதர, சகோதரிகள் அவர்களின் அன்றாட வாழ்வில் அனுபவிக்கும் வேதனை வார்த்தைகளால் வடிக்க இயலாதவை. வெளிநாடுகளில் வாழும் எம்மில் பெரும்பாலோர், ‘என்ன வாழ்க்கை இது! கட்டிய மனைவி-பிள்ளைகளை பார்க்க முடியவில்லையே என்று வேதனையடைவோரை பார்க்கலாம். ஆனால், பார்வையற்றோர் தன் மனைவி-மக்கள் பெற்றோர்-உற்றார் அருகிலிருந்தும் அவர்களை பார்க்கமுடியாத அவலநிலை. இவ்வாறெல்லாம் பார்வையற்றோரின் நிலையிருக்க, இறைவனின் மாபெரும் அருட்கொடையான பார்வை கிடைக்கப்

மார்க்கப்பணியை அல்லாஹ்விற்காகவே செய்ய முன்வாருங்கள்!இடுகைத் தலைப்பு

1. காலத்தின் மீது சத்தியமாக. 2. நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான். 3. ஆயினும், எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து, சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து, மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர (அவர்கள் நஷ்டத்திலில்லை). (103:1-3) நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்க ளும் ஒருவருக்கொருவர் உற்ற நண்பர்களாக இருக்கின்றனர். அவர்கள் நல்லவற்றை ஏவுகிறார்கள், தீயவற்றை விலக்குகிறார்கள், தொழுகையைக் கடைபிடிக்கிறார்கள். ஜகாத்தை கொடுத்து வருகிறார்கள். அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் அடிபணிகிறார்கள். அவர் களுக்கே அல்லாஹ் கருணை புரிகிறான்…” (9:71) மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமு தாயங்களில்) நீங்கள் சிறந்த சமுதாயமாக இருக் கிறீர்கள். நீங்கள் நல்லவற்றை ஏவுகிறீர்கள்; தீயவற்றை விலக்குகிறீர்கள்; அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கிறீர்கள்…” (3:110) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், தீயதிலிருந்து விலக்குபவர்களாகவும் உங்களில் ஒரு கூட்டம் இருக்கட்டும். அவர்களே வெற்றி பெற்றோர் ஆவர். (3:104) இந்த இறைவாக்குகள் அனைத்தும் இறுதி

இஸ்லாம் கூறும் எளிய திருமணம் என்ன?

’திருமணம்’ என்பது எல்லா மக்களாலும் எல்லா மதத்தினராலும் மகிழ்ச்சிகரமாக நடத்தும் வாழ்வியல் நிகழ்ச்சியாகும். அந்த வைபவத்தை இறைவனும், இறைதூதரும் காட்டிய நெறிமுறையில் செய்யும்போது மனிதன் இம்மை மறுமைப் பேறுகளைப் பெற்று பெருவாழ்வு வாழ்வான். ’திருமணம்’ எனும் நிகழ்ச்சி வெறும் மகிழ்ச்சிக்கே உரிய நிகழ்ச்சியெனக் கருதி கேளிக்கைகளிலும், வீண் விரயங்களிலும் இறங்கி, மார்க்க நெறிகளை மீறிச்சென்று இஸ்லாமிய வரையறைகளைத் தாண்டிச் செல்லும் அவல நிலையை இன்று எங்கெணும் காண முடிகிறது. எனவே, சமுதாயத்தில் வேரூன்றியுள்ள களைகளை பிடுங்கி எறிந்து கண்மூடித்தனமான பழக்கங்களை மண்மூடச் செய்து மாற்றாரும் போற்றும் நமது உயர்ந்த நெறிகளை மக்களுக்கு உணர்த்தி, இஸ்லாம் கூறும் எளிய திருமணம் என்ன? அதை எவ்வாறு நடத்துவது? என விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.  அந்த நல்ல நோக்கம் நிறைவேற வல்லான் இறையை வேண்டுகிறோம்.  இஸ்லாமியத் திருமணத்திற்குத் தேவை  1. சீதனமா? சீர் வரிசைகளா ?  2. சடங்குகளா ? சம்பிரதாயங்களா?  3. ஊர்வலமா? ஊர்திகளா?  4. மேளதாளங்களா? வாத்தியங்களா?  5. பூமாலையா ? பூச்செண்டுகளா?  6. ஆரத்தியா? ஐதீகங்களா?  7. தாலியா? க