வெள்ளி, மே 29, 2015

வரலாறு படைத்த மிஃராஜ்


அல்லாஹ் ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையிலும் ஏதாவது ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தி பாரிய மாற்றத்தை கொண்டுவருகிறான்.
உலகிற்கு வந்த எல்லா தூதர்களின் வாழ்க்கையிலும் முஃஜிஸாத்துகள் (அற்புதங்கள்) என்ற பெயரில் பலவிதமான அற்புதங்களை நிகழ்த்திக் காட்டி மக்களுக்கு மத்தியில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தினான்.
அந்த வரிசையில் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கையில் ஹிஜ்ரத்திற்குப்
பின் மிஃராஜ் எனும் விண்வெளி பயணத்தை ஏற்ப்படுத்தினான்.
இந்த பயணம் நபியவர்களுக்கு பாரிய திருப்பு முனையாக அமைந்தது.
மக்களுக்கு மத்தியில் வரலாறு படைத்தது.
மிஃரஜூம் அதன் நோக்கமும்
மிஃராஜின் நோக்கத்தை அல்லாஹ் குர்ஆனில் பின்வருமாறு கூறுகிறான். ‘தனது அடியாரை மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து, மஸ்ஜிதுல் அக்ஸா வரை பயணம் செய்வித்த அல்லாஹ் தூய்மையானவன். அது எத்தகைய இடம் என்றால், அதனை சூழாக பரகத்தை ஏற்படுத்தியுள்ளோம். மேலும் நமது அத்தாட்சிகளை காட்டுவதற்காக (அவரை அழைத்துச் சென்றோம்) அல்லாஹ் செவியேற்கக் கூடியவனாகவும், பார்க்க கூடியவனாகவும் இருக்கிறான். (17- 01)
இந்த வசனத்தின் மூலம் தனது அத்தாட்சிகளை நபியவர்களுக்கு காட்டுவதற்காக அழைத்து செல்லப் பட்டதாக அல்லாஹ் கூறுகிறான். மேலும் அல்லாஹ்வின் வல்லமையையும் உலகிற்கு காட்டுவதற்காகவும் இந்த விண்வெளிப் பயணத்தை நிகழ்த்தி காட்டியுள்ளான்.
ஓவ்வொரு நபிமார்களுக்கும் ஒவ்வொரு விதமான அற்புதங்களை அல்லாஹ் வழங்கினான். நபியவர்களுக்கு வழங்கிய இந்த அற்புதம் வித்தியாசமான முறையில், உலகமே வியக்க கூடிய அளவிற்கு அல்லாஹ் நிகழ்த்திக் காட்டினான்.
நபி (ஸல்) அவர்கள் கஃபாவுக்கு அருகாமையில் பாதி வழிப்பிலும் பாதி தூக்கத்திலும் இருந்த சந்தர்ப்பத்தில் ஜிப்ரீல் (அலை) அவர்கள் ஏனைய இரண்டு மலக்குமார்களுடன் வந்து நபி (ஸல்) அவர்களை ஸம்ஸம் நீரூற்றுக்கு அருகாமையில் அழைத்து சென்று அவரது நெஞ்சை பிழந்து இதயத்தை வெளியில் எடுத்து ஸம்ஸம் நீரால் கழுவி ஈமான் என்ற நம்பிக்கையாலும், அறிவு என்ற நுண்ணறிவாலும் நிரப்பி, மீண்டும் நெஞ்சில் வைத்து தடவினார்கள். நபி (ஸல்) அவர்கள் சிறு வயதாக இருக்கும் பொழுதும் இப்படி ஒரு சம்பவம் நடந்தது.
நபி (ஸல்) அவர்கள் பைத்துல் ஹராமில் (கஃபாவில்) இருந்து பைத்துல் அக்ஸாவுக்கு ஜிப்ரீல் (அலை) மூலம் அழைத்து செல்லப்பட்டார்கள்.
புராக்
புராக் என்ற வாகனம் கோவேறு கழுதையை விட சிறியதும், கழுதையைவிட பெரியதும், அது வெள்ளை நிறமானது. அந்த புராக் வாகனம் தன் பார்வை எட்டும் அளவிற்கு அடி எடுத்து வைத்து வேகமாக செல்லக் கூடியது.
பைத்துல் முகத்திஸ்
நபி (ஸல்) அவர்கள் கஃபாவில் இருந்து பைத்துல் முகத்திஸூக்கு செல்லும் வழியில் செம்மண் குன்றுக்கு அருகில் மூஸா (அலை) அவர்களின் மண்ணரையில் மூஸா நபியை தொழுத வண்ணமாக கண்டார்கள். இது நபியவர்களுக்கு காட்டிய அல்லாஹ்வின் அத்தாட்சியாகும்.
நபி (ஸல்) அவர்கள் பைத்துல் முகத்தஸிற்கு சென்ற உடன் நபிமார்கள் தனது வாகனங்களை கட்டிவைக்கும் இடத்தில் புராக் வாகனம் கட்டிவைக்கப்பட்டது. அங்கு மீண்டும் மூஸா நபியை அல்லாஹ் எடுத்துக் காட்டினான் மூஸா நபி ஷனூஆ குலத்தை சார்ந்த உயரமான மனிதரின் தோற்றத்தில் காணப்பட்டார்கள். அதே போன்று ஈஸா (அலை) அவர்களையம் அல்லாஹ் எடுத்துக் காட்டினான். ஈஸா (அலை) அவர்கள் உர்வா பின் மஸ்ஊத் அஸ்ஸகபி அவர்களைப் போன்ற தோற்றத்தில் காணப்பட்டார்கள். அதே போன்று இப்றாஹீம் (அலை) அவர்களை அல்லாஹ் எடுத்துக் காட்டினான் அவர்கள் நபி அவர்களுடைய சாயலில் காணப்பட்டார்கள். அந்த இடத்தில் எல்லா நபிமார்களுக்கும் தலைமை தாங்கி நபி (ஸல்) அவர்கள் தொழுகை நடாத்தினார்கள். தொழுகை முடிந்வுடன் இவர்தான் நரகத்தின் காவலாளி என்று ஜிப்ரீல் (அலை) அவர்கள் மாலிக் (அலை) அவர்களை அறிமுகப்படுத்தி ஸலாம் சொல்லும்படி சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள் ஸலாம் சொல்ல ஆரம்பிக்கும் போது மாலிக் (அலை) அவர்கள் முந்திக்கொண்டு நபி அவர்களுக்கு ஸலாம் கூறினார்.
அதன் பின் ஜிப்ரீல் (அலை) அவர்களுடன் புராக் வாகனத்தில் ஏறி விண்னை நோக்கி பயணமானர்கள். முதலாவது வானத்தை அடைந்வுடன் அதன் கதவை தட்டினார்கள். முதலாவது வானத்தில் உள்ள வானவர்கள். யார் வந்திருப்பது என்று கேட்டார்கள். ஜிப்ரீல் வந்துள்ளேன் உங்களுடன் வேறு யாரும் வந்துள்ளாரா? ஆம்! முஹம்மத் நபி வந்துள்ளார். அவர் இங்கே அழைத்து வருவதற்கு அனுமதி உள்ளதா? ஆம்! அல்லாஹ்வுடைய அனுமதியினால் அழைத்து வந்துள்ளேன். இப்போது முதலாம் வானத்தில் கதவு திறக்கப்படுகிறது. நபி (ஸல்) அவர்களும் ஜிப்ரீல் (அலை) அவர்களும் உள்ளே செல்கிறார்கள். முதலாவது வானத்தில் ஆதம் (அலை) அவர்களை அல்லாஹ் எடுத்துக் காட்டினான் ஆதம் நபிக்கு நபி (ஸல்) அவர்கள் ஸலாம் சொல்கிறார்கள். இப்பொழுது ஆதம் நபி வலது பக்கமாக திரும்பி சிரிக்கிறார்கள். இடது பக்கமாக திரும்பி அழுகிறார்கள். அதற்கான காரணத்தை நபி (ஸல்) அவர்கள் ஜிப்ரீல் (அலை) அவர்களிடம் கேட்டபோது வலது பக்கமாக உள்ளவர்கள் உங்கள் சமுதாயத்தில் சொர்கம் செல்லக் கூடியவர்கள். இடது பக்கமாக உள்ளவர்கள் உங்கள் சமுதாயத்தில் நரகம் செல்லக் கூடியவர்கள். என்று கூறினார்கள்.
இதன் பின் இரண்டாவது வானத்திற்கு செல்கிறார்கள். இரண்டாம் வானத்தின் கதவை தட்டுகிறார்கள் முதலாவது வானத்தில் நடந்தைப் போன்றே சம்பாசனை நடக்கிறது. இரண்டாவது வானத்திற்குள் சென்றவுடன் அங்கு ஈஸா (அலை) அவர்களையும் யஹ்யா (அலை) அவர்களையும் நபி (ஸல்) அவர்கள் சந்திக்கிறார்கள். மூன்றாம் வானத்தில் யூசுப் நபியை சந்திக்கிறார்கள். நான்காம் வானத்தில் இத்ரீஸ் நபியை சந்திக்கிறார்கள். ஐந்தாம் வானத்தில் ஹாரூன் நபியை சந்திக்கிறார்கள். ஆறாம் வானத்தில் மூஸா நபியை சந்திக்கிறர்கள் ஏழாம் வானத்தில் இப்றாஹீம் நபியை சந்திக்கிறார்கள்.
இப்றாஹீம் (அலை) அவர்கள் பைதுல் மஃமூர் பள்ளிவாசலில் தனது முதுகை சாய்த்தவர்களாக அமர்ந்திருந்தார்கள்.
பைத்துல் மஃமூர்
பைத்துல் மஃமூர் என்பது மலக்குமார்களால் அல்லாஹ்வை வணங்குவதற்காக அமைக்கப்பட்ட பள்ளியாகும். அந்த பைத்துல் மஃமூர்க்குள் ஒரு நாளைக்கு எழுபது ஆயிரம் மலக்குமார்கள் உள்ளே செல்வார்கள். உள்ளே சென்ற மலக்குமார்கள் மீண்டும் வெளியேவர மாட்டார்கள். மறுநாள் புதிதாக எழுபது ஆயிரம் மலக்குமார்கள் உள்ளே செல்வார்கள் இப்படி ஒவ்வொரு நாளும் நடந்துகொண்டே இருக்கும்.
ஸித்ரதுல் முன்தஹா
ஸித்ரதுல் முன்தஹா என்பது இலந்தை இலை மரமாகும். இதனுடைய வேர் பகுதி ஆறாம் வானத்தில் இருந்து ஆரம்பமாகி ஏழாம் வானத்தில் விருட்சமாக அல்லாஹ் படைத்துள்ளான். அதன் இலைகள் யானையுடைய காதுகள் அளவுக்கு இருக்கும். அதனுடைய பழங்கள் பெரிய பெரிய கூஜாக்களைப் போன்று இருக்கும். அந்த இலந்தை மரத்தை சூழாக பிரகாசமாக வெளிச்சமாக இருக்கும். தங்கத்திலாலான வெட்டுக் கிளிகள் அதனை சூழாக பறந்து கொண்டே இருக்கும்.
நான்கு நதிகள்
ஸித்ரதுல் முன்தஹா மரத்தின் வேர் பகுதியில் இருந்து நான்கு நதிகள் ஓடிக்கொண்டு இருக்கிறது. அதில் இரண்டு நதிகள் (ஸல்ஸபீல், கவ்ஸர்) சொர்கத்திற்குள்ளும் மற்ற இரண்டு நதிகள் (நைல், யூப்ரடீஸ்) சொர்கத்திற்கு வெளியேயும் உள்ளது.
இந்த இடத்தில் வைத்து நபி (ஸல்) அவர்களுக்கு ஜிப்ரீல் (அலை) அவர்கள் பாலுள்ள கிண்ணத்தையும், மது உள்ள கிண்ணத்தையும் கொடுக்கும் போது நபி (ஸல்) அவர்கள் பாலுள்ள கிண்ணத்தை தெரிவு செய்தார்கள். அப்போது நீங்கள் இயற்க்கை மார்க்கத்தை தெரிவு செய்துவிட்டீர்கள். என்று ஜிப்ரீல் (அலை) அவர்கள் கூறினார்கள். மேலும் அந்த இடத்தில் வைத்து மூன்று கட்டளைகள். நபி (ஸல்) அவர்களுக்கு வழங்கப்பட்டன.
1. தொழுகை
2. ஸூரதுல் பகரா அத்தியாயத்தின் கடைசி மூன்று வசனங்கள்.
3. இணைவைக்காத நிலையில் பெரும்பாவங்கள் செய்திருப்பின் அவர்களுக்கு மன்னிப்பு என்ற மூன்று கட்டளைகள் வழங்கப்பட்டன.
மூஸா நபியும் தொழுகையும்
நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் பேசிவிட்டு திரும்பும் போது மூஸா நபி அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் அல்லாஹ் என்ன சொன்னான் என்று கேட்ட போது ஐம்பது நேரத்து தொழுகையை அல்லாஹ் என் சமுதாயத்தின் மீது கடமையாக்கினான் என்று சொன்ன உடன் அதற்கு மூஸா நபி உமது மக்கள் ஐம்பது நேரத் தொழுகையை தொழ மாட்டார்கள். அல்லாஹ்விடம் சென்று குறைத்து வாருங்கள். என்று சொன்னவுடன் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் சென்று பேசிக் குறைக்கின்றார்கள். இறுதியில் ஐந்து நேரத் தொழுகையை பெற்றுக்கொண்டு வரும்போது மீண்டும் மூஸா நபி ஐந்து நேரத் தொழுகையையும் உமது சமுதாயம் தொழமாட்டார்கள். இதையும் அல்லாஹ்விடம் சென்று குறைத்து வாருங்கள். என்று கூறிய போது நபி (ஸல்) அவர்கள் எனக்கு வெட்கமாக உள்ளது என்று வந்து விடுகின்றார்கள். எவர் ஐந்து நேரத் தொழுகையை சரியாகத் தொழுகிறாரோ அவர் ஐம்பது நேரத் தொழுகையை தொழுததிற்கு சமனாகும். என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நபி (ஸல்) அவர்களும், பைத்துல் முகத்திஸூம்
நபி (ஸல்) அவர்கள். மிஃராஜ் சென்று வந்த செய்தியை மக்களிடத்தில் சொல்லிய போது முஷ்ரிகீன்கள் அதை மறுத்தார்கள். அத்துடன் கேலி செய்ய ஆரம்பித்தார்கள். குறிப்பிட்ட இந்த இரவில் யாரும் போய்வர முடியாத இந்த பயணத்தை இவர் சென்றுவந்தாராம். என்று பரிகாசம் செய்ய ஆரம்பித்தனர். இப்பொழுது பைத்துல் முகத்திஸூக்கு சென்றுவந்தவர்கள். நபி அவர்களிடம் சில கேள்விகளை கேட்க ஆரம்பித்தார்கள். ஏனென்றால் நபி (ஸல்) அவர்கள் தனது வாழ்க்கையில் ஒரு தடவை கூட பைத்துல் முகத்திஸூக்கு சென்று வந்தது கிடையாது. இவர்கள் நபியவர்களிடம் பைத்துல் முகத்திஸ் பள்ளியில் உள்ள சில வர்ணனை பற்றி கேட்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் அதைப் பற்றிய சரியாக தெரியாததினால் தடுமாற்றத்திற்குள் ஆளான போது இப்பொழுது அல்லாஹ் அந்த பைத்துல் முகத்திஸ் பள்ளியை நபி (ஸல்) அவர்களுக்கு முன்னால் அப்படியே கொண்டுவந்து காட்டினான். அதைப் பார்த்துக்கொண்டே நபி (ஸல்) அவர்கள் முஷ்ரிகீன்களுடைய கேள்விகளுக்கு பதில் அளித்தார்கள் (முஸ்லிம்: 278)
நபியவர்கள் அல்லாஹ்வைக் கண்டார்களா?
மஸ்ரூக் பின் அஜ்தஉ (ரழி) அவர்கள் ஆயிஷா (ரழி) அவர்களுடன் பேசிக்கொண்டு இருக்கும் போது ஆயிஷா (ரழி) அவர்கள் மூன்றில் ஒன்றை யார் கூறினாலும் அவர் அல்லாஹ்வின் மீது இட்டுக் கட்டிவிட்டார். என்று கூறிவிட்டு முதலாவது யார் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வை நேரடியாக பார்த்ததாக கூறுகிறாரோ அவர் அல்லாஹ் மீது இட்டுக் கட்டிவிட்டார். என்று கூறியதும் சாய்ந்திருந்த மஸ்ரூக் அவர்கள் உம்முல் முஃமினீன் அவர்களே! நிதானித்துக் கூறுங்கள். அவனை அவர் தெளிவான அடிவானத்தில் கண்டதாக அல்லாஹ் கூறுகின்றனே என்று கேட்டபோது அதற்கு ஆயிஷா (ரழி) அவர்கள் இதைப் பற்றி முதன் முதலாக அல்லாஹ்வின் தூதரிடம் நான் தான் கேட்டேன் அதற்கு நபி (ஸல்) அவர்கள் ஜிப்ரீல் (அலை) அவர்களை நேரடியாகக் கண்ட செய்தியைத் தான் அந்த வசனத்தின் மூலமாக அல்லாஹ் கூறுகிறான். என்று கூறினார்கள். (நபி (ஸல்) அவர்கள் ஜிப்ரீல் (அலை) அவர்களை இரண்டு தடவை அவர்களின் நிஜ உருவத்தில் நேரடியாக கண்டார்கள். ஒரு தடவை ஹிராக் குகையில் இருந்து வெளிவரும் பொழுது ஜிப்ரீல் (அலை) அவர்கள் வானத்திற்கும் பூமிக்கும் இடைப்பட்ட பெரிய ஒரு சிம்மாசனத்தில் அமர்ந்தவராக இறக்கையை விரித்த வண்ணமாக காணப்பட்டார்கள். இரண்டாவது தடவை சித்ரதுல் முன்தஹாவில் வைத்து ஜிப்ரீல் (அலை) அவர்களின் நிஜ உருவத்தில் நபி (ஸல்) அவர்கள் கண்டார்கள்.) இதைத்தான் அல்லாஹ் குர்ஆனில் ‘அவர் தெளிவான அடிவானத்தில் அவரைக் கண்டார்’ (அல்குர்ஆன் 81:23) ‘மற்றொரு முறையும் அவரை அவர் கண்டார்’ (அல்குர்ஆன் 53:13) இந்த இரண்டு வசனங்களும் நபி (ஸல்) அவர்கள் ஜிப்ரீல் (அலை) அவர்களை நேரடியாக கண்டதாக தெளிவு படுத்தப்படுகிறது.
இரண்டாவது அல்லாஹ்வின் தூதர் இறைவேத்தில் எதையாவது மறைத்து விட்டார்கள் என்று எவராவது கூறினால் அவர் அல்லாஹ்வின் மீது இட்டுக் கட்டியவராவார்.
மூன்றாவது நபி (ஸல்) அவர்களுக்கு மறைவான அறிவு இருக்கிறது என்று யாராவது கூறினால் அவரும் அல்லாஹ்வின் மீது இட்டுக் கட்டியவராவார். என்று ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்.
மிஃராஜின் போது நபி (ஸல்) அவர்களுக்கு நரகத்தில் ஒவ்வொரு காட்சிகளையும் அல்லாஹ் எடுத்துக் காட்டினான். அதே போன்று சுவர்க்கத்தில் ஒவ்வொரு இன்பங்களையும் அல்லாஹ் எடுத்துக் காட்டினான்.
எனவே இந்த மிஃராஜின் மூலம் அல்லாஹ் அவனது ஆற்றலை வெளிக்காட்டுவதோடு நபி (ஸல்) அவர்களுக்கு தனது அத்தாட்சிகளை காட்டி உலக மக்களுக்கு இந்த செய்தி வரலாறு படைத்ததாக அமைத்துள்ளான்.
Share
·         ஒவ்வொரு வருடமும் ரஜப் மாதத்தின் 27 ம் நாள் மிஃராஜுடைய தினம் என குறிப்பிட்டு அதில் நோன்பு வைப்பதும், பள்ளிகளில் கந்தூரிகள் வைத்து மௌலிதுகள் ஓதுவதும் பரவலாகக் காணக்கூடிய ஒன்றாக இருக்கின்றது. இவைகள் அனைத்தும் வழிகெட்ட பித்அத்துகளாகும். இவைகளுக்கு மார்க்கத்தில் எந்த ஆதாரமோ, அடிப்படையோ இல்

