இடுகைகள்

ஜூன், 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பெண்களுக்கு ஸகாத் கடமையா?

இஸ்லாத்தைப் பொறுத்தவரை , குடும்பப் பொருளாதாரப் பொறுப்பு ஆண்களுக்கானது என்பதால் , பணம் சம்பந்தப்பட்ட ஸகாத்தும் ஆண்களுடைய கடமையே என்கிற தவறான எண்ணமே பரவலாக நிலவுகிறது . இஸ்லாத்தில் ஈமான் , தொழுகை , நோன்பு , ஸகாத் , ஹஜ் ஆகிய ஐந்தும் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் கடமை என்றே கூறப்பட்டுள்ளதே தவிர , ஆண்களுக்கு ஐந்து கடமைகளும் , பெண்களுக்கு நான்கு மட்டுமே என்று சொல்லப்படவில்லை ! திருக்குர்ஆனில் , 31 இடங்களில் ஸகாத்தைப் பற்றிக் கூறும் இறைவன் , அவற்றில் ஒரு இடத்திலும் ஆண்களை மட்டும் விளித்துச் சொல்லவில்லை . ” ஈமான் கொண்டவர்களே ” என்றுதான் பொதுவாக அழைத்துச் சொல்கிறான் . இன்னும் சொல்லப்போனால் , ஒரு இடத்தில் குறிப்பாக பெண்களைத்தான் அழைத்து ஸகாத் கொடுக்கச் சொல்கிறான் : [33:33] ( நபியின் மனைவிகளே !) ..... தொழுகையை முறைப்படி உறுதியுடன் கடைப்பிடித்து தொழுங்கள் ; ஜகாத்தும் கொடுத்து வாருங்கள் . ஆகவே குடும்பத்தின் பொருளாதார பொறுப்பனைத்தும் ஆணின் மேல் உள்ளதால் பெண்கள் , தம்முடைய ஸகாத்திற்கும் ஆணே பொறுப்பு என்று தவறாக எண்ணி தட்டிக்