இடுகைகள்

அக்டோபர், 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வதைக்கும் விவாகரத்து வழக்குகள்

மௌலவி ,  அ .  முஹம்மத   கான்   பாகவி செ ன்னை   உயர் நீதிமன்ற   வளாகத்தில்   நான்கு   குடும்ப   நல   நீதிமன்றங்கள்   செயல்படுகின்றன . இவற்றில்  2013  ஆகஸ்டுவரை  15,324  குடும்ப   வழக்குகள்   நிலுவையில்   உள்ளன . விவாகரத்து ,  ஜீவனாம்சம் ,  குழந்தைகள்மீதான   உரிமை ,  மீண்டும்   சேர்ந்துவாழ   விருப்பம் ஆகிய   வழக்குகள்   ஆயிரக்கணக்கில்   தேங்கிக்கிடக்கின்றன . இதில்   நம்மை   வதைக்கின்ற   வேதனை   என்னவென்றால் , 2003 ஆம்   ஆண்டு   விவாகரத்து   வழக்குகளின் எண்ணிக்கை  2,570 ஆக   இருந்தது .  இது  2012 ஆம்   ஆண்டு  4,770 ஆக   உயர்ந்தது . 2013  செப்டம்பர்வரை மட்டுமே  3,500 ஆக   இவ்வழக்குகள்   உள்ளன . இவ்வாறு   இரு   மடங்காக ,  மும்மடங்காக   விவாகரத்து   வழக்குகளின்   எண்ணிக்கை   பெருகிக்கொண்டே செல்கிறது .  இந்த   எண்ணிக்கை   நீதிமன்றத்திற்கு   வந்த   வழக்குகள்   மட்டுமே !  நீதிமன்றம்வரை   வராமல் சுமுகமாக   முடிக்கப்படும்   விவாகரத்துகள் ,  பஞ்சாயத்துகளில் ,  அல்லது   ஜமாஅத்துகளில்   நடக்கும் விவாகரத்துகள்   முதலானவற்றைக்   கணக்கிட்டால் ,  பல்லாயிரக்கணக்கில்   இருக்