விண்ணுலகப் பயணம்அந்நஜாத்

 “தன் அடியாரை (முஹம்மதை) (கஃபா என்ற) மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து (பைத்துல் முகத்தஸ்) என்ற மஸ்ஜிதுல் அக்ஸா வரை ஓரே இரவில் அழைத்துச் சென்ற இறைவன் மிகவும் பரிசுத்தமானவன்” (அல்குர்ஆன் 17:1)
அண்ணல் நபி (ஸல்) அவர்களை ஒரு இரவுக்குள் வெகு தொலைவு அழைத்துச் சென்றதை அல்லாஹ் மேற்கூறிய வசனத்தின் மூலம் தெளிவாக்ககின்றான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “அங்கிருந்து புராக் வாகனத்தின் மூலம் விண்ணுலகம் சென்று பல்வேறு காட்சிகளைக் கண்டுவிட்டு, இறைவனுடன் உரையாடிவிட்டு வந்ததை” கூறியுள்ளனர்.
அல்லாஹ்வின் ஆற்றலில் முழுமையாக நம்பிக்கை கொண்டுள்ள எவருக்கும் இதில் எள்ளளவும் ஆச்சரியம் இருக்க முடியாது. ஒவ்வொரு முஸ்லிமும் “மிராஜை” கட்டாயம் நம்பியே ஆக வேண்டும்.
இன்றைய இஸ்லாமியர்கள் மிஃராஜ் பற்றி கொண்டுள்ள தப்பான அபிப்பிராயங்களை நீக்க வேண்டும் என்பதற்காகவே இந்தக் கட்டுரை.
மிஃராஜ் எந்த மாதம் எந்த நாள் ஏற்பட்டது என்பதைப் பார்ப்போம். அறிஞர் “ஸதீ” அவர்கள் “துல் கஃதா மாதத்தில் ஏற்பட்டது” என்கிறார்கள். இமாம் ஜுஹ்ரியும், இமாம் உர்வா அவர்களும் ரபீவுல் அவ்வலில் ஏற்பட்டதாக கூறுகின்றனர். அதனை உறுதி செய்யும் விதமாக, நபி தோழர்கள் ஜாபிர் (ரலி) இப்னு அப்பாஸ் (ரலி) இருவரும் ரபீவுல் அவ்வல் 12ல் மிஃராஜ் ஏற்பட்டதாக இயம்புகின்றனர். ஹாபிழ் அப்துல் கனி அவர்கள் பலவீனமான ஆதாரக் குறிப்போடு “ரஜப் 27ல் நடந்தது” என்கிறார்.
மிஃராஜ் எந்த மாதம் ஏற்பட்டது என்பதில் கருத்து வேறுபாடு தோன்றக் காரணம் என்ன? மிஃராஜ் நடந்ததை நம்ப வேண்டும் என்பதைத் தவிர அந்த நாளுக்கு என்று விசேஷத் தொழுகையோ, விசேஷ நோன்பையோ நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சஹாபாக்களுக்கு கூறவில்லை.
ஏதேனும் ஒரு விசேஷமான அமலை அவர்கள் தம் தோழர்களுக்குச் சொல்லி இருந்தால் நபித்தோழர்கள் அனைவரும் அந்த அமலைச் செய்வதற்காக அந்த நாளை நினைவுவைத்திருப்பாாகள். இரண்டு, மூன்று அபிப்பிராயங்களை கொண்டிருக்க முடியாது.
ஆஷுரா நாளில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோன்பு நோற்கக் கூறியதால் அந்த நாள் எது என்பதை நன்றாகவே சஹாபாக்கள் நினைவில் வைத்திருந்தார்கள். முஹர்ரம் பத்தாம் நாள் தான் ஆஷுரா என்று ஒரு குரலில் சொன்னார்கள். மிஃராஜைப் பொறுத்தவரை அந்த நிகழ்ச்சியை நம்பவேண்டும் அவ்வளவுதான். எந்த தேதியில் நடந்தது என்று முடிவு கட்டுவது அதற்காக நாமாக விசேஷ வணக்கங்களை ஏற்படுத்திக் கொள்வது அல்லாஹ்வுடைய அதிகாரத்தில் தலையிடுவதாகும்.
இப்னு அப்பாஸ் (ரழி) ஜாபிர் (ரழி) உாவா, ஜுஹ்ரி ஆகிய இமாம்கள் ரபிவுல் அவ்வலில் மிஃராஜ் ஏற்பட்டதாக உறுதி செய்கின்றனர். ஹாபிழ் அப்துல் கனி அவர்கள் பலவீனமான ஆதாரத்துடன் ரஜப் 27ல் மிஃராஜ் ஏற்பட்டது என்கிறார்.
பலமான ஆதாரத்தின் அடிப்படையில் அறிவிக்கப்படும் ரபிவுல் அவ்வலை விட்டுவிட்டு, பலவீனமான ஆதாரத்துடன் அறிவிக்கப்படும் “ரஜப் 27″ ஐ தேர்ந்தெடுத்த மர்மம் என்ன? இதனை நாம் சிந்திக்க வேண்டும். சொறிபொழிவாளர்கள் இதனை வலியுறுத்திக் கூறக் காரணம் என்ன?
ரபிவுல் அவ்வலில் தான் மிஃராஜ் நடந்தது என்று கூறினால் அதில் அவர்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படும். மீலாது விழாக்கள் என்று தனி வியாபாரம். பிறகு ரஜபில் மிஃராஜ் விழாக்கள் என்று இன்னொரு வியாபாரம். இப்படி இரண்டு மாதங்களிலும் வந்து கொண்டிருக்கும் வருமானம் பாதிக்கும். ரபிவுல் அவ்வலில் மிஃராஜ் என்பதை மக்களுக்குச் சொன்னால் மீலாத் மிஃராஜ் இரண்டுக்கும் ஒரு விழா நடத்தி போதுமாக்கிவிடுவார்கள். ரஜபு மாதம் வருவாயற்றுப் போய்விடும். எல்லா மாதங்களிலும் பயான் பாதிஹா என்று வருமானம் கிடைக்க வேண்டும் என்பதற்காக எவ்வித வருமானமுமில்லாமல் இருந்த ரஜப் மாதத்தில் மிஃராஜ் நடந்ததாக மக்களை நம்ப வைத்தார்கள். அதன் சிறப்பை மெருகூட்ட வேண்டும் என்பதற்காக, அல்லாஹ்வும் அவனது தூதரும் கற்றுத் தராத புதுப்புது வணக்கங்களை ஏற்படுத்திக் கொண்டார்கள்
இன்று மிஃராஜ் நல்லதொரு வியாபாரமாக ஆகிவிட்டது. பயான் செய்வோருக்கு நல்ல அறுவடை. “பெண்ணின் முகம், குதிரை உடல்” கொண்ட விந்தைப் பிராணியை பிரிண்ட் செய்து இதுதான் புராக் என்று விற்பது ஒரு பக்கம். அதனை வீகளில் மாட்டிக் கொண்டு தாங்களே மிஃராஜ் சென்று விட்டதாக பூரிக்கும் கூட்டம் இன்னொரு பக்கம். மிஃராஜ் வணக்கங்கள், விசேஷத் தொழுகை, விசேஷ நோன்பு என்று அதன் முறைகளை விவரிக்கும் பிரசுரங்களின் வியாபாரம் இன்னொரு பக்கம். அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டித் தராத இந்த விசேஷ வணக்கங்கள் கண்ணாடி பிரேம் போட்டுத் தொங்கவிட்டுக் கொண்டிருக்கும் பள்ளிவாசல்கள் இன்னொரு பக்கம்.
பள்ளிவாசல்களின் அலங்காரம் என்ன? பூக்கட்டுக்கள் என்ன? புத்தாடை அணிவது என்ன! நெய்ச்சோறு விநியோகம் என்ன! நன்றாகவே மிஃராஜை ஜமாய்த்துக் கொண்டிருக்கிறார்கள். தொழுகை கடமையாக்கப்பட்ட மிஃராஜ் இரவில் விடிய விடிய விழித்து விழாக் கொண்டாடி விட்டு சுபுகள் தொழ பள்ளியில் இமாமையும் மோதினாரையும் விட்டு விட்டு செல்லும் ஊர்கள் எத்தனை?
அன்புமிக்க இஸ்லாமியர்களே! மிஃராஜை நம்புங்கள்! அது நமக்கு உணர்த்தும் பாடத்தை படியுங்கள்! இறைவனின் ஆற்றலை இறை தூதரின் சிறப்பை, தொழுகையின் மகத்துவத்தை மனதில் இருத்துங்கள்! இது போன்ற ஏமாற்று வலைகளில் விழாதீர்கள்.
மூஃமின்களின் மிஃராஜாக இருக்கின்ற மிஃராஜ் இரவில் கடமையாக்கப்பட்ட ஐந்து வேளை தொழுகையை தொழுது வருவோமாக!
·          


பர்மிய முஸ்லிம்களின் பதற வைக்கும் எதிர்காலம்!


