வெள்ளி, ஏப்ரல் 29, 2016

இஸ்லாம் உருவாக்க விரும்பிய சமூக அமைப்பு


சமூகக் கட்டமைப்புச் சீராக அமைய சமூகத் தொடர்புகள் சீர்பெற வேண்டும். இந்த வகையில் சமூகத் தொடர்பில் அயலவர்கள் முக்கியமானவர்களாவர். குடும்பங்கள் அருகருகே வசிக்கும் போது அந்தக் குடும்பங்களுக்கு மத்தியில் சீரான தொடர்பாடல் இருக்க வேண்டும்.
இஸ்லாம் அண்டை அயலவருடன் அழகிய முறையில் நடப்பதை ஈமானின் அங்கமாகக் குறிப்பிட்டுள்ளது. இருப்பினும் இஸ்லாமியப் பற்றுள்ள, இஸ்லாமிய ரூபத்தில் வாழக் கூடிய பலரும் அயலவருடன் பகைமையை வளர்த்துக் கொண்டு வழக்கு-வம்பு என வாழ்ந்து வருகின்றனர். இஸ்லாமிய சமூகக் கோட்பாட்டுக்கு இது முரணான நடைமுறையாகும். எனவே, அயலவருடன் நாம் பழகும் போது தவிர்க்க வேண்டிய சில அம்சங்களைச் சுருக்கமாக முன்வைக்க விரும்புகின்றோம்.
பொறாமை கொள்வது:
தனது அண்டை அயலவர் நலமுடன் வாழ்வதை விரும்ப வேண்டிய முஸ்லிம், அவர்கள் மீது பொறாமை கொண்டு வாழ்வதைப் பார்க்கின்றோம். அயலவர்களின் பிள்ளைகள் கல்வியில் முன்னேறுவது, அவர்களுக்குத் தொழில் கிடைப்பது, பக்கத்து வீட்டுப் பெண்ணுக்கு நல்ல மாப்பிள்ளை கிடைப்பது, அயலவரின் பொருளாதார வளர்ச்சி என அனைத்தையும் பொறாமைக் கண் கொண்டு நோக்கும் நிலை நீடிக்கின்றது.
ஈமானும், பொறாமையும் ஒரு உள்ளத்தில் ஒன்றாக இருக்க முடியாது. சிலர் எல்லை மீறி அயலவருக்குக் கிடைக்கும் நன்மைகளைக் கூட கெடுக்க முற்படுவர். மற்றும் சிலர் கோல்ச் சொல்லித் திருமணங்களையும், கொடுக்கல்-வாங்கல்களையும் தடுத்து விடுவர். பொறாமை கொள்வதும், அதன் அடிப்படையில் செயற்படுவதும் ஹறாமாகும். எனவே பொறாமையைத் தவிர்த்தல் வேண்டும். அதிலும் குறிப்பாக அயலவர் மீது பொறாமை கொள்வது கடுமையான ஹறாமாகும்.
அயலவர் இரகசியங்களை அம்பலப்படுத்துவது:
“வீட்டுக்கு வீடு வாசல் படி” என்பர். எல்லா வீட்டிலும் குறைகளும், குழப்பங்களும் இருக்கவே செய்யும். அவரவர் குறைகளை அவரவர் மறைத்து வாழவே ஆசைப்படுகின்றனர்.
எனது குறையோ, எனது குடும்பத்துக் குறையோ மக்கள் மன்றத்திற்கு வந்து விடக் கூடாது என்பதில் கரிசனையாக இருக்கும் நான், எனது அயலவரின் குறைகளை மக்கள் மன்றத்திற்குக் கொண்டு வருவது பெரும் துரோகம் அல்லவா? எனவே, அயலவரின் இரகசியங்களைப் பேண வேண்டும். அவர்களது குடும்ப விவகாரங்களையோ, குழந்தைகளின் குறைகளையோ வெளியில் சொல்வதைத் தவிர்க்க வேண்டும்.
குறை தேடுதல்:
சிலர் எப்போதும் அண்டை வீட்டின் மீது ஒரு கண் வைத்திருப்பர். அங்கே என்ன நடக்கின்றது? என்ன பேசுகின்றார்கள்? என உளவு பார்ப்பர். இது மார்க்கத்தில் தடுக்கப்பட்டதாகும்.
“ஒட்டுக் கேட்காதீர்! உளவு பார்க்காதீர்!” என நபி(ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்கள். எனவே, பொதுவாகப் பிறர் குறை தேடும் குணம் தடுக்கப்பட்ட ஒரு இழிகுணமாகும். அதிலும் குறிப்பாக அயலவர்களின் குறைகளைத் தேடுவதைத் தவிர்க்க வேண்டும்.
அத்துமீறுவது:
சிலர் அயலவர் விடயத்தில் வரம்பு மீறி நடந்துகொள்கின்றனர். தமது கால்நடைகளை அவிழ்த்து விட்டு அவர்களது விவசாயங்களை அழிக்கின்றனர். வேலியின் எல்லையை மாற்றி அநியாயம் செய்கின்றனர்.
“காணியின் வேலி எல்லையை மாற்றுபவனை அல்லாஹ் சபிப்பானாக!” (முஸ்லிம்) என நபி(ஸல்) அவர்கள் கூறியிருப்பது குறித்து இவர்களுக்குக் கவலையே இல்லை.
மற்றும் சிலர் கழிவு நீரை அயலவர் பக்கம் திருப்பி விட்டு அநியாயம் செய்கின்றனர். மற்றும் சிலர் அயலவரின் குழந்தைகளை நோவினை செய்கின்றனர். மற்றும் சிலர் அயலவரின் வீட்டுப் பொருட்களைத் திருடுகின்றனர்.
மிக்தாத் இப்னுல் அஸ்வத்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்;
நபி(ஸல்) அவர்கள், “திருட்டைப் பற்றி என்ன நினைக்கின்றீர்கள்?” எனக் கேட்டார்கள். அதற்கு நபித் தோழர்கள், “அல்லாஹ்வும், அவனது தூதரும் அதைத் தடுத்துள்ளனர். அது ஹறாமாகும்!” என்று கூறினர். அப்போது நபி(ஸல்) அவர்கள், “பத்து வீடுகளில் திருடுவதை விட தனது அண்டை வீட்டில் திருடுவது பாரதூரமானதாகும்!” எனக் கூறினார்கள்.
(அஹ்மத் 23854, அதபுல் முஃப்ரத், தபரானீ)
எனவே, அயலவர் விடயத்தில் அத்துமீறுவதும் அவர்களது பலவீனத்தைப் பயன்படுத்தி அநியாயம் செய்வதும் பெரும் குற்றமாகும் என்பதைப் புரிந்து இக்குற்றத்திலிருந்து விலகி நடப்பது கட்டாயமாகும்.
அயலவர் விரும்பாதவர்களுக்கு வீட்டைக் கூலிக்குக் கொடுத்தல்:
எனது வீட்டை நான் கூலிக்குக் கொடுப்பதாக இருந்தால் கூட அயலவர் நலன் பாதிக்காத விதத்தில் நடந்துகொள்ள வேண்டும். சிலர் பக்கத்து வீட்டாரைப் பழி வாங்குவதற்காகவே சண்டைக்காரர்களுக்கும், குடிகாரர்களுக்கும் வீட்டை வாடகைக்கு வழங்குகின்றனர். இது தவறாகும்.
இமாம்களான அஹ்மத்(றஹ்) மற்றும் மாலிக்(றஹ்) ஆகியோர் வீடு தன்னுடையது என்றாலும், அயலவர்களுக்குத் தீங்கிழைக்கும் விதத்தில் அதிலிருந்து ஒருவர் பயன் பெற முடியாது என்பதை வலியுறுத்தியுள்ளனர்.
(ஜாமிஉல் உலூம் வல்ஹுக்ம் 1/353)
இந்த வகையில் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பெண்கள் குடியிருக்கும் இடத்தில் இளைஞர்களைக் குடியமர்த்துவது, நல்லவர்களுக்கு மத்தியில் பாவிகளையும், கெட்டவர்களையும் குடியமர்த்துவது அல்லது முஸ்லிம்களுக்கு மத்தியில் காஃபிர்களைக் குடியமர்த்துவது அல்லது மக்கள் குடியிருப்புக்கு மத்தியில் மக்களுக்குத் தீங்கிழைக்கும் இரசாயணக் கழிவுகளை வெளியேற்றக் கூடிய தொழிற்சாலைகளுக்கு வாடகைக்குக் கொடுப்பது போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.
அத்துடன் ஒருவர் ஒரு காணியை விற்பதாக இருந்தால் கூட முதலில் தன் அயலவர்களிடம் கேட்க வேண்டும். அவர்கள் வாங்கும் எண்ணம் இல்லையென்றால் பிறருக்கு விற்கலாம். ஆனால் இன்று, விற்கும் வரை அயலவருக்குத் தெரிந்து விடக் கூடாது என்றுதான் நினைக்கின்றனர். அயலவர்களும் பக்கத்துக் காணி விற்கப்படுகின்றது என்றால் ஏதேனும் குறைகளைக் கூறி விலையில் வீழ்ச்சியை உண்டுபண்ணும் விதத்தில்தான் நடந்துகொள்கின்றனர்.
இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் அவர்கள் அறிவிக்கிறார்கள்;
நபி(ஸல்) அவர்கள் “எவரிடத்தில் ஒரு காணி இருந்து, அவர் அதை விற்க விரும்புகின்றாரோ, அவர் முதலில் தன் அயலவரிடம் அதை விற்பதற்குக் காட்டட்டும்!” எனக் கூறினார்கள்.
(இப்னுமாஜா 2493, தபரானீ)
இன்று சிலர் காணி விற்பது என்றாலே பக்கத்து வீட்டாரைப் பழி தீர்ப்பதற்காகவே விற்கின்றனர். காலம் பூராக இவர்கள் கஷ்டப்பட வேண்டும் என்பதற்காக மோசமானவர்களுக்கு விற்கப்படுகின்றது. சிலர் தமது ஊரைப் பழி தீர்க்க ஊருக்குள் காஃபிர்களுக்குக் காணி விற்கின்றனர். மதுபானக் கடைக்குக் காணியைக் கொடுத்து ஊரைப் பழி வாங்க முற்படுகின்றனர். இது ஹறாமாகும்.
நல்லுறவைப் பேணாமை:
சிலர் பிறர் பற்றி அலட்டிக்கொள்வதில்லை. அடுத்தவர் துன்ப-துயரங்களில் பங்கெடுக்க மாட்டார்கள். இஸ்லாம் இதை விரும்பவில்லை. ஸலாம் கூறுவது நோய் விசாரிப்பது, விருந்தளிப்பது, விருந்துக்கு அழைத்தால் பதிலளிப்பது, மரண நிகழ்ச்சிகளில் பங்கேற்பது எனச் சமூக உணர்வுடன் வாழும்படி இஸ்லாம் கட்டளையிட்டுள்ளது. பிற முஸ்லிமுடன் இந்த ஒழுங்குகளைப் பேண வேண்டும் எனும் போது அயலவருடன் இது விடயத்தில் கூடுதல் அக்கறையுடன் நடத்தல் அவசியமாகும்.
உணவு விடயத்தில் பொடுபோக்கு:
சிலருக்கு அல்லாஹ் வாழ்க்கை வசதிகளை அளித்திருப்பான். இவர்கள் அண்டை வீட்டாரின் உணவுத் தேவை குறித்து அக்கறையின்மையுடன் நடந்துகொள்வர். தேவைக்கு அதிகமாகச் சமைத்து மீதியைக் குப்பையில் கொட்டுவர். ஆனால், அடுத்த வீட்டான் உண்ண உணவின்றி நொந்து போயிருப்பான். மற்றும் சிலர் தமது பிள்ளைகளுக்குப் பல்சுவைக் கனி வர்க்கங்களையும், உணவுகளையும் கொடுத்து விட்டு அவற்றின் தோல்களையும், பெட்டிகளையும் அடுத்த வீட்டுப் பிள்ளைகள் காணும் விதத்தில் போட்டு விடுவர். இதனால் பக்கத்து வீட்டுப் பிள்ளைகள் ஏக்கத்துடன் பார்க்கும் போதும், தமது பெற்றோரிடம் இது போன்று தமக்கும் வாங்கித் தருமாறு வற்புறுத்தும் போது அவர்கள் படும் வேதனையோ இவர்களுக்கு விளங்குவதில்லை.
இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்;
“தனது அண்டை வீட்டான் பசித்திருக்கும் போது தான் மட்டும் வயிறு புடைக்க உண்பவன் முஃமினாக மாட்டான்!” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(ஹாகிம், தபரானீ, அதபுல் முஃரத்)
அபூதர் கிஃபாரி(ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்;
“எனது நேசத்திற்குரிய தோழர் நபி(ஸல்) அவர்கள் எனக்கு வஸிய்யத்துக் கூறும் போது, “நீ சமைக்கும் போது ஆணத்தை அதிகப்படுத்துவாயாக! அதன் பின்னர் பக்கத்து வீட்டார்களுக்கும் அதைக் கொடுப்பாயாக!” எனக் கூறினார்கள். (முஸ்லிம், அஹ்மத்)
