இடுகைகள்

ஜூன், 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நயவஞ்சகர்களின் குணங்களும் தண்டனைகளும்,

இனிமையாகப் பழகித் தீங்கு விளைவிப்பதையும் , பழகிக் கெடுக்கும் சூழ்ச்சியையும் செய்பவரை நயவஞ்சகன் என்கிறோம் . அரபி மொழியில் இந்த தீய செயல்கள் உள்ளவர்களை முனாஃபிக் என்று கூறுவர் . இவர்கள் வெளித்தோற்றத்தில் முஸ்லிம்களைப் போன்று நடித்துக் கொண்டு , அந்தரங்கத்தில் மறுப்பாளனாக வாழ்பவர்கள் . நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது காலத்தில் மதீனா நகரில் இத்தகைய நயவஞ்சகர்கள் சிலர் இருந்தனர் . அப்துல்லாஹ் பின் உபை பின் சலூல் என்பவன் அவர்களுக்கு தலைவனாக செயல்பட்டான் . இவன் தலைமையில் பல நயவஞ்சகர்கள் இஸ்லாத்தில் இருப்பதாக கூறி உண்மையான முஸ்லிம்களுக்கும் இஸ்லாத்திற்கும் எதிராக செயல்பட்டு வந்தார்கள் . இவர்களைப் பற்றி திருக்குர்ஆனிலும் நபிமொழிகளிலும் கூறப்பட்ட தகவல்களை இங்கு தொகுத்து தருகிறோம் . இவர்களிடம் இருக்கும் கெட்ட பண்புகள் நம்மிடம் வராமல் இருப்பதற்கும் தீய குணம் கொண்டவர்களை அடையாளம் கண்டுகொள்ளவும் இந்த தகவல்கள் உதவும் . 1.  நம்பிக்கை கொண்டோம் என்று வாயளவில் கூறுவார்கள்   உள்ளத்தில் வன்மத்தை மறைத்துக்கொண்டு ,