எமது உடன்பிறப்புக்களான பர்மிய முஸ்லிம்கள் கடந்த பல வருடங்களாகவே சொல்லொனாத் துயரத்துக்து ஆளாக்கப்பட்டு வருகின்றனர். அங்கு இடம்பெற்று வரும், உள்ளத்தைப் பிழியும் நிகழ்வுகளைக் காணும் போது, மனித நேயம் கொண்ட எந்த மனிதனுக்கும் கண்ணில் கண்ணீர் கசியாமல் இருக்காது.
எமக்கிருக்கும் இந்த சகோதரத்துவ உணர்வு முஸ்லிம் நாடுகளின் தலைவர்களுக்கு ஏன் இருப்பதில்லை...? என்று வியப்பாக இருக்கிறது.
இஸ்லாத்தின் எதிரிகளின் நோக்கம் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் அழிப்பது தான் என்பதில் வியப்பேதுமில்லை. அவர்களைக் கடிந்து கொள்வதால் பயனேதும் ஏற்படப் போவதுமில்லை.
எமது உணர்வுகளை வெளிப்படுத்துவதற்காக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்துவது நல்லது தான். ஆயினும், இதுபோன்ற ஆர்ப்பாட்டங்கள், அரபு முஸ்லிம் நாட்டுத் தலைவர்களுக்கு நெருக்குதல் கொடுக்கும் வகையில், அந்தந்த நாடுகளிலும் அந்நாடுகளின் தூதுவராலயங்களுக்கு முன்னாலும் இடம்பெற்றால் அதன் தாக்கம் இன்னும் அதிகமாக இருக்கும்.
செயலற்ற து'ஆக்களும், வெறும் ஒப்பாரிகளும் எதுவும் செய்துவிடப் போவதில்லை. இதனைத் தடுக்கக் கூடிய சக்தியை அல்லாஹ் எமக்கு அளித்துள்ளான். அதனைப் பயன்படுத்த வேண்டும்.
"பலஹீனமான ஆண்களையும் பெண்களையும், சிறு குழந்தைகளையும் பாதுகாப்பதற்காக, அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் போர் செய்யாதிருக்கக் காரணம் யாது?" குர்'ஆன் 4/75.................... என்று அல்லாஹ் எம்மைப் பார்த்து கேள்வி எழுப்புகிறான் எம் சமுகத்தை கொத்து கொத்தாக கொன்று குவிக்கும் காவி பயங்கரவாதிகளிடமிருந்து மீட்டெடுப்போம். அன்று பலஸ்தீன் இன்று பர்மா நாளை நாமா ? இதற்கு என்ன முடிவு ? இனியும் நம் தன்மானத்தை விட்டுக்கொடுக்கலாமா? நாம் இந்த மண்ணில் வாழ வந்தவர்கள் அல்ல மரணிக்க வந்தவர்கள். மரணம் எப்போதும் நம்மை வந்து சேரும் அந்த மரணம் நம் சமுகத்துக்காக இருக்க வேண்டும் அப்போதுதான் ஜிஹாத் என்னும் புனிதமான மரணத்தை நாம் அடைய முடியும். தன் சமுகத்துக்காகவே வாழ்ந்து தன் சமுகத்துக்காகவே உயிர் நீத்த நம் பெரும் தலைவர்கள்          ..இன்று பர்மாவில் நம் இரத்தங்களை கொன்று குவிக்கும் போது நம் இரத்தம் கொதிக்கின்றது.ஒவ்வொரு முஸ்லிம் இளைஞனும்           மாற வேண்டிய தருணம் இது. உலக வல்லாரச நாடுகளின் கண்களுக்குள் தங்கள் விரல்களை விட்டு ஆட்டி படைத்த தலைவர்கள். ஏன் நம்மால் முடியாது???
" உன் மீது ஒருவர் அபாண்டமாக தாக்கினால் அதற்காக நீ அவன் மீது தாக்குதல் நடத்தி அதில் நீ மரணித்தால் நீ ஜிஹாத் என்ற அந்தஸ்த்தை பெறுகின்றாய் என நபி ( ஸல் ) அவர்கள் கூறினார்கள்.
சில மாதங்களாகவே ரொஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிரான பிரச்சாரத்தை அந்நியச் சக்திகளும், உள்நாட்டு மதவெறியர்களும் முன்னெடுத்து வருகின்றனர். அதன் விளைவே இந்தத் தாக்குதல் என்றும் மேற்கண்ட மனித உரிமை அமைப்புகள் தெரிவித்திருக்கின்றன.
பொதுவாகவே, ராக்கின் பிரதேசம் என்பது பர்மிய முஸ்லிம்கள் கணிசமாக வசிக்கும் பகுதி. மிகவும் ஏழ்மை நிலையிலுள்ள ரொஹிங்கியா முஸ்லிம்களும் இங்கே கணிசமாகவே வாழ்கின்றனர். இவர்கள் பெரும்பாலும் அண்டை நாடான பங்காளதேஷை பூர்வீகமாகக் கொண்டவர்கள்.இவர்களின் இருப்பு பெரும்பான்மை பௌத்த மக்களால் குரோதமாகவே பார்க்கப்படுகிறது.
ராக்கின் பிரதேசத்தில் தற்போது நடந்த வன்முறை கட்டுக் கடங்காமல் போகவே அமெரிக்க அரசு கவலை தெரிவித்துள்ளது. வன்முறைத் தாக்குதலை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என மியான்மர் அரசை வாஷிங்டனுக்கான செய்தித் தொடர்பாளர் கேட்டுக் கொண்டிருப்பதோடு, சட்டரீதியான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றும் மியான்மர் அரசை அவர் கேட்டுக் கொண்டுள்ளார்
கடந்த வாரம் பர்மிய பௌத்தர்களுக்கும் ரொஹிங்கியா முஸ்லிம்களுக்குமிடையே ஏற்பட்ட மோதலில் முஸ்லிம்கள் பலர் கொல்லப்பட்டுள்ளனர் முஸ்லிம்களின் சொத்துகள் சூறையாடப்பட்டு அவர்களின் வீடுகளும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதோடு, பௌத்த வன்முறையாளர்களால் முஸ்லிம்கள் விரட்டியடிக்கப்பட்டு பங்களாதேஷில் அகதிகளாக தஞ்சம் அடையும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
பர்மிய முஸ்லிம்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கண்டனப் பேரணி நடத்தியுள்ளனர்.
கடந்த 8ம் தேதி ஏற்பட்ட இன மோதலுக்கு காரணம் கடந்த மாதம் பர்மாவின் மத்தியப் பகுதியிலுள்ள ராம்ரி என்ற ஊரில் பௌத்த பெண்ணொருத்தியை சமூக விரோதிகள் தூக்கிச் சென்று கற்பழித்திருக்கின்றனர். இதைச் செய்தது முஸ்லிம்கள் தான் என்கிற வதந்தி பரவியவுடன் பௌத்த இளைஞர்கள் கொந்தளித்தனர்.
ஏற்கெனவே முஸ்லிம்கள் மீது இனவெறியை உமிழ்ந்து கொண்டிருந்த அவர்களுக்கு இது நல்ல வாய்ப்பாக அமைய... ராக்கின் பகுதியில் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்றில் ஏறிய பௌத்த இனவெறியர்கள் அந்த பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த முஸ்லிம்கள் மீது நடத்திய தாக்குதலில்10 பேர் உயிரிழந்தனர்.
முஸ்லிம்கள் தாக்கப்பட்ட செய்தி அறிந்த அராகன் பிரதேசமுஸ்லிம்கள், முஸ்லிம் இளைஞர்கள் மீதான தாக்குத லைக் கண்டித்து ராக்கின் மாநிலத் தலைநகரான சிட்வேயில் பேரணியாகச் சென்றனர் பேரணியைக் கலைக்க காவல்துறை முயற்சிக்க... முஸ்லிம்களுக்கும் காவல்துறையினருக்குமிடையே மோதல் உருவானது. இதில் காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் - 10க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் காயமடைந்தனர்.
கடந்த சில மாதங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்ற தாக்குதல்களில் மிக மோசமான தாக்குதல் இது என்கின்றனர் ராக்கின் பகுதி முஸ்லிம்கள்.
நூற்றுக்கும் மேற்பட்ட பௌத்த இளைஞர்கள் முஸ்லிம்கள் மீது தாக்குதல் மற்றும் படுகொலைகளை அரங்கேற்றியிருக்கின்றனர் என்று செய்தி வெளியிட்டுள்ளது A.F.P செய்தி நிறுவனம்.
இந்த வன்முறைத் தாக்குதலுக்கு சரியான காரணம் தெரியவில்லை என்று A.F.P செய்தி நிறுவனம் கூறுகிறது. ஆயினும், கடந்த மாதம் நிகழ்ந்த பௌத்த பெண்ணின் கற்பழிப்பு சம்பவத்திற்கு பழிவாங்கும் நடவடிக்கையாகவே முஸ்லிம்கள் மீதான இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது என்று ராக்கின் பிரதேச மக்கள் உறுதிபடத் தெரிவிக்கின்றனர்.
இந்திய முஸ்லிம்கள் - பர்மிய இனக் கலாச்சார பாரம்பரியத்தோடு கலந்து போயிருப்பதால் சில பர்மியர்களும் இஸ்லாத்தை தழுவியிருக்கிறார்கள்.
ரொஹிங்கியா முஸ்லிம்களுக்கு நீண்ட கால வரலாறு உண்டு. 8 மற்றும் 9ம் நூற்றாண்டுகளில் அரேபிய கடல் பயணிகள் மற்றும் வணிகர்கள் ராக்கின் கடற்பகுதியில் குடியேறியிருக்கிறார்கள். பின்னர் பார்சிகள், முகலாயர்கள், துருக்கியர்கள், பட்டான்கள், வங்காளிகள் போன்றோர் தொடர்ந்து அடுத்தடுத்த நூற்றாண்டுகளில் மியான்மரில் குடியேறிய சமூகமாக இருக்கிறார்கள்.
புத்த மதத்தை கேலி செய்தாலோ, புத்தப் பெண்களை அவர்களின் மதத்தின் பெயரில் கிண்டல் செய்தாலோ, மற்ற மதத்தவர் பெற்றோர் விருப்பமின்றி புத்தப் பெண்களைத் திருமணம் செய்தாலோ ... இரண்டு ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை மற்றும் அமெரிக்க டாலர் 15௦௦ அபராதம்.
புத்த மதத்தைப் பின்பற்றாதவர் புத்தமதத்தைப் பின்பற்றக் கூடிய பெண்ணைத் திருமணம் புரிந்திருந்து, அவரை அவரது மதத்தை விட்டு வெளியேறுமாறு   சங்காரத்தின் ஊற்றுவாய்கள்.
பர்மியா மலாய் முஸ்லிம்கள், பர்மிய சீன முஸ்லிம்கள் போன்றவர்கள் கவனமாக தவிர்க்கப்ட்டு இந்த ரோகீங்கிய முஸ்லிம்கள் மட்டும் இலக்கு வைக்கப்பட்டனர்.
(இந்த குழந்தைகள் அந்த பாவிகளை என்ன செய்தது? என்ன குற்றத்திற்காக இவர்கள் கொல்லப்பட்டனர்?)
1.கூட்டாக பள்ளிவாசலில் தொழ முடியாது. பள்ளிவாசல் கட்ட முடியாது. மதரஸா நடத்த முடியாது.
 
2.பெரிய வியாபார முயற்சிகளில் ஈடுபட முடியாது.
3.இளைஞர்கள் போலிஸில் பதிவு செய்ய வேண்டும்.
4.மியன்மாரின் இரசாயன கழிவுகள் இவர்கள் பகுதியிலேயே கொட்டப்படுகின்றன.
5.கடல்களில் மீன் பிடிக்க முடியாது.
 
6. 1 ஏக்கரிற்கு மேல் விவசாயநிலங்களை வைத்திருக்க முடியாது.
7.அவசர பந்தோபஸ்து சட்டத்தின் கீழ் 5 வருடங்கள் தடுத்து வைக்க முடியும்.
8.பெண்கள் அவர்கள் சம்மதம் இன்றி கட்டாய குடும்ப கட்டுப்பாட்டிற்கு உள்ளாக்கப்படுவர்.
9.கற்பழிக்கப்பட்டாலோ, படுகொலை செய்யப்பட்டாலோ வைத்திய சான்றிதழை பெறுவது குற்றம்.
(இந்த கோரத்தை செய்தது மனிதர்கள்தானா? அல்ல மிருகங்கள்)
10. இராணுவ அதிகாரிகள் நினைத்த இடத்தில் நினைத்த நேரத்தில் நினைத்த பெண்களை ட்ரக்குகளில் அள்ளி செல்வர். அது தொடர்பில் பொலிஸில் முறையிட்டால் முறைப்பாட்டாளர் பின்னர் பிணமாக்கபடுவார்.
 
பல ரோஹியான்கள் மியன்மார் இராணுவத்தில் கூலி வேலை செய்கிறார்கள். இவர்கள் ஆயுட்கால கொத்தடிமைகள்.
 
(சோகத்திலெல்லாம் பெரிய சோகம் சொந்த மண்ணை பிரியும் சோகமல்லவா?)
இவர்கள் இப்போது கண்ட இடத்தில் நாயை சுடுவது போல சுட்டுக்கொல்லப்படுகிறார்கள். வகைதொகையின்றி கற்பழிக்கப்படுகிறார்கள். உலக மீடியாக்கள் செய்தியாக சிலதை சொல்லி பலதை விட்டு விடுகின்றன.
இலங்கை விவகாரத்தில் ஜெனீவாவரை சென்று ஆட்டம் போடும் அமெரிக்கா இங்கு நடுநிலை என்கிறது. அரபு நாடுகள் மௌனிக்கின்றன.
மண்டலாயின் முதல் மஸ்ஜித் தாக்கப்படுகிறது. 2000 க்கும் மேற்பட்ட பவுத்த கூட்டம் பள்ளிவாசலினுள் புகுந்து குரான் பிரதிகளை பற்ற வைக்கிறது. மஸ்ஜிதை நெருப்பிடுகிறது. பின்னர் உடனடியாக அந்த கூட்டம் முஸ்லிம் வர்த்தக மையங்களை சூறையாடுகிறது. அகப்பட்ட முஸ்லிம்களை போட்டு தாக்குகிறது. ஏன் கொலையும் செய்கிறது. வீடுகள் சூறையாடப்படுகின்றன. இளஞ்சிறுமியர் கற்பழிக்கப் படுகின்றனர். பெண்கள் தீ வைத்து கொளுத்தப்படுகின்றனர். இந்த அநியாயங்களை செய்தவர்கள் மியன்மாரிய இராணுவத்தினர் அல்ல. அங்குள்ள புத்த பிக்குகள். அவர்களே இந்த கொடூரங்களுக்கு தலைமை தாங்கினர்.
100 பிக்குகள் கைது செய்யப்பட்டு தேசிய வீரர்களாக பின்னர் விடுதலை செய்யப்படுகின்றனர்.
(தொழும் பள்ளி வாசலைக் கூட கொலைகளமாக்கும் பவுத்தர்கள்.
.2001 - இம்முறை கலவரத்திற்கு ஆளான பிரதேசம் சிட்வே, மற்றும் டாவுன்கு. கேக் விற்பனையில் ஈடுபட்ட ஒரு முஸ்லிம் பெண்ணிடம் கேக் வாங்கி சாப்பிட்ட புத்த பிக்குகள் கும்பல் பணம் தருவதற்கு மறுக்கிறது. அவளுடன் அங்க சேஷ்டையில் ஈடுபட முனைகிறது. ஆத்திரமடைந்த பெண் அவர்களை தாக்க முற்படுகிறாள். அவள் உறவினர் உதவிக்கு விரைந்து அவர்களை விரட்டியடிக்கிறார். சில மணி நேர இடைவெளியில் தலைமை நாயக்க தேரர் தலைமையில் பிக்குகள் வந்து கலகம் செய்கின்றனர். அவர்கள் பின்னால் குண்டர்கள் வன்முறையில் ஈடுபட ஆரம்பிக்கின்றனர். பற்றி எரிகிறது. நகரம். கொலை. கொள்ளை. சித்திரவதை. கற்பழிப்பு என எதுவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்து முடிக்கிறது கும்பல். 200 முஸ்லிம்கள் வெறித்தனமாக கொல்லப்படுகின்றனர்.
(இந்த உடல்களை எல்லாம் கடலில் கலந்தால் கடலின் நிறம் கூட சிகப்பாக மாறி விடுமே)
(ரமலானில் நோன்பு வைத்த நிலையில் தாக்கப்பட்ட முஸ்லிம்கள்.) 
2001 - தபூ பிரதேசம் கொளுந்து விட்டு எரிகிறது. முஸ்லிம்களிற்கு எதிரான துவேஷ பரப்புரைகள் பிக்குகளால் பன்சலைகளில் செய்யப்படுகின்றன. பன்சலை மணியை அடித்தவுடன் மக்கள் திரண்டு பிக்குகளை பாதுகாக்க முஸ்லிம்கள் மீது தாக்குதல் செய்யும் நிகழ்ச்சி நிரல் நாடு முழுதும் பயிற்றுவிக்கப்படுகிறது. தேவையான பொழுதுகளில் பன்சலை மணி அடிக்கப்படுகிறது. Han Tha மஸ்ஜிதுனுள் புகுந்த பவுத்த கூட்டம் அவர்களை அடித்து விரட்டுகிறது. பின்னர் பிக்குகள் கட்டளையிடுகின்றனர். ”முஸ்லிம்கள் பள்ளிவாசலில் தொழுகை நடத்த முடியாது” என. அது சட்ட ரீதியற்ற ஆனால் அதிகாரமிக்க கட்டளையாக பர்மாவில் உருப்பெருகிறது.
 
(பர்மிர்களுக்கும் இஸ்லாத்துக்கும் எந்த அளவு நெருக்கம் என்பதை விவரிக்கும் அந்த கால அராபிய எழுத்துருக்களைக் கொண்ட நாணயங்கள். இஸ்லாத்தின் அடிப்படையான 'ஏக இறைவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. முகமது நபி இறைவனின் தூதராக உள்ளார்கள்' என்ற வாசகம் அந்த நாணயத்தில் பொறிக்கப்பட்டுள்ளது)
பர்மிய ஜீன்டா அரசினுள் ஆதிக்கமிக்க சக்தியாக உள்ளவர்கள் தேசியவாத சிந்தனைகொண்டவர்களும், Theravada Buddhism மதவாதிகளுமாவர். இவர்களே இந்த அநியாயங்களின் பின்னணியில் செயற்படுபவர்கள். மதவாதிகளினதும், தேசியவாதிகளினதும், இராணுவத்தினரினதும் ஒரு கூட்டு தாக்குதலையே ரோகீங்கிய முஸ்லிம்கள் எதிர்கொண்டுள்ளனர்.
 
2012. இராணுவ ஒத்துழைப்புடன் முஸ்லி்ம்களி்ற்கு எதிரான அநியாயங்கள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. கூட்டு கொலை, கூட்டு கற்பழிப்பு, கூட்டு சூறையாடல் என ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட நிலையில் குழுக்களாக இவை நிகழ்த்தி முடிக்கப்படுகின்றன. மீடியாக்கள் உள்நுழைய முடியாத இரும்பு திரைக்கு பின்னால் பல கொலைகளங்கள் உள்ளன.
 