ஒரு கூட்டம் வயிறு நிறைய உண்ண, அவர்களிலொருவர் உணவு அற்ற நிலையில் பசியுடன் காலைப் பொழுதை அடைந்தால் அந்தக் கூட்டம் அல்லாஹ்வின் பாதுகாப்பை இழந்து விடும் என்ற கருத்தையும் நபி(ஸல்) அவர்கள் பொன்மொழிகளில் காணலாம்.
(அஹ்மத் 2/33, இப்னு அபீஷைபா 6/104, பஸ்ஸார் 1311)
எனவே, அண்டை-அயலவரின் உணவு நிலை என்ன என்பதை அறிந்துகொள்ள வேண்டும். உணவுப் பரிமாற்றம் அன்பையும், நட்பையும் வளர்க்கும். இது விடயத்தில் வசதியுள்ளவர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
அன்பளிப்பின் மூலம் அன்பை வளர்த்தல்:
அன்பளிப்புக்கள் அன்பை வளர்க்கும்; கோபத்தையும், பகைமையையும் தணிக்கும்; உறவை வளப்படுத்தும். எனவே, அண்டை-அயலவர்களுக்கு அன்பளிப்புகள் கொடுப்பதன் மூலம் உறவை வலுப்படுத்திக்கொள்ள வேண்டும். அன்பளிப்புகள் மிகப் பெறுமதியானதாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. சின்னப் பொருளாக இருந்தாலும் அது அன்பை வளர்க்கும்.
அன்பளிப்புச் செய்யும் போது ஒரு வீட்டைத் தாண்டி மற்றொரு வீட்டுக்கு அன்பளிப்புச் செய்யக் கூடாது. ஏனெனில், அது ஒரு வீட்டின் அன்பை ஏற்படுத்தும் அதே வேளை, மற்றொரு வீட்டின் வெறுப்பைப் பெற்றுத் தந்து விடும்.
ஆயிஷா(ரலி) அவர்கள், நபி(ஸல்) அவர்களிடம் “அல்லாஹ்வின் தூதரே! எனக்கு இரண்டு அயலவர்கள் இருக்கின்றார்கள். இவர்களில் யாருக்கு நான் அன்பளிப்பளிப்பது?” எனக் கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் “யாருடைய வீட்டு வாசல் உங்களுக்கு மிக நெருக்கமாக இருக்கின்றதோ அவர்களுக்கு!” என்று கூறினார்கள். (புகாரி 2259, 2595, 6020)
எனவே, நமது வீட்டுக்கு மிக நெருக்கமாக இருப்பவர்களுக்கு அன்பளிப்பில் முன்னுரிமையளிக்க வேண்டும். அண்டை-அயலவர்களுக்கு அன்பளிப்புச் செய்வது சின்னச் சின்ன மனஸ்தாபங்களை அழித்துப் பெரிய பிரச்சினைகளைக் கூடச் சின்னதாக மாற்றி விடும் தன்மை கொண்டதாகும்.
அன்பளிப்பு விடயத்தில் ஆணவங்கொள்ளல்:
அயலவர் அன்பளிப்புச் செய்த பொருள் அற்பமானது என்றாலும், அதை அலட்சியம் செய்யாது அவர்களது அன்பை மதித்து பெற்றுக்கொள்ள வேண்டும். இதற்கு மாற்றமாக மறுத்து விட்டால் அது மன முறிவை உண்டுபண்ணி விடும்.
அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிக்கிறார்கள்;
“நம்பிக்கை கொண்ட பெண்களே! உங்களில் எந்தப் பெண்ணும் தனது அண்டை வீட்டுக்காரிக்கு ஓர் ஆட்டின் கால் குழம்பை (அன்பளிப்பாக) அளித்தாலும், அதை அற்பமாகக் கருத வேண்டாம்!” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி 6017, முஸ்லிம் 1030)
இந்த ஹதீஸில் பல அம்சங்கள் கவனிக்கத் தக்கதாகும்;
– அன்பளிப்பு எனும் போது அள்ளிக் கொடுக்க வேண்டும் என்பதற்கில்லை:- இருப்பதற்கேற்ப அளிக்கலாம். ஈத்தம் பழத்தின் ஒரு பாதியை தர்மம் செய்வதன் மூலமாகவேனும் நீங்கள் நரகத்தை அஞ்சிக்கொள்ளுங்கள்! என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
– தாராளமாக வைத்துக்கொண்டு அற்பமானதைக் கொடுக்கலாகாது:- இதைக் கொடுப்பவர்கள் கவனத்திற்கொள்ள வேண்டும். ஒருவன் தனக்கு விரும்புவதைத் தன் சகோதரனுக்கு விரும்பாத வரை பூரண முஸ்லிமாக முடியாது என்ற ஹதீஸைக் கவனத்திற்கொள்ள வேண்டும்.
– தருவது அற்பமானது என்றாலும் அன்பையும், உறவையும் கருத்திற்கொண்டு எடுத்துக்கொள்ள வேண்டும். குறை காணக் கூடாது.
– இந்த ஹதீஸில் பெண்களை நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட்டுக் கூறியுள்ளார்கள். அயலவர் உறவு பலப்படுவதும், பலவீனமாவதும் பெண்கள் கையில்தான் தங்கியுள்ளது. அடுத்து, உணவுப் பரிமாற்றத்தில் ஆண்களை விட அவர்களே அதிகத் தொடர்புடையவர்களாக இருக்கின்றனர்.
– கொடுப்பதிலும், பெறுவதிலும் ஆண்களை விடப் பெண்களே பெருமை கொள்கின்றனர். “இதைக் கொடுப்பதா!?” எனக் கொடுப்பதை அற்பமாகக் கருதுவதும், “பெரிதாகத் தூக்கிக் கொண்டு வந்துட்டாங்க!” என அன்பளிப்புப் பொருட்களை அலட்சியம் செய்வதும் பெண்களேயாவர்.
– பெண்களின் உறவின் மூலம் தான் அயலவர் நட்பு விரிவடைகின்றது. இரண்டு பெண்களுக்கிடையில் கோபமும், பகையும் ஏற்பட்டு விட்டால், அவ்விருவரும் கணவர்-பிள்ளைகளையும் அடுத்தவரைப் பகைத்துக் கொள்ளச் செய்து விடுவார்கள்.
எனவேதான், இங்கே பெண்களை விழித்து நபி(ஸல்) அவர்கள் பேசுகின்றார்கள். எனவே, அன்பளிப்புகளை அலட்சியம் செய்யாது, கொடுத்து-பெற்று அயலவர் உறவைப் பலப்படுத்த வேண்டும்.
அடிப்படைத் தேவைகளை அலட்சியம் செய்தல்:
மனிதர்கள் எவரும் முழு நிறைவு பெற்றவர்கள் அல்லர். எல்லா மக்களுக்கும் அவசர-அவசியத் தேவைகள் உள்ளன. ஒரு குடும்பத்திற்கு/வீட்டுக்குத் தேவையான அத்தியவசியப் பொருட்கள் தேவைப்பட்டால் அயலவர் உதவியைத்தான் நாட வேண்டும். சிலர் எப்போது பார்த்தாலும் பக்கத்து வீட்டாரிடம் உதவி கேட்டுக் கேட்டுத் தொல்லை கொடுப்பர். இதுவும் நல்லதல்ல. சிலர் தாம் பிறரிடம் கேட்டுப் பெற்றாலும், அவர்கள் ஏதாவது கேட்கும் போது குத்து வார்த்தைகள் கூறி, வேண்டா வெறுப்புடன் கொடுப்பர். அவர்கள் பேசும் தொணியும், கொடுக்கும் விதமுமே இனி இந்தப் பக்கம் தலை வைத்துப் படுக்கக் கூடாது என எச்சரிப்பதாக அமைந்திருக்கும். இதுவும் தவறாகும்.
உப்பு, சீனி, பால்மா, மண்வெட்டி, கோடாரி போன்ற பொருட்கள் தேவைப்படும் போது கொடுத்துதவுதல் அல்லது இரவல் கொடுப்பது மார்க்கக் கடமையாகும்.
மறுமையை நம்பாதவர்களின் அடையாளங்கள் சிலவற்றைக் கூறும் போது, அல்லாஹ் சூறா மாஊனில் “அற்பப் பொருளையும் பிறருக்குக் கொடுக்காமல் தடுப்பார்கள்!” எனக் கூறுகின்றான்.
இரவல் பெற்ற பொருளை மீள அளிக்காமை:
சிலர் பிறரிடம் இரவல் பெறுவர். அதை மீள அளிக்க மாட்டார்கள். இந்நிலையில் சிலர் கேட்டுப் பெற்றுக்கொள்வர். மற்றும் சிலர் கூச்சம்/சங்கடம் காரணமாக கேட்காமல் மனதுக்குள் நொந்து கொண்டிருப்பார்கள். இரவல் பெற்ற பொருளை வேலை முடிந்த பின்னர் முறையாகத் திருப்பிக் கொடுத்து விட வேண்டும்.
இதே வேளை, அவசரத் தேவைக்காக சீனி, பால்மா, உப்பு போன்ற பொருட்களை இரவல் பெற்றால் மீண்டும் வாங்கியதைத் திருப்பிக் கொடுத்து விட வேண்டும். அவ்வாறு கொடுக்கும் போது எடுத்ததை விடச் சற்றுக் கூடுதலாகக் கொடுப்பது கண்ணியமான நடைமுறை என நபி(ஸல்) அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளார்கள்.
இதே வேளை, அவசியத் தேவையற்ற பொருட்களை இரவல் வாங்குவதை அவசியம் தவிர்த்தாக வேண்டும். சில பெண்கள் திருமண நிகழ்ச்சி, பயணம் என்பவற்றுக்காகப் பக்கத்து வீட்டுப் பெண்களின் நகை-நட்டுக்களை இரவல் கேட்கின்றனர். இது தவறாகும். இவையெல்லாம் அவசியப் பொருட்களோ, அத்தியவசியப் பொருட்களோ அல்ல. இருந்தால் போட்டுக்கொள்வதில் தவறில்லை. இல்லாத போது பிறரிடம் வாங்கி ஆடம்பரமாக நடிக்க வேண்டியதில்லை. அத்துடன் பிறருக்குக் காட்டுவதற்காகத்தான் இவற்றை இரவல் கேட்கின்றனர். பெண் பிறர் பார்க்க அலங்காரம் செய்துகொள்வது ஹறாமாகும் என்பது கவனிக்கத் தக்கதாகும். அவசியப் பயணத்திற்கு ஆடை இல்லையென்றால் நண்பியிடம் இரவல் பெற ஹதீஸில் ஆதாரம் காணலாம்.
அதிகமாக இரவல் கேட்பதும், தேவையற்ற பொருளை இரவலாகக் கேட்பதும், இரவலாக எடுத்த பொருளை முறையாக மீள ஒப்படைக்காமல் இருப்பதும் அயலவர் உறவைச் சீர்குலைக்கும் என்பதால் இது விடயத்தில் கூடிய அவதானம் தேவை.
விருந்தின் போது:
சிலர் தமது முக்கிய விருந்துகளில் அயலவரை அழைப்பதைத் தவிர்த்து விடுவர். சிலபோது மறதியாகவோ அல்லது பக்கத்து வீட்டாரைக் குறைத்து மதிப்பிட்டதாலோ இது நடந்து விடலாம். எனினும், இது பாரிய உளப் பிரச்சினையை உண்டுபண்ணி விடும். எனவே, முக்கிய விருந்துகளின் போது பக்கத்து வீட்டாரை உரிய முறையில் அழைக்கும் விடயத்தில் அவதானம் தேவை.
சிலர் ஏனையோரை கணவன்-மனைவியாகச் சேர்ந்து சென்று பெண்களுக்கு மனைவியும், ஆண்களுக்குக் கணவனும் அழைப்பு விடுப்பர். ஆனால், பக்கத்து வீட்டுக்கு மட்டும் சர்வ சாதாரணமாகக் கூறுவர். “பக்கத்து வீடு தானே!” என்ற எண்ணத்தில் இப்படிச் செய்வர். ஆனால், மற்ற வீடுகளுக்கு இருவரும் சென்று அழைக்கின்றனர். எங்கள் வீட்டுக்கு மட்டும்தான் இப்படிக் கூறியுள்ளனர் என்று சிந்திக்கும் போது சிக்கல் ஏற்பட்டு விடும். எனவே, அழைப்பு விடயத்தில் அவதானம் தேவை. சந்தோஷமான நிகழ்ச்சி சோகங்களைச் சுமந்து வந்து விடக் கூடாது என்பதில் கவனம் தேவை.
இதே வேளை, பக்கத்து வீட்டில் நல்லது நடந்து நமக்குக் கூறவில்லையென்றால், அதை அலட்டிக்கொள்ளாத இதயம் தேவை. குறிப்பாக அயலவர்களினதும், குடும்பங்களினதும் எண்ணிக்கை அதிகரித்துப் போன இந்தச் சூழலில் இந்த இதயம் அவசியம் தேவையாகும்.


