இடுகைகள்

மார்ச், 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இஸ்லாத்தின் பார்வையில் கடன்

மனிதர்கள், படைத்த   இறைவனுக்கு செய்ய வேண்டிய கடமைகள் எவ்வாறு இஸ்லாத்தில் தெளிவாக விபரிக்கப்பட்டுள்ளனவோ அதே போன்று ஒரு முஸ்லிம் பிற முஸ்லிமிற்கோ அல்லது அடுத்த மதத்தை சேர்ந்தவருக்கோ என்ன கடமைகள் செய்ய வேண்டும் என்ற அடிப்படை அம்சங்களும் தெளிவாக விபரிக்கப்பட்டுள்ளன ஒரு அடியான் மற்றுமொரு அடியானுக்கு உதவி செய்யும் காலமெல்லாம் இறைவன் அவனுக்கு உதவி செய்து கொண்டே இருப்பான் என இம்மார்க்கம் இயம்புகின்றது அந்தளவு பிறருக்கு உதவும் காரியத்தை எமது மார்க்கம் எமக்கு கற்றுத்தருகின்றது   இஸ்லாத்தில் சகோதரத்துவ வாஞ்சைக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது இஸ்லாத்தில் இனவேறுபாடு இல்லை !   இஸ்லாத்தில் ஏற்றத்தாழ்வுகள் இல்லை ! இஸ்லாத்தில் குலப்பெருமை இல்லை !   இவ்வாறு இஸ்லாத்தின் சிறப்புக்களை அடுக்கிக் கொண்டே போகலாம் ஒரு மனிதன் வாழ்க்கையில் இன்னல்படுகிறான் என்றால் அவனுக்கு நாம் செய்யும் மிகப் பெரிய கைங்கரியமே கடனுதவி ஆகும் ஒரு மனிதனுக்கு கடனுதவி வழங்கினால் அவனது சந்தோஷத்திற்கு அளவேயில்லை அதே போன்று அவன் தனது கடனை அடைக்க சிரமப்படும் போது அவனுக்கு ஏற்படும் வருத்தத்திற்கும் அளவே இல்லை என்று கூற

நன்மைகள் தரும் மென்மை

படம்
இயந்திரமயமாகிவிட்ட நவீன உலகம் அறிவியல் பூர்வமாகவும்,விஞ்ஞான ரீதியாகவும் பல முன்னேற்றங்களை கண்டுள்ளது. மேலும் முன்னேற்றங் களை, அபரிமிதமான வளர்ச்சியை நோக்கி வீறுநடை போடுகின்றது. ஒரு பக்கம் இந்த முன்னேற்றங்கள் மனித சமுதயாத்திற்கு நன்மை பயப்பவையாக இருந்தாலும் மறுபக்கம் இவைகளால் மனித குலத்திற்கு சில கேடுகள், தீமைகள் விழைவதையும் மறுப்பதற்கில்லை. செல்போன், டி.வி, இண்டர்நெட் போன்ற அறிவியல் முன்னேற்றங்கள் ஆக்கபூர்வமான செயல்களுக்கு பயன்படுத்தப்படுவதை விட மனிதர்களின் அறிவை மழுங்கச் செய்யும் காரியத்திற்கும், அவர்களின் ஒழுக்க வாழ்வை நாசப்படுத்துவற்குமே அதிகம் பயன்படுத்தப்படுகின்றது. மனிதர்கள் இக்கருவிகளால் தங்களுக்கு தாங்களே கேடு விழைவித்து கொள்கின்றனர். நவீன கருவிகளில் மனிதர்கள் தொலைந்து விட்டதால் அவர்கள் இழந்த இழப்புகள் ஏராளம். வளமான வாழ்வு நல்ல நட்பு,குழந்தைகளின் பாசம், நல்லறிவு, நற்பண்புகள் இவ்வாறாக மனிதர்கள் தொலைத்த நன்மைகள் பல. இவற்றுள் மென்மையும் ஒன்று. இக்காலத்தில் அதிகமானோர் மென்மை எனும் குணத்தை இழந்

பிரார்த்தனை

[   "துன்பமான நேரத்தில் தன்னுடைய பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று யார் விரும்புகின்றாரோ அவர் மகிழ்ச்சியான நேரத்தில் அதிகம் பிரார்த்தனை செய்யட்டும்"   என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல் : புகாரீ) "மகிழ்ச்சியான நேரத்தில் அல்லாஹ்விடம் நீ அறிமுகமாகிக் கொள். கஷ்டமான நேரத்தில் அல்லாஹ் உன்னைத் தெரிந்து கொள்வான்"   என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்கு வஸிய்யத்து செய்தார்கள். "அவசரப்படாமல் உங்களில் ஒருவர் பிரார்த்திக்கும் பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக் கொள்கின்றான்"   என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல் : முஸ்லிம்) "தனது இரு கைகளையும் ஏந்தி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள். நான் அப்பொழுது அவர்களின் அக்குளின் வெண்மையைப் பார்த்தேன்"   என அபூ மூஸா அல் அஸ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார். (நூல் : புகாரீ) "நிச்சயமாக அல்லாஹ் வெட்கமுள்ளவனும், சங்கையுள்ளவனுமாவான். ஒரு மனிதன் தன் இரு கரங்களையும் உயர்த்தி பிரார்த்தனை செய்