கொத்து கொத்தாக இங்கே கொல்லப்படுபவர்கள் முஸ்லிம்கள். முஸ்லிம் சகோதரர்கள். முஸ்லிம் சகோதரிகள். பொஸ்னியாவை நினைவிற்கு கொண்டு வரும் கூட்டு கற்பழிப்பிற்கு உள்ளாக்கப்படுபவர்கள் முஸ்லிம் சகோதரிகள். ஆனால் முஸ்லிம் உம்மா வேடிக்கை பார்க்கிறது. பேரீத்தம் பழ பெட்டிகளை அனுப்புதாலும், குர்பான் இறைச்சிகளை அனுப்புவதாலும் மியன்மரிற்கு உரியதை செய்து விட்டோம் என அரபு தேசங்கள் நிம்மதியடைய போகின்றனவா?
மியன்மார் என்பது பொஸ்னியாவின் களத்தை விட மோசமானது. ஹேர்ஸிகோவினாவினது களத்தை விட மோசமானது. கொஸாவோ களங்களை விட மோசமானது. ஈழத்து சோகத்தை விட பெரும் சோக மயமானது. இங்கு காஷ்மீரின் கண்ணீர், காஸாவின் பஞ்சம், செச்னியாவின் அவலம், ஆப்கானின் இரத்தம், முள்ளி வாய்க்காலின் கொடூரம், ஈராக்கின் சோகம் என எல்லாமே கலந்து நிற்கிறது. எல்லாம் நடந்து முடிந்த பின் “ த கில்லிங் ஃபீல்ட் ஆஃப் பர்மா” என டாக்குமெண்டரி தயாரிக்க பலர் உள்ளனர். ஆனால் கொல்பவர்களை தடுக்கவோ அல்லது கொல்லப்படுபவர்களை காக்கவோ யாரும் இல்லை. அவர்களுக்கு இறைவனைத் தவிர உதவ கூடியவர்கள் எவரும் இல்லை. அவர்களின் மரண ஓலங்கள் இன்றும் பல நாடுகளைக் கடந்தும் . நெடுந் தொலைவுக்குக் கேட்டுக் கொண்டிருக்கிறது.. இந்த மக்களுக்கு ஆதரவு கரம் நீட்ட தற்போது உலகில் எந்த அரசும் தயாராக இல்லை.
தற்போதய பர்மிய முஸ்லிம்கள் எந்த அளவு பர்மாவுக்கு சொந்தக்காரர்கள் என்பதை விவரிக்கும் பர்மாவில் புழக்கத்தில் இருந்த இஸ்லாமிய நாணயம்
எனவே தோழர்களே! தோழிகளே! உங்களின் வருமானத்தில் ஒரு பகுதியை இந்த மக்களை நோக்கி திருப்பி விடுங்கள். ஜகாத் பணம், ஃபித்ரா பணம், அன்பளிப்பாக கொடுக்க நினைத்த பணம் அனைத்தையும் இந்த ஏழை மக்களின் அடிப்படை தேவைகளை போக்குவதாக இருக்கட்டும். பணம் கொழிக்கும் அரபு செல்வந்தர்கள் தங்களின் செல்வத்திலேயே மித மிஞ்சிய மயக்கத்தில் உள்ளனர். இறைவன் நினைத்தால் ஒரு நொடியில் நிலைமையை தலைகீழாக மாற்றி விடுவான் என்பதை மறந்து வாழ்கின்றனர்.
வரும் ரமலானில் இந்த மக்களுக்காக அதிகமதிகம் பிரார்த்தனையில் ஈடுபடுவோம். சவுதியில் ஜூம்ஆ பிரசங்கத்தில் சிரிய முஸ்லிம்களுக்காகவும் பர்மிய முஸ்லிம்களுக்காகவும் அதிகமதிகம் பிரார்த்திக்கப்படுகிறது. உங்களின் பிரார்த்தனையில் இவர்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள். நம்பிக்கையான நிறுவனங்களை தொடர்பு கொண்டு அந்த மக்களுக்கு உங்களால் ஆன உதவிகளையும் செய்ய மறக்காதீர்கள்.
 
இன்னொருபுறம்,
 அகதிகளாக வரும் ராக்கின் பிரதேச முஸ்லிம்கள் உள்ளே நுழையாதவாறு எல்லைப் பகுதியில் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது பங்களாதேஷ் அரசு. இதனைக் கண்டித்துள்ள ஐக்கிய நாடுகளுக்கான அகதிகள் அலுவலகம் எல்லைப் பகுதியை திறக்குமாறு பங்களாதேஷ் அரசை கேட்டுக் கொண்டுள்ளது.
மியான்மர் முஸ்லிம்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்டிருக்கும் இந்த இனவெறித் தாக்குதல் குறித்த செய்திகளை பெரும்பாலான இந்திய - இலங்கை ஊட கங்கள் வெளியிடவில்லை.  இலங்கையில் நடப்பதைப் போலவே மியான்மர் பௌத்தர்களும் முஸ்லிம் சமுதாயத்திற்கு எதிராக கள மிறங்கியிருக்கின்றனர். ஆனால் வழக்கம்போலவே இந்த நாடுகளுடன் ராஜரீக உறவு வைத்திருக்கும் அரபு நாடுகள் தங்களின் இனம் பாதிக்கப்படுவதைப் பற்றிய அக்கறை இல்லா மல்- குறைந்தபட்சம் கலவரம் தொடர்பாக வருத்தத்தைக் கூட தெரிவிக்காமல் தங்களின் குபேர வாழ்க்கையில் லயித்திருக்கின்றன.
புறக்கணிக்கப்படும் பர்மா முஸ்லிம்கள்
47 மில்லியன் மக்கள் தொகை கொண்ட மியான் மரில் திபெத் மற்றும் சீனத்தை பூர்வீகமாகக் கொண்ட பௌத்த இனத்தவர்கள் மூன்றில் இரண்டு சதவிகிதம் இருக்கின்றனர். ராணுவத்திலும், அர சாங்கத்திலும் ஆதிக்கம் செலுத்தும் இனங்கள் இவைதான். .
இருப்பினும் நாட்டின் 47 மில்லியன் மக்கள் தொகையில் 3 சதவீதம் முஸ்லிம்கள் இருப்பதாகவும் வல்லுனர்கள் கருதுகின்றனர்
மியான்மர் முஸ்லிம்களில் இந்திய முஸ்லிம்கள்தான் பெரும்பான் மையாக இருக்கிறார்கள். மியான்மர் பிரிட்டீஷார் ஆதிக்கத்தில் இருந்தபோது இவர்கள் மியான்மரில் குடியேறியவர்கள்.
அராகன் மாநிலத்தில் பரவலாக இஸ்லாம் நடைமுறையிலுள்ளது.
1 மில்லியன் ரொஹிங்கியா சிறுபான்மையினர் மத்தியில் ஆதிக்கம் செலுத்தும் மதமாக இஸ்லாம் இருக்கிறது.
.பிரிட்டீஷ் காலணி ஆதிக்கத்தின்போது 1824 முதல் 1948 காலகட்டம்வரை பங்களாதேஷில் உள்ள சிட்டகாங்கிலிருந்து பெருமளவு மக்கள் ராக்கின் மாநிலத்தில் குடியேறியுள்ளனர்.
ராக்கின் மாநிலத்திற்கு வெளியேயும் கணிசமான முஸ்லிம்கள் வசிக்கின்றனர். இவர்கள் பெரும்பாலும் அனைத்து துறைகளிலும் புறக்கணிக்கப்பட்ட நிலையில் உள்ளனர்.
1991ல் அராகன் பிரதேச முஸ்லிம்கள் மீது பெரும் வன்முறை நிகழ்த்தப்பட்டது. அரசு துணையுடன் நிகழ்த்தப்பட்டதாக கூறப்படும் இந்த வன்முறையின்போது 2 லட்சத்து 50 ஆயிரம் முஸ்லிம்கள் பங்களாதேஷுக்கு விரட்டப்பட்டனர்.
1994ல் மியான்மர் ராணுவத்தின் தீவிர தாக்குதலின் காரணமாக கிழக்கு மியான் மரின் சிறுபான்மை மக்களான கரென் மற்றும் மோன் இன மக்கள் சுமார் 1 லட்சத்து 10 ஆயிரம் பேர் தாய்லாந்தில் அகதிகளாக தஞ்சமடைந்தனர்.
இதே போன்று 1996ல் ஷான் மாநில மற்றும் யங்கூன் நகர முஸ்லிகள் மீது 1996ல் நடந்த தாக்குதலில் அரசின் பங்களிப்பு கணிசமாக இருந்திருக்கிறது.
1997 பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்க ளில் மாநில சட்டம் ஒழுங்கு மற்றும் மறு நிர்மாண குழுவினரால் (State Law and Order Restoration Council - SLORC) முஸ்லிம்களுக்கு எதிராகத் தாக்குதல் தொடுக்கப்பட்டது.
அராகன் மாநில ரொஹிங்கியா முஸ்லிம்கள் கடுமையான சட்ட, பொருளாதார மற்றும் சமூக புறக்கணிப்புக்கு ஆளாகியுள்ளனர். பெரும்பாலான ரொஹிங்கியா முஸ்லிம்களுக்கு குடியுரிமையைக் கூட மறுத்திருக்கிறது அரசாங்கம்.
இதற்குக் காரணம், பிரிட்டீஷ் காலணி ஆதிக்கத்தின் துவக்கத்தில் இந்த ரொஹிங்கியா முஸ்லிம்களின் முன்னோர்கள் மியான்மரில் வசிக்கவில்லை என்றும், குடியுரிமை சட்டத்தில் இந்த அம்சம் கோரப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது. இதைக் காரணம் காட்டித்தான் குடியுரிமை மறுக்கப்பட்டுள்ளது.
ரொஹிங்கியா முஸ்லிம்கள் எதிர் கொள்ளும் சமூகப் பிரச்சினைகள் மிகவும் மோசமாகவே உள்ளது மியான்மரில்.
பங்களாதேஷிலிருந்து குடி யேறிய ரொஹிங்கியா முஸ்லிம் சிறுபான்மையினர் மியான்மர் அரசால் கடும் கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் பயணம் மேற்கொள்வதிலோ, பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடுவதிலோ பெரும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.
மியான்மரில் வெளிநாட்டுக் காரர்கள் நடத்தப்படும் அளவிற்குக் கூட இவர்கள் நடத்தப்படுவதில்லை. இம் முஸ்லிம்களுக்கு அயல்நாட்டு பதிவு அட்டை கூட வழங்கப்படுவதில்லை.
இவர்கள் தங்களின் கிராமப் பகுதியிலி ருந்து வெளியே செல்ல வேண்டுமானால் நகராட்சி அதிகாரிகளிடத்தில் இருந்து அனுமதி பெற வேண்டும்.இப்படி அனுமதி கோரினாலும் ரொஹிங்கியா முஸ்லிம்களுக்கு அதிகாரிகள் அனுமதி தருவதில்லை. சில நேரங்களில் லஞ்சம் பெற்றுக் கொண்டு அனுமதி தருவது வேறு விஷயம்!
பௌத்த குடிமக்களுக்கு மட்டுமே மேல்நிலைக் கல்வியை அனுமதிக்கிறது அரசு. இதற்கு அர்த்தம் ரொஹிங்கிய முஸ்லிம்கள் அரசாங்கத்தால் நடத்தப்படும் பள்ளிகளில் ஆரம்ப கல்வியைத் தாண்டி படிக்க முடியாது என்பதே! ஏனெனில் இவர்கள் குடிமக்களாக அங்கீகரிக் கப்படவில்லை.
ரொஹிங்கியா மக்கள் சிவில் சர்வீஸ் பணியில் நியமிக்கப்படுவதில்லை. ஒரு முஸ்லிமுக்கு பயணம் செய்வதிலும் குறிப்பிட்ட வழிபாடு செய்வதிலும் கட்டுப்பாடுகள்  விதிக்கப்பட்டுள்ளன.
மியான்மரில் புதிய பள்ளிவாசல்கள் கட்டவும், ஏற்கெனவே இருக்கின்ற பள்ளிவாசல்களை விரிவுபடுத்தவும் தடை செய்யப்பட்டுள்ளது.
ஒரு மில்லியன் ரொஹிங்கியா முஸ்லிம்களில் பெரும்பான்மையினர் மியான்மர் சட்டத்தின்படி குடிமக்களாக கருதப்படுவதில்லை. அதனால் இவர்கள் குடிமக்களாக நடத்தப்படுவதில்லை. இவர்கள் நகராட்சியின் அனுமதி பெறாமல் வெளியே செல்ல முடியாததால், மருத்துவம், வேலை வாய்ப்பு,உயர் கல்வி போன்றவற்றை மேற்கொள்ள முடியாத சூழ்நிலை உள்ளது. அதிகாரப்பூர்வ அனுமதி வாங்க இவர்கள் பணம் செலுத்த வேண்டும் என்கிறது சர்வதேச பொதுமன்னிப்பு சபையான ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல்.
இதுபோன்ற தாக்குதல்கள் மியான்மர் முஸ்லிம்கள் மீது தொடரும் நிலையில், சிரியா, எகிப்து போன்ற நாடுகளில் மூக்கை நுழைக்கும் ஐ.நா. சபை மியான்மர் முஸ்லிம்கள் விஷயத்தில் அலட்சியம் காட்டுவதுதான் ஏன் என்று புரியவில்லை!
                     ஒற்றுமை காலத்தின் தேவை, சன்மார்க்கக் கடமை
''முஷ்ரிகீன்களில் நீங்களும் ஆகிவிடாதீர்கள். அவர்கள் தங்கள் மார்கத்தில் பிரிவினையை உண்டு பண்ணி (பல) பிரிவுகளாகப் பிரிந்து விட்டனர்.(அவர்கள்) ஒவ்வொரு வகுப்பாரும் தங்களிடமுள்ளதை வைத்து சந்தோஷப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.'' (ஸுரா : அர்ரூம் :32)
''எவர்கள் தங்கள் மார்க்கத்தை (தம் இஷ்டப்படி) பிரித்து (அவர்களும்) பல பிரிவுகளாகப் பிரிந்து விட்டனரோ அவர்களுடன் உமக்கு எத்தகைய சம்பந்தமும் இல்லை.'' (அல் அன்ஆம் :159)
ரஸுலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'நீங்கள் ஒருவரையொருவர் வெறுத்துக் கொள்ளாதீர்கள்; பொறாமை கொள்ளாதீர்கள்;(பகைத்துக்கொண்டு) புறம் காட்டிச் செல்லாதீர்கள். அல்லாஹ்வின் அடியார்களாகிய நீங்கள் சகோதரர்களாக விளங்குங்கள். மேலும் ஒரு முஸ்லிம் தனது சகோதரனை மூன்று நாட்களுக்கு மேல் பகைத்துக்கொண்டிருத்தல் கூடாது.' (புகாரி,முஸ்லிம்)
இன்றைய உலகம் பூகோள ரீதியில் இஸ்லாத்தினதும், முஸ்லிம் சமூகத்தினதும் எழுச்சியை, மறுமலர்ச்சியைக் கண்டுகொண்டிருக்கிறது. எவராலும் மறுக்கமுடியாத அளவுக்கு இவ்வெழுச்சி படியாத பாமரர், படித்த வாலிபர் உட்பட ஆண், பெண் எல்லோரையும் தழுவிய உலகின் சந்து பொந்துகளிலெல்லாம் வியாபித்து நிற்கும் ஒன்று என்ற வகையில் மிகவும் பலமிக்கதாக விளங்குகின்து.
இந்த உலகலாவிய இஸ்லாமிய எழுச்சியானது முஸ்லிம்கள் சிறுபான்மையினராக பல வாழும் நாடுகளிலும் கூட அதன் தாக்கத்தை ஏற்படுத்துத்தியுள்ளது. ஆயினும் இவ்வெழுச்சிக்கு பல தடைகள் உருவாகியுள்ளமை கவலைக்குறியதாகும். அவை இவ்வெழுச்சியின் விளைவுகளைத் தாமதப்படுத்தியும், இல்லாமல் செய்தும் வருகின்றன. அத்தiகைய தடைகளுள், குறிப்பிட்ட சிலரது அவசரப்போக்கு, நிதானமற்ற அணுகுமுறைகள், தீவிரப்போக்கு ஆகியன குறிப்பிடத்தக்கவை.
1. தீவிரமும் நிதானமின்மையும்
இங்கு நாம் 'தீவிரம்;' என்ற சொல்லை இஸ்லாத்தின் எதிரிகள் குறிக்கும் 'தீவிரவாதம்' என்ற கருத்தில் பயன்படுத்தவில்லை. அவர்களோ தூயமுஸ்லிம்கள் அனைவரையும் மதத்தீவிரவாதிகள், அடிப்படைவாதிகள், பயங்கரவாதிகள் போன்ற பெயர்களில் சுட்டுகின்றனர். ஆயினும் இஸ்லாத்தின் பெயரால் சிலர் மேற்கொள்ளும் சில நடவடிக்கைகள் எதிரிகளின் இத்தகைய குற்றச்சாட்டுக்களை உண்மைப்படுத்துவது போல அமைவதுதான்; வேதனைக்குரியதாகும். இத்தகையவர்களின் நிதானமற்ற போக்கு இஸ்லாமிய எழுச்சியையும் அதனடியாக எழுந்துள்ள இஸ்லாமிய மறுமலர்ச்சியையும் பெரிதும் பாதித்து வருகின்றது. எனவே இத்தகையவர்கள் நிதானத்தைக் கைக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும். 'அவசரப்படுதல் ஷைத்தானிலிருந்தும் உள்ளது. நிதானமும் அமைதியும் அல்லாஹ்விடமிருந்தும் உள்ளது.' என்ற நபிமொழி எமது கவனத்திற் கொள்ளத்தக்கதாகும். (திர்மிதி)
'ஷிர்க்' போன்ற பெரும் பாவங்களை எதிர்ப்பதிலும், ஒழிக்க முற்படுவதிலும் கூட நிதானம் கடைபிடிக்கப்படல் வேண்டும்; நன்மையான விடயங்களை செய்வதில் கூட அளவு கடந்த அவசரமும், நிதானமிழந்த போக்கும் வரவேற்கத்தக்கதல்ல. இன்று உலக மட்டத்திலும் சரி எமது நாட்டு மட்டத்திலும் சரி எமது அவசரத்தின் காரணமாகவும், நிதானமிழந்த போக்குகளின் காரணமாகவும் நாம் பல கஷ்டங்களை அனுபவித்தும,; நஷ்டங்களை அடைந்தும் வருகின்றோம். சமூக மாற்றம் என்பது ஓரிரவில், ஒருபகலில் ஏற்படக்கூடியதல்ல என்பதை நாம் உணர வேண்டும். அது படிப்படியாக, கட்டம் கட்டமாக ஏற்படக் கூடியதாகும். அத்தகைய மாற்றம்தான் ஆரோக்கியமானதும் நிலைக்கக் கூடியதுமாகும். அவசரத்தில் தோன்றுகின்ற செயற்கையான மாற்றங்கள் போலியானவை. நிலைக்காதவை.
எமது முயற்சிகளுக்குரிய விளைவுகளை நாம் கண்டேயாக வேண்டும் என்று சிந்திப்பதும் அதற்காக எத்தகைய வழிமுறைகளையும் கையாள முயற்சிப்பதும் இஸ்லாமிய அணுகுமுறைகளல்ல. முயற்சிப்பதே எமது கடமை; விளைவுகள் அல்லாஹ்வின் கரங்களில். நாம் எமது முயற்சிகள் பற்றி விசாரிக்கப்படுவோமேயன்றி விளைவுகள் பற்றி கேட்கப்படமாட்டோம். மேலும் எமது இலக்குகள் புனிதமானவையாக இருப்பது போலவே அவற்றை அடைவதற்கான வழிமுறைகளும் புனிதமானவையாக அமைதல் வேண்டும் என்ற இஸ்லாமிய சட்டவிதியை நாம் மறந்துவிடக்கூடாது.
2. வேற்றுமைகளும் முரண்பாடுகளும்
இன்றைய இஸ்லாமிய எழுச்சிக்கு உருவாகியுள்ள மற்றுமொரு பெருந்தடை எம்மத்தியில் தோன்றியுள்ள வேற்றுமைகளும் முரண்பாடுகளுமாகும். அசத்தியக் கொள்கைகளைக் கொண்டவர்கள் கூட தம்மத்தியிலுள்ள வேற்றுமைகளை மறந்து ஒற்றுமை காண முயற்சிக்கின்ற காலமிது. தம்மத்தியில் பயங்கர முரண்பாடுகளைக் கொண்ட பல சக்திகளும் இன்று இஸ்லாம் என்ற பொது எதிரியைச் சந்திப்பதற்காக உடன்பட்டுச் செயற்படுவதைக் காண முடிகின்றது. இந்நிலையில் முஸ்லிம்களாகிய நாம் ஒற்றுமையில் வேற்றுமையைத் தேடுபவர்களாக இருக்கின்றமை எவ்வளவு துரதிஷ்டமானது.!
இன்று நாம் எல்லா வளங்களையும், பலங்களையும் நிறைவாகப் பெற்றிருந்தும் எமது விவகாரங்களில் அடுத்தவர் தலையிடும் அளவுக்கும் தீர்மானங்கள் எடுக்கும் அளவுக்கும் உலக அரங்கில் பலயீனர்களாக மாறியுள்ளமைக்கு பிரதானமான காரணம் எமது ஐக்கியமின்மையாகும். அல்-குர்ஆன் இந்நிலைமையைப் பின்வருமாறு விளக்குகின்றுது:
''நீங்கள் உங்களுக்குள் சர்ச்சைப்பட்டுக் கொள்ளாதீர்கள்; அவ்வாறாயின் நீங்கள் தைரியத்தை இழந்து உங்கள் வலிமை குன்றிவிடும்'' (அன்பால்: 46)
நாம் எமது முரண்பாடுகளைக் கண்டு கொள்வது போல எம் மத்தியிலுள்ள உடன்பாடுகளைக் கண்டுகொள்வததில்லை. அவற்றை நாம் காண்பதை ஷைத்தான் விரும்புகின்றானில்லை. எம் மத்தியில் பகைமையும், குரோதமும் நிலைக்க வேண்டுமென்பதுதானே அவனது விருப்பம்.
நாம் முரண்படுகின்ற விடயங்கள் ஐந்து என்றால் உடன்படுகின்ற அம்சங்கள் ஐம்பது இருக்கின்றன. இவ்வுண்மையை எம்மால் புரிந்து கொள்ள முடியுமென்றிருந்தால் எமது சமூக, சன்மார்க்க நிலைகள் எவ்வளவு ஆரோக்கியமடையும்.! 'அர்க்கானுல் ஈமான்' எனும் ஈமானின் அடிப்படைகளிலும், 'அர்க்கானுல் இஸ்லாம்' எனும் இஸ்லாமியக் கடமைகளிலும் எம்மத்தியில் பலத்த கருத்து வேறுபாடுகள் இல்லை என்றே கூற வேண்டும். அணுகுமுறைகளிலும்தான் சில உடன்பாடற்ற நிலைகள் காணப்படுகின்றன. இத்தகைய விடயங்களில் முரண்பட்ட நிலைப்பாடுகளை எடுப்பதில் தவறில்லை. ஒவ்வொருவரும் தத்தமது நிலைப்பாடுகளுக்கு உரிய சன்மார்க்க ஆதாரங்களை கொண்டிருக்கும் வரை எத்தகைய ஆட்சேபனையும் தெரிவிப்பதற்கில்லை.
ஒரு விடயத்தில் நான் ஒரு கருத்தை கொண்டிருக்கலாம், மற்றொருவர் அதில் என்னோடு முரண்படுகின்ற போது அவர் முஃமினாக இருக்கும் வரை அவருடன் மிகவும் பண்பாடாக நடந்து கொள்ள வேண்டும் என்பது மார்க்கக்கடமையாகும்.
'இது விடயத்தில் எனது கருத்து சரியானது. அது பிழையாக இருக்கவும் இடமுண்டு. இது விடயத்தில் அடுத்தவரின் கருத்து பிழையானது. அது சரியாக இருக்கவும் இடமுண்டு.' இக் கூற்று எமது முன்னோர்கள் கருத்து வேறுபாடுகளின் போது கைக்கொண்ட ஒரு சிறந்த உதாரணமாகும்.
காபிரகளுடன் கூட ஆதாரங்களை முன்வைத்து அழகாகவும், பண்பாடாகவும் விவாதிக்குமாறு அல்குர்ஆன் பணிக்கின்றது.''மேலும் அவர்களுடன் சிறந்த (பண்பாடன) முறையில் விவாதிப்பீராக.'' (16:125) ஆனால், நாமோ நமது சகோதர முஸ்லிம்களுடன் முரண்படுகின்ற போதெல்லாம் காரசாரமான வாதப்பிரதிவாதங்களிலும் தர்க்க குதர்க்கங்களிலும் ஈடுபடுகின்றோம். ஈமானிய உறவை மறந்து சொல்லம்புகளால் தாக்குகின்றோம். சொல்லால் மட்டுமன்றி கையால், கல்லால் அடிக்கவும் நாம் தயங்குவதில்லை. சில போது எமது நிலைப்பாடுகளை நியாயப்படுத்துவதற்காக அடுத்த சகோதரர்கள் மீது பழி சுமத்துவதற்கும், அபாண்டங்களைக் கூறுவதற்கும் நாம் துணிந்து விடுவதுண்டு. மொத்தத்தில் மார்க்கத்தின் பெயரிலேயே அது கூறும் சகோதரத்துவம், அன்பு, ஒத்துழைப்பு, சகிப்புத்தன்மை, விட்டுக் கொடுக்கும் மனப்பாங்கு முதலான பண்புகளுக்கு நாம் சாவு மணி அடிக்கின்றோம். முஃமின்கள் தம்மத்தியில் அன்புடனும் ஆதரவுடனும் இருப்பார்கள். நளினமாகவும் நயமாகவும் நடந்து கொள்வார்கள் என்றெல்லாம் குறிப்பிடும் அல்குர்ஆனின் போதனைகளை காற்றில் பறக்க விடுபவர்களாக நாம் இருக்கின்றோம்.
3. குறைந்த சன்மார்க்க அறிவு
உண்மையில் எமது நாட்டைப் பொறுத்தவரையில் எம்மத்தியில்லுள்ள பிரிவுகளும் பிரிவினைகளும் பெரும்பாலும் எமது சன்மார்க்க அறிவிலுள்ள குறைபாட்டினால் உருவானவையாகும். இவ்வாறு சன்மார்க்க அறிவிலுள்ள கோளாரின் காரணமாகவே ஒவ்வொரு குழுவினரும் தாம் மாத்திரமே சரி என்றும் தம்மை மாத்திரம் நல்லஅமைப்பாக இனம் காட்டி தம்முடன் சிற்சில விடயங்களில் முரண்படுகின்ற பிற இஸ்லாமியச் சகோதரர்களை அதற்கு அப்பால் இருப்பவர்களாக பிரச்சாரம் செய்து வருகின்றார்கள். மேலும் முஸ்லிம் சமூகத்தில் தஃவாக்களத்தில் - அறிவும் அறிவும் மோதுவதாக தெரியவில்லை. அறிவும் அறியாமையும் முட்டிக்கொள்வதையும் காண்பது அரிது. அறியாமையும் அறியாமையுமே முட்டி மோதி, சமூகத்தில் புரளிகளைக் கிளப்புவதைப் பார்க்க முடிகின்றது. மேலும் குறுகிய இயக்க வாதங்கள், தனிமனித பலவீனங்கள், தப்பபிப்பிராயங்கள் முதலானவையும் சமூகத்தின் ஒற்றுமைக்கு வேட்டு வைத்து வருகின்றன.
4. உலமாக்களின் கடமை
இவ்வாரோக்கியமற்ற நிலை மிக அவசரமாக மாற்றப்படல் வேண்டும.; இல்லாத போது இன்று நாம் காணும் இஸ்லாமிய எழுச்சியின் விளைவுகள் பூச்சியமாகி விடும் பேராபத்து ஏற்படுவதை தவிர்க்க முடியாமல் போய்விடும். இங்கு உலமாக்களின் பணி அவசியமாக வேண்டப்படுகின்றது. குறுகிய இயக்க வாதங்களை மறந்து அவர்கள் சமூகத்தின் ஒற்றுமைக்காக உழகைகும் மகத்தான பொறுப்பை சுமந்தாக வேண்டும்.
இஸ்லாமிய வரலாற்றின் எல்லாக் காலங்களிலும் முஸ்லிம் உம்மத் பலயீனமுற்ற சந்தர்பங்களிலெல்லாம் அதனை பலப்படுத்தி கட்டிக்காத்த பெருமை அவ்வக்கால உலமாக்களையே சாரும். இறையச்சமும், நிறைந்த அறிவும், துணிச்சலுமிக்க ஒரு தலைமைத்துவம் எம் சமூகத்திற்கு இன்று தேவைப்படுகின்றது. இது ஒரு தனிமனித தலைமைத்துவமாகவன்றி ஒரு கூட்டு தலைமைத்துவமாக அமைவதே தற்போதைக்கு சாத்தியமானதாகும்.