புதன், ஏப்ரல் 27, 2016

ஜும்ஆ நாளின் சிறப்புகள்உலகில் ஓர் உயர் நாள்
"சூரியன் உதயமாகும் நாட்களிலேயே மிகவும் சிறந்த நாள் ஜும்ஆ நாளாகும். அதில் தான் ஆதம் (அலை) படைக்கப் பட்டார்கள். அந்நாளில் தான் அவர்கள் சொர்க்க(தோட்ட)த்தில் தங்க வைக்கப் பட்டார்கள். யுக முடிவு நாளும் வெள்ளிக்கிழமை தான் ஏற்படும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : திர்மிதி 450
இந்நாளில் ஓதப்படும் ஸலவாத் இறைத்தூதருக்குக் காட்டப்படல்
உங்களது நாட்களில் மிகச் சிறந்த நாள் வெள்ளிக் கிழமையாகும். அந்நாளில் தான் ஆதம் நபி படைக்கப்பட்டார்கள். அந்நாளில் அவர்களது உயிர் கைப்பற்றப்பட்டது. அந்நாளில் ஸூர் ஊதுதல் நிகழும். அந்நாளில் மக்கள் மூர்ச்சையாகுதல் நிகழும். எனவே அந்நாளில் என் மீது ஸலவாத்தை அதிகமாக்குங்கள். உங்களது ஸலவாத் என்னிடம் எடுத்துக் காட்டப்படுகின்றது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே! எங்களது ஸலவாத் உங்களுக்கு எப்படி எடுத்துக் காட்டப்படும்? நீங்கள் தான் அழிந்து விட்டிருப்பீர்களே! என்று நபித்தோழர்கள் கேட்ட போது, "நிச்சயமாக அல்லாஹ் நபிமார்களின் உடல்களை பூமி அரிப்பதை விட்டும் தடுத்து விட்டான்'' என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர் : அவ்ஸ் பின் அவ்ஸ், நூல் : அபூதாவூத் 883
(குறிப்பு : நமது ஸலவாத், ஸலாம் நபி (ஸல்) அவர்களுக்கு எடுத்துக் காட்டப்படுகின்றது என்பதை வைத்துக் கொண்டு நபி (ஸல்) அவர்கள் தற்போதும் உயிருடன் இருக்கின்றார்கள் என்றோ அல்லது இறந்தவர்கள் செவியேற்கின்றார்கள் என்றோ விளங்கிக் கொள்ளக் கூடாது. "நிச்சயமாக பூமியில் சுற்றித் திரியும் மலக்குகள் அல்லாஹ்விடம் உள்ளனர். அவர்கள் என்னிடம் ஸலாமை எடுத்துரைக்கின்றார்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக நஸயீயில் 1265வது ஹதீஸாகப் பதிவு செய்யப் பட்டுள்ளது.
நீங்கள் சொல்லும் ஸலவாத்தை நான் கேட்கின்றேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறவில்லை. இதற்கென நியமிக்கப் பட்டிருக்கும் மலக்குகள் மூலம் இது தனக்கு எடுத்துக் காட்டப் படுவதாக நபி (ஸல்) அவர்கள் விளக்கமளிப்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும் இது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு மட்டும் அல்லாஹ் வழங்கிய தனிச் சிறப்பாகும். வேறு யாருக்கும் இது கிடையாது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.)
ஒப்புக் கொள்ளப்படும் ஒரு துஆ நேரம்
நபி (ஸல்) அவர்கள் ஜும்ஆ நாளைப் பற்றிக் குறிப்பிடும் போது, "ஜும்ஆ நாளில் ஒரு நேரம் உண்டு'' என்று கூறி விட்டு அந்த நேரம் மிகவும் குறைந்த நேரமே என்பதைத் தம் கையால் சைகை செய்து காட்டினார்கள். "அந்த நேரத்தில் ஒரு முஸ்லிமான அடியார் தொழுகையில் நின்று அல்லாஹ்விடம் எதையேனும் கேட்டால் அதை அவருக்கு அல்லாஹ் கொடுக்காமல் இருப்பதில்லை'' என்றும் குறிப்பிட்டார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),நூல் : புகாரி 935
வியாபாரத்தை விட்டு விரைந்து ஜும்ஆ தொழுகை செல்லல்
நம்பிக்கை கொண்டோரே! வெள்ளிக் கிழமையில் தொழுகைக்காக அழைக்கப் பட்டால் அல்லாஹ்வை நினைப்பதற்கு விரையுங்கள்! வியாபாரத்தை விட்டு விடுங்கள்! நீங்கள் அறிந்தால் இதுவே உங்களுக்கு நல்லது. (அல்குர்ஆன் 62:9)
பத்து நாட்களுக்கு பாவங்கள் மன்னிக்கப்படல்
"ஒரு ஜும்ஆவிலிருந்து மறு ஜும்ஆ வரை நிகழும் பாவங்களுக்கு ஜும்ஆ தொழுகை பரிகாரமாகும். ஐவேளைத் தொழுகைகளும் அதற்கு இடைப்பட்ட நேரங்களில் நிகழும் பாவங்களுக்குப் பரிகாரமாகும். ஆனால் பெரும் பாவங்களாக அவை இருக்கலாகாது''என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),நூல் : முஸ்லிம் 394, திர்மிதி 198
"ஒருவர் குளித்து விட்டு ஜும்ஆவிற்கு வந்து தனக்கு நிர்ணயிக்கப்ட்ட அளவைத் தொழுகின்றார். பிறகு இமாம் தன் உரையை முடிக்கும் வரை மவ்னமாக இருந்து பிறகு அவருடன் தொழுகின்றார் என்றால் அவருக்கு அவருடைய அந்த ஜும்ஆவிற்கும் மறு ஜும்ஆவிற்கும் இடைப்பட்ட பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. மேலும் மூன்று நாட்கள் மன்னிக்கப்படுகின்றன'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),நூல் : முஸ்லிம் 1556
இதே கருத்தில் அபூதாவூத் (939), அஹ்மத் (6707) ஆகிய நூற்களில் இடம் பெற்றுள்ள ஹதீஸில், ஒன்றுக்குப் பத்து என்பதற்கு ஆதாரமாக, "நன்மை செய்தவருக்கு அது போன்ற பத்து மடங்கு (பரிசு) உண்டு. தீமை செய்தவர், தீமை அளவே தண்டிக்கப்படுவார். அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்'' (அல்குர்ஆன் 6:160)என்ற வசனத்தை நபி (ஸல்) அவர்கள் ஓதிக் காட்டியதாக இடம் பெற்றுள்ளது.
"ஜும்ஆ நாளில் குளித்து விட்டு இயன்ற வரை சுத்தமாகித் தமக்குரிய எண்ணையைத் தேய்த்துக் கொண்டு தமது வீட்டில் உள்ள நறுமணத்தைப் பூசிக் கொண்டு பள்ளிக்கு வந்து (வரிசையில் நெருக்கமாக அமர்ந்திருக்கும்) இரண்டு நபர்களைப் பிரித்து விடாமல், தமக்கு விதிக்கப்பட்டதைத் தொழுது விட்டு, இமாம் உரையாற்றத் தொடங்கியதும் வாய் மூடி மவுனமாக இருந்தால் அந்த ஜும்ஆவுக்கும் அடுத்த ஜும்ஆவுக்கும் இடையிலான பாவங்கள் மன்னிக்கப் படுகின்றன'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஸல்மான் பார்ஸி (ரலி),நூல் : புகாரி 883
முஸ்லிமில் அபூஸயீத் (ரலி) அறிவிக்கும் 1400வது ஹதீஸில், இதே கருத்துடன் "பல் துலக்குதல் என்ற வார்த்தை இடம் பெறுகின்றது. அபூதாவூதில் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அறிவிக்கும் 293வது ஹதீஸில் இதே கருத்துடன், "நல்லாடை அணிதல்' என்ற வார்த்தையும் இடம் பெறுகின்றன.
எடுத்து வைக்கும் அடியை தொடுத்து வரும் நன்மை
யார் (தலையை) கழுவி, குளித்து ஆரம்ப நேரத்திலேயே புறப்பட்டு முந்தியே (பள்ளிக்கு) வந்து, இமாமுக்கு நெருக்கமாக இருந்து உரையை செவியுற்று, ஜும்ஆவை வீணாக்காமல் இருக்கின்றரோ அவருக்கு அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு காலடிக்கும் ஓர் ஆண்டு நோன்பு நோற்று, ஓர் ஆண்டு நின்று வணங்கிய கூலி உண்டு என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அவ்ஸ் பின் அவ்ஸ் (ரலி),நூல் : நஸயீ 1381
இதே கருத்தில் அமைந்த பல்வேறு ஹதீஸ்களில் "வாகனத்தில் வராமல்....'' என்பதும் சேர்த்து அறிவிக்கப் பட்டுள்ளது.
தொழாவிட்டால் ஏற்படும் விளைவுகள்
இன்று உலகில் ஒருவரிடம் ஒட்டகம், மாடு, ஆடு, கோழி, முட்டை ஆகியவற்றைக் கொடுத்து,இதில் ஏதேனும் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொன்னால் அவர் எதைத் தேர்வு செய்வார்? ஒட்டகத்தைத் தான் தேர்வு செய்வார். ஏனெனில் அது தான் இருப்பதிலேயே அதிக விலை மதிப்பு கொண்டது. இது உலக விவகாரத்தில்! ஆனால் மறுமை விஷயத்திலோ அவர் இவ்வாறு தேர்வு செய்வதில்லை.
"ஒருவர் ஜும்ஆ நாளில் கடமையான குளிப்பைப் போன்று குளித்து விட்டுப் பள்ளிக்கு வந்தால் ஒரு ஒட்டகத்தை அல்லாஹ்வின் பாதையில் குர்பானி கொடுத்தவர் போலாவார். இரண்டாம் நேரத்தில் வந்தால் ஒரு மாட்டைக் குர்பானி கொடுத்தவர் போலாவார். மூன்றாம் நேரத்தில் வந்தால் கொம்புடைய ஆட்டைக் குர்பானி கொடுத்தவர் போலாவார். நான்காம் நேரத்தில் வந்தால் ஒரு கோழியைக் குர்பானி கொடுத்தவர் போலாவார். ஐந்தாம் நேரத்தில் வந்தால் முட்டையைக் குர்பானி கொடுத்தவர் போலாவார். இமாம் பள்ளிக்கு வந்து விட்டால் வானவர்கள் ஆஜராகிப் போதனையைக் கேட்கின்றார்கள்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் : புகாரி 881
இந்த ஹதீஸைத் தெரிந்த பிறகும் நாம் ஒட்டகத்தைத் தேர்வு செய்யாமல் தாமதமாகலாமா?
பரிசு தருவதற்காக பதிய வரும் மலக்குகள்
"ஜும்ஆ நாள் வந்ததும் பள்ளியின் பாகங்களில் உள்ள ஒவ்வொரு வாசலிலும் மலக்குகள் நிற்கின்றனர். முதன் முதலில் வருபவரை - அடுத்து வருபவரைப் பதிவு செய்கின்றனர். இமாம் (மிம்பரில்) உட்கார்ந்ததும் தங்கள் ஏடுகளைச் சுருட்டிக் கொண்டு உரையைக் கேட்க வந்து விடுகின்றனர்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),நூல் : முஸ்லிம் 1555
நம்முடைய பெயர்கள் வெள்ளியன்று பள்ளிக்கு வரும் மலக்குகளின் பதிவேட்டில் பதியப்பட வேண்டுமெனில் நாம் இமாம் மிம்பரில் ஏறுவதற்கு முன்பே பள்ளிக்கு வந்தாக வேண்டும்.
நன்மைகளைப் பறித்து விடும் நச்சுக் கிருமிகள்
"இமாம் சொற்பொழிவு நிகழ்த்தும் போது உன் அருகிலிருப்பவரிடம், "வாய் மூடு' என்று கூறினால் நீ வீணான காரியத்தில் ஈடுபட்டு விட்டாய்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),நூல் : புகாரி 934
"யார் (தரையில் கிடக்கும்) கல்லைத் தொ(ட்டு விளையா)டுகின்றாரோ அவர் (ஜும்ஆவை) பாழாக்கி விட்டார்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),நூல் : முஸ்லிம் 1557
மூன்று பேர்கள் ஜும்ஆவிற்கு வருகின்றார்கள். ஒருவர் ஜும்ஆவிற்கு வந்து (குத்பாவின் போது பேசி) வீணாக்குகின்றார். இதுவே அவரது ஜும்ஆவில் கிடைத்த அவருடைய பங்காகும். இன்னொருவர் ஜும்ஆவிற்கு வந்து பிரார்த்திக்கின்றார். இவர் மகத்துவமும்,கண்ணியமும் நிறைந்த அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தவராவார். அவன் நாடினால் அவருக்கு வழங்குவான். அவன் நாடினால் அவருக்கு (கொடுக்காமல்) தடுக்கின்றான். மூன்றாமவர் ஜும்ஆவிற்கு வந்து மவுனத்துடன் வாய் பொத்தியுமிருந்தார். எந்த ஒரு முஸ்லிமின் பிடரியையும் தாண்டவில்லை. யாருக்கும் தொந்தரவு கொடுக்கவில்லை. இந்த ஜும்ஆ அதை அடுத்து வரும் ஜும்ஆ வரையிலும் இன்னும் மூன்று நாட்கள் வரையிலும் (செய்த பாவங்களுக்கு) பரிகாரமாகும். ஏனெனில் மகத்துவமும், கண்ணியமும் பொருந்திய அல்லாஹ், "நன்மை செய்தவருக்கு அது போன்ற பத்து மடங்கு (பரிசு) உண்டு. தீமை செய்தவர் தீமை செய்த அளவே தண்டிக்கப் படுவார்'' என்று (6:160 வசனத்தில்) கூறுகின்றான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி),
நூல் : அபூதாவூத் 939
இந்த மூன்று பேர் பட்டியலில் நாம் முதலாமவர் பட்டியலில் இடம் பெற்று ஜும்ஆவின் பலனை இழந்து விடக் கூடாது.
ஜும்ஆ தொழாதவருக்கு ஏற்படும் பாதிப்புகள்
எல்லாம் வல்ல அல்லாஹ் நமக்கு வெள்ளிக்கிழமையைப் புனித நாளாக ஆக்கியது போன்று யூதர்களுக்கு சனிக்கிழமையைப் புனித நாளாக ஆக்கினான். அந்த நாளின் வணக்கத்தை அவர்கள் பேணாமல் வரம்பு மீறி கடலுக்குச் சென்றதால் அவர்கள் குரங்குகளாக மாற்றப்பட்டனர். இந்த வரலாற்றை அல்லாஹ் தனது திருமறையில் கூறுகின்றான்.
கடல் ஓரத்தில் இருந்த ஊரைப் பற்றி அவர்களிடம் கேட்பீராக! அவர்கள் சனிக்கிழமையில் வரம்பு மீறியதை நினைவூட்டுவீராக! சனிக்கிழமையன்று மீன்கள் நீரின் மேல் மட்டத்தில் அவர்கள் முன்னே வந்தன. சனிக்கிழமை அல்லாத நாட்களில் அவர்களிடம் வருவதில்லை. அவர்கள் குற்றம் புரிந்து வந்ததால் இவ்வாறு அவர்களைச் சோதித்தோம்.
"அல்லாஹ் அழிக்கப் போகிற அல்லது கடுமையாகத் தண்டிக்கப் போகிற கூட்டத்திற்கு ஏன் அறிவுரை கூறுகிறீர்கள்?'' என்று அவர்களில் ஒரு சாரார் கூறினர். அதற்கவர்கள் "உங்கள் இறைவனிடமிருந்து (விசாரணையின் போது) தப்பிப்பதற்காகவும், அவர்கள் (இறைவனை) அஞ்சுவோராக ஆவதற்காகவும் (அவர்களுக்கு அறிவுரை கூறுகிறோம்)'' எனக் கூறினர்.
கூறப்பட்ட அறிவுரையை அவர்கள் மறந்த போது தீமையைத் தடுத்தோரை (மட்டும்) காப்பாற்றினோம். அநீதி இழைத்தோரை அவர்கள் குற்றம் புரிந்து வந்ததால் கடுமையாகத் தண்டித்தோம். தடுக்கப்பட்டதை அவர்கள் மீறிய போது "இழிந்த குரங்குகளாக ஆகி விடுங்கள்!'' என்று அவர்களுக்குக் கூறினோம்.
(அல்குர்ஆன் 7:163-166)
இந்த வரலாற்றை நாம் படிப்பினையாக எடுத்துக் கொண்டு ஜும்ஆ தொழுகை நேரத்தின் போது தொழுகையை விட்டு விட்டு வரம்பு மீறிச் சென்று அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளாகி விடக் கூடாது.
இதயங்கள் இறுகி விடும்
"ஜும்ஆ தொழுகைகளை விடுவதை விட்டும் ஒரு கூட்டம் விலகிக் கொள்ளட்டும்! இல்லையேல் அல்லாஹ் அவர்களது உள்ளங்களில் முத்திரையிடுவான்; அவர்கள் கவனமற்றவர்களாக ஆவார்கள்!'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மிம்பர் படிகளில் நின்று சொன்னார்கள்.அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),நூல் : முஸ்லிம் 1570
"அலட்சியமாக மூன்று ஜும்ஆக்களை யார் விட்டு விட்டாரோ அவரது உள்ளத்தில் அல்லாஹ் முத்திரையிட்டு விடுகின்றான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபுல் ஜஃது (ரலி),நூல் : திர்மிதி 460
இல்லங்கள் எரிக்கப்பட வேண்டும்
"ஒரு கூட்டத்தாருக்கு என்ன நேர்ந்தது? அவர்கள் ஜும்ஆவிற்கு வராமல் இருந்து விடுகின்றனர். நான் ஒருவரை மக்களுக்குத் தொழுவிக்கச் செய்யுமாறு உத்தரவிட்டு விட்டு, ஜும்ஆவிற்கு வராமல் தங்களுடைய வீடுகளில் இருக்கும் ஆட்களை கொழுத்தி விட எண்ணி விட்டேன்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)நூல் : முஸ்லிம் 1156
இறைத் தூதர் (ஸல்) அவர்களின் எச்சரிக்கையை கவனத்தில் கொண்டு ஜும்ஆவைத் தவற விடாமல் பேணுவோமாக!


