இடுகைகள்

டிசம்பர், 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பேஷாவர் தாக்குதல் சொல்லி விட்டு செல்லும் அரசியல் -

திருமுருகன் காந்தியின் கட்டூரை !! தன் குழந்தையை இழக்கும் சோகம் எந்த பெற்றோருக்கும் வரக்கூடாது. தாலிபன்களின் இந்த காட்டுமிராண்டித்தனம். இந்த நிகழ்வு, ‘ஜார்ஜ் புஷ்’ போட்ட யூரேனிய குண்டுகளால் புற்றுநோயால் வாடும் ஈராக்கிய குழ்ந்தைகளுக்கு மருந்துகளை அனுப்பாமல் உலக அளவில் ஈராக்கிற்கு தடை கொண்டு வந்து பில்கிளிண்டன் பல்லாயிரம் குழந்தைகளை கொலை செய்ய வைத்ததையும் நினைவில் கொள்ளச் செய்கிறது. ஈழத்தில் இதே போன்று மருந்துகளை அனுப்பாமல் குழ்ந்தைகள் மீது கொலை செய்ய அனைத்து உதவிகளையும் நேரடியாக செய்த இந்திய அரசு மீதும், மறைமுக உதவி செய்த மேற்குலகம்-ஐ.நா- பாகிஸ்தான் - சீனா மீதும் நமக்கு வருகிறது. 30,000 தமிழ்க் குழந்தைகள் கொலை செய்யப்பட்டனர். பெஷாவர் நிகழ்வு சில முக்கிய செய்திகளை நம் கவனத்திற்கு கொண்டு வருகிறது. அதை விவாதிப்பது அவசியம். ஏனெனில் இது நாளை நமக்கும் நிகழலாம். விடுதலைப் போராட்டம் என்பது ஒடுக்கப்படுபவனுக்கும், சுரண்டப்படுபவனுக்கும், ஆக்கிரமிக்கப்படுபவனுக்குமான ஒன்று. அதை மதம் பெற்றுத் தராது. ஏனென்றால் மதத்தின் பெயரால்-இனத்தின் பெயரால் இவை அனைத்தும் நிகழ்கிறது. அடிப்படைவாதத்தினை வைத்து

இஸ்லாமின் பார்வையில் முதியோர்கள்

அல்லாஹ் உங்களை ( ஆரம்பத்தில் ) பலவீனத்திலிருந்து உங்களை படைத்தான் . பிறகு பலவீனத்திற்குப் பின் ( உங்களுக்குச் ) சக்தியை ( வாலிபத்தை ) உண்டாக்கினான் . அந்தப் பலத்திற்குப் பின் பலவீனத்தையும் ( முதுமையின் ) நரையையும் இறைவன் ஆக்கினான் . திருக்குர்ஆன் (30:54) மனிதனின் குழந்தைப் பருவத்தையும் , முதுமைப் பருவத்தையும் இறைவன் ‘ பலவீனம் ’ என்பதாகவே அடையாளப்படுத்துகிறான் . அப்படி என்றால் முதுமைக் காலத்தை ‘ குழந்தைப் பருவம் ’ என்றும் , முதியவர்களை ‘ குழந்தைகள் ’ என்றும் நாம் அழைக்க வேண்டும் . நம் வீட்டின் தாத்தாக்கள் , பாட்டிகள் வயதால் , அனுபவத்தால் பழுத்த பழங்கள் . ஆனால் ...? உடலாலும் உள்ளத்தாலும் அதன் உணர்வுகளாலும் குழந்தைகளைப் போன்றவர்கள் என்பதே இறைவனின் ஏற்பாடு . உண்மை தான் , உடலின் தோல்கள் எல்லாம் சுருங்கிய நிலையில் தலையிலே பளிச்சிடும் நரையோடு கண்ணிலே கண்ணாடி , கையிலே கைத்தடி என உடலின் சிறு சிறு அசைவுகளுக்கும் குழந்தையைப் போல் ஒரு துணை தேடுகின்ற பொக்கை வாய் பருவமாகும் ‘ முதுமை ’. எனவே நாம் நம்மின் தாத்தாக்களை ப