இடுகைகள்

அக்டோபர், 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இஸ்லாம் கூறும் எளிய திருமணம் extra

  திருமணம்’ என்பது எல்லா மக்களாலும் எல்லா மதத்தினராலும் மகிழ்ச்சிகரமாக நடத்தும் வாழ்வியல் நிகழ்ச்சியாகும். அந்த வைபவத்தை இறைவனும், இறைதூதரும் காட்டிய நெறிமுறையில் செய்யும்போது மனிதன் இம்மை மறுமைப் பேறுகளைப் பெற்று பெருவாழ்வு வாழ்வான். ’திருமணம்’ எனும் நிகழ்ச்சி வெறும் மகிழ்ச்சிக்கே உரிய நிகழ்ச்சியெனக் கருதி கேளிக்கைகளிலும், வீண் விரயங்களிலும் இறங்கி, மார்க்க நெறிகளை மீறிச்சென்று இஸ்லாமிய வரையறைகளைத் தாண்டிச் செல்லும் அவல நிலையை இன்று எங்கெணும் காண முடிகிறது. எனவே, சமுதாயத்தில் வேரூன்றியுள்ள களைகளை பிடுங்கி எறிந்து கண்மூடித்தனமான பழக்கங்களை மண்மூடச் செய்து மாற்றாரும் போற்றும் நமது உயர்ந்த நெறிகளை மக்களுக்கு உணர்த்தி, இஸ்லாம் கூறும் எளிய திருமணம் என்ன? அதை எவ்வாறு நடத்துவது? என விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும். அந்த நல்ல நோக்கம் நிறைவேற வல்லான் இறையை வேண்டுகிறோம்.   இஸ்லாமியத் திருமணத்திற்குத் தேவை   1. சீதனமா? சீர் வரிசைகளா ?   2. சடங்குகளா ? சம்பிரதாயங்களா?   3. ஊர்வலமா? ஊர்திகளா?   4. மேளதாளங்களா? வாத்தியங்களா?   5. பூமாலையா ? பூச்செண்டுகளா?   6. ஆரத்தியா? ஐதீகங்களா

இஸ்லாத்தில் ஹராமானஉணவு

              இறைவன், மனிதனது பிரயோசனத்திற்காக இயற்கையான சூழலையும் எல்லா விலங்குகளையும் கனிவர்க்கங்களையும் தாவரங்களையும் ஆக்கியுள்ளான். ஏனெனில், அவைகளின் மூலம் உண்டு, பருகி, உடுத்து உறங்கி, ஏனைய தேவைகளையும் பூர்த்தி செய்வதற்காகவே. ஆனால், மனிதனுடைய உயிரையும் உடல் ஆரோக்கியத்தையும் பேணுவதற்காக வேண்டியும் தனது பரம்பரையை பாதுகாத்துக் கொள்வதற்காக வேண்டியும் ஏனைய மனிதர்களின் உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்வதற்காக வேண்டியும் சில சட்டதிட்டங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.   தானாகவே செத்ததும், இரத்தமும், பன்றியின் மாமிசமும், அல்லாஹ் அல்லாத பெயர் சொல்லப்பட்டதும் ஆகியவைகளைத்தான் உங்கள் மீது ஹராமாக ஆக்கியிருக்கிறான்; ஆனால் எவரேனும் பாவம் செய்யாத நிலையில் - வரம்பு மீறாமல் (இவற்றை உண்ண) நிர்ப்பந்திக்கப்பட்டால் அவர் மீது குற்றமில்லை; நிச்சயமாக அல்லாஹ் கருணைமிக்கோனும், மன்னிப்பவனுமாக இருக்கின்றான். திருக் குர்ஆன்-2:173) -                                                                                                 அல்லாஹ்வின் பெயர் கூறி (உங்களுக்கு அனுமதிக்கப்பட்டவற்றில்) அறுக்கப்பட்டதை நீங்கள் சாப்பிடாமல