வெள்ளி, ஏப்ரல் 15, 2016

இஸ்லாம் வகுத்த அரசியல் இலக்கணம்    மௌலவி, அ. முஹம்மது கான்  பாகவி    

முதலில் ‘அரசியல்’ என்றால் என்ன என ஆய்வோம். ஆட்சி, அதிகாரம் பற்றிய கோட்பாடுகளும் நடைமுறைகளும்தான் அரசு இயல் (Politics) எனப்படுகிறது.

அரசின் அமைப்பு, குடிமக்களின் உரிமை, அரசின் கடமை, அதிகாரம் முதலியவற்றை வரையறுக்கும் அடிப்படை சட்டமே (Constitution) அரசியல் சாசனம், அல்லது அரசியல் சட்டம் எனப்படுகிறது.

மனிதர்கள் ஒரு பத்துப்பேர் சேர்ந்து வாழ ஆரம்பித்த நாளிலேயே அரசியலுக்கும் வாழ்வு வந்துவிட்டது என்பதுதான் எதார்த்தம்.

பதின்மரில் ஒருவர் மூத்தவர் (தலைவர்); அவரது வழிகாட்டலின் பேரில் செயல்பட இருவர், அல்லது மூவர் (அமைச்சர்கள்). சிறார்கள் அந்த இடத்தில் வாழ்ந்து வளர வேண்டியவர்கள் (குடிமக்கள்). ஆயினும், ‘தத்துவம்’ (Philosopy), அல்லது ‘கோட்பாடு’ (Theory) என்ற தகுதி அடிப்படையில் பார்த்தால், மனிதன் தோன்றி பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகே அரசியல் எனும் தத்துவம் உருப்பெற்றது.

அரசு மற்றும் அதோடு தொடர்புடைய கோட்பாடுகளான அரசியல் கடமை, அரசியல் சட்டம், சமூக நீதி, அரசியல் அமைப்பு போன்றவற்றை ஆராயும் துறையாக அரசியல் தத்துவம் பரிணமித்தது, மிகவும் பின்னால்தான்.

கிரேக்க தத்துவ அறிஞர் பிளேட்டோ (கி.மு. 428-347) எழுதிய ரிபப்ளிக் (குடியரசு) எனும் நூலும், அவருடைய மாணவரும் கிரேக்கத் தத்துவ அறிஞருமான அரிஸ்டாட்டில் (384-322) எழுதிய ‘பாலிடிக்ஸ்’ (அரசியல்) எனும் நூலும்தான் அரசியல் தத்துவத்தில் எழுதப்பட்ட ஆரம்ப வழிகாட்டிகள் என்பர்.

இதே அரசியல், ‘அறிவியல்’ எனும் அந்தஸ்தை அடைந்தது 19ஆம் நூற்றாண்டில்தான் என்கிறார்கள். பலவிதமான சமூக அறிவியல் பிரிவுகள் உருவாகத் தொடங்கிய 19ஆம் நூற்றாண்டுவரை, ‘அரசியல் அறிவியல்’ எனும் நவீனத்துறை உருவாகியிருக்கவில்லை.

அரசியல் கட்சிகள் நவீன வடிவத்தில் 19ஆம் நூற்றாண்டில்தான் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் தோன்றினவாம்! உண்மையில் அரசியலும் அரசியல் சாசனமும் 6ஆம் நூற்றாண்டிலேயே உருவாக்கப்பட்டு, வெற்றிகரமாக நடைமுறையும் படுத்தப்பட்டு, உலகின் கவனத்தைத் தன்பக்கம் ஈர்த்த பெருமை இஸ்லாமிய அரசியலுக்கு உண்டு.

அதை இறைவனின் ஆணையின்பேரில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உருவாக்கி, அன்றைய நவீன அரசாட்சி முறையை உலகுக்கு எடுத்திக்காட்டினார்கள். இதனாலேயே, நவீன வரலாற்று ஆய்வாளர் மைக்கேல் H. ஹார்ட் தமது ‘THE 100’ (நூறுபேர்) எனும் நூலில் முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு முதலிடம் அளித்தார்.

அதற்கு அவர் சொன்ன அறிவுபூர்வமான காரணம் கவனத்திற்குரியது.

ஹார்ட் சொன்னார்: நூறு உலகத் தலைவர்களில் முதலாமவர் முஹம்மத். ஏனெனில், சமயம், உலகியல் ஆகிய இரு நிலைகளிலும் ஒருசேர மகத்தான வெற்றி பெற்றவர், வரலாற்றில் அவர் அவர் ஒருவரே. அன்றைய உலகத்தின் பெரும் மதங்களில் ஒன்றின் தலைவர்; பேராற்றல் வாய்ந்த அரசியல் தலைவர்.

சமயமும் அரசியலும்

சமயத்திற்கும் அரசியலுக்கும் சம்பந்தம் இல்லை என்றே பலரும் கருதுகின்றனர். இக்கருத்து முதன்முதலில் ஐரோப்பியக் கிறித்தவ நாடுகளில்தான் தோன்றியது. அங்கே கிறித்தவ திருச்சபைகள் மக்களின் எல்லா நடவடிக்கைகளிலும் ஆதிக்கம் செலுத்திவந்தன; போப்புகள் தங்களின் விருப்பத்திற்கேற்ப அதிகாரம் செலுத்திவந்தனர்; தாங்கள் விரும்பக்கூடியவர்களுக்கு மட்டும் பாவமன்னிப்புப் பத்திரம் வழங்கிவந்தனர்.

திருச்சபைகளின் எல்லைமீறிய போக்கைக் கண்டு வெகுண்டெழுந்த முற்போக்குவாதிகள் சிலர், போப்புகளுக்கெதிராகப் போர்க்கொடி தூக்கினர். பணத்துக்குச் சொர்க்கத்தையே விலைபேசும் பாதிரிமார்களின் போக்கால் மதத்தின் மீதே வெறுப்பு கொண்ட அவர்கள், அரசியலுக்கும் மதத்திற்கும் எந்தத் தொடர்புமில்லை எனப் பிரகடப்படுத்தினர்.

இவ்வாதத்திற்கு ஆதாரமாக, ‘‘சீசருக்கு வழங்க வேண்டியதை சீசருக்கும் கர்த்தருக்கு வழங்க வேண்டியதைக் கர்த்தருக்கும் வழங்கிவிடுங்கள்’’ என்ற பைபிளின் கருத்தை மேற்கோள் காட்டிப் பரப்புரை செய்தனர்; சீசருக்கும் (அரசருக்கும்) கர்த்தருக்கும் (கடவுளுக்கும்) பிரிவினையை உருவாக்கிய அவர்கள் மதத்திலிருந்து அரசியலை வெளியேற்றிவிட்டனர். இஸ்லாத்தில் இப்பிரிவினைக்கு இடமே இல்லை. ஏனெனில், எவராலும் பணத்திற்குப் பதிலாகச் சொர்க்கத்தை விற்க முடியாது.