திங்கள், மே 18, 2015

வியக்க வைக்கும் தகவல்கள்

ஜம் ஜம் அதிசயம்


மக்காவில் தெளிவான அத்தாட்சிகள் உள்ளன என்று இவ்வசனம் 3:97 கூறுகிறது.
தெளிவான் அத்தாட்சி என்றால் யாருக்கும் எந்தச் சந்தேகமும் ஏற்படாத வகையில் மக்கள் கண்டு களிக்கும் வகையிலும் எந்தச் சோதனைக்கு உட்படுத்தப்பட்டாலும் அத்தாட்சி என்பது நிரூபணமாகும் வகையிலும் இருக்க வேண்டும். மனிதன் இன்னும் கண்டறியாத சான்றுகள் பல இருக்கலாம். மனிதன் கண்டறிந்த சான்றுகளில் முதன்மையானது ஜம்ஜம் எனும் கிணறாகும்.
இப்ராஹீம் நபி அவர்கள் தமது மனைவி ஹாஜரா (அலை)  அவர்களையும் மகன் இஸ்மாயீலையும் அப்போது மக்கள் குடியிருக்காத வெட்ட வெளியில் இறைவனின் கட்டளைப்படி குடியமர்த்தினார். குழந்தை இஸ்மாயீல் தண்ணீரின்றி தத்தளித்த போது வானவர் ஜிப்ரீல் வந்து அந்த இடத்தில் அடித்து ஒரு நீருற்றை ஏற்படுத்தினார், அது தான் ஜம்ஜம் எனும் கிணறாகும்.
இந்தக் கிணறு மாபெரும் அற்புதமாக இஸ்லாம் உண்மை மார்க்கம் என்பதை நிரூபிக்கும் சான்றாக இருக்கிறது.
கிணற்றின் அளவு
இந்தக் கிணறு 18 அடி அகலமும் 14 அடி நீளமும் கொண்டதாகும்.
இந்தக் கிணற்றில் தண்ணீரின் ஆழம் எப்போதும் சுமார் ஐந்து அடியாகும்.
இந்தக் கிணற்றில் இருந்து ஒவ்வொரு விநாடியும் தண்ணீர் இறைக்கப்பட்டுக் கொண்டே உள்ளது. வருடத்தின் எல்லா நாட்களிலும் மக்கள் அங்கே குழுமுகிறார்கள். ஹஜ் காலத்திலும் ரமலான் மாதத்திலும் சுமார் 20 லட்சம் மக்கள் அங்கே குழுமுகிறார்கள். அனைவருக்கும் இந்தக் கிணற்றில் இருந்து தான் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.
ஒவ்வொருவரும் 20 லிட்டருக்குக் குறையாமல் அந்தத் தண்ணீரைத் தமது சொந்த ஊருக்கும் எடுத்துச் செல்கிறார்கள்.
குறைந்த ஆழம் உள்ள இந்தக் கிணறு, பாலைவனத்தில் அமந்துள்ள இந்தக் கிணறு, அருகில் ஏரிகளோ கண்மாய்களோ குளம் குட்டைகளோ இல்லாத அந்தக் கிணற்றில் இருந்து எப்படி லட்சோப லட்சம் மக்களுக்கு தண்ணீர் வழங்கப்படுகிறது என்பது முதலாவது அற்புதமாகும்.
எந்த ஊற்றாக இருந்தாலும் சில வருடங்களிலோ பல வருடங்களிலோ செயலிழந்து போய் விடும். ஆனால் இந்த ஊற்று பல ஆயிரம் ஆண்டுகளாக வற்றாமல் இருப்பது இரண்டாவது அற்புதமாகும்.
எந்த ஒரு நீர் நிலையாக இருந்தாலும் பாசி படிந்து போவதும் கிருமிகள் உற்பத்தியவதும் இயற்கை. இதனால் தான் குளோரின் போன்ற மருந்துகள் நீர் நிலைகளில் கலக்கப்படுகின்றன. ஆனால் ஜம்ஜம் தண்ணீரில் அது உற்பத்தியான காலம் முதல் இன்று வரை எந்த மருந்துகள் மூலமும் அது பாதுக்காக்கப்படாமல் தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்வது மூன்றாவது அற்புதமாகும்.
மருந்துகளால் பாதுகாக்கப்படாத தண்ணீர் குடிப்பதற்கு ஏற்றதாக இருக்காது என்பது அறிவியலின் முடிவாகும். ஆனால் இந்தத் தண்ணீர் 1971 ஆம் ஆண்டு ஐரோப்பிய சோதனைச் சாலையில் சோதித்துப் பார்க்கப்பட்ட போது இது குடிப்பதற்கு மிகவும் ஏற்ற நீர் என்று நிருபிக்கப்பட்டது.
பொதுவாக மற்ற நீரில் இருந்து ஜம்ஜம் தண்ணீர் வேறுபட்டுள்ளதும் சோதனையில் தெரிய வந்துள்ளது. கால்ஷியம் மற்றும் மேக்னீஷியம் எனும் உப்பு மற்ற வகை தண்ணீரை விட ஜம்ஜம் தண்ணீரில் அதிகமாக உள்ளது. இந்த உப்புக்கள் புத்துணர்ச்சியைக் கொடுக்கக் கூடியவை. இதை அனுபவத்தில் உணரலாம். மேலும் இந்தத் தண்ணீரில் ஃபுளோரைடு உள்ளது. இது கிருமிகளை அழிக்க வல்லது. அங்கே அற்புதம் நடக்கிறது இங்கே அற்புதம் நடக்கிறது என்றெல்லாம் பலவாறான நம்பிக்கை மக்கள் மத்தியில் நிலவுகிறது. அது போல் இதையும் கருதக் கூடாது. மற்ற அற்புதங்கள் எல்லாம் எந்த சோதனைக்கும் உட்படுத்தப்படாதவை. நிருபிக்கப்டாமல் குருட்டு நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டவை. ஆனால் தினசரி 20 லட்சம் மக்களுக்கு அந்தத் தண்ணீர் குடி நீராகப் பயன்படுவதும், பாலைவனத்தில் இந்த அதிசயம் பல்லாயிரம் ஆண்டுகள் நடந்து வருவதும் எல்லாவித சோதனைக்கும் உட்படுத்தப்பட்டு நிரூபிக்கப்பட்டு உள்ளதால் இது மெய்யான அற்புதமாகும். இது போன்ற அற்புதம் உலகில் இது ஒன்று தான் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை.
சுருக்கமாக ஜம்ஜம் நீரின் விசேஷங்களைக் கூறுகிறேன்.
 
