இடுகைகள்

ஜூலை, 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நெருப்பிலிருந்து பாதுகாக்கும் தான தர்மங்கள்!

பொருளாசை நிறைந்த இந்த உலகில் ஸதகா கொடுத்தல் என்பது மிக மிக அரிதாகி விட்டது . மனிதன் மரணிக்கும் போது எந்தப் பலனும் தராத செல்வத்தை அல்லாஹ்வின் பாதையில் செலவழிப்பதை விட சேர்த்து வைப்பதில் தான் அதிக அக்கரை எடுத்துக் கொள்கிறான் . அல்லாஹ்விடத்தில் நன்மையை அடைய பல வழிகள் உள்ளன . அவற்றில் முக்கியமான ஒன்றை அல்லாஹ் தனது திருமறையில் ,   لَن تَنَالُوا الْبِرَّ حَتَّىٰ تُنفِقُوا مِمَّا تُحِبُّونَ ۚ وَمَا تُنفِقُوا مِن شَيْءٍ فَإِنَّ اللَّهَ بِهِ عَلِيمٌ                 “ நீங்கள் விரும்பும் பொருள்களிலில் இருந்து செலவு செய்யாதவரை அல்லாஹ்விடத்தில் நன்மையை அடைய முடியாது ” ( அல் - குர்ஆன் 3:92 ) என்று கூறுகிறான் . இந்த உலகத்தில் மனிதன் விரும்பும் பிரதான பொருள் செல்வம் . எனவே செல்வத்தை அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யாதவரை நன்மையை அடைய முடியாது என்பதை அறிந்துக் கொள்ள வேண்டும . மறுமை நாளில் ஏதாவது ஒரு சிறிய நன்மை இருந்தால் போதுமே ! அதைக் கொண்டு நரகத்தில் இருந்து தப்பித்துக் கொள்ளலாமே என ஆதங்கப்படுவான் . முஹம்மது ( ஸல