ஓரிறைவனான அல்லாஹ்வைத் தவிர வேறு எவராலும் பாவிகளின் பாவத்தை மன்னிக்க இயலாது. இதில் இஸ்லாம் மிகவும் தெளிவாக இருக்கிறது. எனவே, கிறித்தவ மதத்தில் ஏற்பட்டுவிட்ட இழுபறி நிலை இஸ்லாத்தில் கிடையாது. ஆதலால், அரசியலும் மார்க்கத்தின் பிரிக்க முடியாத ஓர் அங்கம்தான்; அரசியல் மார்க்கத்தின் வழிகாட்டலின் பேரிலேயே அமைய வேண்டிய ஒரு துறைதான் எனும் தத்துவத்தை முதலில் புரிந்துகொள்வது நல்லது. இஸ்லாமும் அரசியலும் இஸ்லாத்தைப் பொறுத்தவரை, அது மற்றத் துறைகளுக்கு வழிகாட்டியிருப்பதைப் போன்றே, இம்மை வாழ்வின் அச்சாணியாக விளங்கும் அரசியல் துறைக்கும் நல்வழி காட்டியுள்ளது.

அரசியல் அதிகாரத்தின் அவசியத்தை உணர்ந்த நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அந்த அதிகார சக்தியைத் தமக்கு வழங்குமாறு இறையிடம் பிரார்த்தித்தும் உள்ளார்கள். மக்கா இறைமறுப்பாளர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைக் கொல்வதற்குத் திட்டமிட்டபோது, மதீனாவுக்குப் புலம்பெயர்ந்து சென்றுவிடுமாறு இறைவன் ஆணையிட்டான்.

அப்போது இந்த வேண்டுதலைச் செய்யுமாறு அவன் தன் பிரியமான தூதருக்கு ஆணையிட்டான்: ‘‘என் இறைவா! என்னைத் திருப்தியான முறையில் நுழையச்செய்வாயாக! என்னைத் திருப்தியான முறையில் வெளியேறச்செய்வாயாக! உன்னிடமிருந்து எனக்கு உதவும் ஒரு சக்தியை வழங்கிடுவாயாக! (அல்குர்ஆன் 17:80)

திருமறை விரிவுரையாளர் கத்தாதா ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கூறுகிறார்கள்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது ஓரிறை அழைப்புப் பணியில் ஆட்சியதிகாரத்தின் துணையின்றி எதையும் சாதிக்க முடியாது என்பதை அறிந்திருந்தார்கள். எனவே, இறைமார்க்கத்தை நிலைநாட்டுவதற்குத் துணைபுரியும் ஒரு சக்தியை -அதாவது ஆட்சி அதிகாரத்தைத்- தமக்கு வழங்குமாறு இறையிடம் வேண்டினார்கள். ஆட்சியதிகாரம் என்பது, இறைவனின் அருட்கொடையாகும். அது இல்லை என்றால், மனிதர்களில் சிலர் வேறுசிலரைத் தாக்கி அழிப்பார்கள்; வலிமை மிக்கவன் பலவீனமானவனை விழுங்கிவிடுவான்.

கலீஃபா உஸ்மான் பின் அஃப்பான் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ், குர்ஆன் மூலம் தடுக்காத பல காரியங்களை, அதிகாரத்தின் மூலம் தடுக்கின்றான். (தஃப்சீர் இப்னு கஸீர்) ஆட்சியதிகாரம் என்பது, இத்துணை பெரும் வீரியம் மிக்கது என்பதாலேயே அல்லாஹ் தன் திருமறையில் நல்லடியார்களுக்குச் சில வாக்குறுதிகளை வழங்குகின்றான்.

‘‘உங்களில் இறைநம்பிக்கை கொண்டு, நல்லறங்கள் புரிந்தோருக்கு அல்லாஹ் (சில) வாக்குறுதிகளை அளித்துள்ளான்; அவர்களுக்கு முன்பு இருந்தவர்களை இப்பூமியில் அதிகாரம் உள்ளவர்களாய் அவன் ஆக்கியதைப் போன்று, இவர்களையும் அதிகாரம் உள்ளவர்களாய் நிச்சயமாக ஆக்குவான். அவர்களுக்காகத் தான் உவந்துகொண்ட அவர்களின் மார்க்கத்தில் அவர்களை நிச்சயமாக அவன் நிலை நிறுத்துவான்; அவர்களுக்கு ஏற்பட்ட அச்சத்திற்குப் பின்னர் அமைதியை மாற்றாக அவர்களுக்கு அவன் நிச்சயமாக வழங்குவான். (அல்குர்ஆன் 24:55)

கவனிக்க வேண்டிய வாக்குறுதிகள். நாம் செய்ய வேண்டியது இரண்டு. ஒன்று, அல்லாஹ்வின் மீது அசையாத நம்பிக்கை கொள்ள வேண்டும். இரண்டு, நல்லறங்கள் புரிய வேண்டும். தீமைகளைக் கைவிடுவதும் ஒரு நல்லறம்தான் என்பதை மறந்துவிடக் கூடாது. இதற்குப் பிரதியாக அல்லாஹ் நமக்கு அளிப்பது முப்பெரும் பரிசுகளாகும்.

1. நல்லாட்சி புரியும் வாய்ப்பு.

2. அல்லாஹ்வுக்குப் பிரியமான இந்த மார்க்கத்தில் நிலைத்திருப்பது.

3. அச்சத்திற்குப் பின் அமைதி.

மூன்றும் முக்கியமானவை; உயிர்நாடியானவை. அல்லாஹ் இவ்வாக்குறுதிகளை நிறைவேற்றவும் செய்தான். வரலாற்றுச் சான்றுகள் முற்காலத்தில், இறைத்தூதர் தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பெரும் ஆட்சியாளராக விளங்கினார்கள். அவர்களின் புதல்வர் நபி சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பேரரசை நிறுவி ஆண்டார்கள்.

யூஷஉ பின் நூன் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் தலைமையில் அமாலிக்கர்களை இஸ்ரவேலர்கள் வென்றனர். நபி யூசுஃப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள், தம் சகோதரர்களின் துரோகத்திற்குப் பின்பு எகிப்தின் ஆட்சியில் அமர்ந்தார்கள். இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உயிரோடு இருக்கும்போதே மக்கா, கைபர், பஹ்ரைன் உள்ளிட்ட அரபு தீபகற்பம் முஸ்லிம்களின் கைக்கு வந்துவிட்டது.

பலர் காப்புவரி செலுத்தினர். கிழக்கு ரோமானியப் பேரரசர் ஹிரக்ளீயஸ், எகிப்து ஆட்சித் தலைவர் முகவ்கிஸ், அபிசீனிய மன்னர் நஜாஷீ (நீகஸ்) ஆகியோர் நபியவர்களை மதித்து அன்பளிப்புகளை அனுப்பிவைத்தனர். நபிகளாரின் மறைவுக்குப் பிறகு கலீஃபா அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் ஆட்சியில் பாரசீகத்தின் சில பகுதிகள், ஷாமின் (சிரியா) டமாஸ்கஸ், புஸ்ரா ஆகிய நகரங்கள் வெற்றிகொள்ளப்பட்டன. கலீஃபா உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் ஆட்சிக் காலத்தில் எகிப்து, பாரசீகம், கிழக்க ரோம் (பைஸாந்தியா) ஆகியவை வீழ்ந்தன.

பாரசீகப் பேரரசன் குஸ்ரூ (கிஸ்ரா), கிழக்கு ரோமானியப் பேரரசன் சீசர் (கைஸர்) ஆகியோர் அதிகாரத்தை இழந்தனர். கலீஃபா உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் காலத்தில் இஸ்லாமியப் பேரரசு, கிழக்கு மற்றும் மேற்கு எல்லைவரை விரிவடைந்தது. மேற்கு நாடுகள் அதன் கோடிவரை வெற்றிகொள்ளப்பட்டன.

தெற்கு ஸ்பெயினில் உள்ள அண்டலூசியா (உந்துலுஸ்), சைப்ரஸ் (கப்ரஸ்) ஆகியவை அவற்றில் அடங்கும். மத்திய தரைக்கடல் பகுதியை ஒட்டியுள்ள லிபியாவின் சிரநேயிக்கா (கைரவான்), செப்டர் (தாவூடா) ஆகிய நகரங்களும் கிழக்கில் சீனா எல்லைவரையும் முஸ்லிம்கள் கரத்தில் வந்தன. இராக்கின் பல நகரங்களும் ஈரானின் குராசான், அஹ்வாஸ் ஆகிய நகரங்களும் வெற்றிகொள்ளப்பட்டன.

துருக்கியரின் ஏகாதிபத்தியம் முடிவுக்கு வந்தது. (நூல்: தஃப்சீர் இப்னு கஸீர்) இவ்வாறு முஸ்லிம்களின் வெற்றி தொடர்ந்தது. இன்று உலகெங்கும் முஸ்லிம்கள் வாழ்கின்றனர். இஸ்லாம் கால் பதிக்காத நாடே இல்லை என்று சொல்லும் அளவிற்கு அது அவனியெங்கும் பரவிவிட்டது.

உலக மக்கட்தொகை 690 கோடியாக இருந்த 2010ஆம் ஆண்டில் உலக முஸ்லிம்களின் எண்ணிக்கை 161 கோடியாக (23.4%) இருந்தது. இதுவே 2030இல் 219கோடியாக (26.4%) உயரும் என PEW எனும் அமெரிக்க ஆய்வு நிறுவனம் கணித்துள்ளது. அப்போது உலக மக்கட்தொகை 830 கோடியாக இருக்கலாம்.

இஸ்லாமிய ஆட்சிமுறை இன்றைய உலகில் இரண்டு வகையான ஆட்சிமுறைகளே பெரும்பான்மையாகக் காணப்படுகின்றன.

1. முடியாட்சி (Monarchy). அரசர் அல்லது அரசியால் நடத்தப்படும் ஆட்சி. பிளவுபடாத இறையாண்மை, அல்லது ஒரு நாட்டின் நிரந்தரமான தலைமைப் பொறுப்பை ஏற்ற தனிமனிதரின் ஆட்சி. இது இப்போது பரம்பரை வழியில் ஆட்சியுரிமை கொண்ட அரசுகளைக் குறிக்கவே பயன்படுத்தப்படுகிறது. அரசர்களின் தெய்வீக உரிமையாக ஆட்சி கருதப்பட்டது.

2. மக்களாட்சி, அல்லது ஜனநாயகம் (Democracy). வாக்களிக்கும் உரிமை பெற்ற மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் பங்கேற்று நடத்தும் ஆட்சிமுறை; உயர்ந்த அதிகாரம் மக்களிடம் குவிந்திருக்கும் அரசாங்க வடிவம். பொது வாக்களிப்பு, பதவிக்கான போட்டி, பேச்சு மற்றும் எழுத்து சுதந்திரம், சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றை இது வலியுறுத்துகிறது.

1. இஸ்லாத்தில், நாட்டின் உயர்ந்த பதவியில் இருக்கும் ஆட்சித் தலைவருக்கு (கலீஃபா) மக்களிடமிருந்தே (உம்மா) அதிகாரம் வழங்கப்படும்; அவர் தம் பணிகளை மக்களின் திருப்தியுடனேயே மேற்கொள்ள வேண்டும். இதுவே இஸ்லாத்தின் அடிப்படையாகும்.

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: உங்கள் தலைவர்களில் நல்லவர்கள் யாரெனில், அவர்களை நீங்கள் நேசிப்பீர்கள்; உங்களை அவர்கள் நேசிப்பார்கள். உங்களுக்காக அவர்கள் பிரார்த்திப்பார்கள்; அவர்களுக்காக நீங்கள் பிரார்த்திப்பீர்கள். உங்கள் தலைவர்களில் தீயவர்கள் யாரெனில், நீங்கள் அவர்களை வெறுப்பீர்கள்; உங்களை அவர்கள் வெறுப்பார்கள். நீங்கள் அவர்களைச் சபிப்பீர்கள்; அவர்கள் உங்களைச் சபிப்பார்கள். (நூல்: முஸ்லிம்)

தனிமனிதன் தனிமனிதனையோ, மக்கள் மக்களையோ, ஆட்சியாளர்கள் குடிமக்களையோ எந்த வகையிலும் சுரண்டுவதற்கும் தவறாகப் பயன்படுத்துவற்கும் இஸ்லாத்தில் அனுமதி கிடையாது.

2. ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் முறை காலத்திற்குக் காலம், இடத்திற்கு இடம் வேறுபடலாம் என்பதால், இஸ்லாம் தேர்வு முறையைக் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. இஸ்லாத்தின் தொடக்கக் காலத்தில், ஆட்சியின் (கிலாஃபத்) தலைநகரில் உள்ள அறிவுஜீவிகள் (அஹ்லுஷ் ஷூரா) அளிக்கும் யோசனையின் பேரில் வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் தலைநகர் மக்கள் வந்து அவருக்கு வாக்கு (பைஅத்) அளித்தனர். அதையடுத்து இதர நகரவாசிகள் தங்கள் வாக்குகளை அளித்தனர். எப்படியானாலும் ஆலோசனையாளர்களின் கருத்தைக் கேட்டே ஆட்சித் தலைமைக்கான வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

3. அடுத்து இஸ்லாமிய ஆட்சியின் சாசனம் திருக்குர்ஆனாகவே இருக்கும். அதுதான இறைமொழி; மாற்றம், திருத்தம், கூடுதல், குறைவு ஆகிய எந்த மாறுதலுக்கும் உட்படாத நிலையான சாசனம்.