இந்த கிணறு என்றும் வறண்டதில்லை. மாறாக தேவையை என்றும் பூர்த்தி செய்துள்ளது.
என்றும் அதனுடைய உப்புகளின் அளவும் சுவையும் ஒரே மாதிரியாக  அது உருவான காலத்திலிருந்து உள்ளது.
அதன்குடிக்கத்தக்க தன்மைஒவ்வொரு ஆண்டும் உம்ரா  ஹஜ் யாத்திரகைக்காக வரும் அனைவராலும் என்றுமே உலக அளவில் ஏற்றுக் கொள்ளத்தக்கதாக இருந்தது. ஆனால் அதைப் பற்றி குறைகள் எப்போதும் வந்ததில்லை; – மாறாக அவர்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கின்றது என்று மகிழ்ந்துள்ளனர். நீரின் சுவை இடத்திற்கு ஏற்ப மாறும். ஆனால் ஜம்ஜம் நீரின் சுவை ஒரே மாதிரி(universal)..
பொதுவாக நகரசபை தண்ணீரை கெமிகல் மூலமோ க்ளோரின் மூலமோ சுத்தம் செய்வது போல் இந்த நீர் என்றும் செய்யப்பட்டது இல்லை. பாசி போன்ற நுண்ணுயிர்கள் பெரும்பகுதியான கிணறுகளில் இருப்பதால் சுவையும்  மணமும் மாறி குடிக்கும் தன்மையை பாதிக்கும். ஆனால் ஜம்ஜம் கிணற்றில் இந்த வகையான நுண்ணுயிரகளின் வளர்ச்சிக்கு அடையாளமே இல்லை.
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு ஹாஜரா (அலை) தன் பச்சிளங்குழந்தை இஸ்மாயில் (அலை) அவர்களின் தாகம் தணிக்க   நீருக்காக சஃபா  மர்வா குன்றுகளுக்கிடையே ஏக்கத்துடன் தேடினார்கள். அவர்கள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திருக்கு ஓட குழந்தை காலை பூமியில் உதைத்துக் கொண்டிருக்க நீர் வீழ்ச்சியாய் இறையருளால் வந்தது தான் இந்த ஜம்ஜம் கிணறு.ஒட்டகத்தைப்பற்றி அதிசயம்

ஒட்டகத்தைப்பற்றி ஓரளவுகூட அறியாத ஐரோப்பியர்களால் சொல்லப்பட்ட தவறான உவமானம்தான்பாலைவனக்கப்பல்’.
ஏனென்றால், " 'சஃபீனத்-அஸ்-ஸஹாரா ' என்று எந்த பண்டைய அரபி இலக்கியங்களிலாவது எழுதப்பட்டு இருக்கிறதா?" என்றால்... அரபிகள்முழிக்கிறார்கள். ஏதோ சில ஆங்கில அறிவு பெற்றவர்களுக்கு மட்டும்தெ ஷிப் ஆப் தெ டெசெர்ட்என்றால் தெரிந்திருக்கிறது. அநேகமாய், தங்கள் மகத்தான கண்டுபிடிப்பானகப்பலில்’, மத்தியதரைக்கடலை கடந்து வடக்கு ஆப்பிரிக்காவில் கால்வைத்த ஐரோப்பியர்கள், ஒட்டகத்தையும் பாலைவனத்தையும் முதன்முதலாக பார்த்துவிட்டு.. கடலுக்கு கப்பல்பிரயாணம் - பாலைக்கு ஒட்டகபிரயாணம் என்று மட்டுமே உணர்ந்து சொன்ன வாக்கியமாக இருக்கலாம்.
மழை, புயல், காட்டாற்று வெள்ளம், சூறாவளி, பனிப்பாறை, மணல்திட்டு, அடித்தள ஓட்டை, சுனாமி போன்ற எந்த ஒரு இயற்கைச்சீற்றத்துக்கும் திடீர் ஆபத்துக்கும் ஈடு கொடுக்க முடியாமல் இரண்டாக உடைந்து தலை குப்புறக்கவிழ்ந்து மூழ்கும் கப்பல் என்ற மனிதனால் கட்டப்பட்ட ஓர் உயிரற்ற வஸ்து என்பது...., கடும் குளிர், கடும் வெப்பம், கொதிக்கும் மணல், புழுதிக்காற்று, புல்பூண்டு & தண்ணீர் அற்ற வறட்சியில் மாதக்கணக்கில் பிரயாணம் என்று அனைத்து இயற்கை தாக்குதல்களையும் சளைக்காமல் வெற்றிகரமாய் எதிர்கொண்டு பீடுநடைபோடும் இறைவனின் நுண்ணிய படைப்பானஒட்டகத்துக்கு.... எப்படி ஒப்பாகும்?
நிச்சயமாக பாலைவனத்தில், தனிச்சிறப்பு வாய்ந்த தனக்கு ஒப்புமை அற்ற ஒட்டகமானது, பொதுவாக தாவர உண்ணி வகையைச்சேர்ந்த பாலூட்டி பிரிவைச்சார்ந்த ஒரு வீட்டுவிலங்கு. 250 லிருந்து 680 கிலோ எடை வரை வளரும்இவை, பொதுவாக 50ஆண்டுகள் வரை உயிர்வாழ்கின்றன..! ஒட்டகத்தின் மிகவும் புகழ்பெற்ற பண்பு, நீரில்லாமல்... உணவில்லாமல்... பாலைவனத்தில் பலநாள் வாழக்கூடியது, அதுவும் மாமூலாக செய்யக்கூடிய அனைத்து வேலைகளையும்செய்து கொண்டே..!
ப்படியென்றால், சூரியனின் வெப்பம் கொளுத்தும் கோடையில், கொதிக்கும் மணலில்50°செல்சியஸ் வெப்பத்தில் உணவின்றி நீரின்றி நாட்கள் வரை... தன் எடையில்22%இழந்தபின்னும் உயிர் வாழும்..! இதை ஒரு மனிதன் முயற்சித்தால், அவன் தன் உடலில் 8%எடையை எட்டாவது நாள் இழக்க வேண்டிவரும். ஆனால், அதற்கு முன்னரே 36-வது மணிநேரத்திலேயே அவன் இறந்திருப்பான். காரணத்தை போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் சொல்லும் :- ‘அவன் உடம்பில் 88%நீர்ச்சத்துதான் இருந்ததுஎன்று..! ஏனென்றால், அநேக பாலூட்டிகள் தன் உடம்பில்12% நீர்ச்சத்தை இழந்தாலே இறந்துவிடும். ஆனால், ஒட்டகமா,அப்போது தன் உடலில் உள்ள நீர்ச்சத்தில் 40%- இழந்தும் உயிர்வாழ்கும்..! இதல்லாம்கோடை காலத்திற்கு சொன்னதுதான். கடும் குளிர் காலத்திலோ ஆறுமாதம் வரை கூட ஒட்டகம் இப்படி நீரின்றி உணவின்றி உயிர்வாழும்..! அதேநேரம், அப்போது, மேய்வதற்குப் புல் போன்ற சிறிது உணவு கிடைத்தால் கூட போதும், அடுத்த 10மாதங்கள் வரையிலும் கூட நீர் அருந்தாமல் இருக்கக்கூடியது..! இடையில் சிறிது தண்ணீர் கிடைத்து விட்டால்... கேட்கவே வேண்டாம்... அந்த கால அளவு இன்னும் பலமடங்கு எகிறும்..!
சிலமாதம் நீர் அருந்தாமல் இருந்த உலர் நிலையில் இருந்து மீண்டு நீர்அருந்தும்பொழுது தன் உடலில் மூன்றில் ஒரு பங்கு எடை அளவிற்கு நீரை10நிமிடத்தில் குடித்துவிடும்..! (அதாவது 450 கிலோ எடைகொண்ட ஓர் ஒட்டகம் 150 லிட்டர் தண்ணீரை பத்து நிமிடத்தில் குடித்துவிடும்..!) அப்படி நீர் அருந்தியவுடன் 10 நிமிடங்களில் உடலில் நீர்ச்சத்துஏறிவிடும்..! அதன் இரப்பையில் உள்ள நீர்அறைகளில்நீரை தற்காலிகமாக ஏற்றிக் கொள்கிறது..! அங்கிருந்து உறிஞ்சப்பட்டு இரத்தத்தின் சிகப்பு அனுக்களில் ஏற்றிசேமித்துக்கொள்கிறது..! அப்போது அச்சிவப்பணுக்கள்அதன் உண்மையானஅளவை விட 240% விரிந்துஇடமளிக்கிறது..! பிற விலங்குகளில் நீரற்ற உலர் நிலையில் இருந்து இவ்வளவுவிரைவாக நீரை இரத்தத்தால் உறிஞ்சிக்கொள்ள முடியாது. ஏனெனில் இரத்தத்தில் திடீர் என்று இவ்வளவு நீர்த்த நிலை ஏற்பட்டால் சிவப்பணுக்கள்,வெடித்துவிடும். ஆனால் ஒட்டகத்தின் சிவப்பணுக்களின் சவ்வுப்படலம் 240%அளவு விரிந்து கொடுக்கும் தன்மை கொண்டதால்இவ்வாறு நிகழ்வதில்லை..!
மனிதன் உட்பட எந்த ஒரு விலங்கும் அப்போதையை நிலையில் தேவைக்கு அதிகமாக இவ்வளவு தண்ணீர் குடித்தபின் தேவையற்ற அனைத்தையும் சிறுநீராகவே வெளியேற்றிக்கொண்டு இருக்கும். ஆனால், ஒட்டகமோ...தன்னுடைய சிறுநீரையும்குறைத்துக்கொள்ளும்..! ஒட்டகத்திற்கு இருப்பது போல் சக்தி வாய்ந்த சிறுநீரகம் வேறு எதற்கும் கிடையாது..! நம்முடைய சிறுநீரில் அதிகபட்சமாக தாது கழிவுகள்சதமும் 92 சதம் நீரும் இருக்கும். ஆனால் ஒட்டகத்தின் சிறு நீரில் 40 சதத்திற்கும் அதிகமான கழிவுகளும்குறைவான நீரும் இருக்கும் அந்த அளவிற்கு குறைவான நீரைக் கொண்டு கழிவை வெளியேற்றும் சத்தி வாய்ந்தது அதன் சிறுநீரகம்..! நம்முடைகிட்னியாகஇருந்தால் எப்போதோ செயலிழந்திருக்கும்.அதுமட்டுமில்லை, இரத்தத்தில் யூரியா அளவு அதிகரித்து இறந்து விடுவோம். ஆனால், ஒட்டகம் மட்டும் எப்படி அதிக யூரியாவினால் பாதிப்படையவில்லை என்றால், அதன்விசேஷ லிவர்ஆனது யூரியாவை மட்டும் இரத்தத்தில் இருந்து தனியே பிரித்து எடுத்து அதை புரோட்டீனாகவும் தண்ணீராகவும் மாற்றி விடுகிறது..!
ஒட்டகத்தின் சாணத்தை அது போட்ட ஒரு சில மணி நேரத்தில் எரிபொருளாக பயன்படுத்தி விடலாம்என்ற அளவிற்கு உலர்ந்த நிலையில் சக்கையை மட்டும் வெளியேற்றும் சக்தி வாய்ந்தது..! பசு... சிறுநீர்/சாணம் வழியாக 20 லிட்டர் நீரை ஒரு நாளைக்கு வெளியேற்றுகிறது. ஆனால் ஒட்டகம் லிட்டர் நீரை கூட இழப்பதில்லை..! அவை அனைத்தையும் ஒட்டக பாலாக மனிதன்கறந்து கொள்ளலாம். கிடைத்ததை சாப்பிட்டுவிட்டு பத்து பசுமாடு கொடுக்கும் பாலை ஒரு ஒட்டகம் கொடுக்கிறது..! பசுவின் உடல் சூடு ஒரு குறிப்பிட்ட அளவை தாண்டி விட்டால் பால் சுரப்பு நின்று விடும். ஆகவே அதை கொட்டகையில் நிழலில் வைத்து அதன் மேல் நீரை ஊற்றியோஅல்லது /சி செய்யப்பட்டகுளுகுளுஇடத்தில் வைத்தோ பராமரிக்க வேண்டும். ஆனால் ஒட்டகம் அப்படி அல்ல. பலநாட்கள் வெயிலிலேயே நின்றாலும் கூட பால் கொடுக்கும்..! பசுவிற்கு நிறைய தண்ணீர் கொடுக்க வேண்டும்.
இல்லையென்றால் ஒன்று பால் நின்றுவிடும் அல்லது பாலில் கொழுப்பு 30% அதிகரித்துபால் குடிக்க முடியாத நிலைமைக்கு மாறிவிடும். ஆனால் ஒட்டகம் அப்படி அல்ல. கடுமையான கோடையில் கூட குறைந்த அளவு நீரை குடித்துவிட்டு தன் குட்டிக்கும் பாலை கொடுத்துவிட்டு 15லிருந்து 20 லிட்டர்வரை நமக்கும் பால் கொடுக்கும்..! மேலும் பத்து நாட்கள் வரை நீர் கிடைக்காவிட்டால் கூட அதே தரத்தில் அதே அளவு பாலை கொடுக்கும்..! ஒட்டகப் பாலில் பசும்பாலை விட மூன்று மடங்கு விட்டமின் ‘C’ அதிகம் உள்ளது..! இது காய்கறிகள்பழங்கள் போன்றவை அரிதாக கிடைக்கும் பாலைவன மக்களுக்கு மிக்க அவசியமான உணவு..!
சரி... பாலைவனத்தின் கடும் குளிரையும் கடும் கோடை வெப்பத்தையும் ஒட்டகம் எப்படி தாங்குகிறது?.
ஒட்டகத்தின் ரோமமும்தோலும் அப்படி ஒரு தடிமனானது மட்டுமின்றி அதற்குசிறந்த வெப்ப தடுப்பானாக பயன்படுகிறது..! அது மட்டுமல்ல. கடும் குளிருக்கும் வெயிலுக்கும் ஏற்ப ஒட்டகம் தன் உடலின் வெப்பநிலையை 34°C லிருந்து41.7°Cவரை (93°F-107°F.) சுயமாக மாற்றிக்கொள்ளும்..! இப்படி தன் உடல் வெப்பத்தை அதுவாகவே குளிரில் 34° செல்சியஸ் வரை குறைத்துக்கொள்வதால், வெளியில் உறைபனி நிலையில் கடுங்குளிர் காற்று அடித்தாலும் தாக்குப்பிடிக்கிறது..! அதேநேரம், கடும் கோடை வெப்பக்காலங்களில் வெளியில்55° செல்சியஸ் என்று கொளுத்தும்போது, வெப்பம்கடத்தா தன் தடிமனான தோலினாலும், தன் உடல்வெப்பநிலையை 41° செல்சியஸ் வரை கூட்டிக்கொண்டும், தன் உடல் வியர்வையை வெளியிடாமலேயே கடும் வெப்பத்திலும் தாக்குப்பிடிக்கிறது..! இதனால் உடல்நீர் வியர்வை மூலம் விரயமாவதும் தடுக்கப்படுகின்றது..! இந்நிலையிலேயே, ஒட்டகம் ஒன்று ஏறத்தாழ200 கிலோ கிராம் எடையைச் சுமந்துகொண்டு ஒரு நாளைக்கு 50 கிலோ மீட்டர் தொலைவு நடக்கவும் செய்யும்..! சிறுதொலைவு ஓட்டப்பந்தயம் வைத்தால் மணிக்கு 65 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடவும் செய்யும்..!
நம்முடைய மூச்சை ஒரு கண்ணாடியின் மேல் விட்டுவிட்டு கண்ணாடியை நோக்கினால் அங்கே ஈரம் படர்வதை காணலாம். நாம் 1-லிட்டர் காற்றைசுவாசித்து வெளியேற்றினோம் என்றால்16மில்லி கிராம் நீரை இழந்திருப்போம். கடும்வெப்பக்காற்றை சுவாசிக்கும் ஒட்டகம் அக்காற்றை ஈரப்படுத்துகிறது..! ஆனால், அதேநேரம், ஒட்டகத்தின் வெளிவிடும் மூச்சில் ஈரம் மனிதனைவிட பல மடங்கு குறைவாக இருக்கும்..! ஏனென்றால் மற்ற எதற்குமில்லாத விசேட மூக்கமைப்பு தான் இதன் காரணம்..! அது சுவாசித்து வெளியேற்றும் காற்றில் உள்ள ஈரத்தில்,மூன்றில் இரண்டு பகுதியை வெளியேறி விடாமல் தடுத்து விடுகிறது..!மேலும், பல மைல்களுக்கு அப்பால் உள்ள நீரை கூட மோப்ப சத்தியால் அறிந்து கொள்ளும் சக்தி வாய்ந்தது அதன் மூக்கு..!
ஒட்டகத்தின் பாத அமைப்பு வித்தியாசமானது..! வெடித்த இருகுளம்புகளையும் சேர்த்து மிக அகன்றவட்ட வடிவினாலான தட்டையான பாதத்தை கொண்டது. முன்புறம் அதன் இரு குளம்புகளும் விரிந்து கொள்ளும் காரணத்தால் 500 கிலோ வரை எடையுள்ள ஒட்டகம் 450 கிலோ வரை சுமையை சுமந்து கொண்டு மணலில் கால்கள் புதைந்து விடாமல் நிலைதடுமாறி கீழே விழுந்துவிடாமல் கொதிக்கும் மணலிலும் ஓட முடிகிறது..! அப்போது, அதன் பாத குளம்புத்தோல் மிகத்தடிமனானதால் கடும் வெப்பத்தினாலும் பாதிக்கப்படாது..!
மனிதர்கள் விலங்குகள் ஆகிய அனைத்திற்கும் கால்களில் இரண்டுமடக்கும் மூட்டு இணைப்புகளை மட்டுமே பார்த்திருப்பீர்கள். ஆனால் ஒட்டகத்திற்கு மட்டும் மூன்றுமடக்கும்இணைப்புகள் இருக்கும்..! அதனால் தான் ஒட்டகத்தால் எளிதாக பாலைவன மணலின் மேடு பள்ளங்களில் ஏறி இறங்க முடிகிறது..! மனிதர்கள்அதன்மீதுஏறி இறங்க விரும்பினால், உடன் எவ்வளவு சூடாக கொதிக்கும் மணலிலும் உடனே முட்டிபோட்டு மண்டி இடும்..! அப்படி மண்டி இடும்போது அதன் முட்டுக்காலிலும்,  கால் குளம்புத்தொளைப்போன்றே தடிமனான வெப்பத்தினால் பாதிக்கபடாத தோல் அங்கும் அமைந்துள்ளது..! ஒட்டகத்தின் கால்கள் நல்ல உயரமானதாக இருப்பது ஏனென்றால், கடும் கோடையில் பாலைவனத்தில் ஒட்டகம் நடக்கும்போதுகொதிக்கும் மணலின் அனல் உக்கிரம் அதன் வயிற்றுப்பகுதி உடம்பில் தாக்காமல் இருக்கத்தான்..! மேலும் உயரமான கால்கள் அதிக எடை சுமக்கவும் அவசியமாகிறது..!
அடுத்து பாலைவனம் என்றாலே புழுதிக்காற்று... மணற்புயல்... பிரசித்தம். அப்படி, மணலோடு சேர்ந்து காற்று வீசும் பொழுது ஒட்டகம் (நாம் நம் வீட்டு ஜன்னலை மூடுவது போல்) மூக்கை மூடிக்கொள்ளும்..! தன்கையால் இல்லைங்க.. அதன் மூக்காலேயே..! அதன் காதுகளின் உள்ளேயும், வெளியேயும் அமைந்திருக்கும் முடிகள்மணலோதூசியோ காதுகளுக்குள் சென்று விடாமல் தடுத்து விடுகிறது..! அதன் இரண்டடுக்கு கண் இமையில் உள்ள நீண்ட சீப்பு போன்ற தடித்த நெருக்கமான முடிகள் ஒன்றன் உள் ஒன்றாக கோர்த்துக்கொண்டமணற்புயலிலிருந்து கண்ணிற்குமுழுப்பாதுகாப்பு அளிக்கிறது..! கண்களுக்கு கீழே உள்ள இமை போன்ற திரை அமைப்பு வாகனத்தின் வைப்பர் போல செயல்பட்டு கண் பரப்பை சுத்தப்படுத்திகூடுதலாய் கண்களுக்கு பாதுக்காப்பை அளிக்கிறது..! கண்ணிலும் அதன் கண்ணிற்கு மேலே அமைந்துள்ள முகடு போன்ற எலும்பமைப்பும்புருவமும் பாலைவனத்து சூரியனின் பிரகாசமானவெளிச்சம் கண்களைதாக்கி விடாமல் வெளிச்சத்தை பாதியாக தடுத்து விடுகிறது..! அதன் தலையின் ஓரத்தில் கண்கள் அமைந்து இருப்பதால் தலையை திருப்பாமல் எல்லா இடத்தையும் ஒரே நேரத்தில் பார்க்கும் வசதியுள்ளது ஒட்டகம்..! பாலைவனத்தின் சூட்டில் கண்கள் காய்ந்து விடாமல் இருப்பதாற்காக அதிகமான நீரை சுரந்து கண்களை ஈரம் குறையாமல் வைத்துக் கொள்கிறது சுரப்பிகள்..!
பாலைவனம் என்றாலே சப்பாத்திக்கள்ளி, கற்றாழை போன்ற முட்செடிகள் தான் அதிகமாக கிடைக்கும. அதை மேய்வதற்காக அழுத்தமான ரப்பர் போன்ற உதடுகள் கொண்டது ஒட்டகம்..! அதன் உதட்டில் குத்தும் முட்களே உடைந்து விடும் அளவுக்கு தடிமனானது அதன் உதடு..! அந்த விசேஷ உதட்டமைப்பு நாக்கை நீட்டாமல் மேய உதவுகிறது..! புழுதிக்காற்றில் கண்ணைமூடிக்கொண்டு சகட்டுமேனிக்கு பிளாஸ்டிக், தகரம், ஒயர், மண்ணாங்கட்டி என்று கண்டதையும் திண்ணும்..! அதையெல்லாம் தனித்தனியே பிரித்து செரிக்கும் வேலையை அதன் நான்கு அரை கொண்ட விசேஷ இரைப்பை பார்த்துக்கொள்கிறது..! அவசரமாக சாப்பிட்டதை ஆரஅமர நிதானமாய் மீண்டும் வாய்க்கு கொண்டுவந்து அசைபோட்டு உள்ளே தள்ளும்..!
மேலும், இந்த அதிசயப் பிராணி உணவும்,நீரும் கிடைக்கும் பொழுது அவை தேவைக்கதிகமாகஉண்ணப்பட்டு கொழுப்பாக மாற்றப்பட்டு அதன் முதுகில் திமில் அல்லது திமில்களாக சேமித்துக்கொள்கிறது..! சுமார் 45 கிலோ எடை இருக்கும் அந்த திமிலில் அதிகமாக கொழுப்பு இருக்கும்..! உணவோநீரோ கிடைக்காத காலத்தில் அதன் திமிலின் கொழுப்பில் உள்ள ஹைட்ரஜனோடு அது சுவாசிக்கும் காற்றில் உள்ள ஆக்ஸிஜனை கலந்து நீராகவும்உணவாகவும் அவ்வப்போது தேவைக்கேற்ப ஆக்சிகரணம் செய்து மாற்றிக் கொள்கிறது..! ஒரு திமில் அல்லது இரு திமில் கொண்ட இருவகையான ஒட்டகங்கள் உள்ளன..! அவற்றில் இரு திமில் ஒட்டகங்கள் அதிக சக்தி பெற்றவை என்று தனியாகவேறு சொல்ல வேண்டுமா?
அதிலிருந்து இது தோன்றியதுஇதிலிருந்து அது தோன்றியதுஎன்று மற்ற மிருகங்களைப் பற்றியெல்லாம் ஏதாவது ஒரு காமடிவிளக்கமாவது கொடுக்கும் 'பரிணாம உலகம்''ஒட்டகம் எந்த மிருகத்திலிருந்து பரிணாமம் பெற்றது' என்று கதை புனையவோ அல்லது புனைவை கதைக்கவோ இல்லையே, ஏன்?
இறைவனின் படைப்பாற்றலை புரிந்துகொள்ள இந்த ஒட்டகம் ஒன்று போதவில்லையா?
மணிக்கு கிலோ மீட்டர் வேகத்தில் ஒரு நாளைக்கு சுமார் 50 கீ.மீபயணம்செய்யும் ஒட்டகம்..., நீரும்உணவும்நல்ல சீதொஷ்ணமும் தாரளமாககிடைக்கும் ஐரோப்பாவை நோக்கியோ,தெற்கு ஆப்ரிக்காவை நோக்கியோமுறையே, அரேபிய பாலைவனத்திலும், சஹாரா பாலைவனத்திலும்முட்டாள் ஒட்டகம் எப்போதோ ஓடிபோயிருக்கலாமே..! இப்படிபாலைவனத்தில் கஷ்டப்பட வேண்டிய அவசியம் என்ன? இதை சிந்தித்தாலாவது, 'இது பாலைவாழ் மக்களுக்கு என்றே பிரத்தியேகமாய் இறைவன் படைத்து அளித்த அருட்கொடை' என்று உணரமுடியும்..!
அதனால்தான் இப்படி ஓர் அதிசய மிருகத்தை மானிடருக்கு படைத்தளித்த அல்லாஹ், முஹம்மத் நபி(ஸல்...) அவர்களிடம் இறை நிராகரிப்பாளர்களை சுட்டிகாட்டி தன் திருமறை குர்ஆனில்...
(நபியே) ஒட்டகம் எவ்வாறு படைக்கப்பட்டுள்ளது என்று அவர்கள் பார்க்கவேண்டாமா?" (88:17) என்று கேட்கிறான்.
சகோதரர்களே...!எது அறிவுப்பூர்வமானது என்று உங்கள்பகுத்தறிவைகேட்டுப்பாருங்கள்இறை மறுப்பாளர்களின் போலிவார்த்தைகள்பொலபொலத்து உதிர்ந்து விழுவதை எளிதில்உணராலாம்.