4. இஸ்லாமிய ஆட்சி, ஆலோசனை (ஷூரா) அடிப்படையில் அமைய வேண்டும்.

5. அது கிலாஃபத்தாகவும் (அரசியல்) இமாமத்தாகவும் (ஆன்மிகம்) இருக்க வேண்டும். சர்வாதிகார ஆட்சியாகவோ குடும்ப மன்னராட்சியாகவோ கட்டுப்பாடற்ற குடியாட்சியாகவோ அது இருக்காது.

ஆட்சித் தலைவருக்கான இலக்கணம்

1. ஆட்சித் தலைவர் பருவமடைந்த இறைநம்பிக்கையாளராக இருக்க வேண்டும். கல்வி அறிவு, ஆட்சித் தகுதி, நிர்வாகத் திறமை, நேர்மை, உடல் ஆரோக்கியம் முதலான அம்சங்கள் உள்ளவராகவும் அவர் இருக்க வேண்டும்.

2. நீதியும் நேர்மையும் ஆட்சியாளரின் முதல்தரமான குணங்களில் அடங்கும். திருக்குர்ஆனில் இறைவன் ஆணையிடுகின்றான்: உங்களிடம் நம்பி ஒப்படைக்கப்பட்ட பொருட்களை, அவற்றுக்கு உரியவர்களிடம் நீங்கள் ஒப்படைத்துவிட வேண்டும் என்றும் மக்களிடையே நீங்கள் தீர்ப்பு வழங்கும்போது நீதியுடன் தீர்ப்பு வழங்க வேண்டும் என்றும் அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகின்றான். உங்களுக்கு அல்லாஹ் கூறும் இந்த அறிவுரை மிகவும் நல்லதாகும். (அல்குர்ஆன் 4:58)

பதவியும் நம்பி ஒப்படைக்கப்படும் ஒன்றுதான்; தீர்ப்புக்கு வேண்டிய நீதி ஆட்சிக்கும் பொருந்தும். ஒருவரோ ஒரு கூட்டமோ பிடிக்கவில்லை என்பதற்காக நீதி தவறிவிடக் கூடாது.

இதனாலேயே மற்றொரு வசனத்தில், ‘‘ஒரு சமுதாயத்தார்மீது (உங்களுக்கு)ள்ள பகை (அவர்களுக்கு) நீங்கள் நீதி செலுத்தாமலிருக்க உங்களைத் தூண்டிவிட வேண்டாம். (எல்லாரிடமும்) நீங்கள் நீதி செலுத்துங்கள். அதுதான் இறையச்சத்திற்கு மிகவும் உகந்ததாகும்’’ (அல்குர்ஆன் 5:8) என்று அல்லாஹ் கட்டளையிடுகின்றான்.

3. சாமானியரும் நெருங்கும் தூரத்தில் ஆட்சியாளர் இருக்க வேண்டும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: தேவையும் வறுமையும் இல்லாமையும் உள்ளவர்கள் அணுக முடியாதவாறு தமது வாயிற்கதவை ஓர் ஆட்சியாளர் அடைத்துக்கொள்வாராயின், அவருடைய தேவையின்போதும் இல்லாமையின்போதும் வறுமையின்போதும் (தன்னை) அணுக முடியாதவாறு அல்லாஹ் வானத்தின் வாயில்களை அடைக்காமல் இருக்கமாட்டான். (நூல்: ஷாமிஉத் திர்மிதீ)

4. பகட்டும் படோடாபமும் ஆட்சிக்கு ஆபத்து. பதவி வரும்போதுதான் பணிவு வர வேண்டும்; எளிமை மிளிர வேண்டும். ஆட்சிக்கு மட்டும் அவர் தலைவர் அல்லர்; பண்பாட்டிற்கும் மனித நாகரிகத்திற்கும் தலைவராக, முன்மாதிரியாகத் திகழ வேண்டும்.

5. தவறு சுட்டிக்காட்டப்படும்போது, குறைகள் விமர்சிக்கப்படும்போது, அது உண்மைதானா என்பதை ஆட்சியாளர் பரிசீலிக்க வேண்டும்; உண்மை என்றால், மனப்பூர்வமாக அதை ஏற்று தவறுகளைத் திருத்திக்கொள்ள வேண்டும்; குற்றம் சொல்வோரிடம் பகைமை பாராட்டக் கூடாது. நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: அநீதியிழைக்கும் அரசனிடம் உண்மை உரைப்பதுதான் சிறந்த அறப்போராகும். (நூல்கள்: நஸயீ, முஸ்னது அஹ்மத்)

அநீதியிழைக்கப்பட்ட ஒருவன், அதை உரக்கச் சொல்ல உரிமையுண்டு. அந்த அப்பாவி தன் உரிமையைப் பயன்படுத்தும்போது, குரல்வளையை நெறிப்பது சர்வாதிகாரமாகும். திருக்குர்ஆன் கூறுகிறது: அநீதியிழைக்கப்பட்டவர் தவிர வேறு யாரும் தீய சொல்லைப் பகிரங்கமாகக் கூறுவதை அல்லாஹ் விரும்பமாட்டான். (அல்குர்ஆன் 4:148)

6. சட்டத்திற்குமுன் அனைவரையும் சமமாக நடத்துவது ஆட்சியாளரின் முக்கியப் பொறுப்பாகும். தெரிந்தவனுக்கு ஒரு நீதி; தெரியாதவனுக்கு ஒரு நீதி இருக்கலாகாது. எளியவனுக்கு முன்னால் விரைப்பாக நிற்கும் சட்டம், வலியவனின் கண்சாடைக்கே வளைந்து சாஷ்டாங்கமாக விழக்கூடாது. ‘‘நீங்கள் பேசினால் நியாயமே பேசுங்கள்; உறவினராக இருந்தாலும் சரி’’ (அல்குர்ஆன் 6:152) என்று அல்லாஹ் அறிவுறுத்துகின்றான்.

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் அவர்கள்தம் தோழர்களும் ஆட்சிப் பொறுப்பு வகித்தபோது இந்த இறையாணையைச் சிறப்பாகச் செயல்படுத்தினார்கள். இதற்கு வரலாற்றில் நிறைய எடுத்துக்காட்டுகளைக் கூற முடியும். ‘‘என் அருமை மகள் ஃபாத்திமாவே திருடினாலும் அவரது கரத்தையும் நான் துண்டிப்பேன்’’ என்ற நபிமொழி பிரபலமானது. (நூல்: புகாரீ)

கடமையில் கண்ணும் கருத்தும்

7. ஆட்சியாளர் தம் கடமையில் கண்ணும் கருத்துமாக இருந்து மக்கள் பணியாற்ற வேண்டும். அதற்கு இயலாதவர், அல்லது மனமில்லாதவர் ஆட்சிக் கட்டிலில் அமரவே கூடாது. மக்கள் நலனைப் புறக்கணிக்கும் ஆட்சியாளன் மாபெரும் பாவி ஆவான்.

‘‘ஓர் அடியானுக்குக் குடிமக்களின் பொறுப்பை அல்லாஹ் வழங்கியிருக்க, அவன் அவர்களது நலனைக் காக்கத் தவறினால், சொர்க்கத்தின் வாடையைக்கூட அவன் பெறமாட்டான்’’ என்பது நபிமொழியாகும். (நூல்: புகாரீ)

பொறுப்பை நிறைவேற்றத் தவறிய ஆட்சியாளனுக்கே இந்தக் கதி என்றால், அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி சொந்த வளத்தைப் பெருக்கிக்கொள்ளும் ஊழல்வாதிகளைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமா? நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கடுமையான எச்சரிக்கையைப் பாருங்கள்: முஸ்லிம் குடிமக்களின் நிர்வாகப் பொறுப்பை ஏற்கும் ஒருவர் அவர்களுக்கு மோசடி செய்த நிலையில் இறந்துவிடுவாரானால், சொர்க்கத்தை அவருக்கு அல்லாஹ் தடை செய்துவிடுகின்றான். (நூல்: புகாரீ)

8. எல்லாவற்றையும்விட, ஆட்சியாளராகத் தேர்ந்தெடுக்கப்படுபவர் பதவி ஆசை பிடித்தவராக இருக்கலாகாது. நபித்தோழர் அப்துர் ரஹ்மான் பின் சமுரா ரளியல்லாஹு அன்ஹுஅவர்கள் கூறுகிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னிடம், ‘‘அப்துர் ரஹ்மான்! ஆட்சிப் பொறுப்பை கேட்டுப்பெறாதீர்கள். ஏனெனில், நீங்கள் கேட்டு அது உங்களுக்கு அளிக்கப்பட்டால் அதோடு நீங்கள் (தனியாக) விடப்படுவீர்கள். கேட்காமல் அது உங்களுக்கு அளிக்கப்பட்டால், அது தொடர்பாக உங்களுக்கு (இறை) உதவி கிடைக்கும்’’ என்று சொன்னார்கள். (நூல்: முஸ்லிம்)

9. இந்த இலக்கணங்களும் உயர் பண்புகளும் ஆட்சியாளர்களிடம் அமைய வேண்டுமென்றால், அவர்களிடம் ‘இறையச்சம்’ (தக்வா), மறுமை நம்பிக்கை, நபிவழி (சுன்னத்) வாழ்க்கை ஆகியவை இருக்க வேண்டும். அத்தகைய ஆட்சியாளர்களுக்கு இறைவனிடம் உயர் தகுதியும் பெரிய பதவியும் நிச்சயமாகக் கிடைக்கும்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: நேர்மையான ஆட்சியாளர்கள், அளவற்ற அருளாளன் அல்லாஹ்வின் வலப்பக்கத்தில் ஒளி மேடைகளில் இருப்பார்கள். அவர்கள் தமது நிர்வாகத்திலும் குடும்பத்திலும் தாம் பொறுப்பேற்றுக்கொண்டவற்றிலும் நியாயமாக நடந்துகொண்டனர் (என்பதே இச்சிறப்புக்குக் காரணம்). (நூல்: முஸ்லிம்)

மற்றொரு ஹதீஸில் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இவ்வாறு பிரார்த்தனை செய்துள்ளார்கள்: இறைவா! என் சமுதாயத்தாரின் விவகாரங்களில் ஒன்றுக்குப் பொறுப்பேற்றுக் கொண்ட ஒருவர், அவர்களைச் சிரமப்படுத்தினால், அவரை நீயும் சிரமப்படுத்துவாயாக! என் சமுதாயத்தாரின் விவகாரங்களில் ஒன்றுக்குப் பொறுப்பேற்றுக்கொண்ட ஒருவர், அவர்களிடம் மென்மையாக நடந்துகொண்டால், நீயும் அவரிடம் மென்மையாக நடந்துகொள்வாயாக! (நூல்: முஸ்லிம்)

குடிமக்களின் பொறுப்பு இஸ்லாம் வகுத்த அரசியல் இலக்கணத்தில், நல்ல குடிமக்களுக்கான இலக்கணமும் அடங்கும்.

1. ஆரம்பமாக, அவர்கள் நல்ல ஆட்சியாளர்களையே தேர்ந்தெடுக்க வேண்டும்.

2. அடுத்து நன்மைகளில் மட்டுமே ஆட்சியாளர்களுக்குக் கட்டுப்பட வேண்டும்; பாவத்தில் கட்டுப்படக் கூடாது.

3. சட்டத்தை -இஸ்லாமிய அரசியல் சாசனத்தை- முஸ்லிம் குடிமக்கள் மதித்து நடக்க வேண்டும்.

4. பொது அமைதி, சட்ட ஒழுங்கிற்குக் குந்தகம் விளைவிக்கக் கூடாது. 5. நாட்டின் வளர்ச்சிக்கும் பொது நன்மைக்கும் உறுதுணையாகச் செயல்பட வேண்டும்.

நபி (ஸல்) அவர்களின் அரசியல்பண்புகள் !


ஒரு வேளை ஜனநாயகத்தில் நாம்விரும்புகின்றவன் ஆட்சிக்கு வரலாம். 
ஆனால் ஒருபோதும் நம்மை விருன்புகின்றவன் ஆட்சிக்குவரமாட்டான்!என்று ஒரு அறிஞன் சொன்னான்.
அது எவ்வளவு பெரிய உண்மை! என இன்றுநடைபெறுகிற ஆட்சியினால் உணர முடிகிற்து
ஊழல் செய்பவன், கொளை &கொள்ளையில்ஈடுபடுபவன், ஜாதி வெறியை தூண்டுதுபவன்.என்றுஅரசியல் வதிக்கான இலக்கணங்கள் மாறிக்கொண்டிருக்கிற காலம்.
குழம்பிய குட்டையில் மீன் தேடிய கதையாய்முஸ்லிம்களும் அரசியல் பிரவேசம் கொண்டிருக்கும்இவ்வேளையில்...
அனைத்திற்கும் முன் மாதிரியானஅல்லாஹ்வின் தூதரிடத்தில் அரசியலுக்கான முன்மாதிரியை எடுத்து நடப்பதுதான் உண்மையான ஒர்முஸ்லிமின் அடையாளம்.
ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் மதினாவில்அடியேடுத்து வைத்தஅடுத்தகணமே அகதிகள்பிரச்சனையை அடியேடு மாற்றியமைத்தார்கள்.பல்வேறு இனத்தவரோடும், பல்வேறு கொள்ககைகொண்டோரோடும் இணக்கமான ஒப்பந்தங்களைஏற்படுத்திசமய நல்லினக்கத்தை உருவாக்கினார்கள்.பல்வேறு யுத்தங்களை சந்தித்ததின் முலம்முஸ்லிம்களின் ஆளுமைதிறனைவலுப்படுத்தினார்கள், பொருளாதார மேம்பாடு,வறுமைஒழிப்பு, தீமைக் கெதிரான போராட்டம்,எனசமூக அக்கறையில் கவனம் செலுத்தினார்கள்.ஏறத்தாழ பத்து ஆண்டுகளுக்குள்ளாக அனைத்துஅதிகாரமும் அல்லாஹ்வுக்கே சொந்தம்  என்கிறகொள்கை முழக்கத்தோடு, ஏகத்துவ எழுச்சியோடு,அல்லாஹ்வின் சட்டங்களுக்கே கட்டுபடுதல்என்கிறவலுவான கோட்பாட்டோடு அரசியல்பண்புகளை வகுத்துத்தந்து முதல் ஆட்சியாளராய்,முன்மாதிரி ஆட்சியாளராய் வாழ்ந்துகாட்டினார்கள்.
அதன் பின்பு அமைந்தநேர்வழி நின்று நான்குகலீஃபாக்களின் ஆட்சிமுறைமாநபி (ஸல்)அவர்களின் அரசியல் பண்புகளை Political Culture                    அரசியல் பண்பாட்டை உலகிற்குஉணர்த்தியது.
எந்த சமூகம் அண்ணலாரின் அரசியல்பண்புகளை, கலாசாரத்தை புறந்தள்ளுகிறதோ,
நேர்வழியில் ஆட்சிபுரிந்த மாட்சிமைபொருந்திய கலீஃபாக்களின் அரசியல் மாண்புகளைபுறந்தள்ளுமோ
அந்த சமூகம் அரசியலில் வீறுநடைபோடமுடியாது, அதுமுஸ்லிம் சமுகமாகஇருந்தாலும் ஜொலிக்கமுடியாது என்பதை வரலாறுபதிவு செய்திருக்கிறது.பனூ உமைய்யாக்கள்முதற்கொண்டு 469 ஆண்டு கால ஸ்பெயினின்இஸ்லாமிய ஆட்சியாளர்களின் வீழ்ச்சி,உதுமானிய்ய பேரரசின் வீழ்ச்சி,
800 ஆண்டுகளாக மொகலாயர்களின்இஸ்லாமிய ஆட்ச்சியாளர்களின் வீழ்ச்சி
துருக்கி கமால் முஸ்தFபா வரை
அண்ணலாரின் அரசியல் கலாச்சாரத்தைவிட்டும் மெல்ல விலகி, மாற்றாரின் கலாச்சாரத்தைநுகர்ந்து, பின்புதனதாக்கி அதன் பின்ஆட்சிமுறைமையாக்கியதனால் தான்.
அண்ணலார் ஒர் அரசியல் பண்பாளர்:
மதீனா தான் இஸ்லாமிய ஆட்சியின் தலைநகர்,மஸ்ஜிதுத் நபவீதான் தலைமைச் செயலகம், அதற்குஅருகாமையில் ஈத்த மர நாரினால் வேயப்பட்டிருந்தகுடிசை வீடுதான் ஆட்சித்தலைவரின் வீடு குறுகளானவீடு, வயிறு நிறம்ப சாப்பிட்டதில்லை, மூன்றுநாட்கள் கூடதொடர்ந்து அண்ணலாரின் வீட்டில்அடுப்பு எரிந்ததில்லை, விளக்குக்கு எண்ணைஇல்லை, ஆதலால் வெளிச்சம் இல்லை,பைத்துல்மால் - எனும் பொது சொத்தில் தங்களுக்கும்,தமது குடும்பத்தாருக்கும் எவ்விததொடர்பும் இல்லை.அதை அனுபவிக்க ஆயூட் காலதடை.எளிமை,ஆனால் கம்பீரம், வறுமை ஆனால் நிதானம்,கட்டளை பிறப்பித்தல்.செவிமடுத்து.ஏற்றுநடத்திடஆயிரமாயிரம் தொண்டர்கள்.ஆனால், ஒருபோதும்தாங்கள் சுய நலத்திற்காக அவர்களைபயன்படுத்தியதில்லை.வாயிலிருந்து வெளிவரும்வார்த்தை யாரையும் புண்படுத்தியதில்லை.ஆனால்இஸ்லாத்திற்கெதிரான நிலைபாடுகொண்டோர்களிடத்தில் இரக்கம்காட்டியதில்லை.மொத்ததில்.மனிதராக,மனிதப்புனிதராக, இஸ்லாமிய ஆட்சியாளராக வலம் வந்தபெருமானார் (ஸல்) அவர்கள் ஹிஜிரி 11 ம் ஆண்டுரபீவுல் அவ்வல் பிறை 12-ல் இப்பூலகைவிட்டுப்பிரிந்தார்கள். அடுத்த தலைவர் யார் ?
அண்ணலாரின் செயல் வடிவின் படி அபூபக்கர்ஸித்தீக் (ரலி) ஆட்சியாளராய் தேர்ந்தெடுக்கப்பட்டுதலைமைச் செயலகத்தில் அமர்ந்தார்.தொடர்ந்துஅண்ணல் நபி (ஸல்) அவர்கள் வகுத்துதந்த அரசியல்பன்புகளின் அடிப்படையில்.முதல் ஆட்சியாளரின்ஆட்சி. ஹிஜிரி 13 - ஜமாத்துல்  ஆகிர் பிறை 22 ல்அன்னார் வாழ்வு நிறைவுற்றது.
இரண்டு ஆண்டுகால ஆட்சியால் சிலசோதனைகள் வந்த போதும் துணிந்து போராடிநபிகளாரின் அரசியல் கலாச்சாரத்தைதூக்கிநிறுத்தினார்கள்.
சாந்தமே உருவான அபூபக்கர் (ரலி) சினமுற்றுஜக்காத் தர மறுப்பவர்களோடு போர்புரிவேன்எனகூறியது.
யமாமாவில், முஸைலமா எனும் பொய்யன்தன்னைநபியென வாதிட்டபோது அதை எதிர்கொள்ளஇஸ்லாமிய படைகளை அனுப்பியது.
ஒரு சமயம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்)அவர்களின் மகளார் ஆட்சியாளர் அபூபக்கர் (ரலி)அவர்களிடம் நபி (ஸல்) அவர்களின் சொத்தானகுமுஸ்-ல் இருந்து பங்கு தரவேண்டும் என கோரிநின்ற போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்எனக்குபின் வாரிசுரிமை இல்லை எனகூறியிருக்கிறார்கள் ஆகவே தரமுடியாது எனஅனுப்பிவிடுகிறார்கள்.
அவர்களுக்கு பின் உமர் (ரலி) அவர்கள் ஆட்சிப்பொறுப்பிற்கு வருகிறர்கள்.அவர்களது ஆட்சியில்இஸ்லாம் வேகமாக பரவுகிறது ஆளுகையின்எல்லை பரந்து விரிந்து கொண்டே சென்றது.புதியபுதிய பிரச்சனைகள் எழுகிறது.
அங்கெல்லாம் சமர் (ரலி) அவர்கள் மாநபி (ஸல்)அவர்களின் அரசியல் விழுமியங்களைக் கொண்டுதீர்த்து வைக்கிறார்கள்.அவர்களின் ஆட்சிகாலத்தில்தான் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் வகுத்துத்தந்தபல அரசியல் பண்புகள் உலகிற்கு வெளிவரத்துவங்கியது எனலாம்.
ஒருநள் கடைவீதிக்கு செல்கிறார்கள்.அங்கேஒரு மந்தை அந்த மந்தையில் ஏராளமானஒட்டகைகள் இருந்தும் ஒரு ஒட்டகைக்கு மற்றும் ஏகஉபசரிப்பு, அருகே வந்த உமர் (ரலி) அவர்கள் மந்தைஉரிமையாளரிடம் இது யாருடைய ஒட்டகம்?எனக்கேட்டார்கள் இது அப்துல்லாஹிப்னு உமர் (ரலி)அவர்களின் ஒட்டகம் என பதில் கூறினார்உரிமையாளர்.
தடுக்கிட்ட உமர் (ரலி) அழைத்து வாருங்கள்அப்துல்லாஹ் (ரலி) வை! என்றார்கள். எங்கிருந்தோகூட்டிவந்த உமர் (ரலி) அவர்கள் முன்நிறுத்தப்பட்டார்கள் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் தன்மகன் ஏதோ மாபெரும் குற்றத்தை செய்தது போல்உணர்ந்த உமர் (ரலி) அப்துல்லாஹ்வே! என்ன இது?யாருடைய ஒட்டகம் ?
என்னுடைதுதான்!நான் தான் வாங்கினேன்!மேய்ச்சலுக்காக விட்டிருக்கிறேன் என பதில்அளித்தார்கள் இப்னு உமர் (ரலி) அவர்கள்உன்னுடைய ஒட்டாகத்தை பார்க்கும் மக்கள்
அமீருல் முஃமினீன்மகன் ஒட்டகத்தை நன்றாக மேய்!
அமீருல் முஃமினீன்மகன் ஒட்டகத்திற்கு நன்றாகதண்ணீர் புகட்டு!வார்த்தைக்கு வார்த்தை அமீருல்முஃமினீன் மகனுடையது எனக் கூறுவது உனக்குதெரியவில்லையா?
என இப்னு உமர் (ரலி) அவர்களை பார்த்து கேட்டுவிட்டு, பணத்தை பைத்துல்மாலிலே சேர்த்துவிட்டு,என ஆணையிட்டார்கள்.
இன்று சாதாரன வட்டம், நகரம், மாவட்டம், எனபொறுப்பிலிருப்பவர்களின் பெயரை எங்கெல்லாம்,எப்படியெல்லாம் யாரெல்லாம் பயன்படுத்துகிறார்கள்.
ஆனால், தம் மகனுக்கு கூட அந்த உரிமையைதராமல் அதை முறை தவறிய செயலாக கண்டார்கள்உமர் (ரலி) அவர்கள்.
                     நுல்:குலFபாவுர் ரசூல் (ஸல்), பக்கம்:121
ஒருமுறை உமர் (ரலி) அவர்கள் தோழர்களோடுபேசிக்கொண்டிருக்கயில் இந்த கூஃபா நகர மக்கள்மென்மையான சுபாவாம் கொண்ட ஒருவரைஅதிகாரியாக நியாமித்தால் அவரை பலகீனமானவர்என குறைபட்டுக் கொள்கிறார்கள். நல்லதிடகாத்திரமான, வலுவான சுபாவம் கொண்டஒருவரை அதிகாரியாக நியாமித்தால் அவரைகடுமையானவர் என முறையிடுகிறார்கள்.நல்ல,நம்பிக்கையானஇறை நம்பிக்கையுள்ள ஒருவரைஅந்நகர மக்களுக்கு அதிகாரியாக நியாமிக்கவிரும்புகிறேன்.எனக் கூறியபோது அங்கிருந்தஒருவர் அப்படியொருவர் இருக்கிறார்சொல்லட்டுமா?எனக் கூற மிக ஆர்வத்தோடு யார்அவர்?என உமர் (ரலி) அவர்கள் ஆவேசமாக உம்மிடம்இருந்து இதை நான் எதிர்பார்க்கவில்லை,அல்லாஹ்வின் மீது சதியமாக ஒரு போதும் நான்அவ்வாரு செய்யமாட்டேன் எனக் கூறினார்கள்.
                             நுல்:குலFபாவுர் ரசூல் (ஸல்) பக்கம்:122
இன்று தனக்குபின் தம்மகன் கட்சியைவழிநடத்த தகுதியானவர் என்று கூறும்ஆட்சியாளர்கள் மாநிலத்திலும், தேசியத்திலும்இருப்பதைக்காணும் போது தன் வாரிசைஅதிகாரியாகக் கூட நியாமிப்பதை விரும்பாதஅரசியல் கோட்பாட்டை எந்தளவு உமர்பேணினார்கள்?