 மேகங்களும் - மழை உருவாகும் விதமும் !
தனது அருளுக்கு முன்னால் நற்செய்தியாக அவனே காற்றை அனுப்புகிறான். அது கனமான மேகத்தைச் சுமக்கும் போது இறந்து போன ஊருக்கு அதை ஓட்டிச் செல்கிறோம். அதிலிருந்து தண்ணீரை இறக்கிஅதன் மூலம் எல்லாப் பலன்களையும் வெளிப்படுத்துகிறோம். இவ்வாறே இறந்தவர்களையும் வெளிப்படுத்துவோம். (இதன் மூலம்) நீங்கள் படிப்பினை பெறக் கூடும்.
(
அல்குர்ஆன் 7:57)
சூல் கொண்ட காற்றுகளை அனுப்புகிறோம். அப்போது வானிலிருந்து தண்ணீரை இறக்கி உங்களுக்கு அதைப் புகட்டுகிறோம். அதை (வானில்) நீங்கள் சேமித்து வைப்போராக இல்லை.
(
அல்குர்ஆன் 15:22)
சூரியன் பூமியை சூடாக்குகின்றது. பூமி உள்வாங்கிய வெப்பத்தை வெளியிடுவதன் மூலம் அருகிலுள்ள காற்றை சூடாக்குகின்றது. சூட்டினால் காற்றினுடைய அடர்த்தி குறைவடைவதனால் புவியீர்ப்பு திசைக்கு எதிர் திசையில் சூடான காற்று மேலெழும்பும். இதை வெப்ப நீரோட்டம் அல்லது வெப்ப சலனம் என்று கூறுவர். பூமியின் மேற்பரப்பானது புல் தரைகட்டாந்தரைமணல்வெளிநீர்நிலை என மாறுபடுவதால் ஒரே சூட்டில் இருப்பதில்லை. இதனால் காற்றும் வௌ;வேறு உஷ்ணத்தில் சூடேற்றப்பட்டு பல இடங்களில் வேகமாகவும்சில இடங்களில் மெதுவாகவும் மேலெழும்புகின்றது. இவ்வாறு குறைந்த அழுத்த மண்டலத்தினுள் செல்லும் காற்று விரிந்து குளிர்கின்றது. இதனால் காற்றினுள் இருக்கும் நீராவியும் குளிர்ந்து வளிமண்டலத்திலுள்ள தூசு துணிக்கைகள்உப்பு ஆகியவற்றின் மீது மையம் கொண்டு திரண்டுபரவி திரவமாகவும்ஆவியாகவும் மிதக்கின்றது. இவ்வாறே நிறைய சிறு நீர்த்துளிகள் சேர்ந்து மேகம் உருவாகின்றது.
இவ்வாறு உருவாக்கப்படும் மேகங்கள் காற்றின் உதவியுடன் ஒன்று திரட்டப்பட்டு சில படிமுறைகளுக்குப் பின் மேகங்களிலுள்ள நீர் ஒடுங்கி மழையாக பூமிக்கு வந்து விழுகின்றது. இப்பொறியியல் (Mechanism) மீள் சுழற்சியாக (re cycle) நடைபெற்று வருகின்றது.
இதையே அல்லாஹ் சுருக்கமாகசூல் கொண்ட காற்றுகளை அனுப்புகிறோம். அப்போது வானிலிருந்து தண்ணீரை இறக்கி உங்களுக்கு அதைப் புகட்டுகிறோம் என அல்குர்ஆனில் தெளிவுபடுத்துகின்றான்.
அல்லாஹ் மேகங்களை இழுத்து அவற்றை ஒன்றாக்குவதையும்பின்னர் அதை அடுக்கடுக்காக அமைப்பதையும் நீர் அறியவில்லையாஅதன் மத்தியில் மழை வெளிப்படுவதைக் காண்கிறீர்! வானத்திலிருந்து அதில் உள்ள (பனி) மலைகளிலிருந்து ஆலங்கட்டியையும் இறக்குகிறான். தான் நாடியோருக்கு அதைப் பெறச் செய்கிறான். தான் நாடியோரை விட்டும் திருப்பி விடுகிறான். அதன் மின்னொளி பார்வைகளைப் பறிக்கப் பார்க்கிறது.                                                                          (அல்குர்ஆன் 24:43).
 