ஹிம்ஸ் மாகான மக்களின் பிரதிநிதிகள் உமர்(ரலி) அவர்களைச் சந்திக்க வந்திருந்தார்.
தமது நகர கவர்னர் ஸயீத் இப்னு ஆமிர் (ரலி)அவர்களின் மீது மூன்று முக்கிய குற்றச்சாட்டுக்களைஆட்சியாளர் உமர் (ரலி) அவர்களிடம் சமர்பித்தனர்.
குற்றம் சாட்டப்பட்ட கவர்னர்வரவழைக்கப்பட்டார் ஹிம்ஸ் மாகாண பிரதிநிதிகள்எதிரே அமரவைக்கப்பட்டனர்.
ஹிம்ஸ் மாகாண பிரதிநிதிகள்: நன்குவெளிச்சமான பின்பு தான் மக்களை சந்திக்க வருகைதருகிறார்
ஸயீத் (ரலி) : அல்லாஹ்வின் மீது சத்தியமாக!இவர்கள் இப்படி குற்றம் சுமத்துவதை நன்வெறுக்கிறேன்.ஏனெனில், என் வீட்டில்பணியாளர்கள் கிடையாது, என்மனைவியோடுவேலை பார்த்துக்கொள்கிறேன்.அவர்களோடு காலை உணவை தயார்செய்வதில் ஈடுபடுவேன்பின்பு காலை உணவைசாப்பிடுவேன்.பிறகு உளு செய்வேன்,பின்புஅவர்களிடம் வருகை புரிவேன்.என்றார்கள்.
ஹிம்ஸ் பிரதிநிதிகள் : இரவில் சென்றுமுறையிட்டால் எங்களின் முறையீட்டிற்கு பதில்தருவதில்லை.
ஸயீத் (ரலி) : இந்தக்குற்றச்சாட்டையும் நான்மறுக்கிறேன். ஏனெனில், பகலை மக்களின்சேவைக்காகவும், இரவைஅல்லஹ்வின்வணக்கத்திற்காகவும் பயன் படுத்துகிறேன்.
ஹிம்ஸ் பிரதிநிதிகள் : மாதத்தில் ஒரு நாள்எங்களின் எந்த அலுவல்களையும் கவனிப்பதில்லை.
ஸயீத் (ரலி) : என் ஆடைகளை சுத்தம் செய்யும்பணியாள் என்னிடம் இல்லை. என் ஆடைகளைதுவைத்து, காயப் போட்டு அது உலர்வது வரைகாத்திருப்பேன், மறுநாள் அந்த ஆடைகளை அணிந்துகொண்டு மக்களின் சேவைகளில் ஈடுபடுவேன்என்றார்.
இதனைக் கேட்டுக் கொண்டிருந்த உமர் (ரலி)அல்லாஹ்வைப் புகழ்ந்தவர்களாக ஸயீத் (ரலி)அவர்களை மகிழ்ச்சிப் பொங்க பார்த்துபுன்னகைத்தார்கள்.
                             நுல்:குலஃபாவுர் ரசூல், பக்கம்:131
வாக்கு கேட்கும் போது இருக்கும் பணிவு, மக்கள்பிரதி நிதியாக வலம் வரும் போது இருப்பதில்லை.
நபிகளார் அமைத்த அரசியல் மாண்புகளில்...
ஆள்வோரும், ஆளப்படுவோரும்சமமானவர்களே! எனும் சமத்துவப் பண்பாடும்,
ஆண்டானுக்கும், அடிமைக்கும் நீதி ஒன்றே!எனும் சமநீதியும் ஜொலிப்பதை காணமுடியும்.
அன்றொரு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்)அவர்கள் ஹிதை பிய்யா எனும் உடன் படிக்கையில்இணைவைப்பாளர்கள் முன்மொழிந்த அத்தனைநிபந்தனைகளையும்ஏற்றுகையொப்பமிட்டார்கள்.ஆனால் உமர் (ரலி) அவர்கள்நபி (ஸல்) அவர்களிடம் சென்றுநாம் சத்தியத்தின்உண்மையின் மீது இல்லையா? என்று கேட்க, ஆம்நாம் சத்தியத்தில் தாம் இருக்கிறோம் என (ஸல்)அவர்கள் பதிலளித்தார்கள், நம்மில்கொல்லப்பட்டவர்கள் சுவர்க்கத்திலும், அவர்களில்,கொல்லப்ப்ட்டவர்களும் நரகத்தில் இருப்பார்கள்சரிதானே?எனக்கேட்டார்கள் ஆம்!என நபி (ஸல்)அவர்கள் பதிலளித்தார்கள்.பிறகு நாம் ஏன்விட்டுக்கொடுத்து, செல்லவேண்டும்? எனக்கேட்க!கத்தாபின் மகனே! நான் அல்லஹ்வின் தூதர்!அவனுக்கு மாறு செய்ய என்னால் முடியாது.நிச்சயமாக! அவன் எனக்கு உதவிசெயவான்.ஒருபோதும் அவன்என்னைகைவிடமாட்டான் என்று நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்.பின்பு உமர் (ரலி) அவர்கள் அபூபக்கர்(ரலி) அவர்களிடமும் இது போன்றே ஆவேசமடைந்துகேள்வி கேட்டார்கள்.நபி (ஸல்) அவர்கள் போலவே,அபூபக்கர் (ரலி) அவர்களும்பதிலளித்தார்கள்.அன்றைய நிகழ்ச்சிக்குபிறகுஅல்குர் ஆனின் 48 வது அத்தியாத்தின் முதல் இரண்டுவசனங்கள் அருளப்பட்டன.இந்த இறை வசனத்தைநபி (ஸல்) அவர்கள் உமர் (ரலி) அவர்களையேஓதிக்கட்டும்படி கேட்டுக்கொண்டார்கள்.
                                      நுல் : ரஹீக்
அன்று நபி (ஸல்) அவர்கள் இட்டகையொப்பம்தான் இஸ்லாமிய அரசு உலகாளும் மகுடத்தை பெறஅஸ்திவாரமிட்டது.அதிலும், குறிப்பாக உமர் (ரலி)அவர்களின் பத்தாண்டுகால அரசியல் தான்அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அரசியல்பண்புகளை உல்கெங்கும் பிரதிபலிக்க செய்ததுஎன்றால் அது மிகையாகது.
சுமார் 90 ஆண்டுகளுக்குப்பிறகு புனித பைத்துல்முகத்தஸ் நகரை சுல்தான் ஸலாஹித்தீன் அய்யூபி(ரஹ்) தலைமையில் 1187 செப்டம்பர் 20 அன்றுமுஸ்லிம்கள் வலம் வந்தனர்.தக்பீர் முழக்கம்,தஹ்லீல் முழக்கம் விண்ணை அதிரவைத்தன.பெரும்மார்க்க அறிஞர்கள், வர்த்தகர்கள் சாமானிய மக்கள்என அனைவரும் திரண்டு வந்து வெற்றி வீரர்ஸலாஹீத்தீன் (ரஹ்) அவர்களை பாராட்டப்புறப்பட்டுவந்திருந்தனர்.அன்று ஜிம்ஆ நாளாக இருந்தது 90ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பைத்துல் முகதஸில்ஜீம்ஆத்தொழுகை நடைபெற்றது.அதன் பின் சுல்தான்ஸலாஹீதீன் (ரஹ்) அவர்கள் நடந்துகொண்ட முறைஎப்படி இருந்தது என்பதைபற்றி அறியும் பின்பு கி.பி. 1099 ல் சிலுவைப் படையினர் இந்நகரைகைப்பற்றியபோது முஸ்லிம்களிடம்சிலுவைப்படையினர் நடந்து கொண்ட முறையைமிகாட் என்ற வரலாற்றாசிரியர் Histories Croisadesசிலுவை யுத்த வரலாறு எனும் நுலில்
v வீடுகளுக்குள்ளும், விதிகளிலும் முஸ்லிம்கள்கொல்லப்பட்டர்கள்
v அடைக்கலம் என்ற பேச்சுக்கே இடமில்லாமல்போனது
v தப்பி யோர்களை தேடிச்சென்று கொன்றனர்
v கோபுரங்கள், மாளிகைகள், பள்ளிவாசல்களில் ஒளிந்துகொண்டோர்களையும் விட்டு வைக்கவில்லை.
ஜெருஸ்ஸலம் நகரெங்கும் உயிரை இழக்கும்மனிதர்களின் அழுகைகளும், முனகல்களும் தான்எதிரொலித்தன.
பிரிட்டானியா கலைக்களசியம் பின்வருமாறுவர்ணிக்கிறது
அல்  அக்ஸா பள்ளி வளாகமெங்கும்ரத்தவெள்ளம் ஒடிக் கொண்டிருந்தது.பச்சிளங்குழந்தைகள் பிடுங்கப்பட்டு சுவற்றில்அடித்தோ, அல்லது போர் நடக்கும் இடத்திற்கும்மத்தியில் வீசப்பட்டோ கொல்லப்பட்டனர்.
ஆனல், ஸலாஹீத்தீன் (ரஹ்)ஜெருஸ்ஸலத்தைக் கைப்பற்றியபோது நடந்துகொண்ட விதம் ஸலாஹீத்தீன் (ரஹ்) வரலாற்றைஎழுதிய ஸ்டான்லி லேன் பூல் எனும் எழுத்தாளர்குறிப்பிடும் போது
ஜெருஸ்ஸலம் தன்னிடம் சரணடைந்த போதுகாட்டியதை விட உச்சக்கட்டமானகருணையைஸலாஹீத்தீன் வேறு எப்போதும்காட்டியதில்லை.பொறுப்புணர்வுமிகுந்த தளபதிகளின்தலைமையில் ஸலாஹீத்தீனின் படைகள்ஒவ்வொரு வீதியையும் காத்து அத்துமீறல்கள்நிகழ்வதைத் தடுத்தனர்.கிறிஸ்தவர்கள்கொடுமைப்படுத்தப்பட்டதாக எந்தவொரு தகவலும்எங்கிருந்தும் வரவில்லை.நகரத்தின் அனைத்துநுழைவாயிலும் ஸலாஹீத்தீன் வசம் தான் இருந்தது.
தனது சகோதரர் மாலிக் அல் அதில், இப்லீனைச்சேர்ந்த இரு பாதிரிகள் ஆகியோருக்கு பிணைக்கைதிகளில் தலா ஆயிரம் பேரை விடுவிக்க அனுமதிவழங்கினார் ஸலாஹீத்தீன்.
மேலும், தனது அதிகாரிகளிடம்பிணைத்தொகை செலுத்த முடியாதமுதியோர்களெல்லாம் சுதந்திரமாக வெளியேறலாம்என்று பிரகடனம் செய்யுமாறு ஒர் உத்தரவைபிறப்பித்தார்.
இந்த அறிவிப்பை கேட்டவுடன் செயிண்ட்லாஸரஸ் பகுதியிலிருந்து அணி அணியாககிறிஸ்தவர்கள் தமது இருப்பிடத்திலிருந்துஜெருஸ்ஸலம் நகரை விட்டு வெளியேறினார்.சூரியஉதயத்தில் தொடங்கிய இந்த வெளியேற்றம் இரவுவரை நீடித்து.எண்ணற்ற ஏழை மக்கள்ஸலாஹீத்தீனின் கருணையால் பயனடைந்தனர்.
தங்களிடம் வீழ்ந்த நகரத்தில் வாழ்ந்த எதிர்தரப்புமக்களுக்கு இவ்வரு முஸ்லிம்கள் கருணைகாட்டினார்கள்.
மேலும், ஜெருஸ்ஸலம் நகரைக் கைப்பற்றியவிதம் ஒன்று மட்டுமே அவரை ஒரு தலை சிறந்தவீரராக கருணை நெஞ்சம் படைத்த தலைவராககருதுவதற்கு போதுமான சான்றாக விளங்குகிறதுஎன தனது  Saladin (P230-234)                எனும் நூலில்ஸ்டான்லி - லேன் - பூல் கூறுகிறார்.
                      நூல் :பாலஸ்தீன வரலாறு.பாகம் 1. பக்கம்90-93
இந்த மாபெரும் புகழாரத்திற்குப்பின்னால்அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்காவெற்றியின் போது கையாண்ட அரசியல்பண்பாடுகளும், மாண்புகளும் மறைந்திருக்கின்றன.சுல்தான் ஸலாஹீத்தீன் அய்யூபி (ரஹ்) அவர்களைஅல்லாஹ் மன்னிப்பானாக! ஆமீன்.
ஆக, அரசியல் மாண்புகளையும்,பண்பாடுகளையும், கலாச்சாரத்தையும்அடிப்படையாகக் கொண்ட ஓர் சமூகம்.அதனால்உலக சமுதயத்திற்கு வாழ்வளித்த ஓர்சமுதாயம்.அரசியல் விழிப்புணர்வு தேடி அலைந்துகொண்டிருப்பதை காணும் போதும், அதற்காகஒருவருக்கொருவர் மோதிக் கொள்வதை பார்க்கும்,போதும் நிரம்பவே மனது வலிக்கிறது.
அண்ணலாரின் அரசியல் முன் மாதியைமுன்னெடுத்துச் சென்று அரசியல் முத்திரை பதிக்கும்ஓர் உன்னத சமுதயமாக வலம் வர அல்லாஹ் அருள்புரிவானாக!