மேலுள்ள குர்ஆன் வசனத்திற்கேற்ப மழை மேகங்கள் திட்டமான படிமுறைகளுக்கு அமையவே ஒவ்வொரு வடிவங்களாக உருவாக்கப்படுகின்றன.
முதல் படித்தறம்:
காற்றின் மூலம் மேகங்கள் ஒன்று திரட்டப்படுகின்றன.
இரண்டாம் படித்தறம்:
காற்றானது சிறிய மேகங்களை ஒன்று சேர்த்து பெரிய மேக மூட்டத்தை உருவாக்கும்.
இவ்விரு படிமுறைகளையும் அல்லாஹ் மேகங்களை இழுத்து அவற்றை ஒன்றாக்குவதையும்பின்னர் அதை அடுக்கடுக்காக அமைப்பதையும் நீர் அறியவில்லையா?என அல்குர்ஆனில் அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.
மூன்றாம் படித்தறம்:
சிறிய மேகங்கள் எல்லாம் ஒன்றாகக் குவிவதன் மூலம் பெரிய மேக மூட்டம் தோன்றி இதன் நடுவில் நீர் ஆவியாகும் விகிதம் இதன் ஓரங்களை விட அதிகளவில் காணப்படும். இதனால் மேகமானது செங்குத்தான நிலையில் வளர்ச்சியடைந்து காணப்படும். இதனால் வளிமண்டலத்திலுள்ள குளிரான பிரதேசத்திற்கு இவ் வளர்ச்சியடைந்த பகுதி ஒடுங்கி பெரியளவில் ஆலங்கட்டியாக உருவெடுக்கும். நீர் ஆவியாகி இவ்வாறு ஆலங்கட்டியாக உருவாகி மேகத்தினூடாக மழையாக நிலத்தில் விழும். இதையே அல்லாஹ்அதன் மத்தியில் மழை வெளிப்படுவதைக் காண்கிறீர்! வானத்திலிருந்து அதில் உள்ள (பனி) மலைகளிலிருந்து ஆலங்கட்டியையும் இறக்குகிறான் எனக் குறிப்பிடுகின்றான்.
வானிலை ஆராய்ச்சியாளர்கள் மிக அண்மையில்தான் மேகங்களின் உருவாக்கம்,அமைப்புமழை உருவாகும் தொழினுட்பம் ஆகிய தகவல்களை நவீன தொழினுட்ப முறைகளின் மூலம் அறிந்துகொண்டனர்.
எழுதப் படிக்கத் தெரியாத உம்மி நபியாகிய முஹம்மது நபி (ஸல்) அவர்கள் 1400வருடங்களுக்கு முன்பு இவ் அறிவியல் உண்மையை தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை. எனவேஅல்குர்ஆன் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ்வால் அருளப்பட்ட இறைவேதம் என்பது இந்த இடத்திலும் எந்த சந்தேகமும் இன்றி நிரூபனமாகின்றது.மின்னல்
அச்சத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தக் கூடியதாக அவனே மின்னலை உங்களுக்குக் காட்டுகிறான். பளுவான மேகங்களையும் அவன் உருவாக்குகிறான்.
இடியும் அவனைப் புகழ்ந்து போற்றுகிறது. அவனைப் பற்றிய அச்சத்தினால் வானவர்களும் (புகழ்ந்து போற்றுகின்றனர்). இடி முழக்கங்களையும் அவனே அனுப்புகிறான். தான் நாடியோரை அவற்றின் மூலம் தண்டிக்கிறான். அவர்களோ அல்லாஹ்வைப் பற்றி தர்க்கம் செய்கின்றனர். அவன் வலிமை மிக்கவன்.
(
அல்குர்ஆன் 13: 12,13)
மழை மேகங்களிலுள்ள அணுக்கள் உராய்ந்தோ அல்லது பிற வழிகளிலோ மின்னோட்டம் பெற்று விடுகின்றன. (மின்னோட்டம் பெறும் வழிகள் இன்னும் முற்றிலுமாக விஞ்ஞானிகளால் அறியப்படவில்லை). இவ்வாறு மேகக் கூட்டங்கள் மின்னோட்டம் பெற்றிருக்கையில் எதிர் மின்னோட்டம் கொண்ட பிற மேகக் கூட்டங்கள் அருகே வரும்போது மின்னோட்ட ஈர்ப்பு விசையால் காற்றின் வழியாக மின் ஆற்றல் பாய்ந்து மின்னோட்டத்தை இழக்கின்றன. இவ்வாறு காற்றின் வழியே மின்னோட்டம் பாயும்போது இடியுடன் மின்னல் தீப்பொறி போல ஒளிக் கீற்றாய் தென்படுகின்றது. சில வேளைகளில் மின்னலானது மரத்தையோநிலத்தையோ தாக்கக்கூடியதாக இருக்கும்.
மேலுள்ள குர்ஆன் வசனத்தில் மின்னலைப் பற்றி அல்லாஹ் கூறுகையில்,அச்சத்தையும்எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தக் கூடியதாக அவனே மின்னலை உங்களுக்குக் காட்டுகிறான். பளுவான மேகங்களையும் அவன் உருவாக்குகிறான் எனக் கூறுகின்றான்.
அறிவியல் கண்டுபிடிப்புகள் மேலோங்கியுள்ள இக்கால கட்டத்திலேயே மேகங்களின் மூலம் மின்னோட்டம் ஏற்படும் முறை முற்றிலும் அறியப்படாது இருக்கும் நிலையில் எவ்வாறு 1400 வருடங்களுக்கு முன்பே முஹம்மது நபி (ஸல்) அவர்கள் பளுவாக மேகங்களினூடாக மின்னல் தோன்றுகின்றது என்ற அறிவியல் உண்மையை வெளிப்படுத்தி இருப்பார்கள்?
நிச்சயமாகஅல்குர்ஆன் அல்லாஹ்வின் வார்த்தைகள் தான் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
மனித உடல் - வியக்க வைக்கும் தகவல்கள்


கருப்பையில் கரு தரித்ததும் முதலில் உருவாவது இருதயம்தான்.
இருதயம் ஒவ்வொரு முறை துடிக்கும்போதும் 70 கன செண்டி மீட்டர் இரத்தத்தை தன்னிடமிருந்து வெளியே செலுத்துகிறது. இந்த இருதயம் இவ்வாறு ஒரு மனிதனின் சராசரி 70... மேலும் பார்க்க ஆண்டு கால வாழ்க்கையில் ஏறக்குறைய இரண்டரைக் கோடி முறைகள் சுருங்கி விரியும்.
இப்படி இடைவிடாமல் செயல்படும் இருதயம் வலுவிழந்து போய்விடாதா என்கிற சந்தேகம் தோன்றலாம். இருதயத்தின் வால்வுகள் சிறப்புத் தன்மைகள் மிக்க பாப்பிலரி எனும் தசைகளால் ஆனவை. எனவே அதிக வேலையின் காரணமாக வலுவிழந்து போகாமல் இருக்கின்றன. இருதயம் தொடர்ந்து இயங்க இதுவே காரணமாகும்.
இருதயத் துடிப்பானதுஒவ்வொரு துடிப்பிற்கும் இடையே வினாடியில் ஆறு பாகத்தில் ஒரு பாக நேரம் நின்று பின்பே துடிக்கிறது.
நம் மூளையில் ஆயிரம் கோடி உணர்ச்சி அணுக்கள் இருக்கின்றன. அதில் கார்டெக் எனும் பகுதி பல ஆண்டுகளாக நினைவுகளை வரிசைப்படுத்திச் சேமித்து வைத்து விடுகிறது.
நாம் உட்கொள்ளும் பிராணவாயுவிலும் உடலில் ஓடும் இரத்தத்திலும் ஐந்தில் ஒரு பங்கு மூளையினால்தான் பயன்படுத்தப்படுகிறது. நான்கு நிமிட நேரம் இவை கிடைக்காமல் போனால்மூளை தனது சக்தியை இழந்து விட்கின்றது.
ஆண்களை விட பெண்களுக்குத்தான் புத்திக்கூர்மை அதிகமாம். இடது கையால் எழுதுபவர்களுக்குவலது கையால் எழுதுபவர்களை விட புத்திக்கூர்மை அதிகம்.
இன்று பிரபலமாக இருக்கும் கணினிகள் ஒரு மூளையின் வேலையைச் செய்ய வேண்டுமானால் அதன் தற்போதைய சக்தியை 10 ஆயிரம் மடங்கு பெருக்க வேண்டியிருக்கும்.
மூளையிலிருந்து 12 இணை நரம்புகள் உடலின் பல்வேறு இயக்கங்களைக் கட்டுப்படுத்துகிறது.
மனிதனின் மூளை 100... மேலும் பார்க்க மில்லியன் துண்டுத் தகவல்களை நினைவில் வைத்திருக்க முடியும்.
நம் கண்கள் வெளிச்சத்தைப் பார்க்கும் போது ஒருவித இரசாயணக் கிரியை நடத்துகின்றன. இதனால் "டிரான்ஸ்ரெடினின்" என்னும் பொருள் உண்டாகிறது. இதேபோல் இருட்டினைப் பார்க்கும்போது "ரெடாப்சினின்" என்னும் பொருள் உண்டாகிறது. இதனால்தான் வெளிச்சத்திலிருந்து திடீரென்று இருளுக்குள் நாம் நுழைந்தால் கண் தெரிய சிறிது நேரமாகிறது.
உடலில் சராசரியாக 10,000,000,000,000,000,000,000,000,000 அணுக்கள் உள்ளன. அணுக்களின் வளர்ச்சியில்தான் உடலின் வளர்ச்சியே இருக்கிறது.
நம் உடலில் சுமார் 5லிட்டர் முதல் 6 லிட்டர் வரை இரத்தம் இருக்கிறது. இது அவரவர் எடையில் மூன்றில் ஒரு பங்காகும்.
உடலிலுள்ள இரத்த அணுக்களின் எண்ணிக்கை 35,000,000,000 ஆக இருக்கிறது. இந்த இரத்த அணுக்கள்தான் வேண்டிய இரத்தத்தை உற்பத்தி செய்கின்றன. இதில் இன்னொரு வகையான வெள்ளை அணுக்கள்தான் உடலுக்கு நிறத்தைக் கொடுக்கின்றன. ஒவ்வொரு நிமிடத்திற்கும் சுமார் 1,000,000 புதிய சிகப்பு அணுக்கள் உற்பத்தியாகின்றன.
இதயத்திலிருந்து சுமார் 60 முதல் 70 காலன் வரை இரத்தம் பம்ப் செய்யப்பட்டு வெளியேற்றப்படுகின்றது. இவ்வாறு வெளியேறிய இரத்தம் உடல் முழுவதும் சுற்றிவிட்டு 23 வினாடிகளில் மீண்டும் உள்ளே நுழைந்து விடுகிறது. ஒரு நாளில் சுமார் 3700 முறைகள் இரத்தம் இப்படி வருகின்றது.
மனித உடலில் இரத்தம் ஒரு நாளைக்கு சுமார் 60,000 மைல்களிலிலிருந்து 1,00,000 மைல்கள் வரை பயணம் செய்கிறது.
பிறக்கும்போது எலும்புகள் 270 இருந்தாலும் நாளடைவில் 206 எலும்புகளாகி விடுகின்றன. சில சிறிய எலும்புகள் பெரிய எலும்புகளுடன் இணைந்து விடுவதே இதற்குக் காரணமாகும்.
மோவாய் கட்டை எலும்புதான் மிக வலுவுடையதாகும். அது சுமார் 36,000 பவுண்டு எடையைக் கூடத் தாங்கக்கூடியது.
தசைகள் 639 தசைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒரு சதுர அங்குலத் தசை 55 முதல் 140 பவுண்டு வரை எடையைத் தாங்கும் என்று கூறுகின்றனர்.
நாம் ஒரு வார்த்தை பேச சுமார் 72 தசைகள் வேலை செய்ய வேண்டியிருக்கும்.
உடல் நடுங்கும் போது உடலில் ஐந்து மடங்கு உஷ்ணம் பிறக்கிறது.
நாளொன்றுக்கு மனிதன் குறைந்தது 50 அவுன்சுகள் சிறுநீரை வெளியேற்றுகின்றான்.
நம் தலைமுடி வெட்டப்படாமல் விட்டுவிட்டால்சராசரியாக 8 அடி வரை வளரும்.
மனிதன் எவ்வளவுதான் வேகமாக ஓடினாலும் ஒரு மணிக்கு 36 கிலோ மீட்டருக்கு மேல் ஓட இயலாது.
பிறந்த குழந்தை ஒரு நிமிடத்திற்கு ஒரு முறை சுவாசிக்கிறது. 16 வயதில் ஒரு நிமிடத்திற்கு 20 முறை சுவாசிக்கிறான்


ஒட்டகச்சிவிங்கி


பூமியில் வாழும் உயிரினங்களிலேயே மிகவும் உயரமானது ஒட்டகச்சிவிங்கி என்பது எல்லோருக்கும் தெரிந்த தகவல்.  ஒட்டகச்சிவிங்கியைப் பற்றி படிக்கப் படிக்க அதிசயமாக இருக்கும்.
சாதாரணமாக ஓர் ஆண் ஒட்டகச்சிவிங்கி 4.8 முதல் 5.5. மீட்டர் (16 அடி முதல் 18 அடி வரை) உயரம் இருக்கும். இந்த உயரமுள்ள ஒட்டகச்சிவிங்கியின் எடை 1300 கிலோ இருக்கும். இதன் ஆயுள்காலம் 25ஆண்டுகள்.
ஒரு நாளைக்கு 63 கிலோ எடை உணவை உட்கொள்ளும் என்கிறார்கள்.
இதன் நடை அலாதியானது.  பார்க்கச் சிரிப்பாகவும் விநோதமாகவும் இருக்கும். நடக்கும்போது ஒரு பக்கத்தில் உள்ள இரண்டு கால்களையும் ஒரே நேரத்தில் தூக்கி நடக்கும். இந்த நடைக்குப் பெயர் "பேஸ்' (ல்ஹஸ்ரீங்). ஒட்டகங்களும் இதே போலத்தான் நடக்கும்.  இந்தக் காரணத்தால் மிக நீளமான அடிகளை எடுத்துவைக்க இவற்றால் முடியும். அத்துடன் இதற்கான உடல் சக்தி செலவாவதும் குறைகிறதாம்.
மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் ஓடக்கூடியது. இதன் கொம்பை வைத்து ஆண், பெண் வித்தியாசத்தைக் கண்டுபிடிக்கிறார்கள். ஆணின் கொம்பு பெண்ணின் கொம்பை விட உயரமாகவும் உரோமங்கள் நிறைந்தும் காணப்படும். சிலவற்றுக்கு இரண்டு கொம்புகளும் இன்னும் சிலவற்றுக்கு 4 கொம்புகளும்கூடத் தலையில் காணப்படும்.  ஒட்டகச்சிவிங்கியின் உடலில் காணப்படும் வண்ணப் புள்ளிகளின் வடிவமைப்பு ஒன்றுக்கொன்று மாறுபடும்.
ஒரு நாளைக்கு அரை மணி நேரம் மட்டுமே தூங்கும்.  அதுவும் நின்றுகொண்டேதான்!  உட்கார்ந்தோ படுத்தோ தூங்கினால், எதிரிகள் தாக்கவரும்போது எழுந்துகொள்வதற்கே வெகு நேரம் பிடிக்கும்.  ஆகவே எப்போதும் நின்று கொண்டேதான் தூங்கும்.
இதன் இதயத்தின் எடை 11 கிலோ இருக்கும். நாக்கு கருப்பு நிறத்திலிருக்கும்.  உலக விலங்குகளிலேயே மிக நீண்ட கழுத்தையும் வாலையும் கொண்டது. சில ஆண் சிவிங்கிகளின் வால் எட்டு அடி நீளம்கூட இருக்குமாம்.
சில அறிவியலாளர்கள் ஒட்டகச்சிவிங்கிகள் ஒலி எழுப்பவதில்லை என்று கூறினாலும் ஒரு வகையான குரலொலி இருக்கத்தான் செய்கிறது.  இந்தச் சத்தம் மற்ற உயிரினங்களுக்குக் கேட்பதில்லை. வெளவால்கள் போல இன்ஃப்ராஸவுண்ட் எழுப்புகின்றன என்று முடிவு செய்திருக்கிறார்கள். இதன் நாக்கின் நீளம் 53 செ.மீ.
பெண் சிவிங்கியின் பேறுகாலம் 15 மாதங்கள். புதிதாகப் பிறந்த குட்டி 6 அடி உயரமும் 60 கிலோ எடையும் இருக்கும்.
ஒட்டகச்சிவிங்கியின் குட்டிகளைச் சிங்கம் மிகவும் விரும்பி வேட்டையாடும்.  சிங்கம் தனது குட்டியைத் தாக்க வருவதைப் பார்த்தால் ஆண் சிவிங்கி தனது நீண்ட கால்களுக்கிடையில் குட்டியை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளும்.  அப்படியும் சிங்கம் தாக்கினால், தனது முன்னங்கால்களால் ஓங்கி ஓர் உதை கொடுக்கும்.  இந்த உதையைத் தாக்குப் பிடிக்கமுடியாமல் சிங்கம் மயக்கம் போட்டு விடும்.  அவ்வளவு சக்திவாய்ந்த உதை!  சமயத்தில் சிங்கம் இறந்துகூடப் போய்விடும்.
இதனால் மற்ற விலங்குகள் - வரிக்குதிரைகள், மான்கள் போன்றவை தங்களுடைய பாதுகாப்புக்காக ஒட்டகச்சிவிங்கி கூட்டத்தோடு சேர்ந்து தங்களுக்கான உணவைத் தேடிக் கொள்ளும் வழக்கத்தை வைத்திருக்கின்றன.